ஈழத்தில் நடந்தது என்ன? இந்திய ராணுவ அதிகாரியின் வாக்குமூலம்

நவம்பர் 24, 2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நண்பர் கொழுவி அனுப்பியுள்ள அடுத்த கட்டுரைத் தொகுப்பு இது.

இந்திய அமைதிக் காப்புப் படையில் மேஜர் ஜெனரலாகப் பணியாற்றிய கர்கிரத்சிங் அவர்கள் எழுதிய புத்தகத்தின் தமிழாக்கத்தைத் தொகுத்துள்ளார் கொழுவி.

படிக்க சில இடங்களில் சுவாரஸ்யமாகவும், பலவிடங்களில் நம்ப முடியாத அதிர்ச்சியையும் தருகிறது.. இது போன்ற வரலாற்று ஆவணங்கள் நமக்கு என்றென்றைக்கும் தேவை.. அதிலேயும் ஈழத்து விஷயத்தில் தொடர்ந்து வெளிவரும் பூதங்களையெல்லாம் பார்த்தால் ஏன்? எதற்கு? எப்படி? என்கிற கேள்வி நம் மனதில் தொடர்ந்து கேட்டுக் கொண்டேயிருக்கிறது. பதில் கிடைக்காத இந்தக் கேள்விக்கு பதில் சொல்லப் போவது யார் என்றுதான் தெரியவில்லை. தொடர்ந்து படியுங்கள்..

இனி அண்ணன் கொழுவி பேசுகிறார்.

“தொடர்ந்தும் புலிகள் சொன்னார்கள்; ஈழத்தமிழர்கள் சொன்னார்கள் என நாம் வெளியிடும் ஆவணங்கள் ஒரு பக்கச் சார்பானவையாக இருப்பதாக நினைக்கிறோம். ஆதலால் ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து கௌரவித்து மாற்றுக் குரல்களையும் அனுமதிக்கும் நோக்கில் – இம்முறை IPKF இல் பணிபுரிந்த ஒரு அதிகாரியின் வாக்குமூலத்தை தருகிறோம்.

”ஒரு இந்திய இராணுவத் தளபதியின் அரசியல் வாக்குமூலம்” எனும் தலைப்பில் இதனைத் தனிப்பதிவாக இட்டு ஜனநாயகமும் மாற்றுப் பார்வைகளும் தளைத்தோங்க ஆவன செய்யவும்.

“இலங்கையில் தலையீடு” – “மீளச் சொல்லப்பட்டுள்ள இந்திய சமாதானப் படையின் அனுபவங்கள்” என்ற இந்த நூல் இந்தியப் படையின் தளபதி மேஜர்- ஜெனரல் கர்கிரத்சிங் அவர்களால் எழுதப்பட்டுள்ளது.

இலங்கையில் நிலைகொண்டிருந்த இந்திய சமாதானப் படையின் முதற் கட்டளைத் தளபதியாக இவரே நியமிக்கப்பட்டிருந்தார்.

72 வயதில் இன்றும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் மேஜர் ஜெனரல் கர்கிரத் சிங்கின் இந்த நூல் டிசம்பர் 2006 இல் வெளியிடப்பட்டுள்ளது.

தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் – இந்தியத் தூதர் ஜே.என்.டிக்சிற் – மேஜர் ஜெனரல் கர்கிரத்சிங்; ஆகியோர் பலாலிப் படைத்தளத்தில் – ஒரு சந்திப்பின் பின் – ஒன்றாக நின்று எடுத்த நிழல்படம் நூலின் முன் அட்டையை அலங்கரித்துள்ளது.

இந்த நூல் 188 பக்கங்களைக் கொண்டிருக்கின்றது. எனினும் முதல் 137 பக்கங்களுடன் நூல் நிறைவடைகின்றது. ஏனைய பக்கங்கள் ‘இலஸ்ரேட்டட் வீக்லி’ என்ற இந்தியச் சஞ்சிகைக்கு நூலாசிரியர் 1991-ல் வழங்கிய செவ்வி மற்றும் இந்தியத் தளபதிகளின் கடிதங்கள் – கட்டளைகள்-தகவல், அட்டவணைகளுடன் நிறைக்கப்பட்டுள்ளது.

நூலாசிரியர் கூறும் தகவல்கள்

ராஜீவ் காந்தியின் அரசாங்கத்தினால் ஆரம்பம் முதலே இந்திய சமாதானப்படை குழப்பகரமான நோக்கங்களுடன்- பிழையாக வழி நடத்தப்பட்டன என்று நூலாசிரியர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தக் குழப்பங்களை, பிழைகளைச் சரி செய்ய தான் முயன்று தோற்றதாக நூலாசிரியர் சம்பவங்களுடன் கூறுகின்றார்.

தனி ஈழம் என்ற தமிழரின் அரசியல் அபிலாசையை ஈடேற்றக்கூடிய ஒரே இயக்கம் புலிகள் இயக்கம்தான் என்பது தமிழ் மக்களின் ஏகோபித்த கருத்தாக இருந்ததை, தான் கண்டுணர்ந்ததாக நூலாசிரியர் பிரகடனப்படுத்துகின்றார்.

ஆனால் தமிழ் மக்களிடமிருந்து புலிகள் இயக்கத்தை அந்நியப்படுத்துவதுதான் இந்திய சமாதானப்படையின் பிரதான குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று டிக்சிற் கருதினார். இது நடைபெறாதென்று தனக்கு நன்றாகத் தெரிந்திருந்தது என்று நூலாசிரியர் கூறியுள்ளார்.

புலிகளின் ஆயுதக் கையளிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த அதேநேரத்தில் பிரதம மந்திரியின் (ராஜீவ்காந்தி) அலுவலகத்தின் அறிவுறுத்தலின் பேரில் செயலிழந்து போன மற்றைய இயக்கங்களுக்கு றோ அமைப்பினர் புதிய ஆயுதங்களை வழங்கிக் கொண்டிருந்தனர் என்று நூலாசிரியர் அம்பலப்படுத்தியுள்ளார்.

இந்த ஆயுத வழங்கலைப் பற்றி டிக்சிற் உட்பட தேவையான அனைவருக்கும் தான் அறிவித்ததாக அவர் கூறியுள்ளார். இதை நிரூபிக்கும் வீடியோச் சுருள் ஆதாரத்தையும் தான் டிக்சிற்றிற்குக் கையளித்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்த வீடியோச் சுருள் புலிகளால் தனக்குத் தரப்பட்டது என்றும் கூறியுள்ளார். சமாதான காலத்தில் பேச்சிற்கு அழைத்துவிட்டு அங்கே தலைவர் பிரபாகரனைக் கொல்ல டிக்சிற் தீட்டிய சதித் திட்டமொன்றையும் நூலாசிரியர் அம்பலப்படுத்தியுள்ளார்.

செப்ரெம்பர் 14 ஆம் திகதி (1987) தொலைபேசியூடாக டிக்சிற் தன்னை அழைத்து ‘பலாலி படைத் தளத்திற்குச் சந்திப்பிற்காக பிரபாகரன் வரும்போது அவரைக் கைது செய்யவும் அல்லது சுட்டுக் கொல்லவும்” என்றார். இந்தச் செய்தியைத் தனது மேலதிகாரியான லெப். ஜெனரல் திபேந்தர் சிங்கிடம் நூலாசிரியர் கூறினார். இதற்கு திபேந்தர்சிங் கூறினார் ‘வெள்ளைக் கொடியின் கீழ் ஒரு சந்திப்பிற்காக பிரபாகரன் வரும்போது அவரைச் சுட்டுக்கொல்ல முடியாது” என்று டிக்சிற்றுக்கு அறிவிக்கச் சொன்னார். அதை டிக்சிற்றுக்கு அறிவித்தேன். அதற்கு டிக்சிற் சொன்னார் ‘ராஜீவ்காந்திதான் இந்த அறிவுறுத்தலை எனக்குச் சொன்னார். ஆனால் அதை நிறைவேற்ற இந்தியப்படை தயங்குகின்றது. இதற்கு இந்திய சமாதானப்படையின் கட்டளை அதிகாரி என்ற வகையில் நீர்தான் பொறுப்பு” என்று தன்னைக் குற்றம் சாட்டியதாக நூலாசிரியர் தகவல் தெரிவிக்கின்றார்.

டிக்சிற்றுடன் தான் நடந்துகொண்ட விதம் தொடர்பாக அடுத்தநாள் ஜெனரல் சுந்தர்ஜி தனது கோபத்தை என்னிடம் காட்டினார் என்று நூலாசிரியர் கூறியுள்ளார்.

திலீபனின் ஈகச்சாவு

திலீபனைச் சாகவிடக் கூடாது என்று திபேந்தர்சிங்கிற்கும் – டிக்சிற்றுக்கும் வலியுறுத்திச் சொன்னதாக நூலாசிரியர் எழுதியுள்ளார். அப்படி நடந்தால் அது இந்திய அமைதிப் படைக்கு எதிராகத் தமிழ் மக்களை மாற்றிவிடும் என்று எச்சரித்ததாகவும் கூறுகின்றார்.

செப்ரெம்பர் 25, திலீபனின் உயிர்பிரிவதற்கு முதல்நாள், திபேந்தர்சிங் ஒரு அறிவித்தலைத் தந்தார். தலைவர் பிரபாகரனைச் சந்திக்க டிக்சிற் விரும்புகின்றார் என்பதே செய்தி. அதைப் புலிகளிடம் சேர்ப்பிக்கச் செல்லும் போது வழியில் ஒரு மாபெரும் மக்கள் ஊர்வலம் எதிர்ப்பட்டது என்று நூலாசிரியர் விபரிக்கின்றார். ‘தீப்பந்தங்கள்- மாலைகளுடன் பெண்களும் ஆண்களும் இணைந்து நல்லூர் ஆலயம் நோக்கிச் சென்றனர். சாவின் வாசலில் நின்ற திலீபனைச் சந்திக்க அந்த மக்கள் கூட்டம் சென்றது. இந்திய எதிர்ப்பு – சிங்கள எதிர்ப்புக் கோசங்களைக் கூவியவாறு கூட்டம் நகர்ந்தது” என்று நூலாசிரியர் விபரித்துள்ளார்.

பிரபாகரன் – டிக்சிற் சந்திப்பிற்கு இரண்டு நிமிடங்கள் இருக்கும் போது திலீபன் உயிர் நீத்தார். பலாலியில் இருந்த தனது தலைமைப் பணிமனையை நோக்கி தலைவர் பிரபாகரன் வந்துகொண்டிருந்த போது திலீபன் மரணித்திருந்தார்” என்று நூலாசிரியர் தனது நினைவுகளை மீட்டுள்ளார்.
‘திலீபனின் சாவுடன் ஐ.பி.கே.எவ். மீதான நம்பிக்கையைப் புலிகள் இயக்கம் இழந்துவிட்டது” என்று நூலாசிரியர் கூறுகின்றார்.

இந்தச் சம்பவத்திற்கு முன் இந்திய அமைதிப்படையையும் றோவையும் புலிகள் சரியாகவே இனம் பிரித்து அறிந்து வைத்திருந்தனர். றோவின் சதிவேலைகளைப் புலிகள் ஆதாரங்களுடன் தம்மிடம் சமர்ப்பித்தனர் என்றும் நூலாசிரியர் கூறியுள்ளார்.

படகுத் துயரம்

தளபதிகள் புலேந்திரன் – குமரப்பா உட்பட 12 புலிகளின் இழப்பை நூலாசிரியர் படகுத்துயரம் என்ற மகுடத்தில் எழுதியுள்ளார்.

கடலில் 17 புலிகள் சிங்களப் படையால் கைது செய்யப்பட்டார்கள் என்ற செய்தி புலிகளிடமிருந்து கிடைத்த உடனேயே அவர்கள் கொழும்பிற்கு எடுத்துச் செல்வதைத் தடுப்பதற்காக பிரிகேடியர் பெர்னாண்டசை அனுப்பினேன் என்று நூலாசிரியர் தெரிவித்துள்ளார்.

தலைவர் பிரபாகரனைப் பல தடவைகள் தான் சந்தித்திருந்ததால் தலைவரின் மனவோட்டத்தைத் தான் நன்றாக விளங்கிக் கொண்டதாக நூலாசிரியர் குறிப்பிடுகின்றார். அந்தப் 17 புலிகளையும் இந்திய அமைதிப் படை பாதுகாக்கத் தவறினால் பிரபாகரனின் எதிர்வினை எப்படி இருக்கும் என்று தான் நன்றாக அறிந்து வைத்திருந்ததாகவும் அவர் எழுதியுள்ளார்.

அந்தப் 17 புலிவீரர்களும் பலாலி வான்தளத்தின் அறையொன்றில் வைக்கப்பட்டிருந்தனர். அது இந்திய அமைதிப்படையின் கட்டுப்பாட்டில் இருந்தது. அந்த இடத்தைச் சூழ 60 சிங்களப் படையினர் சிங்களத் தளபதிகளால், நிலைகொள்ள வைக்கப்பட்டனர். அந்த 60 சிங்களச் சிப்பாய்களையும் சுற்றி ஒரு பலமான பாதுகாப்பு வேலியைப் போடுமாறு ஒரு இயந்திரப் படைக் கொம்பனிக்கும் – பரசூட் படையணிக்கும் உத்தரவிட்டேன் என்று நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

17 புலிகளையும் கொழும்புக்குக் கொண்டுசெல்ல சிங்களப்படை முயற்சித்தால் சயனைட் உண்டு புலிகள் சாகத் தயாராக இருப்பதாகத் தனது மேலதிகாரியான லெப்.ஜெனரல் திபேந்தர்சிங்கிற்கு அறிவித்ததாக நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

ஒக்டோபர் 05 ஆம் திகதி (1987) பிற்பகல் 2.15 மணியளவில் தனக்கு ஒரு அவசரச் செய்தி அனுப்பப்பட்டதாக நூலாசிரியர் குறிப்பிடுகின்றார். (இந்திய) ‘இராணுவத் தளபதியிடமிருந்து கர்கிரத்சிங்கிற்கு” என்று அந்தச் செய்தி இருந்தது. அந்தச் செய்தியில்……….. “பலாலிப் படைத் தளத்தின் சிங்களத் தளபதி பிரிகேடியர் ஜெயரட்ணா, தான் விரும்பியதைச் செய்யட்டும். நீர் ஏன் சிறிலங்காவின் அரசியல் அமைப்புச் சட்டத்தில் தலையிடுகின்றீர்…. சிறிலங்காவின் விமானங்களை நீர் தடுக்க வேண்டாம்…” என்றிருந்தது. என்று நூலாசிரியர் குறிப்பிடுகின்றார்.

இந்தச் செய்தியைத் தொடர்ந்து ஐ.பி.கே.எவ்.இன் பாதுகாப்பை நீக்கும்படி நான் உத்தரவிட்டேன். இந்திய அமைதிப் படையினர் விலகிக்கொண்ட உடனேயே சிங்களப் படைகள் புலி வீரர்கள் வைக்கப்பட்டிருந்த அறையினுள் பாய்ந்தனர். புலிகள் சயனைட்டுக்களை உண்டனர்.

புலேந்திரனும் – குமரப்பாவும் ஆளுக்கு இரண்டு சயனைட்டுக்களை உண்டு உயிர் நீத்ததாகத் தனது மருத்துவர்கள் அறிக்கை தந்ததாக நூலாசிரியர் தெரிவித்துள்ளார்.

‘(சிங்கள) எதிரிக்கு அச்சமூட்டும் ஒரு தளபதியாக புலேந்திரன் இருந்துள்ளார்” என்று கூறும் நூலாசிரியர், அவரை உயிருடன் தம்மிடம் ஒப்படைக்கும்படி சிங்கள இராணுவத் தளபதி ஜெனரல் ரணதுங்கா தன்னிடம் கேட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

திருமலை நகரில் இன மோதல் நடந்த இடங்களைத் தான் நடந்து சுற்றிப் பார்த்த போது தன்னுடன் புலேந்திரனும் வந்தார் என்று நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

தளபதி குமரப்பா பற்றி நூலாசிரியர் குறிப்பிடும்போது ‘யாழ்ப்பாணத்தில் தான் சந்தித்த முதல் புலித்தளபதி குமரப்பாதான்” என்று எழுதியுள்ளார்.

தளபதிகள் புலேந்திரன், குமரப்பா ஆட்களைப் பாதுகாக்க தான் முயன்றதாக நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இவர்களைக் கைவிட்டது டிக்சிற்தான் என்றும் கூறியுள்ளார்.

ஒக்டோபர் 08 ஆம் திகதி 1987 ஜெனரல் சுந்தர்ஜி பலாலி வந்து புலிகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கும்படி தனக்கு பணிப்புரை வழங்கினார். அத்துடன் “டிக்சிற்றுடன் நீர் ஒத்துழைக்கின்றீர் இல்லை என்பது தெரியும். அவர் தனது வேலைகளைத்தான் செய்கின்றார். அவருடைய அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று தனக்கு அறிவுரை வழங்கினார் என்று நூலாசிரியர் எழுதியுள்ளார்.

அத்துடன் சில பிங்கலர் தாள்களைத் தன்னிடம் தந்து வாசிக்கும்படி கட்டளையிட்டார். புலிகளுக்கு எதிரான போர் தொடர்பான ஜெனரல் சுந்தர்ஜியின் சிபார்சுகளைப் பிரதமர் ராஜீவ்காந்தி ஏற்றுக்கொண்டுவிட்டார் என்பது அந்தப் பிங்கலர் தாள்களைக் கண்டதும் தனக்குப் புரிந்து விட்டதாக நூலாசிரியர் எழுதியுள்ளார்.

‘இன்றிரவே (08 ஆம் திகதி) தாக்கு” என்று லெப். ஜெனரல் திபேந்தர்சிங்கின் முன்னிலையில் ஜெனரல் சுந்தர்ஜி தனக்கு உத்தரவிட்டதாக நூலாசிரியர் குறிப்பிடுகின்றார்.

உத்தரவை நடைமுறைப்படுத்த கிளிநொச்சி – வெள்ளாங்குளம் – முழங்காவில் போன்ற இடங்களில் புலிகளின் முகாம்களைத் தாக்குமாறு தான் படையினரைப் பணித்ததாக நூலாசிரியர் எழுதியுள்ளார். இந்தத் தாக்குதல்கள் 08 ஆம், 09 ஆம் திகதிகளில் நடந்தது.

ஒக்டோபர் 10 ஆம் திகதி இந்திய புலிகள் போர் தொடங்கியது. பல முனைகளைத் திறந்து யாழ். நகரைக் கைப்பற்ற நான் படைநகர்த்தினேன்” என்கின்றார்.

தான் நடாத்திய சண்டைகளை நூலாசிரியர் வரைபடங்களின் உதவியுடன் விளக்க முயன்றுள்ளார்.

ஐ. ஆனைக்கோட்டை சமர்ஐஐ. யாழ் – பழைய பூங்காவைக் கைப்பற்றும் சண்டை ஐஐஐ. சுதுமலை நடவடிக்கை ஐஏ. உரும்பிராய் சந்தியைக் கைப்பற்றும் சண்டைஏ. கோப்பாய் சமர்ஏஐ. கந்தரோடைச் சமர் ஏஐஐ. மருதனார்மடம் சமர்.. இவ்வாறாகச் சண்டைகளை இனங் காட்டி அந்தச் சண்டைகளின் தன்மைகள் பற்றிச் சுருக்கமாக விபரம் தந்துள்ளார்.

இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின்னர் சிறிலங்கா சனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தனாவுக்கு எதிராக ஒரு இராணுவச் சதிமுயற்சி நடைபெறலாம் என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையில் கொழும்பிலுள்ள தாஜ் தங்கு விடுதியில் 100 சிறப்புக் கொமாண்டோப் படையினர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும் நூலாசிரியர் தகவல் வெளியிட்டுள்ளார். சண்டை தொடங்கியதும் இந்தக் கொமாண்டோப் படையினர் பலாலிக்கு அழைக்கப்பட்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

(பெப்ரவரி 1988) இந்திய – புலிகள் போர் தொடங்கி 4 மாதங்களின் பின்னர் லெப். ஜெனரல் திபேந்தர் சிங்கின் இடத்திற்கு லெப். ஜெனரல் கல்கட் நியமிக்கப்பட்டார் என்றும் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

லெப். ஜெனரல் திபேந்தர் சிங் ஓய்வுபெற்றுச் செல்ல சில வாரங்களுக்கு முன்னர் (சனவரி 1988) நூலாசிரியரான மேஜர் ஜெனரல் கர்கிரத்சிங்கும் பணி மாற்றம் செய்யப்பட்டு இந்தியா சென்றார்.

பணிமாற்றத்திற்கான காரணம் தனக்குத் தெரியாதென்று கூறும் நூலாசிரியர் டிக்சிற்றுடனான முரண்பாடு காரணமாக இருக்கலாம். பிரபாகரனைக் கைது செய் அல்லது சுட்டுக்கொல் என்ற டிக்சிற்றின் உத்தரவைத் தான் மறுத்ததாக இருக்கலாம் என்று கூறியுள்ளார்.

1155 இந்தியப்படையினர் புலிகளுடனான போரில் கொல்லப்பட்டனர் என்று நூலாசிரியர் விபரம் தந்துள்ளார்.

03 தொடக்கம் 07 நாட்களுக்கிடையில் படை நடவடிக்கையை முடித்து – புலிகளை அழிக்க முடியும் என்று தான் சொன்னதாக வெளியாகியிருந்த செய்திகளை நூலாசிரியர் மறுத்துள்ளார்.

இந்தக் காலக்கெடுவை ராஜிவ் காந்தியிடம் சொன்னவர் ஜெனரல் சுந்தர்ஜிதான் என்றும் நூலாசிரியர் குறிப்பிட்டள்ளார்.

புலிகளுடன் சண்டை தொடங்கினால் அந்தப் போர் பத்து வருடங்களுக்கும் கூடுதலான காலம் நடக்கும் என்று மிசோராம் – நாகலாந்து உதாரணங்களைக் குறிப்பிட்டு லெப். ஜெனரல் றொட்டிற்கோவிற்கு தான் சொன்னதாக நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

றொட்றிற்கோ அதை நம்பவில்லை ‘நகர்ப்புற போர்முறையில்தான் புலிகள் பயிற்றப்பட்டிருக்கின்றார்கள்” என்றும் காரணம் சொன்னார் என எழுதியுள்ளார்.

சமாதானக் காலத்தில் தலைவர் பிரபாகரனைக் குறிவைத்தது போல போர்க்காலத்திலும் தலைவரைக் குறிவைத்து இந்தியப்படை நடாத்திய மூன்று சம்பவங்களை நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

முதலாவது சம்பவம் போர் தொடங்கிய மறுநாள் நிகழ்ந்தது அந்தச் சம்பவத்தை நூலாசிரியர் இவ்வாறு எழுதியுள்ளார்…..

“பலாலியில் இருந்த சிங்கள இராணுவத் தலைமைப் பீடத்திலிருந்து நான் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் ஒன்றைப் பெற்றேன். அதாவது, கொக்குவில் பகுதியில் இருந்து தலைவர் பிரபாகரன் அவர்கள் போரை நெறிப்படுத்திக்கொண்டிருந்தார் என்பதே அந்தத் தகவல். இந்தத் தகவலை லெப். ஜெனரல் திபேந்தர் சிங்குடன் விரிவாகக் கலந்தாலோசித்தேன். தலைவரின் இருப்பிடத்தைத் தாக்கி அழிப்பதற்கான அனுமதியையும்-அதற்குத் தேவையான மேலதிக உதவிகளையும் திபேந்தர்சிங் வழங்கினார். எனது கட்டளைப் பீடத்திலிருந்த திபேந்தர்சிங் அங்கிருந்து மேஜர். ஜெனரல் கல்கட்டிடம் ஒரு அறிவுறுத்தலை விடுத்தார். அந்தத் தாக்குதலுக்கான மேலதிக துருப்புக்களை (இந்திய) இராணுவத் தலைமைப் பீடத்திலிருந்து கேட்டுப்பெறுமாறு அறிவுறுத்தினார். இந்தத் தாக்குதல் தமது படையினரின் ஒருங்கிணைப்பின்மையாலும் – புலிகளின் நேர்த்தியான எதிர்த் தாக்குதல்களாலும் தோல்வியடைந்தது” என்று நூலாசிரியர் எழுதியுள்ளார்.

இரண்டாவது சம்பவம் டிசம்பர் 1987 இல் நடந்தது.

வடமராட்சியிலுள்ள ஒரு வைத்தியசாலை வளாகத்தில் நின்றபடி தலைவர் பிரபாகரன் அவர்கள் கடலை நோக்கிப் பார்த்துக்கொண்டிருந்ததாக ‘றோ’ அமைப்பினர் ஒரு தகவலை வழங்கியிருந்தனர். தாக்குதலுக்காகப் படையினர் அனுப்பப்பட்டனர்.

இந்த நடவடிக்கையைக் கட்டளை அறையிலிருந்து தான் மேற்பார்வை செய்து கொண்டிருந்ததாக நூலாசிரியர் எழுதியுள்ளார். “ஆனால் நடு இரவு தாண்டியும் கடல்வழி தரையிறக்கத்திற்கான கடற்கலம் வந்து சேரவில்லை. விடியத் தொடங்கியதால் துருப்புக்களைப் பின்வாங்கச் சொல்லிக் கட்டளையிட்டேன். அப்போது நாங்கள் எங்கே தரையிறங்க இருந்தோமோ! அங்கிருந்து புலிகள் கடுமையாகத் தாக்கினர்” என்று நூலசிரியர் விபரித்துள்ளார்.

கடலிலிருந்து பீரங்கிச் சூட்டாதரவு செறிவாகக் கிடைத்துக்கொண்டிருந்தாலும் எங்களால் அந்த இடத்தைத் தக்கவைக்க முடியவில்லை என்று களத்தில் தலைமை வகித்துக்கொண்டிருந்த கேணல் சொன்னதாக நூலாசிரியர் பதிவு செய்துள்ளார்.

அடுத்த சம்பவம் வித்தியாசமானது- தமது உளவுத்துறையினரின் தகவல் சேகரிப்புக்களையும்- தமது படைத்தளபதிகளையும் கேலி செய்யும் வகையில் அமைந்துள்ளது.

அந்தச் சம்பவத்தை நூலாசிரியர் இவ்வாறு எழுதியுள்ளார். “மட்டக்களப்பில் ஒரு புலி பிடிபட்டிருக்குது. அவரை விசாரித்த கொமாண்டர் தான் பிரபாகரனின் இருப்பிடத்தைக் கண்டறிந்துவிட்டேன், அவரைப் பிடித்த மாதிரித்தான் என்பது போல லெப். ஜெனரல் றொட்றிக்கோவுக்கு (மட்டு. ஐ.பி.கே.எவ். தளபதி) அறிவிக்க, இவரும் நம்பிவிட்டார். பிரபாகரனைப் பிடித்து விட்டதாகத் தான் அறிவிக்கலாம் என்று லெப். ஜெனரல் நம்பிவிட்டார். அதனால் என்னையும் கூட்டிக்கொண்டு மட்டக்களப்புக்குப் பறந்தார். அங்கே சென்று பார்த்த பிறகுதான் உண்மை தெரிந்தது பிரபாகரனைப் பற்றி எதுவுமே தெரியாத ஒரு அப்பாவித் தமிழன்தான் பிடிபட்டிருந்தான் என்று தெரிந்தது” என்று நகைச்சுவையாக எழுதியிருந்தார்.

முடிவுரை

முறுக்கு மீசை – வெங்கல ஓசைச்சிரிப்புடன் நூலாசிரியரான மேஜர் – ஜெனரல் கர்கிரத்சிங் புலிகளுக்கு அறிமுகமாகியிருந்தார். இந்திய சமாதானப் படைத் தளபதிகள் சிலர் எழுதி வெளியிட்ட நூல்களுடன் ஒப்பிடுகையில் கர்கிரத் சிங்கின் இந்த நூல் சற்று வேறுபடுகின்றது.

மேஜர் ஜெனரல் கர்கிரத் சிங்கின் கருத்துக்களில் வெளிப்படைத்தன்மை காணப்படுகின்றது. அவரின் கணிப்பீடுகளில் ஒரு நேர்மை வெளிப்படுத்தப்படுகின்றது. பல உண்மைகளையும் அவர் அம்பலமாக்கியுள்ளார். புலிகளுக்கும் மக்களுக்குமான பிணைப்பை அவர் சரியாக இனங்கண்டு நூலில் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்திய சமாதானப் படைத் தளபதியாக இங்கே அவர் பணியாற்றிய காலம் குறுகியது. சமாதான காலத்தில் மூன்று மாதமும் – போர்க்களத்தில் மூன்று மாதமும் என மொத்தம் ஆறு மாத காலம் மட்டுமே இங்கே பணியாற்றியிருந்தார். 1988 ஜனவரியில் பணிமாற்றம் செய்யப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார்.

டிக்சிற்றுடனான முரண்பாடும் – அவரது அறிவுறுத்தல்களை ஏற்க மறுத்ததும்தான் தனது பணிமாற்றத்திற்குப் பிரதான காரணம் என்றும் நூலாசிரியர் கூறியுள்ளார்.

டிக்சிற்றுடன் உடன்பட்டு வேலை செய்யத் தவறுவது பற்றி ஜெனரல் சுந்தர்ஜி தன்னைக் கடிந்து கொண்டதாகவும் நூலாசிரியர் எழுதியுள்ளார். பிரதமர் ராஜிவ் காந்தியின் குரலாகத் தான் ஒலிப்பதாக டிக்சிற் தன்னிடம் கூறியதாகவும் நூலாசிரியர் எழுதியுள்ளார்.

இந்திய சமாதானப்படைக்கு ஒரு உத்தரவு – இந்திய புலனாய்வுத்துறை றோவுக்கு இன்னொரு உத்தரவு என்று குழம்பி எழுதும் நூலாசிரியர், அரசியலில் – இராணுவ ரீதியில் பெரும் குழப்பம் இந்தியத் தரப்பில் இருந்ததாகவும் எழுதியுள்ளார்.

நூலாசிரியரின் குழப்பம் பற்றி இங்கே அதிகம் ஆய்வு செய்வதற்கு எதுவுமில்லை.

நூலாசிரியர் கூறுவதுபோல அவை ஒரு குழப்பமான செயற்பாடு அல்ல. அவை ஒரு நாடகத்தின் பல்வேறு காட்சிகள்.

இந்திய அரசிற்குப் பெருந் தோல்வியாக முடிந்த அந்த நாடகம் பற்றிய விளக்கங்கள் இங்கே தேவையில்லை.

அரசியல் கணிப்பீடுகளில் நேர்மையும் – வெளிப்படைத்தன்மையும் காட்டிய நூலாசிரியர் தான் நடாத்திய போரில் தமிழ்மக்கள் அடைந்த கொடுமைகள் – அழிவுகள் பற்றிய விடயங்களில் நேர்மையையும் கடைப்பிடிக்கவில்லை. வெளிப்படைத் தன்மையையும் கைக்கொள்ளவில்லை. அவற்றை ஒட்டுமொத்தமாகவே இருட்டடிப்புச் செய்துள்ளார். அந்த வகையில் தனது மனச்சாட்சிக்கு விரோதமாக நடந்துள்ளார்.

நூலாசிரியர் நடாத்திய மூன்று மாதப் போர் என்பது யாழ் நகரை ஆக்கிரமிக்கும் நோக்குடன் மும்முனையில் நடாத்தப்பட்ட ஒரு பாரிய மரபுச்சமர்.

இந்த மூன்று மாதப் போர்க்காலத்தில் யாழ் குடாநாட்டில் மட்டும் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை மூவாயிரத்திற்கும் மேல்.

பிரம்படிப் படுகொலை – கொக்குவில் பாடசாலைப் படுகொலை – யாழ் வைத்தியசாலைப் படுகொலை…. என்பன அவற்றில் முக்கியமானவை.

மக்களின் வாழிடங்கள் மீது ஆட்டிலறிகள் – டாங்கிகளால் சுட்டு – மக்களைக் கொன்றும் – அகதிகளாக்கியும் – பாலியல் வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டும் யாழ் நகரை ஆக்கிரமித்த சாதனையை அவர் எழுதவில்லை. மாறாக, மிக உயர்ந்த கட்டுப்பாடு – ஒழுக்கத்தை இந்தியப் படையினர் கடைப்பிடித்தனர். தமிழ் மக்களிடமிருந்து நன்மதிப்பைப் பெற்றனர் என்று மனச்சாட்சியில்லாமல் நூலாசிரியர் பொய் கூறியுள்ளார்.

அதேபோன்று, யாழ்ப்பாண ஊடகங்களான ஈழமுரசு, முரசொலி மற்றும் புலிகளின் ஒளி – ஒலிபரப்பு நிலையங்களை அழித்த செயலைக் கர்கிரத் வெட்கமின்றி நியாயப்படுத்தியுள்ளார். அந்த ஊடகங்கள் நாள்தோறும் செய்திகளை – தகவல்களை மக்களுக்கு நேர்த்தியாக வழங்கி வந்தன. புலிகளின் இராணுவ சாதனைகளை மெச்சிப்பேசி மக்களை ஊக்கப்படுத்திக் கொண்டிருந்தன என்று தாக்குதலுக்கான காரணங்களை அவர் விளக்கியுள்ளார்.

இந்திய – புலிகள் போர் சுமார் இரண்டு வருடங்களுக்கும், இரண்டு மாதங்களுக்கும் நடந்திருந்தன. இதில் முதல் மூன்று மாதங்கள் மட்டும் நடந்த போரின் கதையைத்தான் தனது பார்வையில் நூலாசிரியர் எழுதியுள்ளார்.

இந்த மூன்று மாதகாலப் போருக்குள்ளேயே தலைவர் பிரபாகரன் மீது மூன்று – நான்கு தடவைகள் இந்தியப்படைகள் கொலைத் தாக்குதலுக்கு முயன்றன. ஆனால், போர் தீவிரமடைந்து வன்னி நிலப்பரப்பு முக்கிய போர்க்களமாகிய பின்னர், தலைவர் பிரபாகரனைக் கொலை செய்ய இந்தியப் படைகள் பல சமர்களையே நடாத்தியிருந்தன. எல்லாவற்றிலும் இந்தியப்படை தோற்கடிக்கப்பட்டிருந்தது.

இந்தியப்படையின் தோல்விக்கு இந்திய அரசின் குழப்பகரமான கொள்கை – பலரின் தலையீடு என்பன பிரதான காரணம் என்று நூலாசிரியர் கூறியுள்ளார். தனது இதே கருத்தையே தனக்குப் பதிலாக நியமிக்கப்பட்ட தளபதியான மேஜர் – ஜெனரல் சர்தேஸ் பாண்டேயும் சொல்லியுள்ளார். என்று நூலாசிரியர் நியாயம் சொல்லி – அதற்கு மற்றைய தளபதிகளையும் துணைக்கு அழைத்துள்ளார்.”

கொழுவி அண்ணை..

கர்கிரத்சிங் ராஜீவ்காந்தி பற்றியும், தீட்சித் பற்றியும், உங்களது தேசியத் தலைவர் மேதகு திரு.பிரபாகரனை கொலை செய்ய நடத்திய கூட்டு முயற்சி பற்றியும் குறிப்பிட்டுச் சொல்லி உங்கள் தரப்பு வாதமாக வைக்கும் உங்களுக்கு, இதே புத்தகத்தில் அவர் தலைமை ஏற்று நடத்திய யாழ்ப்பாணத்துப் போர் பற்றி அவர் சொல்லும் நியாயங்களை மட்டும் ஏற்க உங்களுக்கு மனம் வரவில்லை பாருங்கள்.. வாழ்க உமது தேச பக்தி..

ஆனால் நான் இவை இரண்டையுமே ஏற்றுக் கொள்கிறேன்.

இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருப்பதில் 95 சதவிகிதமாவது உண்மையாக இருக்க வாய்ப்புண்டு என்றே நம்புகிறேன்..

74 பதில்கள் to “ஈழத்தில் நடந்தது என்ன? இந்திய ராணுவ அதிகாரியின் வாக்குமூலம்”

 1. We The People Says:

  http://www.atimes.com/ind-pak/DD13Df02.html

  இதையும் படித்துவிடுங்க! ஏன்னா தனக்கு சாதகமா உள்ளதை மட்டும் ட்ரிம் செய்து தமிழாக்கம் செய்வது நல்ல விசயம் இல்லையே! தவறுகள் இருபுறமும் இருக்க…. 🙂

 2. தமிழ் விரும்பி Says:

  இது கே.ரி.இராஜசிங்கம் எழுதியது. இவரோ இன்று ராஜபக்ஸ போடும் எலும்புத்துண்டுக்கு வாலாட்டும் ஒரு துரோக நச்சுப்பாம்பு. ஐயா, நடுத்தன்மை என்றெல்லாம் கதைக்கிறீர்களே!. கே.ரி.ஆர். தமிழர்களுக்கு எதிராக நடந்த ஒரு விமானத்தாக்குதலையோ, ஒரு ஷெல் தாக்குதலையோ கண்டித்து அரசாங்கத்துக்கு எதிராக அறிக்கை அல்லது கட்டுரை வரைந்தால் அவர் கருத்தை ஏற்றுக்கொள்ளலாம். அடிவருடிகள் கதை வேண்டாம். புலிகளை எதிர்த்து கதையுங்கள். நல்லம். அப்பாவி சனங்களை கொன்ற இலங்கை, இந்திய இராணுவ கொடூரத்தையும், கொன்றுகொண்டிருக்கிற இலங்கை இராணுவத்தின் அரச பயங்கரவாத்தையும் கண்டியுங்கள். சும்மா சும்மா புலிகளை குற்றம் சுமத்தாதீர்கள். அவர்கள் இருப்பதால்தான் கே.ரி.ஆர் போன்ற துரோகிகளுக்கு இலங்கை அரசு பிச்சை போடுகிறது. அவர்களை வைத்து இவர்கள் எல்லாம் என் பக்கம், ஆனால் பிரபாகரன் மட்டும் முரண்டு பிடிக்கிறார் என்று பிரசாரம் செய்யலாம். சரியோ பிழையோ தமிழர்களின் காவலர்கள் புலிகளே.

 3. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //We The People said…
  http://www.atimes.com/ind-pak/DD13Df02.html
  இதையும் படித்துவிடுங்க! ஏன்னா தனக்கு சாதகமா உள்ளதை மட்டும் ட்ரிம் செய்து தமிழாக்கம் செய்வது நல்ல விசயம் இல்லையே! தவறுகள் இருபுறமும் இருக்க….:)//

  ஆஹா.. ஜெய் ஸார்.. வருக.. வருக..

  நல்லதொரு விஷயத்தோட வந்திருக்கீங்க.. நன்றி.. நன்றி..

  யாராவது இதனை தமிழாக்கம் செய்து கொடுத்தால் மிக எளிதாகப் புரிந்து கொள்ளலாம்..

  நானும் கடைசி வரையிலும் படித்தேன்.. ஆனாலும் தமிழில் கிடைத்தால் இன்னமும் நலம் பயக்கும் என்று எண்ணுகிறேன்..

  இது மாதிரி ‘அல்வா’ மேட்டரோட அடிக்கடி வாங்க ஜெய்..

 4. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  கொழுவியாரே..

  கொண்டோடியும் நீங்கதானாமே..? சொல்ல வேண்டாமா..

  நான் ரெண்டு பேரும் வேற.. வேறன்னு நினைச்சு என்ன ஆளைக் காணோமேன்னு தேடிக்கிட்டிருந்தேன்.. சரியாப் போச்சு போங்க..

 5. கொழுவி Says:

  கொழுவிக் கொண்டோடி பின் வந்து தழுவி //

  கொழுவி கொண்டோடி என்போர் ஒரு தளத்தில் எழுதும் இருநபர்கள். விரைவில் இவர்களோடு கொக்கச் சத்தகம் என்பவரும் இணைவார்.

  கொழுவிக்கும் கொண்டோடிக்குமான கொம்யுனிகேசன் கப் ரொம்ப அதிகம். அதனால் அவர் என்ன எழுதுகிறார் அல்லது கொழுவி என்ன எழுதுகிறார் பின்னூட்டிடுகிறார் என்பதெல்லாம் உடனடியாகத் தெரியவே வராது.

  உதாரணமாக கொண்டோடி உங்களுக்கு பின்னூட்டியதை நான் உங்கள் களத்தில் வைத்துதான் அறிந்தேன். 🙂

 6. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///கொழுவி said…
  கொழுவிக் கொண்டோடி பின் வந்து தழுவி//

  இதற்கு என்ன அர்த்தமோ..?

  //கொழுவி, கொண்டோடி என்போர் ஒரு தளத்தில் எழுதும் இரு நபர்கள். விரைவில் இவர்களோடு கொக்கச் சத்தகம் என்பவரும் இணைவார்.
  கொழுவிக்கும், கொண்டோடிக்குமான கொம்யுனிகேசன் கப் ரொம்ப அதிகம். அதனால் அவர் என்ன எழுதுகிறார் அல்லது கொழுவி என்ன எழுதுகிறார் பின்னூட்டிடுகிறார் என்பதெல்லாம் உடனடியாகத் தெரியவே வராது.//

  கொழுவியாரே.. இதென்ன உங்கட தலைவர் பாணியில பதில் சொல்றீர்..

  உங்களுடன் கொம்யூனிகேஷன் கேப் அதிகம் உள்ள ஒருவருக்கு உமது தளத்தின் பாஸ்வேர்டை கொடுத்து எழுதிக் கொள்ளும் அளவுக்கு விட்டு வைத்திருக்கிறீர்.. இதெல்லாம் நம்ப முடிவது போலவா இருக்கிறது..?

 7. ரகுநந்தன் Says:

  ஐயா We The Poople இந்த கே.ரி.ராஜசிங்கத்தரின் வண்ட வாளங்கள் எண்ணிலடங்கா. உதாரணத்துக்கு ஒன்று
  http://www.tamilcanadian.com/page.php?cat=527&id=5266
  கருணாவை கொலைசெய்ய போட்ட சதி. இதை வெளிப்படுத்தியது ஸ்ரீலங்காசார்பு பேப்பர் ஒன்று! மற்ரது இன்றைய புலி எதிர்ப்பாளர் ஜெயதேவனையும் ஒருக்கால் கேளுங்கள். தனது உறவினர் ஒருவரிடம் பெருந்தொகை பணம் கறந்தது பற்றியும் சொல்லுவார்.
  இதெல்லாம் தூசு! ஸ்ரீலங்கா அரசிடமே கறக்க வெளிக்கிட்டவர்!!!!

  அப்படியே நான் குறிப்பிட்ட சுட்டியையும் தமிழாக்கம் செய்து போடவும். முக்கியமாக அந்த தொலைபேசி உரையாடல்!!!!!

 8. கொழுவி Says:

  உங்களுடன் கொம்யூனிகேஷன் கேப் அதிகம் உள்ள ஒருவருக்கு உமது தளத்தின் பாஸ்வேர்டை கொடுத்து எழுதிக் கொள்ளும் அளவுக்கு விட்டு வைத்திருக்கிறீர்.. இதெல்லாம் நம்ப முடிவது போலவா இருக்கிறது..?//

  முடியலத்தான்!

  தளத்தின் பாஸ்வேர்ட் தேவையில்லையா. உங்களுக்கு குறூப் புளொக் தெரியும்தானே?

  அவர்களுக்கு அழைப்பு விடுத்தால் அவர்கள் தமக்காக ஒரு கணக்கை உருவாக்கி தாமே எழுதலாம்.

  அதை விட மிக முக்கியமானது
  கொழுவி ஒரு கூட்டுப் பதிவென்பது. 🙂 அது ஊரறிந்த ரகசியம். இப்போ உங்களையே எடுத்துக் கொள்ளுங்களேன்.. நீங்களே கொழுவியென்ற ஒரு பெயருக்கு – ஆனால் பலருக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் 🙂 🙂 🙂

 9. benzaloy Says:

  ‘சரியோ பிழையோ தமிழர்களின் காவலர்கள் புலிகளே’

  இந் நிலையினில், உண்மை தலை காட்டாது . . . யாழ் போதனா வைத்தியசாலையில்
  தமிழ் விடுதலை புலிகள் நோயாளிகள் போல நடித்து போர்வையினுள் மறைந்திருந்து தாக்கியது guerilla யுத்த முறையானது என முழுமையாக
  நம்புவோருடன் விவாவிப்பது அவர்களுக்கும் எமக்கும் நன்றல்ல.

 10. benzaloy Says:

  இங்கு விரிவான உபயோகமான அலாதியான மருட்சியான தமிழ் சொற்பிரயோகம் கொண்ட சிறந்த கட்டுரைகள் காண்கின்றேன் …

  இருந்தும், எதிர்மறையான சித்
  சிலம்பிகளும் உள்ளனவே … நல்லதும் கெட்டதும் தானே வாழ்க்கை …

  ‘போர்’ ‘யுத்தம்’ என தொடங்கிய பின்னர் ‘சரி பிழை’ என அலசுவது அபத்தம் …

  இந்த ‘சரி பிழை’ எல்லாம் ‘உண்மை’ இறக்க முன்னர் … ‘பொது மக்கள்’ அரசியல் லாபதிட்ட்காக கொன்றோளிகப்படுமுன்னர் விவாதத்தினால் தீர்க்க வேண்டிய
  விஷயம்கள் …

  ‘துவக்கு தூக்யின்’ வாலை பிடிப்பது பச்சோந்தித்தனம் …

  நன்றி நண்பா !

 11. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //தமிழ் விரும்பி said…
  இது கே.ரி.இராஜசிங்கம் எழுதியது. இவரோ இன்று ராஜபக்ஸ போடும் எலும்புத் துண்டுக்கு வாலாட்டும் ஒரு துரோக நச்சுப்பாம்பு. ஐயா, நடுத்தன்மை என்றெல்லாம் கதைக்கிறீர்களே!. கே.ரி.ஆர். தமிழர்களுக்கு எதிராக நடந்த ஒரு விமானத்தாக்குதலையோ, ஒரு ஷெல் தாக்குதலையோ கண்டித்து அரசாங்கத்துக்கு எதிராக அறிக்கை அல்லது கட்டுரை வரைந்தால் அவர் கருத்தை ஏற்றுக்கொள்ளலாம். அடிவருடிகள் கதை வேண்டாம். புலிகளை எதிர்த்து கதையுங்கள். நல்லம். அப்பாவி சனங்களை கொன்ற இலங்கை, இந்திய இராணுவ கொடூரத்தையும், கொன்று கொண்டிருக்கிற இலங்கை இராணுவத்தின் அரச பயங்கரவாத்தையும் கண்டியுங்கள். சும்மா சும்மா புலிகளை குற்றம் சுமத்தாதீர்கள். அவர்கள் இருப்பதால்தான் கே.ரி.ஆர் போன்ற துரோகிகளுக்கு இலங்கை அரசு பிச்சை போடுகிறது. அவர்களை வைத்து இவர்கள் எல்லாம் என் பக்கம், ஆனால் பிரபாகரன் மட்டும் முரண்டு பிடிக்கிறார் என்று பிரசாரம் செய்யலாம். சரியோ பிழையோ தமிழர்களின் காவலர்கள் புலிகளே.//

  தமிழ் விரும்பி ஸார்.. இந்த ராஜசிங்கம் கருப்பா, சிவப்பா..? யார்? இவர் ஜாதகம் என்ன என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. உங்களைப் போன்றவர்கள் சொல்லித்தான் தெரிகிறது.

  அந்தக் கட்டுரையில் அவரும் தனது கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார். நீங்கள் அவரைத் துரோகி என்கிறீர்கள். அவர் புலிகளை துரோகி என்கிறார். இப்படி முரண்பட்டத் தகவல்கள், முரண்பட்ட மக்கள் சமுதாயத்தில் சகஜம்தான்.. உண்மை நிலவரம் என்ன என்பது என்னைப் போன்ற சாமான்யனுக்கு இன்னமும் எட்டாத கனியாகவே உள்ளது..

  உங்கட சீவன்கள் மேலான கரிசனம் இன்னமும் தமிழ்நாட்டு மக்களுக்கு பெரும் ஆதங்கத்தை ஏற்படுத்தாததற்கு இதுவும் ஒரு காரணம்..

  நான் வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால் அதனை யாராவது தமிழ்படுத்தி வழங்கினால் அதையும் வெளியிடுவேன்.. கோபிக்க வேண்டாம்..

 12. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //ரகுநந்தன் said…
  ஐயா We The Poople இந்த கே.ரி.ராஜசிங்கத்தரின் வண்ட வாளங்கள் எண்ணிலடங்கா. உதாரணத்துக்கு ஒன்று
  http://www.tamilcanadian.com/page.php?cat=527&id=5266
  கருணாவை கொலைசெய்ய போட்ட சதி. இதை வெளிப்படுத்தியது ஸ்ரீலங்கா சார்பு பேப்பர் ஒன்று! மற்ரது இன்றைய புலி எதிர்ப்பாளர் ஜெயதேவனையும் ஒருக்கால் கேளுங்கள். தனது உறவினர் ஒருவரிடம் பெருந்தொகை பணம் கறந்தது பற்றியும் சொல்லுவார்.
  இதெல்லாம் தூசு! ஸ்ரீலங்கா அரசிடமே கறக்க வெளிக்கிட்டவர்!!!!
  அப்படியே நான் குறிப்பிட்ட சுட்டியையும் தமிழாக்கம் செய்து போடவும். முக்கியமாக அந்த தொலைபேசி உரையாடல்!!!!!//

  ரகுநந்தன் தோண்டத் தோண்ட புதையலைப் போல் புதிய, புதிய விஷயங்கள் வெளிவருகின்றன.

  ஆனாலும் எங்கள் ஊர் குஞ்சுகளும், சுளுவான்களும் உண்மையில் ஈழத்தில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் இங்கே துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் புரிகிறது..

  எனக்கு அந்த அளவுக்கு மொழி மாற்று அறிவு இல்லாததால், யாரேனும் தமிழ்ப்படுத்தித் தந்தால் வெளியிடுகிறேன்.. கோபிக்க வேண்டாம்..

 13. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //கொழுவி said…
  உங்களுடன் கொம்யூனிகேஷன் கேப் அதிகம் உள்ள ஒருவருக்கு உமது தளத்தின் பாஸ்வேர்டை கொடுத்து எழுதிக் கொள்ளும் அளவுக்கு விட்டு வைத்திருக்கிறீர்.. இதெல்லாம் நம்ப முடிவது போலவா இருக்கிறது..?//
  முடியலத்தான்! தளத்தின் பாஸ்வேர்ட் தேவையில்லையா. உங்களுக்கு குறூப் புளொக் தெரியும்தானே?
  அவர்களுக்கு அழைப்பு விடுத்தால் அவர்கள் தமக்காக ஒரு கணக்கை உருவாக்கி தாமே எழுதலாம்.
  அதை விட மிக முக்கியமானது
  கொழுவி ஒரு கூட்டுப் பதிவென்பது:) அது ஊரறிந்த ரகசியம். இப்போ உங்களையே எடுத்துக் கொள்ளுங்களேன்.. நீங்களே கொழுவியென்ற ஒரு பெயருக்கு – ஆனால் பலருக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் 🙂 🙂 :)//

  முருகா.. உன் அலப்பறைக்கு அளவே இல்லையா..

  இங்க பாரு கொழுவி அண்ணன்கள் என்னை தூக்கிப் போட்டு மிதிக்கிறா..

  எத்தனை பேர் இருப்பீங்க கொழுவிகளா.. ஒரு பத்து பேரு.. இத்தனை பேரும் ஒரே பதிவுல எழுதுறீங்களா..?

  ஏம்ப்பா தனித்தனிப் பதிவா வைச்சா நல்லாயிருக்கும்ல.. ஏன் ஒரே பேர்ல? கொழுவிங்கற பேருக்கு உலக அளவில் மார்க்கெட் இருக்கா..? என்னவோ போங்க..

 14. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //benzaloy said…
  ‘சரியோ பிழையோ தமிழர்களின் காவலர்கள் புலிகளே’
  இந்நிலையினில், உண்மை தலைகாட்டாது.
  யாழ் போதனா வைத்தியசாலையில்
  தமிழ் விடுதலை புலிகள் நோயாளிகள் போல நடித்து போர்வையினுள் மறைந்திருந்து தாக்கியது guerilla யுத்த முறையானது என முழுமையாக
  நம்புவோருடன் விவாவிப்பது அவர்களுக்கும் எமக்கும் நன்றல்ல.//

  நன்றல்லதான்.. இருவருமே ஒருவர் கருத்தில் ஒருவர் விடாப்பிடியாக உள்ளீர்கள். குழப்பத்தில் இருப்பது நாங்கள்தான்..

  இப்படித்தான் ஈழப் பிரச்சினையில் எதற்கெடுத்தாலும் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு பல்வேறு கருத்துக்கள் உள்ளன.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவங்கள்..

  ஒருவருக்கு புலிகள் காட்பாதர் எனில் மற்றவருக்கு எமன்.. மற்றொருவருக்கு எமன் எனில் இன்னொருவருக்கு காட்பாதர்..

  என்று முடியும் இந்த நிலைமை..?

 15. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //benzaloy said…
  இங்கு விரிவான உபயோகமான அலாதியான மருட்சியான தமிழ் சொற்பிரயோகம் கொண்ட சிறந்த கட்டுரைகள் காண்கின்றேன் …
  இருந்தும், எதிர்மறையான சித் சிலம்பிகளும் உள்ளனவே … நல்லதும் கெட்டதும்தானே வாழ்க்கை.
  ‘போர்’ ‘யுத்தம்’ என தொடங்கிய பின்னர் ‘சரி பிழை’ என அலசுவது அபத்தம் …
  இந்த ‘சரி பிழை’ எல்லாம் ‘உண்மை’ இறக்க முன்னர்… ‘பொது மக்கள்’ அரசியல் லாபதிட்ட்காக கொன்றோளிகப்படு முன்னர் விவாதத்தினால் தீர்க்க வேண்டிய விஷயம்கள் …
  ‘துவக்கு தூக்யின்’ வாலை பிடிப்பது பச்சோந்தித்தனம் …
  நன்றி நண்பா!//

  தங்களுடைய மென்மையான கருத்துப் பரிமாற்றத்திற்கு நன்றிகள் ஸார்..

  ஒரு விஷயத்தில் பிரச்சினை என்றால் தீர்வு சொல்ல.. இருவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய பொதுவான நீதிபதி இருத்தல் வேண்டும்.

  இல்லாவிடில் இரு தரப்பில் யாராவது ஒருத்தர் விட்டுக் கொடுத்தல் வேண்டும்.

  இதுவும் இல்லையெனில் பிரச்சினைகள் நீண்டு கொண்டுதான் செல்லும்.. தீராது.. இதில் யாரையும் குற்றம் சொல்லிப் புண்ணியமில்லை..

 16. பொடியன்-|-SanJai Says:

  //ஆனாலும் எங்கள் ஊர் குஞ்சுகளும், சுளுவான்களும் உண்மையில் ஈழத்தில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் இங்கே துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் புரிகிறது..
  //

  100000000000000000000000000000% சரியாக சொல்லி இருக்கிங்க அண்ணாச்சி..

  அவர்கள் எப்படி ஈழத்தில் இந்தியப் படையினரின் அக்கிரமங்களை சொல்லி மாய்கிறார்களோ அதே மாதிரி தான் இந்திய மண்ணில் புலிகள் நடந்திய வெறியாட்டங்களை எதிர்த்து பேசினால் தமிழ் துரோகியாம் தேசிய வியாதியாம்.

  மற்றபடி ஈழப் பிரச்சனை தீர வேண்டுமானால் முதலில் அவர்கள் ஒற்றுமையாய் இருக்க வேண்டும். மூலைக்கு ஒரு குரலும் கருத்தும் சொல்லிக் கொண்டிருக்கும் வரையில் நல்லது எதுவும் நடக்காது.. அதை வைத்து விவாதம் வேண்டுமானால் தினமும் செய்யலாம்.

  தமிழரின் ஒரே காவல் இனமான புலிகளால் ஏன் அனைத்து ஈழத் தமிழர்களையும் ஓரணியில் திரட்ட முடியவில்லை.. யார எல்லாம் இவர்கள் துரோகிகள் என்று சொல்கிறார்களோ அவர்கள் எல்லாம் இன்று பதவியில் இருப்பது எப்படி? மக்கள் செல்வாக்கு இல்லாத சராசரி மனிதன் புலிகளை எதிர்க்கிறான் என்பதற்காகவே எம்பியாகவும் மாகாண் முதல்வராகவும் ஆக முடியுமா?

  அப்படி என்றால் புலிக்ளை விரும்பாத ஒரு பெரிய மக்களினமும் இருப்பதாகத் தானே புரிந்துக் கொள்ள வேண்டி இருக்கு. பின் எபப்டி புலிகளை மட்டுமே ஆதரித்து தீர்வை எட்ட முடியும்? நாளை தமிழீழல் மலர்ந்தால் இவர்களால் துரோகி பட்டம் அளிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்கள ஆதரிக்கும் மக்களின் நிலை என்ன? இன்று சிங்களர்கள் செய்யும் அதே இனப் படுகொலைகளை நாள புலிகள் செய்ய மாட்டார்களா என்ன? ஏற்கனவே இதையும் செய்தவர்கள் தானே.. போட்டி குழுக்களின் தலைவர்களை எல்லாம் வரிசையாக இந்திய மண்ணில் வைத்தே கொன்றார்களே.. நாளை தங்கள் சொந்த மண்ணில் என்ன எல்லாம் செய்வார்கள்?

  தனிஈழம் மலர ஒரே வழி .. ஈழத் தமிழர்கள் அனைவரும் ஒரே குரலில் பேச வேண்டும்..

  இந்த நூலாசிரியர் இந்த புத்தகத்தை வியாபார ரீதியில் தான் எழுதி இருக்கிறார். ஏகப் பட்ட முரன்பாடுகள் இருக்கு.. இப்போதெல்லாம் பெரிய பதவியில் இருந்தவர்கள் எழுதும் சுய சரிதை வகையறாக்கள் மீது நம்பகத் தன்மை சுத்தமாக கிடையாது… தங்கள் இருப்பைக் காட்டிக் கொள்ள வெட்து பரபரப்புக்கும் அதிகம் பணம் அப்ண்ணும் ஆசையிலும் தான் புத்தகம் எழுதுகிறார்கள். அதில் இவர் மட்டும் என்ன விதிவிலக்கா?

 17. ஆட்காட்டி Says:

  என்ன சாரு இது? உங்கட பக்கத்தை எத்தனை பேர் படிக்கிறார்கள்?

 18. We The People Says:

  கே.ரி.இராஜசிங்கம் எழுதியதாக இருக்கட்டும், அவர் யார் என்று எனக்கு தெரியாது ஆனால் அந்த கட்டுரையில் ஆங்காங்கே Lieutenant-General Depinder Singh, the Overall Force Commander of the IPKF, in his book IPKF in Sri Lanka சுட்டிகள் கூறும் விசயங்களும் இந்த பதிவில் இருக்கும் வெவ்வேற உள்ளது என்பதே நான் சுட்டி தர காரணம்! இருவரும் ஒரே விசயத்தை இரண்டு கோணத்தில் தருகிறார்கள்!

  நான் சொன்ன சில தவறுகள் என்பது இது போல…

  //”Somewhere around August 15, 1987, in one of my meetings with Prabakaran in Jaffna, he mentioned that the LTTE had positive information that the Research and Analysis Wing [RAW] was inciting the other Tamil militant groups, especially the recently created Tri-Star Group [through the merger of TELO, EPRLF and ENDLF] to attack LTTE cadres as the latter became progressively weaker following handing over their weapons. This was a serious allegation and was conveyed to army headquarters that evening for investigation and an early reply. The next day brought a categorical denial which, in turn, was conveyed to Prabakaran, who told me politely that since I was denying it, he believed me, but what Delhi had reported to me was incorrect and therefore he stood by his allegation.” The IPKF in Sri Lanka by Lieutenant-General Depinder Singh, page 56 //

  இதில் உள்ளது போல் இந்திய ‘ரா’சில வேலைகள் செய்துள்ளதை அதே து கே.ரி.இராஜசிங்கம் எழுதியது. இவரோ இன்று ராஜபக்ஸ போடும் எலும்புத்துண்டுக்கு வாலாட்டும் ஒரு துரோக நச்சுப்பாம்பு எடுத்துக்காட்டி உள்ளதே!!!??

  அதே போல… இந்த பதிவில் சூடு பறக்க வேண்டும், அனல் கக்கவேண்டும் என்ற நோக்கோடு சில திரிபுகளும் இருந்தன…

  //பிரபாகரன் – டிக்சிற் சந்திப்பிற்கு இரண்டு நிமிடங்கள் இருக்கும் போது திலீபன் உயிர் நீத்தார்.//

  1. திலீபன் இறந்தது செப்டெம்பர் 26 1987 ஆனால் டிக்ஷித் மற்றும் பிரபாகரன் சந்திப்பு நடந்தது செப்டெம்பர் 22?? செப்டம்பர் 22லிருந்து செப் 26 இரண்டு நிமிடங்களா?? என்ன கொடும இது சரவணா??

 19. Arun Kumar Says:

  //Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said…

  //We The People said…
  http://www.atimes.com/ind-pak/DD13Df02.html
  இதையும் படித்துவிடுங்க! ஏன்னா தனக்கு சாதகமா உள்ளதை மட்டும் ட்ரிம் செய்து தமிழாக்கம் செய்வது நல்ல விசயம் இல்லையே! தவறுகள் இருபுறமும் இருக்க….:)//

  ஆஹா.. ஜெய் ஸார்.. வருக.. வருக..

  நல்லதொரு விஷயத்தோட வந்திருக்கீங்க.. நன்றி.. நன்றி..

  யாராவது இதனை தமிழாக்கம் செய்து கொடுத்தால் மிக எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.. //

  ரொம்ப பெரியய்ய்ய..கட்டுரை
  விரைவில் பகுதி பகுதியாக தமிழாக்கம் செய்து தருகிறேன்

 20. We The People Says:

  //”Mr Pirabakaran was furious when he was informed of the final decision. He felt he was obliged to fulfill the last wishes of his cadres in custody. Mr Pirabakaran and his commanders each took off his cyanide capsule and hung it around Bala and Mahataya’s neck with instructions to deliver it to the captured cadres. Garlanded with cyanide capsules, Bala and Mahataya reluctantly and hesitantly visited the cadres on the decisive day of their transfer.” Will to Freedom by Adele Balasingham, page 139 //

  இது உண்மையா??

 21. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///பொடியன்-|-SanJai said…
  //ஆனாலும் எங்கள் ஊர் குஞ்சுகளும், சுளுவான்களும் உண்மையில் ஈழத்தில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் இங்கே துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் புரிகிறது..//
  100000000000000000000000000000% சரியாக சொல்லி இருக்கிங்க அண்ணாச்சி..///

  ஆஹா.. முதல் வருகையா.. வரும்போதே பாராட்டா.. தம்பி என் எழுத்தைப் புரிந்து கொண்டமைக்கு நன்றிகள்..

  //அவர்கள் எப்படி ஈழத்தில் இந்தியப் படையினரின் அக்கிரமங்களை சொல்லி மாய்கிறார்களோ அதே மாதிரிதான் இந்திய மண்ணில் புலிகள் நடந்திய வெறியாட்டங்களை எதிர்த்து பேசினால் தமிழ் துரோகியாம் தேசிய வியாதியாம்.//

  இதைத்தான் கொழுவி அண்ணனும் சொல்லிக் கொண்டேயிருக்கிறார். நாங்களும் மறக்கிறோம்.. நீங்களும் மறந்திருங்க என்று.. ந்ம்மால் முடியும்.. மற்றவர்களால், அரசுகளால், சட்டத்தால்..?

  //மற்றபடி ஈழப் பிரச்சனை தீர வேண்டுமானால் முதலில் அவர்கள் ஒற்றுமையாய் இருக்க வேண்டும். மூலைக்கு ஒரு குரலும் கருத்தும் சொல்லிக் கொண்டிருக்கும் வரையில் நல்லது எதுவும் நடக்காது.. அதை வைத்து விவாதம் வேண்டுமானால் தினமும் செய்யலாம்.//

  இதைத்தான் நானும் ஒவ்வொரு பதிவிலும் சொல்லி வருகிறேன்..

  //தமிழரின் ஒரே காவல் இனமான புலிகளால் ஏன் அனைத்து ஈழத் தமிழர்களையும் ஓரணியில் திரட்ட முடியவில்லை.. யார எல்லாம் இவர்கள் துரோகிகள் என்று சொல்கிறார்களோ அவர்கள் எல்லாம் இன்று பதவியில் இருப்பது எப்படி? மக்கள் செல்வாக்கு இல்லாத சராசரி மனிதன் புலிகளை எதிர்க்கிறான் என்பதற்காகவே எம்பியாகவும் மாகாண் முதல்வராகவும் ஆக முடியுமா? அப்படி என்றால் புலிக்ளை விரும்பாத ஒரு பெரிய மக்களினமும் இருப்பதாகத்தானே புரிந்துக் கொள்ள வேண்டி இருக்கு. பின் எபப்டி புலிகளை மட்டுமே ஆதரித்து தீர்வை எட்ட முடியும்? நாளை தமிழீழல் மலர்ந்தால் இவர்களால் துரோகி பட்டம் அளிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்கள ஆதரிக்கும் மக்களின் நிலை என்ன? இன்று சிங்களர்கள் செய்யும் அதே இனப் படுகொலைகளை நாள புலிகள் செய்ய மாட்டார்களா என்ன? ஏற்கனவே இதையும் செய்தவர்கள்தானே.. போட்டி குழுக்களின் தலைவர்களை எல்லாம் வரிசையாக இந்திய மண்ணில் வைத்தே கொன்றார்களே.. நாளை தங்கள் சொந்த மண்ணில் என்ன எல்லாம் செய்வார்கள்?//

  தெளிவாகப் போட்டு உடைத்துவிட்டாய்.. வாழ்க தம்பி.. ஏன் இதையெல்லாம் உன் தளத்துல ஒரு பதிவா போட்டீன்னா உன்னுடைய நட்பு வட்டாரமும் உண்மையை உணர்ந்து கொள்ளுமே..

  //தனி ஈழம் மலர ஒரே வழி .. ஈழத் தமிழர்கள் அனைவரும் ஒரே குரலில் பேச வேண்டும்..//

  மிக, மிக முக்கியமான தேவையான அவர்களுக்கான அறிவுரை இது..

  //இந்த நூலாசிரியர் இந்த புத்தகத்தை வியாபார ரீதியில்தான் எழுதி இருக்கிறார். ஏகப்பட்ட முரன்பாடுகள் இருக்கு.. இப்போதெல்லாம் பெரிய பதவியில் இருந்தவர்கள் எழுதும் சுய சரிதை வகையறாக்கள் மீது நம்பகத் தன்மை சுத்தமாக கிடையாது… தங்கள் இருப்பைக் காட்டிக் கொள்ள வெட்து பரபரப்புக்கும் அதிகம் பணம் அப்ண்ணும் ஆசையிலும்தான் புத்தகம் எழுதுகிறார்கள். அதில் இவர் மட்டும் என்ன விதிவிலக்கா?//

  நான் இன்னும் புத்தகத்தைப் படிக்கவில்லை.. படித்த பின்பு சொல்கிறேன்..

  மற்றபடி வருகைக்கும், உன்னுடைய நீண்ட பின்னூட்டத்திற்கும் நன்றி தம்பி..

  வாழ்க வளமுடன்

 22. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //ஆட்காட்டி said…
  என்ன சாரு இது? உங்கட பக்கத்தை எத்தனை பேர் படிக்கிறார்கள்?//

  கொஞ்சம் பேராகத்தான் இருக்கும். ஒரு பதிவுக்கு 500 இருக்கலாம்..

 23. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //We The People said…
  கே.ரி.இராஜசிங்கம் எழுதியதாக இருக்கட்டும், அவர் யார் என்று எனக்கு தெரியாது. ஆனால் அந்த கட்டுரையில் ஆங்காங்கே Lieutenant-General Depinder Singh, the Overall Force Commander of the IPKF, in his book IPKF in Sri Lanka சுட்டிகள் கூறும் விசயங்களும் இந்த பதிவில் இருக்கும் வெவ்வேற உள்ளது என்பதே நான் சுட்டி தர காரணம்! இருவரும் ஒரே விசயத்தை இரண்டு கோணத்தில் தருகிறார்கள்! நான் சொன்ன சில தவறுகள் என்பது இது போல…
  //”Somewhere around August 15, 1987, in one of my meetings with Prabakaran in Jaffna, he mentioned that the LTTE had positive information that the Research and Analysis Wing [RAW] was inciting the other Tamil militant groups, especially the recently created Tri-Star Group [through the merger of TELO, EPRLF and ENDLF] to attack LTTE cadres as the latter became progressively weaker following handing over their weapons. This was a serious allegation and was conveyed to army headquarters that evening for investigation and an early reply. The next day brought a categorical denial which, in turn, was conveyed to Prabakaran, who told me politely that since I was denying it, he believed me, but what Delhi had reported to me was incorrect and therefore he stood by his allegation.” The IPKF in Sri Lanka by Lieutenant-General Depinder Singh, page 56 //
  இதில் உள்ளது போல் இந்திய ‘ரா’சில வேலைகள் செய்துள்ளதை அதே து கே.ரி.இராஜசிங்கம் எழுதியது. இவரோ இன்று ராஜபக்ஸ போடும் எலும்புத் துண்டுக்கு வாலாட்டும் ஒரு துரோக நச்சுப்பாம்பு எடுத்துக் காட்டி உள்ளதே!!!??///

  நீங்கள் படித்தவுடன் புரிந்து கொள்ளலாம்.. என்னால் முடியவில்லை. தளத்தை சேகரித்து வைத்துள்ளேன். பின்பு பிரிண்ட்அவுட் எடுத்துப் படிக்கலாம் என்று இருந்தேன்.

  ஜெய் ஸார்.. தங்களுடைய பின்னூட்டம் ஒரு பெரிய உதவி. ஏனெனில் இதைத் தொடர்ந்து படிப்பவர்கள் எந்த சந்தேகத்தையும் தெரிந்து கொள்ளாமல் இருக்கக் கூடாது.. நன்றி..

  ///அதே போல… இந்த பதிவில் சூடு பறக்க வேண்டும், அனல் கக்க வேண்டும் என்ற நோக்கோடு சில திரிபுகளும் இருந்தன…
  //பிரபாகரன் – டிக்சிற் சந்திப்பிற்கு இரண்டு நிமிடங்கள் இருக்கும் போது திலீபன் உயிர் நீத்தார்.//
  1. திலீபன் இறந்தது செப்டெம்பர் 26 1987. ஆனால் டிக்ஷித் மற்றும் பிரபாகரன் சந்திப்பு நடந்தது செப்டெம்பர் 22. செப்டம்பர் 22-லிருந்து செப்-26 இரண்டு நிமிடங்களா?? என்ன கொடும இது சரவணா??///

  எனக்கும் கொடுமையாகத்தான் இருக்கு. ஒருவேளை அச்சுத் தவறாகவோ அவருடைய மறதி காரணமாகவோ இருக்கலாம்..

 24. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///Arun Kumar said…
  //Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said…
  //We The People said…
  http://www.atimes.com/ind-pak/DD13Df02.html
  இதையும் படித்து விடுங்க! ஏன்னா தனக்கு சாதகமா உள்ளதை மட்டும் ட்ரிம் செய்து தமிழாக்கம் செய்வது நல்ல விசயம் இல்லையே! தவறுகள் இரு புறமும் இருக்க….:)//
  ஆஹா.. ஜெய் ஸார்.. வருக.. வருக.. நல்லதொரு விஷயத்தோட வந்திருக்கீங்க.. நன்றி.. நன்றி..
  யாராவது இதனை தமிழாக்கம் செய்து கொடுத்தால் மிக எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.. //
  ரொம்ப பெரியய்ய்ய..கட்டுரை
  விரைவில் பகுதி பகுதியாக தமிழாக்கம் செய்து தருகிறேன்.///

  புண்ணியமா இருக்கும் தம்பி.. உன் பதிவிலேயே பதிவேற்றேன்.. ஒன்றும் தப்பில்லை..

  அங்கிருந்து எனது பதிவிற்கு லின்க் மட்டும் கொடுத்துவிடு..

 25. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///We The People said…
  //”Mr Pirabakaran was furious when he was informed of the final decision. He felt he was obliged to fulfill the last wishes of his cadres in custody. Mr.Pirabakaran and his commanders each took off his cyanide capsule and hung it around Bala and Mahataya’s neck with instructions to deliver it to the captured cadres. Garlanded with cyanide capsules, Bala and Mahataya reluctantly and hesitantly visited the cadres on the decisive day of their transfer. “Will to Freedom by Adele Balasingham, page 139 //
  இது உண்மையா??///

  புரியவில்லை ஜெய் ஸார்..

 26. கொழுவி Says:

  மக்கள் செல்வாக்கு இல்லாத சராசரி மனிதன் புலிகளை எதிர்க்கிறான் என்பதற்காகவே எம்பியாகவும் மாகாண் முதல்வராகவும் ஆக முடியுமா? //

  நல்ல புரிதல்

  எம்பியை மக்கள் தெரிவு செய்யவில்லை. கருணாவை மகிந்த இறந்து போன யாரோ ஒருவருக்காக தெரிவு செய்தார்.

  ஒரு உண்மையை தெரிந்து கொள்ளுங்கோ
  இன்று புலிகளில் முன்னணி தளபதி யாரேனும் பிரிந்து விலகி இலங்கை அரசோடு போய் சேர்ந்தால் – அவர்களுக்கும் எம்பி பதவியோ முதலமைச்சர் பதவியோ அரசாங்கத்தால் வழங்கப்படும்.

  இதற்கு மக்கள் ஆதரவெல்லாம் தேவையில்லை.

  உங்கள் வாதப்படி பார்த்தால் இன்று புலிகளை ஆதரிக்கிற 22 பாராளுமன்ற உறுப்பினர்களை மக்கள் பாராளுமன்றம் அனுப்பி வைத்தார்களே..

  அப்போ புலிகளுக்கு 90 வீதமான ஆதரவு இருப்பதை அது காட்டுகிறதே

  (90 வீதமான ஆதரவு அவர்களுக்கு தேர்தலில் கிடைத்தது. தேர்தல் பிரசாரங்களில் அவ ர்கள் புலிகளை ஆதரித்தார்கள். புலிகள் அவர்களை ஆதரித்தார்கள் )

 27. ஆட்காட்டி Says:

  இல்லை ,இவ்வளவு பேரும் பேசி என்ன தீர்வைக் காணப் போறம் எண்டு தான்…

 28. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //கொழுவி said…
  மக்கள் செல்வாக்கு இல்லாத சராசரி மனிதன் புலிகளை எதிர்க்கிறான் என்பதற்காகவே எம்பியாகவும் மாகாண் முதல்வராகவும் ஆக முடியுமா?//
  நல்ல புரிதல். எம்பியை மக்கள் தெரிவு செய்யவில்லை. கருணாவை மகிந்த இறந்து போன யாரோ ஒருவருக்காக தெரிவு செய்தார்.
  ஒரு உண்மையை தெரிந்து கொள்ளுங்கோ. இன்று புலிகளில் முன்னணி தளபதி யாரேனும் பிரிந்து விலகி இலங்கை அரசோடு போய் சேர்ந்தால் – அவர்களுக்கும் எம்பி பதவியோ முதலமைச்சர் பதவியோ அரசாங்கத்தால் வழங்கப்படும்.
  இதற்கு மக்கள் ஆதரவெல்லாம் தேவையில்லை. உங்கள் வாதப்படி பார்த்தால் இன்று புலிகளை ஆதரிக்கிற 22 பாராளுமன்ற உறுப்பினர்களை மக்கள் பாராளுமன்றம் அனுப்பி வைத்தார்களே.. அப்போ புலிகளுக்கு 90 வீதமான ஆதரவு இருப்பதை அது காட்டுகிறதே.. 90 வீதமான ஆதரவு அவர்களுக்கு தேர்தலில் கிடைத்தது. தேர்தல் பிரசாரங்களில் அவர்கள் புலிகளை ஆதரித்தார்கள். புலிகள் அவர்களை ஆதரித்தார்கள்.//

  சதவிகிதம் வேண்டாம் கொழுவி.. இப்போதைய நிலைமையில் கையில் துப்பாக்கி வைத்திருக்கும் எவருக்கும் ஆதரவு பெருகத்தான் செய்யும். அது உயிர் மேல் இருக்கிற பயமாகவும் இருக்கலாம்.. தார்மீக ரீதியான, உணர்வுப்பூர்வமான ஆதரவாகவும் இருக்கலாம். நாங்கள் மறுக்கவில்லை. அதே சமயம் எதிர்ப்புகளும் உண்டு. அதையும் நீங்கள் மறந்துவிடக் கூடாது. நாளை புலிகள் ஆட்சிக்கு வரும்பட்சத்தில் புலி எதிர்ப்பாளர்களுக்கு பத்மநாபா, அமிர்தலிங்கம் நிலைமை வராது என்று என்ன நிச்சயம் என்பதுதான் அந்தத் தம்பியின் கேள்வி..

 29. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //ஆட்காட்டி said…
  இல்லை, இவ்வளவு பேரும் பேசி என்ன தீர்வைக் காணப் போறம் எண்டுதான்//

  தீர்வைக் காண விரும்புவர்களெல்லாம் களத்திற்கு வெளியே வெறும் பார்வையாளர்களாக மட்டுமே இருந்து வருகிறோம் என்பது நமது துரதிருஷ்டம் ஆட்காட்டி ஸார்..

 30. பொடியன்-|-SanJai Says:

  //நாளை புலிகள் ஆட்சிக்கு வரும்பட்சத்தில் புலி எதிர்ப்பாளர்களுக்கு பத்மநாபா, அமிர்தலிங்கம் நிலைமை வராது என்று என்ன நிச்சயம் என்பதுதான் அந்தத் தம்பியின் கேள்வி..//

  ungalai porutha varayil athu sagothara sandaiyaaga irukalam. aanal naanga athai oru thamlan innoru tamilanai kolvathagave parkirom.. engalai poruthavarai kollapadubavan TAMILAN. athu yaaraal kolla pattaalum.

  ( courtesy : Kalaignar Karunanithi )

 31. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///பொடியன்-|-SanJai said…
  //நாளை புலிகள் ஆட்சிக்கு வரும்பட்சத்தில் புலி எதிர்ப்பாளர்களுக்கு பத்மநாபா, அமிர்தலிங்கம் நிலைமை வராது என்று என்ன நிச்சயம் என்பதுதான் அந்தத் தம்பியின் கேள்வி..//
  ungalai porutha varayil athu sagothara sandaiyaaga irukalam. aanal naanga athai oru thamlan innoru tamilanai kolvathagave parkirom.. engalai poruthavarai kollapadubavan TAMILAN. athu yaaraal kolla pattaalum.
  (courtesy : Kalaignar Karunanithi)///

  தம்பீ கொன்னூட்ட போ.. கரீக்ட்டு.. கரீக்ட்டு..

  இவ்ளோ அரசியல் தெளிவை வைச்சுக்கிட்டு ‘அரசியல்’ எழுத மாட்டேங்குறியே..?

 32. Chuttiarun Says:

  நண்பர்களே நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.

  http://www.thamizhstudio.com/

 33. We The People Says:

  ////We The People said…
  //”Mr Pirabakaran was furious when he was informed of the final decision. He felt he was obliged to fulfill the last wishes of his cadres in custody. Mr.Pirabakaran and his commanders each took off his cyanide capsule and hung it around Bala and Mahataya’s neck with instructions to deliver it to the captured cadres. Garlanded with cyanide capsules, Bala and Mahataya reluctantly and hesitantly visited the cadres on the decisive day of their transfer. “Will to Freedom by Adele Balasingham, page 139 //
  இது உண்மையா??///

  புரியவில்லை ஜெய் ஸார்..///

  உங்கள் பதிவின் படி:
  //இந்தச் செய்தியைத் தொடர்ந்து ஐ.பி.கே.எவ்.இன் பாதுகாப்பை நீக்கும்படி நான் உத்தரவிட்டேன். இந்திய அமைதிப் படையினர் விலகிக்கொண்ட உடனேயே சிங்களப் படைகள் புலி வீரர்கள் வைக்கப்பட்டிருந்த அறையினுள் பாய்ந்தனர். புலிகள் சயனைட்டுக்களை உண்டனர்.//

  ஆனால் கைது செய்த புலிகளிடம் சயனைட்டு குப்பிகள் இருக்க வாய்ப்பு இல்லை! அப்படி இருக்க அவர்களுக்கு எங்கிருந்து சயனைட்டு குப்பிகள் கிடைத்து என்பதை ஆன்டன் பாலாசிங் அவர்களின் மனைவி எழுதிய புத்தகத்தில் இருந்த வரிகள் இவை. பிராபகரன், பாலாசிங்கம் மற்றும் Mahatayaவிடம் கைது செய்த புலிகளுக்கு போட்டனுப்படும் மாலையுடன் சயனைட் குப்புயும் சேர்த்து கொடுத்து அனுப்பியுள்ளார் என்று சொல்கிறது அந்த புத்தகம்!! இந்த தகவல் உண்மையா?? என்பதே என் கேள்வி!

 34. கொழுவி Says:

  நாளை புலிகள் ஆட்சிக்கு வரும்பட்சத்தில் புலி எதிர்ப்பாளர்களுக்கு பத்மநாபா, அமிர்தலிங்கம் நிலைமை வராது என்று என்ன நிச்சயம் என்பதுதான் அந்தத் தம்பியின் கேள்வி..//

  ஓ..
  இப்போதும் யாராவது சீக்கியர் சோனியாவை கொலை செய்து விடுவார் என அஞ்சி அஞ்சித் தான் வாழ்கிறீர்களா?

  யாராவது ஆர் எஸ் எஸ் காரர் யாரோ ஒரு தலைவரை சுட்டுடுவான் என பயந்து பயந்துதான் அங்க எல்லாம் நடக்குதா ?

  அட அவ்வளவும் ஏன்? சார்க் மாநாட்டுக்கு போகும் போது யாராவது சிங்கள ஆர்மிகாரன் பிடரியில துப்பாக்கியால அடிச்சிடுவான் அடிச்சிடுவான் என நடுநடுங்கித்தான் மன்மோகன் சிங் கொழும்பு போனாரா?

  சார்.. கேட்கணும்னா நானும் நீங்களும் நிறையக் கேட்கலாம் சார்.. ?

  ஒருவேளை நான் சொன்ன மாதிரிதான் அங்க நிலமை இருக்கென்றால்..
  ம்.. உங்க கேள்வி உங்க தரப்பில நியாயமானதுதான்.

 35. stanjoe Says:

  //..
  இப்போதும் யாராவது சீக்கியர் சோனியாவை கொலை செய்து விடுவார் என அஞ்சி அஞ்சித் தான் வாழ்கிறீர்களா?

  யாராவது ஆர் எஸ் எஸ் காரர் யாரோ ஒரு தலைவரை சுட்டுடுவான் என பயந்து பயந்துதான் அங்க எல்லாம் நடக்குதா ?

  அட அவ்வளவும் ஏன்? சார்க் மாநாட்டுக்கு போகும் போது யாராவது சிங்கள ஆர்மிகாரன் பிடரியில துப்பாக்கியால அடிச்சிடுவான் அடிச்சிடுவான் என நடுநடுங்கித்தான் மன்மோகன் சிங் கொழும்பு போனாரா?//

  Kozhuvi, LTTEs are more dangerous people than all these people you have referred, thats why the doubt. There are lot of difference between these people and LTTE interms of their thinking/attidude/war strategies.
  You just can not compare like x=y;

 36. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///We The People said…
  ////We The People said…
  //”Mr Pirabakaran was furious when he was informed of the final decision. He felt he was obliged to fulfill the last wishes of his cadres in custody. Mr.Pirabakaran and his commanders each took off his cyanide capsule and hung it around Bala and Mahataya’s neck with instructions to deliver it to the captured cadres. Garlanded with cyanide capsules, Bala and Mahataya reluctantly and hesitantly visited the cadres on the decisive day of their transfer. “Will to Freedom by Adele Balasingham, page 139 //
  இது உண்மையா??///
  புரியவில்லை ஜெய் ஸார்..///
  உங்கள் பதிவின் படி:
  //இந்தச் செய்தியைத் தொடர்ந்து ஐ.பி.கே.எவ்.இன் பாதுகாப்பை நீக்கும்படி நான் உத்தரவிட்டேன். இந்திய அமைதிப் படையினர் விலகிக்கொண்ட உடனேயே சிங்களப் படைகள் புலி வீரர்கள் வைக்கப்பட்டிருந்த அறையினுள் பாய்ந்தனர். புலிகள் சயனைட்டுக்களை உண்டனர்.//
  ஆனால் கைது செய்த புலிகளிடம் சயனைட்டு குப்பிகள் இருக்க வாய்ப்பு இல்லை! அப்படி இருக்க அவர்களுக்கு எங்கிருந்து சயனைட்டு குப்பிகள் கிடைத்து என்பதை ஆன்டன் பாலாசிங் அவர்களின் மனைவி எழுதிய புத்தகத்தில் இருந்த வரிகள் இவை. “பிராபகரன், பாலாசிங்கம் மற்றும் Mahatayaவிடம் கைது செய்த புலிகளுக்கு போட்டனுப்படும் மாலையுடன் சயனைட் குப்புயும் சேர்த்து கொடுத்து அனுப்பியுள்ளார்” என்று சொல்கிறது அந்த புத்தகம்!! இந்த தகவல் உண்மையா?? என்பதே என் கேள்வி!

  ஆண்டன் பாலசிங்கம்தான் புலேந்திரன் மற்றும் குமரப்பாவிடம் சயனைடு குப்பியை வழங்கியதாக நானும் படித்திருக்கிறேன்.(தமிழாக்கத்தில்)

  ஒரு வேளை இதே போல் பிரபாகரன் பிடிபட்டிருந்தால் இதையேதான் செய்திருப்பாரா பிரபாகரன்..? யோசிக்க வேண்டிய விஷயம்..

 37. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //கொழுவி said…
  நாளை புலிகள் ஆட்சிக்கு வரும்பட்சத்தில் புலி எதிர்ப்பாளர்களுக்கு பத்மநாபா, அமிர்தலிங்கம் நிலைமை வராது என்று என்ன நிச்சயம் என்பதுதான் அந்தத் தம்பியின் கேள்வி..//
  ஓ.. இப்போதும் யாராவது சீக்கியர் சோனியாவை கொலை செய்து விடுவார் என அஞ்சி அஞ்சித்தான் வாழ்கிறீர்களா?
  ஆர்.எஸ்.எஸ்.காரர் யாரோ ஒரு தலைவரை சுட்டுடுவான் என பயந்து பயந்துதான் அங்க எல்லாம் நடக்குதா?
  அட அவ்வளவும் ஏன்? சார்க் மாநாட்டுக்கு போகும் போது யாராவது சிங்கள ஆர்மிகாரன் பிடரியில துப்பாக்கியால அடிச்சிடுவான் அடிச்சிடுவான் என நடுநடுங்கித்தான் மன்மோகன்சிங் கொழும்பு போனாரா?
  சார்.. கேட்கணும்னா நானும் நீங்களும் நிறையக் கேட்கலாம் சார்.. ஒரு வேளை நான் சொன்ன மாதிரிதான் அங்க நிலமை இருக்கென்றால்..
  ம்.. உங்க கேள்வி உங்க தரப்பில நியாயமானதுதான்.//

  இங்கே இப்போது எந்த சீக்கியனும் துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு கொல்றானில்லை.. அது இந்திராகாந்தியோடு முடிந்து போனது..

  இங்கே இப்போது எந்த ஆர்.எஸ்.எஸ்.காரனும் கொலை செய்யப் போகிறேன் என்று சொல்லி கையில் துப்பாக்கியோடு திரிவதில்லை..

  ராஜீவ்காந்திக்கு பிறகு இலங்கைக்கு வந்த எந்த ஜனாதிபதியும், பிரதமரும் யாராலும் தாக்கப்படவில்லை..

  ஆனால் ஈழத்தில் இதுதான் நடக்கிறதா? மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள் கொழுவி..

  டக்ளஸ் தேவானந்தா ஏன் இவ்வளவு உயர் பாதுகாப்பு வளையத்தின் கீழ் வலம் வருகிறார்..?

  கருணாவும், பிள்ளையானும் ஏன் தனி பாதுகாப்பிற்குள் இருக்கிறார்கள்.

  புலிகளை எதிர்க்கும் தலைவர்கள் அனைவருமே பாதுகாப்புடன்தானே எப்போதும் சுற்றி வருகிறார்கள்.

  அவர்களாகவே பயத்தை உருவாக்கிக் கொண்டுள்ளார்களா?

  அப்படித்தான் எனில் 3 மாதங்களுக்கு முன்னால் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் மனித வெடிகுண்டாக மாறி தன்னைத் தானே வெடித்துக் கொண்டு செத்தாளே ஒரு பெண்.. அது யார் அனுப்பி வைத்ததாம்..?

  பேசினால் பேசிக் கொண்டே போகலாம் கொழுவி.. குற்றம் சுமத்தினாலும் சுமத்திக் கொண்டேயிருக்கலாம் கொழுவி..

 38. We The People Says:

  http://newstodaynet.com/newsindex.php?section=12&catid=21&id=4205

  இவர்கள் தான் எதிரிகளை விட்டுவைப்பவர்களா?? கடும் போர் நடக்கும் போது வரதராஜ பெருமாளை கொல்ல சென்னைக்கு ஆட்க்ளை அனுப்பியவர்கள் தானே புலிகள்!!

  சரி கொலுவி சார் நீங்க பாட்டுக்கு சீக்கியர்கள் பயப்படுகிறீர்களா? ஆர்.எஸ்.எஸை பயப்படுகிறீர்களா என்று கேட்கிறீர்களே! ராஜீவ் கொலையை மன்னிக்க வேண்டும் என்கிறீர்களே! என் கேள்வி இதுவே! ஏன் புலிகள் எத்தனை வருடங்களாகியும் வரதராஜபெருமாளை மன்னிக்காமல் எப்படியும் கொலை செய்வது என்று கழுகு போல் வட்டமிட்டு வருகிறார்கள்?? இதற்கு உங்களிடம் பதில் இருக்கா??

 39. பொடியன்-|-SanJai Says:

  //தம்பீ கொன்னூட்ட போ.. கரீக்ட்டு.. கரீக்ட்டு..

  இவ்ளோ அரசியல் தெளிவை வைச்சுக்கிட்டு ‘அரசியல்’ எழுத மாட்டேங்குறியே..?//

  நன்றி அண்ணாச்சி..
  நானும் சொன்னேன் அண்ணாச்சி.. உலகம் உருண்டைன்னு.. பய புளளைங்க கும்பல் கூடி அடிக்க வந்துட்டாங்க.. அவங்க கண்ணுக்கு எட்டின தூரம் வரைக்கும் தட்டையாத் தான் இருக்காம். அதனால உருண்டைன்னு ஒத்துக்க மாட்டாங்களாம். சரி நான் தான் கூகுள் எர்த்லையும் பள்ளி கூடத்துல அந்த பச்ச கலர் உலக உருண்டையும் பார்த்து கன்பீஸ் ஆய்ட்டேன் போல இருக்குன்னு இப்போ அமைதி ஆய்ட்டேன்..

  ஒரு மேட்டர் தெரியுமாண்ணே.. கடவுள் நம்பிக்கை இருப்பவனுக்கு கோயில்ல இருக்கிறது சாமி.. கடவுள் நம்பிக்கை இல்லாதவனுக்கு அது வெறும் கல்லு.. கல்லுக்காரன் அதை எப்போவும் கடவுள்னு ஒத்துக்க மாட்டான். கடவுள்காரன் எப்போவும் அதை கல்லுன்னு ஒத்துக்க மாட்டான்.

  அட மடப் பசங்களா இது வெரும் கல்லுடா.. வேணும்னா பாருங்க நிரூபிக்கிறென் அப்டின்னு ஒரு சம்மட்டியால அதை ஒடைச்சி காட்டினிங்கன்னு வைங்க.. அட ஆமா இது கல்லு தான்.. நாம தான் யார் பேச்சையோ கேட்டு ஆட்டு மந்தைகளாட்டம் நம்பிட்டோம் அப்டின்னு சொல்ல மாட்டான்.. அய்யய்யோ.. என் கடவுளை சேதப் படுத்திட்டான்.. காய படுத்திட்டான்.. காயப் படுத்தினா ரத்தம் வருமே.. இதை ஒடைச்சா அப்டி ஒன்னும் வரலையேன்னு கூட அவன் யோசிக்க மாட்டான்..

  ஏன்னா கடவுள் என்பது நம்பிக்கை சார்ந்த சமாச்சாரம்.. அதே மாதிரி தான் அரசியலும்.. தன் தலைவன் மீது இருப்பது நம்பிக்கை.. அதை யாருக்காகவும் எதுக்காகவும் எவனும் விட்டுக் குடுக்க மாட்டான்..

  சம்பந்தமே இல்லாம ஏட்டிக்கு போட்டியா பேசுவாங்க.. நம்பளுக்கு இது மட்டுமே பொழப்பு இல்லை பாருங்க.. பாதில விவாதத்தை விட்டுட்டா, பயந்து ஓடிட்டாண்டான்னு சொல்றாங்க.. இந்த கர்மம் எல்லாம் நம்பள்க்கு தேவையான்னு தான் அப்பப்போ உங்களை மாதிரி பெரியவங்க பதிவுகள்ல மட்டும் அளவா அரசியல் பேசிக்கிறேன்..

 40. பொடியன்-|-SanJai Says:

  அண்ணே ரொம்ப நல்லவரே.. சிலர் பதிவை படிக்காமலே கமெண்ட் போடுவாங்க.. அது கூட பரவால்லா.. ஆனா பதிவை பார்க்காமலே கமெண்ட் அடிக்கிறிங்க பாருங்க.. இதெல்லாம் ஓவருண்ணே.. 🙂

  http://podian.blogspot.com/2008/10/blog-post_25.html

  இந்த பதிவை பாருங்க.. இதுல பின்னூட்டங்கள் எல்லாத்தையும் முழுசா படிங்க.. இதில் கொழுவிகள்( கொழுவி என்பது குழுப் பதிவு என்று இந்த பதிவில் ஒரு கொழுவி சொல்லி இருக்கிறார்) கூட விவாதம் பண்ணி இருக்காங்க.. எனக்கு பல தகவல்களை தெரிந்துக் கொள்ள முடிந்தது..

  நேரம் இருந்தால் இதையும் படிக்கலாம்.
  http://podian.blogspot.com/2008/11/blog-post_04.html

 41. கொழுவி Says:

  கருணாவும், பிள்ளையானும் ஏன் தனி பாதுகாப்பிற்குள் இருக்கிறார்கள்.//

  கருணாவை பிள்ளையான் குழு கொன்றுவிடும் எனவும் பிள்ளையானை கருணா குழு கொன்று விடுமென்ற பயத்தில்தான் 🙂

  அவர்கள் இருவருக்கும் தேனிலவு முடிந்து விவாகரத்து நடந்து விட்டதென தெரியும் தானே 🙂 அண்மையில் பிள்ளையானின் செயலரைச் சுட்டுக் கொண்டது புலிகளல்ல.. என பிள்ளையானே வாக்குமூலம் கொடுத்தாரே கேட்கலையா..?

  —-
  கருணாவினதும் டக்ளசினதும் உறுப்பினர்கள் இராணுவத்தில் துணை இராணுவ குழுவில்இராணுவத்தோடு இயங்குவதாக மகிந்த இந்தியாவில் வைத்து சொல்லியிருக்றார். கேட்டீங்க தானே ?

  ஆக ஒரு இராணுவ குழுவுக்குத் தலைவர்களை இராணுவ அதிகாரிகள் என்பீர்களா.. அல்லது அரசியல் தலைவர் என்பீர்களா..?

  —-

  சரி.. புலிகளை நம்பமுடியாது. ஆகவே இணங்க முடியாதென்கிறீர்கள்.

  அதே போல நேற்றுவரை மக்களுக்கு துயர் அளித்து வரும் சிங்கள அரசை எப்படி நம்பி புலிகள் ஆயுதங்களைப் போட வேண்டும் என்கிறீர்கள். ?

  அல்லது சிங்கள அரசுகளை நம்பலாம்.புலிகளை நம்ப முடியாது என்பதுதான் உங்களது பார்வையெனில் பயப்பிடாமல் நேரடியாக சொல்லுங்கள். பிரச்சனையில்லை.

  புலிகளை நம்ப முடியாது… எனில் எப்படிசிங்கள அரசுகளை நம்பி புலிகள் ஆயுதத்த்தை கைவிடுவது என விளக்க முடியுமா?

 42. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //We The People said…
  http://newstodaynet.com/newsindex.php?section=12&catid=21&id=4205
  இவர்கள்தான் எதிரிகளை விட்டுவைப்பவர்களா?? கடும் போர் நடக்கும்போது வரதராஜ பெருமாளை கொல்ல சென்னைக்கு ஆட்க்ளை அனுப்பியவர்கள் தானே புலிகள்!//

  இதை நமது கொலுவிகள் மறுக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்..

  //சரி கொலுவி சார் நீங்க பாட்டுக்கு சீக்கியர்கள் பயப்படுகிறீர்களா? ஆர்.எஸ்.எஸை பயப்படுகிறீர்களா என்று கேட்கிறீர்களே! ராஜீவ் கொலையை மன்னிக்க வேண்டும் என்கிறீர்களே! என் கேள்வி இதுவே! ஏன் புலிகள் எத்தனை வருடங்களாகியும் வரதராஜபெருமாளை மன்னிக்காமல் எப்படியும் கொலை செய்வது என்று கழுகு போல் வட்டமிட்டு வருகிறார்கள்?? இதற்கு உங்களிடம் பதில் இருக்கா??//

  புலிகளைப் பொறுத்தவரை அவர்களை ஆதரிப்பவர்கள் தமிழர்கள். ஆதரிக்காதவர்கள் தமிழர்கள் அல்ல என்பது மட்டுமல்ல சிங்கள ராணுவத்தைவிடவும் கொடிய எதிரிகள்..

  இப்படித்தான் தங்கள் ஆயுதக் கலாச்சாரத்தை ஈழத்தில் பரப்பியிருக்கிறார்கள்..

 43. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///பொடியன்-|-SanJai said…
  //தம்பீ கொன்னூட்ட போ.. கரீக்ட்டு.. கரீக்ட்டு.. இவ்ளோ அரசியல் தெளிவை வைச்சுக்கிட்டு ‘அரசியல்’எழுத மாட்டேங்குறியே?//
  நன்றி அண்ணாச்சி.. நானும் சொன்னேன் அண்ணாச்சி.. உலகம் உருண்டைன்னு.. பய புளளைங்க கும்பல் கூடி அடிக்க வந்துட்டாங்க.. அவங்க கண்ணுக்கு எட்டின தூரம் வரைக்கும் தட்டையாத்தான் இருக்காம். அதனால உருண்டைன்னு ஒத்துக்க மாட்டாங்களாம். சரி நான்தான் கூகுள் எர்த்லையும் பள்ளி கூடத்துல அந்த பச்ச கலர் உலக உருண்டையும் பார்த்து கன்பீஸ் ஆய்ட்டேன் போல இருக்குன்னு இப்போ அமைதி ஆய்ட்டேன்..
  ஒரு மேட்டர் தெரியுமாண்ணே.. கடவுள் நம்பிக்கை இருப்பவனுக்கு கோயில்ல இருக்கிறது சாமி.. கடவுள் நம்பிக்கை இல்லாதவனுக்கு அது வெறும் கல்லு.. கல்லுக்காரன் அதை எப்போவும் கடவுள்னு ஒத்துக்க மாட்டான். கடவுள்காரன் எப்போவும் அதை கல்லுன்னு ஒத்துக்க மாட்டான்.
  அட மடப் பசங்களா இது வெரும் கல்லுடா.. வேணும்னா பாருங்க நிரூபிக்கிறென் அப்டின்னு ஒரு சம்மட்டியால அதை ஒடைச்சி காட்டினிங்கன்னு வைங்க.. அட ஆமா இது கல்லுதான்.. நாமதான் யார் பேச்சையோ கேட்டு ஆட்டு மந்தைகளாட்டம் நம்பிட்டோம் அப்டின்னு சொல்ல மாட்டான்.. அய்யய்யோ.. என் கடவுளை சேதப்படுத்திட்டான்.. காயபடுத்திட்டான்.. காயப்படுத்தினா ரத்தம் வருமே.. இதை ஒடைச்சா அப்டி ஒன்னும் வரலையேன்னு கூட அவன் யோசிக்க மாட்டான்..
  ஏன்னா கடவுள் என்பது நம்பிக்கை சார்ந்த சமாச்சாரம்.. அதே மாதிரிதான் அரசியலும்.. தன் தலைவன் மீது இருப்பது நம்பிக்கை.. அதை யாருக்காகவும் எதுக்காகவும் எவனும் விட்டுக் குடுக்க மாட்டான்..
  சம்பந்தமே இல்லாம ஏட்டிக்கு போட்டியா பேசுவாங்க.. நம்பளுக்கு இது மட்டுமே பொழப்பு இல்லை பாருங்க.. பாதில விவாதத்தை விட்டுட்டா, பயந்து ஓடிட்டாண்டான்னு சொல்றாங்க.. இந்த கர்மம் எல்லாம் நம்பள்க்கு தேவையான்னு தான் அப்பப்போ உங்களை மாதிரி பெரியவங்க பதிவுகள்ல மட்டும் அளவா அரசியல் பேசிக்கிறேன்..//

  தெளிவா பேசுற கண்ணா.. ஒரு காலத்துல நானும் உன்னை மாதிரி ஒதுங்கித்தான் போனேன். சில சமயம் மாட்டிக்குவேன் இது மாதிரி..

  தலைவன் என்று சொல்லி ஒருவனை மனதில் வரித்துக் கொண்டால் பின்பு அவனை மனதிலிருந்து வெளியேற்றுவது கடினம்தான். நீ சொன்னது போல இது நம்பிக்கை சார்ந்த விஷயம்.. ஆயிரம் கொலைகள் செய்தாலும் தலைவர் நன்மைக்குத்தான் செய்கிறார் என்று மனது நம்பிக்கை வைக்கச் சொல்லும். அதைத்தான் பல்லாயிரணக்கான தமிழ் இளைஞர்கள் வைத்திருக்கிறார்கள். காலம்தான் அவர்களுக்கு உண்மையைப் புரிய வைக்க வேண்டும்.

 44. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///stanjoe said…
  //இப்போதும் யாராவது சீக்கியர் சோனியாவை கொலை செய்து விடுவார் என அஞ்சி அஞ்சித்தான் வாழ்கிறீர்களா? யாராவது ஆர் எஸ் எஸ் காரர் யாரோ ஒரு தலைவரை சுட்டுடுவான் என பயந்து பயந்துதான் அங்க எல்லாம் நடக்குதா ?
  அட அவ்வளவும் ஏன்? சார்க் மாநாட்டுக்கு போகும் போது யாராவது சிங்கள ஆர்மிகாரன் பிடரியில துப்பாக்கியால அடிச்சிடுவான் அடிச்சிடுவான் என நடுநடுங்கித்தான் மன்மோகன் சிங் கொழும்பு போனாரா?//
  Kozhuvi, LTTEs are more dangerous people than all these people you have referred, thats why the doubt. There are lot of difference between these people and LTTE interms of their thinking / attidude / war strategies. You just can not compare like x=y///

  Thanks Stonje Sir..

 45. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //பொடியன்-|-SanJai said…
  அண்ணே ரொம்ப நல்லவரே.. சிலர் பதிவை படிக்காமலே கமெண்ட் போடுவாங்க.. அதுகூட பரவால்லா.. ஆனா பதிவை பார்க்காமலே கமெண்ட் அடிக்கிறிங்க பாருங்க. இதெல்லாம் ஓவருண்ணே:)//

  அவ்ளோ பாசம்னு நினைக்கிறேன்..

  //http://podian.blogspot.com/2008/10/blog-post_25.html
  இந்த பதிவை பாருங்க.. இதுல பின்னூட்டங்கள் எல்லாத்தையும் முழுசா படிங்க.. இதில் கொழுவிகள்( கொழுவி என்பது குழுப் பதிவு என்று இந்த பதிவில் ஒரு கொழுவி சொல்லி இருக்கிறார்) கூட விவாதம் பண்ணி இருக்காங்க.. எனக்கு பல தகவல்களை தெரிந்துக் கொள்ள முடிந்தது..//

  படிச்சேன் ராசா.. எப்படி இது என் கண்ணுல படாம போச்சுன்னு தெரியலையே..

  நிறைய விஷயங்கள் சொல்லப்பட்டிருக்குல்ல.. எல்லாருக்குமே ஈழத் தமிழர்களுக்கு ஏதாவது ஒரு வழில உதவி செய்யணும்னு ஒரு எண்ணம் இருக்கு. ஆனா எப்படி உதவி பண்ணணும்கிறதுலதான் ஆளாளுக்கு குழப்பம்.. கொஞ்சம் முரண்பாடுகள்..

  //நேரம் இருந்தால் இதையும் படிக்கலாம்.
  http://podian.blogspot.com/2008/11/blog-post_04.html//

  படித்தேன். ஈழத் தமிழர்களைவிடவும் நாதியற்றவர்கள் மலையகத் தமிழர்கள் என்பது புரிகிறது. ஈழத் தமிழர்களுக்காகவாவது வாய்ஸ் கொடுத்த நான்கு பேர் இருக்கிறார்கள். இவர்களுக்கு..?

 46. கொழுவி Says:

  இப்போதைய நிலைமையில் கையில் துப்பாக்கி வைத்திருக்கும் எவருக்கும் ஆதரவு பெருகத்தான் செய்யும். //

  இந்த உங்கள் பதிலை – கருணா நாடாளுமன்றம் செல்கிறாரே – அவருக்கும் மக்கள் ஆதரவு உண்டே எனச் சொன்ன நண்பருக்கும் நீங்கள் அளித்த பதிலாக எடுத்து கொள்கிறேன்.

  உண்மைதமிழன் ஐயா-
  என்னுடைய கேள்வி இதுதான்
  புலிகளோடு இணங்கிப் போக முடியாது என நீங்கள் புலிகளிடத்தில் சொல்கிற சகல காரணங்களும் சிங்கள அரசுக்கும் பொருந்தும்-
  மூன்று மாதத்துக்கு முதல் (இது பிழையான காலக் கணக்கு) டக்ளசைக் கொல்ல முயலுகிற புலிகளுகளோடு இணங்க முடியாது. ஆனால் கடந்த மாதமும் தமிழக மீனவரை சொந்த நாட்டு மீனவரை கொல்லும் அரசோடு – இலங்கையில் தமிழரை கொல்லும் அரசோடு – இதுவரை 6000 விமான குண்டு வீச்சை 2 வருடத்தில் தமிழர் பகுதிகளில் நடாத்திய அரசோடு -70000 க்கு மேற்பட்ட தமிழரைக் கொன்று குவித்த அரசோடு – இந்திய அரசால் இணங்கிப் போக முடிகிறது.

  சரி – அதற்கு பிராந்திய பொருளாதார அரசியல் bla bla bla நலன்கள் இருக்கிறதாம். இருந்து விட்டு போகட்டும்.

  ஆனால் உண்மைத்தமிழனின் பார்வையில் – அறம் சார்ந்த அடிப்படையில் – இந்திய தேசியக் கொடியின் நடுவில் சுத்துகிற தர்மச் சக்கரம் கூறும் தர்மத்தின் அடிப்படையில் –

  சிங்கள அரசுக்கு இந்தியா செய்யும் ஆயுத உதவி நியாயமானது எனக் கருதுகிறீர்களா.. ?

  உங்களுக்கு சிரமமேயாயினும் ஆம் அல்லது இல்லையென பதில் சொல்லவும்.

  அவ்வளவும்தான்.

  மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கை நிறைவடைகிறது. கொழுவிகள் தளம் திரும்பவும்-
  நன்றி

 47. கொழுவி Says:

  ஆயிரம் கொலைகள் செய்தாலும் தலைவர் நன்மைக்குத்தான் செய்கிறார் என்று மனது நம்பிக்கை வைக்கச் சொல்லும்.//

  காலம்தான் அவர்களுக்கு உண்மையைப் புரிய வைக்க வேண்டும்.//

  ஆம். அதே காலம் – ராஜீவ் தொடர்பில் உங்களுக்கு உண்மைகளை புரியவைத்திருக்கும் எனவும் நம்புகிறேன்.
  நன்றி

 48. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///கொழுவி said…
  கருணாவும், பிள்ளையானும் ஏன் தனி பாதுகாப்பிற்குள் இருக்கிறார்கள்.//
  கருணாவை பிள்ளையான் குழு கொன்றுவிடும் எனவும் பிள்ளையானை கருணா குழு கொன்று விடுமென்ற பயத்தில்தான்:)///

  ஓ.. உங்களுக்கு வசதியான ஒரு பிரச்சினை அவர்களுக்குள் இருக்கிறது என்பது எனக்கு மறந்துவிட்டது.

  //அவர்கள் இருவருக்கும் தேனிலவு முடிந்து விவாகரத்து நடந்து விட்டதென தெரியும்தானே:) அண்மையில் பிள்ளையானின் செயலரைச் சுட்டுக் கொண்டது புலிகளல்ல.. என பிள்ளையானே வாக்குமூலம் கொடுத்தாரே கேட்கலையா..?//

  ம்.. கேட்டுச்சு.. கேட்டுச்சு.. இப்போது பிள்ளையானும், கருணாவும் கூட்டணி சேர்ந்துவிட்டால் பிரபாகரன் கூட்டணி சேர ஆள் அனுப்புவாரா அல்லது ஆவி எடுக்க ஆள் அனுப்புவாரா..?

  //கருணாவினதும் டக்ளசினதும் உறுப்பினர்கள் இராணுவத்தில் துணை இராணுவ குழுவில் இராணுவத்தோடு இயங்குவதாக மகிந்த இந்தியாவில் வைத்து சொல்லியிருக்றார். கேட்டீங்கதானே? ஆக ஒரு இராணுவ குழுவுக்குத் தலைவர்களை இராணுவ அதிகாரிகள் என்பீர்களா. அல்லது அரசியல் தலைவர் என்பீர்களா?//

  ஏதோ பிள்ளையானும், கருணாவும் உத்தமபுத்திரர்கள் போல் பேசுகிறீர்கள் கொழுவிகளே.. இதே கருணா இன்றைக்கும் புலித்தலைமைக்கு விசுவாசியாக இருந்திருந்தால் வீரத் தளபதி என்றிருப்பீர்கள்தானே.. ஆக உங்களுடைய ஆதரவும், பேச்சும், பார்வையும் புலிகளை வைத்துத்தான்.. எனக்கு இவர்கள் மூவருமே ஒன்றுதான்..

  உங்களது பிரபாகரனே பல படுகொலைகளை நடத்திவிட்டு அரசியல் தலைவர் மற்றும் தேசியத் தலைவர் போஸ்ட்டிங்கில் இருக்கும்போது இவர்கள் மட்டும் இருக்கக் கூடாதா? என்ன கொழுவிகளே..

  //சரி.. புலிகளை நம்பமுடியாது. ஆகவே இணங்க முடியாதென்கிறீர்கள்.
  அதே போல நேற்றுவரை மக்களுக்கு துயர் அளித்து வரும் சிங்கள அரசை எப்படி நம்பி புலிகள் ஆயுதங்களைப் போட வேண்டும் என்கிறீர்கள்?//

  சிங்கள அரசை நம்ப வேண்டாம். ஐ.நா. மற்றும் உலக நாடுகளை அணுகி அவர்கள் மூலமாக தாங்கள் சமரசத்திற்கு ஒத்துக் கொள்வதாகப் பேசி சம்மதிக்க வையுங்கள்..

  இலங்கைக்கு கடன் கொடுக்கும் நாடுகளின் கூட்டமைப்புக்கு செல்லட்டுமே.. கூட்டமைப்பின் வார்த்தைக்குக் கட்டுப்படுகிறோம். எங்களுக்கு ஒரு நல்ல தீர்வை வாங்கிக் கொடுங்கள். நாங்கள் ஆயுதங்களைக் கைவிடுகிறோம் என்று கேட்கச் சொல்லுங்கள்..

  அமைதி மார்க்கத்தில் பேச எவ்வளவோ வழிகள் உள்ளன.. மனம்தான் வேண்டும்..

 49. Anonymous Says:

  //…சிங்கள அரசை நம்ப வேண்டாம். ஐ.நா. மற்றும் உலக நாடுகளை அணுகி அவர்கள் மூலமாக தாங்கள் சமரசத்திற்கு ஒத்துக் கொள்வதாகப் பேசி சம்மதிக்க வையுங்கள்.. //

  ஐயா நாம் ஐ.நாவை அணுகினோம். பலநாடுகளுக்கூடாக. கடைசியாக நோர்வே! மறைமுகத்தடை போட்டது யார்? கேள்விப்பட்டால் அதிர்ந்து போவீர்கள்.

  இந்தியா!

  தனது செல்வாக்கைப் பாவித்து உலகநாடுகளை அப்பக்கமே வர முடியாமல் செய்து கொண்டுருப்பதை அறிவீரா?
  இன்னும் ஏன் ஈழ அகதிகளுக்கான பொறுப்பை ஐ.நாவிடம் கொடுக்கவில்லை இந்தியா என்ற கேள்வி உங்களுக்குள் எழவில்லையா?

  //…இலங்கைக்கு கடன் கொடுக்கும் நாடுகளின் கூட்டமைப்புக்கு செல்லட்டுமே..///

  இலங்கைக்கு அவசர (?#%&) நிதியாக 100கோடியும் தானியமும் கொடுத்தது யார்?

  //..கூட்டமைப்பின் வார்த்தைக்குக் கட்டுப்படுகிறோம். எங்களுக்கு ஒரு நல்ல தீர்வை வாங்கிக் கொடுங்கள். நாங்கள் ஆயுதங்களைக் கைவிடுகிறோம் என்று கேட்கச் சொல்லுங்கள்.. //

  இடைக்கால நிர்வாக கட்டமைப்பு, சுனாமி கட்டமைப்பு இன்னும் பல பல பல…..ஐயா பேசினால் வேதனைதான் மிஞ்சும்!

  /…அமைதி மார்க்கத்தில் பேச எவ்வளவோ வழிகள் உள்ளன.. மனம்தான் வேண்டும்../

  உண்மைதான். ரேடார் கொடுக்காமல் இருக்கவும்..அதை இயக்க 250 இற்குமேல் தொழில்நுட்பவியலாலர்களைக் கொடுகாமல் இருக்கவும்…100 கோடிகளுக்கு மேல் கனுதவிகள் செய்யாமல் இருக்கவும்….அணுகுண்டு செய்யாமல் இருக்கவும் எவ்வளவோ வழிகள் இருக்கிறது. மனம்தான் வேண்டும்!

 50. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///கொழுவி said…
  இப்போதைய நிலைமையில் கையில் துப்பாக்கி வைத்திருக்கும் எவருக்கும் ஆதரவு பெருகத்தான் செய்யும்//
  இந்த உங்கள் பதிலை – கருணா நாடாளுமன்றம் செல்கிறாரே – அவருக்கும் மக்கள் ஆதரவு உண்டே எனச் சொன்ன நண்பருக்கும் நீங்கள் அளித்த பதிலாக எடுத்து கொள்கிறேன்.//

  தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். இப்போது வாக்கெடுப்பு நடத்தினால்கூட பிரபாகரனுக்கு அடுத்த இடத்தில்தான் கருணாவும் அவர்தம் கூட்டாளிகளும் வருவர். ஆனால் பிரபாகரன் முதலில் முன் வருவாரா..?

  //உண்மைதமிழன் ஐயா-
  என்னுடைய கேள்வி இதுதான்.
  புலிகளோடு இணங்கிப் போக முடியாது என நீங்கள் புலிகளிடத்தில் சொல்கிற சகல காரணங்களும் சிங்கள அரசுக்கும் பொருந்தும்.//

  இது நீங்களாக சொல்கிற பேச்சு.. சிங்கள அரசு என்பது உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசாங்கம்.

  //மூன்று மாதத்துக்கு முதல் (இது பிழையான காலக் கணக்கு) டக்ளசைக் கொல்ல முயலுகிற புலிகளுகளோடு இணங்க முடியாது. ஆனால் கடந்த மாதமும் தமிழக மீனவரை சொந்த நாட்டு மீனவரை கொல்லும் அரசோடு//

  இது எங்கட நாட்டுப் பிரச்சினை. எங்க ஊர் அரசியல்வியாதிகளுக்கு அவங்கங்க வீட்ல எழவு விழுந்தால்தான் அது சாவு.. இல்லையேல் அது வருந்தத்தக்க சம்பவம்.. அவ்வளவுதான்..

  //இலங்கையில் தமிழரை கொல்லும் அரசோடு – இதுவரை 6000 விமான குண்டு வீச்சை 2 வருடத்தில் தமிழர் பகுதிகளில் நடாத்திய அரசோடு -70000-க்கு மேற்பட்ட தமிழரைக் கொன்று குவித்த அரசோடு – இந்திய அரசால் இணங்கிப் போக முடிகிறது.//

  விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் 10000 தமிழ் இளைஞர்களை காவு கொடுத்திருக்கிறாரே உங்களது பிரபாகரன்.. அவரை எந்த லிஸ்ட்டில் சேர்ப்பது..?

  //சரி – அதற்கு பிராந்திய பொருளாதார அரசியல் bla bla bla நலன்கள் இருக்கிறதாம். இருந்து விட்டு போகட்டும்.//

  முதல் காரணம் அதுவல்ல.. விடுதலைப்புலிகள் ஒழியட்டும். கூடவே இந்தியாதான் துணைக் கண்டத்தில் பெரிய ஆள். எங்களை மீறி வேறு யாரும் உங்களுக்கு உதவி செய்யக்கூடாது என்ற தற்பெருமையை பரப்ப நினைக்கும் அமைச்சர்கள், அதிகாரிகள் கூட்டம் டெல்லியில் நிறைந்திருக்கிறார்கள்.

  //ஆனால் உண்மைத்தமிழனின் பார்வையில் – அறம் சார்ந்த அடிப்படையில் – இந்திய தேசியக் கொடியின் நடுவில் சுத்துகிற தர்மச் சக்கரம் கூறும் தர்மத்தின் அடிப்படையில் -//

  எதுக்கு இவ்ளோ பிலட்ப்பு..? நானும் ஈழத் தமிழன் மாதிரிதான்.. அடிச்சுப் போட்டா கேக்க ஆள் இல்லாத அனாதைப் பயதான்.. சாதாரண சுள்ளான்..

  //சிங்கள அரசுக்கு இந்தியா செய்யும் ஆயுத உதவி நியாயமானது எனக் கருதுகிறீர்களா..?//

  நிச்சயமாக தவறு என்றுதான் சொல்கிறேன்.. ஆயத உதவி செய்யாமல் இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி அதன் மூலம் தீர்வு காண எவ்வளவு முடியுமோ அவ்வளவு தன் சக்தியைப் பயன்படுத்த வேண்டும் என்றுதான் சொல்கிறேன்..

  இதற்கு ராணுவ ரீதியாக தீர்வு காண முடியாது.. அரசியல் ரீதியாக மட்டுமே தீர்வு காண முடியும்.. சந்தர்ப்பவசமாக எங்கள் ஊரில் நடக்கும் பக்கா பிராடு அரசியலில் எங்களைப் போலவே உங்களது ஈழமும் மாட்டிக் கொண்டு முழிக்கிறது..

 51. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //கொழுவி said…
  ஆயிரம் கொலைகள் செய்தாலும் தலைவர் நன்மைக்குத்தான் செய்கிறார் என்று மனது நம்பிக்கை வைக்கச் சொல்லும்.//
  காலம்தான் அவர்களுக்கு உண்மையைப் புரிய வைக்க வேண்டும்.//
  ஆம். அதே காலம் – ராஜீவ் தொடர்பில் உங்களுக்கு உண்மைகளை புரியவைத்திருக்கும் எனவும் நம்புகிறேன். நன்றி//

  புரிந்தது.. அதுதான் விடாமல் இப்போதும் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோமே கொழுவிகளே.. போதாதா..?

 52. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///Anonymous said…
  //சிங்கள அரசை நம்ப வேண்டாம். ஐ.நா. மற்றும் உலக நாடுகளை அணுகி அவர்கள் மூலமாக தாங்கள் சமரசத்திற்கு ஒத்துக் கொள்வதாகப் பேசி சம்மதிக்க வையுங்கள்.. //
  ஐயா நாம் ஐ.நாவை அணுகினோம். பல நாடுகளுக்கூடாக. கடைசியாக நோர்வே! மறைமுகத் தடை போட்டது யார்? கேள்விப்பட்டால் அதிர்ந்து போவீர்கள். இந்தியா!//

  ஐ.நா.வை எந்த ரூபத்தில், எந்த வழியில் எப்போது அணுகினீர்கள்..? கொஞ்சம் சொல்ல முடியமா?

  நார்வேயுடனான பேச்சுவார்த்தை முறிய சிங்கள அரசுதான் முக்கியக் காரணமாக அமைந்தது அனைவருக்குமே தெரியும்..

  //தனது செல்வாக்கைப் பாவித்து உலக நாடுகளை அப்பக்கமே வர முடியாமல் செய்து கொண்டுருப்பதை அறிவீரா?//

  நான் நம்பவில்லை. இதில் டபுள் கேம் விளையாடியது சிங்கள அரசுதான்.. பேச்சுவார்த்தை வருவதுபோல் வந்து தகுதியில்லாத அதிகாரிகளை அனுப்பி வைத்து ஒட்டு மொத்தமாக அனைவரையும் கேலிக்கூத்தாக்கியது சிங்கள அரசுதான்..

  //இன்னும் ஏன் ஈழ அகதிகளுக்கான பொறுப்பை ஐ.நாவிடம் கொடுக்கவில்லை இந்தியா என்ற கேள்வி உங்களுக்குள் எழவில்லையா?//

  அதைத்தான் நான் எனது வைகோவுக்கு எழுதிய கடிதம் என்கிற பதிவில் சுட்டிக் காட்டியிருக்கிறேனே.. தவறு இந்த விஷயத்தில் இந்தியா மீதுதான்.. இதனைச் செய்தால் ஓட்டுக்கள் கிடைக்கும்.. எம்.பி. சீட்டுக்கள் கிடைக்கும் என்றால் இந்திய அரசியல்வியாதிகள் பைலை கையில் எடுப்பார்கள். இல்லையெனில் கவிதை எழுதவது, மேடை போட்டு பேசுவது என்பதோடு சரி. அதற்கு மேல் ஒன்றும் நடக்காது..

  //இலங்கைக்கு கடன் கொடுக்கும் நாடுகளின் கூட்டமைப்புக்கு செல்லட்டுமே..
  இலங்கைக்கு அவசர நிதியாக 100 கோடியும் தானியமும் கொடுத்தது யார்?//

  யார்..?

  //கூட்டமைப்பின் வார்த்தைக்குக் கட்டுப்படுகிறோம். எங்களுக்கு ஒரு நல்ல தீர்வை வாங்கிக் கொடுங்கள். நாங்கள் ஆயுதங்களைக் கைவிடுகிறோம் என்று கேட்கச் சொல்லுங்கள்//
  இடைக்கால நிர்வாக கட்டமைப்பு, சுனாமி கட்டமைப்பு இன்னும் பல பல பல. ஐயா பேசினால் வேதனைதான் மிஞ்சும்!//

  எல்லாவற்றுக்கும் மூல காரணம் ஆயுதம்தான்..

  //அமைதி மார்க்கத்தில் பேச எவ்வளவோ வழிகள் உள்ளன.. மனம்தான் வேண்டும்../
  உண்மைதான். ரேடார் கொடுக்காமல் இருக்கவும்..அதை இயக்க 250-ற்குமேல் தொழில்நுட்பவியலாலர்களைக் கொடுகாமல் இருக்கவும்…100 கோடிகளுக்கு மேல் கனுதவிகள் செய்யாமல் இருக்கவும் அணுகுண்டு செய்யாமல் இருக்கவும் எவ்வளவோ வழிகள் இருக்கிறது. மனம்தான் வேண்டும்!//

  உண்மைதான்.. வழி, வழியாக மக்கள் வலிகளைப் பற்றி அறியாதவர்களே எங்கட நாட்டில் தலைவர்களாக வந்து அமர்ந்து விடுகிறார்கள். சாகிற வரைக்கும் சீட்டை விட்டு எழுந்திருக்கிற மாட்டேங்குறாங்களே.. இவுங்களை வைச்சுக்கிட்டு நாங்க என்ன பண்றது..?

  ராடார் கொடுக்கிறது தப்புதான்.. பணம் கொடுக்கிறது தப்புதான். இந்தப் பணத்தை வைத்து ஆயுதங்களை வேறு நாட்டில் இருந்து இறக்குமதி செய்கிறது இலங்கை. இதையும் தெரிந்து வைத்துக் கொண்டு ஆட்டு ம்ந்தைகள் மாதிரி தலையை, தலையை ஆட்டுறாங்க எங்க ஊர் மந்திரிகள்.. ம்ஹும்.. இவங்களை வைச்சுக்கிட்டு உங்கட தீர்வை தீர்க்க முடியாது..

 53. benzaloy Says:

  கீழ் கண்ட வாக்கியத்தையும் கவனத்தில் கொள்க … அதனது URL கீழே உள்ளது :
  http://tamilmurasu.தமிழ்.sg/taxonomy/term/1

  “வெற்றி அல்லது வீர மரணம்” என்று அவர் தன் போராளி களுக்குக் கட்டளை பிறப்பிப்பார்
  என்று எதிர்பார்க்கப்படுவதாக வும் அவர்கள் சொன்னார்கள்.

 54. மண்ணின் மைந்தன் Says:

  முதலில் கொழுவியின் கட்டுரைக்கு நன்றி! பின்

  ///கர்கிரத்சிங் ராஜீவ்காந்தி பற்றியும், தீட்சித் பற்றியும், உங்களது தேசியத் தலைவர் மேதகு திரு.பிரபாகரனை கொலை செய்ய நடத்திய கூட்டு முயற்சி பற்றியும் குறிப்பிட்டுச் சொல்லி உங்கள் தரப்பு வாதமாக வைக்கும் உங்களுக்கு, இதே புத்தகத்தில் அவர் தலைமை ஏற்று நடத்திய யாழ்ப்பாணத்துப் போர் பற்றி அவர் சொல்லும் நியாயங்களை மட்டும் ஏற்க உங்களுக்கு மனம் வரவில்லை பாருங்கள்.. வாழ்க உமது தேச பக்தி.. ///

  இதை நக்கலுக்கோ அல்லது உணர்வோடுதான் சொன்னீர்களோ புரியவில்லை 7000 மக்களை 2 வருடத்துக்கு கொன்றொழித்து விட்டதற்க்கு நீயாயம் என் வெண்டிக்கிடக்கிறது

  எதை தடுக்க இந்திய நடுவன் அரசை நாடினோமோம் அதை இந்தியாவே அரங்கேற்றிக் கொண்டிருந்தது. மக்களின் கொலைகளை விடுவோம் யுத்ததில் அகப்பட்டு மக்கள் இறந்தார்கள் என நியாயப்படுத்த கூடும் கற்பழிப்பை எவ்வாறு நியாப்படுத்துவீர் எத்தனை இளம் பெண்கள் கற்பை இழந்து கதறீனார்கள். நீங்கள் திரைகளில் மட்டுமே கண்ட கதறல்களை நேரடியாக கண்டு மனங்களை புண்ணாக்கிய கையாலாக கோழைகளில் நானும் ஒருவன்

  அவற்றை எல்லாம் தடுக்க உயிர்நீத்த மாவீரர்களை இந்நாளில் நினைவு கூருவோமாக

 55. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //benzaloy said…
  கீழ் கண்ட வாக்கியத்தையும் கவனத்தில் கொள்க …
  அதனது URL கீழே உள்ளது :
  http://tamilmurasu.தமிழ்.sg/taxonomy/term/1
  “வெற்றி அல்லது வீர மரணம்” என்று அவர் தன் போராளிகளுக்குக் கட்டளை பிறப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர்கள் சொன்னார்கள்.//

  பார்த்தேன். கேட்டேன். படித்தேன் ஸார்..

  கட்டளை பிறப்பிக்கவில்லை. ஆனால் கண்ணீர் விடாமல் அழுதிருக்கிறார். போர் நிறுத்தத்திற்கு தான் எப்போதும் தயார் என்கிறார்.. இந்தியா துன்பியல் சம்பவத்தை மனதில் வைத்துக் கொள்ளாமல் தடையை நீக்கி தங்கள் துயர் துடைக்க வேண்டும் என்றுள்ளார்.

  பார்ப்போம்… எங்காளுக என்ன பண்றாங்கன்னு..?

  தகவலுக்கு மிக்க நன்றி ஸார்..

 56. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //மண்ணின் மைந்தன் said…
  முதலில் கொழுவியின் கட்டுரைக்கு நன்றி! பின்
  ///கர்கிரத்சிங் ராஜீவ்காந்தி பற்றியும், தீட்சித் பற்றியும், உங்களது தேசியத் தலைவர் மேதகு திரு.பிரபாகரனை கொலை செய்ய நடத்திய கூட்டு முயற்சி பற்றியும் குறிப்பிட்டுச் சொல்லி உங்கள் தரப்பு வாதமாக வைக்கும் உங்களுக்கு, இதே புத்தகத்தில் அவர் தலைமை ஏற்று நடத்திய யாழ்ப்பாணத்துப் போர் பற்றி அவர் சொல்லும் நியாயங்களை மட்டும் ஏற்க உங்களுக்கு மனம் வரவில்லை பாருங்கள்.. வாழ்க உமது தேச பக்தி.. ///
  இதை நக்கலுக்கோ அல்லது உணர்வோடுதான் சொன்னீர்களோ புரியவில்லை 7000 மக்களை 2 வருடத்துக்கு கொன்றொழித்து விட்டதற்க்கு நீயாயம் என் வெண்டிக்கிடக்கிறது? எதை தடுக்க இந்திய நடுவன் அரசை நாடினோமோம் அதை இந்தியாவே அரங்கேற்றிக் கொண்டிருந்தது. மக்களின் கொலைகளை விடுவோம் யுத்ததில் அகப்பட்டு மக்கள் இறந்தார்கள் என நியாயப்படுத்த கூடும்..? கற்பழிப்பை எவ்வாறு நியாப்படுத்துவீர்?//

  நான் எங்கே சாமி நியாயப்படுத்தினேன்.. நீங்கள் சொன்னதை வைத்து, சொன்னதை அப்படியே முழு நம்பிக்கை வைத்து உண்மை என்று ஏற்றுக் கொண்டுள்ளேன்..

 57. Anonymous Says:

  //…ஐ.நா.வை எந்த ரூபத்தில், எந்த வழியில் எப்போது அணுகினீர்கள்..? கொஞ்சம் சொல்ல முடியமா? ….//

  எல்லா வழிகளிலும் அணுகினோம். எம்போன்ற அடக்கப்பட்ட மக்களுக்காக உருவாக்கப்பட்டதல்ல ஐ.நா என்ற கசப்பான உண்மையையும். லஷ்மன் கதிர்காமர் சொன்னதுபோல் அவர்கள் ‘மலேரியா மருந்து தெளிப்பதோடு நிறுத்தட்டும்’ என்பதும் எவ்வளவு உண்மை என்பதையும் அறிந்து கொண்டோம். சுனாமி காலத்தில் கூட அவர்கள் கைவிரித்ததை (எமக்கு உண்மை தெரியும் ஆனால் எம்மிடம் அதிகாரம் இல்லை என சொன்னார்கள்) அதனால் தான் R2P Right to protect ஆணையை ஐ.நாவுக்கு வழங்க கோருகிறோம். தேவை எனின் திருமதி.கரன் பார்க்கருடன் தொடர்புகொண்டு பாருங்கள்.

  //…நார்வேயுடனான பேச்சுவார்த்தை முறிய சிங்கள அரசுதான் முக்கியக் காரணமாக அமைந்தது அனைவருக்குமே தெரியும்..///

  தெரியாதது அம்முயற்சிக்கு இந்தியா எவ்வளவு மறை முக தூண்டல்கள் கொடுத்தது என்பது. ஐயா இந்திய-ஸ்ரீலங்கா ஒப்பந்தம், அதற்கு முழு ஆதரவு, அதில் கொடுக்கப்பட்ட ஆணைக்கமைய தமிழ்மக்களுகான பாதுகாப்பு என முழங்குகின்ரே. அடில் கொடுக்கப்பட்ட உத்தரவாதம் என்ற வடக்கு-கிழக்கு இணைப்பை ஸ்ரீலங்கா அரசு உச்சநீதிமன்ற ஆணையில் நீக்கியதையிட்டு இந்திய அரசு ஒரு சொல்தானும் உதிர்த்ததா?

  //..நான் நம்பவில்லை. இதில் டபுள் கேம் விளையாடியது சிங்கள அரசுதான்.. பேச்சுவார்த்தை வருவதுபோல் வந்து தகுதியில்லாத அதிகாரிகளை அனுப்பி வைத்து ஒட்டு மொத்தமாக அனைவரையும் கேலிக்கூத்தாக்கியது சிங்கள அரசுதான்.. ///

  அப்போ நாம் என்ன செய்யலாம் என்கிறீர்கள்? இந்தக்கேலிக்கூத்தை ஸ்ரீலங்காவுக்கு கற்பித்தது யார்? சாட்சாத் ஸ்ரீமான்.ரொமேஷ் பண்டாரி என்கின்ற இந்தியர்! (1984 திம்பு பேச்சுவார்த்தை பக்கங்களைப் புரட்டவும்)

  //…எம்.பி. சீட்டுக்கள் கிடைக்கும் என்றால் இந்திய அரசியல்வியாதிகள் பைலை கையில் எடுப்பார்கள். இல்லையெனில் கவிதை எழுதவது, மேடை போட்டு பேசுவது என்பதோடு சரி. அதற்கு மேல் ஒன்றும் நடக்காது..///

  ஐ.நா அகதிகள் உயர் ஸ்தானிகரிடம் ஈழ அகதிகளை கையளிகாததற்கு வோட்டுகள் அல்ல காரணம். இந்தியாவின் மேலாதிக்க பிரச்சினை. ஐ.நா தலையிட்டால் தமது கையைவிட்டு போய்விடும் என்பது தான். பங்களாதேஷ் அகதிகள் பிரச்சினையை எவ்வாறு பாகிஸ்தானை தண்டிக்க பயன்பட்டது என அறிய முயலவும்.

  //
  இலங்கைக்கு அவசர நிதியாக 100 கோடியும் தானியமும் கொடுத்தது யார்?//

  யார்..? இந்தியாதான்!
  கடந்த வாஜ்பாய் அரசில் ஸ்ரீலங்கா பொருளாதாரச் சிக்கலை சந்தித்தபோது 100கோடி கடன் உறுதியை அளித்தது.ஏன் எனகேட்டதற்கு நாம் ஆய்தம் வாங்க கொடுக்கவில்லை அப்பணம் தானியம் வாங்க மட்டுமே பயன் படுத்தலாம் என கதை விட்டது.

  ஐயா இந்தியப்பணத்தில் தானியம் வாங்கிவிட்டு சொந்தப்பணத்தை ஆயுதம் வாங்கப்பயன்படுத்தலாம் என்பது காந்திடேசத்துக்கு தெரியாமல் போகலாம் ஆனால் ஈழத்தமிழருக்கு தெரியாதாக்க்கும்!!!

  //…எல்லாவற்றுக்கும் மூல காரணம் ஆயுதம்தான்..//

  யாருடையவை? யார்கொடுத்தவை? ஆய்தம் மட்டுமா அல்லது அவற்றை இயக்க வழங்கப்பட்ட தொழில்நுட்பவல்லுனர்களும் சேர்த்தா?

  ///இவங்களை வைச்சுக்கிட்டு உங்கட தீர்வை தீர்க்க முடியாது..///

  யாரும் அவ்வாறு கேட்கவில்லை! எங்களைப் போராட விடுங்கள். தயவு செய்து முட்டுக்கட்டைகள் போடாதீர்கள். ஐ.நா, ராடார், தொழில்நுட்ப உதவி, கடனுறுதி, அகதிபாதுகாப்பு போன்ற விடயங்களில்!

 58. Anonymous Says:

  //தனது செல்வாக்கைப் பாவித்து உலக நாடுகளை அப்பக்கமே வர முடியாமல் செய்து கொண்டுருப்பதை அறிவீரா?//

  நான் நம்பவில்லை. . ///

  எனக்கு ஐ.நா அதிகாரிகள் சொன்ன விடயம். இந்தியா மறைமுக தடைகள் போடுகின்றது என்பது. நான் பல இடைநிலை, கடைநிலை ஐ.நா பணியாளர்களிடம் பேசியிருக்கிறேன்!

 59. Anonymous Says:

  //ஏதோ பிள்ளையானும், கருணாவும் உத்தமபுத்திரர்கள் போல் பேசுகிறீர்கள் கொழுவிகளே.. இதே கருணா இன்றைக்கும் புலித்தலைமைக்கு விசுவாசியாக இருந்திருந்தால் வீரத் தளபதி என்றிருப்பீர்கள்தானே.. ஆக உங்களுடைய ஆதரவும், பேச்சும், பார்வையும் புலிகளை வைத்துத்தான்.. எனக்கு இவர்கள் மூவருமே ஒன்றுதான்..

  உங்களது பிரபாகரனே பல படுகொலைகளை நடத்திவிட்டு அரசியல் தலைவர் மற்றும் தேசியத் தலைவர் போஸ்ட்டிங்கில் இருக்கும்போது இவர்கள் மட்டும் இருக்கக் கூடாதா? என்ன கொழுவிகளே..//
  இலங்கை விடயங்களை மிக நன்றாக அறிந்து வைத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்

 60. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///Anonymous said…
  //ஏதோ பிள்ளையானும், கருணாவும் உத்தமபுத்திரர்கள் போல் பேசுகிறீர்கள் கொழுவிகளே.. இதே கருணா இன்றைக்கும் புலித்தலைமைக்கு விசுவாசியாக இருந்திருந்தால் வீரத் தளபதி என்றிருப்பீர்கள்தானே.. ஆக உங்களுடைய ஆதரவும், பேச்சும், பார்வையும் புலிகளை வைத்துத்தான்.. எனக்கு இவர்கள் மூவருமே ஒன்றுதான்..
  உங்களது பிரபாகரனே பல படுகொலைகளை நடத்திவிட்டு அரசியல் தலைவர் மற்றும் தேசியத் தலைவர் போஸ்ட்டிங்கில் இருக்கும்போது இவர்கள் மட்டும் இருக்கக் கூடாதா? என்ன கொழுவிகளே..//
  இலங்கை விடயங்களை மிக நன்றாக அறிந்து வைத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.///

  அவ்வளவையுபம் அல்ல.. ஏதோ கொஞ்சம் அளவுக்கு.. அவ்வளவுதான்.. இல்லாட்டி மோத முடியுங்களா..?

 61. benzaloy Says:

  ஓர் புறம் விடுதலை போராளி, மறு
  புறம் பயங்கரவாதி …

  இரண்டுமே துவக்கு தூக்கி தான் …

  எந்தப் பெரிய கண்டத்துக்கு சுதந்திரம்
  பெற்றுக் கொடுத்தார் மகாத்மா காந்தி…

  சுய நலம் அற்ற போராளி உள்ளானா…

  கள்ளக் கடத்தல் தானே துணை?!

 62. benzaloy Says:

  இயக்கம், கழகம், யுத்தம், தீவிரவாதம்
  சகலதும் தூரத்தில் சுவையாகவே
  இருக்கும் …
  இளம் வயதில் கொம்யூனிஸ்ற் கட்சியில்
  இணைவது போன்று…
  நெருங்கிய பார்வையிலேயே சுய
  ரூபம் வெளிக்கும் …
  கம்போடியா பொல் பொற் எப்படி…

 63. கொண்டோடி Says:

  ஒரு தகவலுக்காக,
  கொண்டோடி வலைப்பதியத் தொடங்கி நான்கு வருடங்களாகின்றன. தொடக்கத்தில் தனிவலைப்பதிவில்தான் கொண்டோடி எழுதி வந்தான்(ஆம்! ஆண்பால்தான்).
  வலைமுகவரி இது.
  http://www.tsunamymullai.blogspot.com/

  பின்னர் கொழுவியின் வலைப்பதிவிலேயே கொண்டோடியாக எழுதத் தொடங்கினேன். இதுகுறித்த அறிவிப்புவிடுகை இது.
  http://koluvithaluvi.blogspot.com/2007/08/blog-post_15.html

  கொண்டோடி என்ற பெயரில் எழுதுவது தனியொருவனே என்பதை இத்தால் அறியத் தருகிறேன்.
  ஆனால் கொழுவி தனியொருவரல்லர் என்பதைக் கொழுவியே சொல்லிவிட்டார்.
  ====================
  நுட்பத் தகவலொன்று.

  ஒரு வலைத்தளத்தில் பலர் எழுதுவதற்கு ஒரே கடவுச்சொல்லைத்தான் எல்லோரும் பயன்படுத்த வேண்டுமென்பதில்லை. அப்படிப் பயன்படுத்தினால் அது ஒரே பெயரில்தான் வெளிவரும். வேறுவேறு பெயர்களில் எழுதமுடியாது.
  ஆனால் ஒவ்வொருவரும் தமக்கெனத் தனிக்கணக்கை வைத்துக்கொண்டு ஒரே வலைத்தளத்தில் எழுதலாம். ஒருவரின் நுழைவுச்சொல்லோ கடவுச்சொல்லோ மற்றவருக்குத் தெரியவேண்டிய அவசியமேதுமில்லை.

  தமிழ் வலையுலகில் நிறைய கூட்டு வலைப்பதிவுகள் இருக்கின்றன. அவைகள் இயங்குவது அப்படித்தான்.

 64. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///Anonymous said…
  //ஐ.நா.வை எந்த ரூபத்தில், எந்த வழியில் எப்போது அணுகினீர்கள்..? கொஞ்சம் சொல்ல முடியமா?//
  எல்லா வழிகளிலும் அணுகினோம். எம்போன்ற அடக்கப்பட்ட மக்களுக்காக உருவாக்கப்பட்டதல்ல ஐ.நா என்ற கசப்பான உண்மையையும். லஷ்மன் கதிர்காமர் சொன்னதுபோல் அவர்கள் ‘மலேரியா மருந்து தெளிப்பதோடு நிறுத்தட்டும்’ என்பதும் எவ்வளவு உண்மை என்பதையும் அறிந்து கொண்டோம். சுனாமி காலத்தில்கூட அவர்கள் கைவிரித்ததை (எமக்கு உண்மை தெரியும். ஆனால் எம்மிடம் அதிகாரம் இல்லை என சொன்னார்கள்) அதனால்தான் R2P Right to protect ஆணையை ஐ.நாவுக்கு வழங்க கோருகிறோம். தேவை எனின் திருமதி.கரன் பார்க்கருடன் தொடர்புகொண்டு பாருங்கள்.//

  முதலில் நம் மீது உள்ள தீவிரவாத இயக்கம் என்கிற பெயரை நம்மிடமிருந்து அப்புறப்படுத்தும் முதல் முயற்சியில் நாம் ஈடுபடுவோம். பின்பு உலகத் தமிழர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து உலகத்தின் கவனத்தை ஈர்ப்போம்.. நம் சக்திக்கு மீறியதெனில் நம்முடைய ஒற்றுமையைப் போன்ற சக்தி வேறெதையும் நாம் நாட முடியாது.

  //நார்வேயுடனான பேச்சுவார்த்தை முறிய சிங்கள அரசுதான் முக்கியக் காரணமாக அமைந்தது. அனைவருக்குமே தெரியும்..///
  தெரியாதது அம்முயற்சிக்கு இந்தியா எவ்வளவு மறைமுக தூண்டல்கள் கொடுத்தது என்பது. ஐயா இந்திய-ஸ்ரீலங்கா ஒப்பந்தம், அதற்கு முழு ஆதரவு, அதில் கொடுக்கப்பட்ட ஆணைக்கமைய தமிழ் மக்களுகான பாதுகாப்பு என முழங்குகின்ரே. அடில் கொடுக்கப்பட்ட உத்தரவாதம் என்ற வடக்கு-கிழக்கு இணைப்பை ஸ்ரீலங்கா அரசு உச்சநீதிமன்ற ஆணையில் நீக்கியதையிட்டு இந்திய அரசு ஒரு சொல்தானும் உதிர்த்ததா?///

  இதுவரையில் சொல்லவில்லை. இனிமேலும் சொல்ல மாட்டார்கள். புலிகளை ஒழித்துக் கட்ட சிங்கள அரசுக்கு என்னென்ன உதவிகளை மறைமுகமாக செய்ய முடியுமோ அத்தனையையும் எமது டெல்லி அரசு செய்து முடிக்கும். அந்த மன நிலையில்தான் இப்போதைய ஆள்பவர்களும், அதிகார வர்க்கமும், அரசியல்வியாதிகளும் உள்ளன.

  ///நான் நம்பவில்லை. இதில் டபுள் கேம் விளையாடியது சிங்கள அரசுதான்.. பேச்சுவார்த்தை வருவதுபோல் வந்து தகுதியில்லாத அதிகாரிகளை அனுப்பி வைத்து ஒட்டு மொத்தமாக அனைவரையும் கேலிக்கூத்தாக்கியது சிங்கள அரசுதான்.. ///
  அப்போ நாம் என்ன செய்யலாம் என்கிறீர்கள்? இந்தக்கேலிக்கூத்தை ஸ்ரீலங்காவுக்கு கற்பித்தது யார்? சாட்சாத் ஸ்ரீமான்.ரொமேஷ் பண்டாரி என்கின்ற இந்தியர்!(1984 திம்பு பேச்சுவார்த்தை பக்கங்களைப் புரட்டவும்)///

  இதுவரையில் நான் படிக்கவில்லை. இனி படிக்கிறேன்..

  //எம்.பி. சீட்டுக்கள் கிடைக்கும் என்றால் இந்திய அரசியல்வியாதிகள் பைலை கையில் எடுப்பார்கள். இல்லையெனில் கவிதை எழுதவது, மேடை போட்டு பேசுவது என்பதோடு சரி. அதற்கு மேல் ஒன்றும் நடக்காது..///
  ஐ.நா அகதிகள் உயர் ஸ்தானிகரிடம் ஈழ அகதிகளை கையளிகாததற்கு வோட்டுகள் அல்ல காரணம். இந்தியாவின் மேலாதிக்க பிரச்சினை. ஐ.நா தலையிட்டால் தமது கையைவிட்டு போய்விடும் என்பதுதான். பங்களாதேஷ் அகதிகள் பிரச்சினையை எவ்வாறு பாகிஸ்தானை தண்டிக்க பயன்பட்டது என அறிய முயலவும்.///

  அகதிகள் பிரச்சினையில் இந்தியாவின் நிலை தெரிந்ததுதான். கிழக்கு பாகிஸ்தானில் இருந்து அன்றைக்கு இந்தியாவுக்குள் நுழைந்திருந்த அகதிகளின் எண்ணிக்கை பல லட்சங்களைத் தாண்டியதும், அப்பிரச்சினையில் போர் தொடுக்க இந்தியாவுக்குக் கிடைத்த ஒரு காரணம். பாகிஸ்தானை தண்டிப்பதுதான் முதல் காரணம் என்பதனை நானும் ஒத்துக் கொள்கிறேன். அதற்கு இந்திராவைப் போன்ற ஒரு உறுதிமிக்க தலைவரும் வேண்டும்.. மோதிப் பார்த்துவிடுவோம் என்று நினைக்கக் கூடியவர் தேவை.. இப்போது எங்களிடம் அப்படிப்பட்டவர்தான் இல்லை. அதுதான் பிரச்சினை..

  //இலங்கைக்கு அவசர நிதியாக 100 கோடியும் தானியமும் கொடுத்தது யார்?//
  யார்..? இந்தியாதான்! கடந்த வாஜ்பாய் அரசில் ஸ்ரீலங்கா பொருளாதாரச் சிக்கலை சந்தித்தபோது 100 கோடி கடன் உறுதியை அளித்தது. ஏன் என கேட்டதற்கு நாம் ஆய்தம் வாங்க கொடுக்கவில்லை அப்பணம் தானியம் வாங்க மட்டுமே பயன்படுத்தலாம் என கதை விட்டது.
  ஐயா இந்தியப் பணத்தில் தானியம் வாங்கிவிட்டு சொந்தப் பணத்தை ஆயுதம் வாங்கப் பயன்படுத்தலாம் என்பது காந்திடேசத்துக்கு தெரியாமல் போகலாம். ஆனால் ஈழத் தமிழருக்கு தெரியாதாக்க்கும்!!!///

  அதுதான் முன்பே சொன்னனே.. அதிகார வர்க்கத்தின் ஆதரவு சிங்கள அரசுக்கு உண்டு. அதனை சாதாரண மக்களாகிய நாங்கள் எப்படித் தடுப்பது..?

  //எல்லாவற்றுக்கும் மூல காரணம் ஆயுதம்தான்..//
  யாருடையவை? யார் கொடுத்தவை? ஆய்தம் மட்டுமா அல்லது அவற்றை இயக்க வழங்கப்பட்ட தொழில் நுட்பவல்லுனர்களும் சேர்த்தா?///

  நான் இரு தரப்பு ஆயுதங்களையும் சேர்த்துத்தான் சொன்னேன்..

  ///இவங்களை வைச்சுக்கிட்டு உங்கட தீர்வை தீர்க்க முடியாது..///
  யாரும் அவ்வாறு கேட்கவில்லை! எங்களைப் போராட விடுங்கள். தயவு செய்து முட்டுக்கட்டைகள் போடாதீர்கள். ஐ.நா, ராடார், தொழில்நுட்ப உதவி, கடனுறுதி, அகதி பாதுகாப்பு போன்ற விடயங்களில்!///

  நீங்கள் இப்படி சொல்கிறீர்கள்.. உங்கள் பெயரைச் சொல்லி எங்கட அரசியல்வியாதிகள் உண்ணாவிரதம், போராட்டம் என்று கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

  உங்களது தேசியத் தலைவர் தனது வீர உரையில் நாங்கள் தலையிட்டே தீர வேண்டும்.. உதவியே ஆக வேண்டும் என்கிறார்..

  ஒன்றும் புரியவில்லை..

 65. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///Anonymous said…
  //தனது செல்வாக்கைப் பாவித்து உலக நாடுகளை அப்பக்கமே வர முடியாமல் செய்து கொண்டுருப்பதை அறிவீரா?// நான் நம்பவில்லை///
  எனக்கு ஐ.நா அதிகாரிகள் சொன்ன விடயம். இந்தியா மறைமுக தடைகள் போடுகின்றது என்பது. நான் பல இடைநிலை, கடைநிலை ஐ.நா பணியாளர்களிடம் பேசியிருக்கிறேன்!///

  இது பற்றி எனக்கும் தெரியவில்லை. பக்கத்து தேசம். பெரிய தேசம். நம்மால்தான் எதுவும் நடக்க வேண்டும் என்கிற அதிகாரப் பரவல் எமது அதிகாரிகளிடத்தில் உண்டு. அரசியல்வியாதிகளிடம் உண்டு. அதன் தொடர்ச்சி இதுவாக இருக்கலாம்..

 66. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //benzaloy said…
  ஓர்புறம் விடுதலை போராளி, மறுபுறம் பயங்கரவாதி …
  இரண்டுமே துவக்கு தூக்கிதான் …
  எந்தப் பெரிய கண்டத்துக்கு சுதந்திரம்
  பெற்றுக் கொடுத்தார் மகாத்மாகாந்தி…
  சுய நலம் அற்ற போராளி உள்ளானா. கள்ளக் கடத்தல்தானே துணை?!//

  பென்ஸ் ஸார்..

  என்ன கொஞ்சம் வித்தியாசமா சுற்றி வளைத்து கவிதை விடிவில் பின்னூட்டங்களை அடித்துத் தள்ளுகிறீர்கள்..

  சுவையாகத்தான் உள்ளது..

 67. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //benzaloy said…
  இயக்கம், கழகம், யுத்தம், தீவிரவாதம் சகலதும் தூரத்தில் சுவையாகவே இருக்கும் …
  இளம் வயதில் கொம்யூனிஸ்ற் கட்சியில் இணைவது போன்று…
  நெருங்கிய பார்வையிலேயே சுய
  ரூபம் வெளிக்கும். கம்போடியா பொல்பொற் எப்படி?//

  சப்தமாகச் சொல்லாதீர்கள்.. தமிழினத் துரோகி பட்டம் காத்திருக்கிறது..

 68. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //கொண்டோடி said…
  ஒரு தகவலுக்காக,
  கொண்டோடி வலைப்பதியத் தொடங்கி நான்கு வருடங்களாகின்றன. தொடக்கத்தில் தனிவலைப்பதிவில்தான் கொண்டோடி எழுதி வந்தான்(ஆம்! ஆண்பால்தான்).
  வலைமுகவரி இது.
  http://www.tsunamymullai.blogspot.com/
  பின்னர் கொழுவியின் வலைப்பதிவிலேயே கொண்டோடியாக எழுதத் தொடங்கினேன். இதுகுறித்த அறிவிப்புவிடுகை இது.
  http://koluvithaluvi.blogspot.com/2007/08/blog-post_15.html
  கொண்டோடி என்ற பெயரில் எழுதுவது தனியொருவனே என்பதை இத்தால் அறியத் தருகிறேன்.
  ஆனால் கொழுவி தனியொருவரல்லர் என்பதைக் கொழுவியே சொல்லிவிட்டார்.
  ====================
  நுட்பத் தகவலொன்று.
  ஒரு வலைத்தளத்தில் பலர் எழுதுவதற்கு ஒரே கடவுச் சொல்லைத்தான் எல்லோரும் பயன்படுத்த வேண்டுமென்பதில்லை. அப்படிப் பயன்படுத்தினால் அது ஒரே பெயரில்தான் வெளிவரும். வேறுவேறு பெயர்களில் எழுதமுடியாது. ஆனால் ஒவ்வொருவரும் தமக்கெனத் தனிக்கணக்கை வைத்துக்கொண்டு ஒரே வலைத்தளத்தில் எழுதலாம். ஒருவரின் நுழைவுச்சொல்லோ கடவுச்சொல்லோ மற்றவருக்குத் தெரியவேண்டிய அவசியமேதுமில்லை.
  தமிழ் வலையுலகில் நிறைய கூட்டு வலைப்பதிவுகள் இருக்கின்றன. அவைகள் இயங்குவது அப்படித்தான்.//

  தங்களுடைய அறிவிப்புக்கும், தெளிவித்தலுக்கும் நன்றி கொண்டோடி ஸார்..

  நான் யாருடனும் கூட்டுப் பதிவு வைத்துக் கொண்டதில்லை என்பதனால் எனக்கு இது புரியாமல் போய்விட்டது.. சிரமத்திற்கு மன்னிக்கவும்..

 69. benzaloy Says:

  இனி என்னையா எனக்கு செய்ய இருக்கு … இந்த 71 வயது உயிர் எவருக்கு தேவை … ஆகாய குண்டினால் கூரை அழிக்கப்பட்ட வீட்டை இழந்தேன் … 3 தரம் வீட்டை விட்டு துரத்தப்பட்டேன்… சகல வீட்டு பொருட்களையும் இழந்தேன் … நடுத்தெருவில் நின்ற எனக்கு இனி என்ன …

 70. benzaloy Says:

  கவிதையை என் எழுத்தில் காண்பதற்கு தங்களில் தான் அய்யா
  கவிதையம்மா குடிகொண்டுள்ளார்…
  மனக்கிடக்கை…வேறொன்றுமல்ல
  …நன்றி

 71. benzaloy Says:

  யாரிடம் தான் ஆதிக்கம் செலுத்தும்
  ஆசை இல்லை … உனக்கு என்ன
  நன்மை என்னென்ன தேவை என்பது எனக்குத் தெரியும், அதை நான் தீர்மானிப்பேன், நீயல்ல … இந்த
  பிலசொபி தானே…

 72. benzaloy Says:

  இதென்ன … சிக்கல் ஓண்ணுமா
  தெரியலயே…கை ஓங்கியபோது,
  டாய் சண்டய நித்தாட்ணமின்னா
  என்னிய தழுவுங்கடா…ஓய்ந்த சமயம்,
  சண்டய நித்தாட்டுகண்ணே, சும்மா
  பாத்துகிண்ணு நிக்றீங்ங்ங்களே…
  சிறு வயதில் ஞாபகமா.

 73. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //benzaloy said…
  இதென்ன… சிக்கல் ஓண்ணுமா
  தெரியலயே… கை ஓங்கியபோது,
  டாய் சண்டய நித்தாட்ணமின்னா
  என்னிய தழுவுங்கடா… ஓய்ந்த சமயம், சண்டய நித்தாட்டுகண்ணே, சும்மா பாத்துகிண்ணு நிக்றீங்ங்ங்களே.
  சிறு வயதில் ஞாபகமா?//

  இதைத்தான் புலித் தலைமை பல காலமாக செய்து வருகிறது.. எப்போதெல்லாம் அவர்கள் நிலைமை சிக்கலாகிறதோ அப்போதெல்லாம் தமிழ்நாட்டில் உடனுக்குடன் போராட்டங்கள் கிளம்பி விடும்.. எல்லாம் நடிப்புதான்..

 74. benzaloy Says:

  இந்த நடிப்புக்கு பணம் கிடைக்குமா
  ஆமா அந்த ''மானா'' வரியில தொடங்குரவரு
  ராஜீவ் காந்தியே கொன்னது cia காரங்கன்னு
  சொன்னாராமே >>>
  இது உண்ண்மையா சார் >>>
  இவளொவு விவேகமா தமிழ் நாடு >>>
  நன்றி சார் >>> எல்லாமே புதுசு புதுசா வருது சார்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: