Archive for the ‘ஜெயராமன்’ Category

பதிவர் இட்லிவடைக்கு எனது கண்டனம்!

ஜனவரி 7, 2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

அன்பு அண்ணன் இட்லிவடையாரின் நேற்றைய இந்தப் பதிவில் http://idlyvadai.blogspot.com/2009/01/blog-post_6932.html நான் பார்த்த ஒரு பின்னூட்டம் எனக்குள் திடீரென்று ஒரு கோபத்தை ஏற்படுத்திவிட்டது. தடுக்க முடியவில்லை. மறைக்க விரும்பவில்லை. நானும் ஒரு பின்னூட்டமிட்டேன். ஆனால் அதனை இட்லிவடையார் வெளியிட மறுத்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம் “அது தனி மனிதத் தாக்குதல்” என்கிறார்.

நானும் ஒத்துக் கொண்டேன். ஆனாலும் அதனை எழுதுவதற்கும், வெளியிடுவதற்கும் ஒரு கடமையும், பொறுப்புணர்ச்சியும் நமக்கு உண்டு என்று வாதிட்டேன். அவர் மீண்டும் மறுத்துவிட்டார்.

ஆகவே வேறு வழியில்லாமல், (இப்படி நடக்கும் என்று நானும் எதிர்பார்த்தேன்) அந்தப் பின்னூட்டத்தையும், அதற்கான எனது பதிலையும் இங்கே பதிவிடுகிறேன்.

ஒரு நபரைப் பற்றி நான் மிகக் கடுமையாக எழுதியிருப்பது இதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன். எனக்கு வேறு வழியில்லை.

“பழசைக் கிளராதே” என்பவர்களுக்கான எனது பதில் “நமது நேரத்தை இது போன்றவர்களுக்கு செலவிடக்கூடாது..” என்பதுதான்.

“பொத்திக் கொண்டு போ” என்று சொல்லாதீர்கள். எனக்கு எழுதியே ஆக வேண்டும்போல் உள்ளது. வருவதை நானே எதிர்கொள்கிறேன்..

அந்தப் பதிவில் இருக்கும் ஒரு பின்னூட்டம் :

//ஜயராமன் said…
அண்மைப் பதிவுகளில், இட்லிவடையில் வீசும் துர்நாற்றம் சகிக்க முடியாததாய் இருக்கிறது. தேடிப்பிடித்து சாக்கடைப் பதிவுகளைப் போடுவதில் சாக்கடை மனமோ அல்லது ஹிட் தேடும் வெறியோ தெரிகிறது. டாய்லெட் விதிகள் போட்டது முதல் அருவருக்கத்தக்க எல்லா பொருள்களும் இட்லிவடையில் வரவேற்கப்படுகிறதோ என்னும் ஐயம் கிளம்புகிறது.
இந்த கட்-பேஸ்ட் பதிவுகளுக்குப் பொருத்தமாக, விவாதத்திற்குரிய பலப்பல கருத்துச்செறிவான பொருள்கள் இணையத்தில் இவருக்கு காணக் கிடைக்கவில்லையா என்ன? எத்தனையோ இருக்கிறதே.
இங்கு பதியப்பட்டிருக்கும் பல பொருட்களுக்கு பல நூறு விளக்கங்கள் எதிர்தரப்பினரால் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த பொய்களும், புரட்டுகளும் பல வருடங்களாக உலாவி வருகின்றன. அதை அறிந்துகொள்ளும் முனைப்பும், உண்மையான ஈடுபாடும் இ.வ விற்கு இல்லை? மாறாக வெறும் அருவருக்கும் அதிர்ச்சி யின் தேவைதான் தங்கள் பதிவுகளில் தெரிகிறது.
இந்த சுவாகா கதை போன்ற அசிங்கங்கள் கருணாநிதி தன் சொந்த பெயரில் ஒரு இருபது வருடம் முன்பு குமுதத்தில் எழுதி வந்த தொடரில் நான் படித்திருக்கிறேன். பின் பலப்பல களங்களில் இந்த இந்துமத விரோத பொய்கள் பரப்பப் பட்டு வருகின்றன. கத்துக்குட்டியாக ஏதோ பதிவுகள் என்ற பெயரில் ஆபாசத்தைப் பரப்பியிருக்கிறீர்கள். நீங்கள் செய்வதும் மதவிரோதம் என்ற பெயரில் சட்டப்படி குற்றம். ஆனால், கேட்க ஆளில்லை. வேதத்தில், முகம்மதுவைச்சொல்லியிருக்கிறது என்று ஜாகிர் நாயக் முதலான இஸ்லாமியர்கள் பொய்களைப் பரப்புகிறார்கள். வேதத்தில் கிருத்துவைச்சொல்லியிருக்கிறது என்று தேவநாயகம் முதலான எவாஞ்சலிஸ்டுகள் புரட்டுகளை அவிழ்த்து விடுகிறார்கள். வேதங்களில் ஆபாசம் இருக்கிறது என்று சாதிவெறி, இந்து துவேச கூட்டங்கள் சொல்லிக்கொண்டு திரிகின்றன. வேதங்களுக்கு இப்படி ஆளாளுக்கு சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். இதில் இட்லிவடைக்கு இலக்கியப்பதிவு போட்டு லட்சம் லட்சமாக ஹிட் வேண்டும் என்று வேறு ஆசை. பரிதாப நிலையில் இருக்கிறீர்கள். இதே விடுதலையில் இஸ்லாமிய மதம் குறித்து ஓரிரு மாதம் முன்பு வந்த நீண்ட தொடரை நீங்கள் கட்-பேஸ்ட் போடவில்லையா? அதற்கு ஏன் துணிவில்லை? அதற்கு இஸ்லாமியர்கள் நீண்ட விளக்கம் கொடுத்திருப்பதையும் சேர்த்து போட்டு நடுநிலை பட்டயம் வாங்கியிருக்கலாமே. இம்மாதிரி பதிவுகள் போட்டு ஒருவேளை உங்கள் மேலிருக்கும் இந்துத்துவ தீட்டை துடைக்கப்பார்க்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அய்யோ பாவம், இட்லிவடை. புது ஆண்டில் இன்னொரு மூக்கு வெளுத்துவருகிறது.
இப்படி நான் எழுதியிருப்பதால் ஏதாவது விளைவு நிகழும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இதையும் பதித்து நீங்கள் ஹிட் பெருவீர்கள் என்ற நல்ல எண்ணமே காரணம்.
நன்றி
ஜயராமன்//

இட்லிவடையார் நிராகரித்த எனது பதில் பின்னூட்டம் :

யோவ் ஒழுக்க சிகரம்.. மொதல்ல நீ யாருன்னு கொஞ்சம் யோசிச்சுப் பாத்தியாய்யா..

“அருவெருப்பு, துர்நாற்றம், சாக்கடைப் பதிவு, அருவருக்கத்தக்க..”

அடேயப்பா மவனே.. இதையெல்லாம் நீ சொல்லி நாங்க கேட்க வேண்டிய நிலைமையா..?

இத்தனைக்கும் ஒட்டு மொத்த உருவமே நீதானய்யா.. நீ அடுத்தவனுக்கு அறிவுரை சொல்றியா..?

மொதல்ல உனக்கு பிளாக்ல எழுதறதுக்காவது ஏதாவது தகுதி இருக்கான்னு யோசிச்சிருக்கியா..? அயோக்கியத்தனமா ஒரு பொண்ணு பேர்ல ஆபாசக் கதை எழுதி, அதையும் நாலு பேருக்கு படிக்கணும்னு தைரியமா திரட்டில வேற சேர்த்து கூத்தடிச்சியே.. அது மட்டும் அருவருப்பு இல்லையாக்கும்.. சாக்கடை இல்லையாக்கும்.. துர்நாற்றம் இல்லையாக்கும்..

பின்ன.. அதெல்லாம் நீ எழுதின வேதமாக்கும்..? நல்லா வாய்ல வருது எனக்கு.. என்னய்யா படிச்சு கிழிச்ச நீ.. படிக்காத முட்டாள்கூட செய்ய மாட்டான்யா நீ செஞ்ச காரியத்தை.. என்னமோ பெரிசா எட்டு மாடி பில்டிங்ல கோட், சூட், டை கட்டிக்கிட்டு வேலை வேற பாக்குறியாம்.. த்தூ.. வெக்கமாயில்லை.. செய்றதையும் செஞ்சுட்டு அடுத்தவனுக்கு அறிவுரை சொல்ல வர்ற..

மவனே அடுத்து எந்த இடத்துல உன் கமெண்ட்டை பார்த்தாலும் நிச்சயமா நான் இதே மாதிரிதான் பதில் கமெண்ட் போடுவேன்..

இருக்குற மானம், மரியாதையை காப்பாத்திட்டு பேசாம வீட்ல போய் உக்காந்து உன் பிள்ளைகளுக்கு நல்ல அப்பனா இருக்கப் பாரு..

அட்வைஸ் பண்றதுக்கும், அறிவுரை சொல்றதுக்குமெல்லாம் ஒரு தகுதி வேணும்யா.. வெங்காயம்..”

இவ்வளவுதான்..

இதனை வெளியிட மறுத்து, பதிவுலக ஜனநாயகத்தைக் குழி தோண்டி புதைத்த இட்லிவடையாருக்கு எனது கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்

உண்மைத்தமிழன்