நின்று விடுமா தீவிரவாதம்..?


டிசம்பர் 6, 2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே.

மும்பை கொடுத்த அதிர்ச்சியை அனுபவிக்கவும் விடாத அளவுக்கு, வருண பகவான் எனக்குக் கொடுத்த இன்ப அதிர்ச்சியினால் தொடர்ந்து பதிவிட முடியவில்லை மக்களே…

எந்தவொரு தவறிலும் அது நடக்காமல் இருப்பதற்கு ஏதோ ஒருவித வாய்ப்பு இருக்கத்தான் செய்யும். மும்பை கடற்கரையில் கடலில் பயணித்து கரையேறிய அந்நியர்கள் பற்றி மீனவர்கள் தங்களிடம் சொன்ன எச்சரிக்கையை மும்பை போலீஸார் கொஞ்சம் கேட்டிருந்து அவர்களைத் தடுத்து என்ன, ஏதுவென்று கேட்டிருந்தால், ஒருவேளை ஏதேனும் ஒரு இடத்திலாவது அவர்களது படுகொலைகளை தடுத்திருக்க முடியும். என்றைக்கும் போலத்தான் இன்றைக்கும் என்ற அவர்களின் சோம்பேறித்தனமான எண்ணத்தினால் இறந்தவர்கள் எண்ணிக்கை சற்று கூடியிருக்கிறது.

ஒவ்வொரு முறை குண்டுவெடிப்பின்போதும் எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியையும், ஆளும் கட்சி எதிர்க்கட்சியையும் காரணமாக்கிக் கொள்வது நமது இந்திய அரசியல் மரபு. அதை இந்த முறையும் பார்க்க வேண்டி வந்திருக்கிறது. “பொடா சட்டம் இல்லாததால்தான் இந்த அளவுக்கு குண்டுவெடிப்புகள் நிகழ்கின்றன..” என்கிறது பாரதீய ஜனதா. பொடா இருந்தாலும் கப்பலேறி வருபவர்கள் வரத்தான் செய்வார்கள். குண்டு வைக்கத்தான் போகிறார்கள். அது இருந்தால் என்ன? இல்லாமல் இருந்தாலென்ன..?

சென்ற முறை போல் அல்லாமல் இந்த முறை உடை மாற்றும் வைபவத்திற்கு இடம் தராமல் சிவராஜ்பாட்டீல் ஒரேயடியாக வீட்டிற்கே போய்விட்டார். சென்ற முறையே அவர் வீட்டிற்கு சென்றிருந்தாலும் இந்த குண்டுவெடிப்பு நிகழத்தான் செய்திருக்கும். குண்டு வைப்பவர்களெல்லாம் முன்கூட்டியே சொல்லிவிட்டா வந்து வைக்கிறார்கள் அவர்களைத் தடுப்பதற்கு..?

சிவராஜ்பாட்டீல் அமைச்சர் பதவியினை ஏற்றதே என்னைப் பொறுத்தவரையில் அரசியல் அநாகரிகம். சென்ற லோக்சபா பொதுத்தேர்தலில் தோல்வியடைந்த அவரை.. தொகுதி மக்களே புறக்கணித்திருக்கும் சூழ்நிலையில் அவரை அழைத்து தங்கத் தாம்பாளத்தில் வைத்து பதவியினை கொடுத்தது அரசியல் அநியாயம். மக்களவை சபாநாயகராக அவருடைய செயல்பாடுகளை மனதில் வைத்தே ‘அன்னை’ அவருக்குக் கருணை காட்டியிருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். சபாநாயகர் பதவிக்குப் பொருத்தமானவர்கள் தீவிரவாதத்தை அழித்தொழிக்கும் தொழிலுக்கு எப்படி பொருந்திவருவார்கள் என்பதனை ‘அன்னை’ நினைக்க மறந்துவிட்டது ஏனோ தெரியவில்லை. இவருக்குப் பதிலாக ஒரு பெயருக்காகவாவது அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஒரு காங்கிரஸ்காரருக்கு கொடுத்திருந்தாலும், அதனை நமது ஜனநாயகத் தேர்தல் முறைக்கு கிடைத்த பெருமையாகக் கருதலாம். ‘அன்னை’யின் மனது யாருக்குப் புரிகிறது..?

எவ்வளவுதான் மனித உரிமை மீறல்கள் பற்றி பொங்கி எழுந்து பதிவுகளில் எழுதி, பல்வேறு தளங்களில் பேசி வரும் சூழலிலும் அன்றைய பொழுதில் பல்வேறு தொலைக்காட்சிகளின் நேரடி ஒளிபரப்பைப் பார்த்த போது அந்த தீவிரவாதிகள் கையில் கிடைத்தால் விசாரணையே நடத்தாமல் அங்கேயே நிற்க வைத்தே சுட வேண்டும் என்ற எண்ணம்தான் என் மனதுக்குள் எழுந்தது. தவிர்க்கவே முடியவில்லை. அதிலும் இப்போது பிடிபட்டுள்ள தீவிரவாதியின் முகம் காட்டும் வெறியே, நம்மைச் சூழ்ந்துள்ள மத வெறியை நமக்கு அடையாளம் காட்டுகிறது.

அண்டை மண்ணிலிருந்துதான் தீவிரவாதம் கிளம்பி வருகிறது என்பது தெரிந்தாலும் நம்மால் எதுவும் செய்ய முடியாத நிலைமை. போர் என்றால் செலவாகும். தப்பித் தவறி அதில் தோல்வி கிடைத்துவிட்டால் லாயக்கில்லாத கட்சி, முட்டாள்தனமான பிரதமர் என்ற அவப்பெயர் கிடைக்கும். நாளைய பள்ளிப் புத்தகங்களில் நமது பெயர் இடம் பெறாது என்கிற கவலையிலேயே பிரதமரும், கட்சிக்காரர்களும் உயிரை விட வேண்டும்.

எதிர்பார்த்த வெற்றி கிடைத்தாலும் “இவ்வளவு செலவு செய்து, நாட்டின் சொத்தையே காலி செய்துவிட்டுத்தான் ஜெயித்திருக்கிறார்கள். அது யாருடைய பணம்? உன் வீட்டுக் காசு.. என் வீட்டுக் காசு.. மன்மோகன்சிங் வீட்டுக் காசில்ல..” என்ற எதிர்க்கட்சிகளின் கோஷத்திற்கு பதில் சொல்ல வேண்டும்..

இடையில் ஐ.நா.வோ, அமெரிக்காவோ, ஐரோப்பிய யூனியனோ தலையிட்டால் அவர்களையும் சமாளிக்க வேண்டும். ஏற்கெனவே அமெரிக்கா உட்காரச் சொன்னால் படுத்து விடுகிற நிலைமையில் இருக்கும் நமது மன்னமோகனசிங்கிற்கு சப்தமாக பேசவே தைரியம் இல்லை.

இந்த விஷயத்தில் சர்தாரியின் தைரியத்தை நாம் நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். ஹோட்டலில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை நமது படையினர் வேட்டையாடிக் கொண்டிருந்தபோதே, வெளியான சில தகவல்களைக் கொண்டு நிச்சயம் நம்மைத்தான் காவு கொடுக்கப் போகிறார்கள் என்பதனை புரிந்து கொண்டார்.

உடனேயே அனைத்து நாட்டுத் தூதுவர்களுடன் ஒரு மீட்டிங். “எங்களுக்கும் அதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.. இந்தியா வழக்கமான பல்லவியையே பாடுகிறது..” என்றார். நமது இந்தியத் தரப்பில் அதே அளவிற்கு தைரியமாக தீவிரவாதம் அவர்களது நாட்டில் இருந்துதான் வந்திருக்கிறது என்று சொல்வதற்கு எவருக்கும் துணிச்சல் இல்லை. பிரணாப்முகர்ஜி முதலில் “பாகிஸ்தான்தான் காரணம்” என்று சொல்லிவிட்டு பின்பு “இல்லை.. நான் அப்படி சொல்லவில்லை..” என்று வழக்கமான பல்டி அடித்து நாட்டையே அசிங்கப்படுத்தியதும் நடந்தேறியுள்ளது. அப்புறம் எதுக்கு நமக்கு அரசியல்..?

“20 தீவிரவாதிகளைப் பிடித்துக் கொடுங்கள்..” என்று கேட்டவுடனேயே இதற்கும் சர்தாரியிடமிருந்து டாணென்று பதில் வந்துவிட்டது. “அவர்கள் தவறு செய்திருக்கிறார்கள் எனில், நாங்களே விசாரித்து அவர்களுக்குத் தண்டனை வழங்குவோம். நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள்..” என்று.. இதற்கு ஏதாவது உருப்படியான பதிலை நமது அரசியல்வியாதிகள் சொல்லுவார்கள் என்று நினைத்தீர்களா..?

இந்த மதத் தீவிரவாதத்தை ஒழிப்பது நம்மால் முடியாத விஷயம். பாகிஸ்தான் தலைவர்களுக்கு தீவிரவாதிகள் பற்றிய உண்மை தெரிந்தும் அவர்களாலும் ஒன்றும் செய்ய முடியாமைக்கு காரணம் அரசியல்தான். அடுத்து ஆட்சிக்கு வர வேண்டும் என்ற ஒரே கொள்கைதான் அனைத்து நாட்டு அரசியல்வியாதிகளுக்கும். அவர்கள் மட்டுமென்ன கொள்கைக்காகவா அரியணை ஏறியிருக்கிறார்கள்..?

அமெரிக்காவுக்கு நம் மீதும் நேசம் உண்டு. அதே போல் பாகிஸ்தான் மீதும் பாசம் உண்டு. இரண்டையும் பேலன்ஸ் செய்துதான் நடந்து கொள்வார்கள். அமெரிக்காவே தாவூத் இப்ராஹிமை தீவிரவாதிகள் பட்டியலில் சேர்ப்பித்து 3 ஆண்டுகள் ஆகின்றன. இன்னமும் அவர்களால் அவனது நிழலைக் கூடத் தொட முடியவில்லை. தாவூத் கராச்சியில்தான் கொடி கட்டிப் பறக்கிறான் என்கிறார்கள். இருந்தும் என்ன செய்ய..? வீட்டு முகவரியைக் கண்டுபிடித்த பெருமை மட்டுமே நமக்குண்டு.

பனாமா, மெக்சிகோ நாட்டின் தலைவர்கள் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டவர்கள். அவர்களை எங்களிடம் ஒப்படைத்தாக வேண்டும் என்று கேட்டு அவர்களை வளைத்துப் பிடிக்க முடிந்த அமெரிக்காவால் சாதாரண அகதி பிரஜையான தாவூத்தை பிடிக்க முடியாதா..? முடியும்.. ஆனால் அவர்களுக்கு தாவூத்தால் நேரடியான நஷ்டமோ, கஷ்டமோ இல்லை என்பதால் விட்டு வைத்திருக்கிறார்கள்.

தாவூத்தை விட்டு வைத்திருப்பதால், அது எப்போதுமே ஆபத்துதான் என்பதனால், தாவூத்தால் பிரச்சினை எனில் இந்தியா நமது அன்பை எதிர்பார்க்கும். பாகிஸ்தான் நமது ஆதரவுக்காக காத்திருக்கும் என்கின்ற அரிச்சுவடி அரசியல்கூட அமெரிக்கர்களுக்குப் புரியாததா என்ன..?

அவர்களைப் பொறுத்தவரையில் இந்தியாவும், பாகிஸ்தானும் இப்படி கர்புர்ரென்று முறைத்துக் கொண்டிருந்தால்தான் தங்களிடம் உதவி வேண்டி இரண்டு நாடுகளுமே கியூவில் நிற்கும் என்கிற எதிர்பார்ப்பு உண்டு. அதனை அடுத்து வரும் ஒபாமாகூட மாற்ற மாட்டார். வேண்டுமானால் பொறுத்திருந்து பாருங்கள்..

அடுத்து வந்திருக்கிறார் அண்ணன் சிதம்பரம். நிதித்துறையில் ஏராளமாக புதுமைகளையும், நன்மைகளைச் செய்து இந்தியாவை ‘ஊக்கு’வித்துக் கொண்டிருந்த சிதம்பரத்திடம், பிரணாப் முகர்ஜி “வேண்டாம்” என்று ஒதுக்கித் தள்ளியதால் உள்துறை திணிக்கப்பட்டிருக்கிறது. அவரும் வேண்டாவெறுப்பாகவே ஏற்றுக் கொண்டுள்ளதாகத்தான் எனக்குத் தெரிகிறது. கூடவே வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலின் கடைசிக் கட்டத்தில் செங்கொடியினரை அரவணைக்க நேரிடலாம் என்பதால் முன்கூட்டியே அவர்களது அனுதாபத்தை பெறுவதற்காக செங்கொடியினரின் ‘மிக நெருங்கிய நண்பர்’ என்கிற முறையில் சிதம்பரத்திற்கு ‘ஆப்பு’ வைக்கப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். ஒரே கல்லில் மூணு மாங்கா..

சிதம்பரம் வருவதினால் மட்டுமே குண்டுவெடிப்புகளும், பயங்கரவாதமும் நிறுத்தப்படப் போவதில்லை. ஒரு அரசாங்கமே மறைமுகமாக தீவிரவாதத்தை வளர்த்து விடும்போது நாம் என்ன செய்ய முடியும்..? அடிக்கு அடி என்று இறங்கினாலும் ஆபத்து.. அமைதியாக இருந்தாலும் ஆபத்து என்கிற மத்தளத்தின் நிலைமை நமக்கு.

திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதைப் போல் தீவிரவாதிகள் அவர்களாகவே திருந்தினால் ஒழிய பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்ட முடியாது.

வேண்டுமானால், இஸ்ரேலைப் போல பொங்கி எழுந்து திடுதிப்பென்று நாலைந்து குண்டுகளை கராச்சியின் மீதும், இஸ்லாமாபாத்தின் மீதும் வீசிவிட்டு எச்சரிக்கை செய்யலாம். தொடர்ந்து போர் வெடித்தால் போரில் குதிக்கலாம். ஆனால் இஸ்ரேலின் ‘எதையும் தாங்கும் மனது’ முன்பே சொன்னது போல் நமக்கில்லை. போர் என்று வந்தாலும் சரி.. போர் இல்லை என்று ஆனாலும் சரி.. நமது தலைவர்களின் அரசியல், கடைசியில் தேர்தலில்தான் வந்து நிற்க வேண்டும். ஆகவே அதுவும் நடக்காது.

வேறென்ன வழி..?

அமைதியாக இப்போது நடத்தியதைப் போல தீவிரவாதிகளைச் சுட்டுத் தள்ளிவிட்டு, உயிர்த் தியாகம் செய்தவர்களுக்கு உதவித் தொகைகளை வாரி வழங்கிவிட்டு இந்தியாவின் ஒற்றுமைக்கு குரல் கொடுப்பதைத் தவிர நம்மால் முடிந்தது வேறில்லை.

45 பதில்கள் to “நின்று விடுமா தீவிரவாதம்..?”

 1. Anonymous Says:

  காஷ்மீருக்கு சுதந்திரம் கொடுத்துடலாமே ஐயா? எங்க கருத்து என்னவோ?

 2. கிரி Says:

  தைரியமான தலைவர் நமக்கு கிடைக்காதது நமுடைய துர்அதிர்ஷ்டமே.. நம் அரசியல்வாதிகளால் நமக்கு எந்த ஒரு உருப்படியான பயனும் இல்லை

 3. வண்ணத்துபூச்சியார் Says:

  பி.ஜே.பி காலத்தில் விதைக்கப்பட்ட வினைகள்தான் காங்கிரஸ் காலத்தில் அதிகம் அறுவடைசெய்யப் படுகின்றன.

  இன்று இந்தியாவிலும் வெளிநாட்டிலும் இந்தியா மீது பயங்கரவாத தாக்குதல் நடத்துபவர்களை மூளைச் சலவை செய்ய பயன்படுத்தப்படுவது பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரங்களின் காட்சிகள்தான்.

  எவ்வித உயரிய நோக்கங்களோ, தத்துவமோ, சித்தாந்தமோ இல்லாமல் ஆட்சியைப் பிடிக்கவும் அதன் பலன்களை, சொகுசுகளை, சைரன் கார்களை அனுபவிக்கும் ஒரே நோக்கத்துடன் ஒவ்வொரு தேர்தல் நெருங்கும் போதும் மேலும் உத்வேகத்துடன் இந்திய சமூகத்தைத் துண்டாட முயன்று வருகிறது பி.ஜே.பி.

  பயங்கரவாத ஆளெடுப்பிற்கு சரியான கோஷத்தை உருவாக்கிக் கொடுத்தது பி.ஜே.பிதான்.

  இந்தியாவில் பயங்கரவாதம் பூதாகாரம் பெறுவதற்கு ஆணி வேராக இருக்கும் பி.ஜே.பிக்குத்தான் ஒவ்வொரு பயங்கரவாத தாக்குதலின்போது அதன் அரசியல் லாபம் செல்கிறது.

  எந்த தீர்கமான முடிவுகளும் எடுக்காமல் ஒவ்வொரு முறையும் சோனியாவின் “கை” அசைவுக்கு எதிர்பார்க்கும் பிரதமர், மழுப்பல் மன்னன் ” ப.சி”. குண்டு வெடிப்பு செய்தி கேட்டு குளித்து முடித்து உள்ளாடை மாற்றி வரும் உள்துறை அமைச்சர் என காங்கிரஸீம் நாறித்தான் போயுள்ளது..

  நல்ல உள்ளம் கொண்ட கோடிக்கணக்கான எண்ணற்ற இந்தியர்களின் ஒரே தேவை”தன்னலமற்ற உறுதியான தலைவர் தான்”

  அது (அவர்)எப்போது…????????

 4. KaveriGanesh Says:

  அமைதியாக இப்போது நடத்தியதைப் போல தீவிரவாதிகளைச் சுட்டுத் தள்ளிவிட்டு, உயிர்த் தியாகம் செய்தவர்களுக்கு உதவித் தொகைகளை வாரி வழங்கிவிட்டு இந்தியாவின் ஒற்றுமைக்கு குரல் கொடுப்பதைத் தவிர நம்மால் முடிந்தது வேறில்லை.

  இதை தவிர வேரொன்றூம் நம்மால் எப்பொதும் செய்யமுடியாது

 5. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //Anonymous said…
  காஷ்மீருக்கு சுதந்திரம் கொடுத்துடலாமே ஐயா? எங்க கருத்து என்னவோ?//

  கொடுத்துப்புட்டு..?

  காஷ்மீரில் நடப்பதும் மும்பையில் நடந்ததும் ஒன்றுதான்.. எல்லை தாண்டிய தீவிரவாதம்.. வேறு வழியில்லை.. சமாளித்துத்தான் ஆக வேண்டும்..

  அதற்காக நமது வீட்டை தாரை வார்க்க முடியாது..

 6. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //கிரி said…
  தைரியமான தலைவர் நமக்கு கிடைக்காதது நமுடைய துர்அதிர்ஷ்டமே.. நம் அரசியல்வாதிகளால் நமக்கு எந்த ஒரு உருப்படியான பயனும் இல்லை.//

  உண்மைதான் கிரி.. பாருங்கள் மும்பை என்றவுடன் முதல் கருத்தை பால்தாக்கரேதான் சொல்லியிருக்க வேண்டும்.. கமுக்க மன்னனாக அல்லவா இருக்கிறார். மும்பைக்கார ஜவான்களா வந்து காப்பாற்றினார்கள் என்று எவனாவது திருப்பிக் கேட்டுட்டா..

  எங்கு பார்த்தாலும் சுயநலத்தனமான அரசியல்வியாதிகள்..

 7. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //வண்ணத்துபூச்சியார் said…
  பி.ஜே.பி காலத்தில் விதைக்கப்பட்ட வினைகள்தான் காங்கிரஸ் காலத்தில் அதிகம் அறுவடைசெய்யப்படுகின்றன.
  இன்று இந்தியாவிலும் வெளிநாட்டிலும் இந்தியா மீது பயங்கரவாத தாக்குதல் நடத்துபவர்களை மூளைச் சலவை செய்ய பயன்படுத்தப்படுவது பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரங்களின் காட்சிகள்தான். எவ்வித உயரிய நோக்கங்களோ, தத்துவமோ, சித்தாந்தமோ இல்லாமல் ஆட்சியைப் பிடிக்கவும் அதன் பலன்களை, சொகுசுகளை, சைரன் கார்களை அனுபவிக்கும் ஒரே நோக்கத்துடன் ஒவ்வொரு தேர்தல் நெருங்கும் போதும் மேலும் உத்வேகத்துடன் இந்திய சமூகத்தைத் துண்டாட முயன்று வருகிறது பி.ஜே.பி.
  பயங்கரவாத ஆளெடுப்பிற்கு சரியான கோஷத்தை உருவாக்கிக் கொடுத்தது பி.ஜே.பிதான். இந்தியாவில் பயங்கரவாதம் பூதாகாரம் பெறுவதற்கு ஆணி வேராக இருக்கும் பி.ஜே.பிக்குத்தான் ஒவ்வொரு பயங்கரவாத தாக்குதலின்போது அதன் அரசியல் லாபம் செல்கிறது.
  எந்த தீர்கமான முடிவுகளும் எடுக்காமல் ஒவ்வொரு முறையும் சோனியாவின் “கை” அசைவுக்கு எதிர்பார்க்கும் பிரதமர், மழுப்பல் மன்னன் ” ப.சி”. குண்டு வெடிப்பு செய்தி கேட்டு குளித்து முடித்து உள்ளாடை மாற்றி வரும் உள்துறை அமைச்சர் என காங்கிரஸீம் நாறித்தான் போயுள்ளது..
  நல்ல உள்ளம் கொண்ட கோடிக்கணக்கான எண்ணற்ற இந்தியர்களின் ஒரே தேவை “தன்னலமற்ற உறுதியான தலைவர்தான்”
  அது (அவர்)எப்போது…????????//

  பூச்சியாரே.. முழுக்க, முழுக்க பி.ஜே.பியையே குற்றம் சுமத்திவிடக் கூடாது..

  முதன் முதலில் தொடர் குண்டு வெடிப்பை நிகழ்த்தியது எல்லை தாண்டிய பயங்கரவாதம்தான்.. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான்..

  தனி மனிதர்களின் பணம் சம்பாதிக்கும் வெறியில் தாய்நாடு என்பது பி்ன்னுக்குப் போய் சொந்த மதம் பெரிய விஷயமாகிவிட்டது. இந்த மதத்தை தவறாகப் பயன்படுத்தி மூளைச் சலவையில் ஈடுபடுவதும் நமது அண்டை சொந்தங்கள்தான்.

  சில நிகழ்வுகளில் மட்டுமே காவி உடைக்கு சம்பந்தம் உண்டு. அதற்காக ஒட்டு மொத்தமாக பி.ஜே.பியே காரணம் என்று சொல்வது தவறு.

 8. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///KaveriGanesh said…
  அமைதியாக இப்போது நடத்தியதைப் போல தீவிரவாதிகளைச் சுட்டுத் தள்ளிவிட்டு, உயிர்த் தியாகம் செய்தவர்களுக்கு உதவித் தொகைகளை வாரி வழங்கிவிட்டு இந்தியாவின் ஒற்றுமைக்கு குரல் கொடுப்பதைத் தவிர நம்மால் முடிந்தது வேறில்லை.//
  இதை தவிர வேரொன்றூம் நம்மால் எப்பொதும் செய்யமுடியாது.///

  நல்லது கணேஷ் ஸார்..

  வேறு வழியில்லாத விரக்தியில் இதைத்தான் என்னால் சொல்ல முடிந்தது..

 9. benzaloy Says:

  தங்களது Toolbar எனது Blog Site ல்
  பதிப்பதற்கு ஏதுவான instructions கள்
  தந்துதவுங்கள்.
  எனது ஈமேய்ல் விலாசம்
  benzaloy@gmail.com
  நன்றி

 10. Anonymous Says:

  இந்த பிரச்சினை தீர போவதில்லை. இன்னும் பல காலம் இருக்க போகின்றது. இந்திய இந்து வெறி அரசியல்வாதிகள்கிட்ட யாரு நம்ம காப்பத்தறது?

 11. Anonymous Says:

  //கொடுத்துப்புட்டு..?

  காஷ்மீரில் நடப்பதும் மும்பையில் நடந்ததும் ஒன்றுதான்.. எல்லை தாண்டிய தீவிரவாதம்.. வேறு வழியில்லை.. சமாளித்துத்தான் ஆக வேண்டும்..

  அதற்காக நமது வீட்டை தாரை வார்க்க முடியாது..//

  மடத்தமிழா!

  காஷ்மீர் என்ன உனது வீடா?

  இந்தா இதைப் படி http://blog.tamilsasi.com/2005/06/1.html

 12. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //benzaloy said…
  தங்களது Toolbar எனது Blog Site-ல்
  பதிப்பதற்கு ஏதுவான instructions கள்
  தந்துதவுங்கள். எனது ஈமேய்ல் விலாசம்
  benzaloy@gmail.com. நன்றி//

  விரைவில் மெயில் அனுப்புகிறேன். சுருக்கமாகவெனில் உங்களுடைய பிளாக்கரில் லாக் இன் செய்து உள்ளே செல்லுங்கள். பின்பு Edit Layoutசெல்லுங்கள். அங்கு Configure Link List என்கிற ஆப்ஷன் இருக்கும். அதனைக் கிளிக் செய்து அதனுள் நுழைந்து அது வழிகாட்டுதலின்படி செய்யுங்கள்.. நான் மட்டுமல்ல வலையுலகம் மொத்த்தையுமே நீங்கள் உங்களது தளத்தில் பதிந்து கொள்ளலாம்..

 13. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //Anonymous said…
  இந்த பிரச்சினை தீர போவதில்லை. இன்னும் பல காலம் இருக்க போகின்றது. இந்திய இந்து வெறி அரசியல்வாதிகள்கிட்ட யாரு நம்ம காப்பத்தறது?//

  இந்து வெறி மட்டுமல்ல.. ஆதிக்க வெறி.. அதிகார வெறி எல்லாமும் சேர்ந்துதான் இருக்கிறது.. காப்பாற்றவே முடியாது..

 14. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///Anonymous said…
  //கொடுத்துப்புட்டு..?
  காஷ்மீரில் நடப்பதும் மும்பையில் நடந்ததும் ஒன்றுதான்.. எல்லை தாண்டிய தீவிரவாதம்.. வேறு வழியில்லை.. சமாளித்துத்தான் ஆக வேண்டும்.. அதற்காக நமது வீட்டை தாரை வார்க்க முடியாது..//
  மடத்தமிழா! காஷ்மீர் என்ன உனது வீடா? இந்தா இதைப் படி http://blog.tamilsasi.com/2005/06/1.html///

  அட மடச்சாம்பிராணி அனானி..

  என்றைக்கு காஷ்மீர் நம்முடன் இணைந்ததோ அன்றைக்கே அது நமது நாட்டின் ஒரு பகுதிதான்.. அது பொய் எனில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா என்று எதுவுமே இந்தியாவுடன் இணைந்திரு்கக முடியாது..

  அந்த பதிவை நான் ஏற்கெனவே படித்துவிட்டேன்.. இப்ப என்ன அதுக்கு..?

 15. நித்யகுமாரன் Says:

  அப்பாவி இந்தியனின் ஏக்கம் அப்படியே பளிச்சிடுகிறது.

  மெழுகுவர்த்தி ஏத்தி வைப்பதோடு இது நின்றுவிடுகிறதே…

  என்ன செய்வது?

  நித்யன்

 16. benzaloy Says:

  வாடா போடா தமிழ் தவிர சுத்தமான
  சொற்கள் தேடி பாக்கோணும் …

  ஓண்ணு புலி வால், அல்லது தமிழ்
  துரோகி, அப்படித்தானே …

 17. benzaloy Says:

  தீவிரவாதம் சொற்ப காலத்தில்
  முடிவடையாது …
  காரணிகள் மட்டுமே மாறும்…

 18. வண்ணத்துபூச்சியார் Says:

  சுயநல காங்கிரசின் பலவீனம் தான் பி.ஜே.பி..

  சிறு பான்மை ஒட்டுகளுக்கான அரசியல் காங்கிரஸ். மதவெறி ஒட்டுக்காக பி.ஜே.பி. முழுக்க முழுக்க சொல்லவிலை. 90% போதுமா.?

 19. அதிரை ஜமால் Says:

  \\சுயநலத்தனமான அரசியல்வியாதிகள்..\\

  உப்பு – salt

 20. Anonymous Says:

  //என்றைக்கு காஷ்மீர் நம்முடன் இணைந்ததோ அன்றைக்கே அது நமது நாட்டின் ஒரு பகுதிதான்.. //

 21. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///அதிரை ஜமால் said…
  \\சுயநலத்தனமான அரசியல்வியாதிகள்..\\
  உப்பு – salt///

  ஜமால், உப்பு அதிகமாக இருந்தாலும் பிரச்சினைதான்.. இல்லாமல் இருந்தாலும் பிரச்சினைதான்..

  உப்பு போட்டுச் சாப்பிடாதவர்களிடம் என்ன எதிர்பார்க்க முடியும்..?

 22. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //நித்யகுமாரன் said…
  அப்பாவி இந்தியனின் ஏக்கம் அப்படியே பளிச்சிடுகிறது. மெழுகுவர்த்தி ஏத்தி வைப்பதோடு இது நின்றுவிடுகிறதே…
  என்ன செய்வது?
  நித்யன்//

  நம்மால் முடிந்தது அவ்வளவுதான் நித்யா..

  அதிகாரம் அரசியல்வியாதிகளின் கையில் இருக்கும்போது நமது எதிர்பார்ப்பை நாம் சொல்லத்தான் முடியும். செய்ய முடியாது.. அடுத்தத் தேர்தல் வரும்வரை காத்திருப்போம்..

 23. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //benzaloy said…
  வாடா போடா தமிழ் தவிர சுத்தமான
  சொற்கள் தேடி பாக்கோணும். ஓண்ணு புலி வால், அல்லது தமிழ்
  துரோகி, அப்படித்தானே.//

  உண்மைதான் ஸார்..

  புலிக்கு வாலாக நீ இல்லாவிடில் நீயொரு தமிழ்த் துரோகி என்பதாகத்தான் அர்த்தம் என்கிறார்கள் தமிழ்நாட்டில்..

 24. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //benzaloy said…
  தீவிரவாதம் சொற்ப காலத்தில்
  முடிவடையாது. காரணிகள் மட்டுமே மாறும்.//

  நிச்சயம் முடியாது. ஒரு குண்டுக்கு இன்னொரு குண்டுதான் பதில் என்கிற போது எப்படி முடிவடையும்..?

 25. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //வண்ணத்துபூச்சியார் said…
  சுயநல காங்கிரசின் பலவீனம்தான் பி.ஜே.பி. சிறுபான்மை ஒட்டுகளுக்கான அரசியல் காங்கிரஸ். மத வெறி ஒட்டுக்காக பி.ஜே.பி. முழுக்க முழுக்க சொல்லவிலை. 90% போதுமா.?//

  நானும் முழுக்க, முழுக்க சொல்லவில்லை.. சதவிகிதக் கணக்கில்தான் சொல்கிறேன்..

  காங்கிரஸ், பிஜேபி இரண்டுமே அதிகாரத்தை குறி வைத்துத்தான் மக்களை அணுகுகின்றன. மக்களை குறி வைத்து அல்ல..

 26. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //Anonymous said…
  //என்றைக்கு காஷ்மீர் நம்முடன் இணைந்ததோ அன்றைக்கே அது நமது நாட்டின் ஒரு பகுதிதான்.. //

  என்ன சொல்ல வர்றீங்க அனானி..?

 27. benzaloy Says:

  முடியும் ன்னு யார் சொன்னா
  …காலமும் காரணியும்
  மட்டுமே மாறும் என்றேன்.

  ஓர் உதவி…தாங்கள் தமிழில்
  எழுத பாவிக்கும் மெதட்
  என்ன என்பதை அறிப்பீர்களா, ப்ளீஸ்.
  எனது மிகவும் ஸ்லோவாக
  உள்ளது, அதனால் தான்
  வேண்டுகின்றேன்

 28. benzaloy Says:

  பரவாயில்லையே…நாம சுத்த தமிழ்லேயே கடவுள், கடவுள்களை, டா போட்டுத்தானே கூப்பிடுகின்றோம்…அவர்களை நீ என்று தானே சொல்கின்றோம்…
  இதிலயாவது நாம் ஓன்று

 29. benzaloy Says:

  ”புலிக்கு வாலாக நீ இல்லாவிடில் நீயொரு தமிழ்த் துரோகி என்பதாகத்தான் அர்த்தம் என்கிறார்கள் தமிழ்நாட்டில்”

  ஓஹோ, இந்த துன்பம் உங்கும் உள்ளதா

 30. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //benzaloy said…
  முடியும்ன்னு யார் சொன்னா?
  காலமும் காரணியும் மட்டுமே மாறும் என்றேன்.//

  மாறட்டும்.. மாற வேண்டும்..

  //ஓர் உதவி, தாங்கள் தமிழில்
  எழுத பாவிக்கும் மெதட் என்ன என்பதை அறிப்பீர்களா, ப்ளீஸ்.
  எனது மிகவும் ஸ்லோவாக
  உள்ளது. அதனால்தான்
  வேண்டுகின்றேன்.//

  நான் பயன்படுத்துவது கீமேன் சாப்ட்வேரில் இன்ஸ்கிரிப்ட் மெத்தெட் டைப்பிங்கை..

  நீங்கள் புதியவர் என்பதால் மிக எளிமையாக டைப் செய்யப் பழகுங்கள். அதற்கு தமிழ்99 விசைப் பலகைதான் சிறந்தது.. அதனையே பயன்படுத்துங்கள்..

 31. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //benzaloy said…
  பரவாயில்லையே. நாம சுத்த தமிழ்லேயே கடவுள், கடவுள்களை, டா போட்டுத்தானே கூப்பிடுகின்றோம். அவர்களை நீ என்றுதானே சொல்கின்றோம். இதிலயாவது நாம் ஓன்று..//

  அது கடவுள்களுக்கும், பக்தனுக்கும் இருக்கின்ற நெருக்கத்தை உணர்த்துகிறது.. அவனைத் தவிர வேறு யாரை நம்மால் அழைக்க முடியும்..? சொல்லுங்கள்..

 32. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //benzaloy said…
  ”புலிக்கு வாலாக நீ இல்லாவிடில் நீயொரு தமிழ்த் துரோகி என்பதாகத்தான் அர்த்தம் என்கிறார்கள் தமிழ்நாட்டில்”
  ஓஹோ, இந்த துன்பம் உங்கும் உள்ளதா///

  பின்னே.. இப்பல்லாம் தமிழன்னு சில பேர்கிட்ட சர்டிபிகேட் வாங்கறது தமிழ்நாட்டுல ரொம்ப முக்கியம்.. ரேஷன் கார்டு, தேர்தல் கமிஷனின் வாக்காளர் அடையாள அட்டையெல்லாம் வேஸ்ட்டு..

 33. benzaloy Says:

  நன்றி ………..இந்த 99 எங்கே எப்பிடி எடுப்பது
  எப்பிடி இன்ஸ்டால் செய்வது >>>

  இவற்றையும் சொல்லித்தந்தால் பெரும் உதவியாக
  இருக்குமே ஐயா

 34. benzaloy Says:

  ”நெருக்கத்தை உணர்த்துகிறது”

  தங்களை

 35. benzaloy Says:

  உண்மைத் தமிழன் … விளங்குது
  சில பேர்கிட்ட … உஹும் மாட்டேங்குது
  சர்டிபிகேட் … ஏன், எதற்கு
  ரேஷன் கார்டு எக்எற்றா … துப்பரவா இல்லே
  ஏதோ பயங்கரமான விஷயம் போல இருக்கு, ஆஹவே அடக்கமா ரகஸ்யமா ஈமேய்ல் ல சரக்கை
  அனுப்னீங்கன்னா நம்ட உடம்புக்கு வாசிங்கோ

 36. benzaloy Says:

  அழகி டொற் கொம் என்று ஓர் தமிழ் ரைப்பிங் ஸிஸ்ரம் உள்ளதே …
  கூகிள் ன் இன்டிக் போன்றது …
  தங்களது அபிப்பிராயம் ப்ளீஸ்

 37. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //benzaloy said…
  நன்றி. இந்த 99 எங்கே எப்பிடி எடுப்பது
  எப்பிடி இன்ஸ்டால் செய்வது >>>
  இவற்றையும் சொல்லித் தந்தால் பெரும் உதவியாக இருக்குமே ஐயா.//

  தாமதத்திற்கு மன்னிக்கவும் பென்ஸ் ஸார்..

  "http://software.nhm.in/" – இந்தத் தளத்திற்குச் செல்லுங்கள். இங்கே Products என்கிற தலைப்பின் கீழ் NHM Writer என்கிற சாப்ட்வேர் உள்ளது. அதனை உங்களது கணினியில் இன்ஸ்டால் செய்யுங்கள்.

  மானிட்டரின் வலது பக்கம், கீழ்ப்புறத்தில் அதனுடைய சிம்பல் (ஆலயமணி மாதிரி இருக்கும்) தெரியும். அதன் மேல் மெளஸை வைத்து ரைட் கிளிக் செய்தீர்களீனால் ஒரு தகவல்கள் விரியும். அதில் செட்டிங்க்ஸ் என்பதனை கிளிக்கிடுங்கள்.

  பின்பு அதனுள் பார்த்தீர்களானால் முதல் இடத்திலேயே தமிழ்99 unicode என்கிற கீபோர்ட் தென்படும். அதனுடைய குறியீட்டு எண் alt+1 என்பதாகும்.

  இதன் பின்பு நீங்கள் வோர்டு டாக்குமெண்ட் பைலை ஓப்பன செய்யுங்கள். பின்பு alt+1 கீகளை அழுத்தீனார்களென்றால் அந்த ஆலயமணி ஒளிரும். பின்பு நீங்கள் டைப் செய்யத் துவங்கினால் தமிழில் எழுத்துக்கள் விழுகும்.

  இதற்கு முன்பு எந்த கீயை அழுத்தினால் எந்த தமிழ் எழுத்து வரும் என்பதனை தெரிந்து கொள்வதற்காக அந்த ஆலயமணி மீது மெளஸை வைத்து ரைட் கிளிக் செய்தால் வருகின்ற செய்திகளில் onscreen keyboard என்கிற செய்தியை கிளிக் செய்தால் கீபோர்டு விரியும்.

  இதனை உடனடியாக பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின் அதனைப் பார்த்தபடியே தினந்தோறும் ஒரு பக்கத்திற்கு டைப் செய்து பழகினீர்கள் என்றால் விரைவாக ஒரு மாதத்தில் நீங்கள் என் அளவுக்கு ஸ்பீடாக டைப் செய்ய முடியும்.

  அ, ஆ, இ, ஈ என்று ஆரம்பிக்காதீர்கள். ஏதாவது தமிழ் பத்திரிகையின் ஒரு பக்கத்தைப் பார்த்து அப்படியே அதை டைப் செய்து பழகுங்கள். அதுதான் நல்லது..

  வாழ்க வளமுடன்..

 38. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //benzaloy said…
  ”நெருக்கத்தை உணர்த்துகிறது” தங்களை..//

  பென்ஸ் உங்களின் கவித்துவமான வார்த்தைகள் என்னைப் பெரிதும் கவர்கின்றன..

 39. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //benzaloy said…
  உண்மைத் தமிழன்.
  விளங்குது சில பேர்கிட்ட…
  உஹும் மாட்டேங்குது..
  சர்டிபிகேட். ஏன், எதற்கு? ரேஷன் கார்டு எக்எற்றா. துப்பரவா இல்லே..
  ஏதோ பயங்கரமான விஷயம் போல இருக்கு, ஆஹவே அடக்கமா ரகஸ்யமா ஈமேய்ல்ல சரக்கை
  அனுப்னீங்கன்னா நம்ட உடம்புக்கு வாசிங்கோ//

  சுத்தமா புரியல பென்ஸ்..

  நான் தமிழன்தான்னு அப்படின்னு நாலு பேர் சொல்றதுக்கு பேரு சர்டிபிகேட்..

  அதுக்கு அவுக வைச்சிருக்கிற அளவுகோல் புலிகளை ஆதரிக்கணும். அவ்ளோதான்..

 40. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //benzaloy said…
  அழகி டொற் கொம் என்று ஓர் தமிழ் ரைப்பிங் ஸிஸ்ரம் உள்ளதே. கூகிள் ன் இன்டிக் போன்றது. தங்களது அபிப்பிராயம் ப்ளீஸ்..//

  அதைவிட நான் சொல்லியிருக்கும் NHM Writer மிக நல்லது.. பயன்படுத்திப் பாருங்கள்.. தெரியும்..

 41. அதிரை ஜமால் Says:

  \\உண்மைத் தமிழன்(15270788164745573644) said…

  ///அதிரை ஜமால் said…
  \\சுயநலத்தனமான அரசியல்வியாதிகள்..\\
  உப்பு – salt///

  ஜமால், உப்பு அதிகமாக இருந்தாலும் பிரச்சினைதான்.. இல்லாமல் இருந்தாலும் பிரச்சினைதான்..

  உப்பு போட்டுச் சாப்பிடாதவர்களிடம் என்ன எதிர்பார்க்க முடியும்..?\\

  உப்பு = salt

  சுயநலத்தனமான=அரசியல்வியாதிகள்

  இது இரண்டும் ஒரே அர்த்தம் என்பதையே அப்படி சொன்னேன்.

 42. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///அதிரை ஜமால் said…
  உப்பு = salt
  சுயநலத்தனமான=அரசியல்வியாதிகள்
  இது இரண்டும் ஒரே அர்த்தம் என்பதையே அப்படி சொன்னேன்.///

  ஆஹா.. எப்படியெல்லாம் யோசிக்குறாங்க பாருங்கப்பா..

  ஜமால் அண்ணே.. ஜமாய்ங்க..

 43. Anonymous Says:

  indians r not doing any terror activities in home & other countries. first we should tight our internal security with arms & forcefull law.the persons inside our country who are supporting them by any means should be punished severly without any delay.if this happens then u cannot see any cross boder terrorsim.

 44. Anonymous Says:

  it not matter of kashmir or gujrath for terrosim.if other religeous persons think in same way that what happened to india due to mugals invasion then then u can imagine what will happen. so dont mistake with falls info. be true indian.

 45. Anonymous Says:

  indians r not doing any terror activities in home & other countries. first we should tight our internal security with arms & forcefull law.the persons inside our country who are supporting them by any means should be punished severly without any delay.if this happens then u cannot see any cross boder terrorsim.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: