Archive for the ‘கழகத்திற்குள் கடிதம’ Category

என்னைப் பின் தொடரும் பதிவர்கள்..!

பிப்ரவரி 24, 2009

24.02.2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

வலைத்தளங்களின் தொழில் நுட்ப வசதிகள் ஒவ்வொரு மாதமும் மேம்பட்டுக் கொண்டே போகின்றன. அந்த வகையில் வந்த ‘பின்தொடர்பவர்கள் பட்டியல்’ பல பதிவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

நமது தளத்தின் மூலமாகவே நாம் அதிகம் பார்க்க விரும்பும் பதிவுகளை அலைச்சல் இல்லாமல் நம்மால் பார்க்க முடிகிறது. அதேபோல் அதிகம் பேர் பார்க்கிறார்கள் என்ற எண்ணிக்கையும் அந்தத் தளத்தின் பெருமையையும், மேன்மையையும் சொல்லாமல் சொல்கிறது.

அந்த வகையில் எனது பதிவு ஒவ்வொரு முறை திறக்கப்படும்போதும் புதிய நபர் யாராவது பின் தொடர்கிறார்களா என்று பார்ப்பதுண்டு. அதன் எண்ணிக்கை கூட, கூட இத்தனை பேர் கவனிக்கிறார்கள் என்பதால்.. இன்னமும் அதிக கவனமாக, ஈர்ப்புத் தன்மையுடன் எழுத வேண்டும் என்று மனம் பரபரக்கிறது.

அந்தப் பட்டியலில் இருப்பவர்கள் யார், யாரென்று பார்க்கலாம் என்று கிளிக் செய்து பார்த்தபோது திடீரென்று ஒரு யோசனை எழுந்தது.. ‘அவர்கள் அத்தனை பேரையும் அப்படியே ஒரு பதிவில் இட்டு அறிமுகப்படுத்தினால் என்ன?’ என்று என் சிந்தனை சிறகடித்து பறந்தது. அந்த சிந்தனையை சிதறடிக்காமல் இங்கே செய்து முடித்திருக்கிறேன்..

இன்றைய தேதி வரையிலும் மொத்தம் 56 பதிவர்கள் என்னைத் தொடர்ந்து வருகிறார்கள். அவர்களைப் பற்றிய அறிமுகங்கள் இங்கே..

1. இளவஞ்சி

http://konguvaasal.blogspot.com
http://ilavanji.blogspot.com
http://tamilcomic.blogspot.com

நவீன புனைவு எழுத்தாளர். ஆனா இப்பத்தான் ‘எழுத மாட்டேன் போ’ன்னு சொல்லி அடம் புடிக்கிறார். ‘கொங்குவாசல்’ பதிவில் இவர் எழுதியிருக்கும் ‘கொங்கு வட்டார வழக்கு மொழி’ நமக்கு மிகப் பெரும் உதவி..

2. மோகன்தாஸ்

http://blog.mohandoss.com
http://baavaa.mohandoss.com

வலையுலகின் தலைசிறந்த பெண்ணியவாதி.. பின்நவீனத்திற்கும், முன் நவீனத்திற்கும் ஒரு பெரும் பாலமாக இருக்கும் பெங்களூரு மைனரு.. இவருடைய பின்னவீனத்துவ கட்டுரைகளைப் படித்துப் பாருங்கள், புரியும்..!

3. அதிஷா

http://www.athishaonline.comhttp://athisha123.blogspot.com

“ஏண்ணா இப்படி எழுதுறீங்க?”ன்னு அவனவன் போன்ல பேசி, திட்டி ஓய்ஞ்சுட்டாங்க.. இந்தப் பயபுள்ளை முதல்முதல்லா என்னை பார்த்தப்பவே சிகரெட்டால சூடு வைச்சு கோபத்தைத் தீர்த்துக்கிட்டான்ல..

4. அருப்புக்கோட்டை பாஸ்கர்

http://aruvaibaskar.blogspot.com

ஒரு காலத்துல துக்ளக் அட்டைப் படங்களையும், கருத்துப் படங்களையும் ஸ்கேன் செய்து போடுவதில் நான்தான் முதல் ஆளாக இருந்தேன். பின்பு என்னிடமிருந்து அந்தப் பெருமையைத் தட்டிப் பறித்த புண்ணியவான் இவர்தான்.. நான்தான் இவரோ என்று நினைத்து எனக்கு ஏகப்பட்ட மிரட்டல்களும், அன்பு மடல்களும் போலிக் கூட்டத்திடமிருந்து வந்து குவிந்தது.

