01-10-2009
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
அடுத்து நமது தேன்கிண்ணத்தில் எனதருமைத் தம்பியும், அமீரகத்தின் கவிஞர் குழாமின் தருமிப் புலவனும், அப்பாவிப் பதிவனுமான சென்ஷியின் நேயர் விருப்பமாக இந்தப் பாடல் ஒளிபரப்பாகிறது.
படித்து முடித்து அனுபவித்தவர்கள் உங்களுடைய நன்றியினை தம்பி சென்ஷிக்கு அனுப்பி வைக்கவும்..
பாவம் பயபுள்ளை.. டெய்லி பத்து வரில ஏதோ கவிதைன்னு ஒண்ணு எழுதி வைச்சுட்டு யாருக்கோ காத்திருக்கிறான்.. அவன் நேரம்.. ஒண்ணும் அகப்படலை போலிருக்கு.. இந்த வயசுலபோய் இந்தப் பாட்டை விரும்புறான் பாருங்க..
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா
கண் மூடினால் காலில்லா கட்டிலடா
பிறந்தோம் என்பதே முகவுரையாம்
பேசினோம் என்பதே தாய்மொழியாம்
மறந்தோம் என்பதே நித்திரையாம்
மரணம் என்பதே முடிவுரையாம்
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
சிரிப்பவன் கவலையை மறைக்கின்றான்
தீமைகள் செய்பவன் அழுகின்றான்
இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை
இறந்தவன் அல்லவோ திறக்கின்றான்
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
வகுப்பார் அதுபோல் வாழ்வதில்லை
வந்தவர் யாருமே நிலைத்ததில்லை
தொகுப்பார் சிலரதை சுவைப்பதில்லை
தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லை
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
படம் : நீர்க்குமிழி
பாடியவர் : சீர்காழி கோவிந்தராஜன்
இசை : வி.குமார்
இயற்றியவர் : ‘உவமைக் கவிஞர்’ சுரதா