எனது அயல்தேசக் கனவுக் கன்னிக்கு நேர்ந்த கொடுமை..!

29-09-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தமிழகத்தின் விடலைப் பசங்களை ஜொள்ளுவிட வைத்த அயல்நாட்டு ஷகீலாவான ஷனோன் ட்வீட்டிற்கு சமீபத்தில் நடந்த ஒரு மூக்குடைப்பு, என்னைப் போன்ற அவரது தீவிர ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

Shannon Tweed கனடாவில் பிறந்தவர். 52 வயசாச்சு. ஆனா பார்த்தா அப்படி தெரியாது.. 1977- கனடால ஒட்டாவா நகர் அழகிப் போட்டில நான்காவதாக வந்தவர் என்றாலும் ரசிகர்களின் மனதில் துண்டு போட்டு முதலிடம் பிடித்தவர். பிளேபாய் பத்திரிகையின் அட்டைப் படத்துக்கு போஸ் கொடுத்து உலகம் முழுவதும் தனது ரசிகர் மன்றங்களைத் துவக்கினார். அது இன்றைக்கு திண்டுக்கல் பக்கத்துல தெத்துப்பட்டின்ற ஊர்வரைக்கும் போய் சேர்ந்திருக்கு..

அம்மணி தனது திறமையைக் காட்டி நடித்த Cannibal Women in the Avocado Jungle of Death, Last Call, In the Cold of the Night, The Naked Truth, Night Eyes வரிசைப் படங்கள், Cold Sweat, Indecent Behavior, Possessed by the Night, Night Fire Indecent Behavior வரிசைப் படங்கள், The Dark Dancer, Victim of Desire, Illicit Dreams, Body Chemistry வரிசைப் படங்கள், Stormy Nights, Forbidden Sins, Naked Lies, Powerplay என்று இத்தனைப் படங்களும் ஓடாத தியேட்டர்கள் தமிழ்நாட்டில் இல்லை.

ஒரு காலத்தில் பரங்கிமலை ஜோதி தியேட்டரில் நான் ரெகுலர் பாஸ் வாங்கி வைத்திருந்த காலத்தில், அம்மணிதான் எனது இதய தெய்வம். பின்புதான் ஷகீலா வந்து பக்கத்தில் சீட்டு போட்டு உட்கார்ந்தார். ஆக முதல் தெய்வம் இந்த அம்மணிதான்.

தற்போது ஷனோன் லாஸ் ஏஞ்செல்ஸில் தனது நீண்ட நாளைய நண்பர் சிம்மன்ஸுடன் பல காலமாக சேர்ந்து வாழ்ந்து இரண்டு குழந்தைகளைப் பெற்ற பின்பும் திருமணம் செய்து கொள்ளப் பிடிக்காமல் சுதந்திர தேவியாக வாழ்ந்து வருகிறார்.


கனடாவில் பிறந்தவர் என்பதாலும் ஒட்டாவா நகரில் நான்கைந்து வருடங்கள் வாழ்ந்தவர் என்பதாலும் இந்த ஜூலை மாதத்தில் ஒரு நாளை ஷனோன் ட்வீட் நாளாக கொண்டாட அந்த நகரின் பொறுப்பு மேயர் அறிவிக்க அந்த ஊரிலேயே பிரச்சினை தீயாய் பற்றிக்கொண்டதாம்.

அதெப்படிஎப்பவோ நாலு வருஷம் இருந்தவங்களுக்கு ஒரு நாளை அர்ப்பணிக்கலாம்..? அப்படியென்ன அந்தம்மா பெரிசா சேவை செஞ்சுட்டாங்க..? ஹோட்டல்ல நிர்வாண நடனம் ஆடுனவங்க.. பிளேபாய்க்கு போஸ் கொடுத்தவங்க.. காமப்படத்துல நடிச்சவங்க.. டூ மச்சு.. நமக்குத்தான் அசிங்கம்..”னு அந்த ஊர் நகர மன்றத்துல இருந்த கவுன்சிலர்கள் எல்லாரும் அடிச்சுக்காம, கொள்ளாம ரகளை செஞ்சதுல கடைசியா அந்த மேயர் கடைசி நிமிஷத்துல ஜகா வாங்கி, “ஸாரி.. ஷனோன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன்னு சொல்லிட்டாராம்..

என்ன கொடுமைங்க இது..?

இதெல்லாம் வேணும்னு சொல்லித்தான அந்த நாட்டுல அந்த கிளப்பு, ஹோட்டல் டான்ஸ், xxx படம்னு எல்லாத்தையும் அனுமதிச்சிருக்காங்க.. அப்புறம் எதுக்கு அந்தத் தொழில்ல இருக்கறவங்களை மரியாதை இல்லாதவங்கன்னு சொல்றாங்க.. ஒண்ணும் புரியலப்பா..

ஆனாலும் ஷனோன் இதை ரொம்ப கேஷுவலா எடுத்துக்கிட்டு அதே நாள்ல ஒட்டாவா நகருக்கு விஸிட் செஞ்சு, நகர மன்றத்துக்கு வந்து மேயரை சும்மா ஒரு மரியாதைக்கு பார்த்துட்டுத்தான் போனாங்களாம்.. நாகரிகம் தெரிந்தவர்னு சொல்லலாம்..

இருந்தாலும் அம்மணியின் தீவிர ரசிகன் என்கிற முறையில், எனக்கு இது மிகப் பெரும் அவமானத்தைத் தருகிறது. வேதனையைத் தருகிறது.. சொல்லண்ணா துயரத்தைத் தருகிறது..

எனது இதயத்தில் தனி இடத்தைப் பிடித்திருக்கும் ஷனோனுக்கு நேர்ந்த இந்த கொடுமையை நினைத்து என் நெஞ்சு தொடர்ந்து எரிந்து கொண்டேயிருப்பதால் இன்றைக்கு மட்டும் ஒரு புல் டக்கீலாவை ராவாக அடித்து மட்டையாகப் போகிறேன்..

வாழ்க ஷனோன் ட்வீட்..! வளர்க அவரது புகழ்..!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: