Archive for the ‘நாமக்கல் சிபி’ Category

மொக்கை மன்னனுடன் ஒரு மொக்கை அரட்டை!

பிப்ரவரி 9, 2009

10-02-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

எப்போதும்போலத்தான் நேற்றும் ஜிமெயிலில் மெயில்களை படித்துக் கொண்டிருக்கும்போது, பதிவுலகின் மகா மொக்கை மன்னன் நாமக்கல் சிபியார் திடீரென்று சாட்டிங்கில் தலையைக் கொடுத்து தனது வில்லங்கத்தைக் காட்டிவிட்டார்.

பேச்சு சுவாரஸ்யமாகப் போக.. கடைசியில் அவர் எழுதிய ஒரு வரிதான், இதைப் பதிவாகப் போடும்படி என்னைத் தூண்டிவிட்டது. அது கடைசியில்..

10:11 PM namakkalshibi: http://nayantharaanangel.blogspot.com/2009/02/nayanthara-profile.html

10:12 PM நான்: முருகா.. ஏன் முருகா இப்படி..? வயசுக்குத் தகுந்தாப்புல இரு முருகா..

namakkalshibi: அதான் நயன்தாரா. உங்க வயசுக்கு தகுந்தாற் போலன்னா பத்மினி சரோஜாதேவின்னு போடணும்.

நான்: நியாயமில்லை முருகா.. பத்மினியின் டான்ஸும், சரோஜாதேவியின் கொஞ்சலையும் ரசித்த அளவுக்கு நீ வேறு யாரையும் ரசிக்கவே முடியாது முருகா..

10:14 PM namakkalshibi: நான் அந்தப் படமெல்லாம் பார்த்ததே இல்லை. நான் சின்னப்பையன்.

நான்: அடப்பாவி முருகா.. நீயெல்லாம் தமிழன்தானா..? சின்னப்பையன்னு சொல்லித் தப்பிக்கப் பார்க்காத முருகா.. பலவற்றையும் பார்க்கணும்.. நயனையே பார்த்துக்கிட்டிருந்தா எப்படி? நயனின் முன்னோர்கள் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டாமா..?

namakkalshibi: கன்னடன்..

10:16 PM நான்: என்ன தைரியம் இருந்தா முருகன் பெயரை வைச்சுக்கிட்டு கன்னடன்னு சொல்லுவ..?

namakkalshibi: ஹெஹெ..

நான்: அடுத்த தடவை முருகனை பார்க்கப் போகும்போது உன்னைப் பத்தி பிட்டை போடுறேன்..

namakkalshibi: நயன் மலையாளி. போடுங்க போடுங்க..

நான்: பத்மினி கேரளா. சரோஜாதேவி கன்னடம். இதுக்கு என்ன சொல்ற..?

10:17 PM namakkalshibi: நான் அவங்களை பார்த்ததில்லே..

10:18 PM நான்: படத்துலயா..? நேர்லயா..?

namakkalshibi: padaththulathaan. Weerlayum நீர்லையும்..

10:20 PM நான்: பார்க்காமயே உம்ம நயன்தான் பெஸ்ட்டுன்னு நீ எப்படிய்யா சொல்லலாம்..?

namakkalshibi: தமிழோடு யான் பயின்ற கணினியிரண்டாகி
வாழ்வோடு துணைசேர்ந்த நாயகியால் மூன்றாகி
திரையோடு நான்பார்த்த நாயகியாம் நயன் தாரா
நாலாகிப் போச்சுதப்பா நன்கறிவீரே.

10:21 PM நான்: அடப்பாவி.. இதுக்கு மேலேயும் தமிழ் வளரலை.. வளரலைன்னு சொல்றானுக..

10:22 PM namakkalshibi: hehe.. நாங்களெல்லாம் ஆன்லைன்ல வெண்பா கிளாஸ் போனவங்க

10:24 PM நான்: அப்ப ஆன்லைன்லேயே அவுகளைப் பத்தி தெரிஞ்சுக்கலாமே.. வெறும் வெண்பாவைத் படிச்சிட்டு நயன்தாராவைத்தான் பாடணுமா..?

10:25 PM namakkalshibi: ஆமாம்

நான்: ஒளவையார், கண்ணகி, காரைக்கால் அம்மையார் இவங்களைப் பத்தி பாடு.. தமிழுக்கு பெருமையாவது கிடைக்குமேப்பூ..

10:26 PM namakkalshibi: நான் பாடித்தான் தமிழுக்கு பெருமையா?
தமிழில் பாடுவதால் எனக்கு வேணா பெருமை கிடைக்கும்

10:27 PMநான்: என்ன பண்றது? பஞ்சாப், டெல்லி, ஹரியானால இருந்தெல்லாம் கோடம்பாக்கம் வந்து நாலு பேர் பாடும்போது நீ பாடுறதுக்கு என்ன முருகா குறைச்சல்..?

10:28 PM namakkalshibi: நான் தமிழை கொலை செய்ய விரும்பலை
நான் பாடியதை கேக்க விருப்பமா? ஆடியோ இருக்கா?

நான்: இந்த பதிவுல மட்டும் தமிழை வாழ வைச்சிருக்கியாக்கும்..?
பாடினியா..? ஏம்பா முருகா.. ஏதோ வெண்பா பாடுன்னுதான சொன்னேன்.. நிஜமா பாட்டே பாடப் போறியா..? எனக்கு ஏற்கெனவே லேசா குளிர் காய்ச்சல்..

namakkalshibi: http://www.esnips.com/doc/de2feb83-2e50-4d13-bdce-f14a1f656f0e/Voice-recording-from-09-19,-2008-7:11:09 இங்கே போயி கேட்கலாம்..

10:30 PM டின்னர் டைம்…

நான்: சுத்தம்.. பாடியே தொலைச்சுட்டியா..? தாங்குமா தமிழ் உலகம்..?

namakkalshibi: அதெல்லாம் நல்லாவே தாங்கும்..

நான்: டின்னர் டைம்னு கச்சேரியை பாதில விட்டுட்டுப் போயிடறதா..? வூட்ல தங்கமணி இருக்காங்களா..?

namakkalshibi: ஹம்மே ஹம்மே ன்னு பாடுறதுக்கு பதிலா இதுவே நல்லா இருக்கும்.

10:31 PM இல்லை ஊர்ல இல்லே…

நான்: அதான் இந்த நேரத்துல இங்கன கட்டி மேய்க்குறியா..?

namakkalshibi: ஆமா…

10:32 PM நான்: ஹம்மா.. ஹம்.. ஹம்ம ஹம்மா.. இப்படி பாடினா நயன்தாரா வர மாட்டாங்க.. சோனாலி பந்த்ரேதான் வருவாங்க..

10:47 PM நான்: யோவ் எங்கய்யா போன..? சோனாலிக்கு கல்யாணமாகி குழந்தையெல்லாம் இருக்குய்யா..? யோவ் முருகா.. முருகா..

11:27 PM namakkalshibi: டின்னர் போயிருந்தேன்

நான்: முருகா.. டின்னருக்கு ஒரு மணி நேரமா..? உனக்கே ஓவரா இல்ல..

namakkalshibi: இல்லை.. காலைல 9 மணி வரை தாங்க வேண்டாமா… பசி… வயித்துக்கு மட்டும் வஞ்சனை இருக்கக் கூடாதுல்லவா…

நான்: இருக்கவே கூடாது.. இருக்கவே கூடாது.. ஐயையோ ஆமாமாம்.. முருகா.. மறந்து போயிட்டேன்.. உனக்கு யானை வயிறாச்சே.. தெரியாம சொல்லிட்டேன்.. ஒரு மணி நேரமா அப்படி என்ன சாப்பிட்ட..?

namakkalshibi:5 இட்லி, ஒரு ஆஃப் பாயில்.. கடை கொஞ்சம் தூரம்
தெரு முனை வரை நடந்து போகணும்..

11:30 PM நான்: போதுமா.. நடந்து போயிட்டு, வரும்போதே எல்லாம் செரிச்சிருக்குமே..?

namakkalshibi: ஆமா அதுதானே ந்ல்லது… இல்லாட்டி தூக்கம் வராதே. கட்டாந்தரைல கையைத் தலைக்கு வெச்சிப் படுத்தாலும் தூக்கம் வரணும்ல…

11:31 PM நான்: நயன்தாராவையே நினைச்சுக்கிட்டிருந்தா எப்படி தூக்கம் வரும்ன்றேன்..?

11:32 PM namakkalshibi:அதெல்லாம் வரும்.. இஷ்டானந்த சுவாமிகளைக் கும்பிடணும் அதுக்கு…

11:33 PM நான்: இஷ்டானந்த சுவாமின்னு நீங்க சொல்றது நயன்தாராஜியைத்தானே..

namakkalshibi: யூத் படம் பாத்தீங்களா?

நான்: இல்லியே முருகா.?

11:34 PM namakkalshibi: அதுல வரும்…

நான்: என்னது..?

namakkalshibi: இஷ்டானந்த சுவாமிகள் மகிமை

11:35 PM நான்: அது யாரு..?

11:36 PM namakkalshibi: சும்மா டுபாக்கூர் கேரக்டர்…

நான்: யார் பண்ணினா..? விவேக்கா..?

11:38 PM namakkalshibi: விவேக்தான்… விஜய் + விவேக்

நான்: அப்படியா..? காமெடி காட்சிகளை பார்த்ததுபோல் இருக்கிறது..
நயன்தாராவுக்கு கோவில் எப்போது எங்கே கட்டுகிறீர்கள்..?

namakkalshibi: சென்னை திருமங்கலத்தில் இடம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.. நாமக்கல்லில் டிரஸ்ட் ஆஃபீஸ்…

* * * * * * * * * * *

கண்மணிகளா நீங்களே சொல்லுங்க.. இந்த முருகனை என்ன பண்றது..?

நாட்ல எவ்வளவோ வேலை இருக்கும்போது, நயன்தாராவுக்கு கோவில் கட்டுறதுதான் இப்ப ரொம்ப முக்கியமா..?

திருமங்கலத்துல கோவிலைக் கட்டிப்புட்டு நாமக்கல்லுல டிரஸ்ட் ஆபீஸ் வைச்சு உக்காரப் போறாராம்.. வசூல் புத்தகம் பிரிண்டிங்ல இருக்கிறதா போன்ல சொன்னாரு.. தலைக்கு 101 ரூபாய் கொடுத்தா கோவில் சுவத்துல உங்க வலையுலகப் பெயரையே பொன்னெழுத்தில் எழுதி பொறிச்சு வைக்கப் போறாராம்..

கண்ணுகளா.. தப்பித் தவறி “உங்களை நேர்ல பார்க்கணும்.. எப்ப வரட்டும்”னு இந்த முருகன் கேட்டா, அல்லாரும் தப்பிச்சு ஓடிருங்க..

அவ்வளவுதான்.. சொல்லிப்புட்டேன்..