"புலிகள்தான் எங்களின் ஏக பிரதிநிதிகள்" – பதிவர் ‘கொண்டோடி’யின் கோபம்!

நவம்பர் 23, 2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நிஜமாகவே புலி வாலைப் பிடித்த கதையாகப் போய்க் கொண்டிருக்கிறது எனது ஈழம் பற்றிய பதிவுகள்..

நண்பர் கொழுவியைத் தொடர்ந்து நண்பர் கொண்டோடி இப்போது வந்திருக்கிறார்.

“பின்னூட்டத்தில் கொடுக்கும் பெரிய செய்திகளை தனிப்பதிவாகப் போடுவது கொழுவிக்கு மட்டும்தானா.. எனக்கில்லையா..?” என்று கேட்கிறார் கொண்டோடி. அவருக்கு இல்லாமலா..? நமக்கு அனைவரும் ஒன்றுதானே..

ஆகவே, நண்பர் கொண்டோடி எழுதிய பின்னூட்டம் இங்கே தனிப்பதிவாகப் போடப்படுகிறது. அதற்கான எனது பதிலையும் இத்துடன் எழுதியுள்ளேன்.

“உண்மைத் தமிழன்,

புலிகள் ஈழத்தமிழரின் பிரதிநிதிகளா இல்லையா என்பதை ஈழத்தமிழர்தான் நிர்ணயிக்க வேண்டும். உலகில் பெரிய ஜனநாயக நாடு என்று பீற்றிக் கொள்ளும் நீங்கள்தான் அந்த ஜனநாயகப் பண்பைப் பேண மறுக்கிறீர்கள். அதைவிடக் கொடுமை, மற்றவர்களுக்கு ஜனநாயகம் பற்றிப் போதிப்பது.புலிகள்தான் எங்களின் ஏக பிரதிநிதிகள் என்பதை ஈழத்தவர்கள் ‘சட்ட ரீதியாக’ வெளிப்படுத்திவிட்டார்கள். கடந்த பாராளுமன்றத் தேர்தலில்தான் அவர்கள் அதைச் செய்தார்கள்.

இலங்கையில் வடக்கு – கிழக்கில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல் ஒரேயொரு பிரச்சினையை முன்வைத்து மட்டுமே நடைபெற்றது. புலிகளா, இல்லையா என்பதுதான் அது. “வேறெந்தப் பிரச்சினையும் அத்தேர்தலில் தொடர்புடவில்லை.” புலிகளே தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் என்பதை அடிப்படையாக வைத்தே தமிழ்த் தேசியக்கூட்டமைப்புப் போட்டியிட்டது. அவர்கள் பெற்ற வெற்றி என்னவென்பதைப் பாருங்கள். சிறிலங்காவின் அரசியல் யாப்பிற்கிணங்க யாழ்ப்பாணத்தில் ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினர் பதவி மட்டும் டக்ளஸ் தேவானந்தாவுக்குச் சென்றது. இவ்வளவுக்கும் டக்ளஸ் பெற்ற விருப்பு வாக்குகளைவிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு பாராளுமன்றுக்குத் தெரிவாகாத சிறிகாந்தா பெற்ற விருப்பு வாக்குகள் கிட்டத்தட்ட நான்கு மடங்கு. இதற்குப் பிறகும், “புலிகள் ஈழத்தவரின் பிரதிநிதிகள் அல்லர்” என்று புலம்புவது சிறுபிள்ளைத்தனமானது. துக்ளக் சோ முதல் டோண்டு வரை ஒரு கும்பல் இதைத் திருப்பத் திருப்பச் சொல்லிக்கொண்டுள்ளது. சோ, டோண்டு உள்ளிட்ட கும்பலுக்கு வேறு பிரச்சினை. எங்களின் ‘மாற்றுக் கருத்து மாணக்கங்கள்’ தம்மை யாரும் கவனிப்பதில்லை என்ற வயிற்றெரிச்சலில் அப்படிப் புலம்புகிறார்கள். ஆனால் உங்களுக்கு என்ன வந்தது?

*** கவனிக்க : அந்தத் தேர்தலில் புலிகள் கள்ள வாக்குப் போட்டுத்தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை வெல்ல வைத்தார்கள் என்று ‘ஆனந்தசங்கரித்தனமாக’ உளறவேண்டாம். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் எவற்றிலும் தேர்தல் நடைபெறவில்லை. முழுவதும் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில்தான் நடைபெற்றது. காவல்துறை மட்டுமன்றி சிறிலங்கா இராணுவமும் புடைசூழத்தான் வாக்களிப்பு நடைபெற்றது. சிறிலங்கா இராணுவமும் சேர்ந்துதான் புலிகளைத் தமிழரின் ஏக பிரதிநிதிகள் என்று நிறுவினார்கள் என்று சொன்னால் சுப்ரமணியசாமிகூடச் சிரிக்கக்கூடும்.

++++++++++++++++++++++++++++ கொழுவியின் பின்னூட்டத்தை மட்டும்தான் தனிப்பதிவாகப் போடுவீர்களா? கொண்டோடிக்கு அந்தக் கொடுப்பினை இல்லையோ?;-)”

எனது பதில்

நண்பர் கொண்டோடி.. வணக்கம். முதற்கண் தங்களது முதல் வருகைக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டு வரவேற்கிறேன். ராபின்ஹூட் கதைகளின் அடித்தளமே உதவிட யாருமே இல்லாத மக்களின் தவிப்புதான்.. அதுதான் முகமூடி அணிந்த ஒரு நல்லவனை அம்மக்களுக்கு அடையாளம் காட்டுகிறது. தமது மக்களைக் கொல்பவனை நானும் கொல்வேன் என்பவன் செய்வதும் கொலைதான்.. நம் மக்களுக்கு காவல் தெய்வம் அய்யனாராக நான் ஒருவனே 24 மாநிலத்திலும் காவல் காப்பேன். மற்ற தெய்வங்கள் என்று யாருமே இருக்கக் கூடாது என்று சொல்லி மற்ற தெய்வங்களாக முன் வந்தவர்களை தீர்த்துக் கட்டவும் தயங்காத ராபின்ஹூட்டுகளும் உலகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். இரும்புக் கை மாயாவி கதையில் முடிச்சு மட்டுமே மாயாவியிடம் சொல்லப்படும் தீர்வை அவர்தான் சொல்லுவார்.. இதுதான் அனைத்துவித காட்பாதர் கதைகளிலும் சொல்லப்படும் நீதி. தாங்கள் ஒன்றைத் தெளிவாக எடுத்துரைத்துள்ளீர்கள். விடுதலைப்புலிகள் மட்டுமே ஈழ மக்களின் பிரதிநிதிகள் என்று.. இது பாதியளவு உண்மைதான். நானும் ஏற்றுக் கொள்கிறேன்.. தமிழ் ஈழ மக்களிடையே மற்ற இயக்கங்களைவிடவும், மற்ற அரசியல் கட்சிகளை விடவும் விடுதலைப் புலிகளுக்கு மக்கள் ஆதரவு அதிகம் என்பது கண்கூடான ஒன்று. இதனை இந்திய அரசியல்வாதிகளும் தெரிந்துதான் வைத்திருக்கிறார்கள். அப்படி உறுதியாகத் தெரிந்த பின்புதான் இந்திய அமைதி காப்புப்படை “இனிமே இவுக சகவாசமே நமக்கு வேணாம் சாமி” என்று சொல்லிவிட்டுத்தான் ஈழத்தில் இருந்து புறப்பட்டது. தெரிந்த ஒரு விஷயத்தை தெரியாதது போல் நடிப்பதில் அரசியல்வாதிகளை யாரும் மிஞ்ச முடியாது என்பது உங்களுக்கே தெரியும். அதிலும் இந்திய அரசியல்வாதிகள்தான் இந்த விஷயத்தில் உலகத்திலேயே எக்ஸ்பர்ட் என்பதும் நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை. ஒரு முறை பட்டுவிட்டதால் இனிமேல் எதற்குப் போய் பட வேண்டும் என்பதாலும்தான் இந்திய அரசு இதில் தாமரை இலை மேல் விழும் தண்ணீர் போல ஒட்டாத குறையாக தொட்டுக் கொண்டுள்ளது. இனி எந்த அரசியல் கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் இலங்கை பிரச்சினையில் ஈழத்து மக்களுக்காக இலங்கை அரசை எதிர்த்துக் குரல் கொடுக்கும் என்பதை என்னால் நம்ப முடியாது. சோ அவர்களும், டோண்டு அவர்களும் புலிகளை எதிர்ப்பது அவரவர் கொள்கைப்படி.. அவர்கள் எழுதுவதைப் படிக்கவே போட்டா போட்டி இருக்கும்போது அவர்கள் எதற்கு, யார் மீது வயித்தெரிச்சல்படப் போகிறார்கள். வலுவில்லாத வாதம் உங்களுடையது.. பெருவாரியான ஈழ மக்களிடையே புலிகளுக்குத்தான் ஆதரவு அதிகம் என்பதனை நான் என்றுமே மறுக்கவில்லை. அதே சமயம் புலிகளுக்கு எதிர்ப்பாளர்கள் என்று ஒரு பிரிவினரும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்றுதான் சொல்லி வருகிறேன்.. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருக்கும் மக்கள் நிச்சயம் புலிகளின் பேச்சுக்கு அடங்கித்தான் போவார்கள். கண்ணுக்குத் தெரிய சாவு தொலைவில் நிற்கும்போது இருக்குமிடத்தில் கிடைப்பதை உண்டு, வாழ்க்கையை ஓட்டத்தான் அனைவரும் நினைப்பார்கள். அதில் ஒன்றும் தவறில்லையே.. புலிகள் சிங்கள ராணுவத்தை மட்டுமே எதிரிகளாகக் கருதியிருந்தால் அது ஈழப் போராட்டம் குழப்பமே இல்லாமல் போக வழி வகுத்திருக்கும். அதை விட்டுவிட்டு தனது ராணுவத்தைத் தவிர வேறு எந்த ராணுவத்தாலும் ஈழ விடுதலை கிடைத்துவிடக் கூடாது என்ற அதிகார வெறியில் பிரபாகரன் செய்த சகோதர யுத்தத்தினால்தான் புலிகள், இன்றைக்கு அதே ஈழ மக்களில் ஒரு சிலரின் எதிரிகளாக மாறிவிட்டனர். புலி செய்யும் கொலையும், சிங்கள ராணுவம் செய்யும் கொலையும் இரண்டும் ஒன்றுதான்.. இரு தரப்பிலும் சிந்துவது மனித ரத்தம்தான்.. அவர்கள் இறங்கி வராத நிலையில் நம்மால் முடிந்ததைத்தான் செய்ய முடியும் என்று புலிகள் துப்பாக்கியைக் கீழே போட முடியாதபடி காலச் சக்கரத்தில் மாட்டிக் கொண்டார்கள். அதிலிருந்து விடுவிக்க வேண்டுமெனில் அவர்களேதான் அதனைச் செய்ய வேண்டும். ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு ஜனநாயக வழிக்குத் திரும்ப அவர்களே முதல் படி எடுத்து வைத்தால் என்ன என்பதுதான் எனது கேள்வி..

43 பதில்கள் to “"புலிகள்தான் எங்களின் ஏக பிரதிநிதிகள்" – பதிவர் ‘கொண்டோடி’யின் கோபம்!”

 1. benzaloy Says:

  சபாஷ் ………….இதற்கு மேலாக யாதும் தேவையே இல்லை …தேவையானால் நாம் இருக்கிறோம்

 2. கொழுவி Says:

  ஜனநாயக வழியென்றால் என்ன ? விளக்கவும் 🙂 கட்சி கூட்டணி லாரிகளில் கூட்டம் பிரியாணி வேட்டி சேலை இலவச டிவி இவைகளா?புலிகள் ஆயுதத்தை கீழே போட்டு வருவதானால் இலங்கை அரசு என்ன செய்ய வேண்டும்? உங்களது ஆலோசனைகள் புலிகளுக்கு மட்டும் தானா? தற்போது இந்திய மக்களின் பிரதிநிதிகள் யார்? இந்தியாவோடு பேச வேண்டுமெனில் உலக நாடுகள் யாரோடு பேசுகின்றன? ஏன் சார்க் மாநாட்டுக்கு மன்மோகன் சிங் போகிறார்? ஏன் தமிழக நலத் திட்டங்களில் கருணாநிதி கையெழுத்திடுகிறார்? கருணாநிதியும் ஜெயலலிதாவும் இணைந்து காவேரி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என நான் எழுதினால் உங்களுக்கு சிரிப்பு வருமா ? அல்லது அதுதான் உங்கள் எதிர்பார்ப்பா?

 3. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //கொழுவி said…ஜனநாயக வழியென்றால் என்ன ? விளக்கவும்:)கட்சி கூட்டணி லாரிகளில் கூட்டம் பிரியாணி வேட்டி சேலை இலவச டிவி இவைகளா?புலிகள் ஆயுதத்தை கீழே போட்டு வருவதானால் இலங்கை அரசு என்ன செய்ய வேண்டும்? உங்களது ஆலோசனைகள் புலிகளுக்கு மட்டும்தானா?தற்போது இந்திய மக்களின் பிரதிநிதிகள் யார்? இந்தியாவோடு பேச வேண்டுமெனில் உலக நாடுகள் யாரோடு பேசுகின்றன? ஏன் சார்க் மாநாட்டுக்கு மன்மோகன் சிங் போகிறார்? ஏன் தமிழக நலத் திட்டங்களில் கருணாநிதி கையெழுத்திடுகிறார்?கருணாநிதியும் ஜெயலலிதாவும் இணைந்து காவேரி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என நான் எழுதினால் உங்களுக்கு சிரிப்பு வருமா? அல்லது அதுதான் உங்கள் எதிர்பார்ப்பா?//கொழுவி..பாகம்-2 பதிவில் வாசகன் என்பவர் ஒரு பின்னூட்டம் இட்டிருக்கிறார். தயவு செய்து அதனைப் படித்துப் பார்க்கவும்..

 4. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //கொழுவி said…ஜனநாயக வழியென்றால் என்ன ? விளக்கவும்:)கட்சி கூட்டணி லாரிகளில் கூட்டம் பிரியாணி வேட்டி சேலை இலவச டிவி இவைகளா?புலிகள் ஆயுதத்தை கீழே போட்டு வருவதானால் இலங்கை அரசு என்ன செய்ய வேண்டும்? உங்களது ஆலோசனைகள் புலிகளுக்கு மட்டும்தானா?தற்போது இந்திய மக்களின் பிரதிநிதிகள் யார்? இந்தியாவோடு பேச வேண்டுமெனில் உலக நாடுகள் யாரோடு பேசுகின்றன? ஏன் சார்க் மாநாட்டுக்கு மன்மோகன் சிங் போகிறார்? ஏன் தமிழக நலத் திட்டங்களில் கருணாநிதி கையெழுத்திடுகிறார்?கருணாநிதியும் ஜெயலலிதாவும் இணைந்து காவேரி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என நான் எழுதினால் உங்களுக்கு சிரிப்பு வருமா? அல்லது அதுதான் உங்கள் எதிர்பார்ப்பா?//கொழுவி..பாகம்-2 பதிவில் வாசகன் என்பவர் ஒரு பின்னூட்டம் இட்டிருக்கிறார். தயவு செய்து அதனைப் படித்துப் பார்க்கவும்..

 5. மதிபாலா Says:

  தமிழ் ஈழ மக்களிடையே மற்ற இயக்கங்களைவிடவும், மற்ற அரசியல் கட்சிகளை விடவும் விடுதலைப் புலிகளுக்கு மக்கள் ஆதரவு அதிகம் என்பது கண்கூடான ஒன்று. இதனை இந்திய அரசியல்வாதிகளும் தெரிந்துதான் வைத்திருக்கிறார்கள். அப்படி உறுதியாகத் தெரிந்த பின்புதான் இந்திய அமைதி காப்புப்படை “இனிமே இவுக சகவாசமே நமக்கு வேணாம் சாமி” என்று சொல்லிவிட்டுத்தான் ஈழத்தில் இருந்து புறப்பட்டது. ///அதாவது , நீங்களே ஒத்துக்கொண்டபடி , புலிகள் ஈழத்தமிழர் பிரதிநிதிகள்….புலிகளை எதிர்த்துப் போரிட்ட அமைதிப்படை என்பது தமிழர்களை எதிர்த்துப்போரிட்டது….சரிதானே நண்பரே??? ( ஆமாம் , உண்மைத் தமிழன் – பெயர்க்காரணம் என்ன?)

 6. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //மதிபாலா said…தமிழ் ஈழ மக்களிடையே மற்ற இயக்கங்களைவிடவும், மற்ற அரசியல் கட்சிகளை விடவும் விடுதலைப் புலிகளுக்கு மக்கள் ஆதரவு அதிகம் என்பது கண்கூடான ஒன்று. இதனை இந்திய அரசியல்வாதிகளும் தெரிந்துதான் வைத்திருக்கிறார்கள். அப்படி உறுதியாகத் தெரிந்த பின்புதான் இந்திய அமைதி காப்புப்படை “இனிமே இவுக சகவாசமே நமக்கு வேணாம் சாமி” என்று சொல்லிவிட்டுத்தான் ஈழத்தில் இருந்து புறப்பட்டது. ///அதாவது, நீங்களே ஒத்துக்கொண்டபடி, புலிகள் ஈழத் தமிழர் பிரதிநிதிகள்….புலிகளை எதிர்த்துப் போரிட்ட அமைதிப்படை என்பது தமிழர்களை எதிர்த்துப் போரிட்டது.. சரிதானே நண்பரே???//மக்களின் மனோபாவம் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மாறியிருக்குமோ என்கிற ஐயத்தில்தான் உலகம் முழுவதுமே முறை வைத்து தேர்தல் நடத்துகிறார்கள்.அன்றைய சூழ்நிலையில் மக்களின் பெருவாரியான ஆதரவு அவர்களுக்கு இருந்திருக்கலாம். பெரிய காரணம் தேவையில்லை.. சிங்களப் படையினரின் அட்டகாசத்தினால்தான்.. அத்துமீறலால்தான்.. எப்போதுமே வெகுஜன மக்கள் தங்களை யார் காப்பாற்றுகிறார்களோ அவர்களை காட்பாதர் என்பார்கள். அது போலத்தான்..பின்பு அதே துப்பாக்கியால் தங்களையும் கொல்ல முற்பட்ட போதுதான் பாதிப் பேர் புலிகளுக்கு எதிராகத் திரும்பி இன்றுவரையிலும் எதிர்ப்புணர்வு மங்காமல் இருந்து வருகிறது.. அப்படியானால் புலிகளும் தமிழ் ஈழத்து மக்களிடையே ஆதரவுள்ள ஒரு பிரிவினர் என்பதை ஒத்துக் கொள்ளலாம்..இந்தப் பிரிவுகளில் யாருக்கு ஆதரவு அதிகம் என்பது தெரிய வேண்டுமெனில் அது ஜனநாயக ரீதியாக நடாத்தப்படும் வாக்கெடுப்பினால்தான் முடியும்.. அந்தச் சூழ்நிலை வரும்வரையில் நாம் உறுதியாகச் சொல்ல முடியாது..//(ஆமாம் , உண்மைத் தமிழன் – பெயர்க் காரணம் என்ன?)//ஏதாவது வித்தியாசமாக வைக்க வேண்டுமே என்று நினைத்தேன். வைத்துவிட்டேன்.. அவ்வளவுதான்..

 7. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  பிளாக்கர் சொதப்பியதால் தமிழ்மணத்தில் ஏற மறுக்கிறது.. என்ன செய்வது..?

 8. கொழுவி Says:

  அன்றைய சூழ்நிலையில் மக்களின் பெருவாரியான ஆதரவு அவர்களுக்கு இருந்திருக்கலாம். பெரிய காரணம் தேவையில்லை.. சிங்களப் படையினரின் அட்டகாசத்தினால்தான்.. அத்துமீறலால்தான்.. எப்போதுமே வெகுஜன மக்கள் தங்களை யார் காப்பாற்றுகிறார்களோ அவர்களை காட்பாதர் என்பார்கள். அது போலத்தான்..//ம்.. இதை பற்றிதானே கொண்டோடி இந்த பதிவில் எழுதியிருக்கிறார். 2002 இல்தானே இந்த தேர்தல் நடந்தது.புலிகளுக்கு எதிரான மக்கட் கூட்டம் உள்ளது. அது சகஜமானதுதானே..ஆனால் உங்கள் ஜனநாயகம் என்ன சொல்கிறது? பெரும்பான்மையானவர்களின் கருத்துதானே ஜனநாயகம் ? அப்படிதானே சொல்கிறீர்கள்? கிட்டத்தட்ட 80 சதவீதத்திற்கும் மேல் புலிகளை ஆதரிக்கிறார்கள். சரி 50 சதவீதத்துக்கு மேல் என்று வைத்து கொண்டாலும் ஜனநாய் அகம் என்ன சொல்கிறது ?

 9. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //கொழுவி said…அன்றைய சூழ்நிலையில் மக்களின் பெருவாரியான ஆதரவு அவர்களுக்கு இருந்திருக்கலாம். பெரிய காரணம் தேவையில்லை.. சிங்களப் படையினரின் அட்டகாசத்தினால்தான்.. அத்துமீறலால்தான்.. எப்போதுமே வெகுஜன மக்கள் தங்களை யார் காப்பாற்றுகிறார்களோ அவர்களை காட்பாதர் என்பார்கள். அது போலத்தான்..//ம்.. இதை பற்றிதானே கொண்டோடி இந்த பதிவில் எழுதியிருக்கிறார். 2002-ல்தானே இந்த தேர்தல் நடந்தது.புலிகளுக்கு எதிரான மக்கட் கூட்டம் உள்ளது. அது சகஜமானதுதானே..ஆனால் உங்கள் ஜனநாயகம் என்ன சொல்கிறது?பெரும்பான்மையானவர்களின் கருத்துதானே ஜனநாயகம் ? அப்படிதானே சொல்கிறீர்கள்? கிட்டத்தட்ட 80 சதவீதத்திற்கும் மேல் புலிகளை ஆதரிக்கிறார்கள். சரி 50 சதவீதத்துக்கு மேல் என்று வைத்து கொண்டாலும் ஜனநாய் அகம் என்ன சொல்கிறது..?//ஜனநாயகம் சரி என்றுதான் சொல்கிறது. ஆனால் சட்டம்தான் விட மறுக்கிறது.. புலிகளில் ஒருவர், இருவர் தாங்களாகவே இங்கு வந்து கொலைகளைச் செய்ததாகத் தெரிந்தால் விட்டுவிடலாம். ஆனால் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் சொல்லித்தான் படுகொலையை நடத்தினார்கள் என்னும் பட்சத்தில் எமது மக்கள் ஆதரவு விஷயத்தையெல்லாம் கையில் தூக்கிப் பார்க்கவில்லை. தூக்கியெறிந்துவிட்டார்கள்..1983-ல் இருந்த தமிழக மக்களின் மனநிலை இப்போது இல்லை. காரணம் நாங்கள் இல்லை. உமது தலைவரும், அவரது பொடியன்களும்..

 10. ஆட்காட்டி Says:

  எனப்பா சண்டை? ஒரு வாக்குப் பதிவு நடத்திரலாமே?

 11. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //ஆட்காட்டி said…எனப்பா சண்டை? ஒரு வாக்குப் பதிவு நடத்திரலாமே?//யாருக்கு ஆதரவு எண்டா..? கண்டிப்பாக பொடியன்கள்தான் ஜெயிப்பார்கள். அவர்கள்தான் வலையுலகில் நிறைய உள்ளார்கள்.உண்மையாகவே நடத்த வேண்டியது வடக்கு, கிழக்கு மாகாணங்களில்.. அதுவும் ஜனநாயகமான வழியான தேர்தல் முறையில்.. அது என்றைக்கு நடக்கிறதோ அன்றைய நாளை ஈழ மக்களின் துயரம் நீங்கத் தொடங்கிய நாள் என்றே சொல்லலாம்.

 12. வெத்து வேட்டு Says:

  then why ltte is fighting in Srilanka? Singalese are the majority and their democratically elected govt was doing everything.Why didn’t tamils follow it?

 13. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //வெத்து வேட்டு said…then why ltte is fighting in Srilanka? Singalese are the majority and their democratically elected govt was doing everything. Why didn’t tamils follow it?//வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிங்களவர்கள்தான் மெஜாரிட்டியா..? அப்ப தமிழர்கள் எங்கனதான் அதிகமா இருக்காங்க.. ஏனுங்க சாமி ஆள் மாத்தி ஆள் குழப்புறீங்க..?

 14. கொழுவி Says:

  Singalese are the majority and their democratically elected govt was doing everything.Why didn’t tamils follow it?//வெத்து வேட்டு..அதே அதே.. நீங்க சொல்றதைதான் சிறிலங்காவும் சொல்கிறது. அதாவது முழு இலங்கைக்கும் நாமதான் மெஜாரிட்டி – அதனால நமக்கு பின்னால வாங்க என.. அதைதான் தவறு – தமிழர்கள் போர்த்துகீசருக்கு முதல் தன்னாட்சியுடன் இருந்தவர்கள். ஆங்கிலேயர்கள் சிங்களவரோடு இணைத்து விட்டார்கள். நமக்கு அது பிடிக்கவில்லை. அவர்களின் பெரும்பான்மையாக இருக்கும் பட்சத்தில் நமது நலன்கள் பாதிக்கப்படும். அதனால தனியாட்சி சுயாட்சி ஏதோ ஒன்றை கொடுங்க.. போயிர்றோம் என்கிறோம்.உதாரணமா இந்தியால எந்த இனமும் யாரும் 50 வீதத்துக்கு மேல இல்லை. ஒருபேச்சுக்கு இந்திகாரங்க 80 வீதம் மிச்ச இனமெல்லாம் 20 வீதத்தில அடங்கிடுது. இப்போ மாநில ஆட்சி முறை கிடையாது. இந்தியா என்ற ஒற்றை ஆட்சிதான். டெல்லியில் ஒரேயொரு பாராளுமன்றம். இப்போ நிலைமையை பாருங்க . பாராளுமன்றத்தில யாரு அதிகம் இருப்பாங்க ?அவங்க அதிகம் இருந்தால் என்ன நடக்கும் ?தமிழக நலனுக்கா இந்தி நலனுக்கா முன்னுரிமை கொடுக்கப்படும் ?யோசியுங்க சார்.. யோசியுங்க.அப்ப கூட ஐய்யோ இது ஜனநாயகம். அவங்க பின்னாலயே போயிடுவோம் எனத்தான் யோசிப்பீங்களா..

 15. ஆட்காட்டி Says:

  நீங்க என்ன தான் சொல்ல வாரிங்க? வாக்குப் பதிவ வடக்கு கிழக்கிலேயே நடத்தலாம். பயமா? பகுத்தறிவு என்பது சிலருக்கு இருப்பதில்லை. இதில் யார் யாரோ எல்லாம் சேர்த்தி. இன்னமும் காந்தியார் அஹிம்சையால் தான் இந்தியாவுக்கு விடுதலை வாங்கித் தாந்தார் என்று நம்பினால் யார் குற்றம்? இந்தியா சுதந்திரமடைந்து 50 வருடங்கள் கழித்தும் இன்னமும் அடிமை மனப் பான்மையில தானே இருக்கு, உங்களுக்கு ஏன் சுதந்திரம் என்று எண்ணுகிறீர்களா? இந்தியா அப்பிடியே உலக சமாதானத்துக்கு உழைக்குது, நம்பச் சொல்லுங்கோ. இந்தியர்களுக்கு வேணுமானால் அப்படி இருக்கலாம், மற்றவர்களுக்கு? ஏன் பங்களாதேஷ்காரன கேட்டுப் பாருங்க. உறைக்கும். நீங்க இப்பிடியே அஹிம்சை, வல்லரசு எண்டு புழுகிக் கொண்டே இருங்க. கடைசியில பிச்சை தான் எடுக்கணும். யதார்த்தவாதியாக இருங்கள். ஒழுங்கா கெல்மட் போட்டு ஓட்டுங்கடா எண்டாலே கேக்காத மரமண்டையள் இருக்கிற இடத்தில இருந்து கொண்டு சட்டம் பேச நல்லாத் தான் இருக்கும். முதலில உங்கட அரசுகளை உங்கட நாட்டுக்கு ஏதாவது உருப்படியா செய்யச் சொல்லுங்க. அப்புறம் மற்றவங்களுக்கு முதுகு சொறியலாம்.

 16. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //கொழுவி said…Singalese are the majority and their democratically elected govt was doing everything. Why didn’t tamils follow it?//வெத்து வேட்டு.. அதே அதே.. நீங்க சொல்றதைதான் சிறிலங்காவும் சொல்கிறது. அதாவது முழு இலங்கைக்கும் நாமதான் மெஜாரிட்டி – அதனால நமக்கு பின்னால வாங்க என..அதைதான் தவறு – தமிழர்கள் போர்த்துகீசருக்கு முதல் தன்னாட்சியுடன் இருந்தவர்கள். ஆங்கிலேயர்கள் சிங்களவரோடு இணைத்து விட்டார்கள். நமக்கு அது பிடிக்கவில்லை. அவர்களின் பெரும்பான்மையாக இருக்கும் பட்சத்தில் நமது நலன்கள் பாதிக்கப்படும். அதனால தனியாட்சி சுயாட்சி ஏதோ ஒன்றை கொடுங்க.. போயிர்றோம் என்கிறோம்.உதாரணமா இந்தியால எந்த இனமும் யாரும் 50 வீதத்துக்கு மேல இல்லை. ஒருபேச்சுக்கு இந்திகாரங்க 80 வீதம் மிச்ச இனமெல்லாம் 20 வீதத்தில அடங்கிடுது.இப்போ மாநில ஆட்சி முறை கிடையாது. இந்தியா என்ற ஒற்றை ஆட்சிதான். டெல்லியில் ஒரேயொரு பாராளுமன்றம். இப்போ நிலைமையை பாருங்க . பாராளுமன்றத்தில யாரு அதிகம் இருப்பாங்க? அவங்க அதிகம் இருந்தால் என்ன நடக்கும்? தமிழக நலனுக்கா இந்தி நலனுக்கா முன்னுரிமை கொடுக்கப்படும்? யோசியுங்க சார்.. யோசியுங்க. அப்ப கூட ஐய்யோ இது ஜனநாயகம். அவங்க பின்னாலயே போயிடுவோம் எனத்தான் யோசிப்பீங்களா..//தனியாட்சி, சுயாட்சி கோரிக்கை எழுப்புவதில் தவறில்லை. நமக்கு நியாயமான காரணங்கள் இருக்கின்றன.ஆனால் இரு கைகள் தட்டினால் சப்தம் பலமாக வருமே.. அதுபோல தமிழ் மக்கள், தமிழர் கட்சிகள் அனைத்தும் ஒருமித்தக் குரலில் எழும்பியிருக்க வேண்டும்.. அதில் நமக்குள் இருக்கும் கருத்து, பேதங்கள் பல்வேறு யூகங்களை கட்டவிழ்த்துவிட்டிருக்க.. இப்போது யார், யாரை ஆதரிப்பது என்கிற நிலைமைக்குக் கொண்டு போய்விட்டிருக்கிறது..நீங்கள் சொல்வது போல் இந்தி பெரும்பான்மையாக இருந்திருந்தால் எங்களுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும். ஆனால் நாங்கள் ஆயுதத்தைத் தூக்கியிருப்போமா என்பது மட்டும் சந்தேகமே..

 17. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //ஆட்காட்டி said…நீங்க என்னதான் சொல்ல வாரிங்க? வாக்குப் பதிவ வடக்கு கிழக்கிலேயே நடத்தலாம். பயமா?//நடத்துங்க.. யாருக்கு பயம்..? பயமே தேவையில்லை.. கிடைக்கப் போவது மக்கள் அங்கீகாரம் மட்டுமே.. இப்போது நீங்கள் பேசுவது தமிழீழ விடுதலைப்புலிகள் என்னும் அமைப்புக்கு ஆதரவாக.. அப்படித்தானே.. அதனை எதிர்ப்பவர்களும் ஈழத்து மண்ணில் அதே தமிழர்களாக இருக்கின்றபோது வாக்கெடுப்பு நடத்துவதில் தவறில்லையே.. பின்பு யாருக்கு மெஜாரிட்டி இருக்கிறதோ அவர் ஈழத்து மக்கள் பிரதிநிதிகளாக அங்கீகரிக்கப்பட்டு யாருடன் வேண்டுமானாலும் பேசட்டும்.. யார் தடுப்பது..?//பகுத்தறிவு என்பது சிலருக்கு இருப்பதில்லை. இதில் யார் யாரோ எல்லாம் சேர்த்தி. இன்னமும் காந்தியார் அஹிம்சையால்தான் இந்தியாவுக்கு விடுதலை வாங்கித் தாந்தார் என்று நம்பினால் யார் குற்றம்?//சத்தியமா இது எங்க தப்புதான்.. பகுத்தறிவு இல்லாததனால்தான் இது மாதிரி விஷயத்திலெல்லாம் தலையிட்டு வாங்கிக் கட்டிக் கொள்கிறோம்..//இந்தியா சுதந்திரமடைந்து 50 வருடங்கள் கழித்தும் இன்னமும் அடிமை மனப் பான்மையிலதானே இருக்கு, உங்களுக்கு ஏன் சுதந்திரம் என்று எண்ணுகிறீர்களா? இந்தியா அப்பிடியே உலக சமாதானத்துக்கு உழைக்குது, நம்பச் சொல்லுங்கோ. இந்தியர்களுக்கு வேணுமானால் அப்படி இருக்கலாம், மற்றவர்களுக்கு? ஏன் பங்களாதேஷ்காரன கேட்டுப் பாருங்க. உறைக்கும். நீங்க இப்பிடியே அஹிம்சை, வல்லரசு எண்டு புழுகிக் கொண்டே இருங்க. கடைசியில பிச்சைதான் எடுக்கணும். யதார்த்தவாதியாக இருங்கள்.//பரவாயில்லை.. பிச்சையெடுத்தாலும் எடுப்போமே தவிர.. படுகொலைகளுக்கு நாங்கள் காரணமாகவும் இருக்க மாட்டோம். நாங்களும் செய்ய மாட்டோம்.//ஒழுங்கா கெல்மட் போட்டு ஓட்டுங்கடா எண்டாலே கேக்காத மரமண்டையள் இருக்கிற இடத்தில இருந்து கொண்டு சட்டம் பேச நல்லாத்தான் இருக்கும். முதலில உங்கட அரசுகளை உங்கட நாட்டுக்கு ஏதாவது உருப்படியா செய்யச் சொல்லுங்க. அப்புறம் மற்றவங்களுக்கு முதுகு சொறியலாம்.//இதையெல்லாம் நீங்க உங்க ஆளுககிட்டதான் சொல்லணும்.. அவனுகளே பிச்சைக்காரப் பயலுக.. பொறுக்கிக.. அறிவில்லாதவனுக.. பகுத்தறிவே கிடையாது.. அவனுககிட்ட போய் எதுக்கு நாம கெஞ்சணும்.. விட்டுத் தள்ளுங்க.. நாமளே நமது சுதந்திரத்தை வாங்கிக்கலாம்.. யாரும் இந்தியாவை எதுக்கும் கூப்பிடாதீங்கன்னு உங்க சொந்தக்காரங்க எல்லார்கிட்டேயும் சொல்லுங்க..அப்புறமா கடைசியா எங்களுக்கு அட்வைஸ் பண்ணுங்க..

 18. ஆட்காட்டி Says:

  யாரய்யா உங்கள கேட்டாங்க? சும்மா நீங்களாவே கற்பனை பண்ணினா என்ன பண்ண முடியும்? முழந்தையையும் கிள்ளி, தொட்டிலையும் ஆட்டுறது ஆரு?

 19. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //ஆட்காட்டி said…யாரய்யா உங்கள கேட்டாங்க? சும்மா நீங்களாவே கற்பனை பண்ணினா என்ன பண்ண முடியும்? குழந்தையையும் கிள்ளி, தொட்டிலையும் ஆட்டுறது ஆரு?//என்ன ஸார் இப்படி கேட்டுட்டீங்க..? புலி ஆதரவு இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதத்துக்கு ஒருவர் இங்கு வந்து இந்தியாவுக்கு தார்மீக உரிமை இருக்கிறது.. தலையிடச் சொல்லுங்கோன்னு சொல்லிட்டுப் போனாங்க.. போதாக்குறைக்கு கடைசியா வந்த சிவாஜிலிங்கம் அதே மாதிரி பேட்டியே கொடுத்திருக்காரு.. இதுக்கு முன்னாடி 4வது பதிவா நானே அதை எடுத்துப் போட்டிருக்கேன்..நடேசன்னு ஒருத்தர் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவராமே.. ஜூனியர் விகடனுக்கு பேட்டி கொடுத்திருக்காரு.. இந்தியா தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்க முடியாது.. உதவிடத்தான் வேண்டும் என்று.. என்ன ஆட்காட்டி ஸார் இப்படி கேட்டுட்டீங்க..?

 20. ஆட்காட்டி Says:

  ஒரு பொது அறிவுக்குத் தான்.

 21. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //ஆட்காட்டி said…ஒரு பொது அறிவுக்குத்தான்.//சர்தான்.. பேசிப் பேசி, எழுதி, எழுதி போரடிச்சிருச்சுல்ல.. அதுதான் போலிருக்கு..

 22. ஈழச்சோழன் Says:

  அட பைத்தியக்காரங்களா!இதையும் படிங்களேன்(பிரதிபண்ணப்பட்டதுநன்றி:-தமிழன், நோர்வேயாழ்.கொம்)ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!உங்களைச் கொஞ்சம்உலகம் தேடும்முத்தமிழ் சிவப்பாகும்போர் மேகங்கள் சூழும்உங்களுக்கும் வலிகள் புரியும்இயந்திரப் பறவைகள் எதிரியாகும்ஆமிக்காரன் இயமன் ஆவான்உயிர் வெளியேறியஉடல்களை காகம் கொத்தும்விழிகளிலே குருதி கசியும்ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!தொப்புள் கொடியில்பலமுறை தீப்பிடிக்கும்பார்த்துக் கொண்டே இருப்பீர்களா?ஒரணியில் திரண்டு ஒரே முடிவு எடுப்பீர்களா?உங்கள் அரசியல் விளையாட்டில்எங்களைத் தோற்கடிக்காதீர்கள்!எந்த இனத்தவனும் உங்களை மன்னிக்கமாட்டான்சொந்த இனத்தவனைக்நீங்கள் காத்திட மறந்துவிட்டால்வாயிலே நுழைவதெல்லாம்உங்கள் வயிற்றிலே செரிக்காதுசொந்த சகோதரன்அங்கே பட்டினியில் சாகும்போதுஇந்த தாகம் இந்தச் சோகம்இந்த இன அழிப்புஇந்த பேர் இழப்புஎல்லாம் தமிழனுக்கேவாய்த்த தலைவிதியா?ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!குருதியில் அடிக்கடிநீ குளிப்பாய்பெற்ற பிள்ளையை படுக்கையில் நீ இழப்பாய்நித்திரையில் நிம்மதியே இருக்காதுமரநிழலில் மனம் குமுறும்நரம்புகள் வெடிக்கும்நா வறண்டு போகும்பெண்களின் ஆடைகள் தூக்கிபேய்கள் வெறி தீர்க்கும்ரத்த ஆறு வழிந்தோடும்நடுவிலே நாய் நக்கும்தலையில் செல்வந்து விழும்தட்டிவிட்டு வலியின் வதையோலம் வானைப் பிளக்கும்கண்ணீர்த் துளிகள் கடலாகும்ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!வீட்டுக்குள்ளே ஓடி ஓடியேபதுங்கு குழிகளில் வாழஉங்களால் முடியுமா?அகோரத்தின் உச்சத்தைஉணர்ந்தது உண்டா?அழுது களைத்து மீண்டும்எழுந்து நின்றது உண்டா?உன்னைப் புதைக்கும் இடத்தில்உயிர் வாழப் பழகியதுண்டா?உலகம் எங்கும் சிதறிதாயைப் பிரிந்து வாழும்துயரத்தை அனுபவிக்க முடியுமா? பனிக் குளிரில் பனியோடுபனியாய்க் கரைந்துஉங்களால் உறைய முடியுமா?சவப் பெட்டிக்குள் உறங்கிநாடு விட்டு நாடு போய்நரகத்தில் தொலையமுடியுமா?ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!பாண் துண்டோடு பருப்புபகலில் வயிறு பசியாறும்பாதி வயிற்றோடு நெருப்புஇருளில் குளிர் காயும்சிறைச்சாலைக்கும் திறந்தவெளிச்சிறைச்சாலைக்கும்ஒரே ஒரு பொருள்தான்எங்கள் யாழ்ப்பாணம்!பாலைவனத்து ஒட்டகமாய்பாம்புகளுக்கு நடுவில்எங்கள் வாழ்க்கை ஓடும்ஊரின் பெயரோ மட்டக்களப்பு!தாய்மண் தேகத்தை சுவைத்துஆட்டுக்கறியாக பங்கு போடும்நவீன மிருகஙக்ளையார் வேட்டையாடுவது?ஆண்ட பரம்பரையின்அடையாளத்தை அழிக்கமுடியுமா?ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!ஆளும் கட்சிகள்ஆட்சி இழந்தாலும்அனைத்துக் கட்சிகள்கூட்டம் நடந்தாலும்தமிழகம் முழுவதும்கடைகள் மூடப்பட்டாலும்திரையுலகமும் திரண்டுபேரணியில் சென்றாலும்இலக்கியத் தோப்பினில்எரிமலை எழுந்தாலும்தனித் தனியாக நீங்கள்உண்ணாவிரதம் இருந்தாலும்எப்போதும் உங்களைநெஞ்சிலே சுமக்கின்றோம்தணியாத தாகமாய்விடுதலை கேட்கிறோம்!ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்! உங்கள் எழுச்சியால்எங்கள் நெஞ்சு நிறைகிறோம்!நீட்டியுள்ள நேசக்கரத்தைஉறுதியாய்ப் பற்றுகின்றோம்!ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!-தமிழன், நோர்வேயாழ்.கொம்

 23. ஆட்காட்டி Says:

  http://news.bbc.co.uk/2/hi/africa/7750564.stm

 24. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ஈழச் சோழன் ஸார்..கவிதை உருக்கமாக இருக்கிறது.. எல்லாம் தெரிகிறது.. ஆனால் சாமான்யர்களாகிய நம்மால் என்ன செய்ய முடியும்..? அரசியல்வியாதிகள் அடுத்த தேர்தலை மனதில் வைத்துத்தான் எதையும் செய்வார்கள்.. இரு நாட்டு அரசியல்வியாதிகளும் இந்த ஒரே விஷயத்தில் ஒற்றுமையாகவே இருக்கிறார்கள்.நமக்கென்று ஒரு விடிவுகாலம் பிறக்காதா என்ற கவலை எனக்கும் உண்டு..

 25. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ஆட்காட்டி ஸார்.. படிச்சிட்டேன்.. 100 பேரில் தவறு செய்பவர்கள் 5 பேர் இருப்பார்கள். அது எல்லா ஊரிலும் நடப்பதுதான்.. அதற்காக ஒட்டு மொத்தமாக இந்திய ராணுவமே இப்படித்தான் என்று முடிவு கட்டாதீர்கள்.. இது தனி நபர் சார்ந்த பிரச்சினை. மனவியல் நோக்கில் பார்க்க வேண்டியவைகள் நிறைய உண்டு.

 26. Anonymous Says:

  வணக்கம் உண்ணமைத்தமிழா உனது கருத்துகளை படித்தேன் மிகவும் வேதனைப்படுகிறேன் ஏனென்றால் இன்று புலிகள் என்று ஒன்று இல்லை என்றால் தமிழர்கள் சிங்களவர்களிடம் அடிவங்கியே மடிந்திருப்பார்கள்.நான் ஒரு இலங்கை பல்கலைகழக மாணவன் என்பதால் இது பற்றி எனக்கு நன்றாக தெரியும்.அதேபோல் ஒரு தடவை சிறைக்கும் சந்தேகத்தின்பேரில் சென்று வந்தவன்.எனது சிறை அனுபவத்தை உனக்கும் கூறினால் மிகவும் நன்றாக இருக்கும். சிறைக்குள் உள்ளே சென்றவுடன் அங்குள்ள சிங்கள கைதிகள் தமிழர்கள் என்றால் அடித்து துன்புறுத்தி விடுவார்கள். இதன் காராணமக சிங்கள சிறைக்கைதிகள் எம்மிடம் என்ன வழக்கு என்று கேட்டால் நாங்கள் (தமிழர்கள்) LTTE சந்தேகம் என்றுதான் கூறுவோம் /கூறவேண்டும்.வெறுமனேசந்தேகம் என்று கூறினால் எங்கள் கதி அந்தோ கெதிததான் LTTE சந்தேகம் என்று கூறினால் சிங்கள சிறைக்கைதிகள் எங்களுக்கு கிட்ட வரவே பயப்படுவார்கள். ஆனால் சிறைகாவலர் வழக்கு என்ன என்று கேட்டால் வெறுமனே சந்தேகம் என்று மட்டும் தான் கூறவேண்டும். LTTE சந்தேகம் என்று கூறினால் சிறைகாவலரிடம் அடிமேல் அடி வாங்க வேண்டி வரும் அப்பிடியாக இருக்கிறது இலங்கையில் தமிழர்களின் நிலை. நீங்கள் என்னதான் சொன்னாலும் புலிகள் என்று ஒருவரும் இல்லாவிட்‌டால் இன்று இலங்கையில் தமிழர்களுடைய முகவரியே இல்லாமல் போயிருக்கும்

 27. Anonymous Says:

  /பரவாயில்லை.. பிச்சையெடுத்தாலும் எடுப்போமே தவிர.. படுகொலைகளுக்கு நாங்கள் காரணமாகவும் இருக்க மாட்டோம். நாங்களும் செய்ய மாட்டோம்./ஆமா நீ சொன்னோன்ன அப்புடியே ஈந்தியா கேட்டுரப்போவுது??$#@?>?பிச்சை எடுக்கிறப் புத்தி இன்னும் போகலையாடா கிறுக்கா??

 28. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //Anonymous said…வணக்கம் உண்ணமைத்தமிழா. உனது கருத்துகளை படித்தேன். மிகவும் வேதனைப்படுகிறேன். ஏனென்றால் இன்று புலிகள் என்று ஒன்று இல்லை என்றால் தமிழர்கள் சிங்களவர்களிடம் அடிவங்கியே மடிந்திருப்பார்கள்.நான் ஒரு இலங்கை பல்கலைகழக மாணவன் என்பதால் இது பற்றி எனக்கு நன்றாக தெரியும்.அதேபோல் ஒரு தடவை சிறைக்கும் சந்தேகத்தின்பேரில் சென்று வந்தவன். எனது சிறை அனுபவத்தை உனக்கும் கூறினால் மிகவும் நன்றாக இருக்கும். சிறைக்குள் உள்ளே சென்றவுடன் அங்குள்ள சிங்கள கைதிகள் தமிழர்கள் என்றால் அடித்து துன்புறுத்தி விடுவார்கள். இதன் காராணமக சிங்கள சிறைக்கைதிகள் எம்மிடம் என்ன வழக்கு என்று கேட்டால் நாங்கள் (தமிழர்கள்) LTTE சந்தேகம் என்றுதான் கூறுவோம் கூறவேண்டும். வெறுமனே சந்தேகம் என்று கூறினால் எங்கள் கதி அந்தோ கெதிதான். LTTE சந்தேகம் என்று கூறினால் சிங்கள சிறைக் கைதிகள் எங்களுக்கு கிட்ட வரவே பயப்படுவார்கள். ஆனால் சிறைகாவலர் வழக்கு என்ன என்று கேட்டால் வெறுமனே சந்தேகம் என்று மட்டும்தான் கூறவேண்டும். LTTE சந்தேகம் என்று கூறினால் சிறைகாவலரிடம் அடிமேல் அடி வாங்க வேண்டி வரும். அப்பிடியாக இருக்கிறது இலங்கையில் தமிழர்களின் நிலை. நீங்கள் என்னதான் சொன்னாலும் புலிகள் என்று ஒருவரும் இல்லாவிட்‌டால் இன்று இலங்கையில் தமிழர்களுடைய முகவரியே இல்லாமல் போயிருக்கும்.//கேட்பதற்கு கொடுமையாகத்தான் இருக்கிறது.. புலிகள் பற்றிய உங்களுடைய அனுமானிப்பு தனி நபர் சார்ந்த நம்பிக்கைதான்.. அது பாதிக்கப்பட்ட அனைவருக்குமே இருக்கத்தான் செய்யும். ஆனால் அரசியல் ரீதியாக சிந்தித்துப் பார்த்தால் LTTE-இலங்கை ராணுவம் இவற்றிற்கு இடையில் நடக்கும் யுத்தத்தின் காரணமாகத்தான் சாதாரணப் பொதுமக்கள் அவர்களது ஆதரவாளர்களாக இருப்பார்களோ என்ற எண்ணத்தில் துன்புறுத்தப்படுகிறார்கள் என்பதையும் நீங்கள் மனதில் கொள்ள வேண்டும்..

 29. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///Anonymous said…/பரவாயில்லை.. பிச்சையெடுத்தாலும் எடுப்போமே தவிர.. படுகொலைகளுக்கு நாங்கள் காரணமாகவும் இருக்க மாட்டோம். நாங்களும் செய்ய மாட்டோம்./ஆமா நீ சொன்னோன்ன அப்புடியே ஈந்தியா கேட்டுரப்போவுது?பிச்சை எடுக்கிறப் புத்தி இன்னும் போகலையாடா கிறுக்கா??//அது எப்படி போகும்..? குல புத்தியாச்சே அது..

 30. Anonymous Says:

  EU monitors fault Tiger violence at Sri Lanka elections.http://findarticles.com/p/articles/mi_m0WDQ/is_/ai_n6267428

 31. benzaloy Says:

  ஜனநாயக வழியை இகள்போரும் … ”போடா” ”வாடா” என மரியாதையை அற்ற வார்த்தைகளை சகஜமாக பாவிபோரும் ஓர் சமுதாயத்தை வழி நடத்துவதை பலரும் விரும்பவில்லை … தேவை உள்ள போது மட்டும் இந்தியாவினது உதவியை நாடியும் ஏனைய தருணங்களில் ”வடகத்தையான்” என இகழ்வதையும் சுய அறிவுள்ள இந்திய மக்கள் ஒருபோதும் விரும்ப மாடார்கள் … யுத்தத்தை தொடக்கியோர் அதனை முடிக்கட்டும் … ஏமாற்றுவது ஓர் சிலரை சிறுகாலம் …பலரையும் பல காலம் ஏமாற்ற முடியவே முடியாது

 32. Anonymous Says:

  புலிகள் என்று ஒன்று இல்லை என்றால் தமிழர்கள் சிங்களவர்களிடம் அடிவங்கியே மடிந்திருப்பார்கள் என்பது மிக பெரிய பொய். தங்களை எதிர்தார்கள் என்பதற்காக பலதமிழர்களை புலிகள் அடித்தே கொன்றுள்ளார்கள்.

 33. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //EU monitors fault Tiger violence at Sri Lanka elections.http://findarticles.com/p/articles/mi_m0WDQ/is_/ai_n6267428//இவர்களைக் கை காட்டினால், இவர்கள் அவர்களைச் சொல்கிறார்கள்.. அவர்கள் இவர்களைச் சொல்கிறார்கள்.. ஆனால் இரு தரப்புமே தாங்கள் செய்த தவறுகளை ஒத்துக் கொள்ள மறுக்கிறார்கள்..

 34. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //benzaloy said…ஜனநாயக வழியை இகள்போரும் போடா, வாடா என மரியாதை அற்ற வார்த்தைகளை சகஜமாக பாவிபோரும் ஓர் சமுதாயத்தை வழி நடத்துவதை பலரும் விரும்பவில்லை.தேவை உள்ள போது மட்டும் இந்தியாவினது உதவியை நாடியும் ஏனைய தருணங்களில் ”வடகத்தையான்” என இகழ்வதையும் சுய அறிவுள்ள இந்திய மக்கள் ஒருபோதும் விரும்ப மாடார்கள். யுத்தத்தை தொடக்கியோர் அதனை முடிக்கட்டும்.ஏமாற்றுவது ஓர் சிலரை சிறுகாலம். பலரையும் பல காலம் ஏமாற்ற முடியவே.. முடியாது.//சரியாகச் சொன்னீர்கள்.. இவர்கள் தேவைக்கெனில் தங்களுக்கு உதவ வேண்டும் என்கிறார்கள்.. தேவையில்லாதபோது எமக்கு உமது உதவி தேவையில்லை. ஒதுங்கியிரும் என்று கட்டளையிடுகின்றனர்.. இதுதான் இவர்களுக்கு ராஜந்திரமாம்..

 35. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //Anonymous said…புலிகள் என்று ஒன்று இல்லை என்றால் தமிழர்கள் சிங்களவர்களிடம் அடிவங்கியே மடிந்திருப்பார்கள் என்பது மிக பெரிய பொய். தங்களை எதிர்தார்கள் என்பதற்காக பல தமிழர்களை புலிகள் அடித்தே கொன்றுள்ளார்கள்.//அதைத்தான் அவர்கள் துரோகிகளை அழித்தோம் என்று நியாயப்படுத்துகிறார்களே..துரோகிகள் என்று அடையாளம் காட்ட இவர்கள் யார் என்றுதான் எனக்குத் தெரியவில்லை. அனைத்தையும் இவர்களை வைத்து அளவுகோல் இடுகிறார்களே.. இந்த அதிகாரத்தை இவர்களுக்கு யார் கொடுத்தது..?ஆயுதங்களை வைத்து ஆதரவு தேடுவது நீண்ட காலத்திற்கு உதவாது. என்றாவது ஒரு நாள் அது அவர்கள் பக்கமே திரும்பும். அன்றைக்கு ஆயுதம் பெரிதா, ஜனநாயகம் பெரிதா என்பது அவர்களுக்குப் புரியும்..

 36. Anonymous Says:

  //ஆட்காட்டி said…எனப்பா சண்டை? ஒரு வாக்குப் பதிவு நடத்திரலாமே?உண்மைத் தமிழன் -யாருக்கு ஆதரவு எண்டா..? கண்டிப்பாக பொடியன்கள்தான் ஜெயிப்பார்கள். அவர்கள்தான் வலையுலகில் நிறைய உள்ளார்கள்.//இப்போ தங்களுக்கு தெரிந்திருக்குமே ஆனந்த விகடன் கருத்து கணிப்பு எப்படி நடந்தருக்கும் என்று.

 37. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///Anonymous said…//ஆட்காட்டி said…எனப்பா சண்டை? ஒரு வாக்குப் பதிவு நடத்திரலாமே?உண்மைத் தமிழன் -யாருக்கு ஆதரவு எண்டா..? கண்டிப்பாக பொடியன்கள்தான் ஜெயிப்பார்கள். அவர்கள்தான் வலையுலகில் நிறைய உள்ளார்கள்.//இப்போ தங்களுக்கு தெரிந்திருக்குமே ஆனந்த விகடன் கருத்து கணிப்பு எப்படி நடந்தருக்கும் என்று.///அர்னால்டு, சில்வர்ஸ்டன் ஸ்டெலோன், ஜாக்கிசான்,ஜெட்லீ போன்றோருக்கு என்ன மாதிரியான ஹீரோத்தன்மை இருக்கிறதோ அதேதான் பிரபாகரனுக்கும் இன்றைய இளைஞர்களிடத்தில் உண்டு. அதுதான் உண்மையான காரணம்.. உணர்வுப்பூர்வமாக அல்ல.

 38. ஆட்காட்டி Says:

  நீங்க சொல்லுறது தான் மெத்தச் சரி. அப்ப கையாலாகாதவன் தான் காந்தியை விரும்புவாங்களா? உதாரணத்துக்கு கூட நேதாஜியை கூப்பிடல. பாவம் மனுசன்.

 39. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //ஆட்காட்டி said…நீங்க சொல்லுறதுதான் மெத்தச் சரி. அப்ப கையாலாகாதவன்தான் காந்தியை விரும்புவாங்களா? உதாரணத்துக்கு கூட நேதாஜியை கூப்பிடல. பாவம் மனுசன்.//ஆட்காட்டி ஸார்.. கையாலாகாதவர்கள் அல்ல.. அந்த வயது வன்முறை மூலம் ஹீரோவாக விரும்புவதைத்தான் செய்யும். அதைத்தான் விரும்பும். அதனால்தான் அப்படி குறிப்பிட்டேன். இது எல்லாம் கொஞ்ச காலம்தான்.. மறுபடியும் தரைக்கு இறங்கி அதன் பின் சாகும்வரையிலும் காந்தியே துணை என்பார்கள். உலகம் முழுக்க இதுதான்..

 40. ஆட்காட்டி Says:

  உங்களது மன நிலை புரிகிறது. சினிமாக் காரனுக்கு பால்குடம் எடுக்கிற மக்களுட வழ்ந்தால் அப்பிடித் தான் இருக்கும்.//படிச்சிட்டேன்.. 100 பேரில் தவறு செய்பவர்கள் 5 பேர் இருப்பார்கள். அது எல்லா ஊரிலும் நடப்பதுதான்.. அதற்காக ஒட்டு மொத்தமாக இந்திய ராணுவமே இப்படித்தான் என்று முடிவு கட்டாதீர்கள்.. //இதிலிருந்து என்ன புரிகிறது? உங்களது மன ஓட்டம்>>அந்த 5% வீதமே இலங்கை சனத்தொகையிலும் அதிகம் ஐயா. இவர்களிடம் மனிதத்தை எதிர்பார்க்கலாமா?

 41. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///ஆட்காட்டி said…உங்களது மன நிலை புரிகிறது. சினிமாக் காரனுக்கு பால்குடம் எடுக்கிற மக்களுட வழ்ந்தால் அப்பிடித்தான் இருக்கும்.// படிச்சிட்டேன்..///சந்தோஷம்.//100 பேரில் தவறு செய்பவர்கள் 5 பேர் இருப்பார்கள். அது எல்லா ஊரிலும் நடப்பதுதான்.. அதற்காக ஒட்டு மொத்தமாக இந்திய ராணுவமே இப்படித்தான் என்று முடிவு கட்டாதீர்கள்..//இதிலிருந்து என்ன புரிகிறது? உங்களது மன ஓட்டம். அந்த 5% வீதமே இலங்கை சனத் தொகையிலும் அதிகம் ஐயா. இவர்களிடம் மனிதத்தை எதிர்பார்க்கலாமா?///மனிதாபிமானமான அதிகாரிகளும் இருந்தார்கள் என்பதை உங்கட பத்திரிகையாளர்களும், பாதிக்கப்பட்ட மக்களும் இப்போதும் சொல்லிக் கொண்டுதானே உள்ளார்கள். பிறகென்ன..?

 42. கொண்டோடி Says:

  கொழுவி,நான் சொல்லும் தேர்தல் 2004 ஏப்ரல் இரண்டாம் நாள் நடந்தது. href=”http://en.wikipedia.org/wiki/Sri_Lankan_parliamentary_election,_2004″ http://en.wikipedia.org/wiki/Sri_Lankan_parliamentary_election,_2004 உண்மைத் தமிழன்,கொண்டோடியும் கொழுவியும் ஒருவரல்லர் என்பது இப்போதாவது தெரிந்ததா?

 43. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //கொண்டோடி said…கொழுவி, நான் சொல்லும் தேர்தல் 2004 ஏப்ரல் இரண்டாம் நாள் நடந்தது.href=”http://en.wikipedia.org/wiki/Sri_Lankan_parliamentary_election,_2004″ http://en.wikipedia.org/wiki/Sri_Lankan_parliamentary_election,_2004உண்மைத் தமிழன்,கொண்டோடியும் கொழுவியும் ஒருவரல்லர் என்பது இப்போதாவது தெரிந்ததா?//நன்றாகத் தெரிந்தது.. புரிந்தது..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: