முத்துக்குமார் எதிர்பார்த்தது நடக்கிறதா..?


31.01.2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

முத்துக்குமார். அதுவரையில் முன்பின் பார்த்திராத இந்த இளைஞர் ஒரு பின்னரவில் ‘பெண்ணே நீ’ அலுவலகத்தில் எனக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டார். கைகுலுக்கல்.. ஒரு “ஹலோ..” வேலை மும்முரத்தில் இருந்தவர் அவ்வப்போது ஏதேனும் ஒரு சின்ன சந்தேகம் என்றால் மட்டுமே தலை திரும்புதலும்.. சன்னமான குரலில் சந்தேகம் கேட்பதுமாக தொடர்ந்தது அவரது வேலை..

இரவு 2 மணி தாண்டியும் களைப்பு தெரியாமல் உழைத்துவிட்டு, மறுபடியும் இணையத்தைத் துழாவிக் கொண்டிருந்ததைப் பார்த்து எனக்கு ஆச்சரியம். அந்தத் துழாவுதல்.. தேடலின்போது எதை, எதையெல்லாம் முத்துக்குமார் கற்றுக் கொண்டாரோ, தெரிந்து கொண்டாரோ தெரியவில்லை.. ஆனால் இந்தத் தற்கொலை முடிவை எங்கேயிருந்து கற்றுக் கொண்டார் என்பது தெரியவில்லை.

இரவில் அலுவலகத்தில் அமர்ந்து சிறுகதை எழுதப் போகிறேன் என்று சொல்லிவிட்டு கண்விழித்து தனது இறுதியறிக்கையைத் தயார் செய்திருக்கிறார். அலுவலகக் குறிப்பேடுகளில் காலை 6.10 மணிக்கு உள்ளே வந்ததாக பதிவு செய்துவிட்டு மறுபடியும் 9.20 மணிக்கு வெளியேறியவர், நேராக சென்றது நுங்கம்பாக்கத்தில் தான் தேர்ந்தெடுத்து வைத்திருந்த குருஷேத்திரத்திற்கு.

5 லிட்டர் கேனின் வாய்ப்பகுதி முழுவதையும் அறுத்தெறிந்துவிட்டு பெட்ரோலை தன் மேல் ஷவர்பாத் மாதிரி கொட்டுவதற்கு ஏற்பாடு செய்து எப்படியும் தான் உயிருடன் பிழைக்கவேகூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு தீக்குளித்திருக்கும் முத்துக்குமாருக்கு தனக்கென்று ஒரு குடும்பம் உண்டு. தந்தை உண்டு. அக்காள் உண்டு என்பது ஏன் புரியாமல் போய்விட்டது?

முட்டாள்தனமானது.. மூடத்தனமானது.. என்றெல்லாம் ஒருவகையில் சொல்லிவிடலாம். ஆனால் அந்தத் தற்கொலை எண்ணம் அவர் மனதில் ஏற்பட்டு செத்து மடி என்று உத்தரவு பிறப்பித்த அந்தக் காரணி யார் என்பது அவருக்கே புரியாத நிலையில் அவரைக் குற்றம் சொல்லிப் புண்ணியமில்லை.

14 பக்க அளவில் அவர் எழுதியிருக்கும் இறுதிக் கடிதம் பல நூறு அரசியல் கதைகளை வெளிப்படையாக்கினாலும், இத்தனையையும் யாரோ ஒருவரிடமோ, நெருங்கிய நண்பரிடமோ அல்லது கருத்துப் பரிமாற்றம் செய்யக்கூடிய அளவுக்கான இடத்திலோ அவர் பரிமாறியிருந்தால் அவரது உள்ளத்து குமுறல்களுக்கு கொஞ்சமாவது வடிகால் கிடைத்திருக்கும்.

அனைத்தையும் உள்ளே வைத்து அடக்கிக் கொண்டு வெளியில் எதையும் காட்டிக் கொள்ளாமல் “செத்தாவது தொலைவோம்.. அப்போதாவது இந்தப் பிரச்சினை விஸ்வரூபமெடுக்கிறதா என்று பார்ப்போம்..” என்று அவர் நினைத்து அதனையே செயல்படுத்தியிருக்கிறார்.

“ஈழத் தமிழர்களுக்காக உயிரையும் கொடுப்பேன், உள்ளத்தையும் கொடுப்பேன்..” என்று கூக்குரல் இடுபவர்களே சும்மா இருக்கும்போது இந்த எண்ணம் இந்தத் தம்பிக்கு எப்படி வந்தது என்பது தெரியவில்லை.

தலைமுறை, தலைமுறையாக அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட அரசியல்வியாதிகளின் குடும்பத்து பிள்ளைகளுக்கே வராத இந்தத் தீக்குளிப்பு எண்ணம் முத்துக்குமார் போன்ற சாதாரண ஒரு தொண்டனுக்கு மட்டும் வருகிறதே.. ஏன்..?

மிக, மிக வருந்துகிறேன்.. வேதனைப்படுகிறேன்.. இவருடைய செயலை எந்தவிதத்திலும் என்னால் நேர்மைப்படுத்த முடியவில்லை.

அதனைவிட வேதனை இங்கே அவரது பூதவுடலும், அடக்க ஏற்பாடுகளும் படுகின்ற பாடு.

கொளத்தூர் ஏரியாவில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கின்றன. கொளத்தூர் பகுதி வியாபாரிகள் தாங்களே முன் வந்து கடையடைப்பு செய்திருக்கிறார்கள். ஏதோ கலவர பூமி என்பதைப் போல் திரும்பிய பக்கமெல்லாம் காவல்துறையினர் அணிவகுப்பு.

முத்துக்குமாரின் வீட்டில் கால் வைக்கக்கூட இடமில்லாத அளவுக்கு புத்தகங்கள் குவிந்திருக்க.. அங்கே அவரது உடலை வைத்து கூட்டத்தை சமாளிக்க முடியாது என்பதால் கொளத்தூர் வியாபாரிகள் சங்க அலுவலகத்திற்கு அருகில் மெயின் ரோட்டிலேயே ஒரு மேடை போட்டு அதில் அவரை படுக்க வைத்திருக்கிறார்கள்.

கீழ்ப்பாக்கம் அரசினர் மருத்துவமனையில் அவருடைய உடல் இருந்தபோதே முதலில் வந்து குவிந்தவர்கள் வழக்கறிஞர்களும், சட்டக் கல்லூரி மாணவர்களும்தான்.. அவர்களே நேற்று இரவோடு இரவாக பல தட்டிகளையும், போர்டுகளையும், போஸ்டர்களையும் தயார் செய்து வைத்திருக்க ஏரியாவில் திரும்பிய பக்கமெல்லாம் முத்துக்குமார் காட்சியளிக்கிறார்.

இதில் அசிங்கப்படுத்தும்விதமாக சரத்குமார் ஏதோ ஒரு கல்யாண வீட்டில் கையெடுத்துக் கும்பிடுவதைப் போன்ற போஸில் ஒரு தட்டியை அவரது கட்சிக்காரர்கள் வைத்து கொடுமைப்படுத்தியிருக்கிறார்கள்.

காவல்துறையினருக்கு ஒரு எல்லைக்கோடைக் காட்டி அதனைத் தாண்டி வந்தால் எதுவும் நடக்கும் என்று ஒரு எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாம். காவலர்களும் அதனை மதித்து அங்கேயே நின்றிருந்தார்கள்.

அஞ்சலி செலுத்த வந்தவர்கள் அனைவருமே அந்த இடத்தில் அங்கிருப்பவர்களிடம் “முத்துக்குமார் செய்தது சரியானது அல்ல.” என்று சொன்னால் திரும்பி உயிருடன் போவார்களா என்பது சந்தேகமே.. அந்த அளவுக்கு கூடியிருக்கும் இளையோர் பட்டாளம் கொதிப்புடன் காட்சியளிக்கிறது. ஊடகத் துறையின் பல்வேறு பிரிவுகளிலும் இருந்தும் நண்பர்கள் திரளாக குழுமியிருந்தார்கள்.

சட்டக் கல்லூரி மாணவர்களும் அதிகம் பேர் வந்திருந்தார்கள். சூடாக இருப்பதும் இவர்கள்தான். இதுவரையில் முத்துக்குமாரை யார் என்றே தெரியாதவர்கள் இதில் அதிகப்பட்சம். உணர்வுகளால் ஒன்றுபட்ட இவர்களது கோரிக்கை, முத்துக்குமாரின் இறுதி சாசனத்தில் இடம் பெற்றிருக்கும் “தனது உடலை உடனேயே புதைக்காமல் போராட்டத்தைத் தொடர வேண்டும்..” என்பதுதான்..

“முத்துக்குமாரின் உடலை ஊர், ஊராக எடுத்துச் சென்று கடைசியாக தூத்துக்குடிக்கு அவர் பிறந்த மண்ணில் அடக்கம் செய்யலாம்..” என்றுகூட பேசினார்கள். பின்பு பேச வந்தவர்களால் இத்திட்டம் வேண்டாம் என்று நயமாகச் சொல்லி திசை திருப்பப்பட்டது.

முத்துக்குமார் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திலும் ஒரு உறுப்பினர் என்பதால் துணை இயக்குநர்கள், மற்றும் உதவி இயக்குநர்களும் பெருமளவில் கூடியிருக்கிறார்கள்.

காலையில் அஞ்சலி செலுத்த வந்த இயக்குநர் ஆர்.கே.செல்வமணி காங்கிரஸ் தலைவர்களையும், அதன் தற்போதைய மாநிலத் தலைவர் தங்கபாலுவையும் கடுமையான வார்த்தைகளால் அர்ச்சித்து ஆரம்பித்து வைத்த துவக்க விழா இப்போதுவரையில் கனஜோராக நடந்து வருகிறது.

மதியம் 1 மணி வரை காத்திருந்தும் கலைஞரிடமிருந்து இரங்கல் செய்தி வராததால் மேலும் கொதிப்பு கூடியது. எப்படி வரும்..? கலைஞரின் 70 வருட அரசியல் வாழ்க்கையின் உண்மையை, வெறும் ஒரு வரியில் சொல்லி முடித்திருக்கும் முத்துக்குமாரின் அந்த இறுதியறிக்கையை கலைஞர் நிச்சயம் படித்திருப்பாரே…? (மாலையில்தான் கலைஞரின் அறிக்கை வெளியானதாக பின்பு தெரிந்தது) “கற்றது தமிழ்” இயக்குநர் ராம், “கருணாநிதி இங்கே நேரில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்காவிட்டால், நாம் முத்துக்குமாரின் உடலை இங்கேயிருந்து எடுக்கக் கூடாது. யார் எடுத்தாலும் அதை அனுமதிக்கவும்கூடாது” என்று ஒரு வீராவேச உரையை நிகழ்த்திவிட்டார்.

அதுவரையில் மதியம் 3 மணிக்கு தூக்கிவிடலாம் என்ற நினைப்பில் அடக்க ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக “இன்றைக்கு வேண்டாம்.. முடியாது.. கூடாது..” என்றெல்லாம் கூக்குரல்களும், கொந்தளிப்பான பேச்சுக்களும் பொறி கலங்க வைத்துவிட்டன.

2 மணி சுமாருக்கு மேடைக்கு வந்த இயக்குநர் சேரன் முத்தாய்ப்பாக ஒரு முடிவைச் சொன்னார். “முத்துக்குமாரே தனது உடலை வைத்து போராட்டம் நடத்தச் சொல்லியிருக்கிறார். நாம் இன்னும் ஒரு நாள் உடலை வைத்திருக்கக் கூடாதா..?” என்று கேட்டவர் “உடல் அடக்கத்தை நாளை வைத்துக் கொள்வோம்..” என்று சொல்லிவிட கூட்டத்தினரின் கை தட்டலில் கொளத்தூர் ஏரியாவே அரண்டுவிட்டது.

இதன் பின்பு வந்த வைகோ, நெடுமாறன், திருமாவளவன், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் போன்றோர் “இன்றைக்கே உடல் அடக்கத்தை செய்யலாம்..” என்று சொல்லியும் அது அங்கே இருந்தோரிடம் எடுபடவில்லை. “இதில் நீங்கள் தலையிடாதீர்கள்.. நாங்களே பார்த்துக் கொள்கிறோம்..” என்று கூடியிருந்த இளைஞர்கள் சொல்லிவிட.. அவர்கள் போக்கிலேயே விட்டுவிடலாம் என்று முடிவு செய்து அவர்களும் சம்மதித்துவிட்டார்கள்.

இடையில் நமது காவல்துறை அன்பர்கள் ஒரு அரிய காரியத்தைச் செய்து தொலைத்து, அதன் விளைவையும் அனுபவித்துவிட்டார்கள்.

புரசைவாக்கம் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு தனது கட்சிக்காரர்களுடன் வந்தவர் அப்படியே வந்திருக்கலாம். கூடவே இரும்புத் தொப்பி அணிந்த போலீஸாரை துணைக்கு அழைத்துக் கொண்டு முத்துக்குமாரின் உடல் அருகில் வர.. கூட்டம் கொதித்துப் போய்விட்டது..
“வெளியே போ..” என்று ஆரம்பித்த கோபவேசங்கள் எல்லை மீறிப் போக.. பாபு தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடினார். துணைக்கு வந்தவர்கள் அவரை இழுத்துக் கொண்டு ஓட.. செருப்புக்களும், கல்வீச்சுக்களும் அவரை நோக்கி பறந்தன. தெருமுனை வரையிலும் சென்று அவரை வழியனுப்பிவிட்டுத்தான் ஓய்ந்தார்கள் இளைஞர்கள். பாவம்.. தனது உட்கட்சி பிரச்சினையில்கூட இப்படியொரு எதிர்ப்பை சந்தித்திருக்க மாட்டார் பாபு. இத்தனைக்கும் அவர் இதே ஏரியாவில்தான் பல ஆண்டுகளாக குடியிருக்கிறாராம்.

வைகோ பல முறை மைக்கில் பேசினார். “இனியும் வேறொரு முத்துக்குமார் உருவாகவே கூடாது..” என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டார். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசன், முத்துக்குமாரின் தீக்குளிப்புக்கு இரங்கல் தெரிவித்து சொல்லியிருந்த செய்தியை யாரோ ஒருவர் செல்போனில் சொல்ல.. அதனை வைகோ சத்தமாக மறுஒலிபரப்பு செய்தார்.

பத்திரிகையாளர்களிடம் பேசிய முத்துக்குமாரின் தந்தையும், மைத்துனரும் முத்துக்குமாரின் இந்த முடிவு குறித்து தாங்கள் பெருமையடைவதாக பத்திரிகையாளர்களிடம் சொல்லியிருக்கிறார்கள்.

ஈழப் போராட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று நடைபெறுவதாக இருந்தது. இது நாளை(31-01-09) நடக்கவிருப்பதாக வைகோ அறிவித்தார். கூடவே “நாளை மூலக்கொத்தள சுடுகாட்டில் நடக்கவிருப்பது தமிழகத்தில் நடைபெறப் போகும் ஈழப் போராட்டத்திற்கு முதல் அத்தியாயம்..” என்றார்.

நல்லகண்ணு “இந்த நேரத்தில் இளைஞர்கள் கட்டுக்கோப்புடன் இருக்க வேண்டும். உணர்ச்சிவசப்படக் கூடாது. அப்படி செய்தால் அது வேறுவிதமாக திசை திரும்பிவிடும் அபாயம் உண்டு..” என்று எச்சரிக்கை செய்தார். இதனையே பின்பு பேச வந்த அனைவருமே சுட்டிக் காட்டி பேசி முடித்தார்கள்.

ஒரு எம்.எல்.ஏ.வை அடித்துத் துரத்திய பின்பு, கொடும்பாவி எரிப்புகள் தொடர்ந்து மாலை வரையில் இடைவெளிவிட்டு நடைபெற்றது.

ராஜபக்சே, சோனியாகாந்தி, ஜெயலலிதா என்று மூவரையும் கொடும்பாவியாக போட்டு எரித்துவிட்டார்கள். வேறொரு இடமாக இருந்திருந்தால் நடந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இங்கே போலீஸாரின் கண் முன்பாகவேதான் இது நடந்தது. தடுக்கத்தான் யாருக்கும் உணர்வில்லை.

“கொஞ்சம் ஒத்துப் போங்கள்.. தகராறு வேண்டாம்..” என்று காவல்துறையினரிடம் மேலிடத்தில் இருந்து சொல்லியிருப்பார்கள் போலும்.. ஒதுங்கியே இருந்தார்கள். இருக்கிறார்கள்..

பேச வந்த அனைவருமே மத்திய சர்க்காரையும், மாநில அரசின் கையாலாகதத்தனத்தையும் சுட்டிக் காட்டி காய்ச்சி எடுத்தார்கள். மருந்துக்குக்கூட பாட்டாளி மக்கள் கட்சியைத் தொடவில்லை. அவர்களும் தட்டி போர்டுகளையும், போஸ்டர்களையும் வைத்துவிட்டு ஏனோ பட்டும், படாமல் ஒதுங்கியிருக்கிறார்கள்.

மதியம்வரைக்கும் இது தமிழ் உணர்வாளர்களுக்கான போராட்டமாக சென்று கொண்டிருந்தது. மதியத்திற்குப் பிறகு முழுக்க, முழுக்க அரசியலாக மாறிவிட்டது. மாலையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவுக் கூட்டமாக மாறிவிட்டது. மாலையில் வைகோ தனது பேச்சை முடித்தபோது “பிரபாகரன் வாழ்க..” என்று முழுக்கமிட.. பதில் முழக்கமும் அமோகமாக இருந்தது. என்னதான் கொள்கையை தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்தாலும் உள்ளுணர்வுகளை கட்டுப்படுத்துவது என்பது மிக, மிக கஷ்டம் என்பதை இந்த இடத்தில்தான் நான் உணர்ந்தேன்.

காலையிலேயே நடிகர் வடிவேலு, நடிகர் சத்யராஜ், இயக்குநர் சீமான் போன்றோர் அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றிருக்கிறார்கள். மாலையில் இயக்குநர் பாரதிராஜா தனது சக நிர்வாகிகளோடு வந்து அஞ்சலி செலுத்தினார். தோழர் சி.மகேந்திரன், மற்றும் புதிய பார்வை ஆசிரியர் நடராஜனும் பேசினார்கள். வர்த்தகர் சங்கத் தலைவர் த.வெள்ளையன் காலையில் இருந்து இரவு வரையிலும் இருந்து ஏற்பாடுகளைக் கவனித்து வருகிறார்.

உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இளைஞர்களும், பரிதாபப்படும் நிலையில் தமிழக மக்களும் நமது முத்துக்குமாரின் சோகத்தை அனுபவித்துக் கொண்டிருக்க, நமது ஊடகத் துறைகள் தங்களுடைய அரசியல் அரிப்புகளை இதில் பயன்படுத்திக் கொண்டார்கள்.

ஜெயா டிவி செய்திகளில் மதியம்வரை முதல் விளம்பரம் முடிந்து அடுத்த segment-ல் முத்துக்குமார் விஷயத்தைச் சொன்னார்கள். மதியத்திற்கு மேல் சட்டமன்ற உறுப்பினர் பாபு தாக்கப்பட்ட சம்பவத்திற்குப் பின்பு இது ஒன்றையே திரும்பத் திரும்ப இப்போதுவரையிலும் காட்டி வருகிறார்கள். வாழ்க இவர்களது அரசியல் நியாயம்.

மதுரையில் தங்களது அலுவலகம் தாக்கப்பட்டபோது அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு ரவுடி பட்டம் சூட்டி பரபரப்பை ஏற்படுத்திய சன் டிவி போனால் போகிறதென்று நினைத்து பத்தோடு பதினோறாவது செய்தியாக இதனைச் சொன்னார்கள்.

கலைஞர் டிவியில் நேற்றே ஒரு கொடுமை நடந்தது. பத்திரிகையாளர் என்ற செய்தியைக்கூட போடாமல் “ஈழப் பிரச்சினைக்காக சென்னையில் ஒருவர் தீக்குளிப்பு..” என்று ஒரு வரி செய்தியை மட்டுமே ஓடவிட்டார்கள். பத்திரிகையாளர் என்பதையும், ஈழப் பிரச்சினைக்காக என்பதையும் செய்திகளில் அதிகம் இடம் பெறாமல் கவனமாகப் பார்த்துக் கொண்டார்கள் இதன் செய்திப் பிரிவு ஆசிரியர்கள்.

மக்கள் டிவியில் ராமதாஸ் மாலை போடுவதை மட்டுமே திரும்பத் திரும்ப காட்டி அதனை சாதாரணமான ஒரு அஞ்சலி செய்தியாக்கி தன்னைக் காப்பாற்றிக் கொண்டுவிட்டார்.

முத்துக்குமார் தான் இறந்த பின்பு என்ன நடக்கும் என்று எதிர்பார்த்தாரோ அதில் ஒரு கால்வாசியாவது இந்த இரண்டு நாட்களில் நடந்தேறும் என்று நான் நினைக்கிறேன்.

நாளை என்ன நடக்குமோ தெரியவில்லை.. பார்ப்போம்..

45 பதில்கள் to “முத்துக்குமார் எதிர்பார்த்தது நடக்கிறதா..?”

 1. முத்து தமிழினி Says:

  எந்த வகையான எழுச்சி தமிழகத்தில் எழ வேண்டுமோ அது எழுகிறது. யார் யாரையோ நம்பி இல்லாமல் மக்கள் சக்தி தானாக எழுவது தமிழகத்திற்கு நல்லது.துரதிஷ்டவசமாக இளைஞன் ஒருவனின் சாவு இதற்கு விலையாகிவிட்டது.அவன் நினைத்ததை நடக்கவைப்பதே இதற்கான அஞ்சலியாக இருக்கமுடியும்.

 2. Anonymous Says:

  ஒரு காட்சியை விசுவலாக விவரணமாக தந்திருக்கிறீர்கள்.சுஜாதா பற்றிய ஒரு கட்டுரையிலும் இது பற்றி கவனித்துள்ளேன்.நன்றி.-ஆழ்வார்திருநகரான்-

 3. enRenRum-anbudan.BALA Says:

  //“ஈழத் தமிழர்களுக்காக உயிரையும் கொடுப்பேன், உள்ளத்தையும் கொடுப்பேன்..” என்று கூக்குரல் இடுபவர்களே சும்மா இருக்கும்போது இந்த எண்ணம் இந்தத் தம்பிக்கு எப்படி வந்தது என்பது தெரியவில்லை//மனது மிகவும் பாரமாக இருக்கிறது. எப்படியிருப்பினும், இது மிகப் பெரிய விலை 😦

 4. Boston Bala Says:

  விரிவான பதிவுக்கு நன்றி

 5. வெத்து வேட்டு Says:

  all i see is another Vanni is going to be created in TNhave fun….now all people who voted for DMK will feel why they didn’t vote for JJ

 6. திருமலை பேத்து Says:

  MEMORANDUM TO INDIACAN SRI LANKA TRUST INDIA?By Stanley Perera from MelbourneDear Sir,Sri Lanka’s 2500 years old history, Sri Lanka remains as an Independent country with cultural ties with India. Before the western invasions Sri Lanka was subjected to South Indian invasions from time to time. However India remained Sri Lanka’s one and only enemy. Therefore Sri Lankan’s animosity with India is centuries old. In the late 1970s Indira Gandhi’s personal grudge with Sri Lanka’s president Jayawardena lead the two countries into a collision course. As a result world’s most deadliest and ruthless Terrorist organisation was born. Indira, the Prime Minister of India, paid a sum of US$ 10 million to start the terrorism in Sri Lanka while South Indian Chief Minister M.G.Ramachandran provided shelter, training in guerrilla warfare arms and all other necessary equipment on Indian soil to conduct terrorist activities against Sri Lanka government breaching the UNO International constitution by State sponsored Terrorism against a foreign Country. Subsequently Indira’s only remaining son Rajiv Gandhi took the reins after Indira’s assassination, continued Indian support to the made in India Terrorist group LTTE. However India continued to bully Sri Lanka, harassed and accused of violating human rights in dealing with Tamil people in Sri Lanka.India continued to bully Sri Lanka as and when Sri Lanka purchased its military needs. Indians insisted Sri Lanka purchased Indian non-lethal weapons from India instead of Pakistani or Chinese weapons to fight made in India TERRORIST GROUP LTTE. Indian High Commissioners Dicksit and Nirupama treated Sri Lanka as if Sri Lanka was under Indian rule and showed no respect to the territorial integrity. Subsequently, Nrupama was demoted to a lower grade diplomatic mission in Bangladesh while Diksit was elevated to a higher diplomatic mission. Fortunately to Sri Lanka Pakistan and China came to the rescue of Sri Lanka when in need. In that difficult times with Nirupama, Pakistani High Commissioner openly accused India of creating the made in India Terrorists LTTE.WHAT HAPPENED TO PK?In the late 2008, it was revealed in the news media that Indonesian Police arresting PK who is LTTE’s chief arms procurer. There was wide spread speculation that Pranab Mukerjee flew in to Jakarthe on the first available flight and met with the Indonesian Police chief. US$ 10 million also had exchanged. But nobody knows what happened to PK except Mukerjee and Police Chief. Mukerjee is at present in Sri Lanka. Has he come as a friend or as a negotiator to go between Terrorists and the Sri Lankan Government to cease military process and rescue Made in India TERRORIST VELOOPILLAI PRABAHAKARAN to make South Indian Political Jokers happy. MY PERSONAL VIEW IS THAT THE WOLF IS IN SRI LANKA IN SHEEP’S CLOTHES. IF THE SITUATION IS THAT AS STATED ABOVE THE QUESTION IS ÇAN SRI LANKA TRUST INDIA”?Yours faithfully,Stanley PereraMelbourne, Australia.

 7. நந்தவனத்தான் Says:

  இங்கு தமிழ்நாட்டில் இப்படியெல்லாம் சிலர் உணர்வு வயப்படுகின்றனர்.ஆனால் இலங்கை வடக்கு மாகாணத்தில் மக்கள் மீது நடக்கும் தாக்குதலை எதிர்த்து தமிழ் தேசிய கூட்டமைப்பு ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு கிழக்கு/வடக்கு மாகாணங்களில் வசிக்கும் ஈழத்தமிழரிடம் அழைப்பு விடுத்தது. இதற்கு புலிகளில் எதிர் கோஷ்டியான ஈ.பி.ஆர்.எஃப்.(பத்மநாபா)-ம் ஆதரவு வழங்கிய போதிலும், ஒரு சில பிரதேசங்களில் மட்டுமே ஈழத்தில் ஆதரவு இருந்ததாம் என்கிறது பிபிசி தமிழோசை. எங்கே என்ன நடக்குதுன்னே புரியமாட்டேங்குது. இவர்கள் இப்படியே இந்தியாவிற்கு எதிராக கூக்குரல் எழுப்பினால் சாதாரண மக்கள் மறுபடியும் ஈழமக்களுக்கு எதிராக திரும்பவும் கூடும் (சிலர் கடுப்பாக பேசியதினை கேட்டேன்.

 8. Thooya Says:

  தமிழ்நாட்டு மக்களால் தான் எம்மை காக்க முடியும்…

 9. கிரி Says:

  உண்மை தமிழன் விரிவான பதிவிற்கு நன்றி

 10. Anonymous Says:

  நந்தவனத்தான்,தமிழ்நாட்டை போல புலம்பெயர்ந்த தமிழர்களும் ஈழ மக்களுக்காக குரல் கொடுத்தவண்ணம்உள்ளார்கள் தான்.ஆனால் முத்துக்குமரன் இப்படி ஒரு முடிவு எடுப்பார் என நாம் யாருமே எதிர்பார்க்கவில்லை.அந்த செய்தி அறிந்ததில் இருந்து மிகவும் வேதனையாக இருக்கு.அவர் இப்படி செய்ததுக்காக நாம் ஒன்றும் மகிழ்ச்சி அடையவில்லை.அவரது இந்த முடிவு இன்றுவரை வலித்துக்கொண்டு தான் இருக்கு.எமது மக்களுக்காக இன்னொரு நாட்டில் நீங்கள் செய்யும் போராட்டங்களைப்பார்க்கும் போது,எம்மை நினைத்து வெட்கமாக தான் இருக்கிறது.நாமும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதால் வன்னி மக்களின் வலியை எம்மாலும் உணரமுடிகிறது.போரில் அகப்பட்ட மக்களுக்காக எம்மால் எதுவும் செய்யமுடியாமல் இருப்பது வேதனைதான்.ஈழத்தில் இப்போது இருப்பவர்கள் எதுவும் செய்யும் நிலையில்இல்லை என்று கூறினால் நீங்கள் புரிந்துகொள்வீர்களோ தெரியவில்லை.ஆனால் அது தான் உண்மை.

 11. Anonymous Says:

  முத்துகுமாரின் இழப்பினால் வருந்தும் அவர் குடும்பத்தாருக்கும், சுற்றத்திற்கும், நட்புக்கும் அஞ்சலிகள்.கருணாநிதி, செயலலிதா, சோனியா போன்றோரைவிட இன்றைய ஈழமக்களின் துயரத்திற்கு பெரிதும் பங்கு வகிப்பது விடுதலை புலிகளின் பயங்கரவாத, பேராசை அரசியலே. இதனை உணராமல் தனது இன்னுயிரை மாய்த்துக் கொண்டவரை வைத்து தமிழகத்தில் நடக்கும் அரசியலை என்னவென்று சொல்வது? கருணா அம்மானின் சமீபத்திய பேட்டியை இவர்கள் படித்தார்களா என்று தெரியவில்லை.வருத்தம்தான் மேலிடுகிறது.

 12. singainathan Says:

  :|AnputanSingai Nathan

 13. Anonymous Says:

  //Thooya said… தமிழ்நாட்டு மக்களால் தான் எம்மை காக்க முடியும்…//இத்தனை நாள் விடுதலைபுலிகள் மட்டும் தான் எம்மை காக்க முடியும் என்று சொன்னவர்கள் இன்ரு தமிழ்நாடு தான் காக்க முடியும் என்று சொல்வது வரவேற்க்கதக்கது.

 14. mathi Says:

  விரிவான பதிவுக்கு நன்றிup date seiyungal…atakkam seiyum varai ulla nigalvugalai theriyapaduthul

 15. நந்தவனத்தான் Says:

  //எமது மக்களுக்காக இன்னொரு நாட்டில் நீங்கள் செய்யும் போராட்டங்களைப்பார்க்கும் போது,எம்மை நினைத்து வெட்கமாக தான் இருக்கிறது…ஈழத்தில் இப்போது இருப்பவர்கள் எதுவும் செய்யும் நிலையில்இல்லை என்று கூறினால் நீங்கள் புரிந்துகொள்வீர்களோ தெரியவில்லை.ஆனால் அது தான் உண்மை.//ஐயா, நன்றாகவே புரிகிறது. ஆனால் நீங்கள் இதில் வெட்கப்பட ஒன்றுமில்லை. சக மனிதன் மரணக்கும் போது அதை தடுக்க முயலாதவன் மனிதனே இல்லை.

 16. கார்த்திகைப் பாண்டியன் Says:

  முத்துக்குமார் எந்த ஒரு காரணத்துக்காக தன்னுயிரை இழந்தாரோ.. அதில் கொஞ்சமேனும் நடந்தால் சரி..

 17. Anonymous Says:

  Thooya – தமிழ்நாட்டு மக்களால் தான் எம்மை காக்க முடியும். உண்மை. புலிகளால் அழிவு தான் மிஞ்சும்.

 18. ஊர் சுற்றி Says:

  தங்களது இந்த தகவல்களுக்கு நன்றி. மழுப்பு வார்த்தை பேசும் தலைவர்களின்றி மக்கள் தனியாக திரள்வதாக ஒரு உணர்வு தோன்றுகிறது. எனது எண்ணம் சரியானதா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 19. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //முத்து தமிழினி said…எந்த வகையான எழுச்சி தமிழகத்தில் எழ வேண்டுமோ அது எழுகிறது. யார் யாரையோ நம்பி இல்லாமல் மக்கள் சக்தி தானாக எழுவது தமிழகத்திற்கு நல்லது. துரதிஷ்டவசமாக இளைஞன் ஒருவனின் சாவு இதற்கு விலையாகிவிட்டது. அவன் நினைத்ததை நடக்கவைப்பதே இதற்கான அஞ்சலியாக இருக்கமுடியும்.//முத்து ஸார்.. நீங்கள் சொன்னதும், முத்துக்குமார் நினைத்ததும் ஓரளவுக்கேனும் நடக்கும்போல் தெரிகிறது.முத்துக்குமாரின் இறுதி ஊர்வலமே அதற்கு சாட்சி..

 20. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //Anonymous said…ஒரு காட்சியை விசுவலாக விவரணமாக தந்திருக்கிறீர்கள். சுஜாதா பற்றிய ஒரு கட்டுரையிலும் இது பற்றி கவனித்துள்ளேன்.நன்றி.ஆழ்வார்திருநகரான்//இது போன்றவைகளை அப்படித்தான் தர வேண்டும். அதுதான் அவருக்கு நாம் செய்யும் மரியாதை..

 21. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///enRenRum-anbudan.BALA said…//“ஈழத் தமிழர்களுக்காக உயிரையும் கொடுப்பேன், உள்ளத்தையும் கொடுப்பேன்..” என்று கூக்குரல் இடுபவர்களே சும்மா இருக்கும்போது இந்த எண்ணம் இந்தத் தம்பிக்கு எப்படி வந்தது என்பது தெரியவில்லை. மனது மிகவும் பாரமாக இருக்கிறது. எப்படியிருப்பினும், இது மிகப் பெரிய விலை :-(//நிச்சயம் ஸார்.. தனது வாழ்வையே அர்ப்பணித்திருக்கும் தியாகம்தான்..

 22. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //Boston Bala said…விரிவான பதிவுக்கு நன்றி//நன்றி பாபா..ஸ்நாப்ஜட்ஜ் லின்க்கிற்கு தனி நன்றி..

 23. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //வெத்து வேட்டு said…all i see is another Vanni is going to be created in TN. have fun…. now all people who voted for DMK will feel why they didn’t vote for JJ.//ஜெ.ஜெ.க்கு ஓட்டுப் போடாததற்கு காரணங்கள் வேறு..அவருடைய அளவுக்கதிகமான கண்டிப்பான நிர்வாகம்.. முறைகேடான, துஷ்பிரயோகமான செயல்பாடுகள்.. இவற்றால்தான் இப்போது அவர் வீட்டில் அமர்ந்து மந்திரம் ஓதிக் கொண்டிருக்கிறார்.

 24. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //நந்தவனத்தான் said…இங்கு தமிழ்நாட்டில் இப்படியெல்லாம் சிலர் உணர்வு வயப்படுகின்றனர்.ஆனால் இலங்கை வடக்கு மாகாணத்தில் மக்கள் மீது நடக்கும் தாக்குதலை எதிர்த்து தமிழ் தேசிய கூட்டமைப்பு ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு கிழக்கு/வடக்கு மாகாணங்களில் வசிக்கும் ஈழத்தமிழரிடம் அழைப்பு விடுத்தது. இதற்கு புலிகளில் எதிர் கோஷ்டியான ஈ.பி.ஆர்.எஃப்.(பத்மநாபா)-ம் ஆதரவு வழங்கிய போதிலும், ஒரு சில பிரதேசங்களில் மட்டுமே ஈழத்தில் ஆதரவு இருந்ததாம் என்கிறது பிபிசி தமிழோசை. எங்கே என்ன நடக்குதுன்னே புரியமாட்டேங்குது.இவர்கள் இப்படியே இந்தியாவிற்கு எதிராக கூக்குரல் எழுப்பினால் சாதாரண மக்கள் மறுபடியும் ஈழமக்களுக்கு எதிராக திரும்பவும் கூடும் (சிலர் கடுப்பாக பேசியதினை கேட்டேன்.//நந்தவனத்தான் உங்களது பயம் புரிகிறது.அரசியல் கட்சிகள் தத்தமது நிலைப்பாடை தேர்தலுக்கு தேர்தல் மாற்றி மாற்றிப் பேசுவதால்தான் மக்களுக்கு ஈழப் பிரச்சினை மீது அதீத ஆர்வம் ஏற்படாமல் போய்விட்டது.கூடவே உலகளாவிய அளவில் அனைத்து நாடுகளிலும் இருப்பதைப் போல எம்தேசத்திலும் பணத்தைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள் மக்கள். இதில் தேர்தலன்று வாக்களிப்பதை ஒரு சடங்காகவே நினைத்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.மக்களின் மனோபாவம் உடனேயே மாறிவிடும் என்று எனக்குத் தோன்றவில்லை.. ஈழத்தில் என்ன நடக்கிறது என்றும் புரியவில்லை. ஆளுக்கு ஒன்றை சொல்கிறார்கள். இப்போது நீங்கள் சொல்லியிருக்கும் விஷயமும் எங்களுக்கு புதிது.

 25. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //Thooya said…தமிழ்நாட்டு மக்களால்தான் எம்மை காக்க முடியும்…//அதற்கு முதல்படியாக ஈழத்தில் அமைதியை ஏற்படுத்த முயல்கின்ற கட்சிகளுக்குத்தான் எங்களது ஓட்டு என்கிற மனப்பான்மைக்கு மக்கள் வர வேண்டும் தூயா..அதற்கு கொஞ்ச நாளாகும்போல் தெரிகிறது. ஏனெனில் இங்கே கொள்கைகளும், குறிக்கோள்களும் மக்களுக்கு முக்கியமாக இல்லாமல் போய்விட்டது.இப்போதெல்லாம் பணம்.. பணம்தான்.. “யார் எங்களுக்கு நிறைய செய்றா..? அவங்களுக்கே எங்க ஓட்டு..” என்று அவரவர் நிலையை மட்டுமே அடிப்படையாக வைத்து கட்சிகளை அணுகுவதால் உங்களுடைய பிரச்சினை இங்கே வீட்டு அடுப்படி வரை வர மறுக்கிறது. வரவேற்பரையோடு, டிவியோடு நின்று விடுகிறது. இதுதான் பிரச்சினையே..அருமைத் தங்கையே.. எங்களுக்கு அரசியல்வியாதிகள் பிரச்சினை என்றால் உங்களுக்கு ஆள்பவர்களே பிரச்சினை..என்ன செய்ய..?

 26. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //கிரி said…உண்மை தமிழன் விரிவான பதிவிற்கு நன்றி//நன்றி கிரி..

 27. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //Anonymous said…நந்தவனத்தான், தமிழ்நாட்டை போல புலம்பெயர்ந்த தமிழர்களும் ஈழ மக்களுக்காக குரல் கொடுத்தவண்ணம்உள்ளார்கள்தான். ஆனால் முத்துக்குமரன் இப்படி ஒரு முடிவு எடுப்பார் என நாம் யாருமே எதிர்பார்க்கவில்லை. அந்த செய்தி அறிந்ததில் இருந்து மிகவும் வேதனையாக இருக்கு. அவர் இப்படி செய்ததுக்காக நாம் ஒன்றும் மகிழ்ச்சி அடையவில்லை. அவரது இந்த முடிவு இன்றுவரை வலித்துக்கொண்டுதான் இருக்கு. எமது மக்களுக்காக இன்னொரு நாட்டில் நீங்கள் செய்யும் போராட்டங்களைப் பார்க்கும்போது,எம்மை நினைத்து வெட்கமாகதான் இருக்கிறது. நாமும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதால் வன்னி மக்களின் வலியை எம்மாலும் உணரமுடிகிறது. போரில் அகப்பட்ட மக்களுக்காக எம்மால் எதுவும் செய்யமுடியாமல் இருப்பது வேதனைதான். ஈழத்தில் இப்போது இருப்பவர்கள் எதுவும் செய்யும் நிலையில் இல்லை என்று கூறினால் நீங்கள் புரிந்துகொள்வீர்களோ தெரியவில்லை. ஆனால் அதுதான் உண்மை.//ஈழத்து மக்களின் நிலைமை புரிகிறது அனானி..இந்த ஒரு செயலுக்காக நாங்கள் ஈழத்து மக்களிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை.. உங்களுடைய இரங்கல்களும், ஆசிகளுமே முத்துக்குமாரின் குடும்பத்திற்கு போதுமானது. வேறு ஒன்றுமில்லை..உங்களுடைய சாத்வீகமான போராட்டத்திற்கு தமிழகத்து மக்களின் ஆதரவு எப்போதுமே உண்டு..

 28. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //Anonymous said…முத்துகுமாரின் இழப்பினால் வருந்தும் அவர் குடும்பத்தாருக்கும், சுற்றத்திற்கும், நட்புக்கும் அஞ்சலிகள்.கருணாநிதி, செயலலிதா, சோனியா போன்றோரைவிட இன்றைய ஈழமக்களின் துயரத்திற்கு பெரிதும் பங்கு வகிப்பது விடுதலைபுலிகளின் பயங்கரவாத, பேராசை அரசியலே. இதனை உணராமல் தனது இன்னுயிரை மாய்த்துக் கொண்டவரை வைத்து தமிழகத்தில் நடக்கும் அரசியலை என்னவென்று சொல்வது? கருணா அம்மானின் சமீபத்திய பேட்டியை இவர்கள் படித்தார்களா என்று தெரியவில்லை. வருத்தம்தான் மேலிடுகிறது.//கருணாவை புத்தராக்கிப் பேசும் உங்களுடைய பேச்சு நகைப்புக்குரியது அனானியாரே..கருணா இந்நேரம் புலிப்படையில் இருந்திருந்தால் நீங்கள் இப்படி பேசியிருப்பீர்களா..? புலிகளை எதிர்த்து வெளியேறிய பின்பு அவர் முன்பு செய்த கொலைகள் எல்லாம் ஞானஸ்நானம் பெற்றுவிட்டதா..?நகைச்சுவையாக இருக்கிறது உங்களது பேச்சு..எமது தமிழக அரசியல்வியாதிகள், இந்திய அரசு நினைத்தால் ஈழத்து மக்களின் கண்ணீரை நிச்சயம் துடைக்கலாம்.ஆளாளுக்கு ஒரு மறைமுக திட்டத்தை வைத்துக் கொண்டு தங்களது சுயலாபத்துக்காக உங்களது பிரச்சினையில் குளிர்காய்ந்து வருகிறார்கள். இதுதான் உண்மை.

 29. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //singainathan said…:|AnputanSingai Nathan//நன்றி சிங்கைநாதன்..

 30. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///Anonymous said…//Thooya said…தமிழ்நாட்டு மக்களால்தான் எம்மை காக்க முடியும்…//இத்தனை நாள் விடுதலைபுலிகள் மட்டும்தான் எம்மை காக்க முடியும் என்று சொன்னவர்கள் இன்ரு தமிழ்நாடுதான் காக்க முடியும் என்று சொல்வது வரவேற்க்கதக்கது.///புலிகளே இந்திய உதவியை நாடியிருக்கும்போது இதில் ஒன்றும் தவறில்லையே..

 31. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //கார்த்திகைப் பாண்டியன் said…முத்துக்குமார் எந்த ஒரு காரணத்துக்காக தன்னுயிரை இழந்தாரோ.. அதில் கொஞ்சமேனும் நடந்தால் சரி..//நானும் அப்படித்தான் நினைக்கிறேன்..

 32. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //Anonymous said…/Thooya – தமிழ்நாட்டு மக்களால்தான் எம்மை காக்க முடியும்./ உண்மை. புலிகளால் அழிவுதான் மிஞ்சும்.//ஒருவன் இறந்து கொண்டிருக்கும்போது அவனது நடத்தையைச் சொல்லிக் காட்டுவது நமக்கு அழகல்ல. காப்பாற்றத்தான் முயல வேண்டும். அதுதான் நாகரீகம்..

 33. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //ஊர் சுற்றி said…தங்களது இந்த தகவல்களுக்கு நன்றி.மழுப்பு வார்த்தை பேசும் தலைவர்களின்றி மக்கள் தனியாக திரள்வதாக ஒரு உணர்வு தோன்றுகிறது. எனது எண்ணம் சரியானதா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.//இதனை இப்போதைக்கு மாணவர்கள்தான் முன்னின்று நடத்தப் போவது போல் தெரிகிறது.. பார்ப்போம்..

 34. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //திருமலை பேத்து said…In the late 1970s Indira Gandhi’s personal grudge with Sri Lanka’s president Jayawardena lead the two countries into a collision course. As a result world’s most deadliest and ruthless Terrorist organisation was born. Indira, the Prime Minister of India, paid a sum of US$ 10 million to start the terrorism in Sri Lanka while South Indian Chief Minister M.G.Ramachandran provided shelter, training in guerrilla warfare arms and all other necessary equipment on Indian soil to conduct terrorist activities against Sri Lanka government breaching the UNO International constitution by State sponsored Terrorism against a foreign Country.//இதுதான் இந்தியா செய்த முதல் தவறு.. அந்த நேரத்தில் தனது ராஜ்ய ரீதியாகவோ, ராணுவ ரீதியாகவே நேரடியாக அதில் தலையிட்டிருக்கலாம். அதைவிடுத்து தமிழ் இன இளைஞர்களிடையே பிரிவினையை வளர்த்துவிடுவதைப் போல் ஆளுக்கொருவரை ஆதரித்துத் தொலைத்தன் பலனை அனுபவித்தது என்னவோ, அப்பாவி ஈழத்து மக்கள்தான்..//WHAT HAPPENED TO PK?In the late 2008, it was revealed in the news media that Indonesian Police arresting PK who is LTTE’s chief arms procurer. There was wide spread speculation that Pranab Mukerjee flew in to Jakarthe on the first available flight and met with the Indonesian Police chief. US$ 10 million also had exchanged. But nobody knows what happened to PK except Mukerjee and Police Chief.//இப்படியும் நடக்க வாய்ப்புண்டா..? நம்ப முடியவில்லை..

 35. மகா Says:

  அநியாயத்தை தட்டி கேட்க தமிழனாய். இருக்க வேண்டியதில்லை. மனிதனாய் இருந்தால் போதும்.என்றும் இலங்கை தமிழ் மக்களுக்கு தமிழ்நாட்டு ஆதரவு இருக்கும். அதற்கு முத்துக்குமாரின் மரணமே ஒரு சாட்சி. அரசியல் கட்சிகள் எல்லாம் கண்ணாமூச்சி ஆட பொறுத்து இருந்த பொதுமக்கள் பொங்கி எழுந்துள்ளனர். இது மக்கள் ஆட்சி. யாருடைய தனிப்பட்ட சுயநலத்திற்காகவும் இங்கு எதுவும் செய்துவிடமுடியாது. மாணவர் படை சீறுகொண்டு எழுந்துள்ளது. பத்திரிக்கையாளர் முத்துக்குமாரைப் போன்ற ஒருவரை இழந்ததை நினைத்து நாங்கள் மனம் வருந்துகின்றோம்.http://mahawebsite.blogspot.com/

 36. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //மகா said…அநியாயத்தை தட்டி கேட்க தமிழனாய். இருக்க வேண்டியதில்லை. மனிதனாய் இருந்தால் போதும். என்றும் இலங்கை தமிழ் மக்களுக்கு தமிழ்நாட்டு ஆதரவு இருக்கும். அதற்கு முத்துக்குமாரின் மரணமே ஒரு சாட்சி. அரசியல் கட்சிகள் எல்லாம் கண்ணாமூச்சி ஆட பொறுத்து இருந்த பொதுமக்கள் பொங்கி எழுந்துள்ளனர். இது மக்கள் ஆட்சி. யாருடைய தனிப்பட்ட சுயநலத்திற்காகவும் இங்கு எதுவும் செய்துவிடமுடியாது. மாணவர் படை சீறுகொண்டு எழுந்துள்ளது. பத்திரிக்கையாளர் முத்துக்குமாரைப் போன்ற ஒருவரை இழந்ததை நினைத்து நாங்கள் மனம் வருந்துகின்றோம்.http://mahawebsite.blogspot.com//நன்றி மகா அவர்களே..

 37. MAL Says:

  முத்துக்குமாரின் கோரிக்கைகள் ஒன்றேனும் நிறைவேறினால் அதுவே அவருடைய தியாகத்திற்கு கிடைத்த நெற்றியாக இருக்க முடியும்

 38. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //MAL said…முத்துக்குமாரின் கோரிக்கைகள் ஒன்றேனும் நிறைவேறினால் அதுவே அவருடைய தியாகத்திற்கு கிடைத்த வெற்றியாக இருக்க முடியும்.//இருக்கலாம் ஸார்.. ஆனால் அதை செய்ய வைப்பது யார்..?அதுதான் இதுவரையில் யாருமே சொல்லாத வார்த்தையாக கலைஞரின் 75 வருட அரசியல் வாழ்க்கை சரிதத்தை ஒரு வார்த்தையில் சொல்லியிருக்கிறானே தம்பி.. செய்வாரா அவர்..? அல்லது செய்ய விடுவாரா..? பார்ப்போம்..

 39. Anonymous Says:

  முத்துக்குமார் அப்பாவி தலைவர் ராமதாஸ் மகன் மத்திய அமைச்சர் பதவியை இலங்கைத் த்மிழர்களுக்காக விடவில்லை.வை.கோ.வின் மகன் தீக்குளிக்கவில்லை.நெடுமாறனின் மகன் தீக்குளிக்கவில்லை.சீமானோ.சேரனோ தீக்குளிக்கவில்லை.ஆர்.கே.செல்வமணி தீக்குளிக்கவில்லை.ஊரார் பிண்ங்களை வைத்து அரசியல் பண்ணிய க்ருணாநிதி இதைத் தவறு என்கின்றார்.இங்கிருந்து இலங்கைத் தேயிலைத் தோட்டத்தில் கூலிகளாக்கப் பட்ட பள்ளர்களையும் பறையர்களையும் பிரபாகரனின் யாழ்ப்பாணத்தவர்கள் தீண்ட மாட்டார்கள்.திருமாவும் இதில் நிற்கின்றார்.புரியவில்லை.

 40. Anonymous Says:

  வைகோ வரம்பு மீறுபவர் என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறார்

 41. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //Anonymous said…முத்துக்குமார் அப்பாவி தலைவர் ராமதாஸ் மகன் மத்திய அமைச்சர் பதவியை இலங்கைத் த்மிழர்களுக்காக விடவில்லை.வை.கோ.வின் மகன் தீக்குளிக்கவில்லை.நெடுமாறனின் மகன் தீக்குளிக்கவில்லை.சீமானோ.சேரனோ தீக்குளிக்கவில்லை.ஆர்.கே.செல்வமணி தீக்குளிக்கவில்லை.ஊரார் பிண்ங்களை வைத்து அரசியல் பண்ணிய க்ருணாநிதி இதைத் தவறு என்கின்றார். இங்கிருந்து இலங்கைத் தேயிலைத் தோட்டத்தில் கூலிகளாக்கப்பட்ட பள்ளர்களையும் பறையர்களையும் பிரபாகரனின் யாழ்ப்பாணத்தவர்கள் தீண்ட மாட்டார்கள். திருமாவும் இதில் நிற்கின்றார். புரியவில்லை.//யாழ்ப்பாணத்தவர்களுக்கும், மலையகத் தமிழர்களுக்கும் இடையேயான பிரச்சினை இப்போது முக்கியமில்லை.. அவசியமும் இல்லை.. ஏனெனில் யாழ்ப்பாணத்துக்காரர்களே சாவின் விளிம்பில்தான் இருக்கிறார்கள். உயிர்தானே முதலில் முக்கியம்.. சின்னச் சின்ன வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும்.. 4 பேர் குடும்பத்திற்குள்ளேயே பிரச்சினைகள் இருக்கும்போது லட்சணக்கணக்கில் இருப்பவர்களுக்கிடையில் இருக்காதா என்ன..?முதலில் நாம் ஒரே இனம்.. ஒரே மொழி.. என்ற உணர்வில் ஒன்று சேர்வோம். பின்பு நம் வேறுபாடுகளை களைவோம்..

 42. Anonymous Says:

  ம் முழுவதும் புலிகளை ஆதரிக்க ஆரம்பித்து விட்டீர்கள் போல தெரிகிறது

 43. Anonymous Says:

  I do not think Mr.Muthukumar,you have done a great sacrifice.If you have done this self immolation in Delhi opposite to Parliament the message would have reached the entire world and some useful purpose would have been served.You have passed comments against M.K. and put questions on what he has done to Tamil and Tamilians.Let me list out some of his contribution to Tamil.1. He built a memorial for Thiruvallvuvar in Chennai in a place which was used as garbage throwing area. 2. He also built in Kaveripoompattinam a small town resembling the erstwhile famous Poompuhar. 3. In Kanyakumari a large statue for Thiruvalluvar. 4. Tamil was declared A CLASSICAL LANGUAGE after more than 100 years.5. Tamil is made compulsory in schools.6. Brought a law to make all Hindus irrespective of caste become ARCHAKAS.7. He was indicted by the Jain Commission. It is a pure cheat on Karunanidhi and his party. 8. When Indians in Malasia where the large number of them are Tamilians he was the first person to raise his voice in favour of them and earned wrath of Malasian Government. 9. When the LTTE Leader Mr.Tamilselvan was killed he was the person to submit an ode for which he was criticised. 10. Congress never botherd about the recommendations of MANDAL COMMISSION.It was Karunanidhi who appraised the the then PM V.P.SINGH and got it through. 11. He was threatened by LTTE of death, LTTE know very well that he supports EEZHAM TAMILS12. He was the person who waived Farmer’s loan to the tune of nearly Rs.7500 Crores. 13. He introduced Rs1/- per KG. He gives grocery items at a price lower than the Market price. Let us not go into free items which he introduced as it will lead to contrversies.. 14. Beggar’s rehabitation scheme.Housing for the poor, and resrvations for the minority communities. 15. Has given 3% reservation to Arundhadhiar community who carry night soil remove garbage and clean manholes. 16. For the first time a Comission to look into the problems of Police personnel was appointed and most of the recommendations were accepted. It is because of Dravida Iyakkam Tamil had become known to very Tamilians. 1. The state has been renamed to TAMILNADU. 2. World Tamil Conference was held in Chennai and all the Tamil scholars were made to remember. 3. To counter the Hindi Chauvinism TWO Languge formula was introduced. 4. The well known SECRETARIAT was named as THALAIMAICHEYALAGAM. 5. For more than 100 years Tamilians were mesmorised by some interested elements to mix Tamil with Sanskrit and other languages. 6. Have you seen the words “NAHALAHAM”, “SITTRUNDI”,”UNAVAHAM” etc. when you’re in your childhood. This is all made possible by DRAVIDA IYAKKAM.Our own culture is somewhat reestablished by encouraging SUYAMARIYADHAI THIRUMANAM(it is legalised by passing a law) And a lot more Annadurai and Karunanidhi(Dravida Iyakkam) had done to TAMIL and Tamilians. As a journalist you surely should know all I said and even more. Your decision is absoutely nonsense. OF JAYALALITHA, you have had a soft view. Do you think she has not indulged in corruption.Tea Estate in Coonoor(whooping 800 acres),a marvellous Bungalow in SIRUTHAVUR (CHENNAI), Grape Thottam in Hyderabad,a luxurious hotel in London,Helicopter for personal use, A/C everywhere (I am told bathroom also is Air Conditioned) are the small part of her property. Did you not know that land belonging to TANSI were taken in favour of SASI ENTERPRISES and when the matter was taken up in the court the land was returned VOLUNTRILY to TANSI.On Vaiko you have not mentioned anywhere. Is it because he is hand in glove with Jayalalitha. At home his family speaks Telugu and at stage he roars like a lion for the cause of Tamils and LTTE. What moral ground he has to support LTTE. Whether with the permission of Karunanidhi or not, did he not travel to Srilanka in KALLA THONI (a boat unauthorised to travel). Is it acceptable to you? If Karunanidhi is not in power, will VAIKO like opportunistic politicians will do whatever he is doing today. Was he not arrested for his speech in support of LTTE and kept in jail for nearly 19 months.Jayalalitha said: 1. There cannot be no country like Tamil Eezham and only Srilanka is in existence. 2. The intention of the Srilankan army was not to kill the innocent Tamils. 3. The killing of innocent civilians in a war is common. In a Tamil Magazine, a writer sarcastically said she will be awarded with SINHALA RATHNA for her views about LTTE.Even Rajapakshe cannot defend his country’s action on innocent Tamils with so much nasty comments. Has he at any point of time criticised for her remarks on Tamil Eezham and Eeazham Tamils.Did you not know Mr .Muthukumar that he vowed for reelelction of Jayalalitha to power? Will it not kill your ambition? He was the politician who claimed his role is the reason to bring about the SETHU SAMUTHIRAM PROJECT. After aligning with Jayalalitha he has changed his opinion about the project and changed his ideas about SETHUSAMUTHIRAM PROJECT. You committed suicide ,he was with your body till the funeral. Immediately,after this he turned towards PALLAPATTI RAVI who also committed suicide and has started doing his business,POLITICS.He is on the look out for somebody to die other than his sons,Grandchildren and relatives so that he can be busy with POLITICS. He is much worried about the closure of Colleges as he cannot see anymore deaths to do politics. On your BOSS(Ramadoss) also you remained silent. Did you ask him why his son remain quiet while he whole world is shouting and crying for Eezham Tamils? When in All Party meeting each and every party vowed for resignation, why DMK MPs alone submitted resignation letter to their party leader? Did Anbumani Ramadoss submitted resignation letter to his party leader(his father). Ramadoss once an ardent supporter of Prabhakaran (in Delhi he carried Photos of Prabhakaran on the roads of Delhi) remains silent when he is in big trouble. He says that Karunanidhi has to take action and he will support. He could have asked his son to resign from Minister post. He is of the opinion why he should resign when the life of the Parliament is hardly two months.Even now, he has not sent any condolence for your death.Did you not know that his party is independent and take decision on his own and come out of Congress Alliance(he is not in DMK Alliance). He is waiting in the corridor of Jayalalitha with folded hands for his inclusion in AIADMK Alliance.I repeat can he not make his son Ministerial Post leave to show his solidarity with Eezham Tamils? This is what he did when he aligned with Jayalalitha in 2000. Now is it because his son is A MINISTER and he wants his son to enjoy till the last date of Ministership? Even Thol.Thirumavalavan roars that there will be so many Muthukumars in the offing.Will he ask his brothers and his young relatives to self immolate.Will he?I do not want to comment on COMMUNIST Paties.They do not know what they are doing.Today they will be here,tomorrow they will be there.They are so ignorant that where will be there next moment. They live in Present. They want to be boss always when somebody is in power.They have to take orders from DELHI or WEST BENGAL. If they are so sincere about their principles,in the last 60 years they could have made of this country a communist country. It seems that you have not blamed the congress party vehemently for the present plight of Eezham Tamils.You have tried to put the blame on State Government as if it is out of the Federal Government and it can act independently. You poor boy! You lost your life. By living you could have achieved wonders.By dying you wanted to do the job by others.Instead you could have gone to Eezham and fought for that country. Your body has not become a role model. The same is used by some interested political party to corner votes. If you come in the form of GHOST you will surely feel why you committed suicide.Your father feels proud of your action. He thinks his son has become a martyr.A martyr is one who dares the opponent with valour and gives his life for his country. I do not see any martyrdom in your death.People praise you because you are not their son. If so, will their attitude be the same?1. Where were you when farmers in Cauvery delta area ate rats out of famine and poverty.2. Where were you when nearly 300 fishermen were killed and every day the poor fishermen go to sea with no hope to come back alive. 3. When the Cauvery issue took an ugly turn and Tamils were tortured in Bangaluru where were you? Are they not your relations?Whether whatever I have said is right or wrong,your decision is wrong.

 44. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //Anonymous said…வைகோ வரம்பு மீறுபவர் என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறார்.//இன்றையக் காலக்கட்டத்தில் அவருக்கு இது வாழ்வாதாரப் பிரச்சினை.. ஒட்டு மொத்தத் தமிழகமும் அதனைப் பற்றிப் பேசி வரும்போது உயிர் மூச்சாகக் கருதுபவர் அதைப் பற்றிப் பேசவில்லையெனில் என்ன நடக்கும்..?விடுவாரா வைகோ..

 45. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //Anonymous said…ம்.. முழுவதும் புலிகளை ஆதரிக்க ஆரம்பித்து விட்டீர்கள் போல தெரிகிறது.//ஐயையோ.. யார் சொன்னது..?நான் ஆதரிப்பது தமிழ் ஈழத்து மக்களின் விடுதலை உணர்வையும், அவர்களின் போராட்டத்தையும்தான்.. புலிகளை அல்ல..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: