Archive for the ‘மொக்கை’ Category

அடுத்தப் பிறவில ஜூலு வம்சத்துலதான் பொறக்கணும் முருகா..!

ஒக்ரோபர் 1, 2009

01-10-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

டென்ஷன் வேண்டாம்.. கோபம் வேண்டாம்.. ஆத்திரம் வேண்டாம்னு செவனேன்னு ஒதுங்கியிருந்தாலும் முடியல.. நேத்து பாருங்க..

வழக்கம்போல இணையத்தை மேய்ஞ்சுக்கிட்டிருந்த நேரத்துல பார்த்த இந்த நியூஸை படிச்சவுடனேயே மறுபடியும் டென்ஷன் அதிகமாயி பி.பி. தாறுமாறா எகிறிருச்சு.. என்ன செஞ்சும் பி.பி.யை இப்ப வரைக்கும் குறைக்க முடியலீங்க..

மேட்டர் என்னன்னு கேளுங்க..


தென்ஆப்ரிக்கால 44 வயசான மில்டன் மொபேலி அப்படீன்ற ஒரு லோக்கல் முனிசபல் ஆபீஸ் மேனேஜர் ஒருத்தர், போன வார சனிக்கிழமை ஒரே நேரத்துல 4 பொண்ணுகளை கல்யாணம் பண்ணிருக்காராம்.. அப்புறம் எனக்கு பி.பி. எகிறாம எப்படி இருக்கும்?


Thobile Vilakazi, Smangele Cele, Zanele Langa and Happiness Mdlolo அப்படீன்ற பேரோட இருக்குற அவரோட நாலு மனைவிகளும் ஒருவர் பின் ஒருவராக அவருக்குப் பழக்கமானாங்களாம். ஒண்ணு, இரண்டுன்னு முடிஞ்சவுடனேயே வரிசையா கல்யாணம் பண்ணிக்கலாம்னுதான் நினைச்சாராம்.

ஆனா “லிஸ்ட் தொடர்ந்து மூணு, நாலுன்னு போனதால எல்லாரையும் தனித்தனியா கல்யாணம் பண்ணினா ‘பட்ஜெட்’ தாங்காதே, அப்படீன்ற நல்ல எண்ணத்துலதான் ஒரே நேரத்துல எல்லார் கழுத்துலேயும் தாலி கட்டினேன்”னு ‘ஓப்பன் டாக்’ விட்டிருக்கார் நம்ம சிங்கம் மில்டன்.

ஆனாலும் அண்ணனுக்கு இந்தக் கல்யாணத்துலேயே உள்ளூர் ரூபாய்ல ஒரு லட்சம் காலியாம்.. பாவம் இனிமே காசுக்கு என்ன செய்யப் போறார்ன்னு தெரியலை.. ஒருவேளை அந்த முனிசிபாலிட்டில கொடுக்குற சம்பளம், நம்ம அம்பானி சம்பளத்தைவிட ஜாஸ்தியோ என்னவோ?


ஒரு பொண்ணு வந்தாலே வீடு லேசா ஆட்டம் காண்பிக்கும்னு நம்ம டிவி சீரியல் எல்லாத்துலேயும் சொல்லிக் கொடுத்திட்டிருக்காங்க. “இங்க நாலு பேர் ஒண்ணா போறாங்களே என்ன ஆகும்?”னு கேட்டா, “இப்போதைக்கு நாங்க நாலு பேருமே தனித்தனியாத்தான் இருக்கப் போறோம்.. மில்டன் முறை வைச்சு எங்க நாலு பேர் வீட்டுக்கும் வந்து, வந்து போகட்டும்னு எங்களுக்குள்ள பேசி வைச்சிருக்கோம்னு” ஒரு மனைவி பேட்டி கொடுத்திருக்காங்க.. எவ்ளோ நல்ல மனசு பார்த்தீங்களா?


புருஷன் மத்த பொண்டாட்டிகளினால் கஷ்டப்படக்கூடாதேன்னு அவங்களே வட்டமேசை மாநாடு போட்டு பேசி முடிச்சிருக்காங்க.. நல்ல விஷயந்தான்..


நம்ம அண்ணன் மில்டனும் அதையேதான் சொல்றாரு.. “எல்லாரும் ஒரே வீட்ல இருந்தா எனக்குத் தலைவலிதான். அதான் தனித்தனியா அவங்க அவங்க வீட்லயே இருக்கட்டும். நான் ரவுண்ட் அடிச்சுக்குறேன். இத்தனை வருஷமா அதைத்தான செஞ்சுக்கிட்டிருந்தேன்..” அப்படீன்னு நம்ம ‘ஆம்பளை புத்தி’யை விட்டுக் கொடுக்காம பேசியிருக்காரு.. நம்ம மானத்தைக் காப்பாத்திட்டாருப்பா..


இதுல இன்னொரு சுவாரசியம் என்னன்னா அண்ணனுக்கு 12 வருஷத்துக்கு முன்னாடியே மேலே சொன்ன நாலு பேர்ல ஒருத்தரான Thobile Vilakazi அப்படீன்ற பெண்ணோட கல்யாணம் நடந்துச்சாம். இப்ப திரும்பி ஒரு தடவை ஜாலிக்கு பண்றாராம்..

அது மட்டுமில்ல.. அண்ணன் பேரைச் சொல்றதுக்கு மொத்தம் 11 பிள்ளைகள் இப்பவே இருக்குதுங்களாம்.. ஆத்தாடி.. தலை சுத்துதா.. விழுந்திராதீங்க.. பக்கத்துல எதையாவது புடிச்சுக்குங்க..

ஆனா இந்த நாலு பேர்ல யாருக்கு, எத்தனை குழந்தைகள்ன்னு அண்ணன் சொல்ல மாட்டேன்னுட்டாராம்.. ஆனா “எனக்கு மொத்தம் 11 புள்ளைகள்”ன்னு நெஞ்சை நிமிர்த்தி சொல்றாரு நம்மண்ணன் மில்டன்.. ஆஹா.. என்ன ஒரு பெருமை.. ஆண் குலத்தின் பெருமையைக் கட்டிக் காப்பாற்றும் அண்ணன் மில்டன் வாழ்க..!

அதுலேயும் இது கிறிஸ்டியன் மேரேஜாம்.. கிறிஸ்டியன்ல்ல இப்படியெல்லாம் செய்யலாமான்னு கேக்காதீங்க. அதுக்குத்தான் ஒரு சுருக்கு வழியிருக்குல்ல?

அதுதான் “எங்க இனத்துல இதெல்லாம் சகஜம்”னு சொல்றாங்க.. இனம்னா சாதாரண இனமல்ல.. தென்ஆப்ரிக்காவில் புகழ் பெற்ற ஜூலு வம்சத்து சிங்கக்குட்டிதான் இந்த மில்டன்..

இந்த வம்சத்துல எத்தனை பெண்களை வேணும்னாலும் கல்யாணம் பண்ணிக்கலாமாம்.. தப்பே இல்லையாம்.. கோர்ட், கேஸுன்னுல்லாம் போகவே முடியாதாம்.. அங்கேயெல்லாம் பெண்ணுரிமை கழகங்கள் இருக்கா? இல்லையா? இது தப்பா? தப்பில்லையா என்றெல்லாம் கேட்கக்கூடாது.. மூச்.. அங்கே இனம் வைத்ததுதான் சட்டமாம்..!


ஏன்னா, அந்த இனத்தில் பிறந்த தற்போதைய தென்ஆப்பிரிக்க நாட்டின் ஜனாதிபதியான ஜேக்கப் ஜூமாவுக்கே அதிகாரப்பூர்வமா மூன்று மனைவிகள். இன்னும் ஒரு மனைவி வெயிட்டிங் லிஸ்ட்ல இருக்காங்க..

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனைவி வீட்டுல ஷிப்ட் டைம் போட்டு டேரா போட்டு நம்ம ஆண் வர்க்கத்தின் இயற்கைக் குணத்தைக் காண்பித்து நமது மானத்தைக் காப்பாற்றி வருகிறார் ஜனாதிபதி ஜேக்கப் ஜூமா. அவரையும் நமது ஆண் வர்க்கத்தின் சார்பாக வாழ்த்துவோம்.

நாட்டின் தலைவரே அப்படி இருக்கும்போது சாதாரணக் குடிமகன் இப்படி இருக்குறதுல என்னங்க தப்பு..?

இவ்வளவு ‘வசதி’யும், ‘வாய்ப்பு’ம் மிகுந்த அப்படியொரு இனத்தில் ஒரு ‘சிங்கமாக’ பிறக்க வைக்காமல், இப்படி ‘டிவி சீரியல் பார்த்தே சீரழியற தமிழ்நாட்டுல’ பொறக்க வைச்சுட்டானே பாவிப்பய முருகன்..

அதாங்க கோபம்.. இதுனாலதான் ஆத்திரம்.. பி.பி.தாறுமாறா ஏறி நிக்குது.. இறங்க மாட்டேங்குது..

இந்நேரம் நானும் அங்கனயே பிறந்து தொலைஞ்சிருந்தா.. ம்.. ம்.. ம்..!!!

“ஒண்ணுக்கே வழியில்லைன்னாலும் ஜொள்ளுக்கு மட்டும் குறைச்சல் இல்லடா..” அப்படீங்குறீங்களா..?

அதுனாலதாங்க கேக்குறேன்.. முருகா.. என் அப்பனே.. சண்முகா.. வடிவேலா.. கார்த்திகேயா.. வேலவா.. கந்தா.. கடம்பா.. கதிர்வேலா.. அடுத்தப் பிறவிலயாச்சும் என்னை அந்த ஜூலு வம்சத்துல ஒரு நல்ல ஆணழகனா, கட்டழகனா பொறக்க வைச்சிரு..

அப்படி செஞ்சீன்னா அங்கேயே ஏகப்பட்ட குன்றுகளும், மலைகளும் இருக்கு. அங்க இருக்குற ஏதாவது ஒரு மலைல உனக்கு ஒரு பிரான்ச் கோவில் வைச்சு நல்லா கல்லா கட்டிர்றேன்.. டீல் ஓகேவா..?

ஏம்ப்பா அங்க தூரத்துல யாரோ கைல வெளக்கமாறு, செருப்பெல்லாம் எடுத்துக்கிட்டு ஓடி வர்றாப்புல இருக்கு.. யாருப்பா இது..?

ஐயோ ‘முப்பெரும்தேவிகளா..’? மீ தி எஸ்கேப்பு..!