5. தென்றல்

http://nanayam2007.blogspot.com
http://thendral2007.blogspot.com

முக்கியமான எனது எல்லாப் பதிவிலேயும் இவர் ஆஜராயிருப்பாரு..

6. அருண்குமார்

http://thamizthoughts.blogspot.com

பெங்களூரு தம்பி.. ஒரு விதத்துல போலியையும், அவனது அல்லக்கைகளையும் காலி செய்து, இன்னிக்கு வலையுலகம் கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறதுக்கு ரொம்பவே உதவியிருக்கிறவரு.. ஆனா ரொம்ப அடக்கமானவரு.. யார்கிட்டேயும் சிக்காதவரு..

7. வரதராஜ்-துபாய்

http://musikvrdrj.blogspot.com

புத்தம் புதிய திரைப்படங்களை ஆன்லைனில் இறக்குமதி செய்யும் லின்க்குகளை தனது தளத்தில் கொடுத்து வைத்திருக்கிறார்.. ஆளை விடாதீங்க.. பிடிங்க..

8. சுரேஷ்கண்ணன்

http://pitchaipathiram.blogspot.com

‘நான் பார்க்கணும்.. பேசணும்’னு விடாம துரத்திக்கிட்டிருக்கேன்.. போன் நம்பரைக் கூட கொடுக்காம டபாய்ச்சுக்கிட்டிருக்காரு அண்ணன்..

9. கூடுதுறை

http://paakeypa.blogspot.com

நான் எப்பல்லாம் சோகக்கதை, ஆன்மீகக் கதையெல்லாம் எழுதறனோ, அந்த நேரத்துல ‘டான்’னு வந்து நின்னு கண்ணீரைத் துடைச்சுவிடுவாரு.. அவ்ளோ பாசமானவரு..

10. கொங்கு ராசா

http://raasaa.blogspot.com

இவரைப் பத்தி முன்னாடி தப்பா எழுதிட்டேங்க.. இப்ப திருத்திக்கிறேன்..

இவர் ஒரு மூத்தப் பதிவருங்கோ.. 2004-ல இருந்து எழுதிட்டு வர்றாருங்க.. இவரைப் பார்த்துதான் பல பேரு வலைக்குள்ளாற பூந்திருக்காங்க.. கொங்கு வழக்குப் பேச்சு இவர் பதிவுல விளையாடுதுங்கோ.. போய்ப் பாருங்கோ..

முன்னாடி தப்பா எழுதினதுக்கு மன்னிச்சுக்குங்க..

11. விசு என்கிற பொ.விசுவநாதன்

http://vichumsc.blogspot.com

அண்ணே.. பின்னாடி மட்டும்தான் வருவாரு போலிருக்கு..

12. தமிழ்மகன்

http://tamilmagan.blogspot.com

சினிமாவுலகில் இருந்தும், சந்திக்க முடியாத சூழலால் தொலைபேசியில் மட்டுமே பேசிக் கொள்ளும் நல்லதொரு நண்பர்.

13. வெயிலான்

http://veyilaan.wordpress.com

யாருய்யா இந்தாளு..? கோயம்புத்தூர் பக்கம் போற, வர்ற ஆளுக எல்லாரும் “வெயிலானை பார்த்தேன்.. நல்லா பேசினாரு.. சூப்பரா கவனிச்சாரு.. போக்குவரத்துச் செலவுக்கான பணத்தைக்கூட கைல திணிச்சு அனுப்பினாரு”ங்குறாங்க.. என்னை மட்டும்தான் கூப்பிட மாட்டேங்குறாரு..! வைச்சுக்குறேன் ஒரு நாளு..!

14. விஜயராகவன் சீனிவாசமூர்த்தி

http://sujaarun.blogspot.com

இவரும் புதுமுகம்தான்.. பதிவை படிக்க மட்டுமே செய்வார் போலிருக்கிறது.. பரவாயில்லை.. படிக்கிறாரே அதுவே பெரிய விஷயமாச்சே..

15. அக்னிபார்வை

http://agnipaarvai.blogspot.com

ஒரு பத்து நிமிட தாமதத்தால் டிசம்பர் மாத உலகத் திரைப்பட விழாவில் உட்லண்ட்ஸ் தியேட்டரில் சந்திக்க முடியாமல் போய்விட்டது இந்த நண்பரை.. அடுத்த வருட திரைப்பட விழாவில்தான் சந்திக்க முடியும்போல் உள்ளது.

