10-1௨-08
என் இனிய வலைத்தமிழ் மக்களே..
‘தர்மசங்கடம்’ என்கிற வார்த்தையை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அந்த வார்த்தைக்கான அர்த்தத்தை, சில வேளைகளில் மட்டுமே நமது வாழ்க்கையில் உணர்ந்திருப்போம்.
அப்படியொரு உணர்வை ஏற்படுத்தியது இந்தப் புகைப்படங்கள்.
நீங்களே பாருங்கள்.
சமீபத்தில் கேரளாவின் கொச்சி கடற்கரையில் எரிக்ஸன் நிறுவனத்தின் அதிகாரிகள் சிலருக்கு வரவேற்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றதாம். அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதிகாரிகளை வரவேற்ற எர்ணாகுளம் மாவட்ட கலெக்டர் திருமதி பீனாவிற்குத்தான் வெளிநாட்டினரின் இந்த மரியாதை..
பாவம் கலெக்டரம்மா..
முடியாது என்று தடுக்கவும் முடியவில்லை. ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை.. அவருடைய தவிப்பு, புகைப்படத்திலேயே தெளிவாகப் பதிவாகியிருக்கிறது.
தர்மசங்கடம் என்பது இதுதானோ..?