26-09-2007
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
“பக்கம், பக்கமாக எழுதித் தள்றீங்களே எப்படி ஸார்..?” இப்படி என்னிடம் கேட்காத வலைப்பதிவர்கள் கொஞ்சம் பேர்தான்..
அந்த அளவுக்கு என்னுடைய கட்டுரைகளின் நீளம் உங்களுக்கு அலுப்பையும், ஆச்சரியத்தையும் தந்திருக்கலாம்.
ஆனால் அந்தப் பக்கம் பக்கமாக டைப் செய்வது எப்படியெனில், நான் முதலில் MS-WORD-ல் டைப் செய்து பின்பு, அதனை suratha.com/reader.htm-ற்கு கொண்டு வந்து tsc font-ல் convert செய்து அதை copy செய்து, பின்பு வலைப்பதிவின் post பக்கத்திற்கு வந்து, அதனை paste செய்வேன்.
இப்படித்தான் நேற்று வரையிலும் பதிவுகளை பதிவு செய்து கொண்டிருந்தேன்.
காரணம் எனது typing method தமிழிலேயே மிகப் பழமையான method – Inscript Method.
இதனை உடனடியாகக் கைவிட்டு வேறு method-ஐ கையில் எடுக்க எனது இன்றைய பொருளாதாரச் சூழல் ஒத்துழைக்காததால், இதனையே கட்டி அழுது கொண்டிருந்தேன்.
வலையுலகில் அனைவரும் மின்னல் வேகத்தில் கமெண்ட்ஸ்களை போடும்போது என்னால் அந்தளவிற்கு வேகமாக இயங்க முடியாமல் தவித்ததுண்டு. அதற்கெல்லாம் மொத்தமாக இப்போது ஒரு முடிவு கிடைத்திருக்கிறது.
இதற்கு முடிவு கட்டியவர் அருமை நண்பர் திரு.சுரதா யாழ்வாணன் அவர்கள்.
சென்ற மாதம் உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஹோட்டலில் மாலை நேரத்தில் நடந்த ஒரு வலைப்பதிவர் கூட்டமொன்றில்தான் அவரை முதன்முறையாக நான் சந்தித்தேன்.
அப்போதே அவரிடம் “உங்களால்தான் நான் வலையுலகில் எழுதிக் கொண்டிருக்கிறேன்..” என்றேன். ஆர்வத்துடன் எனது டைப்பிங் முறைகள் பற்றி விசாரித்தார். முழுவதையும் சொன்னேன்.
“unicode-ல் டைப் செய்யும் அளவுக்கு உங்களது டைப்பிங்லேயே ஒரு கீபோர்டை நான் வடிவமைத்துத் தருகிறேன். காத்திருங்கள்..” என்று நான் கேட்காமலேயே ஒரு வாக்குறுதியை எனக்கு அளித்தார்.
சில நாட்கள் கழித்து அவர் ஜெர்மனி செல்வதற்கு முதல் நாள் அவருடைய வீட்டருகே சந்தித்துப் பேசியபோதும், “உங்களுடைய கீபோர்ட் மேட்டர் என் நினைவில் உள்ளது. நிச்சயம் செய்து தருவேன்..” என்றார்.
சொல்லியது போலவே ஊர் போய்ச் சேர்ந்து சில நாட்களுக்குள் எனக்காக unicode-ல் type செய்யும் அளவுக்கு கீபோர்ட் ஒன்றை வடிவமைத்து அனுப்பி வைத்துள்ளார்.
இதோ, இந்த நன்றி பதிவுகூட அண்ணன் யாழ்வாணன் அவர்களின் கீபோர்டை வைத்து நேரடியாக வலைப்பதிவின் post Box-ல் Type செய்யப்பட்டதுதான்.
பார்த்ததே இரண்டு நாட்கள்தான்..
பேசியதோ அரை மணி நேரம்தான்.
செய்து கொடுத்ததோ பெரும் உதவி.
பிரதிபலன் எதிர்பாராமல் செய்த உதவிக்கு கைமாறு என்னால் முடிந்த இந்த ஒரு நன்றி அறிவிப்புதான்..
உதவுகின்ற எண்ணத்தை உள்ளுக்குள் தோற்றுவித்த நம் அன்னைத் தமிழுக்கும்,
உதவிய பெரும் நெஞ்சம் அண்ணன் சுரதா யாழ்வாணனுக்கும் எனது இதயங்கனிந்த நன்றிகள்..
சுரதா யாழ்வாணன் போன்ற திறமைசாலிகள் எங்கிருந்தோ தமிழுக்காக உழைத்துக் கொண்டிருக்க..
இங்கே தமிழ்நாட்டிலேயே இருப்பவர்கள், தமிழை வைத்தே தமிழர்களிடமே வியாபாரம் செய்வது நமது சாபக்கேடு..