16. வான்முகிலன்

http://vaanmuhilan.blogspot.com

இப்போதுதான் படித்தேன்.. நீங்களும் படித்துப் பாருங்கள்..

17. சினிமா ரசிகன்

http://kollywoodkondattam.blogspot.com

முன்பெல்லாம் எனது சினிமாப் பதிவுகளுக்கு வரிந்து கட்டிக் கொண்டு வருவார். இப்போது வருவதேயில்லை..

18. மடல்காரன்

http://kbmadal.blogspot.com

நீண்ட நாளாகவே பதிவுலகில் உள்ளார். ஆனால் அவ்வப்போதுதான் தலையைக் காட்டுவார்..

19. வலையில் உலாவும் வாசவன்

http://valaivesumvasavan.blogspot.com

இவரை இப்போதுதான் தரிசிக்கிறேன்.. இவருடைய தளத்தின் முகப்பில் இருக்கும் குழந்தை புகைப்படம் கொள்ளை அழகு..

20. மேத்யூ

http://enbathamil.blogspot.com

தளம் விரியவே இல்லை.. என்ன பிரச்சினை..?

21. நித்யகுமாரன்

http://nithyakumaaran.blogspot.com

உள்ள நுழையும்போது ‘டவுசர் பாண்டி’யா வந்தான்யா.. இப்ப ‘பருத்தி வீரனா’ மாறிட்டான்.. ஆனா ‘சொக்கத் தங்கம்..!’

22. செந்தழல் ரவி

இம்சை.. பெங்களூரு தப்பிச்சு ஹாலந்து மாட்டிக்கிச்சு.. அந்த நாட்டுக்காரங்க எப்படி சமாளிக்கிறாங்களோ தெரியலையே..?

23. மெட்ராஸ்காரன்

http://meeramunna.blogspot.com

நானும் இவருக்குப் புதுசுதான்..

24. அதிரைபோஸ்ட்

http://fromtamil.blogspot.com

பலவித அரசியல் கட்டுரைகளை எழுதி வருகிறார்.. அவ்வப்போது படித்ததுண்டு..

25. சத்யா

http://msathia.blogspot.com

நானும் இப்போதுதான் படித்தேன்.. ஜெயாக்கா கதை மனதை என்னமோ செய்கிறது..

26. பரக்கத் அலி

http://barakathalinews.blogspot.com

நாட்டு நடப்புகளை உடனுக்குடன் வலையுலகில் பரப்பி வரும் பரக்கத்அலி எனது நண்பர்.. கூடிய சீக்கிரம் எல்லாருக்கும் நண்பராகிவிடுவார்.. அவர்கிட்ட எதுக்கும் போன் நம்பர் வாங்கி வைச்சுக்குங்க.. ஆபத்துக்கு உதவும்..

27. சண்முகா இலங்கேஸ்வரன்

http://shanmugha.blogspot.com
http://itvav.blogspot.com

இந்தத் தளத்தைப் பார்த்தவுடன் ஆச்சரியமு்ம், அதிர்ச்சியும் அடைந்தேன். இலங்கை, வவுனியாவில் கணினி பயிற்சி நிலையம் ஒன்றை நடத்தி வருகிறாராம் இந்த இனிய நண்பர் சண்முகா இலங்கேஸ்வரன்.

நான் இதுவரையிலும் இந்தப் பெயரையும், வவுனியாவில் இருந்து பதிவேற்றி வரும் இவரைப் பற்றியும் கேள்விப்பட்டதில்லை.. என்னையும் தொடர்ந்து வந்திருக்கிறார்.. இவ்வளவு நாட்கள் கவனிக்காமல் இருந்தது குறித்து எனக்கே வெட்கமாக உள்ளது.. தளத்திற்குச் சென்று படித்துப் பாருங்கள்.

இவருடைய இந்தத் தளத்தில் பலதரப்பட்ட விஷயங்களையும் சுவாரசியமாக அனாயசமாக எழுதியிருக்கிறார் இந்த கணினி ஆசிரியர்.

28. கண்ணாநேசன்

http://kannanesan.blogspot.com

இவரும் புதுமுகம்தான்.. கொஞ்சம்தான் எழுதியிருக்கிறார்.

29. வேத்தியன்

http://jsprasu.blogspot.com

ஈழத் தமிழர் என்பது எழுத்துக்களில் இருந்து தெரிகிறது.. நானும் இப்போதுதான் படிக்கிறேன்..

30. Shan Nalliya

http://worldtamiltravellersforum.blogspot.com

நான் பார்த்தவர்களிலேயே இவர்தான் அதிகம் பேரைப் பின் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

அதேபோல் அதிகமான சொந்தத் தளங்களை வைத்திருப்பவரும் இவராகத்தான் இருப்பார் என்று நினைக்கிறேன்.

உள்ளே சென்று பாருங்கள்..

31. திரட்டி.காம்

http://thiratti1.blogspot.com

திடீரென்று திரட்டியாக உருவெடுத்து நம்மையும் சேர்த்துக் கொண்டு, அதில் தம்மையும் இணைத்துக் கொண்டு பவனி வருகிறார் வெங்கடேஷ்.

32. குடுகுடுப்பை

http://kudukuduppai.blogspot.com

மொக்கைக்கும், சீரியஸுக்கும் மாறி, மாறி பின்னூட்டமிடுவதில் வல்லவர்.. பின்னூட்டங்கள் ஒன்று, இரண்டெல்லாம் போடுவதில்லை. இவருக்கு பிரெஸ்டீஜ் குறைந்துவிடுமாம்.. குறைந்தது 5 அல்லது 10தானாம்..

33. ஷண்முகப்பிரியன்

http://shanmughapriyan.blogspot.com

உதவி இயக்குநரு, கதாசிரியரு, திரைப்படம் இயக்கும் முயற்சியில் உள்ளோர் அப்படி, இப்படீன்னு சினிமாக்காரங்களும் இருக்காங்கன்னு சொல்லிட்டிருந்த வலையுலகத்துல திடீர்ன்னு நம்ம இயக்குநர் ஷண்முகப்பிரியன் ஸாரும் வந்து களத்துல குதிச்சிருக்காரு..

கிட்டத்தட்ட 30 வருட கால திரையுலக அனுபவஸ்தர். இதுவரையில் 4 திரைப்படங்களை இயக்கியுள்ளார். புகழ் பெற்ற, நம்மால் மறக்க முடியாத “ஒருவர் வாழும் ஆலயம்” திரைப்படத்தின் இயக்குநரே நமக்கு வலையுலக நண்பராக வந்திருப்பதில் நிச்சயம் நான் பெருமைப்படுகிறேன். மேலும் ‘பாட்டுக்கு நான் அடிமை‘ (“பிழிஞ்சு காயப் போட்டுட்டேன்” என்ற டயலாக் எத்தனை, எத்தனையோ இடங்களில் பயன்படுத்தப்பட்டது.) ‘மதுரை வீரன் எங்க சாமி’, ‘உதவும் கரங்கள்’ என்று 4 திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.

திரையுலகில் கதாசிரியர்களுக்கு தனித்துவம் கிடைத்துக் கொண்டிருந்த காலத்தில் நம்ம ஷண்முகப்பிரியன் அவர்களின் கதைகளும் பல நல்ல திரைப்படங்களாக உருவெடுத்துள்ளன..

‘உறவாடும் நெஞ்சம்’, ‘உங்களில் ஒருத்தி’, ‘உறங்காத நினைவுகள்’, ‘ஆணிவேர்’, ‘ஈட்டி’, ‘ஆயிரம் முத்தங்கள்’, ‘அன்று முதல் இன்றுவரை’, ‘சின்னத் தம்பி பெரிய தம்பி’, ‘வெற்றி விழா’, ‘தழுவாத கைகள்’, ‘பிரம்மா’, ‘மகுடம்’, ‘ஆத்மா’, ‘ஒன்ஸ்மோர்’ என்று 30-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் இவருடைய கதையில்தான் உருவாகியுள்ளன.

மேலும் ‘நினைவே ஒரு சங்கீதம்’, ‘மெல்லத் திறந்தது கதவு’, ‘ஆஞ்சநேயா’ போன்ற திரைப்படங்களின் கதையை இணைந்து உருவாக்கியுள்ளார்.

தமிழ் மட்டுமன்றி கன்னடத்தில் ‘உஷா சுயம்வரம்’, ‘அதறு பதறு’ என்று சில படங்கள் இவருடைய கதையில் உருவாக்கப்பட்டுள்ளன.

அவருடைய தளத்தைப் பார்த்து, படித்து முதலில் பயந்துதான் போனேன். அவருடைய முதல் சில பதிவுகளைப் படித்துப் பாருங்கள்.. புரியும்.. பின்நவீனத்துக்கே சவால் விடுவதைப் போல் ‘புரியவே மாட்டேன்’ என்று அடம் பிடித்தது. பின்பு இப்போதுதான் ஏதோ கொஞ்சம் எனக்கும் புரிவதைப் போல் இறங்கி வந்து எழுதுகிறார்.

நேரிலும் சந்தித்தேன். மனிதர் அற்புதமாகப் பேசுகிறார். நிமிடத்திற்கு நிமிடம் சிரிக்கிறார். இவருடன் பேசும்போது நமது கவலைகள்கூட கொஞ்சம் ஓரம்கட்டப்பட்டு நாமும் உற்சாகமாகிவிடுவோம். இப்போதும் இளைஞர்களுக்கு சமமாக பேசுவதிலும், எழுதுவதிலும் மிக விருப்பமுடையவராக இருக்கிறார் இந்த 60 வயது இளைஞர்.. பழகிப் பாருங்கள் தெரியும்..

34. ஊர்சுற்றி

http://oorsutri.blogspot.com

அன்றாட நிகழ்வுகளின் மீது சாமான்யனுக்கு எழும் கோபங்களை மிக ரத்தினச் சுருக்கமாக சில கட்டுரைகளாக ஆக்கம் செய்திருக்கிறார்.

35. மருள்நீக்கி

http://marulneekki.blogspot.com

சென்ற டிசம்பர் மாதம்தான் எழுதத் துவங்கியிருக்கிறார். ஈழத் தமிழர் என்று நினைக்கிறேன்.. அமெரிக்காவில் இருப்பதுபோல் தெரிகிறது.. மூங்கையன் மொழி என்று பதிவிற்குத் தலைப்பு வைத்துள்ளார். அது என்ன மொழி என்று தெரியவில்லை. அதோடு கூடவே எழுதியிருக்கும் “அன்பெனும் நறவம் மாந்தி மூங்கையன் பேசலுற்றான்.. என்ன யான் மொழியலுற்றேன்” என்ற வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை.. புரியவில்லை.. .

36. மகா

http://tamil1234.blogspot.com

இலங்கை மக்கள்பால் அனுதாபத்தோடு பல கவிதைகளையும், வன்னி மக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை புகைப்படங்களோடு சொல்லியிருக்கிறார்.

37. சங்கர்

http://www.blogger.com/profile/13602192161584088050

இவர் வலைத்தளம் இல்லாமல் ஜிமெயில் மூலம் இணைப்பு கொடுத்துள்ளார்.

38. விஸ்வநாதன்

http://kundappaviswanath.blogspot.com

ஞாநியின் பாரதிக்கு ஒரு பொட்டு வைத்து மேலும் அழகுபடுத்தி வைத்திருக்கிறார். ஞாநிக்கு இது தெரியுமா என்று தெரியவில்லை.. தெரிந்தால் கோர்ட்டு, கேஸ்.. உறுதி!

39. மாயாவி

http://kundappaviswanath.blogspot.com

இவருடைய தளமும் துவக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது.

40. ரகு முத்துக்குமார்

http://rithumohitha.blogspot.com

இன்னொரு பாசக்கார அப்பா. ‘ரித்துவின் அப்பா’ என்ற பெயரில் எழுதுகிறார்.

41. பிரான்சிஸ் சைமன்

http://bryanisaac.blogspot.com

அதிகம் கவிதைகள்தான் உள்ளன. அனைத்துமே சோகத்தைப் பிழிந்தெடுக்கி்ன்றன.

42. பிரபு

http://www.blogger.com/profile/03660633360455517585

இந்த பிளாக்கர் லின்க் மட்டுமே கிடைக்கிறது..

43. IRAPEKE

http://irapeke.blogspot.com

எப்போதும் வாழ்க்கை அழகானதுதான் என்கிறார் இவர்.

44. பொற்கோ

http://porkovaanan.blogspot.com

இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறார் போல் தெரிகிறது..

45. தண்டோரா

http://vilambarakkaaran.blogspot.com

இந்த மாசந்தான் ஆரம்பிச்சிருக்காரு.. போகப் போகப் பிக்கப் ஆவாருன்றது அவரோட எழுத்துல தெரியுது.. முதல் பதிவே ஆள் எப்படின்னு காட்டுது..

46. பாட்டாளி

http://paattaalinpakkangal.blogspot.com

இதிலேயும் ஒன்றும் இல்லை.. துவக்க விழாவோடு நிறுத்தி வைத்திருக்கிறார்.

47. ஹாலிவுட் பாலா

http://hollywoodbala.blogspot.com

ஹாலிவுட் திரைப்படங்களை அலசி, ஆராய்ந்து, சாறு பிழிந்து, சக்கையெடுக்கும் புத்தம் புதிய ஹாலிவுட் பதிவர்.

48. சர்வேசன்

http://surveysan.blogspot.com

சொல்லணுமா..?

49. வால் பையன்

http://valpaiyan.blogspot.com

கெட்ட வாலாச்சே.. தெரியுமே உங்களுக்கு.. கொஞ்சம் தள்ளியே நில்லுங்க..

50. மலர்

http://globetrotter360.blogspot.com

புதுசு கண்ணா புதுசு.. “திரட்டின்னா என்னங்கண்ணா?”ன்னு கேட்டு என்னை அலற வைச்சிருச்சு குழந்தை..

51. சுபாஷினி

http://baluthemagician.blogspot.com
http://entamilulagam.blogspot.com
http://iniyasamaiyal.blogspot.com

ஒண்ணுல்ல.. மூணு வைச்சிருக்காகளாம் அக்கா..

52. அத்திரி

http://rajkanss.blogspot.com

வஞ்சகமில்லாம வந்து பின்னூட்டத்தை வாரி வழங்கும் புதுசு..

53. தேனியார்

http://palapponamanasu.blogspot.com

கோபக்காரர்.. சந்தேகம் இருந்தா ரஜினியை பத்தி ஏதாவது சொல்லிப் பாருங்க..

54. அப்பாவி தமிழன்

http://mycamerafotos.blogspot.com
http://tamilwares.blogspot.com
http://technotamil.blogspot.com

இவரும் மூணு தளம் வைச்சுக்கிட்டு பயமுறுத்துறார்.. தமிழ் சாப்ட்வேர் பத்தினது எனக்கு ரொம்ப உதவுச்சு.. மிக்க நன்றிங்கோ..

55. ஜாக்கிசேகர்

http://jackiesekar.blogspot.com

ங்கொய்யால. நீயே இப்பத்தான் 55-வது ஆளா சேர்றியா..? உனக்கெல்லாம் வேப்பிலை அடிக்கணும்யா.. மக்களே.. நம்ம ஜாக்கி, வாழ்க்கையில் மிகவும் அடிமட்ட நிலைமையில் இருந்து உயர்ந்திருக்கும் உழைப்பின் சிகரம்.. பழகுவதற்கு இனியவர்.. வெளிப்படையாகப் பேசுபவர். ‘சிறந்த தங்கமணி’ என்கிற பட்டத்தை தாராளமாக இவருக்கு வழங்கலாம்.

56. தமிழ்நேசன்

http://tamilarnesan.blogspot.com

இவரும் புதியவர். இயற்பெயர் சிவாபிரகாசம். “சராசரி தமிழனின் சமூகம் மீதான பார்வைகளை பிரதிபலிக்கிறேன்” என்கிறார் இவர். வாழ்த்துகிறேன்..

நேற்று 60 பதிவர்கள் இருந்தார்கள். கடைசியாக நான் எழுதிய இந்தப் பதிவில் வந்த “நீயும் எல்.டி.டி.ஆளா?” என்ற அனானி ஒருவரின் கேள்விக்கு “இல்லை” என்று நான் பதிலளித்த 1 மணி நேரத்தில், 4 பதிவர்கள் தங்களது பார்வையை வாபஸ் வாங்கிக் கொண்டுள்ளார்கள். அவர்களுக்கும் எனது நன்றி.

பதிவர்களே..

என்னையும் ஒரு ஆளாக மதித்து “நாங்கள் இத்தனை பேர் உன்னைப் பின் தொடர்கிறோம்..” என்று சொல்லியிருப்பது எனக்கு நிச்சயம் பெருமையளிக்கும் விஷயம்தான்..

நீங்களும் உங்களைப் பின் தொடர்பவர்களை இதே போல் லிஸ்ட் எடுத்து அவர்களது பெயர்களை வெளியிட்டு மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தினால், வலையுலகத்தில் பதிவர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாவது பலருக்கும் மிக, மிக சுலபமான வழியாக அமையும்.

ஏதோ எனக்குச் சொல்லத் தோன்றியது.. சொல்கிறேன்..

நன்றி

வணக்கம்.