தமிழ்மணத்திற்கு ‘செலக்டிவ் அம்னீஷியா’..?

08-08-08

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
இன்று தற்செயலாக தமிழ்மணத்தைப் பார்வையிட்டுக் கொண்டு வரும்போது இது கண்ணில் பட்டது. Print Screen எடுத்து வைத்துக் கொண்டேன்.

ஒரு மாதத்திற்கு முன் “காமக்கதைகள்” என்ற பெயருடன் வந்த பதிவுகளை “ஆ.. அசிங்கம்” என்று சொல்லி தடை செய்த தமிழ்மணம், இன்றைக்கு இது மாதிரியான புகைப்படங்களை அனுமதித்திருப்பது ஏனோ..?

ஒருவேளை இதில் அவர்கள் பார்ப்பது கலை உணர்ச்சியோ.. என்ன உணர்ச்சி இது? நாட்டுக்கு நாடு, மனுஷனுக்கு மனுஷன் மாறிக்கிட்டேயிருக்குது.. என்னவோ போங்க..

தமிழ்மணத்துக்கு ஏதாவது ‘செலக்டிவ் அம்னீஷியா’ வந்திருச்சோன்னு தோணுச்சு.. அதான் சொல்ல வந்தேன். அவ்வளவுதான்..


38 பதில்கள் to “தமிழ்மணத்திற்கு ‘செலக்டிவ் அம்னீஷியா’..?”

 1. வால்பையன் Says:

  ஆபாசம் பார்ப்பவர் கண்களில் தான் இருக்கிறது என்பது என் கருத்து.

  வால்பையன்

 2. ஜோ / Joe Says:

  இதுக்கு முன்னால உம்மை பல பேர் நக்கல் பண்ணும் போது பரிதாபப் பட்டிருக்கேன் .அதுக்காக இப்போ வருத்தப்படுறேன்.

 3. தமிழ் சசி / Tamil SASI Says:

  FYI – Tamilmanam does not add images manually to verify each and every image.

  Technically verifying each image is also not possible. Only option is to remove this service

  You have to think before writing these posts 🙂

 4. ஜெகதீசன் Says:

  உ.த,
  தமிழ்மணம் படத் திரட்டி, தமிழ்மணத்தின் புதிய சேவை. இது பற்றி இரு நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியாகியிருந்தது
  http://blog.thamizmanam.com/archives/134
  இந்த சேவை இன்னும் சோதனை வடிவிலேயே இருக்கிறது..
  அதனால் அந்தப் படங்கள் மட்டுறுத்தப்படாமல் வெளிவந்திருக்கலாம். உங்கள் கோரிக்கைகுப் பின்,
  இப்போது தமிழ்மணம் முகப்பில் இருந்து அதை எடுத்துவிட்டனர் என நினைக்கிறேன்..

 5. ஜோ / Joe Says:

  //Technically verifying each image is also not possible. Only option is to remove this service//

  குறிப்பிட்ட வார்த்தைகள் வந்தால் *** போடுவது போல புரோக்ராம் எழுதுவது மாதிரி ,குறைந்த ஆடையோடு படம் வந்தால் தானாகவே ஆடை போட்டு விடுவது மாதிரி புரோக்ராம் எழுத வேண்டியது தானே அப்படீண்ணு கேட்பார் ..நல்லா வந்து வாய்சாங்கப்பா.

 6. சார்லி, யூ எஸ் Says:

  //இதுக்கு முன்னால உம்மை பல பேர் நக்கல் பண்ணும் போது பரிதாபப் பட்டிருக்கேன் .அதுக்காக இப்போ வருத்தப்படுறேன்.//

  சில நாட்களுக்கு முன்பு நகைச்சுவையாக, ஜோவின் பதிவில், மேலும் எழுத ஊக்குவித்து வரும் பின்னூட்டங்களை உண்மையென நம்பி எழுத ஆரம்பித்துவிடாதீர்கள் எனப் போட்ட பின்னூட்டத்தை கூட அனுமதிக்காத அளவிற்கு ” சகித்தன்மை’ கொண்ட இவர் இப்படி அடுத்தவர் பதிவில் பின்னூட்டமிடுவது சரியா?

  மிஸ்டர் ஜோ, பைபிளை படித்தால் மட்டும் போதாது. புரிந்து கொள்ள முயற்சிக்கவும்.

 7. சென்ஷி Says:

  அதிசயம்… ஆனால் நம்ப முடியாத உண்மை…

  அண்ணன் உண்மைத்தமிழன் பதிவு ஒரே பக்கத்துல முடிச்சுட்டாருங்கோஓஓஓஓஓஓஓஓஓஓ.

  :))

  டிஸ்கி..( பின்னூட்டத்துக்கூடவான்னு எதிர்க்கேள்வி கேக்கப்படாது):

  ஸ்மைலி போடலன்னா கோச்சுப்பாங்களாமே அது உண்மையா..

 8. செந்தழல் ரவி Says:

  ////Technically verifying each image is also not possible. Only option is to remove this service

  You have to think before writing these posts :-)////

 9. செந்தழல் ரவி Says:

  உண்மைத்தமிழன் அண்ணே…

  தமிழ் சசி என்ன சொல்றாரு அப்படீன்னா…

  ///FYI – Tamilmanam does not add images manually to verify each and every image. ///

  ஒவ்வொன்றாக பார்த்து இந்த படங்களை தமிழ்மணம் இணைக்கவில்லை…

  ///Technically verifying each image is also not possible. Only option is to remove this service//

  ஒவ்வரு படத்தையும் பார்வையிடுதல் முடியாத காரியம். ஒரே வாய்ப்பு இந்த சேவையையே நிறுத்திவிடுவது தான்

  //u have to think before writing these posts :-)///

  நீங்க இந்த மாதிரி பதிவு எழுதுறதுக்கு முன்னாடி நீங்க யோசிக்கறது நல்லது…

 10. செந்தழல் ரவி Says:

  ////இதுக்கு முன்னால உம்மை பல பேர் நக்கல் பண்ணும் போது பரிதாபப் பட்டிருக்கேன் .அதுக்காக இப்போ வருத்தப்படுறேன்.///

  அச்சச்சோ !!! இன்னைக்கு உண்மைத்தமிழனோட கருத்து உங்களுக்கு பிடிக்கலைன்னவுடனே அவர நக்கல் பண்ணியிருக்கலோமுன்னு / அவரு ரொம்ப கேவலமாவோ தெரியறாரா ஜோ அண்ணே ?

  நல்ல சிந்தனைன்னே உங்களுக்கு…

 11. செந்தழல் ரவி Says:

  தமிழ் சசி,

  இதைத்தானே ஜ்யோராம் சுந்தர் விடயத்தில் நீங்கள் சொல்லியிருக்கவேண்டும் ?

  நல்ல காமெடி !!!

  லக்கிலூக் ஜட்டிக்கதைகள் என்று எழுதியபோது அதை நீக்கினீர்களே ?

  இன்றைக்கு ஒரு பெண் குனிந்திருப்பது போலவும், ஜட்டி தெரிவது போலவும் அவருடைய ஒலிம்பிக் பதிவில் இருக்கிறதே ?

  அதுக்கு என்ன செய்யப்போறீங்க ?

 12. செந்தழல் ரவி Says:

  ///ஆபாசம் பார்ப்பவர் கண்களில் தான் இருக்கிறது என்பது என் கருத்து.
  ///

  இங்க முக்காவாசி பேர் கண்ணு நல்லக்கண்ணு மாதிரி தெரியலியே ?

  லக்கியோட சுட்டபழம் பத்து பத்து விமர்சனத்துக்கு வந்த ஹிட்டு என்னான்னு தெரியுமா ?

 13. Anonymous Says:

  //FYI – Tamilmanam does not add images manually to verify each and every image.

  Technically verifying each image is also not possible. Only option is to remove this service

  You have to think before writing these posts :-)//

  சசி,

  புதிய சேவை என்ற வகையில் வரவேற்கிறேன். நான் மட்டுறுத்தலையும் ஆதரிக்காதவன். அதே சமயம் படங்களை மட்டுறுத்தும் நுட்பம் தமிழ்மணத்திடம் இல்லாத பட்சத்தில், இச்சேவையைத் தூக்கிவிடுவதே நல்லது.

  யாராவது வேண்டுமென்றே பொதுப்பார்வையில் தகாததெனக் கருதும் படங்களை போடுவார்கள்.

  எதுக்கு தேவையில்லாம வேலியில போற ஓணாணை…..

 14. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //வால்பையன் said…
  ஆபாசம் பார்ப்பவர் கண்களில்தான் இருக்கிறது என்பது என் கருத்து.
  வால்பையன்//

  உங்கள் வாக்குபோல், ஆபாச கமெண்ட்டுகளையும் படிப்பவர்களின் பார்வையில்தான் இருக்கிறது என்று சொல்லி அனுமதித்து விடலாமா?

 15. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //ஜோ / Joe said…
  இதுக்கு முன்னால உம்மை பல பேர் நக்கல் பண்ணும் போது பரிதாபப் பட்டிருக்கேன் .அதுக்காக இப்போ வருத்தப்படுறேன்.//

  எதுக்கு ஜோ? முன்னாடி பரிதாபப்பட்டு, பின்னாடி வருத்தப்படற வேலை..?

  நமக்கு முருகன் இருக்கான் ஜோ.. போதும்..

 16. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //தமிழ் சசி / Tamil SASI said…
  FYI – Tamilmanam does not add images manually to verify each and every image. Technically verifying each image is also not possible. Only option is to remove this service You have to think before writing these posts :-)//

  ok sasi sir..

 17. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //ஜெகதீசன் said…
  உ.த, தமிழ்மணம் படத் திரட்டி, தமிழ்மணத்தின் புதிய சேவை. இது பற்றி இரு நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியாகியிருந்தது http://blog.thamizmanam.com/archives/134 இந்த சேவை இன்னும் சோதனை வடிவிலேயே இருக்கிறது.. அதனால் அந்தப் படங்கள் மட்டுறுத்தப்படாமல் வெளிவந்திருக்கலாம். உங்கள் கோரிக்கைகுப் பின், இப்போது தமிழ்மணம் முகப்பில் இருந்து அதை எடுத்துவிட்டனர் என நினைக்கிறேன்..//

  நன்றி ஜெகதீசன். நீங்கள் கொடுத்திருக்கும் லின்க்கை இப்போதுதான் படித்தேன். படங்கள் மட்டுறுத்தப்படாமல் வந்தால் அதுவும் தமிழ்மணத்திற்கு கெடுதலைத்தான் தரும்..

 18. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///ஜோ / Joe said…
  //Technically verifying each image is also not possible. Only option is to remove this service//
  குறிப்பிட்ட வார்த்தைகள் வந்தால் *** போடுவது போல புரோக்ராம் எழுதுவது மாதிரி, குறைந்த ஆடையோடு படம் வந்தால் தானாகவே ஆடை போட்டு விடுவது மாதிரி புரோக்ராம் எழுத வேண்டியதுதானே அப்படீண்ணு கேட்பார்.. நல்லா வந்து வாய்சாங்கப்பா.///

  நாங்கள் தமிழ்மணத்திற்கும், தமிழ் மொழிக்கும் உண்மையான ரசிகர்கள் ஜோ..

 19. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///சார்லி, யூ எஸ் said…
  //இதுக்கு முன்னால உம்மை பல பேர் நக்கல் பண்ணும் போது பரிதாபப் பட்டிருக்கேன் .அதுக்காக இப்போ வருத்தப்படுறேன்.//
  சில நாட்களுக்கு முன்பு நகைச்சுவையாக, ஜோவின் பதிவில், மேலும் எழுத ஊக்குவித்து வரும் பின்னூட்டங்களை உண்மையென நம்பி எழுத ஆரம்பித்துவிடாதீர்கள் எனப் போட்ட பின்னூட்டத்தை கூட அனுமதிக்காத அளவிற்கு ” சகித்தன்மை’ கொண்ட இவர் இப்படி அடுத்தவர் பதிவில் பின்னூட்டமிடுவது சரியா? மிஸ்டர் ஜோ, பைபிளை படித்தால் மட்டும் போதாது. புரிந்து கொள்ள முயற்சிக்கவும்.///

  ))))))))))))))))))))))

 20. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //சென்ஷி said…
  அதிசயம்… ஆனால் நம்ப முடியாத உண்மை… அண்ணன் உண்மைத்தமிழன் பதிவு ஒரே பக்கத்துல முடிச்சுட்டாருங்கோஓஓஓஓஓஓஓஓஓஓ.:))//

  ஒரு பக்கத்துலகூட இல்லடா ராசா.. பத்து வரில.. எப்படியிருக்கு..?

  //டிஸ்கி..( பின்னூட்டத்துக்கூடவான்னு எதிர்க்கேள்வி கேக்கப்படாது): ஸ்மைலி போடலன்னா கோச்சுப்பாங்களாமே அது உண்மையா..//

  தம்பீ.. உன்னைப் போய் கோச்சுக்க முடியுமா? உன்னைப் பகைச்சுக்கிட்டு பதிவுலகத்துல இருந்திர முடியுமா? நீதானடா இந்தத் தமிழ் கூறும் வலையுலகத்திற்கு என்னை முதன்முதலாக அறிமுகப்படுத்தி தனிப்பதிவு போட்டுப் பெருமைப்படுத்தியது.. உன்னைப் போய் கோபிப்பேனா.. தப்பு.. தப்பு.. கன்னத்துல போட்டுக்க..

 21. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //செந்தழல் ரவி said…
  உண்மைத்தமிழன் அண்ணே… தமிழ் சசி என்ன சொல்றாரு அப்படீன்னா…
  ///FYI – Tamilmanam does not add images manually to verify each and every image. ///
  ஒவ்வொன்றாக பார்த்து இந்த படங்களை தமிழ்மணம் இணைக்கவில்லை…
  ///Technically verifying each image is also not possible. Only option is to remove this service//
  ஒவ்வரு படத்தையும் பார்வையிடுதல் முடியாத காரியம். ஒரே வாய்ப்பு இந்த சேவையையே நிறுத்திவிடுவது தான்
  //u have to think before writing these posts :-)///
  நீங்க இந்த மாதிரி பதிவு எழுதுறதுக்கு முன்னாடி நீங்க யோசிக்கறது நல்லது…//

  நல்லதுடா ராசா.. எங்கிட்டிருந்தாலும் மறக்காம வந்து எனக்கு ‘உதவி’ பண்றதுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்..

 22. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///செந்தழல் ரவி said…
  //இதுக்கு முன்னால உம்மை பல பேர் நக்கல் பண்ணும் போது பரிதாபப பட்டிருக்கேன். அதுக்காக இப்போ வருத்தப்படுறேன்.//
  அச்சச்சோ!!! இன்னைக்கு உண்மைத்தமிழனோட கருத்து உங்களுக்கு பிடிக்கலைன்னவுடனே அவர நக்கல் பண்ணியிருக்கலோமுன்னு / அவரு ரொம்ப கேவலமாவோ தெரியறாரா ஜோ அண்ணே? நல்ல சிந்தனைன்னே உங்களுக்கு…///

  யாரோ நக்கல் பண்ணும்போதுன்னு சொல்றாரு.. யாருன்னுதான் சொல்லலை.. விமர்சனங்களில் வருகின்ற எதிர் கருத்துக்களுக்கு உவமானப் பெயர்தானே நக்கல். அத்தொனியில் வருகின்ற கருத்து முழுக்க முழுக்க காழ்ப்புணர்ச்சியுடன்தான் இருக்கும்.

  அதை என்னத்துக்கு ஞாபகம் வைச்சுக்குறீங்க ஜோ.. நான் அதைப் படிச்சிட்டு குப்பைல தூக்கிப் போட்டிருவேன்.. நல்ல ஆள் போங்க நீங்க..

 23. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //செந்தழல் ரவி said…
  தமிழ் சசி, இதைத்தானே ஜ்யோவ்ராம் சுந்தர் விடயத்தில் நீங்கள் சொல்லியிருக்கவேண்டும்? நல்ல காமெடி!!!//

  வார்த்தை மட்டுறுத்தல் அப்போது சோதனை முயற்சியில் இருந்ததா என்பது தெரியவில்லை..

  //லக்கிலூக் ஜட்டிக்கதைகள் என்று எழுதியபோது அதை நீக்கினீர்களே? இன்றைக்கு ஒரு பெண் குனிந்திருப்பது போலவும், ஜட்டி தெரிவது போலவும் அவருடைய ஒலிம்பிக் பதிவில் இருக்கிறதே? அதுக்கு என்ன செய்யப் போறீங்க?//

  தமிழ்சசி உட்பட வலையுலகில் பெரும்பாலோர் ‘வயசுப் பசங்க’ என்பது நன்கு தெரிகிறது..

  ஆனாலும் பதிவிற்குள் இருப்பதையெல்லாம் தடை செய்வதும், நீக்குவதும் முடியாதே ரவி.. அவரவர் தங்கள் மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு பதிவுகள் எழுதினாலே போதும்.. இந்தச் சிரமத்தையும் தமிழ்மணத்தின் மேல் நாம் திணிக்க வேண்டாம். திணிக்கவும் கூடாது..

 24. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///செந்தழல் ரவி said…
  //ஆபாசம் பார்ப்பவர் கண்களில் தான் இருக்கிறது என்பது என் கருத்து.//
  இங்க முக்காவாசி பேர் கண்ணு நல்லக் கண்ணு மாதிரி தெரியலியே?///

  ஆமா.. ரொம்ப ரொம்ப கெட்ட கண்ணு..

  ///லக்கியோட சுட்டபழம் பத்து பத்து விமர்சனத்துக்கு வந்த ஹிட்டு என்னான்னு தெரியுமா?///

  பெரும்பாலான பதிவர்கள் எதிர்பார்ப்பது இதைத்தானே..?

 25. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///Anonymous said…
  //FYI – Tamilmanam does not add images manually to verify each and every image. Technically verifying each image is also not possible. Only option is to remove this service. You have to think before writing these posts :-)//
  சசி, புதிய சேவை என்ற வகையில் வரவேற்கிறேன். படங்களை மட்டுறுத்தும் நுட்பம் தமிழ்மணத்திடம் இல்லாத பட்சத்தில், இச்சேவையைத் தூக்கிவிடுவதே நல்லது. யாராவது வேண்டுமென்றே பொதுப்பார்வையில் தகாததெனக் கருதும் படங்களை போடுவார்கள். எதுக்கு தேவையில்லாம வேலியில போற ஓணாணை…..///

  கரெக்ட்.. இதனை நான் முழு மனதோடு ஆமோதிக்கிறேன்.. அனானியாக வந்தாலும் மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்..

 26. லக்கிலுக் Says:

  //இன்றைக்கு ஒரு பெண் குனிந்திருப்பது போலவும், ஜட்டி தெரிவது போலவும் அவருடைய ஒலிம்பிக் பதிவில் இருக்கிறதே ?

  அதுக்கு என்ன செய்யப்போறீங்க ?//

  யோவ் ரவி!

  அதுக்காக என்னை இப்போ தமிழ்மணத்துலே இருந்து தூக்கணும்னு தீர்மானம் போடப்போறீங்களா?

  உள்ளே ஒண்ணு, வெளியே ஒண்ணுன்னு வெளிவேஷம் போடுற பார்ட்டிங்க தான் ஆபத்து. நம்மை மாதிரி உள்ளே இருக்குறதை வெளிப்படையா வெளியே தொறந்து காட்டுறவங்களால ஆபத்தில்லை.

  ஆபாசத்துக்கு எதிரா குரல் கொடுக்குறதா காட்டிக்கிறவங்க எத்தனை பேரு உண்மையா குரல் கொடுக்குறாங்கன்னு சொல்ல முடியுமா?

  எனக்கு தெரிஞ்சு ஒருத்தர் ஆபாச பிட் வீடியோக்களையும், போட்டோக்களையும் நண்பர்களுக்கு ஃபார்வேர்டு செய்வார். ஆனால் வலையில் எழுதும்போது மட்டும் பக்திரசம் சொட்ட எழுதுவார் 🙂

 27. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///லக்கிலுக் said…
  //இன்றைக்கு ஒரு பெண் குனிந்திருப்பது போலவும், ஜட்டி தெரிவது போலவும் அவருடைய ஒலிம்பிக் பதிவில் இருக்கிறதே ? அதுக்கு என்ன செய்யப்போறீங்க?//
  யோவ் ரவி! அதுக்காக என்னை இப்போ தமிழ்மணத்துலே இருந்து தூக்கணும்னு தீர்மானம் போடப் போறீங்களா?//

  நல்ல ஐடியாவே இருக்கே..

  //உள்ளே ஒண்ணு, வெளியே ஒண்ணுன்னு வெளி வேஷம் போடுற பார்ட்டிங்கதான் ஆபத்து. நம்மை மாதிரி உள்ளே இருக்குறதை வெளிப்படையா வெளியே தொறந்து காட்டுறவங்களால ஆபத்தில்லை.//

  ஆமாப்பா.. எல்லாத்தையும் ஒண்ணுவிடாம சொல்லிருங்க.. அப்பத்தான உங்களைப் பத்தி எல்லாமே எல்லாருக்கும் தெரியும்..

  //ஆபாசத்துக்கு எதிரா குரல் கொடுக்குறதா காட்டிக்கிறவங்க எத்தனை பேரு உண்மையா குரல் கொடுக்குறாங்கன்னு சொல்ல முடியுமா?//

  இதுல உண்மைக் குரல்.. பொய்க் குரல்ன்னு வேற இருக்கா.. முருகா..

  //எனக்கு தெரிஞ்சு ஒருத்தர் ஆபாச பிட் வீடியோக்களையும், போட்டோக்களையும் நண்பர்களுக்கு ஃபார்வேர்டு செய்வார். ஆனால் வலையில் எழுதும்போது மட்டும் பக்திரசம் சொட்ட எழுதுவார்:-)//

  ஆஹா.. இப்படியொருத்தரும் இருக்காரா..? இதெல்லாம் எனக்கு ஏன் தெரிய மாட்டேங்குது..?

  ரவி தம்பீ.. அடுத்து நீதான் வந்து சொல்லணும்..

 28. லக்கிலுக் Says:

  உண்மைத்தமிழன் அண்ணாச்சி!

  //நல்ல ஐடியாவே இருக்கே..//

  நல்ல ஐடியாவா இருக்கறதாலே தான் இந்தப் பதிவையே போட்டிங்க. எனக்கென்னவோ ”அடிக்கற மாதிரி அடிக்கறேன், அழுவுற மாதிரி அழுவுன்னு” சொல்லி நாடகம் போடுற மாதிரி இந்த பதிவும், பின்னூட்டங்களும் தெரியுது.

  //ஆமாப்பா.. எல்லாத்தையும் ஒண்ணுவிடாம சொல்லிருங்க.. அப்பத்தான உங்களைப் பத்தி எல்லாமே எல்லாருக்கும் தெரியும்..//

  எங்களைப் பத்தி எல்லாமே எல்லாருக்குமே நல்லா தெரியும். உங்களைப் பத்தி தான் நிறைய பேருக்கு தெரியாது. எப்படியும் தண்ணிக்குள்ளே விட்ட காத்து மேலே வந்துதானே ஆவணும். ஒருநாள் வெளியே வந்தே தீரும் 🙂

  //இதுல உண்மைக் குரல்.. பொய்க் குரல்ன்னு வேற இருக்கா.. முருகா..//

  இனிமே நானும் எதை சொன்னாலும் பின்னாடியே கோயிந்தான்னோ, ஐயப்பான்னோ சொல்ல வேண்டியதுதான். அப்போதான் பார்க்குறவங்க எல்லாம் பரிதாபமா ‘அய்யோ ரொம்ப நல்லவண்டா. சாமி பேரெல்லாம் சொல்லுறான்’ன்னு நினைப்பாங்க :-)))

  //ஆஹா.. இப்படியொருத்தரும் இருக்காரா..? இதெல்லாம் எனக்கு ஏன் தெரிய மாட்டேங்குது..?//

  அதெப்படி உங்களுக்கு தெரியும்? :-)))) தெரிஞ்சாதானே அதிசயம்?

  //ரவி தம்பீ.. அடுத்து நீதான் வந்து சொல்லணும்..//

  நீங்க என்ன சொல்ல சொல்றீங்களோ அதை ரவி தம்பீ வந்து சொல்லிடுவாரு. கவலைப்படாதீங்கோ.

 29. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //லக்கிலுக் said…
  உண்மைத்தமிழன் அண்ணாச்சி! நல்ல ஐடியாவா இருக்கறதாலேதான் இந்தப் பதிவையே போட்டிங்க.//

  நேத்து மதியம் தற்செயலா போட்டோவை பார்த்துட்டுத்தான் பதிவைப் போட்டேன். இதையே ரூம் போட்டு யோசிச்சு எழுதின மாதிரி சொல்றது தப்புடா ராசா.

  //எனக்கென்னவோ ”அடிக்கற மாதிரி அடிக்கறேன், அழுவுற மாதிரி அழுவுன்னு” சொல்லி நாடகம் போடுற மாதிரி இந்த பதிவும், பின்னூட்டங்களும் தெரியுது.//

  காமாலை கண்டவனுக்கு பாக்கிறதெல்லாம் மஞ்சளாத்தான் தெரியும்பாங்களே அது மாதிரியிருக்கு.

  //எங்களைப் பத்தி எல்லாமே எல்லாருக்குமே நல்லா தெரியும். உங்களைப் பத்திதான் நிறைய பேருக்கு தெரியாது. எப்படியும் தண்ணிக்குள்ளே விட்ட காத்து மேலே வந்துதானே ஆவணும். ஒருநாள் வெளியே வந்தே தீரும் :-)//

  என்னைப் பத்தி சொல்றதுக்கு என்ன இருக்கு? அதான் எல்லாத்தையும் சொல்லி முடிச்சிட்டாங்களே.. படிக்கல..

  //இனிமே நானும் எதை சொன்னாலும் பின்னாடியே கோயிந்தான்னோ, ஐயப்பான்னோ சொல்ல வேண்டியதுதான். அப்போதான் பார்க்குறவங்க எல்லாம் பரிதாபமா ‘அய்யோ ரொம்ப நல்லவண்டா. சாமி பேரெல்லாம் சொல்லுறான்’ன்னு நினைப்பாங்க :-)))//

  ரொம்ப நல்லவன்னு பிளாக்ல எழுதி பேர் எடுத்து என்ன புண்ணியம்..? Loss of Pay-ல லீவு போட்டுட்டு ஸ்டேஷன்ல போய் நாள் முழுக்க உட்கார்ந்ததுதான் மிச்சம். வேறு ஏதாவது தங்களுக்குத் தெரியாமல் எனக்குக் கிடைத்திருக்கிறதா தம்பி..

  //அதெப்படி உங்களுக்கு தெரியும்? :-)))) தெரிஞ்சாதானே அதிசயம்?//

  அதான.. தெரிஞ்சாத்தானே ‘அதிசயம்’னு நினைச்சு வெளில சொல்ல முடியும்.. தெரிஞ்சவங்க சொல்லாதவரைக்கும் எனக்கு எப்படித் தெரியும்..?

  //நீங்க என்ன சொல்ல சொல்றீங்களோ, அதை ரவி தம்பீ வந்து சொல்லிடுவாரு. கவலைப்படாதீங்கோ.//

  ஆமாண்டா கண்ணா.. இப்ப எல்லாத்தையும் நான் சொல்லித்தான் அவன் செய்றான்.. என் பேச்சை ஆரம்பத்திலேயே கேட்டுத் தொலைஞ்சிருந்தான்னா..????????????????????????

 30. லக்கிலுக் Says:

  //தம்பி ஏனோ தனிப்பதிவு போட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதினால் “கமெண்ட் போட முடியவில்லை” என்று சொல்லி தனிப் பதிவைப் போட்டுவிட்டார். பரவாயில்லை.. வாழ்த்துக்கள்.//

  அருமை அண்ணா ‘உண்மை’ தமிழன்!

  நீங்கள் இதுபோல ‘உண்மை’ பேசுவீர்கள் என்று தெரிந்துதான் கமெண்ட் போடமுடியாத அந்த நேரத்தில் உடனடியாக பிரிண்ட் ஸ்க்ரீன் எடுத்து வைத்திருக்கிறேன்.

  இங்கே பார்க்கவும்! 🙂

 31. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  அருமைத் தம்பி லக்கிலுக்,

  இந்தப் பதிவில் நான் தெரிவித்த பதிலுக்குப் பதிலாக ஒரு புதிய பதிவை “உண்மையாரின் செலக்டிவ் அம்னீஷியா” என்கிற தலைப்பில் எழுதியுள்ளார்.

  அதன் லின்க் : http://madippakkam.blogspot.com/2008/08/blog-post_09.html

  அப்பதிவில் முதல் புகைப்படத்தில் இருப்பது “பீடிங் பாட்டிலில் பீர்-கலக்குது கலாச்சாரம்” என்கிற தலைப்பில் நான் இட்டிருக்கும் பதிவு. இதனுடைய லின்க் : http://truetamilans.blogspot.com/2007/03/blog-post_9734.html

  அடுத்தது “தமிழ் நூல்கள் பற்றி பெரியார்” என்கிற தலைப்பின் கீழ் வரும் ஒரு செய்தி. அதற்கான லின்க் : http://truetamilans.blogspot.com/2007/03/blog-post_7724.html

  அவ்வளவுதான்..

 32. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///லக்கிலுக் said…
  //தம்பி ஏனோ தனிப்பதிவு போட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதினால் “கமெண்ட் போட முடியவில்லை” என்று சொல்லி தனிப் பதிவைப் போட்டுவிட்டார். பரவாயில்லை.. வாழ்த்துக்கள்.//
  அருமை அண்ணா ‘உண்மை’ தமிழன்! நீங்கள் இதுபோல ‘உண்மை’ பேசுவீர்கள் என்று தெரிந்துதான் கமெண்ட் போடமுடியாத அந்த நேரத்தில் உடனடியாக பிரிண்ட் ஸ்க்ரீன் எடுத்து வைத்திருக்கிறேன். இங்கே பார்க்கவும்!:-)///

  ஒரு இடத்தில் சொன்னதையே எல்லா இடத்திலும் மாறி, மாறி சொல்ல முடியாது.. எனக்கு அந்த ஆப்ஷன் பற்றித் தெரியாததால் நடந்த குழப்பம் இது..

  நேற்றே இந்தப் பதிவில் கை வைக்க முடியாமைக்குக் காரணம், அதற்கான வாய்ப்பு அப்போதே கிடைக்கவில்லை. கிடைத்த குறுகிய கால அவகாசத்தில்தான் அதனைச் செய்து பார்க்க முடிந்தது.. என்னுடைய தமிழ் டைப்பிங் எனது வீடு, அலுவலகம் தவிர வேறு இடத்தில் செய்ய முடியாது.

  அவ்வளவுதான்.. உனக்கு கும்மியடிப்பதற்கு நேரமும், வாய்ப்பும் இருந்தால் தொடர்ந்து இதையே செய்யலாம்..

 33. வால்பையன் Says:

  //உண்மைத் தமிழன்(15270788164745573644) said…
  உங்கள் வாக்குபோல், ஆபாச கமெண்ட்டுகளையும் படிப்பவர்களின் பார்வையில்தான் இருக்கிறது என்று சொல்லி அனுமதித்து விடலாமா?//

  வார்த்தைகளானாலும் சரி, காட்சியாக இருந்தாலும் சரி பார்வைக்குன்டான நேரடி அர்த்தத்தை அது தருவதில்லை, அவைகள் ஒரு குறியீட்டின் பணியை செய்கின்றன. அவை வெறும் வாசல் தான் பயணிப்பது நம் கற்பனைக்கு,

  வால்பையன்

 34. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///வால்பையன் said…
  //உண்மைத் தமிழன்(15270788164745573644) said…
  உங்கள் வாக்குபோல், ஆபாச கமெண்ட்டுகளையும் படிப்பவர்களின் பார்வையில்தான் இருக்கிறது என்று சொல்லி அனுமதித்து விடலாமா?//
  வார்த்தைகளானாலும் சரி, காட்சியாக இருந்தாலும் சரி பார்வைக்குன்டான நேரடி அர்த்தத்தை அது தருவதில்லை, அவைகள் ஒரு குறியீட்டின் பணியை செய்கின்றன. அவை வெறும் வாசல தான் பயணிப்பது நம் கற்பனைக்கு,
  வால்பையன்///

  வால்பையன் ஸார்..

  உங்களுக்கு வந்த போலியாரின் ஆபாச கமெண்ட்டுகள் பற்றி பதிவுகளை எழுதித் தள்ளினீர்களே.. அப்போது எந்த உணர்வு உங்களுக்கு வந்தது? வெறும் குறியீட்டின் பணி பற்றிய அறிவா..?

 35. வால்பையன் Says:

  இப்போதும் அதை தான் சொல்கிறேன்.
  என் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க அந்த முறை பேடித்தனமானது.
  நேரடியான எந்த விவாதத்திற்கும் நான் தயாராக இருக்கும் போது

  வால்பையன்

 36. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //வால்பையன் said…
  இப்போதும் அதை தான் சொல்கிறேன். என் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க அந்த முறை பேடித்தனமானது. நேரடியான எந்த விவாதத்திற்கும் நான் தயாராக இருக்கும போது..
  வால்பையன்//

  இரண்டும் ஒன்றுதானே ஸார்.. சாதாரணமாக வெளியில் பேசவே முடியாது.. சபைகளில் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது என்பதால்தானே அதை ஆபாசம் என்கிறீர்கள்..

  இந்தப் புகைப்படங்களை காலண்டர் போட்டோவாக மாற்றி நடுவீட்டில் மாட்டி வைக்க முடியுமா? முடியாதல்லவா..?

  முடியுமெனில் நான் விலகிக் கொள்கிறேன்.. முடியாதெனில் நான் கேட்ட கேள்வி சரியானதுதான்..

 37. குசும்பன் Says:

  //எனக்கு தெரிஞ்சு ஒருத்தர் ஆபாச பிட் வீடியோக்களையும், போட்டோக்களையும் நண்பர்களுக்கு ஃபார்வேர்டு செய்வார். ஆனால் வலையில் எழுதும்போது மட்டும் பக்திரசம் சொட்ட எழுதுவார் :-)//

  அன்புள்ள லக்கி அவரிடம் என் மெயில் ஐடியையும் கொடுக்கவும்:)))
  True known மெயிலில் எல்லாம் கூட என் பெயர் இருந்தது இதில் இல்லாமல் போச்சே:(((((

 38. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///குசும்பன் said…
  //எனக்கு தெரிஞ்சு ஒருத்தர் ஆபாச பிட் வீடியோக்களையும், போட்டோக்களையும் நண்பர்களுக்கு ஃபார்வேர்டு செய்வார். ஆனால் வலையில் எழுதும்போது மட்டும் பக்தி ரசம் சொட்ட எழுதுவார் :-)//
  அன்புள்ள லக்கி, அவரிடம் என் மெயில் ஐடியையும் கொடுக்கவும்) True known மெயிலில் எல்லாம் கூட என் பெயர் இருந்தது. இதில் இல்லாமல் போச்சே(((///

  குசும்பன் ஸார்.. மொதல்ல எழுதறது யாருன்னு தெரிஞ்சுக்குவோம்.. அப்புறமா யார், யாருக்கெல்லாம் வேணும்னு கேட்டு மெயில் அனுப்பலாம்..

  trueknown மெயில் எனக்கு வந்துச்சே.. உங்களுக்கு வரலியா குசும்பன் ஸார்..? சரி விடுங்க.. இனிமே எது வந்தாலும் நான் தங்களுக்கு பார்வர்டு செய்கிறேன் ஸார்..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: