Archive for the ‘ஈ-மெயில் குழப்பம்’ Category

மறுபடியும் ஒரு குழப்பம்..!

ஓகஸ்ட் 29, 2008

29-08-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!



இந்தப் பதிவில் நான் ஏற்கெனவே சொல்லியிருந்த கமெண்ட்டுகள் இடுபவரின் பெயர்கள் தெரிய வேண்டிய இடத்தில் கேள்விக்குறியாகவே வருகிறது என்ற எனது குழப்பம் இப்போது சரியாகிவிட்டது.

நேற்று முதல் கமெண்ட்டுகளை இடுபவரின் பெயர்கள் தமிழிலேயே தெளிவாகத் தெரிகின்றது.


மேலும் மேற்குறிப்பிட்ட பதிவில் பின்னூட்டம் இட்டிருந்த ‘மதுரையின் வாலிபச் சிங்கம்’, ‘இனமானப் பேராசிரியர்’ தருமி அவர்கள் குறிப்பிட்டிருந்த பின்னூட்டப் பெட்டியைக் கிளிக் செய்யும்போது எழுந்த Mouse Cursor பிரச்சினையும் தீர்ந்துவிட்டது.

ஆனால், அந்த மணப்பாறை முறுக்காகக் முறுக்கிக் கொண்டு நிற்கும் பதிவின் தலைப்பு மட்டும் அப்படியே இன்னும் பெரிய, பெரிய சங்கிலித் தொடர்களாக போய்க் கொண்டிருக்கிறது.

இதற்கிடையில் தலைவலி போய் திருகுவலி வந்த கதையாக இப்போது வேறு ஒரு பிரச்சினை.

எனது தளத்தினை எப்போது திறந்தாலும் திறந்த 4 நொடிகளில் தளம் மறைந்து படம் 3, படம் 4-ல் இருப்பது போல வந்து நிற்கிறது.

நான் F5 கீயை அழுத்தி ‘மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பி’ என்று கட்டளை கொடுத்தால் சரியாக வருகிறது.

ஆனால் தளத்தில் ஏதேனும் மாறுதல் செய்துவிட்டு மீண்டும் தளத்தினை திறந்தால் முன்பு பார்த்த Google Error Message Page-ற்கே செல்கிறது.

நான் ஒவ்வொரு முறையும் refresh செய்துதான் தளத்தினை படித்துக் கொண்டிருக்கிறேன்.

எனக்கு மட்டும்தான் இப்படியா? அல்லது அனைவரது கம்ப்யூட்டரிலும் இப்படியா என்று எனக்குத் தெரியவில்லை.

தெரிந்த நண்பர்கள் ஏதேனும் தீர்வு இருந்தால் சொல்லவும்..

பின்குறிப்பு : கமெண்ட்டுகளை இடுபவர்களின் பெயர்களை தமிழில் வரச் செய்தது யார் என்று தெரியவில்லை. எந்தப் பதிவராவது அந்த அருஞ்செயலை செய்திருந்தால் உடனேயே எனக்கு தகுந்த ஆதாரத்தோடு மடல் இடவும். கை அரிக்கிறது.. 100 கமெண்ட்டுகளை கொட்டத் தயாராக இருக்கிறேன்..