மொக்கை மன்னனுடன் ஒரு மொக்கை அரட்டை!

10-02-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

எப்போதும்போலத்தான் நேற்றும் ஜிமெயிலில் மெயில்களை படித்துக் கொண்டிருக்கும்போது, பதிவுலகின் மகா மொக்கை மன்னன் நாமக்கல் சிபியார் திடீரென்று சாட்டிங்கில் தலையைக் கொடுத்து தனது வில்லங்கத்தைக் காட்டிவிட்டார்.

பேச்சு சுவாரஸ்யமாகப் போக.. கடைசியில் அவர் எழுதிய ஒரு வரிதான், இதைப் பதிவாகப் போடும்படி என்னைத் தூண்டிவிட்டது. அது கடைசியில்..

10:11 PM namakkalshibi: http://nayantharaanangel.blogspot.com/2009/02/nayanthara-profile.html

10:12 PM நான்: முருகா.. ஏன் முருகா இப்படி..? வயசுக்குத் தகுந்தாப்புல இரு முருகா..

namakkalshibi: அதான் நயன்தாரா. உங்க வயசுக்கு தகுந்தாற் போலன்னா பத்மினி சரோஜாதேவின்னு போடணும்.

நான்: நியாயமில்லை முருகா.. பத்மினியின் டான்ஸும், சரோஜாதேவியின் கொஞ்சலையும் ரசித்த அளவுக்கு நீ வேறு யாரையும் ரசிக்கவே முடியாது முருகா..

10:14 PM namakkalshibi: நான் அந்தப் படமெல்லாம் பார்த்ததே இல்லை. நான் சின்னப்பையன்.

நான்: அடப்பாவி முருகா.. நீயெல்லாம் தமிழன்தானா..? சின்னப்பையன்னு சொல்லித் தப்பிக்கப் பார்க்காத முருகா.. பலவற்றையும் பார்க்கணும்.. நயனையே பார்த்துக்கிட்டிருந்தா எப்படி? நயனின் முன்னோர்கள் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டாமா..?

namakkalshibi: கன்னடன்..

10:16 PM நான்: என்ன தைரியம் இருந்தா முருகன் பெயரை வைச்சுக்கிட்டு கன்னடன்னு சொல்லுவ..?

namakkalshibi: ஹெஹெ..

நான்: அடுத்த தடவை முருகனை பார்க்கப் போகும்போது உன்னைப் பத்தி பிட்டை போடுறேன்..

namakkalshibi: நயன் மலையாளி. போடுங்க போடுங்க..

நான்: பத்மினி கேரளா. சரோஜாதேவி கன்னடம். இதுக்கு என்ன சொல்ற..?

10:17 PM namakkalshibi: நான் அவங்களை பார்த்ததில்லே..

10:18 PM நான்: படத்துலயா..? நேர்லயா..?

namakkalshibi: padaththulathaan. Weerlayum நீர்லையும்..

10:20 PM நான்: பார்க்காமயே உம்ம நயன்தான் பெஸ்ட்டுன்னு நீ எப்படிய்யா சொல்லலாம்..?

namakkalshibi: தமிழோடு யான் பயின்ற கணினியிரண்டாகி
வாழ்வோடு துணைசேர்ந்த நாயகியால் மூன்றாகி
திரையோடு நான்பார்த்த நாயகியாம் நயன் தாரா
நாலாகிப் போச்சுதப்பா நன்கறிவீரே.

10:21 PM நான்: அடப்பாவி.. இதுக்கு மேலேயும் தமிழ் வளரலை.. வளரலைன்னு சொல்றானுக..

10:22 PM namakkalshibi: hehe.. நாங்களெல்லாம் ஆன்லைன்ல வெண்பா கிளாஸ் போனவங்க

10:24 PM நான்: அப்ப ஆன்லைன்லேயே அவுகளைப் பத்தி தெரிஞ்சுக்கலாமே.. வெறும் வெண்பாவைத் படிச்சிட்டு நயன்தாராவைத்தான் பாடணுமா..?

10:25 PM namakkalshibi: ஆமாம்

நான்: ஒளவையார், கண்ணகி, காரைக்கால் அம்மையார் இவங்களைப் பத்தி பாடு.. தமிழுக்கு பெருமையாவது கிடைக்குமேப்பூ..

10:26 PM namakkalshibi: நான் பாடித்தான் தமிழுக்கு பெருமையா?
தமிழில் பாடுவதால் எனக்கு வேணா பெருமை கிடைக்கும்

10:27 PMநான்: என்ன பண்றது? பஞ்சாப், டெல்லி, ஹரியானால இருந்தெல்லாம் கோடம்பாக்கம் வந்து நாலு பேர் பாடும்போது நீ பாடுறதுக்கு என்ன முருகா குறைச்சல்..?

10:28 PM namakkalshibi: நான் தமிழை கொலை செய்ய விரும்பலை
நான் பாடியதை கேக்க விருப்பமா? ஆடியோ இருக்கா?

நான்: இந்த பதிவுல மட்டும் தமிழை வாழ வைச்சிருக்கியாக்கும்..?
பாடினியா..? ஏம்பா முருகா.. ஏதோ வெண்பா பாடுன்னுதான சொன்னேன்.. நிஜமா பாட்டே பாடப் போறியா..? எனக்கு ஏற்கெனவே லேசா குளிர் காய்ச்சல்..

namakkalshibi: http://www.esnips.com/doc/de2feb83-2e50-4d13-bdce-f14a1f656f0e/Voice-recording-from-09-19,-2008-7:11:09 இங்கே போயி கேட்கலாம்..

10:30 PM டின்னர் டைம்…

நான்: சுத்தம்.. பாடியே தொலைச்சுட்டியா..? தாங்குமா தமிழ் உலகம்..?

namakkalshibi: அதெல்லாம் நல்லாவே தாங்கும்..

நான்: டின்னர் டைம்னு கச்சேரியை பாதில விட்டுட்டுப் போயிடறதா..? வூட்ல தங்கமணி இருக்காங்களா..?

namakkalshibi: ஹம்மே ஹம்மே ன்னு பாடுறதுக்கு பதிலா இதுவே நல்லா இருக்கும்.

10:31 PM இல்லை ஊர்ல இல்லே…

நான்: அதான் இந்த நேரத்துல இங்கன கட்டி மேய்க்குறியா..?

namakkalshibi: ஆமா…

10:32 PM நான்: ஹம்மா.. ஹம்.. ஹம்ம ஹம்மா.. இப்படி பாடினா நயன்தாரா வர மாட்டாங்க.. சோனாலி பந்த்ரேதான் வருவாங்க..

10:47 PM நான்: யோவ் எங்கய்யா போன..? சோனாலிக்கு கல்யாணமாகி குழந்தையெல்லாம் இருக்குய்யா..? யோவ் முருகா.. முருகா..

11:27 PM namakkalshibi: டின்னர் போயிருந்தேன்

நான்: முருகா.. டின்னருக்கு ஒரு மணி நேரமா..? உனக்கே ஓவரா இல்ல..

namakkalshibi: இல்லை.. காலைல 9 மணி வரை தாங்க வேண்டாமா… பசி… வயித்துக்கு மட்டும் வஞ்சனை இருக்கக் கூடாதுல்லவா…

நான்: இருக்கவே கூடாது.. இருக்கவே கூடாது.. ஐயையோ ஆமாமாம்.. முருகா.. மறந்து போயிட்டேன்.. உனக்கு யானை வயிறாச்சே.. தெரியாம சொல்லிட்டேன்.. ஒரு மணி நேரமா அப்படி என்ன சாப்பிட்ட..?

namakkalshibi:5 இட்லி, ஒரு ஆஃப் பாயில்.. கடை கொஞ்சம் தூரம்
தெரு முனை வரை நடந்து போகணும்..

11:30 PM நான்: போதுமா.. நடந்து போயிட்டு, வரும்போதே எல்லாம் செரிச்சிருக்குமே..?

namakkalshibi: ஆமா அதுதானே ந்ல்லது… இல்லாட்டி தூக்கம் வராதே. கட்டாந்தரைல கையைத் தலைக்கு வெச்சிப் படுத்தாலும் தூக்கம் வரணும்ல…

11:31 PM நான்: நயன்தாராவையே நினைச்சுக்கிட்டிருந்தா எப்படி தூக்கம் வரும்ன்றேன்..?

11:32 PM namakkalshibi:அதெல்லாம் வரும்.. இஷ்டானந்த சுவாமிகளைக் கும்பிடணும் அதுக்கு…

11:33 PM நான்: இஷ்டானந்த சுவாமின்னு நீங்க சொல்றது நயன்தாராஜியைத்தானே..

namakkalshibi: யூத் படம் பாத்தீங்களா?

நான்: இல்லியே முருகா.?

11:34 PM namakkalshibi: அதுல வரும்…

நான்: என்னது..?

namakkalshibi: இஷ்டானந்த சுவாமிகள் மகிமை

11:35 PM நான்: அது யாரு..?

11:36 PM namakkalshibi: சும்மா டுபாக்கூர் கேரக்டர்…

நான்: யார் பண்ணினா..? விவேக்கா..?

11:38 PM namakkalshibi: விவேக்தான்… விஜய் + விவேக்

நான்: அப்படியா..? காமெடி காட்சிகளை பார்த்ததுபோல் இருக்கிறது..
நயன்தாராவுக்கு கோவில் எப்போது எங்கே கட்டுகிறீர்கள்..?

namakkalshibi: சென்னை திருமங்கலத்தில் இடம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.. நாமக்கல்லில் டிரஸ்ட் ஆஃபீஸ்…

* * * * * * * * * * *

கண்மணிகளா நீங்களே சொல்லுங்க.. இந்த முருகனை என்ன பண்றது..?

நாட்ல எவ்வளவோ வேலை இருக்கும்போது, நயன்தாராவுக்கு கோவில் கட்டுறதுதான் இப்ப ரொம்ப முக்கியமா..?

திருமங்கலத்துல கோவிலைக் கட்டிப்புட்டு நாமக்கல்லுல டிரஸ்ட் ஆபீஸ் வைச்சு உக்காரப் போறாராம்.. வசூல் புத்தகம் பிரிண்டிங்ல இருக்கிறதா போன்ல சொன்னாரு.. தலைக்கு 101 ரூபாய் கொடுத்தா கோவில் சுவத்துல உங்க வலையுலகப் பெயரையே பொன்னெழுத்தில் எழுதி பொறிச்சு வைக்கப் போறாராம்..

கண்ணுகளா.. தப்பித் தவறி “உங்களை நேர்ல பார்க்கணும்.. எப்ப வரட்டும்”னு இந்த முருகன் கேட்டா, அல்லாரும் தப்பிச்சு ஓடிருங்க..

அவ்வளவுதான்.. சொல்லிப்புட்டேன்..

24 பதில்கள் to “மொக்கை மன்னனுடன் ஒரு மொக்கை அரட்டை!”

 1. பரிசல்காரன் Says:

  நயன்தாராவுக்கு கோவில் கட்டுவதை எதிர்க்கிறேன். அப்படியே கட்டினாலும் மூலவருக்கு அருகில் குத்து ரம்யாவுக்கும் ஒரு சந்நிதானம் கட்டினால் ஆதரிக்கிறேன்!

 2. Namakkal Shibi Says:

  ஹிஹி! மொக்கைன்னு நீங்களே சொல்லிகிட்டா எப்படி?அதெல்லாம் நாங்க சொல்லணும்!அதுசரி! நயன்தாராவுக்கு கோவில் கட்டுறது எப்போன்னு கேட்டு ஆரம்பிச்சது நீங்களா நானா?//நான்: அப்படியா..? காமெடி காட்சிகளை பார்த்ததுபோல் இருக்கிறது..நயன்தாராவுக்கு கோவில் எப்போது எங்கே கட்டுகிறீர்கள்..?//மகா ஜனங்களே! நீங்களே பார்த்துக்கிடுங்க!

 3. Namakkal Shibi Says:

  //திருமங்கலத்துல கோவிலைக் கட்டிப்புட்டு நாமக்கல்லுல டிரஸ்ட் ஆபீஸ் வைச்சு உக்காரப் போறாராம்.. வசூல் புத்தகம் பிரிண்டிங்ல இருக்கிறதா போன்ல சொன்னாரு.. தலைக்கு 101 ரூபாய் கொடுத்தா கோவில் சுவத்துல உங்க வலையுலகப் பெயரையே பொன்னெழுத்தில் எழுதி பொறிச்சு வைக்கப் போறாராம்..//மக்களே! டொனேஷன் கேக்கப் போறேன்னு புளுகறாரு!கோயிலுக்கு உண்டான மொத்தச் செலவும் என் கையில இருந்தே போட்டுத்தான் செய்வேன்!இதுல எல்லாம் கூட்டு சேர்க்கப் பிடாதுன்னு எனக்குத் தெரியாதா என்ன!

 4. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //பரிசல்காரன் said…நயன்தாராவுக்கு கோவில் கட்டுவதை எதிர்க்கிறேன். அப்படியே கட்டினாலும் மூலவருக்கு அருகில் குத்து ரம்யாவுக்கும் ஒரு சந்நிதானம் கட்டினால் ஆதரிக்கிறேன்!//பரிசலு.. தாங்கள்தானா..? முதல் வருகை என்று நினைக்கிறேன்..நயன்தாராவுக்கு மட்டும் என்றால் தவறு என்கிறீர்கள். பக்கத்திலேயே உங்களுடைய குல தெய்வம் ரம்யாவுக்கும ஒரு சன்னிதானம் வேண்டும் என்கிறீர்கள்..?ஒரே உறையில் இரண்டு கத்திகள் இருக்கக் கூடாதே பரிசல்..?

 5. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //Namakkal Shibi said…ஹிஹி! மொக்கைன்னு நீங்களே சொல்லிகிட்டா எப்படி? அதெல்லாம் நாங்க சொல்லணும்!//அடப்பாவி முருகா.. அப்போ இது மொக்கையில்லையா..?//அதுசரி! நயன்தாராவுக்கு கோவில் கட்டுறது எப்போன்னு கேட்டு ஆரம்பிச்சது நீங்களா நானா?/நான்: அப்படியா..? காமெடி காட்சிகளை பார்த்ததுபோல் இருக்கிறது..நயன்தாராவுக்கு கோவில் எப்போது எங்கே கட்டுகிறீர்கள்..?/மகா ஜனங்களே! நீங்களே பார்த்துக்கிடுங்க!//கண்ணுகளா.. கோவில் கட்டுற மூட்ல இருக்காருன்னு கண்டுபிடிச்சது மட்டும்தான் நானு..கேட்டவுடனே என்ன சொல்லியிருக்கணும்.. அந்த அளவுக்கெல்லாம் எனக்கு வெறி இல்லை.. நான் சாதாரண ரசிகன்தான்னு சொல்லியிருக்கணும். அதை விட்டுப்போட்டு திருமங்கலத்துல கோவிலையும், நாமக்கல்லுல டிரெஸ்ட் ஆபீஸையும் வைக்கப் போறேன்னு சொன்னா..கொழுப்புதான..

 6. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///Namakkal Shibi said…//திருமங்கலத்துல கோவிலைக் கட்டிப்புட்டு நாமக்கல்லுல டிரஸ்ட் ஆபீஸ் வைச்சு உக்காரப் போறாராம்.. வசூல் புத்தகம் பிரிண்டிங்ல இருக்கிறதா போன்ல சொன்னாரு.. தலைக்கு 101 ரூபாய் கொடுத்தா கோவில் சுவத்துல உங்க வலையுலகப் பெயரையே பொன்னெழுத்தில் எழுதி பொறிச்சு வைக்கப் போறாராம்..//மக்களே! டொனேஷன் கேக்கப் போறேன்னு புளுகறாரு!கோயிலுக்கு உண்டான மொத்தச் செலவும் என் கையில இருந்தே போட்டுத்தான் செய்வேன்!இதுல எல்லாம் கூட்டு சேர்க்கப்பிடாதுன்னு எனக்குத் தெரியாதா என்ன!///கண்ணுகளா.. இதுல மட்டும் நம்ம முருகன் எம்புட்டு கரீக்ட்டா இருக்காருன்னு பாருங்க..உண்டியல் காசு முழுசையும் இவரே எடுத்துச் சாப்பிடலாம்னு ஐடியா..நல்ல மனசுய்யா உனக்கு..விரைவில் கோடீஸ்வரர் பட்டியலில் இடம் பெற வாழ்த்துகிறேன்..

 7. Namakkal Shibi Says:

  //அடப்பாவி முருகா.. அப்போ இது மொக்கையில்லையா..?//நயன்தாராவைப் பேசுறது உங்களுக்கு மொக்கையா?பிச்சிப்பிடுவேன் பிச்சி!

 8. Namakkal Shibi Says:

  //கண்ணுகளா.. கோவில் கட்டுற மூட்ல இருக்காருன்னு கண்டுபிடிச்சது மட்டும்தான் நானு..//ம்க்கும்! பெரிய கண்டுபிடிப்பு!சின்னக் குழந்தைகளைக் கேட்டாக் கூட சொல்லிடும்!சிபி அங்கிள் இவ்ளோ சீப்பா கோயிலா கட்டுவார்! தாஜ்மஹால் லெவலுக்கு பெரிசா கட்டுவார்னு சொல்லும்!

 9. Cable Sankar Says:

  நான் இதை வன்மையாய் கண்டிக்கிறேன். அதையும் மீறி கோயில் கட்டுவதாய் இருந்தால், சரோஜாதேவி, கே.ஆர்.விஜயாவுக்கு ஆளுக்கு ஒரு சந்நிதானம் கட்றதா இருந்தா நான் கூட 101 தர்ரேன்னு உண்மைதமிழன் அண்ணன் நேத்து என்கிட்ட சொன்னதை.. அவரு சொல்ல வெக்கபட்டதால.. அவரு சார்பா நான் சொல்றேன்.

 10. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///Namakkal Shibi said…//அடப்பாவி முருகா.. அப்போ இது மொக்கையில்லையா..?//நயன்தாராவைப் பேசுறது உங்களுக்கு மொக்கையா? பிச்சிப்பிடுவேன் பிச்சி!///அடப்பாவி முருகா..அப்போ இந்தப் பதிவு மொக்கையில்லையா..? யாராவது சீரியஸ்ன்னு நினைச்சு பணம் அனுப்பிரப் போறாங்க..?

 11. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///Namakkal Shibi said…//கண்ணுகளா.. கோவில் கட்டுற மூட்ல இருக்காருன்னு கண்டுபிடிச்சது மட்டும்தான் நானு..//ம்க்கும்! பெரிய கண்டுபிடிப்பு!/// பின்ன.. எம்மாம் பெரிய கண்டுபிடிப்பு.. ஒருத்தன் மனசுக்குள்ள இருக்குறதை யாராச்சும் கண்டுபிடிக்க முடியுமா என்ன..?///சின்னக் குழந்தைகளைக் கேட்டாக்கூட சொல்லிடும்! சிபி அங்கிள் இவ்ளோ சீப்பா கோயிலா கட்டுவார்! தாஜ்மஹால் லெவலுக்கு பெரிசா கட்டுவார்னு சொல்லும்!///அடுத்தவன் காசுன்னா தாஜ்மஹால் என்ன டிவின்ஸ் டவரே கட்டலாம்..

 12. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///Cable Sankar said…நான் இதை வன்மையாய் கண்டிக்கிறேன். அதையும் மீறி கோயில் கட்டுவதாய் இருந்தால், சரோஜாதேவி, கே.ஆர்.விஜயாவுக்கு ஆளுக்கு ஒரு சந்நிதானம் கட்றதா இருந்தா நான் கூட 101 தர்ரேன்னு உண்மைதமிழன் அண்ணன் நேத்து என்கிட்ட சொன்னதை.. அவரு சொல்ல வெக்கபட்டதால.. அவரு சார்பா நான் சொல்றேன்.///அடப்பாவிகளா..இப்படி வேற ஆள் கிளம்பிருக்கீங்களா..நான் முந்தா நாள்ல இருந்து பதிவர் யாரையும் சந்திக்கவில்லை. கேபிள் இன்னமும் நான் கடவுள் பாதிப்பில் இருப்பதால் இது போன்று பேசுகிறார் என்கிற உண்மையை உங்களிடம் தெரியப்படுத்திக் கொள்கிறேன்..

 13. குசும்பன் Says:

  தமிழோடு யான் பயின்ற கணினியிரண்டாகிவாழ்வோடு துணைசேர்ந்த நாயகியால் மூன்றாகிதிரையோடு நான்பார்த்த நாயகியாம் நயன் தாராநாலாகிப் போச்சுதப்பா நன்கறிவீரே.//இதுக்கு மேல என்னா தகுதி வேண்டு தள நயன் தாராவை கரெக்ட் செய்வதுக்கு!தள நயன்தாரா உங்களுக்குதான், ஆனா பார்க்கபோகும் பொழுது குங்பூ பாண்டாவில் கரடி வயிறை தம் கட்டி உள்ளே இழுப்பது போல் இழுத்துக்குங்க:) இல்லை நீங்க கர்பமா இருப்பதாக நயன் நினைச்சுக்கும்:)

 14. அபி அப்பா Says:

  நான் இந்த பதிவை எதிர்க்கறேன்!எனக்கு பிடிக்கலை பிடிக்கலை பிடிக்கலை! நம்ம தமிழ் நாட்டு பொண்ணு தீபாவெங்கட் குத்து கல்லாட்டாம் இருக்கும் போது நயந்தாராவுக்கு கோவிலா? நீங்கள் எல்லாம் தமிழர்களா? இது நியாயமா? அடுக்குமா? இதுக்கு 100 மைனஸ் குத்து விழ!:-))

 15. நையாண்டி நைனா Says:

  யாருன்னாலும், யாருக்குன்னாலும் கோயிலோ, குளம்மோ, குட்டையோ, சட்டையோ எதுன்னாலும் கட்டி கொள்ளுங்கள், ஆனா கருவறை அனுமதி நையாண்டி அடிகளாருக்கு மட்டுமே என்று சாசனம் எழுதி கொடுங்கள். இல்லை என்றால் நான் வணங்கும் தெய்வம், காட்டல் வல்லாள், ஒளிவு மறைவு இல்லாத, குமரன் முதல் கிழவன் வரை அனைவருக்கும் காட்டும், அதாவது அருள் காட்டும் தேவி ஷகிலாவின் கோபத்திற்கு ஆளாவீர்கள், அவளும் உங்கள் கோயிலுக்கு எழுந்தருள மாட்டாள்.

 16. Valaipookkal Says:

  உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory – http://www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம். உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.இதுவரை இந்த வலைப்பூக்கள் தொகுப்பில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.நட்புடன் வலைபூக்கள் குழுவிநர்

 17. பரிசல்காரன் Says:

  //பரிசலு.. தாங்கள்தானா..? முதல் வருகை என்று நினைக்கிறேன்..//என்ன சொல்றீங்க?இந்தப் பதிவுக்கு மீ த ஃபர்ஸ்ட்டுன்னு சொல்றீங்கன்னா சரி.உங்க வலைப்பூவுக்கு இப்போதான் பின்னூட்டம் போடறா மாதிரி சொன்னீங்கன்னா தவறு!

 18. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //குசும்பன் said…தமிழோடு யான் பயின்ற கணினியிரண்டாகிவாழ்வோடு துணைசேர்ந்த நாயகியால் மூன்றாகிதிரையோடு நான்பார்த்த நாயகியாம் நயன் தாராநாலாகிப் போச்சுதப்பா நன்கறிவீரே.//இதுக்கு மேல என்னா தகுதி வேண்டு தள நயன்தாராவை கரெக்ட் செய்வதுக்கு!///அடப்பாவி குசும்பா.. நீயும் சேர்ந்து உசுப்பி விடுறியே.. அப்ப நீ இந்தப் போட்டில இல்லையா..?//தள நயன்தாரா உங்களுக்குதான், ஆனா பார்க்கபோகும் பொழுது குங்பூ பாண்டாவில் கரடி வயிறை தம் கட்டி உள்ளே இழுப்பது போல் இழுத்துக்குங்க:) இல்லை நீங்க கர்பமா இருப்பதாக நயன் நினைச்சுக்கும்:)//இதுதான் குசும்பன் டச்சு..நாமக்கல்லு கேட்டீரா சேதி.. தம்பி என்னா உள்குத்து குத்திருக்குன்னு..?

 19. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //அபி அப்பா said…நான் இந்த பதிவை எதிர்க்கறேன்! எனக்கு பிடிக்கலை பிடிக்கலை பிடிக்கலை! நம்ம தமிழ் நாட்டு பொண்ணு தீபாவெங்கட் குத்து கல்லாட்டாம் இருக்கும்போது நயந்தாராவுக்கு கோவிலா? நீங்கள் எல்லாம் தமிழர்களா? இது நியாயமா? அடுக்குமா? இதுக்கு 100 மைனஸ் குத்து விழ!:-))///கரெக்ட்டு அபிப்பா..மொதல்ல கோவில் கட்டுறதுன்னா அபிஅப்பா தலைமைல தீபாவெங்கட்டுக்கு கட்டட்டும்..பின்னாடி தீபாம்மா கண் சாடை காட்டினாங்கன்னா அபிப்பாவுக்கு மூடு இருந்தா சன்னிதானம் மூலைல தனியா நயனுக்கு ஒரு குடிசை கட்டிரலாம்.. ஓகேவா அபிப்பா..?

 20. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //நையாண்டி நைனா said…யாருன்னாலும், யாருக்குன்னாலும் கோயிலோ, குளம்மோ, குட்டையோ, சட்டையோ எதுன்னாலும் கட்டி கொள்ளுங்கள், ஆனா கருவறை அனுமதி நையாண்டி அடிகளாருக்கு மட்டுமே என்று சாசனம் எழுதி கொடுங்கள்.//நைனா.. அது என்ன டீக்கடைல டீ ஆத்துற வேலைன்னு நினைச்சீங்களா..?அதுக்கெல்லாம் ஒரு தகுதி வேணும்.. படிக்கணும்.. பரீட்சைல பாஸ் பண்ணமும்.. இம்புட்டு விஷயமும் இருக்கு.. நினைச்சவுடனே அர்ச்சனைத் தட்டைத் தூக்குறதுக்கு இதென்ன அறநிலையத் துறை கோவில்ன்னு நினைச்சீங்களா..? இதயத் தெய்வத்தோட கோவில் சாமி..//இல்லை என்றால் நான் வணங்கும் தெய்வம், காட்டல் வல்லாள், ஒளிவு மறைவு இல்லாத, குமரன் முதல் கிழவன் வரை அனைவருக்கும் காட்டும், அதாவது அருள் காட்டும் தேவி ஷகிலாவின் கோபத்திற்கு ஆளாவீர்கள், அவளும் உங்கள் கோயிலுக்கு எழுந்தருள மாட்டாள்.//போச்சுடா.. அகிலாண்டேஸ்வரிக்கு கோபம் வந்தால் அகிலமே தாங்காது.. நீங்க எதுக்கும் நாமக்கல்லார்கிட்ட ஒரு வார்த்தை பேசிக்கிடுங்க.. சாமிகளுக்கு சண்டை வர வேண்டாம்..

 21. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //Valaipookkal said…உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory – http://www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.இதுவரை இந்த வலைப்பூக்கள் தொகுப்பில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.நட்புடன்வலைபூக்கள் குழுவிநர்//ஏற்கெனவே இணைத்துவிட்டேன் என்று நினைக்கிறேன்.எதற்கும் நீங்களே அதனை செக் செய்து சொல்லவும்.

 22. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///பரிசல்காரன் said…//பரிசலு.. தாங்கள்தானா..? முதல் வருகை என்று நினைக்கிறேன்..//என்ன சொல்றீங்க? இந்தப் பதிவுக்கு மீ த ஃபர்ஸ்ட்டுன்னு சொல்றீங்கன்னா சரி. உங்க வலைப்பூவுக்கு இப்போதான் பின்னூட்டம் போடறா மாதிரி சொன்னீங்கன்னா தவறு!///இல்லியே பரிசலு..நீங்க நம்ம வூட்டுக்குள்ள வந்து இப்பத்தான் பாக்குறேன்.. நீங்க ஏற்கெனவே வந்துட்டதா சொல்றீங்க..அப்ப எனக்குத்தான் செலக்டிவ் அம்னீஷியாவா..?தெரியல..சரி.. வந்திருந்தீங்கன்னா மிக்க நன்றிங்கோ..இனிமேலும் அடிக்கடி வாங்கோ ஸார்..

 23. benzaloy Says:

  ஆமா இவ்ளோவு சுவாரஸ்சியமா நாயன்தாரா பத்தி எழுதுறீங்களே என்னுட்டு சிபி சார் ருடைய பதிவு பக்கத்துக்கு போனாக அங்கெ ஒரே REPETITION தானே சார் இருக்கு >>>நயன்தாரா அழகான பொண்ணு தான் >>> இவங்க மாதிரி அழகான பெண்கள் வேறு இல்லாததுபோல அப்பிடியே சகலரும் ஒண்ணாகிடீன்களே >>>சரி சரி உங்களது ரசனை சுதந்திரத்தில் குறுக்கிட உரிமை எனக்கில்லை >>> சும்மா டைம் வேஸ்ட் ன்னு சொல்ல வந்தேன் >>>நம்ம சிம்பு இருக்காரே > ராஜேந்தர் டைரக்டர் எழுத்தாளர் அக்ரர் வேறும் என்னென்னவோ எல்லாம் சினிமால செயிறவருட வம்பு > இந்த தாரா பெண்ணுகூட தகராறு பண்ணினதாக YOU TUBE ல போட்டானே அந்த வம்பன் >>>அவனுக்கு எதிராக என்ன எழுதினார் இந்த சிபி ?சொந்தம்மும் முதலும் கொண்டாடும் சிபி சிம்பு வம்பனின் கீழ்த்தரமான நிலையை அம்பலப்படுத்த வேண்டாம் ???உணர்ச்சி கம்மியா ?

 24. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //benzaloy said…ஆமா இவ்ளோவு சுவாரஸ்சியமா நாயன்தாரா பத்தி எழுதுறீங்களே என்னுட்டு சிபி சாருடைய பதிவு பக்கத்துக்கு போனாக அங்கெ ஒரே REPETITIONதானே சார் இருக்கு>>>//ரிப்பீட் என்று எதைச் சொல்கிறீர்கள் பென்ஸ் ஸார்..?//நயன்தாரா அழகான பொண்ணுதான் இவங்க மாதிரி அழகான பெண்கள் வேறு இல்லாததுபோல அப்பிடியே சகலரும் ஒண்ணாகிடீன்களே.//அழகு வேறு.. கவர்வது வேறு பென்ஸ் ஸார்.. அழகாக இருக்கிறார்கள் என்பதற்காகவே ஒரு பெண்ணுக்கு ஒருவர் ரசிகராகிவிட முடியாது.. வேறு ஒரு உள் மன காரணம் இருக்க வேண்டும்.. அழகில் பல்வகை உண்டே..//சரி சரி உங்களது ரசனை சுதந்திரத்தில் குறுக்கிட உரிமை எனக்கில்லை.//நன்றி..//சும்மா டைம் வேஸ்ட்ன்னு சொல்ல வந்தேன்//தப்பித் தவறி சத்தமா சொல்லிராதீங்க.. அப்புறம் எனக்கு பிரச்சினையாயிரும்..//நம்ம சிம்பு இருக்காரே > ராஜேந்தர் டைரக்டர் எழுத்தாளர் அக்ரர் வேறும்என்னென்னவோ எல்லாம் சினிமால செயிறவருட வம்பு இந்த தாரா பெண்ணுகூட தகராறு பண்ணினதாக YOU TUBEல போட்டானே அந்த வம்பன். அவனுக்கு எதிராக என்ன எழுதினார் இந்த சிபி ?சொந்தமும் முதலும் கொண்டாடும் சிபி சிம்பு வம்பனின் கீழ்த்தரமான நிலையை அம்பலப்படுத்த வேண்டாம்??? உணர்ச்சி கம்மியா?///ஐயா தெய்வமே..காலைக் கொண்டாங்க.. கால்ல வேண்ணாலும் விழுறேன்.. இந்த வம்பெல்லாம் எனக்கு வேண்டாம்.சிம்பு-நயன்தாரா எப்படி வேண்டுமானாலும் போகட்டும்.. வலையுலகின் மொக்கை மன்னன், முடிசூடா மன்னன் நாமக்கல் சிபியுடன் நான் மோத மாட்டேன். அவர் மலை.. நான் சாதாரண குன்று..ஐயா.. நீங்க எனக்கு கமெண்ட் போடலை.. நானும் ஒண்ணும் சொல்லலை.. இந்தப் பிரச்சினையை இத்தோட விட்ருவோம்..முருகன் கண்ணைக் குத்துவான்..))))))))))

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: