Archive for the ‘மன்மோகன்சிங்’ Category

நானும் உடனே மந்திரியாகணும்-பகுதி-8

ஓகஸ்ட் 18, 2008

முதல் பாகம்

இரண்டாம் பாகம்

மூன்றாம் பாகம்

நான்காம் பாகம்

ஐந்தாம் பாகம்

ஆறாம் பாகம்

ஏழாம் பாகம்

படித்து விட்டீர்களா மக்களே..?

என்ன கொடுமை பாருங்கள்..!

தியாகிகளுக்கான பென்ஷன் தொகையைக் கூட்டிக் கொடுங்கள் என்று கேட்டால், அத்துறையில் அவ்வளவுதான் நிதி ஒதுக்கீடு என்று ரீல் விடுகிறார்கள்.

ரயில் பயணத்தில் ஊனமுற்றவர்களுக்கு பாஸ் கொடுங்கள் என்று கேட்டால் ரயில்வே நிர்வாகம் ஏற்கெனவே நிதி நெருக்கடியில் தள்ளாடுகிறது என்கிறார்கள்.

விவசாயிகளுக்கு மலிவு விலையில் உரம் கொடுங்கள் என்று கேட்டால் முடியாது. பட்ஜெட் கையைக் கடிக்குது என்கிறார்கள்.

பருத்திக்கு மான்ய விலை கொடுங்கள் என்றால் பட்ஜெட் காலைக் கடிக்குது என்கிறார்கள்.

கோதுமைக்கு நல்ல விலை கொடுங்கள் என்றால், துட்டு லேது என்கிறார்கள்.

ஆனால் நமது மாண்புமிகுக்கள் இப்படி நாடு, நாடாகப் பறந்து சொகுசு வாழ்க்கை வாழ்வதைப் பாருங்கள்.

இப்படி இவர்கள் பறப்பதற்காகவா நாம் இவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பினோம்?

நாட்டு மக்களின் துயர் துடையுங்கள் என்று இவர்களைப் பணித்தால், இவர்கள் துயர் துடைக்க இவர்கள் பறப்பதைப் பார்க்கின்றபோது நமது ஜனநாயகத்தின் மீது கோபமான கோபம் வருகிறது.

இந்த மந்திரிகள் எந்த வேலைக்காகப் போயிருந்தாலும் சரி, செலவு என்னவோ நமது தலையில்தான். செலவுத் தொகையைக் காட்டிவிட்டு எப்படி செலவானது என்பதை மட்டும் சொல்ல மாட்டோம் என்பது எந்தவிதத்தில் நியாயம்..?

தெருமுனையில் கடை வைத்திருப்பவன் இதே போல் இன்கம்டாக்ஸ்காரர்களுக்கு தகவல் சொன்னால் சும்மா விடுவார்களா அவர்கள்..?

அரசியல்வாதிகளுக்கு ஒரு நீதி..? மக்களுக்கு ஒரு நீதியா..?

முடிவு செய்துவிட்டேன் மக்களே..

இனிமேல் இவர்களிடம் வேலை கேட்டு பிரயோசனமில்லை.. உதவித் தொகை கேட்டு பயனில்லை.. ஊக்கத் தொகை கேட்டு புண்ணியமில்லை.. கடன் உதவி கேட்டு மாள முடியவில்லை.. நேரடியாக அடிக்க வேண்டியதுதான்.. எனக்கு உடனே மந்திரி பதவி வேண்டும்.. என்ன செய்வீர்களோ.. ஏது செய்வீர்களோ எனக்குத் தெரியாது.. எனக்கு உடனே மந்திரி பதவி வேண்டும்… வேறெதுவும் சொல்வதற்கில்லை..

அப்புறம் கடைசியாக,

இந்த மெகா தொடரின் முதல் பகுதியின் முதல் பாராவையும், இந்த கடைசி பகுதியின் கடைசி பாராவையும் மட்டுமே படித்த கழகக் கண்மணிகளுக்கு அன்பு முத்தங்கள்.(வேறென்ன செய்றது..?)

படிக்காமலேயே சும்மா மவுஸை உருட்டிக்கிட்டே வந்துட்டு எஸ்கேப்பாகப் பாக்குற ரத்தத்தின் ரத்தத்தங்களின் காலில் விழுந்து வணங்கி நானும் எஸ்கேப்பாகுறேன்.

கடைசிவரையிலும் படித்தே தீருவேன் என்று கங்கணம் கட்டி அனைத்தையும் படித்து முடித்திருக்கும் அன்பு உடன்பிறப்புகளுக்கு எனது கண்ணீரை காணிக்கையாக்குகிறேன்.

நன்றி

உண்மைத்தமிழன்