பதிவர்கள் டுபுக்கு-பாஸ்டன் பாபாவுடன் ஒரு சந்திப்பு

12-06-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே!

‘டுபுக்கு’ என்ற வார்த்தையை என் சின்ன வயதில் கேட்டது. ‘வாயைத் தொறந்தால் பொய்யைத் தவிர வேற எதையுமே பேச மாட்டான்’ என்று என் பள்ளிக்காலத் தோழன் ராமச்சந்திரனை அடையாளம் காட்டி, சக மாணவர்கள் பேசியது எனக்கு இன்றைக்கும் நினைவிருக்கிறது.

அநேகமாக பள்ளிகளில் பேசிய இது போன்ற அர்த்தமுள்ள சிறார் வார்த்தைகளை, பின்னாளில் கேட்கின்ற போது ரொம்பத்தான் மனம் அதில் லயித்துப் போகிறது..

நான் வலையுலகில் நுழைந்த காலக்கட்டத்தில் வலைப்பதிவர்களின் பெயர்கள் சற்று காமெடியாகவும், சற்று வில்லங்கமாகவும் இருக்கும் என்பது தெரியும் என்றாலும், இந்த அளவுக்கு இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. காரணம் ‘டுபுக்கு’.

நண்பர், தோழர் டுபுக்கு எனது பதிவிற்கு வருகை தர துவங்கியதில்தான் அவருக்கும், எனக்குமான தொலைதூரத் தொடர்பும் துவங்கியது. பெயர், ஊர் தெரியாமல் எழுத்தால் மட்டுமே அறிமுகமாயிருந்த நண்பர் டுபுக்கு திடீரென்று சென்ற வாரம் சென்னையில் பிரசன்னமாகியிருந்தார்.

வருவதற்கு முன்பே ஒரு பதிவினை இட்டிருந்தார். நானே கிட்டத்தட்ட மறந்து போயிருந்தேன் அந்தப் பெயரை.. மறுபடியும் ஞாபகப்படுத்துவதைப் போல் இருந்தது அவரது அழைப்பு. ‘சந்திப்போம்’ என்ற உணர்வோடு முன்கூட்டியே தெரியப்படுத்தியிருந்தேன். ‘வருக.. வருக..’ என்று அழைத்திருந்தார்.

திடீரென்று இரண்டு நாட்கள் முன்பாக செல்போனில் அழைத்தார். எனது ‘நிலைமை’ தெரியாததால் பாவம்.. பேசுவதற்குள் திணறிவிட்டார். 4, 5 முறை சொன்ன பிறகுதான் ‘டுபுக்கு’ என்ற பெயர் எனது ஓட்டைக் காதில் ஏறியது.. நானே மன்னிப்பு கேட்டு பேசினேன்.. “அவசியம் வரணும்.. உங்களை சந்திக்கணும்..” என்றார்.. “இடம் எங்கே..?” என்றேன்.. “சிட்டி சென்டர்..” என்றார்.. “அதுதான் எங்கே..?” என்றேன்.. “எனக்கே தெரியாது பாஸ்.. அன்னிக்கு போன் பண்ணுங்க.. சொல்றேன்..” என்றார்.

அடுத்து கொஞ்ச நேரத்தில் டோண்டு ஸார் போன் செய்து “சிட்டி சென்டர் எங்கே இருக்கிறது?” என்றார். [“இஸ்ரேலை பத்தி தெரியுது.. குஜராத்ல பகல்லேயே கிராமத்துல லைட் எரியறது நங்கநல்லூர்ல இருந்தே தெரியுது.. பிராங்க்ளினை தவிர மத்த ஜனாதிபதியெல்லாம் வேஸ்ட்டுன்னு தெரியுது.. ஊருக்குள்ளேயே இருக்குற சிட்டி சென்டர் எங்கன்னு தெரியல.. கொடுமை..”] “விசாரிச்சு சொல்றேன் ஸாரு”ன்னு சொல்லிட்டு விசாரிச்சேன். ஐநாக்ஸ் தியேட்டர் பில்டிங்குதான்னு சொன்னாங்க.. நமக்கு ‘குல தெய்வக் கோவிலை’ அடையாளம் காட்டினாத்தானே எல்லாமே தெரியுது.. மறுபடியும் டோண்டு ஸாருக்கு போனை போட்டு சொன்னேன்.. “வந்தர்றேன்..” என்றார்.

ஜூன் 7-ம் தேதி சனிக்கிழமை மாலை அலுவலகத்திலிருந்து கிளம்புகின்ற சமயம் பார்த்து வழக்கம்போல என் அப்பன் முருகன் தனது விளையாட்டைக் காட்டிவிட்டான். “ஒரு அர்ஜண்ட் வொர்க்.. நைட்டோட நைட்டா முடிச்சாகணும்..” என்று சொல்லி ஒரு கத்தை பேப்பரை கையில் திணித்தார்கள்.. நானும் வழக்கம்போல மனதுக்குள் முருகனைத் திட்டித் தீர்த்தேன்.

இருந்தாலும், போயே ஆக வேண்டும் என்ற உணர்வு மேலோங்கியிருந்ததால், 2 மணி நேர பெர்மிஷன் சொல்லிவிட்டு கிளம்பினேன்.

சிட்டி சென்டர் வந்தவுடன் டோண்டு ஸாருக்கு போன் செய்தேன். மிக இரைச்சலுடன் “4-வது மாடிக்கு வாங்க..” என்றார். தியேட்டரில் இருக்கிறார்களோ என்ற சந்தேகத்துடன் 4-வது மாடியில் கால் வைத்தபோதுதான் தெரிந்தது அது Food Court Ground என்று..

குழந்தைகள் ஒரு பக்கம் கம்பி வலைகளுக்குள் கவலையே இல்லாமல் விளையாடிக் கொண்டிருக்க அவர்களை அழைத்து வந்திருந்த பெற்றோர்கள் ஒரு புறம் அதைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்தார்கள்.

எங்கே இருக்கிறார்கள் என்று அந்தப் பக்கம், இந்தப் பக்கம் என நோட்டம் விட்டபோது டோண்டு ஸார் மட்டும் பளிச்சென தெரிந்தார். அருகில் சென்றேன்.. சுற்றிலும் ஒரு பத்து பேர் அமர்ந்திருந்தார்கள்.

கருப்பு பனியனில் அம்சமான கலரில், தோற்றத்தில் அழகாக இருந்தார் டுபுக்கு. ‘ஹாய் கோபி’க்குப் பிறகு வலையுலகில் இருக்கும் அழகான ‘கோபியன்’ இவர்தான் என்று நினைக்கிறேன்..

இரண்டு டேபிள்களில் சுற்றிலும் அமர்ந்திருந்தார்கள் நண்பர்கள். எனக்கு இப்போது நினைவில் இருப்பது சிலர்தான்.. மற்றத் தோழர்கள் கோபித்து கொள்ளக்கூடாது.. சட்டென்று நினைவிற்கு வர மறுக்கிறது..

கில்லி பிரகாஷ¤ம், பாஸ்டன் பாபாவையும் உடனேயே அடையாளம் தெரிந்தது.. நண்பர் விக்கியும் இருந்தார். கில்லி கொஞ்சம் மெலிந்திருந்தார்.. பாவம்.. ஏனோ தெரியவில்லை.. பாபா சென்ற வருடம் பார்த்ததைவிடவும் சற்று அழகு குறைவாக இருந்தார். வயது ஏறியதாலோ..?

என் அருகில் நண்பர் சிமுலேஷன். இவரது பெயர் மட்டும்தான் சட்டென்று நமீதா பெயரைப் போல் மனதில் ஒட்டிக் கொண்டது. ஏன் என்றுதான் தெரியவில்லை.

கில்லியார் எனது சுஜாதா பதிவைப் பற்றிச் சொல்லி “அன்னிக்கே நான் போன் பண்ணணும்னு நினைச்சேன்..” என்றார்.. ஏன் பண்ணவில்லை என்பதற்கு காரணம் சொல்வார் என்று எதிர்பார்த்தேன்.. சட்டென்று எஸ்கேப்பாகிவிட்டார். பட்டென்று கையில் ஒரு ஜூஸ் டம்ளரை கொடுத்து உபசரித்தார் சிமுலேஷன்.

இவரும் சுஜாதா பதிவைப் பற்றியே பேசினார். “சுஜாதா மறைவு தொடர்பான செய்திகளில்தான் உங்களைப் பற்றியே கேள்விப்பட்டேன்” என்றேன்.. “நான் அதிகமா எழுதறதில்ல. ஆனா உங்க பதிவை படிச்சுக்கிட்டேதான் இருக்கேன்..” என்றார்.

டுபுக்குவுடன் மீட்டிங்கில் மற்ற பதிவர்கள் மிக பிஸியாக இருந்தார்கள். நேருக்கு நேராக அமர்ந்து மீட்டிங் பேசிக் கொண்டிருந்தார் டோண்டு ஸார்.. அவரை விட்டுட்டுத் திரும்ப முடியுமா? மனுஷன் விடுவாரா அவரு..?

இன்னொரு பதிவர் வளைத்து, வளைத்து புகைப்படங்களை எடுத்துத் தள்ளினார். இங்கே பாபாவும், கில்லியும் சப்ஜெக்ட் டூ சப்ஜெக்ட்டாகத் தாவிக் கொண்டிருந்தார்கள். நான் வழக்கம்போல காதில் விழுந்ததை மட்டும் கேட்டுவிட்டு மற்ற நேரத்தில் வழக்கம்போல ‘சர்வே’ எடுத்துக் கொண்டிருந்தேன்.

என் பின்புறத்தில் காதலர்களான இருவர் ஒரு ஜூஸை யார் வேகமாக உறிஞ்சுவது என்ற போட்டியில் ஈடுபட்டிருக்க.. அந்தச் சத்தமும் என் காதைத் தொட லேசாகத் திரும்பிப் பார்த்தேன். வழக்கம்போல நம்மாளு தோத்துட்டான்..

இப்போது பேச்சு எங்கெங்கோ சுற்றி அரசியல் பற்றி வந்து நின்றது.. காமராஜர், தியாகி ஜெபமணி, பற்றி கில்லியார் எடுத்துவிட அது ராஜீவ்காந்தி கொலை வழக்கு, சி.பி.ஐ. விசாரணை பற்றியெல்லாம் சுற்றிக் கொண்டு சென்றது.

நண்பர் விக்கி எனது குறும்படம் பற்றிப் பேசினார். “அதை ஏன் இன்னமும் வலையேற்றவில்லை..?” என்றார். எனது பிரச்சினையை சொன்னேன். “என்கிட்ட கொடுங்க.. நான் பண்ணித் தரேன்..” என்றார். “பாலாவும் இதையேதான் சொல்லிருக்கார். கொண்டு போய் கொடுக்க நேரமில்லாம இருக்கேன். அதான் பிரச்சினை.. இந்த மாசத்துக்குள்ள எப்படியும் ஏத்திரலாம்..” என்றேன்..

மேற்கொண்டு பேச வேண்டுமெனில் காதில் ஸ்பீக்கர் வைத்துக் கத்தினால்தான் கேட்கும் என்ற நிலைமை.. அவ்வளவுக்கு குழந்தைகளின் கூச்சலும், ஆர்வமும் அதிகரித்திருந்தது.

நண்பர் சிமுலேஷன் சீக்கிரமே விடைபெற்று சென்றார். டுபுக்குவும் இதற்கு மேல் இங்கேயிருந்து கத்த முடியாது என்று சொல்லி “இடத்தை மாத்துவோம்..” என்றார். அதுவரையில் அவருடன் நேருக்கு நேர் பேச்சுவார்த்தையில் இருந்த டோண்டு ஸாரும் அதனை ஆமோதிக்க கூட்டம் அங்கிருந்து கலைந்தது.

டோண்டு ஸார், தன்னுடைய வயதை குறைத்துக் காட்ட வேண்டி ஒரு அடையாளத்துக்காக ஹாரிபாட்டர் புத்தகத்தைக் கையோடு கொண்டு வந்திருந்தார். எங்கே போனாலும் கையில் ஒரு புத்தகத்தை வைத்திருப்பது இவருடைய வழக்கமாம். “நேரத்தை வீணாக்கக் கூடாது..” என்றார். “என்னதான் பிலிம் காட்டினாலும் 65 வயசானது ஆனதுதான்.. அதை மாத்த முடியாது..” என்றேன்.. சிரித்துக் கொண்டார்.

கீழே இறங்க வரும்போதுதான் கவனித்தேன்.. ஒரு மூலையில் ஒரு கனிவான, மிக, மிக அழகான யுவதி கண்களில் சொட்டு, சொட்டாக நீர் வடிய செல்போனில் யாருடனோ பேசியபடியே அழுது கொண்டிருந்தார். அடப்பாவே.. வர வேண்டியவர் வராமல் ஏமாற்றிவிட்டாரோ என்னவோ?

எஸ்கலேட்டரில் நான் அதிகம் ஏறியவனில்லை. கொஞ்சம் பயம்தான் இன்னிக்கிவரைக்கும். பாதுகாப்பிற்காக முன்னால் டோண்டு ஸாரை போக விட்டு பின்னால் பயத்துடன் கால் வைத்து இறங்கினேன்.. அது ஏன் இங்கே மட்டும் சட்டென்று கால் வர மறுக்கிறது..? புரியவில்லை.

கிரவுண்ட் ப்ளோரில் மெயின் ஹாலில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ‘ஹோலி குரான்’ என்று எழுதப்பட்டிருந்த ஆங்கிலப் புத்தகத்தை பாபாவும், மற்றவர்களும் ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். வழக்கம்போல வாங்காமலேயே டாட்டா சொல்லிவிட்டு வந்தார்கள்..

ரோட்டிற்கு வந்தவுடன் பீச்சிற்கு போகலாம் என்று முடிவெடுத்தோம். அப்போது டோண்டு ஸாருக்கு போன் வர.. அப்போதே நினைத்தேன் “வீட்டம்மா கூப்பிடுறாங்க.. கிளம்புறேன்”னு சொல்வார் என்று.. அதேதான்.. ஒரு வார்த்தையைகூட மாற்றாமல் இதையே சொல்லிவிட்டு கிளம்பினார்.. இந்த வயசுல அவர் நிம்மதியா இருக்காருன்னா, அதுக்கு இதுதான் காரணம்னு நான் நினைக்கிறேன்.. வாழ்க அவர் வீட்டுக்காரம்மா..

கில்லியார் புகைத்த சிகரெட் அந்தக் கால மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் அசோகனின் உதடுகளில் புகைந்து கொண்டிருக்குமே அதுபோல, அப்படியொரு நீட்டமாக இருந்தது.. “கல்யாணமாயிருச்சுன்னு சொல்றீங்க.. அப்புறமெதுக்கு இது?” என்ற எனது வேண்டாத அட்வைஸை அவரிடமும் செய்தேன்.. “விடணும்தான் பாக்குறேன்.. முடியல.. முன்னாடி நிறைய.. இப்ப கொஞ்சம் 3 பாக்கெட்டுதான்.. விட்டுறலாம்.. நீங்க ஒண்ணு..” என்று என்னிடமே நீட்டினார். தேவைதான் எனக்கு..!

கில்லியுடன் கொஞ்ச நேரம்.. பாபாவுடன் கொஞ்ச நேரம்.. டுபுக்குவுடன் கொஞ்ச நேரம் என்று பேசியபடியே கடற்கரையை அடைந்தோம். வலைப்பதிவர்களின் தற்போதைய பாராளுமன்ற இடமான, அதே காந்தி தாத்தா சிலையின் பின்புறம் சிமெண்ட் பெஞ்சுகளில் தஞ்சமடைந்தோம்..

பேச்சு சூடு பிடித்தது.. பேச்சுகள் என் அறிவுக்கு அப்பார்ப்பட்டதாக இருந்ததால் கொஞ்ச நேரம் மெளனமாக இருந்து வேடிக்கை பார்த்தேன்..

நான் அதிக கமெண்ட்டுகள் போட்டதாக கில்லியார் குற்றம் சுமத்திய போதுதான் ஏதோ ஒரு சான்ஸ் கிடைச்சதேன்னு வாயைத் தொறந்து, “அது இந்த லக்கிலுக் பய, சுகுணா திவாகர் கல்யாணத்திற்குப் போய்ட்டு வந்து எழுதிய பதிவுல, ஒரு ஜாலிக்காக 100 கமெண்டு போடப் போய் அது தொற்றிவிட்டது..” என்றேன்..

இடையில் திடீரென்று விக்கி எழுந்து தன் பேண்ட், பாக்கெட்டுகளைத் துழாவு, துழாவென்று துழாவினார். அவருடைய பைக்கின் சாவி தொலைந்து போய்விட்டதாகச் சொன்னார். தேடிப் பார்த்தும், தடவிப் பார்த்தும் கிடைக்காததால் ஒருவேளை வண்டியிலேயே விட்டிருக்கலாம் என்று தனக்குத்தானே ஆறுதல்பட்டு அமைதியானார்.

பேச்சு சினிமா பக்கம் திசை திரும்பியது.

டுபுக்கு சினிமா பிரியர் போலிருக்கிறது.. நிறைய ஹிந்தி, தெலுங்கு படங்களைப் பற்றிப் பேசுகிறார்… “தெலுங்கு திரைப்படங்கள் நிறைய வித்தியாசமான திரைக்கதையோடு வருகின்றன..” என்கிறார்.

மலையாள சினிமாவில் பிரியதர்ஷனின் ஆதிக்கம் குறைந்தது பற்றி பாபா பேசினார். “பிரியதர்ஷன் ரீமேக் படங்களாத்தான் பண்றார்.. அவர் சமீபமா எடுத்த மலையாளப் படங்கள் எதுவும் நல்லாப் போகலை..” என்றார்.. அவருடைய சூப்பர்ஹிட் பேவரைட் படமான ‘சித்ரம்’ திண்டுக்கலில் 100 நாட்கள் ஓடியதை நான் சொன்னேன். “மலையாளப் படங்களை தமிழ்நாட்டு பெண்களிடமும் கொண்டு சென்ற படம் ‘சித்ரம்’தான்..” என்றேன். “தலைவர் ரஜினிக்குப் பிறகு எனக்குப் பிடிச்சது மோகன்லால்தான்..” என்றார் பாபா.

“பொம்மரிலு’ படத்தை பார்த்துவிட்டு ‘சந்தோஷ் சுப்பிரமணியத்தை’ பார்க்க முடியவில்லை..” என்றார் டுபுக்கு. “காட்சிக்கு காட்சி அப்படியே டப் செய்திருக்கிறார்..” என்றேன் நான். “அதுவும் நல்லதுதான்.. தமிழுக்கு ஏத்தாப்புல மாத்துறேன்னு எங்கனயாச்சும் கை வைச்சிருந்தா படம் விளங்கிருக்கும்” என்றார் பாபா. பாபாவின் இக்கருத்துக்கு அமோக ஆதரவு கூட்டத்தில். எனக்கும் இது சரியென்றே பட்டது.

‘சிவாஜி’யை ‘தசவாதாரம்’ பீட் செய்துவிடுமா என்று திடீர் கருத்துக் கணிப்பும் கேட்கப்பட்டது. “பிளாக் டிக்கெட் இருக்கின்றவரையில் பீட் செய்தே தீரும். அதனால்தான் அதிகமான தியேட்டர்களில், அதிக பிரிண்ட்டுகள் போடப்பட்டு வருகின்றன..” என்று பாபா புள்ளிவிவரத்தோடு சொன்னார்..

ஆத்மார்த்த நடிகைகளை ரசிப்பதினால் தங்களது இல்லத்தரசிகளிடமிருந்து வரும் எதிர்ப்புகளை எப்படி சமாளிப்பது என்று குடும்பஸ்தர்களான டுபுக்குவும், பாபாவும் பரஸ்பரம் தங்களது வேதனைகளையும், தாங்கள் சந்தித்த சோதனைகளையும் பரிமாறிக் கொண்டார்கள்.. இதை அவர்களே சொல்லித் தொலைத்தால் நல்லது..

அதிலும் இந்த மாதிரியான நேரத்தில் மனைவிமார்கள் அமைதியாக இருந்தாலும், தங்களுடைய வாரிசுகள் எக்குத்தப்பாகப் பேசி மாட்டிவிடுவதைப் பெருமையாகப் பேசிக் கொண்டதைக் கேட்டபோது என் செல்போனில் டேப் செய்யும் வசதி இல்லாததை நினைத்து கடுப்பாகிவிட்டது மனம்.

டுபுக்கு ஸார் சொன்ன ‘அந்த’ மேட்டரை அப்படியே சொல்லலாம்னு பார்த்தா.. அடுத்த தபா வந்தா நம்மளை பார்ப்பாரான்னு சந்தேகமா இருக்கு.. அதுனால வேணாம் விட்டுர்றேன்..

பாபாவும் தன் பங்குக்கு தனது சோகம் ஒன்றை சொன்னார். அதையும் சொல்ல முடியாத சோகம் எனக்கு..

பேச்சு இப்போது வீட்டு வாடகை, நிலம் வாங்குவது என்பதற்கு வர.. “இப்போது சென்னையில் 2000 ரூபாய் வாடகைக்கு ஒரு கக்கூஸ், பாத்ரூம்கூட கிடைக்காது..” என்றேன்.. எல்லாம் ‘அவர்களால்தான்’(தனிப்பதிவு காத்திருக்கு) என்றேன்.

“இந்த வீட்டு வாடகைப் பிரச்சினை பரங்கிமலையிலிருந்து பாஸ்டன்வரைக்கும்கூட இருக்கு..” என்றார் பாபா. அவரும் அதே பிரச்சினையால் தினமும் 3 மணி நேரம் கூடுதலாக டிராவல் செய்வதாகச் சொன்னார்.. என்ன கொடுமை பாபா இது?

பேச்சுக்கள் அப்படியே தொடர்ந்து போய்க் கொண்டிருக்க.. பாபாவுக்கு போனில் அழைப்புகள் வந்தபடியே இருந்தன. டுபுக்குவும் கிளம்ப வேண்டிய சூழல் வந்துவிட்டதை உணர்ந்து “விடைபெறலாம்” என்றார்.

நாளைய சந்திப்புக்கு வரும்படி அவரை அழைத்தார் பாபா. நானும்தான்.. “நேரமிருந்தா வர்றேன்.. ஏற்கெனவே திட்டமிட்ட ஒரு நிகழ்ச்சி இருக்கு..” என்றார் டுபுக்கு. “வரப் பாருங்க” என்றேன்.. ஆனால் நானே மறுநாள் போக முடியவில்லை என்பது ஒரு சோகம்..

நான் அலுவலகத்திற்கு மீண்டும் சென்று பணி செய்ய வேண்டியிருந்ததால் கில்லியாரை ஏற்றிச் செல்ல எனது மெர்சிடிஸ் பென்ஸிற்கு கொடுத்து வைக்கவில்லை. “அடுத்த முறை போலாம் ஸார்..” என்று சொல்ல கில்லியார் நகரப் பேருந்தைத் தேடிப் போக.. இந்தப் பக்கம் பாபா நடந்தே போக முடிவு செய்து விடைபெற்றார். “நாளை சந்திக்கிறேன்” என்று சொல்லிவிட்டு பை சொன்னேன்..

நண்பர் டுபுக்கு மற்றும் விக்கியுடன் பேசியபடியே வண்டிகளை எடுப்பதற்காக மீண்டும் சிட்டி சென்டருக்கு வந்தோம். இப்போதைக்கு இறுதியாக ஒரு முறை டுபுக்குவுடன் பேசி விடைபெற்றேன்.

விக்கி “சாவியை நான் தேடிக் கொள்கிறேன்.. பை..” என்று சொல்லிவிட்டுப் போனார்.

டுபுக்குவும் நண்பர்களுடன் கிளம்பிச் செல்ல.. நானும் அலுவலகம் திரும்ப அவசரமாக இருந்ததால் உடன் திரும்பிவிட்டேன்.

அலுவலகம் திரும்பியவுடன்தான் யோசித்தேன்.. விக்கிக்கு என்ன ஆச்சோ? கூடப் போய் கொஞ்சம் பார்த்திருக்கலாமே என்று..

“அறிவு எப்பவுமே எனக்கு மட்டும் லேட்டாத்தான் வேலை செய்யுது..”

என்ன செய்யறது..?

நண்பர் விக்கி மன்னிப்பாராக..!

71 பதில்கள் to “பதிவர்கள் டுபுக்கு-பாஸ்டன் பாபாவுடன் ஒரு சந்திப்பு”

 1. Anonymous Says:

  {{நான் வழக்கம்போல காதில் விழுந்ததை மட்டும் கேட்டுவிட்டு}}

  செவுட்டுபய காதுலே என்னா மயிரா விழுந்துருக்கபோவுது

 2. Anonymous Says:

  {{நான் வழக்கம்போல காதில் விழுந்ததை மட்டும் கேட்டுவிட்டு}}செவுட்டுபய காதுலே என்னா மயிரா விழுந்துருக்கபோவுது

 3. செந்தழல் ரவி Says:

  🙂 !! $%^$%^

 4. செந்தழல் ரவி Says:

  🙂 !! $%^$%^

 5. மங்களூர் சிவா Says:

  ரொம்ப நல்லா எழுதிருக்கீங்க ஆனா ரொம்ப சின்ன பதிவா எழுதீட்டீங்க
  😦

 6. மங்களூர் சிவா Says:

  ரொம்ப நல்லா எழுதிருக்கீங்க ஆனா ரொம்ப சின்ன பதிவா எழுதீட்டீங்க:(

 7. மங்களூர் சிவா Says:

  /இஸ்ரேலை பத்தி தெரியுது.. குஜராத்ல பகல்லேயே கிராமத்துல லைட் எரியறது நங்கநல்லூர்ல இருந்தே தெரியுது.. பிராங்க்ளினை தவிர மத்த ஜனாதிபதியெல்லாம் வேஸ்ட்டுன்னு தெரியுது.. ஊருக்குள்ளேயே இருக்குற சிட்டி சென்டர் எங்கன்னு தெரியல.. கொடுமை../:)))))))))))

 8. வடுவூர் குமார் Says:

  நன்றாக விவரிச்சிருக்கீங்க.
  உங்க குரும்படத்தை வீட்டில் பிடிக்கச்சொன்னேன் செய்தார்களா? என்று கேட்க மறந்திட்டேன்.
  இன்னும் பழைய தட்டச்சு ஸ்பீடு போகலை போல இருக்கு.

 9. வடுவூர் குமார் Says:

  நன்றாக விவரிச்சிருக்கீங்க.உங்க குரும்படத்தை வீட்டில் பிடிக்கச்சொன்னேன் செய்தார்களா? என்று கேட்க மறந்திட்டேன்.இன்னும் பழைய தட்டச்சு ஸ்பீடு போகலை போல இருக்கு.

 10. அறிவன்#11802717200764379909 Says:

  //இது போன்ற அர்த்தமுள்ள சிறார் வார்த்தைகளை//

  ரொம்ப அர்த்தம்தான் போங்க!இந்த வார்த்தைக்கு எங்க பக்கம் பசங்க விவகாரமான அர்த்தம் சொல்வாய்ங்ய..முதல் இரண்டு எழுத்தை மாத்திப் போடுங்க..(பெயர் வைத்திருக்கும் நண்பர் மன்னிப்பாராக…)

  //டோண்டு ஸார் போன் செய்து “சிட்டி சென்டர் எங்கே இருக்கிறது?” என்றார்.//

  எங்கே இருக்கும்,சிட்டிக்குள்ளதான் இருக்கும் !

  //மாடியில் கால் வைத்தபோதுதான் தெரிந்தது அது Food Court Ground என்று..//

  ஓ,இப்ப இந்தியாவிலும் ஃபுட் கோர்ட்டுகள் வந்தாச்சா????

  //நோட்டம் விட்டபோது டோண்டு ஸார் மட்டும் பளிச்சென தெரிந்தார். //

  ஏன் ஃப்ளோரஸண்ட் பெயிண்ட் அடிச்சுருந்தாரா??

  //சட்டென்று நினைவிற்கு வர மறுக்கிறது..//
  லேட்டானா மட்டும் வந்துறவா போகுது !

  //இவரது பெயர் மட்டும்தான் சட்டென்று நமீதா பெயரைப் போல் மனதில் ஒட்டிக் கொண்டது.//

  நமீதா பெயர் மனசோடு ஒட்டுறதில்லையே,மனசை விட ‘பரந்து’ விரியுறதாச்சே !

  //“அன்னிக்கே நான் போன் பண்ணணும்னு நினைச்சேன்..” என்றார்.. ஏன் பண்ணவில்லை என்பதற்கு காரணம் சொல்வார் என்று எதிர்பார்த்தேன்.. சட்டென்று எஸ்கேப்பாகிவிட்டார்.//
  உபச்சாரமா சொல்றதெல்லாம் தப்பா எடுத்துகிட்டா இப்படித்தான் !

  //அந்தச் சத்தமும் என் காதைத் தொட லேசாகத் திரும்பிப் பார்த்தேன். வழக்கம்போல நம்மாளு தோத்துட்டான்..//
  இப்ப தோப்பான்;அப்புறமா பேப்பே தான் !

  //டோண்டு ஸார், தன்னுடைய வயதை குறைத்துக் காட்ட வேண்டி ஒரு அடையாளத்துக்காக ஹாரிபாட்டர் புத்தகத்தைக் கையோடு கொண்டு வந்திருந்தார்.//
  எப்படி? யாராவது பாக்குறப்போ ஹாரி பாட்டரை முகத்துக்கு முன்னால பிடிச்சுக்குவாரா?

  //எங்கே போனாலும் கையில் ஒரு புத்தகத்தை வைத்திருப்பது இவருடைய வழக்கமாம்.//
  அது சரி,ஆனா படிக்கிறாராமா??

  //எஸ்கலேட்டரில் நான் அதிகம் ஏறியவனில்லை. கொஞ்சம் பயம்தான் இன்னிக்கிவரைக்கும்.//
  ஏன்,அது மாடிக்கு போனதும் மாடில இறங்கிறலாமே?அப்படியே மேலேயே போயிகிட்ட்டேவா இருக்கப் போகுது??????

  //பேச்சுகள் என் அறிவுக்கு அப்பார்ப்பட்டதாக இருந்ததால் கொஞ்ச நேரம் மெளனமாக இருந்து வேடிக்கை பார்த்தேன்..//

  ஏன் ரஷ்ய மொழில பேசுனாங்களா?

  //பேச்சு இப்போது வீட்டு வாடகை, நிலம் வாங்குவது என்பதற்கு வர.. “இப்போது சென்னையில் 2000 ரூபாய் வாடகைக்கு ஒரு கக்கூஸ், பாத்ரூம்கூட கிடைக்காது..” என்றேன்.. ///

  அதெலாம் எதுக்கு வாடகைக்கு எடுக்கனும்? 2 ரூபாய் கொடுத்து போயிட்டு வந்துர வேண்டியதுதானே?

  //கில்லியாரை ஏற்றிச் செல்ல எனது மெர்சிடிஸ் பென்ஸிற்கு கொடுத்து வைக்கவில்லை//
  ஏன்,அதுவும் தொலைஞ்சு போச்சா??

  //“அறிவு எப்பவுமே எனக்கு மட்டும் லேட்டாத்தான் வேலை செய்யுது..”//

  ஏன்,ஸ்டார்ட்டர் போயிடுச்சா? சோக் நல்லாதானே இருக்கு..addtional starter போட்டுப் பாருங்களேன்…

  //என்ன செய்யறது..?//
  ஒண்ணும் செய்ய முடியாது,இந்த கமெண்ட்’டெல்லாம் படிச்சு சிரிங்க….

  🙂

 11. அறிவன்#11802717200764379909 Says:

  //இது போன்ற அர்த்தமுள்ள சிறார் வார்த்தைகளை//ரொம்ப அர்த்தம்தான் போங்க!இந்த வார்த்தைக்கு எங்க பக்கம் பசங்க விவகாரமான அர்த்தம் சொல்வாய்ங்ய..முதல் இரண்டு எழுத்தை மாத்திப் போடுங்க..(பெயர் வைத்திருக்கும் நண்பர் மன்னிப்பாராக…)//டோண்டு ஸார் போன் செய்து “சிட்டி சென்டர் எங்கே இருக்கிறது?” என்றார்.//எங்கே இருக்கும்,சிட்டிக்குள்ளதான் இருக்கும் !//மாடியில் கால் வைத்தபோதுதான் தெரிந்தது அது Food Court Ground என்று..//ஓ,இப்ப இந்தியாவிலும் ஃபுட் கோர்ட்டுகள் வந்தாச்சா????//நோட்டம் விட்டபோது டோண்டு ஸார் மட்டும் பளிச்சென தெரிந்தார். //ஏன் ஃப்ளோரஸண்ட் பெயிண்ட் அடிச்சுருந்தாரா??//சட்டென்று நினைவிற்கு வர மறுக்கிறது..//லேட்டானா மட்டும் வந்துறவா போகுது !//இவரது பெயர் மட்டும்தான் சட்டென்று நமீதா பெயரைப் போல் மனதில் ஒட்டிக் கொண்டது.//நமீதா பெயர் மனசோடு ஒட்டுறதில்லையே,மனசை விட ‘பரந்து’ விரியுறதாச்சே !//“அன்னிக்கே நான் போன் பண்ணணும்னு நினைச்சேன்..” என்றார்.. ஏன் பண்ணவில்லை என்பதற்கு காரணம் சொல்வார் என்று எதிர்பார்த்தேன்.. சட்டென்று எஸ்கேப்பாகிவிட்டார்.//உபச்சாரமா சொல்றதெல்லாம் தப்பா எடுத்துகிட்டா இப்படித்தான் !//அந்தச் சத்தமும் என் காதைத் தொட லேசாகத் திரும்பிப் பார்த்தேன். வழக்கம்போல நம்மாளு தோத்துட்டான்..//இப்ப தோப்பான்;அப்புறமா பேப்பே தான் !//டோண்டு ஸார், தன்னுடைய வயதை குறைத்துக் காட்ட வேண்டி ஒரு அடையாளத்துக்காக ஹாரிபாட்டர் புத்தகத்தைக் கையோடு கொண்டு வந்திருந்தார்.//எப்படி? யாராவது பாக்குறப்போ ஹாரி பாட்டரை முகத்துக்கு முன்னால பிடிச்சுக்குவாரா?//எங்கே போனாலும் கையில் ஒரு புத்தகத்தை வைத்திருப்பது இவருடைய வழக்கமாம்.//அது சரி,ஆனா படிக்கிறாராமா??//எஸ்கலேட்டரில் நான் அதிகம் ஏறியவனில்லை. கொஞ்சம் பயம்தான் இன்னிக்கிவரைக்கும்.//ஏன்,அது மாடிக்கு போனதும் மாடில இறங்கிறலாமே?அப்படியே மேலேயே போயிகிட்ட்டேவா இருக்கப் போகுது??????//பேச்சுகள் என் அறிவுக்கு அப்பார்ப்பட்டதாக இருந்ததால் கொஞ்ச நேரம் மெளனமாக இருந்து வேடிக்கை பார்த்தேன்..//ஏன் ரஷ்ய மொழில பேசுனாங்களா?//பேச்சு இப்போது வீட்டு வாடகை, நிலம் வாங்குவது என்பதற்கு வர.. “இப்போது சென்னையில் 2000 ரூபாய் வாடகைக்கு ஒரு கக்கூஸ், பாத்ரூம்கூட கிடைக்காது..” என்றேன்.. ///அதெலாம் எதுக்கு வாடகைக்கு எடுக்கனும்? 2 ரூபாய் கொடுத்து போயிட்டு வந்துர வேண்டியதுதானே?//கில்லியாரை ஏற்றிச் செல்ல எனது மெர்சிடிஸ் பென்ஸிற்கு கொடுத்து வைக்கவில்லை//ஏன்,அதுவும் தொலைஞ்சு போச்சா??//“அறிவு எப்பவுமே எனக்கு மட்டும் லேட்டாத்தான் வேலை செய்யுது..”//ஏன்,ஸ்டார்ட்டர் போயிடுச்சா? சோக் நல்லாதானே இருக்கு..addtional starter போட்டுப் பாருங்களேன்…//என்ன செய்யறது..?//ஒண்ணும் செய்ய முடியாது,இந்த கமெண்ட்’டெல்லாம் படிச்சு சிரிங்க….:)

 12. தஞ்சாவூரான் Says:

  அடடா…மிஸ் பன்ணிட்டனே?
  இந்த ஃப்ளூ வந்து அவங்களை (என்னைக்??) காப்பாத்திடுச்சே? :))

 13. தஞ்சாவூரான் Says:

  அடடா…மிஸ் பன்ணிட்டனே?இந்த ஃப்ளூ வந்து அவங்களை (என்னைக்??) காப்பாத்திடுச்சே? :))

 14. வால்பையன் Says:

  //[“இஸ்ரேலை பத்தி தெரியுது.. குஜராத்ல பகல்லேயே கிராமத்துல லைட் எரியறது நங்கநல்லூர்ல இருந்தே தெரியுது.. பிராங்க்ளினை தவிர மத்த ஜனாதிபதியெல்லாம் வேஸ்ட்டுன்னு தெரியுது.. ஊருக்குள்ளேயே இருக்குற சிட்டி சென்டர் எங்கன்னு தெரியல.. கொடுமை..”] //

  ரிப்பிட்டோய்ய்ய்ய்யி

  வால்பையன்

 15. வால்பையன் Says:

  //[“இஸ்ரேலை பத்தி தெரியுது.. குஜராத்ல பகல்லேயே கிராமத்துல லைட் எரியறது நங்கநல்லூர்ல இருந்தே தெரியுது.. பிராங்க்ளினை தவிர மத்த ஜனாதிபதியெல்லாம் வேஸ்ட்டுன்னு தெரியுது.. ஊருக்குள்ளேயே இருக்குற சிட்டி சென்டர் எங்கன்னு தெரியல.. கொடுமை..”] //ரிப்பிட்டோய்ய்ய்ய்யி வால்பையன்

 16. தமிழ்மணி Says:

  //”இஸ்ரேலை பத்தி தெரியுது.. குஜராத்ல பகல்லேயே கிராமத்துல லைட் எரியறது நங்கநல்லூர்ல இருந்தே தெரியுது.. பிராங்க்ளினை தவிர மத்த ஜனாதிபதியெல்லாம் வேஸ்ட்டுன்னு தெரியுது.. ஊருக்குள்ளேயே இருக்குற சிட்டி சென்டர் எங்கன்னு தெரியல.. கொடுமை..”] “//

  டோண்டுவும் ரசித்திருக்கக்கூடிய வரிகள்!
  :-))

 17. தமிழ்மணி Says:

  //”இஸ்ரேலை பத்தி தெரியுது.. குஜராத்ல பகல்லேயே கிராமத்துல லைட் எரியறது நங்கநல்லூர்ல இருந்தே தெரியுது.. பிராங்க்ளினை தவிர மத்த ஜனாதிபதியெல்லாம் வேஸ்ட்டுன்னு தெரியுது.. ஊருக்குள்ளேயே இருக்குற சிட்டி சென்டர் எங்கன்னு தெரியல.. கொடுமை..”] “//டோண்டுவும் ரசித்திருக்கக்கூடிய வரிகள்!:-))

 18. Anonymous Says:

  ///Anonymous said…
  {{நான் வழக்கம்போல காதில் விழுந்ததை மட்டும் கேட்டுவிட்டு}}

  செவுட்டுபய காதுலே என்னா மயிரா விழுந்துருக்கபோவுது//

  இது மாதிரி உள்ள‌தை தடுக்கலாமே!

 19. Anonymous Says:

  ///Anonymous said… {{நான் வழக்கம்போல காதில் விழுந்ததை மட்டும் கேட்டுவிட்டு}}செவுட்டுபய காதுலே என்னா மயிரா விழுந்துருக்கபோவுது//இது மாதிரி உள்ள‌தை தடுக்கலாமே!

 20. Anonymous Says:

  >>>{{நான் வழக்கம்போல காதில் விழுந்ததை மட்டும் கேட்டுவிட்டு}}

  செவுட்டுபய காதுலே என்னா மயிரா விழுந்துருக்கபோவுது
  <<< அனானி,ஒருவரின் உடல் குறையைப் பகடி செய்வது விபச்சாரம் செய்வதை விட கேவலமானது !

 21. Anonymous Says:

  >>>{{நான் வழக்கம்போல காதில் விழுந்ததை மட்டும் கேட்டுவிட்டு}}செவுட்டுபய காதுலே என்னா மயிரா விழுந்துருக்கபோவுது<<<அனானி,ஒருவரின் உடல் குறையைப் பகடி செய்வது விபச்சாரம் செய்வதை விட கேவலமானது !

 22. Anonymous Says:

  //நான் வலையுலகில் நுழைந்த காலக்கட்டத்தில் வலைப்பதிவர்களின் பெயர்கள் சற்று காமெடியாகவும், சற்று வில்லங்கமாகவும் இருக்கும் என்பது தெரியும் என்றாலும், இந்த அளவுக்கு இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. காரணம் ‘டுபுக்கு’.//

  நான் கூட முதலில் அந்த பதிவைப் பார்த்தபோது முதல் இரண்டு எழுத்துக்களை மாற்றிப் படித்துவிட்டு என்ன பேரு வில்லங்கமாக இருக்குதேன்னு நெனச்சேன். பிறகு இந்த பெயரைப் பார்க்கும்போதெல்லாம் அந்த வில்லங்கமான “பு***” பேரே மனசுல வந்துத் தொலையுது. உண்மைத் தமிழன் சார் மாதிரி குழப்பம் வராத பெயரை எல்லோரும் வைத்துக்கொள்ள வேண்டும்.

  — உண்மையின் ரசிகை

 23. Anonymous Says:

  //நான் வலையுலகில் நுழைந்த காலக்கட்டத்தில் வலைப்பதிவர்களின் பெயர்கள் சற்று காமெடியாகவும், சற்று வில்லங்கமாகவும் இருக்கும் என்பது தெரியும் என்றாலும், இந்த அளவுக்கு இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. காரணம் ‘டுபுக்கு’.//நான் கூட முதலில் அந்த பதிவைப் பார்த்தபோது முதல் இரண்டு எழுத்துக்களை மாற்றிப் படித்துவிட்டு என்ன பேரு வில்லங்கமாக இருக்குதேன்னு நெனச்சேன். பிறகு இந்த பெயரைப் பார்க்கும்போதெல்லாம் அந்த வில்லங்கமான “பு***” பேரே மனசுல வந்துத் தொலையுது. உண்மைத் தமிழன் சார் மாதிரி குழப்பம் வராத பெயரை எல்லோரும் வைத்துக்கொள்ள வேண்டும்.– உண்மையின் ரசிகை

 24. நித்யகுமாரன் Says:

  சாரே…

  உங்களின் பலமே உங்கள் எழுத்துதான். இன்னும் சிறப்பாக எழுதி உண்மையில் ஒரு மெர்சிடிஸ் பென்ஸ் வாங்க என் வாழ்த்துக்கள்

  அன்பு நித்யகுமாரன்

 25. நித்யகுமாரன் Says:

  சாரே…உங்களின் பலமே உங்கள் எழுத்துதான். இன்னும் சிறப்பாக எழுதி உண்மையில் ஒரு மெர்சிடிஸ் பென்ஸ் வாங்க என் வாழ்த்துக்கள்அன்பு நித்யகுமாரன்

 26. dondu(#11168674346665545885) Says:

  //”இஸ்ரேலை பத்தி தெரியுது.. குஜராத்ல பகல்லேயே கிராமத்துல லைட் எரியறது நங்கநல்லூர்ல இருந்தே தெரியுது.. பிராங்க்ளினை தவிர மத்த ஜனாதிபதியெல்லாம் வேஸ்ட்டுன்னு தெரியுது.. ஊருக்குள்ளேயே இருக்குற சிட்டி சென்டர் எங்கன்னு தெரியல.. கொடுமை..”] “//

  டோண்டுவும் ரசித்திருக்கக்கூடிய வரிகள்!
  :-))

  100% அக்மார்க் உண்மை.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

 27. dondu(#11168674346665545885) Says:

  //”இஸ்ரேலை பத்தி தெரியுது.. குஜராத்ல பகல்லேயே கிராமத்துல லைட் எரியறது நங்கநல்லூர்ல இருந்தே தெரியுது.. பிராங்க்ளினை தவிர மத்த ஜனாதிபதியெல்லாம் வேஸ்ட்டுன்னு தெரியுது.. ஊருக்குள்ளேயே இருக்குற சிட்டி சென்டர் எங்கன்னு தெரியல.. கொடுமை..”] “//டோண்டுவும் ரசித்திருக்கக்கூடிய வரிகள்!:-))100% அக்மார்க் உண்மை.அன்புடன்,டோண்டு ராகவன்

 28. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///Anonymous said…
  {{நான் வழக்கம்போல காதில் விழுந்ததை மட்டும் கேட்டுவிட்டு}}
  செவுட்டுபய காதுலே என்னா மயிரா விழுந்துருக்கப் போவுது.///

  முருகா நீயே துணை..

 29. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///Anonymous said… {{நான் வழக்கம்போல காதில் விழுந்ததை மட்டும் கேட்டுவிட்டு}}செவுட்டுபய காதுலே என்னா மயிரா விழுந்துருக்கப் போவுது.///முருகா நீயே துணை..

 30. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //செந்தழல் ரவி said…
  :)!! $%^$%//

  இன்னா கண்ணு சிம்பலு..? புரியலே..

 31. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //செந்தழல் ரவி said… :)!! $%^$%//இன்னா கண்ணு சிம்பலு..? புரியலே..

 32. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //மங்களூர் சிவா said…
  ரொம்ப நல்லா எழுதிருக்கீங்க.. ஆனா ரொம்ப சின்ன பதிவா எழுதீட்டீங்க:(//

  உள்குத்தோட வாழ்த்தா..? ஏத்துக்குறேன்..

 33. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //மங்களூர் சிவா said… ரொம்ப நல்லா எழுதிருக்கீங்க.. ஆனா ரொம்ப சின்ன பதிவா எழுதீட்டீங்க:(//உள்குத்தோட வாழ்த்தா..? ஏத்துக்குறேன்..

 34. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///மங்களூர் சிவா said…
  /இஸ்ரேலை பத்தி தெரியுது.. குஜராத்ல பகல்லேயே கிராமத்துல லைட் எரியறது நங்கநல்லூர்ல இருந்தே தெரியுது.. பிராங்க்ளினை தவிர மத்த ஜனாதிபதியெல்லாம் வேஸ்ட்டுன்னு தெரியுது.. ஊருக்குள்ளேயே இருக்குற சிட்டி சென்டர் எங்கன்னு தெரியல.. கொடுமை../
  :)))))))))))///

  அதான.. போட்டுக் குடுக்கலேன்னா தூக்கம் வராதே..?

 35. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///மங்களூர் சிவா said… /இஸ்ரேலை பத்தி தெரியுது.. குஜராத்ல பகல்லேயே கிராமத்துல லைட் எரியறது நங்கநல்லூர்ல இருந்தே தெரியுது.. பிராங்க்ளினை தவிர மத்த ஜனாதிபதியெல்லாம் வேஸ்ட்டுன்னு தெரியுது.. ஊருக்குள்ளேயே இருக்குற சிட்டி சென்டர் எங்கன்னு தெரியல.. கொடுமை../:)))))))))))///அதான.. போட்டுக் குடுக்கலேன்னா தூக்கம் வராதே..?

 36. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //வடுவூர் குமார் said…
  நன்றாக விவரிச்சிருக்கீங்க.//

  மிக்க நன்றி குமார் ஸார்..

  //உங்க குரும்படத்தை வீட்டில் பிடிக்கச்சொன்னேன் செய்தார்களா? என்று கேட்க மறந்திட்டேன்.//

  கேளுங்க.. நானும் கூடிய சீக்கிரம் வலைல போட்டிருவேன்..

  //இன்னும் பழைய தட்டச்சு ஸ்பீடு போகலை போல இருக்கு.//

  இல்லியே.. நான் 8 வருஷமா ஒரே தட்டச்சு முறைதான்.. மாறவே மாறாது..

 37. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //வடுவூர் குமார் said… நன்றாக விவரிச்சிருக்கீங்க.//மிக்க நன்றி குமார் ஸார்..//உங்க குரும்படத்தை வீட்டில் பிடிக்கச்சொன்னேன் செய்தார்களா? என்று கேட்க மறந்திட்டேன்.//கேளுங்க.. நானும் கூடிய சீக்கிரம் வலைல போட்டிருவேன்..//இன்னும் பழைய தட்டச்சு ஸ்பீடு போகலை போல இருக்கு.//இல்லியே.. நான் 8 வருஷமா ஒரே தட்டச்சு முறைதான்.. மாறவே மாறாது..

 38. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //தஞ்சாவூரான் said…
  அடடா… மிஸ் பன்ணிட்டனே? இந்த ஃப்ளூ வந்து அவங்களை (என்னைக்??) காப்பாத்திடுச்சே?:))//

  அச்சச்சோ.. அவரு வரும்போதுதான் ப்ளூ வரணுமா? இப்ப சரியாயிருச்சுங்களா..?

 39. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //தஞ்சாவூரான் said… அடடா… மிஸ் பன்ணிட்டனே? இந்த ஃப்ளூ வந்து அவங்களை (என்னைக்??) காப்பாத்திடுச்சே?:))//அச்சச்சோ.. அவரு வரும்போதுதான் ப்ளூ வரணுமா? இப்ப சரியாயிருச்சுங்களா..?

 40. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //வால்பையன் said…
  //[“இஸ்ரேலை பத்தி தெரியுது.. குஜராத்ல பகல்லேயே கிராமத்துல லைட் எரியறது நங்கநல்லூர்ல இருந்தே தெரியுது.. பிராங்க்ளினை தவிர மத்த ஜனாதிபதியெல்லாம் வேஸ்ட்டுன்னு தெரியுது.. ஊருக்குள்ளேயே இருக்குற சிட்டி சென்டர் எங்கன்னு தெரியல.. கொடுமை..”] //
  ரிப்பிட்டோய்ய்ய்ய்யி..//

  வால்பையன் இதெல்லாம் நியாயமா? நண்பருக்கு இப்படி துரோகம் செய்யலாமா? சமயம் கிடைக்கும்போது அடிச்சு ஆடுறீங்க.. ஆடுங்க.. ஆடுங்க..

 41. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //வால்பையன் said… //[“இஸ்ரேலை பத்தி தெரியுது.. குஜராத்ல பகல்லேயே கிராமத்துல லைட் எரியறது நங்கநல்லூர்ல இருந்தே தெரியுது.. பிராங்க்ளினை தவிர மத்த ஜனாதிபதியெல்லாம் வேஸ்ட்டுன்னு தெரியுது.. ஊருக்குள்ளேயே இருக்குற சிட்டி சென்டர் எங்கன்னு தெரியல.. கொடுமை..”] //ரிப்பிட்டோய்ய்ய்ய்யி..//வால்பையன் இதெல்லாம் நியாயமா? நண்பருக்கு இப்படி துரோகம் செய்யலாமா? சமயம் கிடைக்கும்போது அடிச்சு ஆடுறீங்க.. ஆடுங்க.. ஆடுங்க..

 42. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///தமிழ்மணி said…
  //”இஸ்ரேலை பத்தி தெரியுது.. குஜராத்ல பகல்லேயே கிராமத்துல லைட் எரியறது நங்கநல்லூர்ல இருந்தே தெரியுது.. பிராங்க்ளினை தவிர மத்த ஜனாதிபதியெல்லாம் வேஸ்ட்டுன்னு தெரியுது.. ஊருக்குள்ளேயே இருக்குற சிட்டி சென்டர் எங்கன்னு தெரியல.. கொடுமை..”] “//
  டோண்டுவும் ரசித்திருக்கக்கூடிய வரிகள்!:-))///

  ரசிக்கத்தான் வேண்டும்.. ரசிப்பார் என்று நினைத்துத்தானே எழுதினேன்..

  முதல் வருகை என்று நினைக்கிறேன் தமிழ்மணி..

  வருகைக்கு நன்றிகள்..

 43. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///தமிழ்மணி said… //”இஸ்ரேலை பத்தி தெரியுது.. குஜராத்ல பகல்லேயே கிராமத்துல லைட் எரியறது நங்கநல்லூர்ல இருந்தே தெரியுது.. பிராங்க்ளினை தவிர மத்த ஜனாதிபதியெல்லாம் வேஸ்ட்டுன்னு தெரியுது.. ஊருக்குள்ளேயே இருக்குற சிட்டி சென்டர் எங்கன்னு தெரியல.. கொடுமை..”] “//டோண்டுவும் ரசித்திருக்கக்கூடிய வரிகள்!:-))///ரசிக்கத்தான் வேண்டும்.. ரசிப்பார் என்று நினைத்துத்தானே எழுதினேன்.. முதல் வருகை என்று நினைக்கிறேன் தமிழ்மணி.. வருகைக்கு நன்றிகள்..

 44. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///Anonymous said…
  {{நான் வழக்கம்போல காதில் விழுந்ததை மட்டும் கேட்டுவிட்டு}}
  செவுட்டுபய காதுலே என்னா மயிரா விழுந்துருக்கபோவுது//
  இது மாதிரி உள்ள‌தை தடுக்கலாமே!///

  தடுத்திருக்கலாம். ஆனால் ‘பைத்தியம்’ இன்னும் தெளிவாகவில்லை என்பது எல்லாருக்கும் தெரியணுமே? அதுக்குத்தான்..

 45. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///Anonymous said… {{நான் வழக்கம்போல காதில் விழுந்ததை மட்டும் கேட்டுவிட்டு}}செவுட்டுபய காதுலே என்னா மயிரா விழுந்துருக்கபோவுது//இது மாதிரி உள்ள‌தை தடுக்கலாமே!///தடுத்திருக்கலாம். ஆனால் ‘பைத்தியம்’ இன்னும் தெளிவாகவில்லை என்பது எல்லாருக்கும் தெரியணுமே? அதுக்குத்தான்..

 46. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///Anonymous said…
  {{நான் வழக்கம்போல காதில் விழுந்ததை மட்டும் கேட்டுவிட்டு}}
  செவுட்டுபய காதுலே என்னா மயிரா விழுந்துருக்கபோவுது<<<
  அனானி, ஒருவரின் உடல் குறையைப் பகடி செய்வது விபச்சாரம் செய்வதைவிட கேவலமானது!///

  இரண்டாவது அனானி, முதல் அனானி இந்தக் கேவலத்துக்கெல்லாம் அப்பாற்பட்டவர்.. வேறென்ன எழுதுவார்..?

 47. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///Anonymous said… {{நான் வழக்கம்போல காதில் விழுந்ததை மட்டும் கேட்டுவிட்டு}}செவுட்டுபய காதுலே என்னா மயிரா விழுந்துருக்கபோவுது<<<அனானி, ஒருவரின் உடல் குறையைப் பகடி செய்வது விபச்சாரம் செய்வதைவிட கேவலமானது!///இரண்டாவது அனானி, முதல் அனானி இந்தக் கேவலத்துக்கெல்லாம் அப்பாற்பட்டவர்.. வேறென்ன எழுதுவார்..?

 48. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///Anonymous said…
  நான் கூட முதலில் அந்த பதிவைப் பார்த்தபோது முதல் இரண்டு எழுத்துக்களை மாற்றிப் படித்துவிட்டு என்ன பேரு வில்லங்கமாக இருக்குதேன்னு நெனச்சேன். பிறகு இந்த பெயரைப் பார்க்கும்போதெல்லாம் அந்த வில்லங்கமான “பு***” பேரே மனசுல வந்துத் தொலையுது. உண்மைத் தமிழன் சார் மாதிரி குழப்பம் வராத பெயரை எல்லோரும் வைத்துக்கொள்ள வேண்டும்.
  — உண்மையின் ரசிகை///

  உண்மையின் ரசிகன் என்றல்லாவா இருக்க வேண்டும்..

 49. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///Anonymous said… நான் கூட முதலில் அந்த பதிவைப் பார்த்தபோது முதல் இரண்டு எழுத்துக்களை மாற்றிப் படித்துவிட்டு என்ன பேரு வில்லங்கமாக இருக்குதேன்னு நெனச்சேன். பிறகு இந்த பெயரைப் பார்க்கும்போதெல்லாம் அந்த வில்லங்கமான “பு***” பேரே மனசுல வந்துத் தொலையுது. உண்மைத் தமிழன் சார் மாதிரி குழப்பம் வராத பெயரை எல்லோரும் வைத்துக்கொள்ள வேண்டும்.– உண்மையின் ரசிகை///உண்மையின் ரசிகன் என்றல்லாவா இருக்க வேண்டும்..

 50. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///நித்யகுமாரன் said…
  சாரே… உங்களின் பலமே உங்கள் எழுத்துதான். இன்னும் சிறப்பாக எழுதி உண்மையில் ஒரு மெர்சிடிஸ் பென்ஸ் வாங்க என் வாழ்த்துக்கள்.
  அன்பு நித்யகுமாரன்///

  அன்பு நித்யா.. உனது வாழ்த்து பலித்தால் முதல் டிரிப் உன்னோடுதான்..

 51. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///நித்யகுமாரன் said… சாரே… உங்களின் பலமே உங்கள் எழுத்துதான். இன்னும் சிறப்பாக எழுதி உண்மையில் ஒரு மெர்சிடிஸ் பென்ஸ் வாங்க என் வாழ்த்துக்கள்.அன்பு நித்யகுமாரன்///அன்பு நித்யா.. உனது வாழ்த்து பலித்தால் முதல் டிரிப் உன்னோடுதான்..

 52. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///dondu(#11168674346665545885) said…
  //”இஸ்ரேலை பத்தி தெரியுது.. குஜராத்ல பகல்லேயே கிராமத்துல லைட் எரியறது நங்கநல்லூர்ல இருந்தே தெரியுது.. பிராங்க்ளினை தவிர மத்த ஜனாதிபதியெல்லாம் வேஸ்ட்டுன்னு தெரியுது.. ஊருக்குள்ளேயே இருக்குற சிட்டி சென்டர் எங்கன்னு தெரியல.. கொடுமை..”]
  டோண்டுவும் ரசித்திருக்கக்கூடிய வரிகள்!:-))//
  100% அக்மார்க் உண்மை.
  அன்புடன்,
  டோண்டு ராகவன்///

  நன்றி டோண்டு ஸார்.. அதே பாராவில் உங்களுக்கு ஒரு வாய்ப்பும் கொடுத்திருந்தேன்.. திருப்பாமைக்கு மற்றுமொரு நன்றி..

 53. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///dondu(#11168674346665545885) said… //”இஸ்ரேலை பத்தி தெரியுது.. குஜராத்ல பகல்லேயே கிராமத்துல லைட் எரியறது நங்கநல்லூர்ல இருந்தே தெரியுது.. பிராங்க்ளினை தவிர மத்த ஜனாதிபதியெல்லாம் வேஸ்ட்டுன்னு தெரியுது.. ஊருக்குள்ளேயே இருக்குற சிட்டி சென்டர் எங்கன்னு தெரியல.. கொடுமை..”]டோண்டுவும் ரசித்திருக்கக்கூடிய வரிகள்!:-))//100% அக்மார்க் உண்மை.அன்புடன்,டோண்டு ராகவன்///நன்றி டோண்டு ஸார்.. அதே பாராவில் உங்களுக்கு ஒரு வாய்ப்பும் கொடுத்திருந்தேன்.. திருப்பாமைக்கு மற்றுமொரு நன்றி..

 54. துளசி கோபால் Says:

  இந்த ஐநாக்ஸ் செண்டர் எங்கே இருக்குன்னு சொல்லுங்க.
  எனக்கும் எந்த இடமுன்னு புரியலையே…..

  மவுண்ட் ரோடுலே இருக்கா?

 55. துளசி கோபால் Says:

  இந்த ஐநாக்ஸ் செண்டர் எங்கே இருக்குன்னு சொல்லுங்க.எனக்கும் எந்த இடமுன்னு புரியலையே…..மவுண்ட் ரோடுலே இருக்கா?

 56. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///அறிவன்#11802717200764379909 said…
  //இது போன்ற அர்த்தமுள்ள சிறார் வார்த்தைகளை//
  ரொம்ப அர்த்தம்தான் போங்க! இந்த வார்த்தைக்கு எங்க பக்கம் பசங்க விவகாரமான அர்த்தம் சொல்வாய்ங்ய..முதல் இரண்டு எழுத்தை மாத்திப் போடுங்க..(பெயர் வைத்திருக்கும் நண்பர் மன்னிப்பாராக…)///

  எனக்கும் தெரிந்ததுதான்.. ஆனால் வயதுக்கு வந்த பின்புதான் அது தெரியும்.. ஸோ.. தூக்கிப் போட வேண்டியதுதான்..

  ///டோண்டு ஸார் போன் செய்து “சிட்டி சென்டர் எங்கே இருக்கிறது?” என்றார்.//
  எங்கே இருக்கும், சிட்டிக்குள்ளதான் இருக்கும்!///

  சிட்டுக்குள்ள அடிக்கடி ரவுண்ட்ஸ் வர்றதுக்கு அவர் ஒண்ணும் வேலை வெட்டி இல்லாதவருமல்ல.. ஊர் சுற்றிப் பையனும் அல்ல.. பொறுப்பான குடும்பத் தலைவர்..

  ///மாடியில் கால் வைத்தபோதுதான் தெரிந்தது அது Food Court Ground என்று..//
  ஓ, இப்ப இந்தியாவிலும் ஃபுட் கோர்ட்டுகள் வந்தாச்சா????///

  பின்ன.. வந்து பாருங்க.. பணம், காசு இல்லேன்னா தெருவுல செருப்புத் தைக்கிறவன்தான் அழுதுகிட்டிருக்கான்.. ஆனா அங்க போய் பார்த்தா.. பணத்தை எங்கதான் வைச்சிருக்காங்கன்னு தெரியல.. விலையை எவ்வளவு உயர்த்தினாலும் அள்ளுறாங்க..

  ///நோட்டம் விட்டபோது டோண்டு ஸார் மட்டும் பளிச்சென தெரிந்தார். //
  ஏன் ஃப்ளோரஸண்ட் பெயிண்ட் அடிச்சுருந்தாரா??///

  வயதான அவரது தலைமுடி காட்டிக் கொடுத்தது..

  ///சட்டென்று நினைவிற்கு வர மறுக்கிறது..//
  லேட்டானா மட்டும் வந்துறவா போகுது !///

  இன்னும் வரவில்லை அறிவன்..

  ///இவரது பெயர் மட்டும்தான் சட்டென்று நமீதா பெயரைப் போல் மனதில் ஒட்டிக் கொண்டது.//
  நமீதா பெயர் மனசோடு ஒட்டுறதில்லையே, மனசை விட ‘பரந்து’ விரியுறதாச்சே!///

  நீங்களுமா அறிவன்..?

  ///“அன்னிக்கே நான் போன் பண்ணணும்னு நினைச்சேன்..” என்றார்.. ஏன் பண்ணவில்லை என்பதற்கு காரணம் சொல்வார் என்று எதிர்பார்த்தேன்.. சட்டென்று எஸ்கேப்பாகிவிட்டார்.//
  உபச்சாரமா சொல்றதெல்லாம் தப்பா எடுத்துகிட்டா இப்படித்தான்!///

  ச்சே.. அப்படியெல்லாம் இருக்காது.. அந்த நேரம் நினைச்சிருப்பாரு.. அப்புறம் மறந்திருப்பாரு..

  ///அந்தச் சத்தமும் என் காதைத் தொட லேசாகத் திரும்பிப் பார்த்தேன். வழக்கம்போல நம்மாளு தோத்துட்டான்..//
  இப்ப தோப்பான்; அப்புறமா பேப்பேதான்!///

  உலகம் முழுக்க எல்லாப் பயலுகளும் ஒரே மாதிரிதான் இருக்கானுக ஸார்.. இல்லையா..?

  ///டோண்டு ஸார், தன்னுடைய வயதை குறைத்துக் காட்ட வேண்டி ஒரு அடையாளத்துக்காக ஹாரிபாட்டர் புத்தகத்தைக் கையோடு கொண்டு வந்திருந்தார்.//
  எப்படி? யாராவது பாக்குறப்போ ஹாரி பாட்டரை முகத்துக்கு முன்னால பிடிச்சுக்குவாரா?///

  இல்லை.. நான் ஹாரிபாட்டர் படிக்கிற சின்னப் பையன் மனசுள்ளவன்னு காட்டுறதுக்காக கொண்டு வந்திருக்கலாம்..

  ///எங்கே போனாலும் கையில் ஒரு புத்தகத்தை வைத்திருப்பது இவருடைய வழக்கமாம்.//
  அது சரி, ஆனா படிக்கிறாராமா??///

  பின்ன.. படிக்கிறதுக்குக்கூட நேரமில்லாம உழைச்சுக்கிட்டு இருக்காருல்ல..

  ///எஸ்கலேட்டரில் நான் அதிகம் ஏறியவனில்லை. கொஞ்சம் பயம்தான் இன்னிக்கிவரைக்கும்.//
  ஏன், அது மாடிக்கு போனதும் மாடில இறங்கிறலாமே? அப்படியே மேலேயே போயிகிட்ட்டேவா இருக்கப் போகுது??????///

  துவக்கத்துல காலைத் தூக்கி வைக்கி”றது இருக்கு பாருங்க.. அதை நினைச்சாத்தான் கொஞ்சம் பயமா இருக்கு..

  ///பேச்சுகள் என் அறிவுக்கு அப்பார்ப்பட்டதாக இருந்ததால் கொஞ்ச நேரம் மெளனமாக இருந்து வேடிக்கை பார்த்தேன்..//
  ஏன் ரஷ்ய மொழில பேசுனாங்களா?///

  லோக்கல் பாஷை பேசினால சமயத்துல கேக்காது இதுல ரஷ்ய மொழி வேறய்யா..?.

  ///பேச்சு இப்போது வீட்டு வாடகை, நிலம் வாங்குவது என்பதற்கு வர.. “இப்போது சென்னையில் 2000 ரூபாய் வாடகைக்கு ஒரு கக்கூஸ், பாத்ரூம்கூட கிடைக்காது..” என்றேன்.. ///
  அதெலாம் எதுக்கு வாடகைக்கு எடுக்கனும்? 2 ரூபாய் கொடுத்து போயிட்டு வந்துர வேண்டியதுதானே?///

  வீட்டுக்கும், அதுக்கும் தூரமாச்சே.. ஆட்டோ காசு யார் தருவா..?

  ///கில்லியாரை ஏற்றிச் செல்ல எனது மெர்சிடிஸ் பென்ஸிற்கு கொடுத்து வைக்கவில்லை//
  ஏன், அதுவும் தொலைஞ்சு போச்சா??///

  எனக்கு அலுவலகம் திரும்ப வேண்டியிருந்ததால் வேறு ரூட் வழியாக செல்கிறேன்.. என்று சொல்லி விடைபெற்றேன்..

  ///“அறிவு எப்பவுமே எனக்கு மட்டும் லேட்டாத்தான் வேலை செய்யுது..”//
  ஏன், ஸ்டார்ட்டர் போயிடுச்சா? சோக் நல்லாதானே இருக்கு.. addtional starter போட்டுப் பாருங்களேன்…///

  அடிஷனல் ஸ்டார்ட்டர் இப்போதைக்கு கிடைக்காது போல் தெரிகிறது.. அதுவரையில் இருப்பதை வைத்துத்தான் ஓட்ட வேண்டும்.

  ///என்ன செய்யறது..?//
  ஒண்ணும் செய்ய முடியாது, இந்த கமெண்ட்’டெல்லாம் படிச்சு சிரிங்க….:)///

  படிச்சாச்சு.. சிரிச்சாச்சு.. பதிலும் போட்டாச்சு..

  மிக்க நன்றிகள் அறிவன் ஸார்..

 57. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///அறிவன்#11802717200764379909 said… //இது போன்ற அர்த்தமுள்ள சிறார் வார்த்தைகளை//ரொம்ப அர்த்தம்தான் போங்க! இந்த வார்த்தைக்கு எங்க பக்கம் பசங்க விவகாரமான அர்த்தம் சொல்வாய்ங்ய..முதல் இரண்டு எழுத்தை மாத்திப் போடுங்க..(பெயர் வைத்திருக்கும் நண்பர் மன்னிப்பாராக…)///எனக்கும் தெரிந்ததுதான்.. ஆனால் வயதுக்கு வந்த பின்புதான் அது தெரியும்.. ஸோ.. தூக்கிப் போட வேண்டியதுதான்..///டோண்டு ஸார் போன் செய்து “சிட்டி சென்டர் எங்கே இருக்கிறது?” என்றார்.//எங்கே இருக்கும், சிட்டிக்குள்ளதான் இருக்கும்!///சிட்டுக்குள்ள அடிக்கடி ரவுண்ட்ஸ் வர்றதுக்கு அவர் ஒண்ணும் வேலை வெட்டி இல்லாதவருமல்ல.. ஊர் சுற்றிப் பையனும் அல்ல.. பொறுப்பான குடும்பத் தலைவர்..///மாடியில் கால் வைத்தபோதுதான் தெரிந்தது அது Food Court Ground என்று..//ஓ, இப்ப இந்தியாவிலும் ஃபுட் கோர்ட்டுகள் வந்தாச்சா????///பின்ன.. வந்து பாருங்க.. பணம், காசு இல்லேன்னா தெருவுல செருப்புத் தைக்கிறவன்தான் அழுதுகிட்டிருக்கான்.. ஆனா அங்க போய் பார்த்தா.. பணத்தை எங்கதான் வைச்சிருக்காங்கன்னு தெரியல.. விலையை எவ்வளவு உயர்த்தினாலும் அள்ளுறாங்க..///நோட்டம் விட்டபோது டோண்டு ஸார் மட்டும் பளிச்சென தெரிந்தார். //ஏன் ஃப்ளோரஸண்ட் பெயிண்ட் அடிச்சுருந்தாரா??///வயதான அவரது தலைமுடி காட்டிக் கொடுத்தது..///சட்டென்று நினைவிற்கு வர மறுக்கிறது..//லேட்டானா மட்டும் வந்துறவா போகுது !///இன்னும் வரவில்லை அறிவன்..///இவரது பெயர் மட்டும்தான் சட்டென்று நமீதா பெயரைப் போல் மனதில் ஒட்டிக் கொண்டது.//நமீதா பெயர் மனசோடு ஒட்டுறதில்லையே, மனசை விட ‘பரந்து’ விரியுறதாச்சே!///நீங்களுமா அறிவன்..?///“அன்னிக்கே நான் போன் பண்ணணும்னு நினைச்சேன்..” என்றார்.. ஏன் பண்ணவில்லை என்பதற்கு காரணம் சொல்வார் என்று எதிர்பார்த்தேன்.. சட்டென்று எஸ்கேப்பாகிவிட்டார்.//உபச்சாரமா சொல்றதெல்லாம் தப்பா எடுத்துகிட்டா இப்படித்தான்!///ச்சே.. அப்படியெல்லாம் இருக்காது.. அந்த நேரம் நினைச்சிருப்பாரு.. அப்புறம் மறந்திருப்பாரு..///அந்தச் சத்தமும் என் காதைத் தொட லேசாகத் திரும்பிப் பார்த்தேன். வழக்கம்போல நம்மாளு தோத்துட்டான்..//இப்ப தோப்பான்; அப்புறமா பேப்பேதான்!///உலகம் முழுக்க எல்லாப் பயலுகளும் ஒரே மாதிரிதான் இருக்கானுக ஸார்.. இல்லையா..?///டோண்டு ஸார், தன்னுடைய வயதை குறைத்துக் காட்ட வேண்டி ஒரு அடையாளத்துக்காக ஹாரிபாட்டர் புத்தகத்தைக் கையோடு கொண்டு வந்திருந்தார்.//எப்படி? யாராவது பாக்குறப்போ ஹாரி பாட்டரை முகத்துக்கு முன்னால பிடிச்சுக்குவாரா?///இல்லை.. நான் ஹாரிபாட்டர் படிக்கிற சின்னப் பையன் மனசுள்ளவன்னு காட்டுறதுக்காக கொண்டு வந்திருக்கலாம்..///எங்கே போனாலும் கையில் ஒரு புத்தகத்தை வைத்திருப்பது இவருடைய வழக்கமாம்.//அது சரி, ஆனா படிக்கிறாராமா??///பின்ன.. படிக்கிறதுக்குக்கூட நேரமில்லாம உழைச்சுக்கிட்டு இருக்காருல்ல..///எஸ்கலேட்டரில் நான் அதிகம் ஏறியவனில்லை. கொஞ்சம் பயம்தான் இன்னிக்கிவரைக்கும்.//ஏன், அது மாடிக்கு போனதும் மாடில இறங்கிறலாமே? அப்படியே மேலேயே போயிகிட்ட்டேவா இருக்கப் போகுது??????///துவக்கத்துல காலைத் தூக்கி வைக்கி”றது இருக்கு பாருங்க.. அதை நினைச்சாத்தான் கொஞ்சம் பயமா இருக்கு..///பேச்சுகள் என் அறிவுக்கு அப்பார்ப்பட்டதாக இருந்ததால் கொஞ்ச நேரம் மெளனமாக இருந்து வேடிக்கை பார்த்தேன்..//ஏன் ரஷ்ய மொழில பேசுனாங்களா?///லோக்கல் பாஷை பேசினால சமயத்துல கேக்காது இதுல ரஷ்ய மொழி வேறய்யா..?. ///பேச்சு இப்போது வீட்டு வாடகை, நிலம் வாங்குவது என்பதற்கு வர.. “இப்போது சென்னையில் 2000 ரூபாய் வாடகைக்கு ஒரு கக்கூஸ், பாத்ரூம்கூட கிடைக்காது..” என்றேன்.. ///அதெலாம் எதுக்கு வாடகைக்கு எடுக்கனும்? 2 ரூபாய் கொடுத்து போயிட்டு வந்துர வேண்டியதுதானே?///வீட்டுக்கும், அதுக்கும் தூரமாச்சே.. ஆட்டோ காசு யார் தருவா..?///கில்லியாரை ஏற்றிச் செல்ல எனது மெர்சிடிஸ் பென்ஸிற்கு கொடுத்து வைக்கவில்லை//ஏன், அதுவும் தொலைஞ்சு போச்சா??///எனக்கு அலுவலகம் திரும்ப வேண்டியிருந்ததால் வேறு ரூட் வழியாக செல்கிறேன்.. என்று சொல்லி விடைபெற்றேன்..///“அறிவு எப்பவுமே எனக்கு மட்டும் லேட்டாத்தான் வேலை செய்யுது..”//ஏன், ஸ்டார்ட்டர் போயிடுச்சா? சோக் நல்லாதானே இருக்கு.. addtional starter போட்டுப் பாருங்களேன்…///அடிஷனல் ஸ்டார்ட்டர் இப்போதைக்கு கிடைக்காது போல் தெரிகிறது.. அதுவரையில் இருப்பதை வைத்துத்தான் ஓட்ட வேண்டும்.///என்ன செய்யறது..?//ஒண்ணும் செய்ய முடியாது, இந்த கமெண்ட்’டெல்லாம் படிச்சு சிரிங்க….:)///படிச்சாச்சு.. சிரிச்சாச்சு.. பதிலும் போட்டாச்சு..மிக்க நன்றிகள் அறிவன் ஸார்..

 58. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //துளசி கோபால் said…
  இந்த ஐநாக்ஸ் செண்டர் எங்கே இருக்குன்னு சொல்லுங்க. எனக்கும் எந்த இடமுன்னு புரியலையே…..
  மவுண்ட் ரோடுலே இருக்கா?//

  டீச்சர்..

  மெரீனா கடற்கரையில் உள்ள காந்தி சிலையிலிருந்து மவுண்ட் ரோடு செல்ல.. டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் நுழைந்து வருவீர்கள் அல்லவா..

  அப்படி வரும்போது இடது பக்கம் முதல் நான்கு வழி சந்திப்பு ஒன்று வரும். அதன் முனையிலேயே கல்யாணி மருத்துவனைக்கு முந்தின கட்டிடமாக அமைந்திருப்பதுதான் சென்னை சிட்டி சென்டர்.

  இதன் 2-வது மாடியில்தான் ஐநாக்ஸ் திரையரங்குகள் அமைந்துள்ளன.

 59. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //துளசி கோபால் said… இந்த ஐநாக்ஸ் செண்டர் எங்கே இருக்குன்னு சொல்லுங்க. எனக்கும் எந்த இடமுன்னு புரியலையே…..மவுண்ட் ரோடுலே இருக்கா?//டீச்சர்..மெரீனா கடற்கரையில் உள்ள காந்தி சிலையிலிருந்து மவுண்ட் ரோடு செல்ல.. டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் நுழைந்து வருவீர்கள் அல்லவா.. அப்படி வரும்போது இடது பக்கம் முதல் நான்கு வழி சந்திப்பு ஒன்று வரும். அதன் முனையிலேயே கல்யாணி மருத்துவனைக்கு முந்தின கட்டிடமாக அமைந்திருப்பதுதான் சென்னை சிட்டி சென்டர். இதன் 2-வது மாடியில்தான் ஐநாக்ஸ் திரையரங்குகள் அமைந்துள்ளன.

 60. துளசி கோபால் Says:

  இப்பப் புரிஞ்சது:-)

  தகவலுக்கு நன்றிப்பா.

  சென்னைத் தெருக்களின் புதுப்பெயர்கள் மனசுலே பதியலை இன்னும்.

 61. துளசி கோபால் Says:

  இப்பப் புரிஞ்சது:-)தகவலுக்கு நன்றிப்பா.சென்னைத் தெருக்களின் புதுப்பெயர்கள் மனசுலே பதியலை இன்னும்.

 62. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //துளசி கோபால் said…
  இப்பப் புரிஞ்சது:-) தகவலுக்கு நன்றிப்பா. சென்னைத் தெருக்களின் புதுப் பெயர்கள் மனசுலே பதியலை இன்னும்.//

  சென்னைல எல்லாமே மாறிட்டு வருது டீச்சர்.. எங்களாலேயே கண்டு பிடிக்க முடியல.. அங்கிட்டு இருக்குற உங்களால முடியுமா என்ன?

 63. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //துளசி கோபால் said… இப்பப் புரிஞ்சது:-) தகவலுக்கு நன்றிப்பா. சென்னைத் தெருக்களின் புதுப் பெயர்கள் மனசுலே பதியலை இன்னும்.//சென்னைல எல்லாமே மாறிட்டு வருது டீச்சர்.. எங்களாலேயே கண்டு பிடிக்க முடியல.. அங்கிட்டு இருக்குற உங்களால முடியுமா என்ன?

 64. Vicky Says:

  // கிடைக்காததால் ஒருவேளை வண்டியிலேயே விட்டிருக்கலாம் என்று தனக்குத்தானே ஆறுதல்பட்டு அமைதியானார்.

  வீணாக பதட்டத்தை வெளிக்காட்டி பல நாள் திட்டமிட்டு சந்திக்கும் நேரத்தை திசை திருப்ப வேண்டாம் என்றே நினைத்தேன். மேலும் சிட்டி சென்டரின் செக்யூரிட்டி சிஸ்டத்தின் மேலிருந்த நம்பிக்கை பொய்க்கவில்லை. 🙂

 65. Vicky Says:

  // கிடைக்காததால் ஒருவேளை வண்டியிலேயே விட்டிருக்கலாம் என்று தனக்குத்தானே ஆறுதல்பட்டு அமைதியானார்.வீணாக பதட்டத்தை வெளிக்காட்டி பல நாள் திட்டமிட்டு சந்திக்கும் நேரத்தை திசை திருப்ப வேண்டாம் என்றே நினைத்தேன். மேலும் சிட்டி சென்டரின் செக்யூரிட்டி சிஸ்டத்தின் மேலிருந்த நம்பிக்கை பொய்க்கவில்லை. 🙂

 66. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///Vicky said…
  //கிடைக்காததால் ஒருவேளை வண்டியிலேயே விட்டிருக்கலாம் என்று தனக்குத்தானே ஆறுதல்பட்டு அமைதியானார்.//
  வீணாக பதட்டத்தை வெளிக்காட்டி பல நாள் திட்டமிட்டு சந்திக்கும் நேரத்தை திசை திருப்ப வேண்டாம் என்றே நினைத்தேன். மேலும் சிட்டி சென்டரின் செக்யூரிட்டி சிஸ்டத்தின் மேலிருந்த நம்பிக்கை பொய்க்கவில்லை.///

  உன்னுடைய நவ்லெண்ணத்திற்கு நன்றி விக்கி.. இப்போதுதான் கொஞ்சம் மனசு திருப்தியா இருக்கு.. முருகன் சோதிப்பான்.. ஆனா கை விடமாட்டான்..

 67. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///Vicky said… //கிடைக்காததால் ஒருவேளை வண்டியிலேயே விட்டிருக்கலாம் என்று தனக்குத்தானே ஆறுதல்பட்டு அமைதியானார்.//வீணாக பதட்டத்தை வெளிக்காட்டி பல நாள் திட்டமிட்டு சந்திக்கும் நேரத்தை திசை திருப்ப வேண்டாம் என்றே நினைத்தேன். மேலும் சிட்டி சென்டரின் செக்யூரிட்டி சிஸ்டத்தின் மேலிருந்த நம்பிக்கை பொய்க்கவில்லை.///உன்னுடைய நவ்லெண்ணத்திற்கு நன்றி விக்கி.. இப்போதுதான் கொஞ்சம் மனசு திருப்தியா இருக்கு.. முருகன் சோதிப்பான்.. ஆனா கை விடமாட்டான்..

 68. Simulation Says:

  என்னை வைச்சு ‘காமெடி கீமெடி’ பண்ணலியே?

  “என் அருகில் நண்பர் சிமுலேஷன். இவரது பெயர் மட்டும்தான் சட்டென்று நமீதா பெயரைப் போல் மனதில் ஒட்டிக் கொண்டது. ஏன் என்றுதான் தெரியவில்லை.”

 69. Simulation Says:

  என்னை வைச்சு ‘காமெடி கீமெடி’ பண்ணலியே?”என் அருகில் நண்பர் சிமுலேஷன். இவரது பெயர் மட்டும்தான் சட்டென்று நமீதா பெயரைப் போல் மனதில் ஒட்டிக் கொண்டது. ஏன் என்றுதான் தெரியவில்லை.”

 70. Dubukku Says:

  நேத்திக்கே இந்த கமெண்டை போட்டேன் ஆனா டுப்ளிகேஷன் எரர்ன்னு துப்பிடிச்சு 😦

  ****
  மன்னிச்சிக்கோங்க உ.த. இன்னிக்கு தான் இந்த பதிவைப் பார்க்கிறேன். உங்களை சந்தித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

  //கருப்பு பனியனில் அம்சமான கலரில்…//
  இதெல்லாம் ரெம்ம்ம்ம்ம்ம்ம்ப ஓவரா எனக்கே படுது :))))
  //இஸ்ரேலை பத்தி தெரியுது.. குஜராத்ல பகல்லேயே கிராமத்துல லைட் எரியறது நங்கநல்லூர்ல இருந்தே தெரியுது.. பிராங்க்ளினை தவிர மத்த ஜனாதிபதியெல்லாம் வேஸ்ட்டுன்னு தெரியுது.. ஊருக்குள்ளேயே இருக்குற சிட்டி சென்டர் எங்கன்னு தெரியல.. கொடுமை//
  சான்சே இல்லை விழுந்து விழுந்து சிரிச்சேன் :))

 71. Dubukku Says:

  நேத்திக்கே இந்த கமெண்டை போட்டேன் ஆனா டுப்ளிகேஷன் எரர்ன்னு துப்பிடிச்சு :(****மன்னிச்சிக்கோங்க உ.த. இன்னிக்கு தான் இந்த பதிவைப் பார்க்கிறேன். உங்களை சந்தித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.//கருப்பு பனியனில் அம்சமான கலரில்…//இதெல்லாம் ரெம்ம்ம்ம்ம்ம்ம்ப ஓவரா எனக்கே படுது :))))//இஸ்ரேலை பத்தி தெரியுது.. குஜராத்ல பகல்லேயே கிராமத்துல லைட் எரியறது நங்கநல்லூர்ல இருந்தே தெரியுது.. பிராங்க்ளினை தவிர மத்த ஜனாதிபதியெல்லாம் வேஸ்ட்டுன்னு தெரியுது.. ஊருக்குள்ளேயே இருக்குற சிட்டி சென்டர் எங்கன்னு தெரியல.. கொடுமை//சான்சே இல்லை விழுந்து விழுந்து சிரிச்சேன் :))

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: