“ராஜீவ் காந்தியைக் கொன்றது சி.ஐ.ஏ.” – திருமாவளவனின் உளறல் பேச்சு

11-11-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

ஈழத்து மக்களுக்கு ஆதரவு தரும் பொருட்டு கலைத்துறையினர் நடத்தி வரும் போராட்டங்களில் ஒரு பகுதியாக சின்னத்திரை கலைஞர்களின் கூட்டமைப்பு நேற்று சென்னை சேப்பாக்கம் விருந்தினர் விடுதி முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியது.

இதில் நெடுந்தொடர்கள், குறுந்தொடர்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கு பெறும் நடிகர், நடிகைகள், கதாசிரியர்கள், இயக்குநர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் என்று பல பிரிவுகளிலிருந்தும் கலைத்துறையினர் கலந்து கொண்டனர். கூட்டமைப்பில் நானும் ஒரு உறுப்பினர் என்பதால் கலந்து கொண்டிருந்தேன்.

காலையில் தற்போது பாரதீய ஜனதாவில் இருக்கும் திருநாவுக்கரசர் உண்ணாவிரதத்தைத் துவக்கி வைத்தார். கூட்டமைப்பின் தலைவரும் இயக்குநருமான விடுதலை துவக்கத்திலேயே சட்டத்திற்கு உட்பட்டு, கட்டுப்பாட்டுடன் பேசும்படி சொன்னதைக் கேட்டபோதே மீறிப் பேசுவார்கள் என்பதை எதிர்பார்த்திருந்தேன். ஆனால் இவ்வளவு அப்பட்டமாக அரசியல் சார்பான நிகழ்ச்சியமாக மாறும் என்று எதிர்பார்க்கவில்லை.

கூட்டத்தில் பேசிய பலரும் அந்தக் கட்டுப்பாடு பற்றி விமர்சித்துவிட்டுத்தான் போனார்கள். விமர்சனங்களுக்கு சூட்டோடு சூட்டாக அப்போதே பதிலளித்த விடுதலை “கட்டுப்பாடு தேவைதான். எந்த விஷயத்திற்கும் ஒரு கட்டுப்பாடு தேவை..” என்றெல்லாம் பேசியவர் கொஞ்சம் தனது பேச்சிலும் ஆளும்கட்சிக்கு அடிமைத்தனம் போல பேசியதுதான் சற்று நெருடலைத் தந்தது.

விடுதலைப்புலிகள் வேறு; ஈழப் பிரச்சினை வேறு என்று ஒரு சாராரும், இவை இரண்டுமே ஒன்று என்று ஒரு சாராரும் போட்டி போட்டுக் கொண்டு தொடர்ந்தாற்போல் பேசிக் கொண்டுதான் இருந்தார்கள். இதிலும் ஒருவர் “உலகத்தில் நடுநிலைமை என்ற ஒன்றே இல்லை. ஒன்று இந்தப் பக்கம் இரு. இல்லாவிடில் அந்தப் பக்கம் போ.. நடுவில் நிற்பதாக நீ சொன்னால் நீ இரண்டு பக்கத்திற்கும் துரோகிதான்” என்று பொரிந்துவிட்டார்.

விடுதலைப்புலிகளை ஆதரிப்பவர்கள் எவ்வித தயக்கமும் இல்லாமல் உலகத்தில் ஒரே மாவீரன் பிரபாகரன்தான் என்று கூச்சநாச்சமில்லாமல் சொல்லிவிட்டுப் போனார்கள். மறு பிரிவினர் முதலில் அங்கே போர் நிறுத்தம் செய்யப்பட்டாக வேண்டும். பின்பு அனைத்து தமிழ்க் குழுக்களும், கட்சிகளும் ஒன்றிணைந்து சிங்கள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றார்கள்.

புலிகளை எதிர்த்துப் பேசினால் எப்படி ரியாக்ட் கிடைக்குமோ என்று தயக்கம் கொண்டவர்களெல்லாம் இந்தக் கட்டுப்பாட்டிற்குள் பேசுவதாகச் சொல்லிவிட்டு சுருக்கமாக பேச்சை முடித்துக் கொண்டார்கள். இந்திய ராணுவம் நடத்திய அத்துமீறலால்தான் அன்றைக்கு புலிகள் இந்திய ராணுவத்தை எதிர்த்துப் போராட வேண்டியிருந்தது என்று அடித்துச் சொன்னார்கள் சிலர்.

ராஜீவ்காந்தி கொலையை விசாரித்த சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவர் திரு.கார்த்திகேயனைத்தான் முதலில் இந்த உண்ணாவிரதத்தை துவக்கி வைக்க தான் அழைத்ததாகவும், அவருக்கு அன்றைக்கு பெங்களூரில் நிகழ்ச்சி இருந்ததால் வர இயலாது என்று சொல்லிவிட்டதாகவும் திரு.விடுதலை தெரிவித்தார்.

கூடவே “திரு.கார்த்திகேயன் இந்தப் பணியை கையில் எடுத்தபோது “கடவுளே.. இந்தக் கொலையைச் செய்தது அவர்களாக இருக்கக் கூடாது..” என்று வேண்டிக் கொண்டதையும் சொன்னவர், “ஆனால் உண்மை தலைகீழாக மாறி அவரை வருத்தப்பட வைத்துவிட்டது.. புலிகள்தான் ராஜீவ்காந்தியை கொலை செய்தார்கள் என்கின்ற வரலாற்று உண்மை வெளிவந்தது..” என்றார் விடுதலை.

ஆனால் இதே கூற்று மரியாதை நிமித்தமாக தன்னால் அழைக்கப்பட்டவராலேயே பொய் என்று விமர்சிக்கப்படும் என்று திரு.விடுதலையே எதிர்பார்த்திருக்கவில்லை.

உண்ணாவிரத்தை முடித்து வைக்க அழைக்கப்பட்டிருந்தார் திருமாவளவன். அவர் வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே அவருடைய தம்பிமார்கள் சிலர் அங்கே வந்து குழுமி நிலைமையை அவ்வப்போது யாருக்கோ செல்போனில் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.

திருமாவளவன் வந்தபோது கூட்டமும் கூடி விட்டது. அவருடனேயே வந்தவர்களும் நிறைய பேர்.
வழமைபோல கணீரென்ற வசீகரிக்கும் குரலில் பேச்சைத் துவக்கிய திருமா, ராஜீவ்காந்தியைப் பற்றிய பேசத் துவங்கியபோது வழியில் போய், வந்து கொண்டிருந்த பேருந்துகளின் சத்தத்தைத் தவிர வேறு ஒரு சத்தமும் இல்லை. அவ்வளவு அமைதி.

“ராஜீவ்காந்தி. நல்லவர். வல்லவர். துடிப்பான தலைவர். சர்வதேச அளவில் ஆற்றல்மிக்கத் தலைவர்களில் ஒருவராக இருந்தவர்” என்றெல்லாம் பாராட்டிப் புகழ்ந்து தள்ளினார்.

தொடர்ந்து பேசுகையில், “ராஜீவ்காந்தி கொலையான சமயத்தில் தளபதி கிட்டு ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் ராஜீவ்காந்தியின் படுகொலைக்கும், விடுதலைப்புலிகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று அதில் அவர் கூறியிருந்தார். அவர் சொன்னது சரி என்று அடித்துச் சொல்ல நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

நான் சொல்கிறேன்.. ராஜீவ்காந்தியை கொலை செய்தது அமெரிக்காவின் சி.ஐ.ஏ.தான். இதற்கு உடந்தையாக இருந்தது சுப்பிரமணியம் சுவாமியும், சந்திராசாமியும்தான்..” என்ற ஒரு மிகப் பெரிய கண்டுபிடிப்பை வெளிப்படுத்தினார்.

என்ன கைதட்டல்ன்னு நினைக்குறீங்க..?

நம்ம தமிழ்நாட்டு மக்கள் எவ்வளவு வெள்ளந்தியானவங்கன்னுதான் நமக்குத்தான் தெரியுமே..?

அதற்கான காரணங்களாக அவர் சொன்ன அபத்தமான காரணங்களில் ஒன்று, குவைத் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஈராக் நாட்டின் மீது அமெரிக்கா போர் தொடுத்தபோது அமெரிக்காவின் போர் விமானங்களுக்கு பெட்ரோல் கொடுக்க இந்தியா மறுத்ததாம். இதற்கு முக்கியக் காரணம் ராஜீவ்காந்திதான் என்பதால் அவரே அடுத்தத் தடவையும் பிரதமராக வந்தால் தங்களுடைய ஏகாதிபத்திய பரவலுக்கு தடைக்கல்லாக அவர் இருக்கக்கூடும் என்ற அச்சமும் அமெரிக்காவுக்கு இருந்தது என்றார் திருமா.

இன்னொரு காரணமாக இலங்கை, திருகோணமலை அருகே அமெரிக்கா படைத்தளத்தை அமைக்க விருப்பப்பட்டு காய் நகர்த்தி வந்தது. இலங்கை அரசை மிரட்டி அப்படிச் செய்யவிடாமல் தடுத்து வந்தவர் ராஜீவ்காந்திதான் என்பதால்தான் அமெரிக்கா தன்னுடைய சி.ஐ.ஏ. உளவாளிகளை வைத்து இப்படுகொலையைச் செய்ததாக உளறினார் திருமா.

எதைப் பற்றியும் கவலைப்படாமல் பொய்யுரைகளை அள்ளிவிடுவது தமிழக அரசியல்வியாதிகளுக்கு ஒன்றும் புதிதில்லை. ஆனாலும் அந்தப் படுகொலையில் சம்பந்தப்பட்டு, கொலையைச் செய்தவர்களே “அதை விடுங்க.. மறந்திருங்க..” என்கிற அர்த்தத்தில் “அது ஒரு துன்பியல் சம்பவம்” என்று சொன்ன பிறகும் மறுபடியும், மறுபடியும் ஒரு பொய்யையே ஏன் இப்படிச் சொல்லிக் கொண்டு பைத்தியமாகத் திரிகிறார்கள் என்பது புரியவில்லை.

மனித வெடிகுண்டுத் தாக்குதல் என்று சொன்னவுடனேயே அது நிச்சயம் புலிகள் வேலையாகத்தான் இருக்கும் என்று தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு இளைஞனும் நினைத்தான். நாங்கள் நினைத்தது போலவேதான் அது நடந்திருந்தது.

குற்றவாளிகளைத் தேடிப் பிடித்த சம்பவங்களும், முழுக் கதையையும் கோர்ட்டுக்கு கொண்டு வந்து சமர்ப்பித்த கதையையும் பாவம் திருமாவளவன் அப்போது வன்னி காடுகளில் பதுங்கியிருந்ததால் படிக்கவில்லை போலும்..

அந்தக் கொலைச் சம்பவத்திற்காக பல கோடிகள் செலவிட்டு அரும்பாடுபட்ட குற்றவாளிகளைத் தேடிப் பிடித்த சம்பவங்களே இந்திய வரலாற்றில் காவல்துறை மீதிருந்த ஒரு எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்திக் காட்டியிருந்தது.

வழக்குகளில் உச்சநீதிமன்றம் வரையிலான இறுதி தீர்ப்பும் சொல்லப்பட்டுவிட்ட நிலையில் ஒரு பொய்யை.. ஒரே பொய்யை.. மீண்டும், மீண்டும் திருப்பித் திருப்பிச் சொல்வதையும் ஒரு பெரிய உண்மை என்றெண்ணி கை தட்டிச் சிரிக்கிறதே ஒரு கூட்டம். இவர்களை என்னவென்று சொல்வது..?

திருமாவளவனுக்கு தமிழகத்து பிரபாகரன் என்று பெயரெடுக்க ஆசை. அவருடைய அடிப்பொடிகளுக்கும் அதேபோல் பொடியன்கள் என்று பெயெரடுக்கவும், தலையெடுக்கவும் மென்மேலும் முயற்சி செய்கிறார்கள் போலும்..

உணர்ச்சிகளைத் தூண்டிவிடுவது மிக எளிது. ஆனால் அவற்றைக் கட்டுப்படுத்துவது மிக, மிக கடினம். அரசியல்வாதிகளுக்கு என்ன..? மிக எளிதாகத் தூண்டிவிட்டுச் சென்றுவிடுகிறார்கள். ஆனால் அதைக் கேட்டு குழப்பமாகும் இளைய தலைமுறையினருக்கு என்ன தெரியும்? மேற்கொண்டு என்ன செய்வார்கள்..? உண்மையாகவே என்ன நடந்தது என்பதை அறியும்பொருட்டு அது பற்றிய செய்திகளைப் படிக்குத் துவங்கும் கூட்டத்தினர் எத்தனை பேர் இருந்திருப்பார்கள். 100-க்கு 10 பேர் படித்தாலே அதிகம். மீதி 90 பேரின் கதி..?

அரசியல் என்பது முழுக்க, முழுக்க பொதுநலம் சார்ந்தது என்பதை தலைகீழாக மாற்றி தன்னலமாக மாற்றிக் கொண்டு இளைய சமுதாயத்தினரை திசை மாற்றிக் கொண்டிருக்கும் திருமாவளவன் போன்றவர்கள் நடத்தும் அரசியல் என்பது கேவலமான, நூற்றுக்கு நூறு அக்மார்க் ஓட்டுப் பொறுக்கி அரசியலைத் தவிர வேறில்லை.

இவர் போன்ற அறிவுஜீவிகள்தான் தமிழகத்தின் அடுத்த தலைமுறையை எட்டாத உயரத்துக்குக் கொண்டு போகப் போகிறார்களாம்..

எல்லாம் நம் தலையெழுத்து..

கொசுறு :

நிகழ்ச்சிக்கு இலங்கைத் தமிழர்கள் சிலர் வந்திருந்தார்கள். அவர்கள் இலங்கையிலிருந்து சென்னை வழியாக பாரீஸ் பயணமாக வந்தவர்கள். வந்தவர்களை அமர வைத்து நன்றாகவே கவனித்தோம்.. திருமாவளவனின் பேச்சுக்கு நிமிடத்துக்கு நிமிடம் கை தட்டவும் செய்தார்கள்.

ஆனால், நிகழ்ச்சி முடிந்ததும் அவர்களும் தொலைக்காட்சி நட்சத்திரங்களுடன் புகைப்படம் எடுக்க ஆலாய்ப் பறந்ததை பார்த்து அந்த நட்சத்திரங்களே அரண்டு போனார்கள். அதிலும் புகைப்படத்திற்கு அனுமதி மறுத்த நடிகை மெளனிகாவை பின் தொடர்ந்து, “மேடம் ப்ளீஸ்.. மேடம் ப்ளீஸ்..” என்று கெஞ்சிக் கொண்டே சென்ற ஒரு 40 வயது மதிக்கத்தக்க ஒருவர், கடைசியில் மெளனிகாவை வழிமறித்து அவரைத் திரும்ப வைத்து புகைப்படம் எடுத்த பின்புதான் போகவேவிட்டார்.

ஒரு புறம் துக்கத்தையும், சாவையும் எதிர்கொள்ளும் மக்கள்..

மறுபுறம் இப்படியும் ஒரு சில மக்கள்..

யாரைக் குற்றம் சொல்வது..?

63 பதில்கள் to ““ராஜீவ் காந்தியைக் கொன்றது சி.ஐ.ஏ.” – திருமாவளவனின் உளறல் பேச்சு”

 1. இளைய கரிகாலன் Says:

  ஐயா வணக்கம்!

  உங்களுக்கு நேரம் சரியில்ல. வசமா வாங்கி கட்டிக்க போறீங்க, வாழ்த்துக்கள்!! 😉

 2. roger Says:

  Thirumavalavan Was Partly right …..As I have told you in my previous posting that Americans played a major role in messing-up the Indo-Lanka Accord they also played a major role in Rajiv’s murder. In a nutshell this is what happend: The Americans have detained couple of arms smuggling ships belonging to to Tigers in Thailand and cut a deal with them. That was to kill rajiv and in return the Americans would provide Arms and support Tamileelam.Many Indian Including S.Swamy played a role in Rajiv’s killing. You have to understand that American Intelligence trap their people in Universities. Especially foreign agents. Many people know that Swamy was a lecturer in Harvard and he was trapped in s honey pot operation. Make the connections.

 3. Senthuran Says:

  //விடுதலைப்புலிகளை ஆதரிப்பவர்கள் எவ்வித தயக்கமும் இல்லாமல் உலகத்தில் ஒரே மாவீரன் பிரபாகரன்தான் என்று கூச்சநாச்சமில்லாமல் சொல்லிவிட்டுப் போனார்கள்.//

  உண்மை சொல்ல ஏன் தயக்கம்.

  //அதை விடுங்க.. மறந்திருங்க..” என்கிற அர்த்தத்தில் “அது ஒரு துன்பியல் சம்பவம்” என்று சொன்ன பிறகும் மறுபடியும், மறுபடியும் ஒரு பொய்யையே ஏன் இப்படிச் சொல்லிக் கொண்டு பைத்தியமாகத் திரிகிறார்கள் என்பது புரியவில்லை.//

  காலம் சில உண்மைகளை புதைத்து வைத்திருக்கும். காலம் கடக்க அதுவாய் வெளிவரும். :-))

  //நிகழ்ச்சிக்கு இலங்கைத் தமிழர்கள் சிலர் வந்திருந்தார்கள். அவர்கள் இலங்கையிலிருந்து சென்னை வழியாக பாரீஸ் பயணமாக வந்தவர்கள். வந்தவர்களை அமர வைத்து நன்றாகவே கவனித்தோம்.. திருமாவளவனின் பேச்சுக்கு நிமிடத்துக்கு நிமிடம் கை தட்டவும் செய்தார்கள்.

  ஆனால், நிகழ்ச்சி முடிந்ததும் அவர்களும் தொலைக்காட்சி நட்சத்திரங்களுடன் புகைப்படம் எடுக்க ஆலாய்ப் பறந்ததை பார்த்து அந்த நட்சத்திரங்களே அரண்டு போனார்கள். அதிலும் புகைப்படத்திற்கு அனுமதி மறுத்த நடிகை மெளனிகாவை பின் தொடர்ந்து, “மேடம் ப்ளீஸ்.. மேடம் ப்ளீஸ்..” என்று கெஞ்சிக் கொண்டே சென்ற ஒரு 40 வயது மதிக்கத்தக்க ஒருவர், கடைசியில் மெளனிகாவை வழிமறித்து அவரைத் திரும்ப வைத்து புகைப்படம் எடுத்த பின்புதான் போகவேவிட்டார்.

  ஒரு புறம் துக்கத்தையும், சாவையும் எதிர்கொள்ளும் மக்கள்..

  மறுபுறம் இப்படியும் ஒரு சில மக்கள்..

  யாரைக் குற்றம் சொல்வது..?//

  ஓ.. நாங்க எப்பவும் அழுதுகொண்டே இருக்கனுமா? எமக்கு காற்றுள்ள போதே து+ற்றிக்கொள்ளவும் தெரியும். எதிர்க வேண்டிய நேரம் எதிர்கவும் தெரியுமே நன்பா.

  //உண்மைத் தமிழன்(15270788164745573644)
  பிறந்து, வளர்ந்ததில் சொல்லிக் கொள்ளும்படியான சாதனைகள் எதுவும் இதுவரை இல்லை; உயிருடன் இருப்பதைத் தவிர.. //

  ம்… நான் நம்புகிறேன்.:-))

 4. TOM Says:

  To make the India as a open market country, Shri.Rajiv Gandhi was murdered with the help of these people. This is the fact. I have lot of interesting papers on this. If you search on this, you can find it.

 5. stanjoe Says:

  I request those who claim that LTTE did not kill Rajiv Gandhi to go through three important materials
  1. Book – The triumph of Truth (Rajiv Gandhi assasination)
  2. CD – The human Bomb
  3. The judgments given three supreme court judges.

  Understand this
  If Subramania swamy and Chandraswamy only had assigned the task of killing Rajiv to Sivarasan,
  and wanted to put the blame on LTTE, Sivarasan could have easily done that.

  There was one testimony in the judgements, After the day of murder, Sivarasan and Subha went to watch tv news in the neighbour’s house, there in the TV they are announcing that Rajiv gandhi is murdered. Suddenly the lady in the house claiming that only LTTE would have done this. But Sivarasan vehemently deniying that saying LTTEs are good people and they will not do these kind of activities.

  So if that’s the case that they wanted to put the blame on LTTE, Sivarsan would have easily agreed for what the lady in the house told.

  Similarly there are many things like this It just that Thiruma wants to erase the indelible image of LTTEs

 6. சுடுவது சுகம் Says:

  Here some interesting questions about participation of Subramaniyam Swamy in Rajiv Gandhi assassination

  (link)http://suduvadusukam.blogspot.com/2008/03/blog-post.html(/link)

 7. mano Says:

  உங்களுக்கு நேரம் சரியில்ல……

  //உண்மைத் தமிழன்(15270788164745573644)
  பிறந்து, வளர்ந்ததில் சொல்லிக் கொள்ளும்படியான சாதனைகள் எதுவும் இதுவரை இல்லை; உயிருடன் இருப்பதைத் தவிர.. //

  ம்… நான் நம்புகிறேன்.:-))

 8. வாசகன் Says:

  ஒருகாலத்தில் ஒசாமா என்கிற அம்பை எய்தவனே அன்கிள் சாம் தானாம்.
  வி.பு என்கிற அம்பையும் அவருதான் எய்திருக்கமாட்டார்னு சொல்லிறமுடியாது.

  அவரோட வெளியுறவு கொள்க வெளங்கிடுச்சுன்னா இந்தமாதிரி பதிவே டைம்வேஸ்ட்டுனும் வெளங்கிரும்.

 9. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //இளைய கரிகாலன் said…
  ஐயா வணக்கம்! உங்களுக்கு நேரம் சரியில்ல. வசமா வாங்கி கட்டிக்க போறீங்க, வாழ்த்துக்கள்!!;-)//

  முதல் பின்னூட்டமே இப்படியா..

  பரவாயில்லை.. எவ்வளவோ வாங்கியாச்சு.. இன்னும் கொஞ்சம் வாங்கிக்குவோமே..

  எச்சரிக்கைக்கு நன்றி கரிகாலன்.

 10. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //roger said…
  Thirumavalavan Was Partly right.. As I have told you in my previous posting that Americans played a major role in messing-up the Indo-Lanka Accord they also played a major role in Rajiv’s murder. In a nutshell this is what happend: The Americans have detained couple of arms smuggling ships belonging to to Tigers in Thailand and cut a deal with them. That was to kill rajiv and in return the Americans would provide Arms and support Tamileelam. Many Indian Including S.Swamy played a role in Rajiv’s killing. You have to understand that American Intelligence trap their people in Universities. Especially foreign agents. Many people know that Swamy was a lecturer in Harvard and he was trapped in s honey pot operation. Make the connections.//

  சினிமாத்தனமாக சிந்தித்து எதைப் பற்றியும் பேச வேண்டாம். சுப்பிரமணியம் சுவாமி ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் என்பதாலேயே அவரை இதில் திணிக்க வேண்டாம்.

  அமெரிக்காவுக்கு அப்போதைய நிலைமையில் ராஜீவ்காந்தியைத் தவிர வேறெந்த நண்பரும் இந்தியாவில் இருந்து தேவையில்லை என்கிற சூழல்தான் இருந்தது.

  வி.பி.சிங்கும், சந்திரசேகரையும்தான் அமெரிக்கா விரும்பியது எனில் இது மிகப் பெரிய ஜோக் என்பதைத் தவிர வேறில்லை.

 11. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  செந்தூரன் ஸார்..

  தங்களது பின்னூட்டத்திற்கும், பதில்களுக்கும், அறிவுரைக்கும் எனது நன்றிகள் உரித்தாகட்டும்..

 12. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //stanjoe said…
  I request those who claim that LTTE did not kill Rajiv Gandhi to go through three important materials
  1. Book – The triumph of Truth (Rajiv Gandhi assasination)
  2. CD – The human Bomb
  3. The judgments given three supreme court judges.

  Understand this
  If Subramania swamy and Chandraswamy only had assigned the task of killing Rajiv to Sivarasan,
  and wanted to put the blame on LTTE, Sivarasan could have easily done that.

  There was one testimony in the judgements, After the day of murder, Sivarasan and Subha went to watch tv news in the neighbour’s house, there in the TV they are announcing that Rajiv gandhi is murdered. Suddenly the lady in the house claiming that only LTTE would have done this. But Sivarasan vehemently deniying that saying LTTEs are good people and they will not do these kind of activities.

  So if that’s the case that they wanted to put the blame on LTTE, Sivarsan would have easily agreed for what the lady in the house told.

  Similarly there are many things like this It just that Thiruma wants to erase the indelible image of LTTEs//

  இவர்கள் என்ன சொன்னாலும் புரிந்து கொள்ளப் போவதில்லை..

  இவர்களுக்குத் தெரிந்தது எல்லாம் அடி, உதை, வெட்டுக் குத்து, பழிக்குப்பழிதான்.. தமிழகத்து அரசியல்வாதிகளே அப்படித்தானே அரசியலை வளர்க்கிறார்கள். அறிவுப்பூர்வமாகவா பேசுகிறார்கள்..

 13. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //TOM said…
  To make the India as a open market country, Shri.Rajiv Gandhi was murdered with the help of these people. This is the fact. I have lot of interesting papers on this. If you search on this, you can find it.//

  அந்தப் படுகொலை பற்றிய பலவற்றையும் படித்த பின்புதான் இதனை எழுதியுள்ளேன். எனக்கு எந்த தயக்கமும் இல்லை, குற்றவாளிகள் யார் என்று ஊகிப்பதற்கு…

 14. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //சுடுவது சுகம் said…
  Here some interesting questions about participation of Subramaniyam Swamy in Rajiv Gandhi assassination.
  http://suduvadusukam.blogspot.com/2008/03/blog-post.htm//

  திரு.வேலுச்சாமி கடந்த 10 ஆண்டுகளாகவே சுவாமி மீது தனிப்பட்ட வன்மம் கொண்டுதான் பேசி வருகிறார். அவரிடம் இது பற்றி நான் நேரடியாகவே பேசியிருக்கிறேன். அன்றைக்கிருந்த சூழ்நிலையை தனக்குச் சாதகமாக்கி வைத்துத்தான் வேலுச்சாமி ஜெயின் கமிஷனில் சுவாமியை குற்றம்சாட்டினார். அவ்வளவுதான்..

  ஆனால் சுப்ரீம் கோர்ட்டில் எதுவுமே எடுபடவில்லையே..

 15. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///mano said…
  உங்களுக்கு நேரம் சரியில்ல……
  //உண்மைத் தமிழன்(15270788164745573644)
  பிறந்து, வளர்ந்ததில் சொல்லிக் கொள்ளும்படியான சாதனைகள் எதுவும் இதுவரை இல்லை; உயிருடன் இருப்பதைத் தவிர.. //
  ம்… நான் நம்புகிறேன்.:-))///

  எனக்கு எப்பத்தான் நேரம் நல்லாயிருந்தது.. எல்லா நேரமும் எனக்கு மட்டும் ஒண்ணுதான்…

 16. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //வாசகன் said…
  ஒருகாலத்தில் ஒசாமா என்கிற அம்பை எய்தவனே அன்கிள் சாம்தானாம்.//

  மறுக்க முடியாத உண்மை.. உண்மையைத் தவிர வேறில்லை.

  //வி.பு என்கிற அம்பையும் அவருதான் எய்திருக்கமாட்டார்னு சொல்லிற முடியாது.//

  நான் இதை மட்டும் நம்புவதாக இல்லை.. அமெரிக்கா இதில் தலையிட்டிருந்தால் இந்நேரம் இந்தப் பிரச்சினையில் ஏதோ ஒரு முடிவு கிடைத்திருக்கும். அண்ணனுக்கு இலங்கையால் ஆக வேண்டியதும், இதை வைத்து இந்தியாவுக்கு பிலிம் காட்ட வேண்டியதும் தேவையில்லாததால் ஒதுங்கியிருக்கிறார்..

  //அவரோட வெளியுறவு கொள்க வெளங்கிடுச்சுன்னா இந்த மாதிரி பதிவே டைம் வேஸ்ட்டுனும் வெளங்கிரும்.//

  யாருக்கு வெளங்கிருக்கு.. வெளங்காத கொள்கைதானே அண்ணாச்சியின் வெளிநாட்டுக் கொள்கை..

 17. காசிபாரதி Says:

  டேய் உண்மைத் தமிழா (பாசத்துடன் கூறுகின்றேன் நண்பா)

  //நம்ம தமிழ்நாட்டு மக்கள் எவ்வளவு வெள்ளந்தியானவங்கன்னுதான் நமக்குத்தான் தெரியுமே..?//

  ஏண்டா இப்படி தமிழ்நாட்டு தமிழன் எல்லாமே வெள்ளந்தினுங்களாடா? நீ மட்டும் தான் புத்திசாலியாடா?

  நீ உண்மை தமிழானாடா?

  அடேய் நாங்கள் உண்மை தமிழண்டா. உலகத்தில் எந்த தமிழனுக்காவது ஒரு இதுன்னா எந்த தமிழன் இதயம் துடிக்குதோ அவன் தாண்டா உண்மைத் தமிழன்.

  இந்த பதிவுகளக் கொஞ்சம் பாரு தமிழா!!!

  http://vinavu.wordpress.com/2008/10/23/eelam1/

  http://vinavu.wordpress.com/2008/11/05/eelam8/

  நல்லாப் பாத்துபுட்டு பேசுடா மடையா!

  வாழ்த்துக்கள்

 18. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///காசிபாரதி said…
  டேய் உண்மைத் தமிழா (பாசத்துடன் கூறுகின்றேன் நண்பா)
  //நம்ம தமிழ்நாட்டு மக்கள் எவ்வளவு வெள்ளந்தியானவங்கன்னுதான் நமக்குத்தான் தெரியுமே..?//
  ஏண்டா இப்படி தமிழ்நாட்டு தமிழன் எல்லாமே வெள்ளந்தினுங்களாடா? நீ மட்டும்தான் புத்திசாலியாடா?///

  ஐயோ அப்படீன்னு நான் எப்பண்ணே சொன்னேன்.. புத்திசாலியா இருந்தா இப்படி இருப்பேனா..

  //நீ உண்மைதமிழானாடா?//

  அப்படீன்னு நினைச்சுத்தாண்ணே பேர் வெச்சேன்.. இதுவும் தப்பா..

  //அடேய் நாங்கள் உண்மை தமிழண்டா. உலகத்தில் எந்த தமிழனுக்காவது ஒரு இதுன்னா எந்த தமிழன் இதயம் துடிக்குதோ அவன்தாண்டா உண்மைத் தமிழன்.//

  சரிங்கண்ணே.. நீங்க சொல்லிட்டீங்கன்னா சரிதாண்ணேன்..

  //இந்த பதிவுகளக் கொஞ்சம் பாரு தமிழா!!!
  http://vinavu.wordpress.com/2008/10/23/eelam1/
  http://vinavu.wordpress.com/2008/11/05/eelam8/
  நல்லாப் பாத்துபுட்டு பேசுடா மடையா!//

  பார்த்துட்டண்ணேன்.. வேற ஏதாச்சும் இருக்காண்ணேன்..

  //வாழ்த்துக்கள்//

  திட்டறதெல்லாம் திட்டிப்போட்டு வாழ்த்து வேற வாழ்த்துறியாண்ணேன்.. எந்த ஊருண்ணே.. வடக்கயா.. தெக்கயே.. தெக்கண்ணே எங்கண்ணே.. நம்மூர் மாதிரியிருக்கு..

 19. Arun Kumar Says:

  மிகவும் அற்புதமாக நடத்தபட்ட புலண் விசாரணை என்று ராஜீவ் படு கொலை வழக்கு கோப்புகள் பல வெளிநாட்டு பல்கலைகழகங்களில் பாடதிட்டமாக அமைக்கபட்டு இருக்கிறது.

  பல நீதிமன்றங்களில் விசாரிக்கபட்ட வழக்கை திருமாள்வளவன் திசை திருப்ப பார்க்கிறார். இவருக்கு சந்தேகமாக இருந்தால் தகவல் அறியும் சட்டத்தின் கீழ தகவல் பெறலாம் அல்லது வழக்கு தொடரலாம்..

  இதை எல்லாம் விட்டு பொது இடத்த்தில் இதை போல ஆதாரம் இல்லாத செய்திகளை சொல்வது மிகவும் தவறு..அவரிடன் இந்த தகவலுக்கு ஆதாரம் இருந்தால் கண்டிப்பாக அவர்

  நீதிமன்றத்தை அனுக வேண்டும்.
  இல்லையெனில் குறைந்தபட்சம் இந்தியாவில் வெகு வருடங்களாக விடுதலைபுலிகள் தடைக்கு நீட்டிக்கபடும் தடைக்கு இவரிடம் இருக்கும் ஆதாரங்களை சொன்னால் தடைக்கு விடுதலையாவது கிடைக்கும்.

  இந்த முறை விடுதலைபுலிகளின் தடை நீதிமன்றத்தின் விசாரணைக்கு பின்னரே செயல்படுத்தபட்டது..

 20. Pisasu Says:

  //
  Arun Kumar said…
  மிகவும் அற்புதமாக நடத்தபட்ட புலண் விசாரணை என்று ராஜீவ் படு கொலை வழக்கு கோப்புகள் பல வெளிநாட்டு பல்கலைகழகங்களில் பாடதிட்டமாக அமைக்கபட்டு இருக்கிறது.

  //
  அடங்கொய்யால…
  Stanjoe- வாச்சும் L.K.G பசங்களுக்கேத்த மாதிரி ஒரு கதை சொன்னாரு. நீ என்னடா அதவிட வாண்டு கத சொல்லுற??

 21. புதுவை சிவா :-) Says:

  உண்மைத் தமிழன்,
  ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் எதிர் தரப்பு சட்ட நிபுணராக வாதாடிய வழக்கறிஞர் விடுதலை இராசேந்திரன் எழுதிய ‘”ராஜீவ் காந்தி கொலையில் மறைக்கப்பட்ட உண்மைகள்” அவர் எழுதிய புத்தகத்தை படித்து பார்கவும். பல உண்மைகள் உங்களுக்கு புரியவரும்.
  மேலும் ஓரு கட்சி தலைவரை தாங்கள் மிக மட்டமாக விமர்சனம் செய்த முறை நாகரிகம்யற்றது.
  இனி தாங்கள் 1/2 வேக்காடு காங்கரசர் போல் தவறான பதிவுகளை எழுதாதீர்

  புதுவை சிவா

 22. வெத்து வேட்டு Says:

  Thirumavalavan is expecting more payment from Foreign refugees (aka Eelam Tamils)..and he is showing that he is working hard for the money he gets..

 23. காசிபாரதி Says:

  //மிகவும் அற்புதமாக நடத்தபட்ட புலண் விசாரணை என்று ராஜீவ் படு கொலை வழக்கு கோப்புகள் பல வெளிநாட்டு பல்கலைகழகங்களில் பாடதிட்டமாக அமைக்கபட்டு இருக்கிறது. //

  அட கொய்யால* # ? ~ !!!!

  //நம்ம தமிழ்நாட்டு மக்கள் எவ்வளவு வெள்ளந்தியானவங்கன்னுதான் நமக்குத்தான் தெரியுமே..?//

  நிரூபிச்சிட்டியே அருன்குமாரு.

  தம்பி அருன்குமார் எந்த இச்சுக்கூலில பச்சே??

 24. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  Arun Kumar said…
  //பல நீதிமன்றங்களில் விசாரிக்கபட்ட வழக்கை திருமாவளவன் திசை திருப்ப பார்க்கிறார். இவருக்கு சந்தேகமாக இருந்தால் தகவல் அறியும் சட்டத்தின் கீழ தகவல் பெறலாம் அல்லது வழக்கு தொடரலாம்..//

  அருமையான யோசனை அருண். ஆனால் உண்மையைச் சொல்லி அரசியல் நடத்த முடியாது. ஏதாவது பொய் சொல்லித்தான் பிழைக்க வேண்டும்.

  //இதை எல்லாம் விட்டு பொது இடத்த்தில் இதை போல ஆதாரம் இல்லாத செய்திகளை சொல்வது மிகவும் தவறு..அவரிடன் இந்த தகவலுக்கு ஆதாரம் இருந்தால் கண்டிப்பாக அவர் நீதிமன்றத்தை அனுக வேண்டும். இல்லையெனில் குறைந்தபட்சம் இந்தியாவில் வெகு வருடங்களாக விடுதலைபுலிகள் தடைக்கு நீட்டிக்கபடும் தடைக்கு இவரிடம் இருக்கும் ஆதாரங்களை சொன்னால் தடைக்கு விடுதலையாவது கிடைக்கும்.//

  அங்கே போய் வாதாடி தோற்றுவிட்டால் இதுவரையில் இவர் சொன்னதெல்லாம் பொய். உண்மையில்லை என்று ஆகிவிடுமே.. அதற்காகவா இவ்ளோ தூரம் கஷ்டப்பட்டு பொய்யை கக்கிக் கொண்டிருக்கிறார்..

  //இந்த முறை விடுதலைபுலிகளின் தடை நீதிமன்றத்தின் விசாரணைக்கு பின்னரே செயல்படுத்தபட்டது..//

  ஆம்.. உண்மை.. முற்றிலும் சரி.. தடை தவறெனில் அங்கே போய் சொல்லியிருக்கலாம்.. கூட்டத்தோடு கூட்டமாக கோவிந்தா போட அங்கே ஆட்கள் யாரும் இல்லை. அதனால் அங்கே போகவில்லை. இதுதான் உண்மை..

 25. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///Pisasu said…
  //Arun Kumar said…
  மிகவும் அற்புதமாக நடத்தபட்ட புலண் விசாரணை என்று ராஜீவ் படு கொலை வழக்கு கோப்புகள் பல வெளிநாட்டு பல்கலைகழகங்களில் பாடதிட்டமாக அமைக்கபட்டு இருக்கிறது.//
  அடங்கொய்யால. Stanjoeவாச்சும் L.K.G பசங்களுக்கேத்த மாதிரி ஒரு கதை சொன்னாரு. நீ என்னடா அதவிட வாண்டு கத சொல்லுற??///

  உண்மைதான் பிசாசு.. நானும் முன்பே கேள்விப்பட்டேன். படித்திருக்கிறேன்.

  நீங்கள் சொல்லியிரு்பபதைப் போல் நாங்கள் வாண்டுகள்தான்.. தாங்கள் பெரியவர்கள்தான்..

  வாழ்க வளமுடன்

 26. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //புதுவை சிவா 🙂 said…
  உண்மைத் தமிழன், ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் எதிர் தரப்பு சட்ட நிபுணராக வாதாடிய வழக்கறிஞர் விடுதலை இராசேந்திரன் எழுதிய ‘”ராஜீவ் காந்தி கொலையில் மறைக்கப்பட்ட உண்மைகள்” அவர் எழுதிய புத்தகத்தை படித்து பார்கவும். பல உண்மைகள் உங்களுக்கு புரியவரும்.//

  திரு.கார்த்திகேயன் எழுதிய ராஜீவ்காந்தி படுகொலை என்கிற புத்தகத்தைப் படித்துப் பாருங்கள். பல உண்மைகள் உங்களுக்கும் புரிய வரும்.

  //மேலும் ஓரு கட்சி தலைவரை தாங்கள் மிக மட்டமாக விமர்சனம் செய்த முறை நாகரிகம்ற்றது.//

  உளறல் என்கிற ஒரு வார்த்தை மட்டமானதா.. ஆச்சரியம்..

  //இனி தாங்கள் 1/2 வேக்காடு காங்கரசர் போல் தவறான பதிவுகளை எழுதாதீர்.//

  “கொலைக்குற்றவாளிக்கு ஆதரவு தெரிவிக்காதே” என்று சொன்னால் அது அரைவேக்காடா..

  இதுதான் உங்களுடைய நாகரிகம் போலும்..

 27. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //வெத்து வேட்டு said…
  Thirumavalavan is expecting more payment from Foreign refugees (aka Eelam Tamils)..and he is showing that he is working hard for the money he gets..//

  இது எந்த அளவிற்கு உண்மை என்று எனக்குத் தெரியவில்லை.. கட்சிக்கு நன்கொடையாக வாங்கியிருக்கலாம். அதில் ஒன்றும் தவறில்லையே..

 28. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  காசி ஸார்..

  தம்பி அருணும் நம்மைப் போன்ற தமிழர்தான்.. ஈழத்துத் தமிழர்பால் கொண்ட நேசமும், பாசமும் எங்களின் மீதும் குறைந்தபட்சம் வார்த்தையிலாவது இருக்கட்டுமே.. கோபம் வேண்டாம். தணியுங்கள்..

  எந்த நாட்டுப் பல்கலைக்கழகத்தில் பாடப்புத்தகமாக வைக்கப்பட்டுள்ளது என்று தம்பி அருண்குமாரிடம் கேட்கிறீர்கள்.. அவ்வளவுதானே..

  அவரே வந்து சொல்லுவார்.. நானும் தேடித் தருகிறேன்..

  இதெற்கெதுக்கு இவ்வளவு ஆவேசம்.. அடா புடா வார்த்தைகள்.. அமைதி.. அமைதி.. அமைதி..

 29. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  முதல் கமெண்ட்டே சென்ட்டிமெண்ட்டாக அற்புதமான அருள் வாக்காகக் கிடைத்துவிட்டதால் இந்தப் பதிவிற்கு வரும் பின்னூட்டங்களில் இதுவரையிலும் சுமார் 55 பின்னூட்டங்களை நீக்கியுள்ளேன்.

  போதாக்குறைக்கு தம்பிமார்களும், அண்ணன்மார்களும் நட்சத்திரத்தில் குத்தோ, குத்தோ என்று மைனஸில் குத்தியிருக்கிறார்கள்.

  என் பதிவுகளிலேயே முதல் முறையாக 2 நட்சத்திரத்திற்கு சென்றது இப்பதிவுதான்..

  வாழ்க வசவாளர்கள்..

 30. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  திரு.வதா அவர்களே..

  தாங்கள் அனுப்பிய தா.பாண்டியனுக்கு கடிதம் என்ற பின்னூட்டம் தனிப்பதிவாகப் போடப்பட்டுள்ளது.

  பார்க்கவும்.

  நன்றி..

 31. Madhusudhanan Ramanujam Says:

  //நான் இதை மட்டும் நம்புவதாக இல்லை.. அமெரிக்கா இதில் தலையிட்டிருந்தால் இந்நேரம் இந்தப் பிரச்சினையில் ஏதோ ஒரு முடிவு கிடைத்திருக்கும். அண்ணனுக்கு இலங்கையால் ஆக வேண்டியதும், இதை வைத்து இந்தியாவுக்கு பிலிம் காட்ட வேண்டியதும் தேவையில்லாததால் ஒதுங்கியிருக்கிறார்..//

  🙂 எங்கேயோ நானும் இப்படி கருத்து கூறியதாய் நியாபகம். உண்மையைச் சொல்லப் போனால் வி.பு க்களை வளர்த்ததில் இந்திராவுக்கும் ராஜீவுக்கும் நிறைய பங்கு உண்டு. அமெரிக்காவை இலங்கையிலிருந்து ஒதுங்கி இருக்க வைக்கும் பொருட்டு நடந்தவைதான் இவை. அமெரிக்கா எப்படி தாலிபான்களை உருவாக்கியதோ அதே போல் இந்தியாவும் பிராந்திய நலன் எனும் பேரில் இப்படிச் செய்தது. இது குறித்து நான் எழுதிய பதிவு இதோ இங்கே

 32. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///Madhusudhanan Ramanujam said…
  //நான் இதை மட்டும் நம்புவதாக இல்லை.. அமெரிக்கா இதில் தலையிட்டிருந்தால் இந்நேரம் இந்தப் பிரச்சினையில் ஏதோ ஒரு முடிவு கிடைத்திருக்கும். அண்ணனுக்கு இலங்கையால் ஆக வேண்டியதும், இதை வைத்து இந்தியாவுக்கு பிலிம் காட்ட வேண்டியதும் தேவையில்லாததால் ஒதுங்கியிருக்கிறார்..//
  :)எங்கேயோ நானும் இப்படி கருத்து கூறியதாய் நியாபகம். உண்மையைச் சொல்லப் போனால் வி.பு க்களை வளர்த்ததில் இந்திராவுக்கும் ராஜீவுக்கும் நிறைய பங்கு உண்டு. அமெரிக்காவை இலங்கையிலிருந்து ஒதுங்கி இருக்க வைக்கும் பொருட்டு நடந்தவைதான் இவை. அமெரிக்கா எப்படி தாலிபான்களை உருவாக்கியதோ அதே போல் இந்தியாவும் பிராந்திய நலன் எனும் பேரில் இப்படிச் செய்தது. இது குறித்து நான் எழுதிய பதிவு இதோ இங்கே.///

  உண்மைதான் மது.. கொலை செய்யத்தான் போகிறார்கள் என்பது தெரிந்தும் இந்திராகாந்தி ஆயுதப் பயிற்சியளித்தது அவருடைய அரசியல் செல்வாக்கை வளர்த்துக் கொண்ட வேண்டித்தானே ஒழிய, ஈழப் பிரச்சினையில் தீர்வு காணவல்ல..

  எங்கே அமெரிக்கா மூக்கை நுழைத்துவிடுமோ என்கிற பயமும் அவருக்கு இருந்திரு்க்கலாம். பங்களாதேஷ் பிரச்சினையைப் போல் இதிலும் தான் ஜெயித்துவிடலாம் என்று ஈழப் போராளிக் குழுக்களை மனதில் வைத்து எண்ணியிருக்கலாம்.

 33. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  கனகா அவர்களே..

  தாங்கள் அனுப்பியிருக்கும் ரி.பி.சி. வானொலி தாக்கப்பட்ட கதையை அதன் நீளத்தையும், முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு தனிப்பதிவாக இட்டுள்ளேன். பார்க்கவும்.

  பகிர்ந்து கொண்டமைக்கு எனது நனறிகள்..

 34. Arun Kumar Says:

  உண்மை தமிழன் அண்ணா,
  இலங்கை பிரச்சனையில் நமக்கு தெரிந்ததை எழுதினால் இப்படி போன்ற பின்னோட்டங்கள் வருவது சகஜம் தான் 🙂

  என்னிடம் இந்த ராஜீவ்காந்தி படுகொலை வழக்கு வெளிநாட்டு பலகலைகழகத்தில் பாடதிட்டமாக இணைக்கபட்டு இருப்பதின் தொடர்பாக முழு தகவலுக்கு இருக்கிறது. (ஆங்கிலத்தில்). அதை தமிழாக்கம் செய்து இந்த வார இறுதியில் பின்னோடமாக கொடுக்கிறேன்..

 35. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //Arun Kumar said…
  உண்மை தமிழன் அண்ணா, இலங்கை பிரச்சனையில் நமக்கு தெரிந்ததை எழுதினால் இப்படி போன்ற பின்னோட்டங்கள் வருவது சகஜம் தான்:)//

  நீ எனக்கு ஆறுதல் சொல்கிறாய்.. நான் உனக்கு ஆறுதல் சொல்லிக் கொள்கிறேன்.. வேறென்ன செய்வது..

  //என்னிடம் இந்த ராஜீவ்காந்தி படுகொலை வழக்கு வெளிநாட்டு பலகலைகழகத்தில் பாடதிட்டமாக இணைக்கபட்டு இருப்பதின் தொடர்பாக முழு தகவலுக்கு இருக்கிறது. (ஆங்கிலத்தில்). அதை தமிழாக்கம் செய்து இந்த வார இறுதியில் பின்னோடமாக கொடுக்கிறேன்..//

  மிக, மிக சந்தோஷம்..

 36. காத்து Says:

  ராஜீவ் புலிகளால் கொல்லப்பட வில்லை எண்றால் மிகவும் மனம் வருந்துபவர்களில் நான் ஒருவன்..

  நம்ப வைத்து கழுத்து அறுத்தவன் ரஜீவ்.. காப்பாத்த வாறங்கள் எண்டு நினைத்து கையாட்டி அழைத்த எங்களை இந்திய படைகள் காலால் போட்டு மிதித்ததை எப்போதும் ஈழத்தவன் மறக்க கூடாது..

  முதுகிலை குத்தியவன் ரஜீவ் புலிகளோட சண்டை பிடிக்க முடியாது பொது மக்களாக கொண்று குவித்தவன்..

  இந்திய படைகளோடு சண்டையில் வெறும் 600 புலிகளும் 8000 பொது மக்களும் கொல்லப்பட்டனர்… இதில் இருந்து தெரியவில்லையா ரஜீவின் வீரம்.?

  அந்த நாயை கட்டி வைத்து கல்லால் அடித்து கொலை செய்து இருக்க வேண்டும்.. குண்டு வைத்து கொலை செய்து போட்டார்கள்..

 37. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //காத்து said…
  ராஜீவ் புலிகளால் கொல்லப்பட வில்லை எண்றால் மிகவும் மனம் வருந்துபவர்களில் நான் ஒருவன்..
  நம்ப வைத்து கழுத்து அறுத்தவன் ரஜீவ்.. காப்பாத்த வாறங்கள் எண்டு நினைத்து கையாட்டி அழைத்த எங்களை இந்திய படைகள் காலால் போட்டு மிதித்ததை எப்போதும் ஈழத்தவன் மறக்க கூடாது..
  முதுகிலை குத்தியவன் ரஜீவ் புலிகளோட சண்டை பிடிக்க முடியாது பொது மக்களாக கொண்று குவித்தவன்..
  இந்திய படைகளோடு சண்டையில் வெறும் 600 புலிகளும் 8000 பொது மக்களும் கொல்லப்பட்டனர்… இதில் இருந்து தெரியவில்லையா ரஜீவின் வீரம்.?
  அந்த நாயை கட்டி வைத்து கல்லால் அடித்து கொலை செய்து இருக்க வேண்டும்.. குண்டு வைத்து கொலை செய்து போட்டார்கள்..//

  ஐயா காத்து.. அமைதிப் படையினர் செய்த செயல்களுக்கு தார்மீக ரீதியாக மட்டுமே ராஜீவ் பொறுப்பேற்க முடியும்.. அவரே செய்யச் சொல்லிச் சொன்னதல்ல இந்திய அமைதிக் காப்புப் படையின் அத்துமீறல்கள்..

  இவ்வளவு ஆத்திரமும்,ஆவேசமும் தேவையில்லை..

  அவரால் அதிகம் பயன்பட்டதும் உங்களுடைய போராளிக் குழுக்கள்தான்..

  ஒருவிதத்தில் நியாயம் என்பது இரு பக்கமும் உண்டு. யோசித்துப் பார்த்தால் உங்களுக்கே தெரியும்..

 38. முத்து தமிழினி Says:

  உண்மை தமிழன்,

  திருமா பிட் புதுசு இல்லையே?

  //ஒருவிதத்தில் நியாயம் என்பது இரு பக்கமும் உண்டு. யோசித்துப் பார்த்தால் உங்களுக்கே தெரியும்..//

  இதுக்கு என்ன அர்த்தமோ?

  ராஜீவ் முடடாள்தனமாக இலங்கை பிரச்சினை கையாண்டார் என்பதை ஒத்துக்கொள்வீரா?

  புலிகள் அவரை கொன்றிருந்தால் அது நியாயமோ என்னமோ அவர்கள் எதிர்காலத்திற்கு தவறான முடிவாகிவிட்டது என்பதுதான் என் வருத்தம்.

  இந்த ராஜீவ் கொலை புலனாய்வை ஒரு சாதனையாக மக்கள் சொல்வது எனக்கு புரியில்லை. அரிபாபு கேமரா தான் மேட்டர்.

  அப்புறம் இந்த உண்மைதமிழன் என்ற பெயரை மாற்றிக்கொண்டால் நல்லது.எங்களுக்கு எல்லாம் ரொம்ப உறுத்துது 🙂

  கொசுறு
  *******

  வீட்டுக்கு வீடு லூட்டி விரும்பி பார்ப்பேன்.நீதான் எழுதறதா? ஒரு பதிவுல படிச்சேன்….

 39. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //முத்து தமிழினி said…
  உண்மை தமிழன், திருமா பிட் புதுசு இல்லையே?//

  ரொம்ப நாளா இதைத்தான் சொல்றாரா.. அடக்கர்மமே.. இவருக்கு என்னதான் வேணுமாம்.. ஒரு மனுஷன் மேல விரோதமும், குரோதமும் இருக்கலாம். ஆனா இந்தளவுக்கு் இருக்கக் கூடாது..

  ///ஒருவிதத்தில் நியாயம் என்பது இரு பக்கமும் உண்டு. யோசித்துப் பார்த்தால் உங்களுக்கே தெரியும்..//
  இதுக்கு என்ன அர்த்தமோ?///

  கத்திக்குக் கத்தி, ரத்தத்துக்கு ரத்தம்.. பதிலுக்குப் பதில்.. என்பதைப் போல் செயல்பட்டுவிட்டார்கள் விடுதலைப்புலிகளும், இந்திய அமைதி காப்புப் படையும் என்று சொல்ல வந்தேன்..

  //ராஜீவ் முடடாள்தனமாக இலங்கை பிரச்சினை கையாண்டார் என்பதை ஒத்துக் கொள்வீரா?//

  மாட்டேன்.. அன்றைய நிலைமையில் தான் முனைந்து செயல்பட்டு ஈழத்து மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்றுதான் நினைத்தார்.

  உடனிருந்த அரசியல்வாதிகள், உளவுத்துறை அதிகாரிகள் என்று அனைவரும் ஆளாளுக்கு அவரைக் குழப்பிவிட்டார்கள் என்றே நினைக்கிறேன்..

  அதற்கு ஒரே சாட்சி குமரப்பா, புலேந்திரனை இந்தியத் தூதர் தீட்சித்தால் விடுவிக்க முடியாத நிலை வந்ததே..

  //புலிகள் அவரை கொன்றிருந்தால் அது நியாயமோ என்னமோ அவர்கள் எதிர்காலத்திற்கு தவறான முடிவாகிவிட்டது என்பதுதான் என் வருத்தம்.//

  அது என்ன ஸார் நியாயம். எந்தவிதத்திலும் கொலையை நியாயப்படுத்தாதீர்கள்.. அது கோழைத்தனம்..

  //இந்த ராஜீவ் கொலை புலனாய்வை ஒரு சாதனையாக மக்கள் சொல்வது எனக்கு புரியில்லை. அரிபாபு கேமராதான் மேட்டர்.//

  அரிபாபு கேமிராவில்தான் கதை ஆரம்பித்தது. ஆனால் அதன் பின் கதையின் முழு நடிகர்களையும் தேடிப் பிடித்த விஷயங்கள் நிச்சயம் மிகப் பெரிய விஷயம் ஸார்..

  //அப்புறம் இந்த உண்மைதமிழன் என்ற பெயரை மாற்றிக்கொண்டால் நல்லது.எங்களுக்கு எல்லாம் ரொம்ப உறுத்துது:)//

  ஏன்.. ஏன்.. ஏன்.. உறுத்துது.. நான் உண்மைத்தமிழன்னா.. நீங்களும் உண்மைத்தமிழர்கள்தான்.. சொல்லிக்குவோமே..

  நல்ல பேரு ஸார்.. வித்தியாசமா இருக்கணும்னு ஹோட்டல்ல ரூம் போடாம யோசிச்சு, யோசிச்சு வைச்சேன்.. நல்லாயிருக்குல்ல..

  //கொசுறு
  *******
  வீட்டுக்கு வீடு லூட்டி விரும்பி பார்ப்பேன். நீதான் எழுதறதா? ஒரு பதிவுல படிச்சேன்….//

  ஆமாம்.. இப்போது ஒளிபரப்பாகி வருவது எனது எழுத்துதான்.. நன்றி.. நன்றி.. நன்றி..

  தாங்கள் ஏதோ ஒரு அயல்நாட்டில் இருப்பதாக பட்சி ஒன்று சொன்னது.. உண்மைதானா..

  பெங்களூரில் இருக்கிறீர்கள் என்றல்லவா இத்தனை நாளும் நினைத்திருந்தேன்..

 40. முத்து தமிழினி Says:

  //மாட்டேன்.. அன்றைய நிலைமையில் தான் முனைந்து செயல்பட்டு ஈழத்து மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்றுதான் நினைத்தார்.//

  இதுக்கும்….

  //உடனிருந்த அரசியல்வாதிகள், உளவுத்துறை அதிகாரிகள் என்று அனைவரும் ஆளாளுக்கு அவரைக் குழப்பிவிட்டார்கள் என்றே நினைக்கிறேன்..//

  இதுக்கும்…முரண்டுதே :))

  ஒரு நல்ல தலைவன் குழம்பக்கூடாது. அப்புறம் அந்த சீசன்ல அவரு கொஞ்சம் ஆர்வகோளாறாவும் லூசுத்தனமாவும் நிறைய பண்ணாரு.கொலையானதினால நல்லவராயிட மாட்டாருங்கறது என் கருத்து.. பிரபாகரகிட்ட எப்படி கையெழுத்து வாங்கினாருன்னு தெரியுமா?

  //அது என்ன ஸார் நியாயம். எந்தவிதத்திலும் கொலையை நியாயப்படுத்தாதீர்கள்.. அது கோழைத்தனம்//

  உங்க குரு பேசறத கேட்கற மாதிரி இருக்கு… எல்லார் பண்ற கொலைக்கும் இது பொருந்தும்யா… ராஜீவ்து மட்டும் தான் உயிரு..மற்றதெல்லாம் ம** அப்படிங்கற மாதிரி இருக்கு..இது :))

  //அரிபாபு கேமிராவில்தான் கதை ஆரம்பித்தது. ஆனால் அதன் பின் கதையின் முழு நடிகர்களையும் தேடிப் பிடித்த விஷயங்கள் நிச்சயம் மிகப் பெரிய விஷயம் ஸார்//

  பாராட்ட நெனச்சா நாம எதை வேணாலும் பாராட்டலாம்.. நான் சொல்றது கேமரா வெடிச்சிருந்தாலும் இதே அளவு கண்டுபிடிச்சிருப்பாங்களாங்கறதுதான்…..

  //ஏன்.. ஏன்.. ஏன்.. உறுத்துது.. நான் உண்மைத்தமிழன்னா.. நீங்களும் உண்மைத்தமிழர்கள்தான்.. சொல்லிக்குவோமே.. //

  நாங்கள்ளாம் உங்களை மாதிரி சும்மா சொல்லிகிறதுள்ள சாமி .. உண்மையாவே தமிழனா வாழ்கிறோம் 🙂

  துக்ளக் வாராவாரம் தவறாம படிக்கறவங்க தமிழனே இல்லைங்கறது என் கருத்து ஹிஹி

  //தாங்கள் ஏதோ ஒரு அயல்நாட்டில் இருப்பதாக பட்சி ஒன்று சொன்னது.. உண்மைதானா..

  பெங்களூரில் இருக்கிறீர்கள் என்றல்லவா இத்தனை நாளும் நினைத்திருந்தேன்//

  ரெண்டும் உண்மைதான்.

 41. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///முத்து தமிழினி said…
  //மாட்டேன்.. அன்றைய நிலைமையில் தான் முனைந்து செயல்பட்டு ஈழத்து மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்றுதான் நினைத்தார்.//
  இதுக்கும்….
  //உடனிருந்த அரசியல்வாதிகள், உளவுத்துறை அதிகாரிகள் என்று அனைவரும் ஆளாளுக்கு அவரைக் குழப்பிவிட்டார்கள் என்றே நினைக்கிறேன்..//
  இதுக்கும்…முரண்டுதே:))///

  என்ன முரண்பாடு.. ஆளாளுக்கு அவரைக் குழப்பியதால் நல்ல திட்டத்தை நடைமுறைப்படுத்தியதில் தவறு செய்ய நேரிட்டது..

  //ஒரு நல்ல தலைவன் குழம்பக்கூடாது.//

  அவரும் மனுஷன்தான்.. ஈழத்தில் புலிகளுக்கு இருந்த அமோக ஆதரவை அவருக்குத் தெரியப்படுத்தாமலேயே விட்டுவிட்டார்கள்.. மொழிப் பிரச்சினை வேறு.. அவரை என்னதான் செய்யச் சொல்கிறீர்கள்..

  //அப்புறம் அந்த சீசன்ல அவரு கொஞ்சம் ஆர்வக்கோளாறாவும் லூசுத்தனமாவும் நிறைய பண்ணாரு.//

  நல்லது செய்ய நினைத்தால் அது லூஸுத்தனமா.. உங்களுக்குப் போய் செய்யணும்னு நினைச்சார் பாருங்க.. அவரைச் சொல்லணும்..

  //கொலையானதினால நல்லவராயிட மாட்டாருங்கறது என் கருத்து..//

  அவர் தவறுகள் செய்திருக்கலாம். அது மனித இயல்பு.. அதற்காக கொலைதான் செய்வோம் என்று ஒரு கொலைகாரக் கூட்டம் சொன்னால் அவர்களைத் தண்டிக்கத்தான் வேண்டும்..

  அவர் மீது தவறு என்றால் உரிய பரிகாரம் தேடுங்கள்.. சட்டப்படியான வழியைக் கையாளுங்கள்.. அதுக்கு கொலைதான் ஒரே வழியா..

  //பிரபாகரன்கிட்ட எப்படி கையெழுத்து வாங்கினாருன்னு தெரியுமா?//

  ஓ.. தெரியுமே.. அசோகா ஹோட்டல்ல சிறை வைச்சு மிரட்டி வாங்கினாங்க..

  //அது என்ன ஸார் நியாயம். எந்தவிதத்திலும் கொலையை நியாயப்படுத்தாதீர்கள்.. அது கோழைத்தனம்//
  உங்க குரு பேசறத கேட்கற மாதிரி இருக்கு… எல்லார் பண்ற கொலைக்கும் இது பொருந்தும்யா… ராஜீவ்து மட்டும்தான் உயிரு.. மற்றதெல்லாம் ம** அப்படிங்கற மாதிரி இருக்கு..இது:))///

  நான் அப்படின்னு சொல்லலையே.. மற்றதுன்னா யாரு.. அப்பாவி ஈழத்து மக்களா.. அமைதி காப்புப் படையால் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதனை நீங்கள் முறைப்படி உலக சமுதாயத்திடம் கொண்டு சென்று முறையிட்டிருக்க வேண்டும். அல்லது நியாயமான, முறையான வழிகளைக் கையாண்டிருக்க வேண்டும்.. மிலோசெவிக் என்ன ஆனார்..

  ஆனால் இதில் ராஜீவ்காந்திக்கு என்ன பங்கு என்பது எனக்குத் தெரியவில்லை.

  புலிகளை ஒடுக்குங்கள் என்று உத்தரவிட்டது அவர்தான். ஆனால் மக்களைக் கொன்றதற்கும் அவருக்கும் எந்தவிதப் பொறுப்புமில்லை. தார்மீக ரீதியாக மட்டுமே அவரைக் குற்றம் சாட்டலாம்.. அவ்வளவுதான்..

  ///அரிபாபு கேமிராவில்தான் கதை ஆரம்பித்தது. ஆனால் அதன் பின் கதையின் முழு நடிகர்களையும் தேடிப் பிடித்த விஷயங்கள் நிச்சயம் மிகப் பெரிய விஷயம் ஸார்//
  பாராட்ட நெனச்சா நாம எதை வேணாலும் பாராட்டலாம்.. நான் சொல்றது கேமரா வெடிச்சிருந்தாலும் இதே அளவு கண்டு பிடிச்சிருப்பாங்களாங்கறதுதான்.///

  அது ஏன் நம்ம நாட்டு போலீஸ் மேலேயே ஒரு அவநம்பிக்கை.. கொலையாளிகளைத் தேடிப் பிடித்தே தீருவார்கள்.. திறமையுள்ளவர்கள் இந்தியத் திருநாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

  ///ஏன்.. ஏன்.. ஏன்.. உறுத்துது.. நான் உண்மைத்தமிழன்னா.. நீங்களும் உண்மைத்தமிழர்கள்தான்.. சொல்லிக்குவோமே.. //
  நாங்கள்ளாம் உங்களை மாதிரி சும்மா சொல்லிகிறதுள்ள சாமி. உண்மையாவே தமிழனா வாழ்கிறோம்:)///

  ஓ. நான் சும்மா சொல்லிக்கிறேனாக்கும்.. அனுமானத்திற்கு நன்றிகள்..

  //துக்ளக் வாராவாரம் தவறாம படிக்கறவங்க தமிழனே இல்லைங்கறது என் கருத்து ஹிஹி//

  ஏன் வெளில இருந்து சொல்றீங்க.. புத்தகக் கடை வாசல்ல நின்னே கூவலாம்.. பத்தோட பதினொண்ணு.. எங்களுக்கு அம்புட்டுத்தான்..

  ///தாங்கள் ஏதோ ஒரு அயல்நாட்டில் இருப்பதாக பட்சி ஒன்று சொன்னது.. உண்மைதானா..//
  பெங்களூரில் இருக்கிறீர்கள் என்றல்லவா இத்தனை நாளும் நினைத்திருந்தேன்//
  ரெண்டும் உண்மைதான்.///

  ஓ.. அப்படீன்னா.. 6 மாசம் இங்க.. 6 மாசம் அங்கயா..

  வாழ்க. வாழ்க.. வாழ்க..

 42. Chandran Says:

  //நிகழ்ச்சிக்கு இலங்கைத் தமிழர்கள் சிலர் வந்திருந்தார்கள். அவர்கள் இலங்கையிலிருந்து சென்னை வழியாக பாரீஸ் பயணமாக வந்தவர்கள்.//
  ஆகவே புலிகள் வன்னியில் தமிழர்களை தங்கள் கேடயமாக பாவிப்பதற்காக வெளியேறவிடாமல் தடுப்பது மாதிரி இலங்கை அரசாங்கம் செய்யவில்லை.

 43. காத்து Says:

  //ஐயா காத்து.. அமைதிப் படையினர் செய்த செயல்களுக்கு தார்மீக ரீதியாக மட்டுமே ராஜீவ் பொறுப்பேற்க முடியும்.. அவரே செய்யச் சொல்லிச் சொன்னதல்ல இந்திய அமைதிக் காப்புப் படையின் அத்துமீறல்கள்..

  இவ்வளவு ஆத்திரமும்,ஆவேசமும் தேவையில்லை..

  அவரால் அதிகம் பயன்பட்டதும் உங்களுடைய போராளிக் குழுக்கள்தான்..

  ஒருவிதத்தில் நியாயம் என்பது இரு பக்கமும் உண்டு. யோசித்துப் பார்த்தால் உங்களுக்கே தெரியும்..//

  திலீபன் ஏன் உண்ணாவிரதம் இருந்தார் என்பதாவது உங்கள் தலைக்கு தெரியுமோ தெரியாது..

  தன்னால் அக்கறையாக கவனிக்க முடியவில்லை எண்றால், இராசீவ் இறங்கியது தவறு…

  ராஜீவ் இந்திய படைகளோடு அனுப்பி வைத்த ஈழத்து கூட்டம் ஆயுதங்களோடும் புலிகள் ஆயுதங்கள் இல்லாதும் நடமாட்டா வேண்டும் என்பது IPKF கட்டளை..

  அந்த வேளை யாழ்ப்பாணத்தில் சுளிபுரம் எனும் இடத்தில் புலிகள் மூவர் தமிழ் குழு ஒண்றால் கொல்லப்பட்டு ஆணுறுப்பூகள் வெட்டப்பட்டு வாய்க்குள் வைக்கப்பட்டு இருந்தது… இதை இந்திய படைகள் நடு நிலையோடு அணுகியது…

  வங்காள தேசத்தில் இந்திய படைகள் முக்திபாகினி போராளிகளை கொலை செய்து விட்டு தனது அடிவருடிகளை ஆட்ச்சிக்கு கொண்டு வந்த போல செய்ய போகிறார்கள் என்பது எல்லாருக்கும் தெளிவாக புரிந்தது…

  இந்திய வருகையும் இராசீவின் நோக்கமும் ஒண்றும் ஈழத்தவருக்கு சிதம்பர இரகசியம் இல்லை…. புரிந்து கொள்ள முடிந்தது..

 44. காத்து Says:

  //ஆனால் இதில் ராஜீவ்காந்திக்கு என்ன பங்கு என்பது எனக்குத் தெரியவில்லை.

  புலிகளை ஒடுக்குங்கள் என்று உத்தரவிட்டது அவர்தான். ஆனால் மக்களைக் கொன்றதற்கும் அவருக்கும் எந்தவிதப் பொறுப்புமில்லை. தார்மீக ரீதியாக மட்டுமே அவரைக் குற்றம் சாட்டலாம்.. அவ்வளவுதான்..//

  இண்ரைக்கு தமிழரை கொல்வது சிங்கள் இராணுவம்தான்… ஆகவே மகிந்தவுக்கும் கொலைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனும் உங்களது நிறுவல் புரிகிறது…!!

  நீங்கள் எல்லாம் தமிழனின் விதி அல்ல வியாதி… மருத்துவம் செய்ய வேணும்

 45. சயந்தன் Says:

  95 க்கு பிறகு யாழ்பாணத்தில் இராணுவம் பெண்களை பாலியல் வன் புணர்ச்சிக்கு உட்படுத்த வில்லை என யாரும் எழுதினால் அது ஒரு மாற்றுக் கருத்து என உங்களால் சொல்ல முடிகிறது. திருமா சொல்வதையும் மாற்று கருத்து என லூஸ்ல விடுங்க சார்..

  புலிகளோடு யுத்தம் தொடங்குவதற்கான மந்திராலோசனையில் புலிகளை 2 வாரத்தில் ஒடுக்கலாம் என ராஜீவுக்கு ஆலோசனை சொன்னார்களாம். அவரும் மண்டையை மண்டையை ஆட்டினாராம்.

  இந்திய புலிகள் யுத்தம் ஒரு நாள் மட்டுமே நடந்தது. அதில் 8000 பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் என்பது உண்மையானால் ராஜீவுக்கு தெரியாதமல் இந்திய இராணுவ வீரர்கள் அதை செய்தார்கள் என்ற உங்கள் கருத்து சரி..

  ஆனால் 3 வருடம் நடந்த யுத்தத்தில் பொதுமக்கள் கொல்லப்படுகிறார்கள் என்ற செய்தி ஒரு தடவையும் ராஜிவை எட்டவில்லையா?

  ராஜீவ் நினைத்திருந்தால் பொதுமக்களுக்கு உயிரிழப்பை ஏற்படுத்த வெண்டாம் என 87 இல் உத்தரவிட்டிருக்கலாம். அவர் உத்தரவிட்டும் இந்திய இராணுவம் அதை செவி மடுத்திருக்கா விட்டால் அவர் தலைவராய் எதற்கு இருக்க வேண்டும் ?

  பொதுமக்கள் மீதான வன்முறை இந்தியாவிற்கு ஊடகங்கள் மூலம் கொண்டு வரப்பட்டது.

  புலிகளை கொல்வதற்கு பொதுமக்களின் உயிரிழப்பும் தவிர்க்க முடியாதது என்பதை ராஜீவ் அனுமதித்தார் என்பதுதான் உண்மை. அவருக்கு தெரியாமல் நடந்தது என்றால் ஒரு இந்திய பிரதமரை இதை விட அவமானப்படுத்த முடியாது.

  கிட்டத்தட்ட பிரபாகரன் ரஜீவோடு நல்ல உறவைத்தான் பேண விரும்பினார். சில தளபதிகளும் போராளிகளும் அவர் மனதை குழப்பி விட்டார்கள் என எழுதினால் எத்தகைய கோபம் பத்திக்கொண்டு வருமோ அவ்வாறுதான் எமக்கு எழுகிறது.

 46. வெத்து வேட்டு Says:

  இப்போ புலிகளின் வால்பிடிகள் என்னத்துக்கு புலம்புராங்கன்னு புரியல்லை
  “ராஜீவ் செய்தது பிழை அது தான் நாங்க கொன்னுட்டம்” என்றது தானே உங்க நிலை?
  அது மாதிரி தான் இப்போ இந்தியாவும் “நீங்க ராஜீவை கொன்னது பிழை …இப்போ பலிவாங்குறோம்” னு இலங்கை அரசாங்கத்துக்கு எல்லா உதவியும் செய்யுது..
  பிறகு ஏன் இந்த ஒப்பாரி? நீங்க தான் வழியையே காட்டினீங்க …90s ல சிங்களவனின் காலை நக்கிநீங்க..இப்போ சிங்களவன் இந்தியா காலை பிடிக்கிறான்..
  கணக்கை கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் சரியா வரும்…
  பூநகரி விழுந்துட்டுதாமே …உண்மையா?

 47. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///Chandran said…
  //நிகழ்ச்சிக்கு இலங்கைத் தமிழர்கள் சிலர் வந்திருந்தார்கள். அவர்கள் இலங்கையிலிருந்து சென்னை வழியாக பாரீஸ் பயணமாக வந்தவர்கள்.//
  ஆகவே புலிகள் வன்னியில் தமிழர்களை தங்கள் கேடயமாக பாவிப்பதற்காக வெளியேறவிடாமல் தடுப்பது மாதிரி இலங்கை அரசாங்கம் செய்யவில்லை.///

  எந்த ஊரிலிருந்து வந்திருந்தார்கள் என்பதனை நாங்கள் கேட்கவில்லை.. ஆகவே உங்களுடைய கருத்திற்கு எனது பதில் தெரியவில்லை என்பதே..

 48. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //காத்து said…
  திலீபன் ஏன் உண்ணாவிரதம் இருந்தார் என்பதாவது உங்கள் தலைக்கு தெரியுமோ தெரியாது..//

  தெரியும்.. என்ன அதனால்..

  //தன்னால் அக்கறையாக கவனிக்க முடியவில்லை எண்றால், இராசீவ் இறங்கியது தவறு…//

  அவர் நம்பியது புலிகளைத் தவிர மற்றவர்களுக்கும் ஈழத்து மக்களிடையே அதிக செல்வாக்கு இருக்கிறது என்பதை.. அதையொட்டியே தனது நடவடிக்கைகளை வைத்துக் கொண்டார்.. அதுதான் தவறு.. அவர் இதிலிருந்துதான் ஒரு பாடம் கற்றுக் கொண்டார்..

  //ராஜீவ் இந்திய படைகளோடு அனுப்பி வைத்த ஈழத்து கூட்டம் ஆயுதங்களோடும், புலிகள் ஆயுதங்கள் இல்லாதும் நடமாடா வேண்டும் என்பது IPKF கட்டளை..//

  புலிகளை ஒடுக்குவதற்காக செய்த செயல்..

  //அந்த வேளை யாழ்ப்பாணத்தில் சுளிபுரம் எனும் இடத்தில் புலிகள் மூவர் தமிழ் குழு ஒண்றால் கொல்லப்பட்டு ஆணுறுப்பூகள் வெட்டப்பட்டு வாய்க்குள் வைக்கப்பட்டு இருந்தது… இதை இந்திய படைகள் நடு நிலையோடு அணுகியது…//

  மிகக் கொடுமையானது..

  //வங்காள தேசத்தில் இந்திய படைகள் முக்திபாகினி போராளிகளை கொலை செய்து விட்டு தனது அடிவருடிகளை ஆட்சிக்கு கொண்டு வந்த போல செய்ய போகிறார்கள் என்பது எல்லாருக்கும் தெளிவாக புரிந்தது…

  இந்திய வருகையும் இராசீவின் நோக்கமும் ஒண்றும் ஈழத்தவருக்கு சிதம்பர இரகசியம் இல்லை…. புரிந்து கொள்ள முடிந்தது..//

  முதலில் ஈழத்தில் பெரும்பாலோர் அதனை வரவேற்றார்கள். பின்னர் புலிகளைப் பிடிக்க அமைதிக்காப்புப் படை செய்த முயற்சிகளில் பாதிக்கப்பட்ட பின்புதான் நேரெதிர் கொள்கையை மேற்கொண்டார்கள் என்று நினைக்கிறேன்..

 49. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///காத்து said…
  //ஆனால் இதில் ராஜீவ்காந்திக்கு என்ன பங்கு என்பது எனக்குத் தெரியவில்லை. புலிகளை ஒடுக்குங்கள் என்று உத்தரவிட்டது அவர்தான். ஆனால் மக்களைக் கொன்றதற்கும் அவருக்கும் எந்தவிதப் பொறுப்புமில்லை. தார்மீக ரீதியாக மட்டுமே அவரைக் குற்றம் சாட்டலாம்.. அவ்வளவுதான்..//
  இண்ரைக்கு தமிழரை கொல்வது சிங்கள் இராணுவம்தான்… ஆகவே மகிந்தவுக்கும் கொலைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனும் உங்களது நிறுவல் புரிகிறது.!!//

  காத்து ஸார்.. ரொம்பவே உங்களது தேசபக்தி பளிச்சிடுகிறது..

  அதேபோல் என்னுடைய தேசபக்தியும் என்னைப் பேச வைக்கிறது.. புரிந்து கொள்ளுங்கள்..

  அமைதிக் காப்புப் படையை எதிர்த்து புலிகள் மக்களை முன் நிறுத்தி கோழைகளைப் போல் பின்னால் வந்துதான் தாக்கினார்கள்.. அதனால்தான் பொதுமக்களும் தாக்குதலுக்குட்பட வேண்டியதாகிவிட்டது.

  இப்போது ராஜபக்சே செய்வதைப் போல் கொத்து, கொத்தாக குண்டுகளை மக்கள் மத்தியிலும், வீடுகளின் மேலும் அமைதி காப்புப் படை வீசவில்லை. முதலில் இதனைப் புரிந்து கொள்ளுங்கள்..

  உங்களுக்கு நல்லது செய்ய நினைத்து கடைசியாக கெட்ட பெயரெடுத்ததுதான் மிச்சம்..

  //நீங்கள் எல்லாம் தமிழனின் விதி அல்ல வியாதி… மருத்துவம் செய்ய வேணும்.//

  உண்மைதான்.. உதவியும் செய்து உபத்திரவமும் வாங்குவது இளிச்சவாய இந்தியர்களாகிய நாங்கள்தான்..

  வாழ்க உமது தேசபக்தி..

 50. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //சயந்தன் said…
  95-க்கு பிறகு யாழ்பாணத்தில் இராணுவம் பெண்களை பாலியல் வன் புணர்ச்சிக்கு உட்படுத்தவில்லை என யாரும் எழுதினால் அது ஒரு மாற்றுக் கருத்து என உங்களால் சொல்ல முடிகிறது. திருமா சொல்வதையும் மாற்று கருத்து என லூஸ்ல விடுங்க சார்..//

  எப்படி விடுவது. ராஜீவ்காந்தியுடன் இறந்து போன அப்பாவித் தமிழர்கள் 13 பேரின் குடும்பங்கள் இன்றைக்கும் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

  அவருடைய மரணத்துடன் தெரிந்தோ, தெரியாமலோ புலிகளுக்கு உதவப் போய் எமது இளைஞர்கள் சிறைப்பட்டு இன்னமும் துயரத்தில் இருக்கிறார்கள்..

  4 ரூபாய் மதிப்புள்ள பேட்டரியை வாங்கிக் கொடுத்த குற்றத்திற்காக பேரறிவாளன் என்னும் தம்பி இன்னமும் சிறையில் சாகவும் முடியாமல் உயிருடன் இருக்கவும் முடியாமல் தவிக்கிறான்.

  அனுசூயா என்ற பெண் இன்ஸ்பெக்டர் சம்பவம் நடந்த நாளிலிருந்து படுத்த படுக்கையாக இருக்கிறார்..

  //புலிகளோடு யுத்தம் தொடங்குவதற்கான மந்திராலோசனையில் புலிகளை 2 வாரத்தில் ஒடுக்கலாம் என ராஜீவுக்கு ஆலோசனை சொன்னார்களாம். அவரும் மண்டையை மண்டையை ஆட்டினாராம்.//

  அதுதான் அவர் செய்த தவறு.. பேசாமல் அவரே யாழ்ப்பாணத்திற்கு குடும்பத்தோடு குடிபெயர்ந்து அங்கேயே தங்கியிருந்து சூழ்நிலையை அவதானித்து யாருக்கு மக்கள் ஆதரவு அதிகம் என்பதைத் தெரிந்து கொண்டு பின்பு ஏதாவது ஒரு அமைதி வழி ஒப்பந்தத்திற்கு இலங்கையை சம்மதிக்க வைத்திருக்கலாம்.. முட்டாள் ராஜீவ்காந்தி.. புத்திசாலித்தனத்துடன் கூடிய நல்லவர்கள் விடுதலைப்புலிகள்..

  //இந்திய புலிகள் யுத்தம் ஒரு நாள் மட்டுமே நடந்தது. அதில் 8000 பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் என்பது உண்மையானால் ராஜீவுக்கு தெரியாமல் இந்திய இராணுவ வீரர்கள் அதை செய்தார்கள் என்ற உங்கள் கருத்து சரி..//

  இரண்டரை ஆண்டுகள் அங்கிருந்தது தெரியும்.. புலிகள் என்னும் தீவிரவாதக் கும்பலை ஒழிக்க இந்திய அரசின் உத்தரவுப்படிதான் அங்கே இருந்தார்கள்..

  வி.பி.சிங் ஆட்சி வந்த பிறகு அவருடைய கூட்டணிக் கட்சிகளின் வற்புறுத்தல் மற்றும் இந்திய ராணுவத்தின் விருப்பத்தின்படியே எங்களது இந்திய ராணுவம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

  //ஆனால் 3 வருடம் நடந்த யுத்தத்தில் பொதுமக்கள் கொல்லப்படுகிறார்கள் என்ற செய்தி ஒரு தடவையும் ராஜிவை எட்டவில்லையா?//

  அதுதான் சொன்னனே.. கோழைகளைப் போல பொதுமக்களின் பின்னால் ஒளிந்திருந்து தாக்கிய வீராதிவீரர்களைத் தாக்கும்போது பொதுஜனங்களையும் தாக்கத்தான் செய்தது.. யாரைக் குற்றம் சொல்வீர்கள்..

  //ராஜீவ் நினைத்திருந்தால் பொதுமக்களுக்கு உயிரிழப்பை ஏற்படுத்த வெண்டாம் என 87-ல் உத்தரவிட்டிருக்கலாம். அவர் உத்தரவிட்டும் இந்திய இராணுவம் அதை செவி மடுத்திருக்காவிட்டால் அவர் தலைவராய் எதற்கு இருக்க வேண்டும்?//

  அதுதான் சொன்னனே ராஜீவ்காந்தி முட்டாள்.. உங்களுடைய புலிகள் மட்டுமே அறிவாளிகள் என்று..

  //பொதுமக்கள் மீதான வன்முறை இந்தியாவிற்கு ஊடகங்கள் மூலம் கொண்டு வரப்பட்டது. புலிகளை கொல்வதற்கு பொதுமக்களின் உயிரிழப்பும் தவிர்க்க முடியாதது என்பதை ராஜீவ் அனுமதித்தார் என்பதுதான் உண்மை.//

  நானும் ஒத்துக் கொள்கிறேன்.. சூழ்நிலையை ஏற்படுத்தியது உங்களது அறிவாளி விடுதலைப்புலிகள்தான்..

  //அவருக்கு தெரியாமல் நடந்தது என்றால் ஒரு இந்திய பிரதமரை இதைவிட அவமானப்படுத்த முடியாது.//

  தெரிந்துதான் நடந்திருக்கும் என்று ஏற்கெனவே நான் சொல்லியிருக்கிறேன்..

  //கிட்டத்தட்ட பிரபாகரன் ரஜீவோடு நல்ல உறவைத்தான் பேண விரும்பினார். சில தளபதிகளும் போராளிகளும் அவர் மனதை குழப்பி விட்டார்கள் என எழுதினால் எத்தகைய கோபம் பத்திக்கொண்டு வருமோ அவ்வாறுதான் எமக்கு எழுகிறது.//

  இதில் ஒன்றும் தவறில்லை.. தேசபக்தி என்பது மனிதர்கள் அனைவருக்குமே உள்ள தனிப்பட்ட குணம்.. அதைத் தவிர்க்க இயலாது..

  காலம் கனியட்டும் தம்பி.. ஏதாவது நல்லது நடக்கிறதா என்று பார்ப்போம்..

 51. ஆதவன் Says:

  கறுப்பு ஒக்டோபர்
  என்னை கேட்டால் ஜூலை கலவரத்தைவிட அக்டோபர் இன சுத்திகரிப்பு தான் இலங்கையில் நடந்த பெரிய அட்டூழியம் என்பேன் .

  காரணம்

  1) ஜூலை இல் தமிழ் மக்கட்கு சிங்களவர் உதவினர். ஆனால் அக்டோபர் இல் தமிழ் மக்கள் முஸ்லிம்களுக்கு உதவவில்லை.

  2) ஜூலை கலவரத்தை வைத்து தமிழ் மக்கள் பிழைத்து கொண்டார்கள். இல்லாவிட்டால் ஐரோப்பா கனவுகள் சாத்தியப்பட்டிருக்குமா? (அவர்கள்தான் இப்போதும் புலிகளை யுத்தத்துக்கு தூண்டிகொண்டிருக்கிறார்கள் என்பது வெள்ளிடை மலை. இன்று கூட வெளிநாட்டு கனவுகளுடந்தான் சுய காணாமல் போதல்கள் அரங்கேறுகின்றன) .

  3)கொழும்பில் தொடர்ந்தேச்சயாக தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். புலிகளின் பகுதிகளை விட அதிக சுதந்திரம் அவர்களுக்கு இருக்கிறது. ஆனால் முஸ்லிம்களை வேரோடு பிடுங்கி எறி ந்திருக்கிறார்கள். இன்று வரை அவல வாழ்கை அவர்களை துரத்துகிறது.

  இன்று ஊர்வலம் போகும் தமிழ் நாடு அன்று துரத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு என்ன செய்தது? இது போதாதா முஸ்லிம்கள் வேறாக்கப்பட்டு தான் இருக்க வேண்டும் என்பதற்கு ஆதாரம்?

  முஸ்லிம்கள் நாங்கள் சொல்வது அன்று அஷ்ரப் சொன்னது தான். தமிழர்கள் எங்களுக்கு செய்ததை நாங்கள் மன்னித்திருகிறோம். ஆனால் ஒரு போதும் மறக்க மாட்டோம்! நாங்கள் இன்று வரை பூமியை போல் பொறுமையாகவே இருக்கிறோம்.

  நண்பர்களின் கருத்துகட்கு நன்றி!”சிங்கள ராணுவ உதவியோடு அவர்களை வெளியேற்றிவிட்டு மீளச் செல்லலாமே..” ஏன் அதை முஸ்லீம் இனவாதம் என்று பத்திரிகைகளில் தலைப்பிட்டு முஸ்லீம் விரோதத்தை இன்னும் கூர்மை படுத்தவா? மீண்டும் வன்முறைகளையும் இடப்பெயர்வுகளையும் எதிர்கொள்ள பிச்சைக்காரர்களாகவேனும் நிம்மதியாக வாழும் அப்பாவிகளை பகடை காய்களாக்கவா? யாழ்ப்பாண மீள்குடியேற்றத்துக்கான காலம் இன்னும் கனியவில்லை என்பதற்கு வெள்ளவத்தையில் நிரம்பி வழியும் தமிழர்களே சமகால சான்று. அத்துடன் மிக அண்மைய முதூர் வெளியேற்றமும், வெளியேற்றத்தை மறைமுகமாக நிர்பந்திதமையும் (குரங்கு பாஞ்சான் உட்பட) யாழ் மீள்குடியேற்றம் இப்போது சாத்தியமானதல்ல என்று கோடிட்டு காட்டுகின்றது. மற்றும் அது தொடர்பான கருத்தாடல்கள் இரு சமூக பிரபலங்களுடன் ஏராளமாய் “எரிமலை”யில் அரங்கேறியிருக்கின்றன. அவற்றில் முஸ்லிம்கள் யாழ்பாணத்தில் மீள் குடியேறல் தங்களுக்கு உவப்புக்குரியதில்லை என்று பெரும்பாலான தமிழ் பிரபலங்கள் கோடிட்டு காட்டியிருக்கிறார்கள். (அவை தொடர்பான வீடியோ காட்சிகள் இப்போதும் என் கணனியில் பாதி இடத்தை பிடித்திருக்கின்றன) எல்லாளன் சங்கிலியன் படைகளின் மிரட்டல்களை அறிந்துகொள்ள அக்கால முஸ்லீம் பத்திரிகைகளை பாருங்கள். எனென்றால் தமிழ் ஊடகங்கள் புலிகளுக்கு கெட்ட பெயர் உண்டாகும் எந்த செய்தியையும் வெளியிடுவதில்லை என்பது நீங்கள் அறியாததொன்றல்ல. (ஏன் சிங்கள இனவாதம் முஸ்லிம்களை தாக்கும் போது கூட இரு குழுக்களுக்கிடையிலான மோதல் என்றே செய்தி வெளியிடுகின்றன!)(முஸ்லீம் சிங்கள பிரச்சினைகள் ஆங்கிலேயர் காலத்தில் ஏற்பட்ட போதெல்லாம் சிங்கள இனவாதிகளை காத்துதவி புரிந்ததெல்லாம் அக்கால தமிழ் தலைமைகள் என்பதும் இன்னும் மறக்கமுடியாத வரலாற்று பாடம். )”விளங்கிக் கொள்ளும் பக்குவம் இல்லாமல் பேந்தப் பேந்த முழித்தபடி பார்த்துக்கொண்டிருந்த சிறுவன் நான். என்னைப்போலவே அத்தனை தமிழர்களும் இருந்தார்கள்…” யாழ்ப்பாண மக்கள் அறிவு கொழுந்துகள் என்ற நம்பிக்கையில் மரண அடி கொடுத்த வாக்கு மூலம் இது. சாந்தி ஆசைக்காக நான் இங்கு கருத்தாடவில்லை. இரு தசாப்தத்தை நெருங்கிவிட்ட யாழ் முஸ்லிகளின் பிரச்சினையில் இன்னும் தமிழ் மக்களின் பார்வை அன்றிருந்ததை விட பெரிதாக மாறவில்லை என்ற உண்மையின் வலிக்கிறது . அவ்வளவே. இக்கால பகுதியில் எல்லா வெகுஜன ஊடகங்களிலும் சொல்லப்பட்ட முஸ்லிம்களின் நியாயம் தமிழ் மக்கள் காதுகளில் கூட போட்டுக்கொள்ளவில்லை என்று புரிகிறது அல்லவா? விடிய விடிய ராமாயணம்…அத்துடன் அதைவிட பழைய ஜூலை இன்றும் பேசப்படும்போது அக்டோபர் மறக்கப்படும் என்று எதிர் பார்ப்பது எங்ஙனம் இயலும்? விடுதலை இயக்கங்களில் முக்கிய புள்ளிகளாக இருந்த முஸ்லீம் கள் பிற இயக்கத்தவர்களால் மட்டுமல்ல அதே இயக்கத்தவர்களால் கொல்லப்பட்ட உண்மை மறக்கடிக்க பட்டுவிட்டதா? இதேவேளை முஸ்லிம்களின் வலியை புரிந்த எல்லா தமிழர்களுக்கும் எனது நன்றிகள் என்றென்றும் உரித்தாகட்டும். முஸ்லிம்கள் நாங்கள் சொல்வது “தமிழர்கள் எங்களுக்கு செய்ததை நாங்கள் மன்னித்திருகிறோம். ஆனால் ஒரு போதும் மறக்க மாட்டோம்!” நாங்கள் இன்று வரை பூமியை போல் பொறுமையாகவே இருக்கிறோம்.
  http://nestdreams.blogspot.com/2008/10/blog-post_30.html

 52. கொழுவி Says:

  சார்
  நான் இட்ட பின்னூட்டம் எங்கே சார் ?
  அது பதிவிற்குத் தொடர்பானதே..

  தயவு செய்து தாங்கள் மாற்றுக் கருத்தினை வரவேற்கும் ஒரு மனிதர் என்ற வகையில் அப் பின்னூட்டத்தினை வெளியிட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

  அல்லது மாற்றுக் கருத்திற்கான ஆதரவென்பது கூட தன் கருத்து நலனுக்கு பாதகம் ஏதும் வந்து விடாது என்ற அளவில் மட்டுமே என்று உங்களது அளவு கோல் உள்ளது என புரிய வேண்டியிருக்கும்.

  ஆகக் குறைந்தது – அவ்வாறான ஒரு பின்னூட்டம் ஏன் வெளியிடப் படவில்லை என்ற விளக்கத்தை தந்தாலாவது மேற் கொண்டு முழுமையான விதத்தில் எனது பதிவில்

  தாங்கள் மாற்றுக் கருத்துகளுக்கு அளித்து வரும் முக்கியத்துவத்தையும் – கருத்துரிமைக்கு வழங்கும் சந்தர்ப்பத்தையும் எடுத்துக் கூறி –
  அப்பின்னூட்டத்தினையும் முழுமையாக வெளியிட்டு

  அதனை வெளியிடாத தங்களது இரட்டைத் தன்மை குறித்தும் எழுதலாம்.

 53. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //வெத்து வேட்டு said…
  இப்போ புலிகளின் வால்பிடிகள் என்னத்துக்கு புலம்புராங்கன்னு புரியல்லை. “ராஜீவ் செய்தது பிழை அதுதான் நாங்க கொன்னுட்டம்” என்றதுதானே உங்க நிலை?
  அது மாதிரிதான் இப்போ இந்தியாவும் “நீங்க ராஜீவை கொன்னது பிழை …இப்போ பலிவாங்குறோம்”னு இலங்கை அரசாங்கத்துக்கு எல்லா உதவியும் செய்யுது..
  பிறகு ஏன் இந்த ஒப்பாரி? நீங்கதான் வழியையே காட்டினீங்க. 90-ல சிங்களவனின் காலை நக்கிநீங்க.. இப்போ சிங்களவன் இந்தியா காலை பிடிக்கிறான்..
  கணக்கை கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் சரியா வரும்…
  பூநகரி விழுந்துட்டுதாமே உண்மையா?//

  வெத்துவேட்டு ஸார்.. சொன்னது சரியானதுதான்..

  ஆனால் ஒரு வார்த்தையை முற்றிலும் தவிர்த்திருக்கலாம்..))))))))))))))

 54. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  கொழுவி ஸார்..

  தங்களது விருப்பப்படியே உங்களது பின்னூட்டம் தனிப்பதிவாகப் போடப்பட்டுவிட்டது..

  பார்க்கவும் : http://truetamilans.blogspot.com/2008/11/1.html

 55. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //கொழுவி said…
  சார், நான் இட்ட பின்னூட்டம் எங்கே சார்? அது பதிவிற்குத் தொடர்பானதே..
  தயவு செய்து தாங்கள் மாற்றுக் கருத்தினை வரவேற்கும் ஒரு மனிதர் என்ற வகையில் அப்பின்னூட்டத்தினை வெளியிட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.
  அல்லது மாற்றுக் கருத்திற்கான ஆதரவென்பதுகூட தன் கருத்து நலனுக்கு பாதகம் ஏதும் வந்து விடாது என்ற அளவில் மட்டுமே என்று உங்களது அளவு கோல் உள்ளது என புரிய வேண்டியிருக்கும்.
  ஆகக் குறைந்தது – அவ்வாறான ஒரு பின்னூட்டம் ஏன் வெளியிடப்படவில்லை என்ற விளக்கத்தை தந்தாலாவது மேற் கொண்டு முழுமையான விதத்தில் எனது பதிவில் தாங்கள் மாற்றுக் கருத்துகளுக்கு அளித்து வரும் முக்கியத்துவத்தையும் – கருத்துரிமைக்கு வழங்கும் சந்தர்ப்பத்தையும் எடுத்துக் கூறி –
  அப்பின்னூட்டத்தினையும் முழுமையாக வெளியிட்டு அதனை வெளியிடாத தங்களது இரட்டைத் தன்மை குறித்தும் எழுதலாம்.//

  கொழுவி ஸார்..

  ஏன் இவ்வளவு அவசரம்.. கோபம்..

  நீங்கள் பின்னூட்டமிட்ட நேரம் 8.41. நான் அதனைப் பார்த்ததே 9.30 மணிக்குத்தான்.. அதன் பின் பத்து நிமிடத்தில் தனிப்பதிவாகப் போட முடிவு செய்தேன்..

  தமிழ்மணத்தின் இணைப்பு பிரச்சினை காரணமாக இத்தனை நேரமும் அதனுடன் மல்லுக் கட்டிக் கொண்டிருக்கிறேன்.. இன்னமும் தமிழ்மணத்தில் உங்களது பின்னூட்டம் உள்ள புதிய பதிவை இணைக்க முடியவில்லை..

  அதற்குள்ளாக எதற்கு பெரிய, பெரிய வார்த்தைகளெல்லாம்..

  மனுஷங்களுக்கு ஆயிரம் பிரச்சினை இருக்கு ஸார்.. அதுல பிளாக்கையே கட்டி மேய்ஞ்சுக்கிட்டிருக்க முடியுமா..

  முருகனை சமாளிக்கவே எனக்கு நேரமில்லை.. இதுல நீங்க வேற..

 56. காத்து Says:

  உங்களின் தேசபக்தி உண்மை தமிழனாக இல்லாமல் உண்மை காங்கிரஸ் காறனாக சிந்திக்க வைக்கிறது…!!

  அன்னை இந்திராவுக்காகத்தான் ரஜீவை ஈழமக்கள் நம்பினர்… ஆனால் ஜே ஆர் எனும் குள்ள நரியிடம் தோற்று, நம்பி நிண்ற ஈழத்தவரை கொல்வது வரை செண்ற இராசீவின் செயல்களுக்கு எந்த வகையிலும் வக்காலத்துக்கள் வாங்க முடியாது…!! அதனால்தான் இந்திரா வின் மரணம் உலுக்கிய போது அழுத ஈழம் இராசீவின் மரணத்தான் களிப்படைந்தது….!!

  மணலாற்று காடுகளுக்கு இரண்டு வருடமாக சுற்றி வளைத்து பிரபாகரனை உயிரோடோ, இல்லை பிணமாக வோ கொன்டு வரும் படி சொல்லி 30,000 இந்திய கூர்க்கா படைகள் நடவடிக்கையில் ஈடு பட்டதை ஈழம் அறியும், பிரபாகரன் இறந்து விட்டார் எண்று இந்திய மக்கள் அனைவரும் நம்பும் படி பிரச்சாரமும் இந்திய அரச தரப்பால் செய்ய பட்டது… செய்தவர் இராசீவ்..

  பிரபாவை கொல்லுமாறு இராசீவ் கட்டளை இட்டார் கொல்லப்பட்டு விட்டார் எனும் செய்தியை வெட்கம் இல்லது பரப்பும் போது அனுமதித்தார் எனும் போது அவரின் குரூர திருப்தி புரிந்தது…

  பிரபாவை கொல்லும் முடிவை இராசீவ் எடுக்க முடியும் எண்றால், இராசீவை கொல்லும் முடிவை எடுக்க பிரபாவுக்கு 100% உரிமையும் உண்டு…

 57. Chandran Says:

  //உண்மைத் தமிழன் – எந்த ஊரிலிருந்து வந்திருந்தார்கள் என்பதனை நாங்கள் கேட்கவில்லை.. ஆகவே உங்களுடைய கருத்திற்கு எனது பதில் தெரியவில்லை என்பதே.//
  எந்த ஊரிலிருந்து வந்திருந்தால் என்ன இலங்கையைவிட்டு தமிழர்கள் வெளியேற கூடாது என்று இலங்கை அரசு தடுத்திருந்தால்( புலிகள் மாதிரி ) அவர்கள் இலங்கையிலிருந்து (இலங்கை விமான நிலையத்தைவிட்டு)வெளியேறியிருக்க முடியதைல்லவா?

 58. benzaloy Says:

  Thirumaavalavan is a rolde model to the present young Tamil Nadu generation.

  Meida and Bloggers like you should give extreme exposure to this man.

  You will if you do have the interests of your own younger generation.

  Show him up … Hold him high up …
  so that your younger generation learn how NOT to be a foolishly brazen liar.

  Atleast, your next generation will pass a law to punish public ”lies”.

 59. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //காத்து said…
  உங்களின் தேசபக்தி உண்மை தமிழனாக இல்லாமல் உண்மை காங்கிரஸ்காறனாக சிந்திக்க வைக்கிறது…!!//

  எனக்கு தேசபக்தி உண்டு என்பதனை ஒத்துக் கொண்டீர்களே அதுவே போதும்.. காங்கிரஸ்காரன் என்று சொல்லியிருக்கிறீர்கள். எந்தக் காங்கிரஸ் என்று சொன்னால் கொஞ்சம் நன்றாக இருக்கும்.. ஏனெனில் தமிழ்நாட்டிலேயே 18 காங்கிரஸ்கள் இருக்கின்றன..

  //அன்னை இந்திராவுக்காகத்தான் ரஜீவை ஈழமக்கள் நம்பினர்… ஆனால் ஜே ஆர் எனும் குள்ள நரியிடம் தோற்று, நம்பி நிண்ற ஈழத்தவரை கொல்வதுவரை செண்ற இராசீவின் செயல்களுக்கு எந்த வகையிலும் வக்காலத்துக்கள் வாங்க முடியாது…!!//

  அனைத்துவித உத்தரவாதங்களையும் அளித்த பிறகும் மனம் போன போக்கில் தங்களை மீறி யாரும் இங்கே பெயர் எடுத்துவிடக் கூடாது என்ற பிரபாகரனின் குள்ள நரித்தனத்திலும் ராஜீவ்காந்தி கொஞ்சம் தோற்றுத்தான் போனார்.

  //அதனால்தான் இந்திராவின் மரணம் உலுக்கிய போது அழுத ஈழம் இராசீவின் மரணத்தான் களிப்படைந்தது….!!//

  இதுதான் உங்களுக்கும், எனக்குமான தேசபக்தியின் அளவுகோல்.. உங்களுக்கு ஒன்று சந்தோஷமெனில் அது எனக்கு வருத்தத்தைத் தந்தது. அந்த சோகச் சுவடு நீக்கப்படுவதற்குள் எங்கள் வீட்டிற்கே விருந்தாளியாக வர வேண்டும் என்று தாங்கள் விரும்புவது ஏனோ..?

  //மணலாற்று காடுகளுக்கு இரண்டு வருடமாக சுற்றி வளைத்து பிரபாகரனை உயிரோடோ, இல்லை பிணமாகவோ கொன்டு வரும்படி சொல்லி 30,000 இந்திய கூர்க்கா படைகள் நடவடிக்கையில் ஈடுபட்டதை ஈழம் அறியும்.//

  ஏன்.. நாங்களும் அறிவோம்..

  //பிரபாகரன் இறந்து விட்டார் எண்று இந்திய மக்கள் அனைவரும் நம்பும்படி பிரச்சாரமும் இந்திய அரச தரப்பால் செய்யபட்டது… செய்தவர் இராசீவ்..//

  இல்லை. அதனைச் செய்தது ரா என்னும் உளவுத்துறை..

  //பிரபாவை கொல்லுமாறு இராசீவ் கட்டளை இட்டார் கொல்லப்பட்டு விட்டார் எனும் செய்தியை வெட்கம் இல்லது பரப்பும் போது அனுமதித்தார் எனும் போது அவரின் குரூர திருப்தி புரிந்தது…//

  தன்னுடைய நாட்டு ராணுவ வீரர்களை கொலை செய்தவர்களை பிடிக்கும்படியோ அல்லது கொல்லும்படியோ நடவடிக்கை எடுக்க வைப்பது நாட்டுத் தலைவரின் கடமை.. உரிமையுமகூட.. அதனைத்தான் அவர் செய்தார்.. இதில் என்ன குரூரம்..?

  தங்கள் வீட்டுத் தலைவர்களையே பேச்சுவார்த்தை நடத்த வருகிறோம் என்று சொல்லி வீட்டுக்குள் புகுந்து சுட்டுக் கொன்றது குரூரமே இல்லையா..? அது சும்மாவா..?

  //பிரபாவை கொல்லும் முடிவை இராசீவ் எடுக்க முடியும் எண்றால், இராசீவை கொல்லும் முடிவை எடுக்க பிரபாவுக்கு 100% உரிமையும் உண்டு…//

  இதுதான் இந்தியா உங்களுக்குக் கொடுத்திருக்கும் கட்டற்ற சுதந்திரம்.. ஒரு தலைவரை பறி கொடுத்த கட்சியே பரவாயில்லை.. என்று மென்மேலும் உங்களுக்கு உதவுவதற்கு முன் வருவது உங்களது அதிர்ஷ்டம்தான்.. வாழ்த்துக்கள்..

 60. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///Chandran said…
  //உண்மைத் தமிழன் – எந்த ஊரிலிருந்து வந்திருந்தார்கள் என்பதனை நாங்கள் கேட்கவில்லை.. ஆகவே உங்களுடைய கருத்திற்கு எனது பதில் தெரியவில்லை என்பதே.//
  எந்த ஊரிலிருந்து வந்திருந்தால் என்ன இலங்கையைவிட்டு தமிழர்கள் வெளியேற கூடாது என்று இலங்கை அரசு தடுத்திருந்தால்(புலிகள் மாதிரி) அவர்கள் இலங்கையிலிருந்து (இலங்கை விமான நிலையத்தைவிட்டு)வெளியேறியிருக்க முடியதைல்லவா?///

  மறுக்க முடியாத உண்மை..

 61. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //benzaloy said…
  Thirumaavalavan is a rolde model to the present young Tamil Nadu generation.
  Meida and Bloggers like you should give extreme exposure to this man.
  You will if you do have the interests of your own younger generation.
  Show him up … Hold him high up … so that your younger generation learn how NOT to be a foolishly brazen liar.
  Atleast, your next generation will pass a law to punish public ”lies”.//

  அரசியல்வியாதிகளுக்கு வாய்தான் சொத்து.. அவர்கள் பேசுகின்ற பொய்தான் மூலதனம்.. அது இல்லாவிடில் இங்கே யாராலும் அரசியல் நடத்த முடியாது.. அதனால் எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு இதில் ஒன்றும் ஆச்சரியமில்லை..

  தங்களுடைய வருகைக்கு நன்றிகள்..

 62. கொழுவி Says:

  தன்னுடைய நாட்டு ராணுவ வீரர்களை கொலை செய்தவர்களை பிடிக்கும்படியோ அல்லது கொல்லும்படியோ நடவடிக்கை எடுக்க வைப்பது நாட்டுத் தலைவரின் கடமை.. உரிமையுமகூட.. அதனைத்தான் அவர் செய்தார்.. இதில் என்ன குரூரம்..?
  //

  சரியாகச் சொன்னீர்ள்.. ஆம்.. நாம் பிரபாகரனை எமது நாட்டு தலைவராகத் தான் கருதுகிறோம்.

  சந்திரன்!
  83 இலிருந்தே தமிழர்கள் இலங்கையை விட்டு வெளியேறுவதை சிங்கள அரசுகள் மறைமுகமாக ஊக்குவித்துத்தான் வருகின்றன. அது ஏன் என யோசித்து பாருங்கள். விடை தெரியும்.(உண்மைத் தமிழன் இதற்கும் சரியாகத்தான் சொன்னீர்கள் என ஒரு வார்த்தை சொல்வார்.அதுவும் சரி.. அட இதுவும் சரியென்ற நிலையில்தான் அவர் இப்போ இருக்கிறார் :))

  தங்கள் வீட்டுத் தலைவர்களையே பேச்சுவார்த்தை நடத்த வருகிறோம் என்று சொல்லி வீட்டுக்குள் புகுந்து சுட்டுக் கொன்றது குரூரமே இல்லையா..? அது சும்மாவா..?//

  இல்லை – அதனைசெய்தது புலிகளின் புலனாய்வுத் துறை 🙂

 63. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //கொழுவி said…
  தன்னுடைய நாட்டு ராணுவ வீரர்களை கொலை செய்தவர்களை பிடிக்கும்படியோ அல்லது கொல்லும்படியோ நடவடிக்கை எடுக்க வைப்பது நாட்டுத் தலைவரின் கடமை.. உரிமையுமகூட.. அதனைத்தான் அவர் செய்தார்.. இதில் என்ன குரூரம்..?//
  சரியாகச் சொன்னீர்ள்.. ஆம்.. நாம் பிரபாகரனை எமது நாட்டு தலைவராகத்தான் கருதுகிறோம்.//

  பின்பு ஏன் எங்களை உங்களது தலைவர் விஷயத்தில் தலையிடச் சொல்லி அழுகுறீர்கள்.. உங்கள் தலைவர் உங்களுக்கு.. எங்கள் தலைவர் எங்களுக்கு என்று இருந்துவிடலாமே..

  //சந்திரன்! 83-லிருந்தே தமிழர்கள் இலங்கையை விட்டு வெளியேறுவதை சிங்கள அரசுகள் மறைமுகமாக ஊக்குவித்துத்தான் வருகின்றன. அது ஏன் என யோசித்து பாருங்கள். விடை தெரியும்.//

  சிங்கள அரசுகள் தெளிவாகவே இருக்கின்றன. தமிழ் ஈழத்தில் தலைவர்கள் மற்றும் குழுக்களிடையே ஒற்றுமை இல்லாததை அவர்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டார்கள்.. அவ்வளவுதான்.. முதலில் நீங்கள் அனைவரும் ஒன்றுபடுங்கள்.. ஒருமித்தக் குரலோடு ஒரே கொள்கையை முன் வைத்துப் போராடுங்கள்.. நிச்சயம் நல்லவர்களின் ஆதரவும், துணையும் கிடைக்கும். நல்லதும் நடக்கும்..

  //(உண்மைத்தமிழன் இதற்கும் சரியாகத்தான் சொன்னீர்கள் என ஒரு வார்த்தை சொல்வார்.அதுவும் சரி.. அட இதுவும் சரியென்ற நிலையில்தான் அவர் இப்போ இருக்கிறார்:))//

  ஐயா கொழுவியாரே.. எங்கள் அரசியல்வியாதிகளும் தவறு செய்தார்கள்.. உங்களது தலைவர்களும், பொடியன்களும் தவறு செய்தார்கள் என்பதை இரு சார்பிலும் பேசாமலும்தான் எழுதி வருகிறேன்.. அது உங்களது கண்களுக்குத் தெரியவி்ல்லையெனில் அது என் தவறல்ல..

  எல்லாம் சரி. பாகம்-2 பதிவில் நான் கேட்டிருந்த கேள்விகளுக்கு பதிலே இன்னும் வரவில்லையே கொழுவி..? கேள்வி நீ கேக்கப்படாது.. நாங்க மட்டும்தான் கேப்போம்கிறீங்களா.. அது சரி..

  //தங்கள் வீட்டுத் தலைவர்களையே பேச்சுவார்த்தை நடத்த வருகிறோம் என்று சொல்லி வீட்டுக்குள் புகுந்து சுட்டுக் கொன்றது குரூரமே இல்லையா..? அது சும்மாவா..?//
  இல்லை – அதனை செய்தது புலிகளின் புலனாய்வுத் துறை:)//

  ஓ.. இதென்ன புதுக் கதை.. நாங்கள்தான் கொன்றோம் என்று அறிக்கை புலித்தலைமையிடம் இருந்துதானே வந்தது.. அப்படியானால் இநத்ப் புலிகளுக்கும் பிரபாகரனுக்கும் சம்பந்தமில்லையோ.. நல்ல காமெடிதான் போங்க..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: