Archive for the ‘கம்ப்யூட்டர்’ Category

உதவி வேண்டும் பதிவர்களே..!

திசெம்பர் 22, 2008


22-12-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

ஏற்கெனவே நான் புலம்பித் தள்ளியிருக்கும் இந்தப் பதிவின் கடைசிக்கு முந்தியான 6-வது பத்தியில் எழுதியிருப்பது தற்போது மீண்டும் நடந்துள்ளது.

பிளாக்கில் எழுத வந்த முதல் நாளிலிருந்தே எனது inscript typing method-ஐ வைத்து Unicode-ல் type செய்ய முடியாமல் தவியாய் தவித்துப் போனேன்..

வேறு Typing Method-ற்கும் மாற முடியாத சூழலில் இருந்தபோது நண்பர் பொங்குதமிழ் ராவணன் அவர்கள் பெருமுயற்சி செய்து எனக்காக ஒரு யுனிகோட் கீபோர்டை செய்து கொடுத்தார். அதிலேயும் சில பிரச்சினைகள் இருக்க.. அதை சரி செய்து தருவதாகச் சொல்லியிருந்தார்.

அதற்குள்ளாக நமது ‘கிழக்குப் பதிப்பகம்’ பத்ரி ஸாரும், நாகராஜன் ஸாரும் NHM Software-ஐ ரிலீஸ் செய்தார்கள். ஆனால் இதில் எனது inscript method இல்லாமல் இருந்தது. பின்பு நாகராஜன் அவர்களிடம் எனது நிலைமையைத் தெரிவித்து ‘அழுத’ பின்பு எனக்காக inscript method-ஐ NHM Software-ல் இணைத்துக் கொடுத்தார். மிக்க நன்றி நாகராஜன் ஸார்..

அதன் பின்னர் பிளாக்கரில் டெக்ஸ்ட் பாக்ஸில் டைப் செய்ய வேண்டி வந்தால் NHM Software-ஐ பயன்படுத்தி நேரடியாக அதிலேயே டைப் செய்து வந்தேன்.

ஆனால் வழக்கம்போல அதிலும் ஒரு சின்னச் சிக்கல் முளைத்தது.. ஒரு எழுத்தை அழிக்க வேண்டும் என்று நினைத்தாலும் முடிவதில்லை. ஒட்டு மொத்த வார்த்தையும் தானாகவே செலக்ட் ஆகி டெலீட் ஆகிவிடுகிறது. மேலும் கூடவே அந்த எழுத்துக்கள் ஆங்கில அஞ்சல் எழுத்துக்களாக உருமாறி விடுகின்றன. இதனால் என்னால் தொடர்ந்து பிளாக்கர் டெக்ஸ்ட் இடத்திலேயே டைப் செய்ய இயவில்லை. போதாதக் குறைக்கு ஏதோ “அ” என்கிற எழுத்து டெக்ஸ்ட் ஆப்ஷனில் உட்கார்ந்து கொண்டு அழிச்சாட்டியம் செய்து வருகிறது.. இந்த எழுத்தினால்தான் பிளாக்கரின் டெக்ஸ்ட் பாக்ஸில் என்னால் நேரடியாக டைப் செய்ய முடியவில்லை என்று நினைக்கிறேன்.

இதனை ஒழித்துக் கட்ட என்ன வழி..?

அடுத்தது எனது தளத்தை ஓப்பன் செய்தாலே சிஸ்டமே ஆடிப் போய் நின்றுவிடுவதாக பல பதிவுலக சிங்கங்கள் போன் செய்து திட்டிக் கொண்டிருந்தன. இதை முருகனிடம்தான் கேட்க வேண்டும் என்று சொல்லித் தப்பித்து வந்தேன்.(தெரிஞ்சாத்தான சொல்றதுக்கு..?)

அப்போது பார்த்து நண்பர் தமிழ்பிரியன் வடிவில் வந்த முருகப்பெருமான் அதனை அவர் வாயிலாகவே தீர்த்து வைத்தான். நன்றி தமிழ்பிரியன் ஸார்.. இப்போது அந்த “தீபா கூகிள் பேஜஸ்” என்கிற நிரலி நீக்கப்பட்டு எனது தளம் வேகமாகப் பதிவிறக்கமானது.. இதுவும் கொஞ்ச நாள்தான்..

அந்தச் சமயத்தில் ஒரே ஒரு முறை மட்டுமே முருகனுக்கு நன்றி சொல்லிவிட்டு அப்புறம் நான் அவனைக் கண்டு கொள்ளவில்லை. அந்தக் கோபம் அவனுக்கு..

மறுபடியும் விளையாட்டு காட்டுகிறான்..

இந்த முறை கடந்த 4 நாட்களாகவே எனது தளம் முழுமையாக திறக்க மறுக்கிறது..

Get Clicky என்கிற சாப்ட்வேருக்குப் பின்பு இருப்பது எதுவுமே திறக்கப்படாமல் அப்படியேதான் முருகன் சிலைபோல் நிற்கிறது.

இடது கீழ்ப்பக்கத்தில் “transferring data from c20.stateounter.com…” என்று டிஸ்பிளே ஆவதோடு தளம் அப்படியே நிற்கிறது.. இதற்கு மேல் எந்த மாற்றமுமில்லை..

கூடவே எனது தளத்தின் வலதுபுற மேல்புறத்தில் முதல் இடத்தில் இருக்கும் ‘எனது தளத்தை பின்தொடர்பவர்கள்’ இடத்தில் ஒருவரின் புகைப்படம்கூட வெளியாக மறுக்கிறது.. ஆனால் எண்ணிக்கையை மட்டும் காட்டுகிறது..

முருகன் ஏன்தான் இப்படி படுத்துறானோ தெரியலை..?

நான் என்ன செய்ய வேண்டும் என்பதை விஷயம் தெரிந்த பதிவர்கள் சொன்னால் முருகனிடம் சொல்லி உங்களுக்கு ஏதாவது மேலயோ, அல்லது கீழயோ போட்டுக் கொடுக்கச் சொல்கிறேன்..

என்னால் முடிந்தது அவ்வளவுதான்..

நன்றி..

வாழ்க வளமுடன்..