குசும்பனுக்கு ஒரு எச்சரிக்கை

குசும்பா..

அடங்குவாய் என்று நினைத்துத்தான் கால்கட்டுப் போட்டோம்.. நிச்சயம் அடங்க வேண்டும் என்று நினைத்துத்தான் அனைவரும் வாழ்த்துச் சொன்னோம்.. அடங்கியே ஆக வேண்டும் என்று சொல்லித்தான் பரிசுப் பொருள்களை வழங்கினோம்.. இன்னமும் அடங்காமல் ஆடினால் என்ன அர்த்தம்..?

எங்கே பார்த்தாலும் குசும்பன்.. எதில் பார்த்தாலும் குசும்பன்.. குசும்பன் இல்லாத வலைப்பதிவே இல்லை என்பது மாதிரி வலையுலகம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

“அடங்க மறு” என்பதெல்லாம் காட்டில் வாழும் சிங்கங்களுக்கும், கழுதைப் புலிகளுக்கும் மட்டுமே சொன்னது.. குசும்பா உனக்கல்ல..

மொக்கைப் பதிவை போடவே கூடாது, மாட்டேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்த, என்னை இப்படியொரு பதிவை போட வைத்துவிட்டாயே கிராதகா..

நான் என்ன சொல்லி வாழ்த்தினேன் ஞாபகமிருக்கிறதா..? “பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழு..” என்றேன்.. பரவாயில்லை.. இப்போதும் வாபஸ் வாங்க மாட்டேன்.. ஆனால் கூடுதலாக ஒன்றையும் சொன்னேன்.. “பார்சலைப் பிரித்துப் பார்த்துவிட்டு அலமாரியில் வைக்கக்கூடாது.. அட்டை டூ அட்டை படித்துப் பார்த்து அர்த்தம் புரிந்து உணர வேண்டும். உணர்த்தியதை வெளிப்படுத்த வேண்டும்” என்றேன்.. மறந்துவிட்டதா..?

உனக்காக, உனக்கு நல்ல புத்தி வர வேண்டுமென்பதற்காக அவசரம், அவசரமாக ஓடோடிப் போய் கடையைப் பூட்டப் போன நேரத்தில் கடைக்கார அம்மணியிடம் கெஞ்சிக் கூத்தாடி அந்த விலை மதிக்க முடியாத புத்தகத்தை வாங்கி வந்தேன்..

என் ஸ்கூல் புத்தகத்திற்குக்கூட நான் இப்படி ஒழுங்காக அட்டை போட்டதில்லை. முந்தின நாள் பெய்த மழையோடு மழையாக கடைக்கு ஓடிப் போய் குசும்பனுக்கு சிவப்பு கலர்தான் பிடித்தமானது என்று சொல்லி அதே நிறத்தில் அட்டை வாங்கி புத்தகத்திற்கு அதனைப் போர்வையாகப் போர்த்தி, கூடவே அதற்குப் பொட்டு வைத்து, இரவு முழுவதும் என் தலைமாட்டிலேயே வைத்திருந்து அவ்வப்போது பார்த்துப் பார்த்து வைத்திருந்தேன்.. தெரியுமா உனக்கு..?

சந்திப்பு நாளன்று காலையில் எழுந்தவுடனேயே பல்லைக்கூட விளக்காமல் மறந்து விடுவோமோ என்றெண்ணி எனது பி.எம்.டபிள்யூ., வண்டியின் சைட் பாக்ஸில் எடுத்து வைத்துவிட்டு, அதையும் பத்து நிமிடத்திற்கொரு முறை பூட்டியிருக்கிறதா என்று சோதனை செய்துபார்த்து பைத்தியம் போல் இருந்தேன்.. இதையெல்லாம் நான் அன்றைக்கே http://truetamilans.blogspot.com/2008/04/30.html – இந்தப் பதிவில் எழுதவில்லை.

எழுதியிருந்தால் “கால் லூஸ¤, அரை லூஸ¤, முக்கால் லூஸ¤, முழு லூஸ¤” என்று நீயே அனானி பெயரில் போட்டுத் தாக்கியிருப்பாய் என்பது எனக்குத் தெரியுமடா குழந்தை..

ஆனாலும் அவ்ளோ தூரம் ஆசையாய், அன்பாய், பாசமாய் வாங்கிக் கொடுத்த அந்தப் புத்தகத்தின் ஒரு பக்கத்தையாவது நீ இதுவரையில் படித்தாயா என்பது எனக்குத் தெரியவில்லை. ஊருக்குப் போனதும் ஒரு வரி “புத்தகம் நன்று.. அருமை.. பிடித்திருந்தது” என்று எழுதினாயா..? இல்லையே.. உனக்குத்தான் இங்கே வெட்டித்தனமாக கும்மியடிக்கவே நேரமில்லையே..

எந்தப் பதிவிற்குள் கால் வைத்தாலும் உன் பெயர்தான் இருக்கிறது. அதுவும் ஒரே பதிவில் 20 இடங்களில்கூட பார்த்துத் தொலைத்தேன். இதற்கெல்லாம் எங்கேயிருந்து கிடைக்கிறது நேரம்..? இந்த நேரத்தில் அந்தப் புத்தகம் முழுவதையும் படித்து முடித்திருக்கலாமே.. எனக்கும் சொல்லியிருக்கலாமே..

குசும்பா கடைசியாக கேட்கிறேன்..

இனிமேல் எனக்கு மடல் எழுதி சொல்ல வேண்டாம்.. இதுவரையில் செய்யாததற்கு தண்டனையாக 25 பக்கத்திற்கு அந்தப் புத்தகம் பற்றி உனது பதிவில் விமர்சனம் எழுத வேண்டும்.

எழுதாவிட்டால் நீ அடுத்த முறையும் இங்கு வரும்போது அதே புத்தகம் உன் கையில் திணிக்கப்பட்டு, அங்கேயே அதனைப் பிரித்துப் படிக்கும் ஸ்கூல் தண்டனையும் வழங்கப்படும் என்று எச்சரிக்கிறேன்..

பின்குறிப்பு :

உன்னை மாதிரியே அன்னிக்கு மாயவரத்துல இருந்து நடந்தே வந்தேன்னு ஒருத்தர் கதை விட்டுட்டு, ‘வெங்கட்-தீபா’ மாதிரி லேசா நடிச்சுக் காமிச்சுட்டுப் போனாரே.. அவர்கிட்டேயும் சொல்லி வை.. உனக்கிடப்பட்ட எச்சரிக்கையினால் சுதாரித்து அவர் முந்திக் கொண்டால் நல்லது.. இல்லாவிடில் ‘வெங்கட்-தீபா’ சீரியலில் எப்படி பேசுவாரோ அதே பாணியில் அவருக்கும் கடிதம் வரும்… சொல்லி வை..

நன்றி

வருகிறேன்..

41 பதில்கள் to “குசும்பனுக்கு ஒரு எச்சரிக்கை”

 1. குசும்பன் Says:

  செந்தழல் பதிவில் உங்கள் பின்னூட்டத்துக்கு பதில் சொன்னதால் வந்த வினையா? இது?

 2. குசும்பன் Says:

  //அடங்குவாய் என்று நினைத்துத்தான் கால்கட்டுப் போட்டோம்//

  கைகளால் பின்னூட்டம் போடுகிறேன்,கும்மி அடிக்கிறேன் கைய கட்டாம காலை கட்டினா என்னா யூஸ்? அண்ணே! திங் பண்ணுங்க!

 3. குசும்பன் Says:

  //எங்கே பார்த்தாலும் குசும்பன்.. எதில் பார்த்தாலும் குசும்பன்.. குசும்பன் இல்லாத வலைப்பதிவே இல்லை என்பது மாதிரி வலையுலகம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.//

  நண்பர் பதிவில் ஒரே ஒரு பின்னூட்டம் போட்டா என்ன உடம்பு சரி இல்லையா? பொண்ணாட்டி அடிச்சுதான்னு எல்லாம் கேட்கிறார்கள்.

  ஆனாலும் இந்த வரி கொஞ்ச ஓவர்தான்ணே!

 4. குசும்பன் Says:

  “அடங்க மறு” என்பதெல்லாம் காட்டில் வாழும் சிங்கங்களுக்கும், கழுதைப் புலிகளுக்கும் மட்டுமே சொன்னது.. குசும்பா உனக்கல்ல..//

  கழுதை, புலின்னு ஒரு கமா போட்டு இருந்தா முதல் கேடரில் நான் வந்து இருப்பேனே!!!

 5. குசும்பன் Says:

  //மொக்கைப் பதிவை போடவே கூடாது, மாட்டேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்த, என்னை இப்படியொரு பதிவை போட வைத்துவிட்டாயே கிராதகா.//

  ஆக தாங்கள் சொல்ல வருவது இதுக்கு முன்பு வரை மொக்கை பதிவு போட்டது இல்லை என்று! சரிதானே!!

  பாருங்க மக்கள் எப்படி சிரிக்கிறாங்கன்னு!

 6. குசும்பன் Says:

  //“பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழு..” //

  பிராஸஸ் கோயிங் ஆன்:)) வெயிட் பார் சம் டைம்.

 7. குசும்பன் Says:

  //அட்டை டூ அட்டை படித்துப் பார்த்து அர்த்தம் புரிந்து உணர வேண்டும். உணர்த்தியதை வெளிப்படுத்த வேண்டும்” என்றேன்.. மறந்துவிட்டதா..?//

  அட்டை two அட்டை தானே! ஆமாம் முதல் பக்க அட்டையில் அர்த்தமுள்ள இந்து மதம் என்று போட்டு இருந்துச்சு, பின் அட்டையில் கண்ணதாசன் படம் போட்டு பதிப்பக அட்ரெஸ் போட்டு இருந்துச்சு.

 8. சும்மா அதிருதுல Says:

  ஆமா அந்த புக்கு அந்த புக்குனு சொல்லுறீங்களே
  கல்யாணத்துக்கு குடுத்தது உண்மையிலேயே ‘அந்த’ புக்குதானா…:)

 9. குசும்பன் Says:

  //உணர்த்தியதை வெளிப்படுத்த வேண்டும்” என்றேன்.. மறந்துவிட்டதா..?//

  உள்வாங்கி படிச்சுக்கிட்டு இருக்கேன் அண்ணாச்சி!

  (குசும்பு எல்லாம் இல்லை நிஜமா படிச்சேன்)

 10. குசும்பன் Says:

  //பூட்டப் போன நேரத்தில் கடைக்கார அம்மணியிடம் கொஞ்சி கூத்தாடி //

  என்னது கொஞ்சி கூத்தாடதான் கடை பூட்டும் சமயத்தில் போனிங்களா? அண்ணாச்சி ஒரே சமயத்தில் ரெண்டு மாங்காய், எனக்கு கிப்டும் வாங்கியாச்சு , கொஞ்சியும் முடிச்சாச்சு.

 11. குசும்பன் Says:

  //சிவப்பு கலர்தான் பிடித்தமானது என்று சொல்லி அதே நிறத்தில் அட்டை //

  சிவப்பு கலர் பொண்ணுங்கதான் பிடிக்கும் என்று சொன்னேன் அதுக்காக அட்டையுமா? ஆண்டவா! என்ன கொடுமை இது?

 12. VIKNESHWARAN Says:

  நானும் கும்மலாமா????

 13. குசும்பன் Says:

  //சந்திப்பு நாளன்று காலையில் எழுந்தவுடனேயே பல்லைக்கூட விளக்காமல் //

  அன்று மட்டுமா?

 14. VIKNESHWARAN Says:

  குசும்பா அண்ணன் சொல்றது கேட்குறது….

 15. குசும்பன் Says:

  //ஊருக்குப் போனதும் ஒரு வரி “புத்தகம் நன்று.. அருமை.. பிடித்திருந்தது” என்று எழுதினாயா..? //

  அண்ணே இருபத்தெட்டு வருடம் கழித்து ஒரு பொண்ணை கல்யாணம் செஞ்ச பிறகு, புத்தக விமர்சனம் எழுதுனீயான்னு கேட்கும் அண்ணே நீங்க எந்த ஊரு?:)))

 16. குசும்பன் Says:

  //இல்லையே.. உனக்குத்தான் இங்கே வெட்டித்தனமாக கும்மியடிக்கவே நேரமில்லையே..//

  ஓவர் டைம் கேட்டு ஆபிசில் பேசிக்கிட்டு இருக்கேன் அப்ரூவ் ஆகிவிட்டது என்றால் அந்த குறையும் நீங்கிவிடும்:)))

  ஆமா கும்மி அடிப்பதை வெட்டி என்றா சொன்னீங்க, மக்கா ஓடி வாங்க ஓடி வாங்க….

 17. குசும்பன் Says:

  //எந்தப் பதிவிற்குள் கால் வைத்தாலும் உன் பெயர்தான் இருக்கிறது. அதுவும் ஒரே பதிவில் 20 இடங்களில்கூட பார்த்துத் தொலைத்தேன்.//

  தப்புன்னே, அரசியல், தனிநபர் தாக்குதல்,பிரச்சினை பதிவுகளின் பார்த்து இருக்க முடியாது!!!

 18. குசும்பன் Says:

  //இதுவரையில் செய்யாததற்கு தண்டனையாக 25 பக்கத்திற்கு அந்தப் புத்தகம் பற்றி உனது பதிவில் விமர்சனம் எழுத வேண்டும்.//

  ஒரு பக்கத்துக்கு மேலே எழுதினாலே உண்மை தமிழனா நீ என்று பெயர் வந்துவிடும், இதில் 25 பக்கமா? கிழிஞ்சுது!

 19. சும்மா அதிருதுல Says:

  உள்வாங்கி படிச்சுக்கிட்டு இருக்கேன் அண்ணாச்சி!
  //

  “உள்வாங்கி” இதை எங்க வாங்கனும் சொன்னா நாங்களும் படிப்போமுல?

  !!!

 20. சும்மா அதிருதுல Says:

  நிச்சயம் அடங்க வேண்டும் என்று நினைத்துத்தான் அனைவரும் வாழ்த்துச் சொன்னோம்..
  //

  நீங்க சொன்னத தம்பி தப்பா புரிஞ்சி ‘அங்க’ அடங்கிடிச்சீசீச்சீ

 21. சும்மா அதிருதுல Says:

  அடங்கியே ஆக வேண்டும் என்று சொல்லித்தான் பரிசுப் பொருள்களை வழங்கினோம்.. இன்னமும் அடங்காமல் ஆடினால் என்ன அர்த்தம்..?
  //

  ம்ம்ம் பரிசு பொருள் பத்தாதுனு அர்த்தம்

  அழுத பிள்ளைக்கு தான் பாலாம்
  🙂

 22. சும்மா அதிருதுல Says:

  அட்டை டூ அட்டை படித்துப் பார்த்து அர்த்தம் புரிந்து உணர வேண்டும்
  //

  சரோஜா தேவினா சட்டுனு புரிஞ்சுடும்

  இதுக்கு அகராதி இருந்தால் இலவச இனைப்பா குடுங்களேன் 🙂

 23. சும்மா அதிருதுல Says:

  உனக்கு நல்ல புத்தி வர வேண்டுமென்பதற்காக//
  //

  நல்லவேளை
  குசும்பர் கிரெட் எஸ்கேபு 🙂

  இல்லைனா குசும்பு பதிவுக்கு முழுக்கு போட்டுட்டு சாமியாரா போயிருப்பாரு

  (கல்யாணம் ஆயிட்டாலே அடுத்து சாமியாரா ஆகவேண்டியது தான் பாக்கி )

 24. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //குசும்பன் said…
  செந்தழல் பதிவில் உங்கள் பின்னூட்டத்துக்கு பதில் சொன்னதால் வந்த வினையா? இது?//

  பரவாயில்லையே.. செம ஸ்பீடுதான் போ.. ஈஸியா கண்டுபிடிச்சிட்டியே தம்பீபீபீபீபீ..

 25. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///குசும்பன் said…
  //அடங்குவாய் என்று நினைத்துத்தான் கால்கட்டுப் போட்டோம்//
  கைகளால் பின்னூட்டம் போடுகிறேன்,கும்மி அடிக்கிறேன் கைய கட்டாம காலை கட்டினா என்னா யூஸ்? அண்ணே! திங் பண்ணுங்க!///

  அப்பக் கையைக் கட்டுறதுக்கு இன்னொன்னு வேணுங்குறியா.. குசும்பா..

 26. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///குசும்பன் said…
  //எங்கே பார்த்தாலும் குசும்பன்.. எதில் பார்த்தாலும் குசும்பன்.. குசும்பன் இல்லாத வலைப்பதிவே இல்லை என்பது மாதிரி வலையுலகம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.//
  நண்பர் பதிவில் ஒரே ஒரு பின்னூட்டம் போட்டா என்ன உடம்பு சரி இல்லையா? பொண்ணாட்டி அடிச்சுதான்னு எல்லாம் கேட்கிறார்கள்.///

  கேட்கிறவர் கேட்கத்தான் செய்வார்கள். ஆமாம்னு சொல்லிட்டு நீ பாட்டுக்குப் போய்க்கிட்டே இரு..

  //ஆனாலும் இந்த வரி கொஞ்ச ஓவர்தான்ணே!//

  ஓவரா.. இதைவிட அடக்கமா எப்படிச் சொல்றது..

 27. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///குசும்பன் said…
  “அடங்க மறு” என்பதெல்லாம் காட்டில் வாழும் சிங்கங்களுக்கும், கழுதைப் புலிகளுக்கும் மட்டுமே சொன்னது.. குசும்பா உனக்கல்ல..//
  கழுதை, புலின்னு ஒரு கமா போட்டு இருந்தா முதல் கேடரில் நான் வந்து இருப்பேனே!!!///

  வரக்கூடாது என்பதால்தானே கமா போடவில்லை.. இது எப்படியிருக்கு..

 28. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///குசும்பன் said…
  //மொக்கைப் பதிவை போடவே கூடாது, மாட்டேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்த, என்னை இப்படியொரு பதிவை போட வைத்துவிட்டாயே கிராதகா.//
  ஆக தாங்கள் சொல்ல வருவது இதுக்கு முன்பு வரை மொக்கை பதிவு போட்டது இல்லை என்று! சரிதானே!!
  பாருங்க மக்கள் எப்படி சிரிக்கிறாங்கன்னு!///

  சிரிக்கறாங்களா.. யார் அது.. துப்பறிந்து சொல்லு.. 100 கமெண்ட் போட்டு தாளிச்சிருவோம்..

 29. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///குசும்பன் said…
  //“பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழு..” //
  பிராஸஸ் கோயிங் ஆன்:)) வெயிட் பார் சம் டைம்.///

  அடப்பாவி குசும்பா.. இதையெல்லாமா வெளில சொல்றது..

 30. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///குசும்பன் said…
  //அட்டை டூ அட்டை படித்துப் பார்த்து அர்த்தம் புரிந்து உணர வேண்டும். உணர்த்தியதை வெளிப்படுத்த வேண்டும்” என்றேன்.. மறந்துவிட்டதா..?//
  அட்டை two அட்டை தானே! ஆமாம் முதல் பக்க அட்டையில் அர்த்தமுள்ள இந்து மதம் என்று போட்டு இருந்துச்சு, பின் அட்டையில் கண்ணதாசன் படம் போட்டு பதிப்பக அட்ரெஸ் போட்டு இருந்துச்சு.///

  நக்கலா.. மவனே அதை மட்டும் படிச்சுக் கத்துக்கலைன்னு வையி.. அப்புறம் நம்ம வாழ்க்கையே நக்கலாயிரும்.. ஜாக்கிரதை..

 31. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //சும்மா அதிருதுல said…
  ஆமா அந்த புக்கு அந்த புக்குனு சொல்லுறீங்களே.. கல்யாணத்துக்கு குடுத்தது உண்மையிலேயே ‘அந்த’ புக்குதானா…:)//

  நீங்க எதைச் சொல்றீங்க சும்மா ஸார்.. நான் சொல்றது ‘அந்த’ புத்தகத்தை.. நீங்க நினைச்சது ‘எந்தப்’ புத்தகத்தை ஸார்..

 32. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///குசும்பன் said…
  //பூட்டப் போன நேரத்தில் கடைக்கார அம்மணியிடம் கொஞ்சி கூத்தாடி //
  என்னது கொஞ்சி கூத்தாடதான் கடை பூட்டும் சமயத்தில் போனிங்களா? அண்ணாச்சி ஒரே சமயத்தில் ரெண்டு மாங்காய், எனக்கு கிப்டும் வாங்கியாச்சு , கொஞ்சியும் முடிச்சாச்சு.///

  அடப்பாவி குசும்பா.. இன்னும் உன் குசும்பு அடங்கல பாரு.. ஒரேயொரு துணைக்காலை மாத்திப் போட்டு கதையையே கெடுத்துட்டியே..

 33. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///குசும்பன் said…
  //சந்திப்பு நாளன்று காலையில் எழுந்தவுடனேயே பல்லைக்கூட விளக்காமல் //
  அன்று மட்டுமா?///

  ஐயோ.. முருகா.. இப்படியெல்லாம் எப்படித்தான் யோசிக்கிறானுக இந்தப் பயபுள்ளைக..

 34. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///குசும்பன் said…
  //ஊருக்குப் போனதும் ஒரு வரி “புத்தகம் நன்று.. அருமை.. பிடித்திருந்தது” என்று எழுதினாயா..? //
  அண்ணே இருபத்தெட்டு வருடம் கழித்து ஒரு பொண்ணை கல்யாணம் செஞ்ச பிறகு, புத்தக விமர்சனம் எழுதுனீயான்னு கேட்கும் அண்ணே நீங்க எந்த ஊரு?)///

  ஏம்ப்பா.. அதுக்கு எல்லாத்தையும் மறந்து தொலைச்சிரணுமா.. நல்லாயிருக்கே நீ சொல்ற நியாயம்..

 35. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///குசும்பன் said…
  //எந்தப் பதிவிற்குள் கால் வைத்தாலும் உன் பெயர்தான் இருக்கிறது. அதுவும் ஒரே பதிவில் 20 இடங்களில்கூட பார்த்துத் தொலைத்தேன்.//
  தப்புன்னே, அரசியல், தனிநபர் தாக்குதல்,பிரச்சினை பதிவுகளின் பார்த்து இருக்க முடியாது!!!///

  இல்லாட்டி என்ன.. மத்ததெல்லாம் பதிவுகள்தான.. பிறகென்ன..

 36. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///சும்மா அதிருதுல said…
  அடங்கியே ஆக வேண்டும் என்று சொல்லித்தான் பரிசுப் பொருள்களை வழங்கினோம்.. இன்னமும் அடங்காமல் ஆடினால் என்ன அர்த்தம்..?
  ம்ம்ம் பரிசு பொருள் பத்தாதுனு அர்த்தம். அழுத பிள்ளைக்குதான் பாலாம்..//

  சொல்லிருந்தா ‘தெய்வத்தின் குரல்’ வாங்கிக் குடுத்திருப்பேன்ல..

 37. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///சும்மா அதிருதுல said…
  உனக்கு நல்ல புத்தி வர வேண்டுமென்பதற்காக////
  நல்லவேளை. குசும்பர் கிரெட் எஸ்கேபு. இல்லைனா குசும்பு பதிவுக்கு முழுக்கு போட்டுட்டு சாமியாரா போயிருப்பாரு..///

  செய்வாருன்னு நினைச்சீக.. எனக்கு நம்பிக்கையில்ல.. நாம சாமியாராப் போனாத்தான் உண்டு..

 38. nathas Says:

  50 🙂

 39. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //nathas said…
  50:)//

  நன்றி நாத்ஸ்.. இதுதான் எனது வீட்டுக்குள் வந்து பதிவிடும் முதல் பின்னூட்டமோ..

  இப்போதுதான் உங்களது தளத்தையும் ‘மேய்ந்து’ முடித்தேன்.

  வருகைக்கு நன்றி..

 40. cable sankar Says:

  ஓண்ணுமே பிரியல தலைவரே..

 41. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //cable sankar said…
  ஓண்ணுமே பிரியல தலைவரே..//
  பதிவையும், பின்னூட்டங்களையும் மறுபடியும், கவனமாகப் படிக்கவும். புரியும்..

  அந்தத் ‘தலைவரே’ என்பது வேணாமே.. நான் உங்களைவிட சின்ன வயதுப் பையன்..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: