Archive for the ‘அபிஅப்பா’ Category

அபிஅப்பாவுக்காக ஒரு பதிவு..!

ஜூன் 17, 2009

17-06-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

எனதருமை உடன் பிறவாச் சகோதரரும்,

அமீரக வாழ் பதிவர்களின் காட்பாதரும்,

மொக்கை மெயில் மன்னர்களின் குலகுருவும்,

நட்புக்கு இலக்கணமாகத் திகழும் பாசமிக்க அண்ணனும்,

கோபாலபுரத்தின் கொள்கை விளக்கக் குன்றாகவும் திகழும் அண்ணன் அபிஅப்பா..

நட்டுவும், அபியும் தன் பக்கத்தில் இல்லாத சோகத்தில் சரியாகச் சாப்பிட முடியாமல், பேச முடியாமல், தூங்க முடியாமல், அலுவலகத்தில் வேலை பார்க்க முடியாமல் தவியாய் தவித்து சவலை நோய்க்கு ஆளாகி இன்று வீட்டில் படுத்திருக்கிறார் என்பதை நினைக்கும்போது எனக்கே சவலை நோய் வந்துவிட்டது.


இன்று அவர்தம் புதல்வரும் நமது பதிவுலகின் செல்லக்குட்டி சிங்கமுமான நட்டுவுக்கு பிறந்த நாள்.

இந்த பிறந்த நாளில் தானும் கலந்து கொண்டு குட்டிச் சிங்கத்தை வாழ்த்த நினைத்தவருக்கு அமீரகத்தின் சோம்பேறி அலுவலர்கள் ஆப்படித்துவிட்டார்கள்.


நமது அருமை அண்ணனின் பாஸ்போர்ட்டை இன்னமும் வீடு தேடி கொண்டு வந்த தரவில்லையாம்.

ஆகவே அண்ணன் படு பயங்கர கோபத்துடன் இன்று ஒரு நாள் மட்டும் உட்கார்ந்து கொண்டோ அல்லது நடந்து கொண்டோ தான் கணினியைப் பயன்படுத்தப் போவதில்லை என்று வீர சபதமெடுத்து , படுத்துக் கொண்டுதான் பதிவைப் படிப்பேன்.. பின்னூட்டம் போடுவேன் என்று ஒரு போராட்டத்தை தனது இல்லத்தில் இருந்தபடியே நடத்தி வருவதாக அமீரகத்தில் இருந்து வரும் யு.என்.., பி.டி.. செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்த அன்புச் சிங்கத்தை, அமீரப் புயலை சாந்தப்படுத்த வேண்டி எனது கைக்கெடுத்தும் தூரத்தில் இருந்த ஒரு இடத்தில் செல்போனில் சில நிமிடங்கள் செலவழித்து, அன்னாரின் இதயங் கவர்ந்தவரி்டம் பேசி அண்ணனை அமைதிப்படுத்தச் சொன்னேன்.

அவர் அனுப்பிய ஆறுதல் புகைப்படங்களும், செய்திகளும் கீழே..

அபிப்பா.. போதும்.. இப்படி நீங்க மல்லாக்கப்படுத்து டைப் பண்றதை பார்த்தா எனக்கு ஒரு மாதிரியா இருக்கு.. எந்திரிங்க..

என்னது..? எந்திரிச்சா உக்கார முடியாதா..? வாந்தி வருதா.. உவ்வே.. அதை நான் பார்க்க மாட்டேன்.. போங்க..

சீக்கிரமா போய் முகத்தைக் கழுவிட்டு இன்னிக்காவது குளிச்சிட்டு வாங்க.. உங்க முகத்தைப் பார்க்க நான் எம்புட்டு தூரத்துல இருந்து வந்திருக்கேன்..

எங்க.. எங்க.. இப்ப என் கண்ணைப் பார்த்து பேசுங்க.. இன்னுமா உங்களுக்கு காய்ச்சல் அடிக்குது.. போயிருச்சுல்ல.. நல்ல புள்ளையாட்டம் அழுகாம எந்திரிச்சு உக்காந்து பதிவு போடுங்க..


உஷ்.. அப்பாடா..

அண்ணன்மார்களை கூல் பண்றதுக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கு..!

கொடுமைடா சாமி..!