Archive for the ‘கலைமாமணி விருதுகள்’ Category

யாருக்குய்யா வேணும்…!? போங்கய்யா நீங்களும் உங்க ‘கலைமாமணி’யும்!!!

பிப்ரவரி 27, 2009

27-02-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

மாநிலத்தில் கலை, பண்பாட்டு, கலாச்சாரத் துறைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களை கவுரப்படுத்தும் நோக்கில், மாநில அரசினால் வருடந்தோறும் வழங்கப்படும் ‘கலைமாமணி விருது’ இந்தாண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்திய பட்டியலைப் பாருங்கள்..

2009-ம் வருடத்திய தமிழக அரசின் கலைமாமணிகள்

1. அ.மாதவன் – இயற்றமிழ்க் கலைஞர்
2. கவிஞர் சிற்பி – இயற்றமிழ்க் கலைஞர்

3. சரளா ராஜகோபாலன் – இயற்றமிழ் ஆராய்ச்சியாளர்

4. குருசாமி தேசிகர் – இயற்கலை பண்பாட்டு கலைஞர்

5. அவ்வை நடராஜன் – இலக்கியப் பேச்சாளர்

6. மாசிலாமணி – இலக்கியப் பேச்சாளர்

7. சீர்காழி எஸ்.ஜெயராமன் – இசை ஆசிரியர்

8. எம்.எஸ்.முத்தப்பா – இசை ஆசிரியர்

9. மகாராஜபுரம் சீனிவாசன் – குரலிசை

10. ஏ.வி.எஸ். சிவகுமார் – குரலிசை

11. எம்பார் கண்ணன் – வயலின்
12. வழுவூர் ரவி – மிருதங்கம்

13. டிரம்ஸ் சிவமணி – டிரம்ஸ்

14. சுகி சிவம் – சமயச் சொற்பொழிவாளர்

15. சதாசிவன் – இறையருட் பாடகர்

16. வீரமணி ராஜூ – இறையருட் பாடகர்
17. டி.வி.ராஜகோபால் பிள்ளை – நாதசுரம்

18. எஸ்.வி.மீனாட்சி சுந்தரம் – நாதசுரம்
19. தலைச்சங்காடு டி.எம்.ராமநாதன் – தவில்

20. ஏ.மணிகண்டன் – தவில்

21. செல்வி ஷைலஜா – பரத நாட்டிய ஆசிரியர்

22. செல்வி ஸ்வேதா கோபாலன் – பரத நாட்டியம்

23. செல்வி சங்கீதா கபிலன் – பரத நாட்டியம்

24. செல்வி கயல்விழி கபிலன் – பரதநாட்டியம்

25. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் – பரத நாட்டியம்
26. வசந்தா வைகுந்த் – நாட்டிய நாடகம்
27. மு.ராமசாமி – நாடக ஆசிரியர்

28. கூத்துப்பட்டறை முத்துசாமி – நாடகத் தயாரிப்பாளர்

29. ராஜாமணி – நாடக நடிகை

30. சி.டேவிட் – இசை நாடக மிருதங்க கலைஞர்

31. புதுக்கோட்டை ச.அர்ச்சுனன் – நாடக ஆர்மோனிய கலைஞர்

32. விழுப்புரம் விசுவநாதன் – தெருக்கூத்து

33. சங்கரபாண்டியன் – காவடியாட்டம்

34. வேலவன் சங்கீதா – வில்லுப்பாட்டு

35. பெ.கைலாசமூர்த்தி – ஒயிலாட்டம்

36. துறையூர் முத்துக்குமார் – காளியாட்டம்

37. அபிராமி ராமநாதன் – திரைப்படத் தயாரிப்பாளர்
38. சேரன் – திரைப்பட இயக்குநர்

39. சுந்தர்.சி.- திரைப்பட நடிகர்

40. பரத் – திரைப்பட நடிகர்

41. நயன்தாரா – திரைப்பட நடிகை

42. அசின் – திரைப்பட நடிகை

43. மீரா ஜாஸ்மின் – திரைப்பட நடிகை

44. பசுபதி – குணச்சித்திர நடிகர்

45. ஷோபனா – குணச்சித்திர நடிகை

46. வையாபுரி – நகைச்சுவை நடிகர்

47. சரோஜாதேவி – பழம்பெரும் நடிகை

48. வேதம் புதிது கண்ணன் – வசனகர்த்தா
49. ஹாரிஸ் ஜெயராஜ் – இசையமைப்பாளர்

50. ஆர்.டி.ராஜசேகர் – ஒளிப்பதிவாளர்

51. பி.கிருஷ்ணமூர்த்தி – கலை இயக்குநர்

52. சித்ரா சுவாமிநாதன் – புகைப்படக் கலைஞர்

53. நவீனன் – பத்திரிகையாளர்

54. சீனிவாசன் – ஓவியக் கலைஞர்

55. சுந்தர் கே.விஜயன் – சின்னத்திரை இயக்குநர்

56. திருச்செல்வம் – சின்னத்திரை இயக்குநர்

57. பாஸ்கர் சக்தி – வசனகர்த்தா

58. அபிஷேக் – சின்னத்திரை நடிகர்

59. அனுஹாசன் – சின்னத்திரை நடிகை

60. அமரசிகாமணி – சின்னத்திரை நடிகர்
61. எம்.எம்.ரங்கசாமி – சின்னத்திரை ஒளிப்பதிவாளர்

62. தேவிப்பிரியா – சின்னத்திரை நடிகை

63. ரமேஷ் பிரபா – சின்னத்திரை நிகழ்ச்சித் தொகுப்பாளர்

64. வி.தாயன்பன் – இசைக் கலைஞர்
65. டாக்டர் அ.மறைமலையான் – இயற்றமிழ்க் கலைஞர்
66. ஜாகிர் உசேன் – பரத நாட்டியக் கலைஞர்

67. சரோஜ் நாராயணசுவாமி – இயற்றமிழ்க் கலைஞர்

68. ஆண்டாள் பிரியதர்ஷிணி – இயற்றமிழ்க் கலைஞர்

69. அரிமா கோ.மணிலால் – இயற்றமிழ்க் கலைஞர்

70. பெரு.மதியழகன் – இயற்றமிழ்க் கலைஞர்
71. ஒய்.ஜான்சன் – நாடகக் கலைஞர்

பொற்கிழி பெறுவோர்

1. என்.எஸ்.வரதராசன் (மதுரை) – இசை நாடகப் பாடலாசிரியர்
2. டி.சி.சுந்தரமூர்த்தி (சென்னை) – புரவியாட்டக் கலைஞர்

3. டி.என்.கிருஷ்ணன் (சென்னை) – நாடக நடிகர்

சிறந்த நாடகக் குழு

சாம்புவின் சங்கரநாராயண சபா, ஆடுதுறை

சிறந்த கலை நிறுவனம்

தமிழிசை மன்றம், திருவையாறு.

இந்தப் பட்டியலைப் பார்த்தவுடன் கோடம்பாக்கத்தில் லேசான முணுமுணுப்புகளும், கிசுகிசுப்பான பேச்சுக்களும் துவங்கிவிட்டன. அரசியல் காரணங்களுக்காகவே சிலருக்கு இந்த விருதுகள் சீக்கிரமாக கிடைத்துவிடுகின்றன என்ற செய்திகளும் எழுந்துள்ளன. இதில் உண்மை இல்லாமல் இல்லை.. ஆனால் அப்படி விருதினைப் பெறுபவர்களும் சக கலைஞர்கள்தான் என்பதால் தங்களது குமுறலை கோடம்பாக்கத்துக்காரர்களால் வெளிப்படையாகச் சொல்ல முடியவில்லை.

ஆனால் அதே சமயம், இது மாதிரியான குறுக்கு வழியில் விரைவில் இந்த விருதை சிலர் வாங்கிவிட, அவர்களுக்கு முன்பே இதே துறையில் பணியாற்றி வரும் பல மூத்தக் கலைஞர்களுக்கு இந்த விருது கிடைக்காமல் போய்விடுகிறது. அந்த மூத்தக் கலைஞர்களே பிற்காலத்தில் வருத்தப்பட்டு, ‘எனக்கு ஒரு அங்கீகாரம் இல்லையா?’ என்று கண் கலங்கிய பின்பே, இப்போதுதான் ஞாபகம் வருகிறாற்போல் விருதினை வழங்குவது அந்த விருதுக்கும், அரசுகளுக்கும் பெருமையாகாது. உதாரணம் நம்ம சரோஜாதேவி.

சரோஜாம்மாவுக்கே இப்பத்தான் விருது கொடுக்குறாங்கன்னா இதுவரையில் அரசாண்ட அரசுகளும், கலையுலகமும் இதுவரையில் என்ன செஞ்சுட்டிருந்தாங்கன்னு தெரியலை.. இதைக் கேள்வி்ப்பட்டு மனசு நொந்து, ‘கலைமாமணி விருது’ இதுவரைக்கும் யார், யாருக்கெல்லாம் கொடுத்திருக்காங்க.. யாருக்கெல்லாம் கொடுக்கலைன்னு தேடினா.. கொஞ்சம் அதிர்ச்சியாவும் இருந்துச்சு.. நிறைய கோபமும் வந்துச்சு.

அகில உலக சரோஜாதேவி ரசிகர் மன்றத் தலைவரான மதுரையின் மண்ணின் மைந்தன், இனமானப் பேராசிரியர், திருமிகு தருமி ஐயா அவர்கள், இதையெல்லாம் படிச்சுட்டு அரசின் மெத்தனப் போக்கைக் கண்டிச்சு போராட்டம் நடத்தணும். நான் அவருக்கு வெளில இருந்து ஆதரவு தருவேன் என்று உறுதியளிக்கிறேன்…

சரோஜாதேவியம்மா தமிழ்ல நடிச்சு வெளியான முதல் திரைப்படம் ‘பூலோக ரம்பை’. இது 1958-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி வெளியாகியிருக்கு. அவங்க தமிழ்த் திரையுலகத்துக்கு வந்த அடுத்த வருஷத்துல இருந்துதான் அதாவது, 1959-ம் வருஷத்துல இருந்துதான் ‘கலைமாமணி விருது’ வழங்க ஆரம்பிச்சிருக்காங்க..

1959-ல டி.ஆர்.ராஜகுமாரி, 1960-ல கண்ணாம்பாள், எம்.எஸ்.திரெளபதி, 1961-ல எஸ்.பி.சுப்புலஷ்மி, டி.பி.ராஜலஷ்மி, 1962-ல டி.ஏ.மதுரம், எம்.என்.ராஜம், 1963-ல எம்.வி.ராஜம்மா, ஜி.சகுந்தலா – அப்படீன்னு அவரைவிட திரையுலக சீனியர்களெல்லாம் விருதுகளை வாங்கிட்டாங்க..

சரோஜாம்மா ‘லைம் லைட்’ல இருந்த காலத்துல, அவங்களோட சேர்ந்து நடிச்ச அத்தனை பேருமே தொடர்ந்து ‘கலைமாமணி’ வாங்கிட்டுப் போயிட்டாங்க..

“1964-ல அஞ்சலிதேவி, 1965-ல பத்மினி, பண்டரிபாய், 1966-ல சாவித்திரி, 1967-ல விஜயகுமாரி, 1968-ல வைஜெந்தியமாலா, 1969-ல செளகார் ஜானகி, 1970-ல எஸ்.வரலஷ்மி, மனோரமா, 1971-ல ஜெயலலிதா, சந்திரகாந்தா ஈ.வி.சரோஜா, 1972-ல எம்.பானுமதி(?), கே.ஆர்.விஜயா, வெண்ணிற ஆடை நிர்மலா”

– இப்படி சரோஜாதேவியம்மா செட்ல இருந்த நிறைய பேரு வாங்கிட்டாங்கப்பா.. மூணு பேர் மட்டும்தான் மிஸ்ஸிங். அது தேவிகா, புஷ்பவல்லி, ஜமுனா.. பாவம், தேவிகாவும், புஷ்பவல்லியும் விருதை வாங்காமலேயே இறந்து போயிருக்காங்க.. ஜமுனா, இப்போ ஆந்திரால செட்டில் ஆகி காங்கிரஸ் கட்சி எம்.பி.யாவும் இருந்தாங்க..

இதுலயே நமக்குத் தெரியாத பேரெல்லாம்கூட இடைல இருக்கு. 1966-ல சாவித்திரிகூட ஹேமலதா அப்படீன்னு ஒருத்தங்களும் விருது வாங்கிருக்காங்க.. 1967-ல விஜயகுமாரிகூட டி..ஜெயலஷ்மி, என்.ஆர்.சாந்தினின்னு ரெண்டு பேரு வாங்கியிருக்காங்க… 1972-ல எம்.பானுமதி.. இதுவும் யாருன்னு தெரியல..

இவங்கள்ல ஒருத்தங்களுக்குப் பதிலா அப்பவே இந்த விருதை சரோஜாதேவிக்குக் கொடுத்திருந்தாகூட மரியாதையா இருந்திருக்கும்.. இப்ப பேரனோட படத்துல நடிக்கும்போதுதான் நம்ம அரசுக்குத் தெரிஞ்சிருக்கு, “ஐயையோ சரோஜாதேவியம்மாவுக்குத் தரலியே..”ன்னு! பார்த்துக்கி்டடேயிருங்க.. விருது கொடுக்குற நிகழ்ச்சியில, “எம்.ஜி.ஆரு.க்குக்கூட வராத பாசமும், நேசமும் எங்களுக்கு இருக்கு”ன்ற மாதிரியான பேச்சு நிச்சயமா வரும்..

எப்படியோ இப்பவாச்சும் அறிவு வந்து கொடுத்தாங்களே.. அதுக்கு ஒரு நன்றிதான்.. ஆனா அதுக்காக எல்லா நடிகரும், நடிகையும் இனிமே பேரன்கள் தயாரிக்கும் திரைப்படங்களில் நடித்தால் மட்டுமே, விருதுகள் கிடைக்கும்னு நினைச்சு ஓடி வந்தா என்ன பண்ணுவாங்க..? எல்லாருக்கும் சான்ஸும் கொடுத்து, விருதும் கொடுத்திருவாங்களா..? சரி விடுங்க.. அடுத்த விஷயத்தைப் பார்ப்போம்..

இதுக்கு அடுத்த செட்டு ஆளுகன்னு பார்த்தீங்கன்னா..

1974-ல வாணிஸ்ரீ, 1975-ல கே.என்.கமலம், காந்திமதி, விஜயசந்திரிகா, மஞ்சுளா, 1976-ல சுஜாதா, தாம்பரம் லலிதா(?), ஹேமமாலினி(?), 1977-ல ‚வித்யா, சிவபாக்கியம்(?), நாஞ்சில் நளினி, 1978-ல லதா, ஷோபா, சி.டி.ராஜகாந்தம், 1979-ல ஜெயசித்ரா, கலாவதி, யு.ஆர்.ஜீவரத்தினம், ரமணி(?) – இப்படி ஒரு லிஸ்ட்டு..

இதுல முக்கியமான அடுத்த தலைமுறை கதாநாயகிகளெல்லாம் வாங்கியாச்சு.. ஆனா இதுலேயும் விடுபட்டுப் போன கதாநாயகிகள்ல முக்கியமானவங்க ஜெயந்தி, சாரதா, ரோஜாரமணி, சந்திரகலா, ராஜஸ்ரீ, காஞ்சனா, பிரமிளா, பத்மப்பிரியா, கவிதா, சங்கீதான்னு ஒரு லிஸ்ட்டே இருக்கு..!

என்ன சரியா நடிக்கலைன்னு நினைச்சுட்டாங்க போலிருக்கு.. இந்த லிஸ்ட்லயே பார்த்தீங்கன்னா சி.டி.ராஜகாந்தம், கலாவதி, யு.ஆர்.ஜீவரத்தினம் மூணு பேரும் இதுக்கு முந்தின தலைமுறையைச் சேர்ந்தவங்க.. பாவம் அடுத்த தலைமுறைலதான் வாங்க வேண்டியிருந்திருக்கு..

இதுக்கு அடுத்ததுதான் நம்ம செட்டு..

என்னை மாதிரி சின்னப் புள்ளையான பதிவர்கள் பலருடைய வயித்தெரிச்சலை வாங்குற மாதிரியான மேட்டரெல்லாம் இதுலதான் இருக்கு.

1980-ல‚ ஸ்ரீபிரியா, வசந்தா(?), 1981-ல ஸ்ரீதேவி, எஸ்.ஆர்.சிவகாமி(?), 1982-ல சரிதா, சண்முகசுந்தரி, 1983-ல ராஜசுலோசனா, பி.பானுமதி, விஜயகுமாரி, 1984-ல ராதிகா, எஸ்.என்.பார்வதி, 1986-ல அம்பிகா, 1987-ல சுஹாசினி, 1990-ல சீதா, சுமித்ரா, எம்.சரோஜா, 1992-ல பானுபிரியா, சுகுமாரி, 1993-ல சச்சு, ரேவதி, டி.ஆர்.லதா(?) இப்படி ஒரு செட்டு ஆட்கள் வாங்கிட்டாங்க..

என்னாங்கடா இது? நம்மளோட ஒரிஜினல் ஹீரோயின்களையே கணக்குல எடுத்துக்காம இருந்திருக்காங்க..!

‘புதிய வார்ப்புகள்’ல சின்னப் பசங்களான எங்க எல்லாருக்கும் தமிழ் சொல்லிக் கொடுத்த ரதிக்கு அவார்டு இல்லையா..? கண்ணாலேயே ‘டியூஷன்’ எடுத்த மாதவிக்கு எங்க அவார்டு..? தமிழ்ச் சினிமால முதல் முதல்லா சிகரெட் பிடிச்சு காண்பிச்ச பெண்ணியவாதி ராதாவுக்கு வெறும் புகைதானாம்ல..! காமவெறி பிடித்த அயோக்கிய ஆண்களை கோர்ட்டுக்கு இழுத்து வந்த முதல் நவீன பெண்ணியவாதி பூர்ணிமா ஜெயராமை காணவே காணோம்..!, ‘இந்திரலோகத்தில் சுந்தரி’யான நளினிக்கு என்னாச்சு..? ‘பூங்காற்று சூடாச்சு; ராசாவே நாளாச்சு’ன்னு பாடுன ஜீவிதாவையும் கைவிட்டுட்டாங்க.. பெரிசுகளையெல்லாம் கைப்பிடித்து அ, ஆ, இ, ஈ சொல்லிக் கொடுத்த தீபா டீச்சருக்கும் இல்லைன்னுட்டாங்களே..! செல்லமா கொஞ்சிக் காமிச்ச அர்ச்சனாவுக்கு பெப்பேவா.? சேலை, புடவை, பொட்டெல்லாம் அமோகமா விக்குறதுக்கு ஏற்பாடு பண்ணின நதியாவுக்கு என்னாச்சு? ‘தலைவருக்கே’ தண்ணி காட்டுன மை ஸ்வீட் ஹார்ட் அமலாவுக்கு அல்வாவா..? என்னை மாதிரி பச்சைப் புள்ளைகளை ‘ஐ லவ் யூ’ன்னு சொல்லி பைத்தியமாக்குன நிரோஷாவுக்கு ‘ஸாரி… வீ கேட் யூ’ன்னு சொல்லிட்டாங்க.. ‘தென்றல் மூலமா என்னைத் தொட்ட’ ஜெயஸ்ரீ, ‘காளை.. காளை.. முரட்டுக்காளைன்னு’ உருக்குன ரூபிணி.. இவுகளையும் லிஸ்ட்ல காணோம்.. கமலை கலாய்த்த சுலட்சனாவுக்கும் இல்லையாம்.. குப்புறக் கவுத்த கெளதமிக்கும் இல்லையாம்.. என்ன கொடுமை சரவணா இது..!

இவுங்கள்லாம் என்ன நடிக்காமய்யா இருந்தாங்க..? இல்லாட்டி நாங்கதான் பார்க்காம இருந்தோமா..? ஏன்யா அப்பவெல்லாம் எந்தப் பத்திரிகையும் இதைப் பத்தி எழுதலை!? எழுதியிருந்தா எங்க அப்பன், ஆத்தாகிட்ட சொல்லி ஓட்டை மாத்திப் போட்டு புரட்சி பண்ணி ஆட்சியை கவுத்திருப்போமே..!

இதுல இன்னொரு கொடுமை என்னன்னா.. சண்முகசுந்தரின்றவங்க முதல் தலைமுறையைச் சேர்ந்தவங்க.. ராஜசுலோசனாவைப் பத்தி சொல்லணுமா..? அவங்க ‘நடிகவேள்’ எம்.ஆர்.ராதாகூட ஜோடியா நடிச்சவங்க.. பி.பானுமதி. ஆம்பளை சிங்கம். சிவாஜி, எம்.ஜி.ஆரே பயப்படுற மாதிரி இருந்தவங்க.. இதுக்கு முந்தின தலைமுறை.. முதல் பெண் இயக்குநர்.. சுகுமாரி, ‘பாசமலர்’ படத்துல ‘வாராயோ தோழி வாராயோ’ன்னு சாவித்திரிகூட ஆடிப் பாடுற தோழிகள்ல முதல் ஆளா நிப்பாங்க.. நாளைக்கு டிவில போட்டாங்கன்னா பாருங்க.. அத்திரைப்படத்தின் இயக்குநர் பீம்சிங்கின் மனைவியும்கூட.. எம்.சரோஜா.. இவங்களும் சீனியர் ஆர்ட்டிஸ்ட்.. ‘டணால்’ தங்கவேலுவோட ஜோடி. சச்சு அம்மா.. ‘காதலிக்க நேரமில்லை’ல நாகேஷையே கலாய்ச்சவங்க.. இவங்கள்லாம் எந்தக் காலம்..? இப்படித்தாங்க தலைமுறை தாண்டி இவுங்களும் வந்து வாங்கியிருக்காங்க..

அடுத்த செட்டுக்கு வாங்க..

1994-ல சுகன்யா சி.கே.சரஸ்வதி, 1995-ல குஷ்பு, 1996-ல ஊர்வசி, கோவை சரளா, வடிவுக்கரசி, 1998-ல மீனா, ரேகா, கெளசல்யா செந்தாமரை, ரோஜா, 1999-ல ரம்யாகிருஷ்ணன், ராதாபாய், பசி சத்யா, டி.பி.முத்துலஷ்மி..

இதுல பாருங்க.. சி.கே.சரஸ்வதி, ராதாபாய்.. முதல் தலைமுறை நடிகையர்கள்.. நீண்ட வருடங்களாக நடித்துக் கொண்டிருந்தவர்கள்.. ரொம்ப லேட்டு.. அது போலவே டி.பி.முத்துலஷ்மி.. பழம்பெரும் நடிகைன்னே சொல்லலாம்.. எத்தனை வருஷம் கழிச்சு..?

இதுலேயும் கூத்த பாருங்க.. சுகன்யாவுக்குக் கொடுக்கும்போது கஸ்தூரிக்கு ஏன் கொடுக்கலை..? ஊர்வசிக்குக் கொடுக்கும்போது ஜோதிக்கு ஏன் கொடுக்கலை..? வடிவுக்கரசிக்குக் கொடுக்கறப்ப கீதாவுக்கும் கொடுத்திருக்கலாம்ல.. ரேகாவுக்கு கொடுத்திட்டு ரஞ்சிதாவுக்கு கொடுக்கலேன்னா எப்படின்றேன்..? கெளசல்யா செந்தாமரைக்குக் கொடுத்தவங்க சரண்யாவுக்கும் தட்டிவிட்டிருக்கலாமே.. சி.கே.சரஸ்வதிக்குக் கொடுத்தவங்க நிஷாந்திக்கும் தந்திருக்கலாமே..! ரம்யாகிருஷ்ணனுக்கு கொடுக்கும்போது, நக்மாவுக்கு கொடுக்குறதுல என்னங்கய்யா தப்பு? கோவை சரளாவுக்குக் கொடுத்தப்போ, அழகியத் தொடையழகி ரம்பாவுக்கும் கொடுத்திருந்தா எதுல குறைஞ்சு போயிருப்பாங்க..? ‘பசி’ சத்யாவுக்கு கொடுக்கும்போது சுவலட்சுமிக்கும் நீட்டிருக்கலாமே…! மீனாவுக்கு குடுத்தீங்களே..! அப்படியே, ஆயில் மசாஜ் பண்றது எப்படின்னு செஞ்சு காட்டுன மதுபாலாவுக்கும், தக்காளி விலையை ‘கிக்’குன்னு ஏத்திவிட்ட வினிதாவுக்கும் இதே மாதிரி கொடுத்திருக்கலாமே..! கொஞ்சமா நடிச்சாலும், பேர் சொன்ன மாதிரி நடிச்சிருந்த அஸ்வினிக்கும் தரலே.. ஜெயபாரதிக்கும் தரலே.. ரோகிணியையும் நட்டாத்துல விட்டுட்டாங்கப்பா..

சின்ன பட்ஜெட் படத்து ஹீரோயினுகளுக்காச்சும் கொடுத்திருக்கலாம்.. வஞ்சகமில்லாம அந்த நேரத்துலதான் எத்தனை பேரு கொடி கட்டிப் பறந்தாங்கய்யா..! மேனகா, வனிதா, சத்யகலா, மாதுரி(என்ன சிரிப்புன்றேன்..?! நடிப்பு நல்லாத்தான் இருந்துச்சுன்றேன்..!), கோகிலா, இளவரசி, பல்லவி, விஜி, சாரதா ப்ரீதா, காவேரி, வினோதினி, சுமா, பிரகதி, அஞ்சுன்னு.. இப்படி நிறைய பேரு எத்தனை ‘பட்ஜெட்’ படங்களை வாழ வைச்சாங்களேப்பா.. விட்டுப்புட்டாங்களே..!

இது மட்டுமா..! அப்பப்ப வந்து நடிச்சிட்டு போன சசிகலாவுக்கும் இல்ல.. ‘புது வசந்தம்’ சித்தாராவையும் காணோம்..! பீரோ சாவியை ஒளிச்சு வைக்க இடம் கண்டுபிடிச்ச ஆம்னிக்கும் இல்ல.. ‘குண்டு தக்காளி’க்கு அர்த்தம் சொன்ன ரவாளியக்காவுக்கும் இல்ல.. ‘கிட்டிப்புல்’ விளையாட்டை பரபரப்பாக்கிய ஐஸ்வர்யாவுக்கும் இல்ல.. சடுகுடு விளையாட்டுல ஜெயித்த யுவராணிக்கும் இல்ல.. பிரின்ஸிபாலையை காதலுக்கு சப்போர்ட் பண்ண வைச்ச மோகினிக்கும் இல்ல.. நாக்குல விளையாடிக் காட்டுன சங்கவிக்கும் இல்ல.. கார்த்திக்குக்கே நீச்சல் கத்துக் கொடுத்த ப்ரியாராமனுக்கும் இல்ல.. ‘சின்ன குஷ்பு’ சிவரஞ்சனியையும் காணோம்.. ஒல்லியா இருந்தாலும் நடிப்புல பட்டையைக் கிளப்புன சங்கீதாவைக் காணோம்.. ‘செளந்தர்ய அழகி’ செளந்தர்யாவையும் காணோம்.. ‘ஏப்ரல் மேயிலே காலேஜே காய்ஞ்சு போச்சு’ன்னு சொன்ன ஹீராவை காணோம்.. ‘மப்’பென்று வலம் வந்த மந்த்ராவை காணோம்.. பட்டம் பறக்கவிட்ட சொர்ணாவைக் காணோம்.. ‘விருமாண்டி’க்காக உயிரைவிட்ட அபிராமியைக் காணோம்.. ‘ஓ போடு’ன்னு சொல்லிக் கொடுத்த கிரண் மாமியைக் காணோம்..

சில பேரு கல்யாணம், புள்ளை, குட்டின்னு விலகித்தான் போவாங்க.. நாமதான் தேடிப் பிடிச்சு இட்டாந்து மொட்டையடிச்சு, காது குத்தி கலெக்ஷனை பார்க்கணும்..! நாளைப் பொழுதைக்கு அவுங்க திரும்பி நடிக்க வரும்போது, சீனியர் நடிகைன்னு எல்லாருக்கும் தெரிய வேணாம்..!?

சில அழகுச் சிலைகளை வெளிமாநிலத்துக்காரங்கன்னு சொல்லி ஒதுக்கி வைச்சு அநியாயம் பண்ணிருக்காங்களே.. என்னன்னு சொல்றது..? உலக அழகி ஐஸ்வர்யாவை ஒவ்வொரு நாட்டுலேயும் கூப்பிட்டிருக்காங்க.. இங்க என்னடான்னா மூணு படத்துல நடிச்சு முடிச்ச பின்னாடியும் எதுவுமே கொடுக்காம இருக்காங்க.. இது நியாயமா..? ‘இருவர்’ முடிஞ்ச பின்னாடியே கொடுத்திருக்கணும்.. என்ன நடிப்பு.. என்ன அழகு..!

மனீஷா கொய்ராலாவை விட முடியுமா? மறக்க முடியுமான்றேன்.. ‘பாபா’ல அவுக வரும்போதெல்லாம் ‘கிழவி’.. ‘கிழவி’ன்னு கத்துறதையே சகிச்சிக்குட்டு நடிச்சுக் கொடுத்துட்டு போனாங்களே.. அந்தப் பொறுமைக்கு ஒரு பரிசு கொடுக்க வேணாம்..! வெத்தலையை எப்படி பாஸ் பண்றதுன்னு, வெத்தலையை கண்டுபிடிச்ச நமக்கே சொல்லிக் கொடுத்தாங்களே.. மறக்க முடியுங்களா..! ‘கலைமாமணி’க்கு கொடுத்து வைக்கலை.. அவ்ளோதான்..

அடுத்து பாருங்க.. 2000-ல தேவயானி, 2001-ல ரேகா(ரெண்டு ரேகா வர்றாங்க.. யாருன்னு தெரியலை..) 2002-ல விஜயசாந்தி, 2003-ல சிம்ரன், கனகா, லஷ்மிராஜ்யம்(யாருங்க இது) 2004-ல சினேகா, கமலாகாமேஷ், சி.ஆர்.சரஸ்வதி, 2005-ல ஜோதிகா, சத்யப்ரியா, 2006-த்ரிஷா, நவ்யா நாயர், 2008-ல நயன்தாரா, அசின், ஷோபனா, அனுஹாசன், சரோஜாதேவி..

இப்படி வந்து முடிஞ்சிருக்கு லிஸ்ட்டு.. இதுல 2007-ல கலைமாமணி விருது வழங்கப்படவேயில்லையாம். காரணம் யாரைக் கேட்டாலும் தெரியலைன்றாங்க.. போன் பண்ணி, பண்ணி அலுத்துப் போச்சு.. விட்டுட்டேன்..

இதுலேயும் பாருங்க.. குளோஸப்புல கண்ணை மூடிக்கிட்டாலும், நடிப்புல நம்ம கண்ணைத் திறந்த கெளசல்யாவைக் காணோம்.. சிரிச்சு, சிரிச்சே நம்மளை காலி செஞ்ச லைலாவைக் காணோம்.. டிரெயின்ல ஓடி, ஓடியே பில்டப்பு கொடுத்த சதாவை காணோம்.. பிதாமகனையே ஆட்டைய போட்ட இன்னொரு சங்கீதாவையும் காணோம்.. கண்ணுலயே சோகத்தை பிழியும் சோனியா அகர்வாலையும் காணோம்..

வருஷா வருஷம் 10 பேருக்கு, 20 பேருக்குன்னு கொடுத்திருந்தா இத்தனை கண் கண்ட தெய்வங்களும் பட்டியல்ல வி்டுபட்டுப் போயிருப்பாங்களா..? இனிமே எந்தக் காலத்துல இவுங்களுக்கு ‘கலைமாமணி’ கொடுத்து இந்த அரசு புண்ணியத்தைத் தேடிக்கிறது.. கோடி முறை காசில குளிச்சாலும் இந்த புண்ணியம் கிட்டாதே..!

ஐயையோ.. இப்பத்தான் ஞாபகம் வருது..! ஆத்தாடி.. எப்படி மறந்தேன்..? எப்படி மறந்து போனேன்..!

இன்னொரு பக்கம் பாருங்க..

‘எழந்தப்பழம்.. எழந்தப்பழம்’னு விக்க வந்த விஜயநிர்மலாவை யாருன்னு கேக்கணுமாம்..! ‘பளிங்கினால் ஒரு மாளிகை’ன்னு ஆடிக் காட்டுன விஜயலட்சுமியை நாம மறந்திரணுமாம்.. ‘குடிமகனே.. குடிமகனே’ன்னு நம்ம எல்லாரையும் பெயர் சொல்லி அழைத்து பெருமைப்படுத்திய ஆடுன சி.ஐ.டி. சகுந்தலாவை விட்டிரணுமாம்.. ‘கள்ளிக்கோட்டை சொர்ணம்’ ஜெயமாலினியை நினைச்சே பார்க்கக் கூடாதாம்.. ‘கானக்கருங்குயிலே கச்சேரிக்கு வர்றியா.. வர்றியா’ன்னு கூப்பிட்ட ஜோதிலட்சுமிக்கும் கிடையவே கிடையாதாம்.. வருஷக்கணக்கா உதட்டைச் சுழுக்கியே எங்க உள்ளத்தைச் சுளுக்குன ஒய்.விஜயாவுக்கு ஒத்தடம் கிடையாதாம்..! ‘பலானது ஓடத்து மேல’ன்னு ஆடுன குயிலிக்கும் இல்லையாம்.. கலைச்சேவைக்கு தனது வாரிசையும் களமிறக்கி சாதனை படைத்திருக்கும் அனுராதாவுக்கும் இல்லையாம்.. டிஸ்கோ டான்ஸ் ஆடுன சிபிஐ ஆபிஸர், டிஸ்கோ சாந்திக்கும் இல்ல.. ‘மடிப்பு அம்சா’ விசித்ராவுக்கும் இல்ல.. ‘மலமல மருதமலை’ன்னு, மருதமலைக்கு இன்னொரு அர்த்தம் கண்டுபிடிச்ச மும்தாஜுக்கும் இல்ல.. ‘சீனாதானா டோய்’ ரகசியாவுக்கும் இல்ல.. புகார் சொல்லியே காணாப் போன, ‘வாளமீன்’ மாளவிகாவுக்கும் இல்ல… தமிழ் கூறும் நல்லுலகத்தின் இப்போதைய இளைஞர்களுக்கு ‘பிட்’டு காண்பிச்சே, பட்டையைக் கிளப்புன தங்க மகள் ஷகீலாவுக்கும் இல்லையாம்..

எல்லாத்துக்கும் மேல.. எல்லாத்துக்கும் மேல..

இருபதாண்டு காலம் தமிழ்ச் சினிமாவின் அடையாளமாகத் திகழ்ந்த, தான் இருந்த காலம் முழுவதும் கோடம்பாக்கத்தை ஆட்டிப் படைத்த, தமிழ்த் திரையுலகில் கொடி கட்டிப் பறந்த, தமிழ்ச் சினிமா ரசிகர்களின் நெஞ்சமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும், இதய தெய்வம், கனவுக் கன்னி ‘விஜயலஷ்மி என்கிற ‘சில்க் ஸ்மிதா’வுக்கு கொடுக்கவே இல்லையாம்..

போங்கய்யா நீங்களும் உங்க ‘கலைமாமணி’யும்.. !!! எவனுக்கு வேணும்..!

டிஸ்கி : மறக்காம தமிழ்மணம் கருவிப்பட்டைல நச்சுன்னு ஒரு குத்து குத்திருங்க…!

இவ்வளவு நேரம் பொறுமையா படிச்சதுக்காக ஒரு ‘பிட்டு’ படம் கீழே..