08-03-2010
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
சிற்சில சமயங்களில் வலையுலகத்திற்கு மிகத் தேவையான கட்டுரைகள் பரவலாக பலரும் அறிவதற்கான வழிமுறைகளைத் தொட இயலாமல் நம் கண் முன் வராமல் போய் விடுகிறது.
ஆனால் அதில் சொல்லப்பட்டிருக்கும் நிஜமான விஷயங்களை நாம் தெரிந்து கொள்ளாமல் மறுபடியும், மறுபடியும் அதனுடன் முரண்பட்டே பேசி வருகிறோம்.
தற்போது இசைஞானி இளையராஜாவின் இசைப் படைப்புகளின் ராயல்டியை வாங்கியிருக்கும் சிங்கப்பூர் அகி மியூஸிக் நிறுவனத்தின் தலைவர் அகிலன், தன்னுடைய வாழ்க்கையில் இளையராஜாவின் பங்களிப்பு எந்த அளவுக்கு இருந்தது என்பதையும், இப்போது இளையராஜாவின் இசைப்படைப்புகளின் ராயல்டி தனக்கு எப்படி கிடைத்தது என்பதையும் இந்தக் கட்டுரையில் சுவைபட சொல்லியுள்ளார். படித்துவிட்டு மறக்காமல் அவருக்கு பின்னூட்டமிட்டு வாழ்த்திவிடுங்கள்..!