என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
கடந்த ஒரு வார காலமாக பதிவுலகில் நடந்து வரும் சர்ச்சைக்குரிய நமது பதிவர்கள் சந்தனமுல்லை-நர்சிம் இடையேயான பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே அத்தனை பதிவர்களுமே விரும்புகிறோம்..!
இரு நாட்களுக்கு முன்பு “வினவு கூட்டத்தினரைப் புறக்கணியுங்கள் வலையுலகத் தோழர்களே..!” என்று பதிவிட்டிருந்தேன்.
அந்தப் பதிவில்,
[[[சந்தனமுல்லை என்கிற பதிவருக்கும், நர்சிம் என்கிற பதிவருக்கும் இடையில் முட்டல், மோதல். இருவரையுமே பேச வைப்போம். முடிந்தால் பேசுங்கள். நேராகப் பேச விருப்பமில்லையெனில் இருவருக்குமே நெருக்கமான யாராவது சக பதிவர்களை அழையுங்கள். அவர்கள் மூலமாகப் பேசுங்கள்.
உங்களுடைய பிரச்சினைகள் தீர்க்க முடிந்ததெனில் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். பதிவர் சந்தனமுல்லை, பதிவர் நர்சிமின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கத்தான் போகிறேன் என்று சொன்னால் தாராளமாக அதனைச் செய்து கொள்ளலாம். ஆனால் அதற்காக நச்சுப் பாம்பு போன்ற வெளியாட்களான வினவு போன்றவர்களைத் துணைக்கு அழைத்துக் கொண்டு வர வேண்டாம் என்று சந்தனமுல்லையை கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்.
நீங்கள் நர்சிம் மீது தொடுக்கும் வினாக்களுக்கும், நடவடிக்கைகளுக்கும் நாங்கள் ஒருபோதும் தடையாக இருக்க மாட்டோம். ஆனால் அதனை நம்மிடையே பிளவை உண்டாக்க நினைக்கும் புல்லுருவிகளின் துணையோடு செய்யாதீர்கள் என்றுதான் கேட்டுக் கொள்கிறேன்.]]]
இப்படி எழுதியிருந்தேன்.
இந்தக் கருத்தில் நான் இப்போதும் உறுதியுடனேயே இருக்கிறேன்.
நேற்று பதிவர் சந்தனமுல்லை எழுதிய “ரவியின் இடுகையில்” என்கிற பதிவில் நான் ஒரு பின்னூட்டம் இட்டிருந்தேன். அதில் “பதிவர் நர்சிமின் மீது என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களோ.. அதை தயவு செய்து வெளிப்படையாகச் சொல்லுங்கள்.. செய்யலாம்” என்கிற அர்த்தத்தில் பின்னூட்டம் இட்டிருந்தேன். இப்போது அந்தப் பின்னூட்டத்தையும் காணவில்லை. முல்லையிடமிருந்து பதிலும் இல்லை.
ஆனால், தற்போது வினவுத் தோழர்கள் “முடித்துக் கொள்ளலாம். முடிவு நியாயமாக இருந்தால்…!!” என்ற பதிவொன்றை எழுதியிருக்கிறார்கள். அதில்….
[[[முல்லையையோ முகிலையோ நேரில் சந்தித்து மன்னிப்புக் கேட்க தயார்” என்று கூறியிருக்கிறார் நர்சிம். நல்லது. சந்திக்கட்டும்.
முல்லையையும் முகிலையும் நம்மையும் நர்சிம் சந்திக்கும் இடம் பதிவர் சந்திப்பாக இருக்க வேண்டும். பெண் பதிவர்கள் உள்ளிட்ட எல்லாப் பதிவர்களின் முன்னிலையில், இந்த விவாதத்தில் பங்கு பெற்ற எல்லா பதிவர்கள் மற்றும் வாசகர்கள் முன்னிலையில், உண்மைத்தமிழர் உள்ளிட்ட எல்லாத் தமிழர்களின் முன்னிலையில், நர்சிம், கார்க்கி முதலானோரும் தங்களது மன்னிப்பை வெளியிடட்டும். கள்ள உறவு கதை கட்டிப் பரப்பிய பெருமக்களும் தங்கள் முகத்தை அங்கே காட்டட்டும். முகத்தை வெளிக்காட்டும் தேவை இல்லாததால் யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்ற வசதிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.
இது வினவின் நாட்டாமைத்தனம் அல்ல, நாகரிகமாக பிரச்சினையைக் கையாள்வதற்கு ஒரு ஆலோசனை மட்டுமே. இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகளை உண்மைத்தமிழனே முன்நின்று செய்யட்டும். நாங்கள் ஓரமாக நின்று கொள்கிறோம்.
எழுத்தில் கம்பீரமாக உலவும் ஆணாதிக்கவாதிகள் தமது முகத்தைக் காட்டுவதற்கு வெட்கப்படத் தேவையில்லையே! என்றைக்கு வைத்துக் கொள்ளலாம், எங்கு வைத்துக் கொள்ளலாம் சொல்லுங்கள்.]]]
இப்படிச் சொல்லியிருக்கிறார்கள்.
என்னுடைய பெயரை இட்டு வினவு தோழர்கள் எழுதியிருப்பதால் நான் பதில் சொல்ல வேண்டிய கடமையிருக்கிறது.
இதனை நான் நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தப் பதிவில் இவர்கள் சொல்லியிருக்கும் கருத்துக்களுக்குள் இருக்கும் நுண்ணரசியலை என்னால் இப்போதும் வெளிப்படு்த்த முடியும். ஆனால் அது இன்னமும் பிரச்சினையை வேறு திசையில் வளர்க்கத்தான் செய்யும் என்பதால் அதனைச் செய்ய விரும்பவில்லை..!
பதிவர் சந்தனமுல்லையே தனது பதிவில் தனது விருப்பம் என்ன..? நர்சிமுடனான தனது பிரச்சினையில் எப்படிப்பட்ட தீர்வை அவர் விரும்புகிறார் என்பதைச் சொல்லட்டும். பதிவர்கள் அனைவரும் ஒன்றுகூடி செய்யலாம்..! தயாராக இருக்கிறோம்.. இருப்போம்..!
இந்த வினவுத் தோழர்களின் அட்வைஸின்படியோ அல்லது இவர்களது மேலாதிக்கத்திலோ, இவர்களது மேலான வழிகாட்டுதல்படியோ நடக்க வேண்டிய அளவுக்கு வலையுலகம் ஒன்றும் சீரழிந்து கிடக்கவில்லை. இங்கே இருப்பவர்களும் முட்டாள்களில்லை..!
இந்த ஒரு பிரச்சினையை வைத்தே வலையுலகமே இப்படித்தானோ என்கிற ஒரு பிரமையை உருவாக்க முயலும் வினவுத் தோழர்களை நான் முற்றிலும் நிராகரிக்கவே செய்கிறேன்..!
பதிவர் சந்தனமுல்லை எந்த மாதிரியான தீர்வு வேண்டும் என்று அவரே கேட்டுக் கொண்டால் அவருடைய விருப்பத்தை நர்சிமிடம் தெரிவித்து பிரச்சினையைத் தீர்க்க வைப்பதில் நானும் ஆர்வத்தில் இருக்கிறேன்.. வலையுலகத்தில் உள்ள பலரும் இதில் ஆர்வத்துடன் இருக்கிறோம்.. இனி சந்தனமுல்லைதான் இது பற்றி வெளிப்படையாகப் பேச வேண்டும்..!
இனி.. வினவுத் தோழர்களிடம் எனது நேரடியான ஒரு பேச்சு..!
நீங்கள் நர்சிமின் கணக்கை முடிக்க ஒரு பதிவர் சந்திப்பு கூட்டத்தை கூட்டச் சொல்கிறார்கள். சரி.. இப்போது உங்களுக்கும் எங்களது சக பதிவர்களுக்குமான ஒரு கணக்கை முடிக்க வேண்டியுள்ளதே..!?
உங்களுடைய பதிவில்
“பெண் பதிவர்களிடம் ‘ஜொள்ளு’ விடுவதில் யார் முதன்மையானவர் என்று போட்டி வைத்தால் அபி அப்பா – லதானந்த், மங்களூர் சிவா உட்பட பலருக்குள் அடிதடியே நிகழும். அந்தளவுக்கு ஒருவர், மற்றவருக்கு சளைத்தவர்கள் அல்ல. புதிதாக எந்தப் பெண் பதிவர் எழுத வந்தாலும் உடனே சென்று பாராட்டுவது, நட்பை வளர்ப்பது சாட் செய்ய அழைப்பது, பிறகு செக்ஸ் டார்ச்சர் தருவது என அடுத்தடுத்த அஸ்திரங்களை பிரயோகிப்பதில் இவர்கள் அனைவருமே வல்லவர்கள்.”
“சுஜம்லாவை எதிர்த்து பொங்கி எழுந்த மரண மொக்கை பதிவரான கலகலப்பிரியா என்ற வீராங்கனை இப்போது கயவன் நர்சீமுக்கு எதிராக ரவுத்திரம் பழகாமல் இருப்பது ஏன்? ஏனெனில் முல்லையின் மானத்தை விட ஒரு பாப்பானின் மானம் பெரிதல்லவா? ஆக இங்கும் இந்துப் பதிவுலகம் அப்படியேதான் செயல்படுகிறது.”
இப்படியெல்லாம் உங்களுடைய பதிவில் எங்களது சக பதிவர்களைப் பற்றி எழுதிக் குவித்திருக்கிறீர்கள்..
அபிஅப்பா, மங்களூர் சிவா, லதானந்த் இவர்களைப் பற்றி நீங்கள் சொல்லியிருக்கும் விஷயங்களுக்கெல்லாம் ஏதேனும் ஆதாரங்கள் உண்டா..?
ஏனெனில் எங்களது சக பதிவர் சந்தனமுல்லைக்கு ஒரு குடும்பம் இருப்பதைப் போல இந்தப் பதிவர்களுக்கும் குடும்பம், மனைவி, குழந்தைகள் உள்ளனர். முல்லையின் கணவர் திரு.முகில் எவ்வளவு வேதனைப்பட்டாரோ அதே அளவுக்கு இந்த பதிவர்களின் மனைவிமார்களும் இப்போது துன்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
மங்களூர் சிவாவின் துணைவியாரே ஒரு பதிவர்தான்.. அவர்களுடையது காதல் திருமணம்தான். பதிவுலகின் மூலம்தான் அது நடந்தது.. அவருடைய துணைவியார் இதைப் படித்துவிட்டு என்ன பாடுபட்டிருப்பார்..? சொல்லுங்கள்..?
அபிஅப்பாவைத் தெரியாத முன்னாளைய பதிவர்களே இருக்க முடியாது..! பல மூத்த பதிவர்களுடனும் குடும்ப நண்பராக இப்போதும் இருந்து வருபவர். உங்களுடைய இந்தக் குற்றச்சாட்டினால் அவருடைய துணைவியாரும் இடிந்து போய் உட்கார்ந்திருக்கிறார்.. இப்போது சந்தனமுல்லை அனுபவிக்கும் துயரம்தான் அவருடையதும்..!
பதிவர் லதானந்த் பொறுப்பான அரசு அதிகாரி. பதிவுலகிலும், பத்திரிகையுலகிலும் பலருக்கும் தெரிந்த ஒருவர். இவருக்கும் மனைவி இருக்கிறார். பிள்ளைகள் இருக்கிறார்கள்.
சமீபத்தில்கூட பல பதிவர்களை குடும்பத்துடன் டூருக்கு அழைத்துச் சென்று ஒரு பதிவர் சந்திப்பு விழாவையே கொண்டாடினார். அவர்களெல்லாம் பதிவர் லதானந்தை பற்றி இப்போது என்ன நினைப்பார்கள்..? இவருடன் பணியாற்றுபவர்கள் மூலமாக அவர்களுடைய குடும்பத்தினருக்கும் தெரிந்தால் பதிவர் லதானந்த்தின் வெளியுலக நிலைமை என்ன..?
அதேபோல் எங்களது இன்னொரு சக பதிவர் கலகலப்பிரியாவும் நீங்கள் அள்ளித் தெளித்திருக்கும் “இந்து பதிவர்” என்கிற வார்த்தையினால் அளவு கடந்து மனம் புண்பட்டிருக்கிறார். சந்தனமுல்லை எந்த அளவுக்குப் பட்டாரோ அதே அளவுக்கு..! அதில் இருந்து துளியும் குறைவில்லாமல்..!
இவரும் தன் மீதான அவதூறான இந்தக் குற்றச்சாட்டுக்கு நியாயம் கேட்கிறார்.. தன்னை எப்படி ஒரு மத சம்பந்தப்பட்ட பதிவராக நியாயப்படுத்தலாம் என்கிறார்.. நியாயம்தானே..!? இதற்கெல்லாம் என்ன பதில் சொல்கிறீர்கள்..? என்ன பதில் வைத்துள்ளீர்கள்..?
மேதகு.சிவராமன்தான் இதனை எழுதிக் கொடுத்தார். நாங்கள் அதனை படித்துப் பார்த்துவிட்டு கொஞ்சம் சேர்த்து, கொஞ்சம் நீக்கி, எடிட் செய்து வெளியிட்டோம் என்று நீங்கள் ஏற்கெனவே சொல்லியிருப்பதால் இதற்கு நீங்களே முழுப் பொறுப்பேற்க வேண்டும்..!
இதற்கான ஆதாரங்கள் எங்கே..?
இருக்கிறது எனில் சந்தனமுல்லையிடம் நர்சிம் மன்னிப்புக் கேட்கும் அதே பதிவர் சந்திப்புக் கூட்டத்தில் நீங்களும், சிவராமனும் எங்கள் முன்பு ஆஜராகி அந்த ஆதாரங்களை எங்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்..!
“அதெல்லாம் இல்லை.. கேள்விப்பட்டோம்.. ச்சும்மா யாரோ சொன்னாங்க..” என்று ஒண்ணாங்கிளாஸ் பிள்ளை போல உளறக் கூடாது. ஆதாரங்கள் இல்லையெனில் நீங்கள் சொல்வது அனைத்தும் அவதூறாகிவிடும்.
நர்சிம், சந்தனமுல்லை மீது வீசிய அதே ஆக்ரோஷமான வன்மத்தை வேறு வடிவத்தில் இப்போது நீங்களும், மேதகு.சிவராமனும் சேர்ந்து எங்களது சக பதிவர்கள் மீது வீசியிருக்கிறீர்கள்..!
இதற்காக ஏற்பாடு செய்யவிருக்கும் பதிவர் சந்திப்புக் கூட்டத்தில் சிவராமனோடு சேர்ந்து நீங்களும் வந்திருந்து எங்களது பதிவர் கூட்டத்தினரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.
ல்லாவற்றுக்கும் மேலாக “எழுத்தால் ஒரு பெண் பதிவர் வண்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டிருப்பதைக் கண்டு ஒரு நாய்க்கும் சுரணை வரவேயில்லையே…?”
என்று எங்களது சமூகத்தவர்களான அனைத்துப் பதிவர்களையும் “நாய்கள்” என்று பழித்துப் பேசியதற்கும் கூடுதலாக ஒரு மன்னிப்பையும் கேட்டுவிட்டு, உங்களுடைய தளத்திலும் இதற்காக மன்னிப்பு பதிவையும் இட வேண்டும்..!
மனித நாகரிகம் என்றால் கிலோ என்ன விலை என்று உங்களைப் போன்று கேட்கும் கூட்டமல்ல எங்களுடைய வலையுலகக் கூட்டம்..!
இப்போது நடந்தது போன்ற கொடுமைகள், இதற்கு முன்பும் போலி டோண்டு விஷயத்திலும் எங்களிடையே நடந்திருக்கிறது. அப்போதும் நாங்கள் இதே ஒற்றுமையோடு, ஒருவருக்கொருவர் செய்து கொண்ட உதவியுடன்.. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் குடிமகன்களாகிய எங்களுக்குக் கொடுத்திருந்த ஒரு உரிமையின் கீழ் போராடித்தான் அதனை முற்றிலுமாக துடைத்தெடுத்தோம்..! இப்போது இதனையும் எங்களால் இதுபோல் சுயமாகவே செய்து கொள்ள முடியும்..!
எழுத்தில் கம்பீரமாக உலவுவதாகச் சொல்லிக் கொள்ளும் உங்களது வினவு கூட்டம், நீங்கள் செய்த தவறுகளை வெளிப்படையாக எங்களிடம் ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்க இனிமேலும் வெட்கப்படத் தேவையில்லையே!
என்றைக்கு வைத்துக் கொள்ளலாம்?
எங்கு வைத்துக் கொள்ளலாம்..
கூட்டத்திற்கு உடனேயே ஏற்பாடு செய்கிறேன்..!
வாருங்கள்.. சந்திப்போம்..!