குமுதம் சிநேகிதியின் ‘லொள்ளு!’


09-12-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இதுவரையில் சினிமா போஸ்டர்களை மட்டுமே துணுக்குற்று வந்த எனக்கு சமீபத்தில் ஒரு பத்திரிகையின் போஸ்டரை பார்த்து லேசாக மிதப்பே வந்தது.. “6 A.M. To 6 P.M. கல்லூரி பெண்கள் யூரினை அடக்கலாமா?” இதுதான் போஸ்டரில் இருந்த தலைப்பு. ‘குமுதம் சிநேகிதிபத்திரிகையின் போஸ்டர் இது. தெருவோர புத்தகக் கடைகள் அனைத்திலும் ஜெகஜோதியாக தொங்கிக் கொண்டிருந்தது.

கருத்து சுதந்திரம் எவ்வளவு வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது என்பது இதிலிருந்தே தெரிகிறது. உண்மைதானே.. நடப்பதைத்தானே எழுதுகிறார்கள் என்பார்கள் சிலர். வேறு மாதிரி மாற்றி எழுதியிருக்கலாம் என்பார்கள் பலர். வேறு மாதிரி என்றால்.. யூரின் என்பதனை சிறுநீர் என்று மட்டுமே மாற்ற முடியும்.. அது அதைவிட முகம் சுழிக்க வைக்குமே..

வேறு என்ன வழி..? கல்லூரிப் பெண்களுக்கு உடல் நலன் டிப்ஸ் என்ற தலைப்பில் வைக்கலாம். ஆனால் எந்தபகுதிக்குஎன்பதைக் குறிப்பிடவில்லையெனில்காயகல்பம்கேஸாகிவிடும்.

முடியலையா..? விட்ருங்க.. முதலில் ஏன் முகம் சுழிக்கிறீர்கள். உள்ளதைத்தானே சொல்கிறார்கள். பிடித்திருந்தால் வாங்கிப் படியுங்கள். பார்க்கப் பிடிக்காதவர்கள் அடுத்த போஸ்டரில் தெரியும் நயன்தாராவைப் பார்த்து ஜொள்ளுவிட்டுவிட்டு இடத்தைக் காலி செய்யுங்கள்.. வாங்காமல் விடுங்கள். ‘முதலாளிகள்என்ன புரசைவாக்கம் அரண்மனையில் இருந்து தெருவுக்கா வரப் போகிறார்கள்..?

அடப் போங்கப்பா..

(போஸ்டர் கிடைக்கல.. இந்தப் புத்தகமும் இல்ல.. இது சும்மா ஒரு ஜாலிக்கு..)

9 பதில்கள் to “குமுதம் சிநேகிதியின் ‘லொள்ளு!’”

 1. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  யாருமே கமெண்ட்டு போடலை..

  அதனாலே எனக்கு நானே பின்னூட்ட கயமைத்தனம் பண்ணிக்கிறேன்..

 2. KaveriGanesh Says:

  பத்திரிக்கைகளின் விளம்பர யுக்தி மிகவும் மலிவாகவே போய்விட்ட காலத்தில்
  இதெல்லாம் சகஜம் ஆகிவிட்டது.

  விடுங்க அண்ணே

 3. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //KaveriGanesh said…
  பத்திரிக்கைகளின் விளம்பர யுக்தி மிகவும் மலிவாகவே போய்விட்ட காலத்தில் இதெல்லாம் சகஜம் ஆகிவிட்டது. விடுங்க அண்ணே..//

  சகஜம்தான்.. என்ன செய்யறது? ஒவ்வொரு கலகத்தையும் இப்படித்தான் சகஜம், சகஜம் என்று சொல்லித்தான் நாம் ஏற்றுக் கொண்டே வருகிறோம் கணேஷ்..

  அப்புறம் எங்க ரொம்ப நாளா ஆளையே காணோம்..?

 4. ராம்சுரேஷ் Says:

  நீங்க போட்டதிலேயே ரொம்ப சின்ன பதிவு இது மட்டும் தான். வாழ்க நீவிர்!!!
  கொஞ்ச நாளா உங்க ஏரியா பக்கமே வரமுடியாம இருந்தது. இப்போ back to form huh???

 5. சென்ஷி Says:

  அண்ணே!

  என்னாச்சுன்னே… ஏன் உடம்பு ஏதும் சுகமில்லையா.. ஒரு பக்கத்துக்குள்ள பதிவை முடிச்சு ஏன் இந்த மாதிரி எங்களை வருத்தப்பட வைக்குறீங்க. அதுவும் குமுதத்துக்கு இப்படி செய்யலாமா..

 6. கிரி Says:

  //ராம்சுரேஷ் said…
  நீங்க போட்டதிலேயே ரொம்ப சின்ன பதிவு இது மட்டும் தான். வாழ்க நீவிர்!!!//

  :-))))

 7. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //ராம்சுரேஷ் said…
  நீங்க போட்டதிலேயே ரொம்ப சின்ன பதிவு இது மட்டும்தான். வாழ்க நீவிர்!!!
  கொஞ்ச நாளா உங்க ஏரியா பக்கமே வரமுடியாம இருந்தது. இப்போ back to form huh???//

  நன்றி ராம்சுரேஷ்..

  சின்னப் பதிவா போட்டாத்தான் என் வீட்டுப் பக்கம் வருவீங்களோ..?

  எப்படியிருப்பினும் இனி அடிக்கடி எதிர்பார்க்கிறேன்..

 8. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //சென்ஷி said…
  அண்ணே! என்னாச்சுன்னே… ஏன் உடம்பு ஏதும் சுகமில்லையா.. ஒரு பக்கத்துக்குள்ள பதிவை முடிச்சு ஏன் இந்த மாதிரி எங்களை வருத்தப்பட வைக்குறீங்க. அதுவும் குமுதத்துக்கு இப்படி செய்யலாமா..//

  தம்பீ.. ராசா.. கண்ணு.. பவுனு.. இப்பத்தான் உன் கண்ணுக்கு என்னை மாதிரி ஆளுகளெல்லாம் தெரியுதா..?

  இத்தனை நாள் எங்க தங்கம் போயிருந்த..?

  இவ்ளோ அக்கறையா இருக்கியே.. மாசத்துக்கு ஒரு வாட்டியாவது வந்து பார்த்துட்டுப் போயிருக்கலாமே..?

  ம்.. ஏதோ ஒரு நினைப்புல போடலாமேன்னு தோணுச்சு.. போட்டுட்டேன்..

  வராதவங்களெல்லாம் வர்றத பார்த்தா இதையே தொடரலாம்னு தோணுது..

  ரொம்ப நன்றி தம்பி..

 9. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //கிரி said…
  //ராம்சுரேஷ் said…
  நீங்க போட்டதிலேயே ரொம்ப சின்ன பதிவு இது மட்டும்தான். வாழ்க நீவிர்!!!//
  :-))))///

  என்ன கிரி.. ஜால்ராவா..? ஓகே.. புன்னகையை ஏத்துக்குறேன்..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: