நினைத்தேன் எழுதுகிறேன் – கர்நாடக, ஆந்திரத் தேர்தல் முடிவுகள் சொல்லும் பாடம்

02-06-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தேர்தல்கள் என்பதே முகமூடிக் கொள்ளைதான் என்பது பெட்ரோமாக்ஸ் லைட் வெளிச்சத்தில் நமக்குத் தெரிய வந்தாலும், நமது அரசியல்வாதிகள் அதனை சோடியம் லைட் வெளிச்சமாக்கி “நிலா காயுது.. அதைப் பார்க்கத்தான் உங்களுக்கு சோடியம் லைட் வசதியெல்லாம் செஞ்சு கொடுத்திருக்கோம்” என்று தமது புகழ் பாடி பிச்சையெடுத்து பெருமாளாகும் வைபவம் என்பது நமக்குத் தெரியும்.

ஆனால் இனிமேல் வரக்கூடிய தேர்தல்கள் அனைத்துமே அரசியல் கட்சிகளுக்கு அவர்களுடைய நிலையை அவர்களுக்கே உணர்த்துகின்ற ஒரு அனுபவமாகத்தான் இருக்கும் என்பதனை கர்நாடக மக்களும், ஆந்திரப் பிரதேச மக்களும் நடத்திக் காட்டியிருக்கின்றனர்.

முதலில் கர்நாடகத்தை பார்ப்போம்..

முன்பெல்லாம் ‘கழைக்கூத்தாடிகள்’ என்பவர்கள் ரோட்டோரமாக கயிற்றின் மீது பிடி இல்லாமல் நடந்தும், சாய்வான கயிற்றில் இருந்து பிடிமானமில்லாமல் மேல் நோக்கி நடந்தும் சர்க்கஸ் வித்தை காட்டி நெளிந்து போன தகர டப்பாவைக் குலுக்கி அதன் மூலம் தங்களது வயிற்றை நிரப்பிக் கொண்டிருந்தார்கள்.

இந்த வித்தையையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிடும்படியாக ஒரு அப்பாவும், இரண்டு மகன்களுமாக கர்நாடகாவில் சென்ற சட்டமன்ற காலத்தில் நடத்திய கூத்து இந்தியாவில் பிரசித்தி பெற்றுவிட்டது. “இப்படியொரு அப்பனுக்கு இப்படித்தான் பிள்ளை பிறப்பான்” என்ற தமிழ் கூற்றுக்கு நிஜமான உதாரணத்தை திருவாளர் தேவகவுடாவின் மகன் குமாரசாமியை சொல்லலாம்.

செய்து கொண்ட ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டு போவது அரசியல்வாதிகளுக்கு தண்ணி பட்ட பாடுதான் என்றாலும், அதனை ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை வரி, வரியாக மாற்றி மாற்றி பேசியதுதான் கர்நாடக வெகுஜன மக்களை கடுப்படுத்திருக்கிறது என்பது அம்மாநிலத் தேர்தல் முடிவுகளில் இருந்து தெரிகிறது.

மதசார்பற்ற ஜனதா தளம் 28 இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும் அது ஜாதி ரீதியாக பெற்ற வாக்குகள்தான் என்று சொல்லலாம். பெருவாரியான ஒக்கலிகர் சமுதாய மக்களின் வாக்குகளால்தான் அக்கட்சிக்கு இப்போது மூச்சு கொஞ்சமாச்சும் இருக்கிறது.

இந்த ஜாதி பெல்ட்டை உடைப்பது என்பது இன்னொரு ஜாதியினரால்தான் முடியும்.. அந்த வகையில் தேவேகெளடா தான் சாகின்றவரையிலும் தன் பெயரில் இருக்கும் ‘கெளடா’ என்கிற பெயரை நீக்க மாட்டார் என்கின்றபோது அந்த பெல்ட் அவருக்குத்தான் என்பதிலும் சந்தேகமில்லை.

தேர்தலுக்குத் தேர்தல் காசு, பணம் புழங்குவதும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.. இத்தேர்தலிலும் ஓட்டுப் போடவிருக்கும் மக்களுக்குக் கொடுப்பாதற்காக வைத்திருந்த அன்பளிப்பு பணத்தை அதிகாரிகள் அள்ளிக் கொண்டு போன பாதகமும் நடந்திருக்கிறது..

இப்போது மாநிலத்தில் ஆட்சிக்கும் வர முடியாமல் போனதால் நிச்சயம் அப்பணம் மத்திய ஆட்சியாளர்களால் பறி கொடுத்தவர்களிடமே திரும்பிப் போகும் என்பதில் எனக்கு ஐயமில்லை.

தேர்தலுக்குத் தேர்தல் வாக்காளர்கள் கூடுகிறார்களோ இல்லையோ சாமியார்களும், ஜோதிடர்களிடம் கருத்து கேட்பவர்களும் கூடிக் கொண்டேதான் செல்கிறார்கள்.

படுத்துக் கொண்டே ஜெயிப்போம் என்ற நிலையில் இருந்த தங்களை நிஜமாகவே படுக்க வைத்த மக்களிடம், எழுவதற்கு என்ன வழி என்று காங்கிரஸ்காரர்கள் ஜோதிடர்களிடம் சென்று மண்டியிட்டு காத்திருந்தார்கள்.

“எதிரிகளை சம்ஹாரம் செய்ய இப்போது துர்காதேவிதான் வர வேண்டும். அவளுடைய அம்சம்தான் உங்களது கட்சியின் ராசிக்கு வந்திருக்கிறது.. யாராவது இரண்டு பெண் தேவிகளைப் பிடித்து அவர்களை ஏவி அப்பன், பிள்ளைகளான அரக்கர்களை கொல்லுங்கள்” என்று எவனோ ஒரு ஜோல்னாப் பை ஜோஸியக்காரன், வாங்கின காசுக்கு வஞ்சகமில்லாமல் ஒப்பாரி வைத்திருக்கிறான்.

“நிச்சயம் ஜெயிப்போம்.. எங்கள் துர்கா கை விடமாட்டாள்” என்ற கோஷத்தோடு குமாரசாமிக்கும் எதிராகவும், அவருடைய அண்ணன் ரேவண்ணாவுக்கு எதிராகவும் இரண்டு பெண்களை வேட்பாளர்களாக நிறுத்தி வைத்து “சூலாயுதத்தால் பிளவுபடப் போகிறார்கள் அண்ணன், தம்பிகள்..” என்று ரதத்தில் வந்தபடியே கர்ஜித்தார் மும்பையிலிருந்து வந்து போர்க்களத்தில் குதித்த கிருஷ்ணா.

தம்பி குமாரசாமி போட்டியிட்ட ராம்நகர் தொகுதியில் கர்நாடகத்தின் முன்னாள் ‘மிஸ்டர் கிளீன்’ முதல்வரான ராமகிருஷ்ண ஹெக்டேயின் மகள் மம்தா நிச்சானியை நிறுத்தியது ஜோதிடர் தயவுடைய காங்கிரஸ் கட்சி.

அதே போல் அண்ணன் ராவண்ணாவை எதிர்த்து அனுபமா என்ற பெண்ணை வேட்பாளராக நிறுத்திவைத்துவிட்டு, ஜோதிடரைவிடவும் நகத்தைக் கடித்துக் கொண்டு முடிவுக்காகக் காத்திருந்தது.

அப்பன்,. பிள்ளைகள் மட்டும் சாதாரணப்பட்டவர்களா..? முதல்வராக ஆட்சியில் இருக்கும்போதே திருநள்ளாறுக்கு ஓடோடி வந்து சனீஸ்வரனுக்கு லஞ்சம் கொடுத்து “எப்படியாவது இன்னொரு இரண்டரை வருஷத்துக்கு எக்ஸ்டென்ஷன் வேண்டும்” என்று பெட்டிஷனை போட்டு அழுது புலம்பிய குடும்பம் அது..

இந்தச் சம்பவத்தால் சனீஸ்வரன் கொஞ்சம் உச்சி குளிர்ந்து போய்விட்டான் போலிருக்கிறது.. குமாரசாமி 47,000 வாக்குகள் வித்தியாசத்தில் மம்தாவைத் தோற்கடித்தார். ரேவண்ணா 28 யிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அனுபமாவைத் தோற்கடித்து ஜோதிடரை தலைமறைவு நிலைக்குக் கொண்டு சென்றுள்ளார்கள்.

இப்போது சனீஸ்வரன் ஜோதிடரை பிடித்தானா அல்லது கிருஷ்ணாவை பிடித்தானா என்பதை அவனே வந்து சொன்னால்தான் தெரியும்.

பாரதீய ஜனதா கட்சி ஏழு நாட்கள் ஆட்சியிலிருந்து முதுகில் குத்திய நம்பிக்கைத் துரோகத்தால் பதவி விலகியபோதே முடிவு கட்டிவிட்டது கர்நாடகாவைக் கைப்பற்றியே தீருவது என்று.. அன்றைக்கே “அடுத்த முதல்வர் எடியூரப்பாதான்” என்று தெளிவுபடச் சொல்லிவிட்டது அக்கட்சி.

அக்கட்சியின் இன்னொரு பிரபலம் ஆனந்தகுமார் அவ்வப்போது எடியூரப்பாவுக்கு இடைஞ்சல் கொடுத்து வந்தாலும், தலைமையின் உருமலால் தேர்தல் வேலைகளில் சுணக்கம் காட்டுவது, லீவு எடுப்பது என்று சின்னச் சின்ன அழுவாச்சி வேலைகளில் மட்டும் ஈடுபட்டு தனது எதிர்ப்பை காட்டி வந்தார்.

காங்கிரஸிலோ வழக்கம்போல தொண்டர்களைவிட தலைவர்களின் எண்ணிக்கை அதிகமானதால் யாரை முதல்வர் பதவி வேட்பாளராக அறிவிக்கலாம் என்ற பிரச்சினைக்குள்ளேயே ஜன்பத் ரோடு ‘ஆத்தா’ தலையைக் கொடுக்கவில்லை.

இருக்கின்ற தலைவர்களையெல்லாம் வாரிப் போட்டுக் கொண்டு ஆளுக்கொரு ரதத்தில் பவனி வர வைத்தது. ஆனால் வாக்காளர்கள் சுதாரிப்பாக இருந்தது அவர்களுக்குத் தெரியவில்லை.. கடைசி நிமிடத்தில் முதல்வர் பதவிக்கு கார்கேயும், தரம்சிங்கும், கிருஷ்ணாவும் அடித்துக் கொள்ளப் போகும் கண்றாவிக்கு நம்ம எடியூரப்பாவே மேல் என்று நினைத்து ஓட்டுக்களைக் குத்திவிட்டார்கள்.

துர்கையம்மன் தோற்று கிங்கிரர்கள் வெற்றி பெற இப்போது கிருஷ்ணாவின் புலம்பல் வேறு மாதிரியிருக்கிறது.. “என்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்காததுதான் கர்நாடக மக்களுக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான் காங்கிரஸ் தோற்றுவிட்டது” என்று வருத்தப்படுகிறார்.

இருக்காதா பின்ன..? மும்பையின் கவர்னர் என்கின்ற எவ்ளோ பெரிய பதவியை ஒரு நொடியில் தூக்கிப் போட்டுவிட்டு, ஓடோடி வந்தவரை இப்படி நட்டாற்றில் விட்டால் அவர் என்ன செய்வார்? பாவம்..

பாஜகவுக்கோ தென் இந்தியாவில் முதன் முறையாக கால் ஊன்றிவிட்டோமே என்பதில் முதல் மகிழ்ச்சி. மெஜாரிட்டிக்கு சற்றுக் குறைவாக, எளிதில் ஆளைத் தூக்கிப் போகும் அளவுக்கான எண்ணிக்கையில் சுயேச்சைகள் ஜெயித்தது இரண்டாவது மகிழ்ச்சி.

இந்த இரண்டாவது மகிழ்ச்சியை வைத்துத்தான் தனது கட்சி எதிரிகளை வரும் 5 வருட காலமும் எடியூரப்பா சமாளிக்கப் போகிறார். “கட்சிக்கு முழு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. அடுத்த தேர்தலில் நாம் எவரையும் தூக்கும் நிலைக்கு ஆளாகாமல் இருக்கும்படி ஜெயிக்க வேண்டும். அதற்காக இன்னும் உழைக்க வேண்டும்” என்று வழக்கம்போல மந்திரி பதவி கிடைக்காதவர்களுக்கு ஆறுதல் சொல்லி தனது பாட்டை துவக்கிவிட்டார் முதல்வர் எடியூரப்பா.

மொத்தத்தில் இந்த கர்நாடகத் தேர்தலில் அம்மாநில மக்கள் அளித்த தீர்ப்பு. ஒன்று “நிலையான ஆட்சியைத் தர முடியுமெனில் வா.. இல்லாவிடில் போ..” என்பதாகத்தான் நான் நினைக்கிறேன். ஆக.. இது ஒன்றுக்காகவே கர்நாடக மக்களை வாழ்த்தியே தீர வேண்டும்.

அடுத்தது ஆந்திரா.

“அடைந்தால் மகாதேவி.. இல்லையேல் மரணதேவி” என்ற ‘மகாதேவி’யின் வசனத்தை மாற்றிப் போட்டு “தனித் தெலுங்கானாவை அடைந்தே தீருவேன்” என்று மந்திரியாக இருந்த அனுதினமும் சூளுரைத்துக் கொண்டிருந்தார் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவர் திரு.சந்திரசேகர்ராவ்.

“தனித்தெலுங்கானாதான் தனது உயிர்.. மற்றதெல்லாம் பிண்டங்கள்” என்று ‘ஜன்பத் ரோடு அம்மா’விடம் தெளிவாகச் சொல்லிவிட்டுத்தான் மந்திரி பதவியை வாங்கிக் கொண்டார். ஆனால் “காங்கிரஸ் அமைச்சர்களைப் போல பதவிக்குக் கட்டுப்பட்டு இனிமேல் அடங்கியிருப்பார்” என்று ஜன்பத் ரோட்டு அம்மா நினைத்துவிட்டார்.

இங்கே தொகுதி மக்கள் “ஓட்டு போட்டோமே.. தனி வீடு என்னாச்சு?” என்று துளைத்தெடுக்க.. மேலேயும் கேட்க முடியாமல், வீட்டுக்கும் வர முடியாமல் தவித்து ஒரு நிலையில், பதவியையே ராஜினாமா செய்துவிட்டுத் தனது தியாகத்தை பறை சாற்றினார் சந்திரசேகர்ராவ்.

ஆனால் மக்களோ இந்தத் தேர்தலில் அதற்கும் ஆப்பு வைத்துவிட்டார்கள். “உனக்கு காரியத்தை நிறைவேற்றும் தகுதி இல்லை” என்று சொல்லி ஏற்கெனவே இருந்த 4 மக்களவைத் தொகுதிகளில் 2 தொகுதிகளை மட்டுமே திருப்பிக் கொடுத்திருக்கிறார்கள். அதேபோல் ராஜினாமா செய்த 16 சட்டமன்றத் தொகுதிகளில் 7 தொகுதிகளை மட்டுமே தெலுங்கானா மக்கள் திருப்பிக் கொடுத்துள்ளனர்.

இதுவும் ராவ்காருக்கு ஒரு எச்சரிக்கைதான். இனிமேலும் ஒழுங்கா இல்லைன்னா இதுவும் கிடைக்காது என்பது.. ராவ்காரோ கட்சித் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யலாமா என்று யோசித்து வருகிறராம்.

கர்நாடகாவில் பெற்ற தோல்வியால் துவண்டு போயிருந்த காங்கிரஸ் ஆந்திராவில் கிடைத்த திடீர் வெற்றியால் கொஞ்சுண்டு வாயைத் திறந்து சிரிக்கிறது.. 1 மக்களவைத் தொகுதியையும் 6 சட்டசபைத் தொகுதிகளையும் காங்கிரஸ் கட்சி கைப்பற்றி மூச்சு விட்டுள்ளது.

ஆனாலும் மத்தியில் இருக்கும் காங்கிரஸ்வாதிகளுக்கு தேர்தல் பயம் என்ற வியாதி இப்போதே வந்துவிட்டதை உணர்கிறேன்.. அதுதான் பெட்ரோல், டீஸல் விலை ஏற்றத்திற்காக மூன்று முறை கூடியும் முடிவெடுக்க முடியாமல் காபி, பிஸ்கட் மட்டும் சாப்பிட்டுவிட்டு கலைந்து போயிருக்கிறார்கள்.

அடுத்தாண்டு வர வேண்டிய மக்களவைத் தேர்தலை இந்தாண்டு நவம்பர் அல்லது டிசம்பரில் நடத்தி விடலாமா என்ற யோசனையை முன் வைத்திருக்கிறார்கள் மூத்த மந்திரிகள்.

எத்தனை களம் கண்டவர்கள் அவர்கள்..? அவர்களது கணிப்பின்படி விலைவாசி உயர்ந்தது.. உயர்ந்ததுதான். இறங்கவே இறங்காது..

அடுத்தாண்டு இறுதிவரையிலும் தேர்தலுக்காகக் காத்திருப்பது என்றால் அது நமக்குத் தற்கொலை முயற்சிதான்.. அதற்குள்ளாக பொதுமக்களின் கோபம் கொப்பளித்துவிடும்.. துப்புகிற துப்பில் நமக்கு கண்ணைத் திறக்கக் கூட இடமிருக்குமா என்பது சந்தேகம்தான் என்பதை நாசூக்காக ஜன்பத் ரோடு வீட்டம்மாவின் காதில் போட்டிருக்கிறார்கள்.

ஆனால் ‘அம்மா’வோ சிதம்பரத்தை மலை போல் நம்பியிருக்கிறார். சிதம்பரமோ சிதம்பரம் ஆண்டவனை உயிர் போல நம்பியிருக்கிறார். இனிமேல் சிதம்பரம் ஆண்டவன் ஏதாவது ஆசி வழங்கி அதிசயம் நடத்தினால்தான் 2 ரூபாய் இட்லியின் விலை குறையும்.

ஆனால் பிரதமர் என்றழைக்கப்படும் மன்மோகன்சிங்கும், சிதம்பரமும் 2 ரூபாய் இட்லியையெல்லாம் சாப்பிடும் பழக்கமில்லாததால் நீங்களும் நானும் அடுத்தத் தேர்தல் வரை காத்திருந்து நமது கோபத்தைக் காட்ட வேண்டியதுதான்..

வேறென்ன செய்வது..?.

57 பதில்கள் to “நினைத்தேன் எழுதுகிறேன் – கர்நாடக, ஆந்திரத் தேர்தல் முடிவுகள் சொல்லும் பாடம்”

 1. முரளிகண்ணன் Says:

  \\ஆனால் பிரதமர் என்றழைக்கப்படும் மன்மோகன்சிங்கும்\\
  சீரியஸா எழுதும்போதும் சிரிக்க வைக்கிறீங்களே எப்படி?

 2. முரளிகண்ணன் Says:

  \\ஆனால் பிரதமர் என்றழைக்கப்படும் மன்மோகன்சிங்கும்\\சீரியஸா எழுதும்போதும் சிரிக்க வைக்கிறீங்களே எப்படி?

 3. Anonymous Says:

  {{பெருவாரியான ஒக்கலிகர் சமுதாய மக்களின் வாக்குகளால்தான் அக்கட்சிக்கு இப்போது மூச்சு கொஞ்சமாச்சும் இருக்கிறது.}}

  நீயும் ஒக்கலிகா தானேடா செவுட்டு கம்முனாட்டி

 4. Anonymous Says:

  {{பெருவாரியான ஒக்கலிகர் சமுதாய மக்களின் வாக்குகளால்தான் அக்கட்சிக்கு இப்போது மூச்சு கொஞ்சமாச்சும் இருக்கிறது.}}நீயும் ஒக்கலிகா தானேடா செவுட்டு கம்முனாட்டி

 5. அதிஷா Says:

  //
  ஆனால் பிரதமர் என்றழைக்கப்படும் மன்மோகன்சிங்கும், சிதம்பரமும் 2 ரூபாய் இட்லியையெல்லாம் சாப்பிடும் பழக்கமில்லாததால் நீங்களும் நானும் அடுத்தத் தேர்தல் வரை காத்திருந்து நமது கோபத்தைக் காட்ட வேண்டியதுதான்..

  வேறென்ன செய்வது..?.
  //

  வேற இன்னா செய்றது நாம ரெண்டு இட்லிய துன்னுட்டு பதிவு எழுத வேண்டியதுதான்,

 6. அதிஷா Says:

  //ஆனால் பிரதமர் என்றழைக்கப்படும் மன்மோகன்சிங்கும், சிதம்பரமும் 2 ரூபாய் இட்லியையெல்லாம் சாப்பிடும் பழக்கமில்லாததால் நீங்களும் நானும் அடுத்தத் தேர்தல் வரை காத்திருந்து நமது கோபத்தைக் காட்ட வேண்டியதுதான்..வேறென்ன செய்வது..?.//வேற இன்னா செய்றது நாம ரெண்டு இட்லிய துன்னுட்டு பதிவு எழுத வேண்டியதுதான்,

 7. ARUVAI BASKAR Says:

  சார் ,
  மிகவும் நடுநிலையோடு அலசி உள்ளீர்கள் !
  வாழ்த்துக்கள்
  அன்புடன்
  பாஸ்கர்

 8. ARUVAI BASKAR Says:

  சார் ,மிகவும் நடுநிலையோடு அலசி உள்ளீர்கள் !வாழ்த்துக்கள் அன்புடன் பாஸ்கர்

 9. Jeeves Says:

  //2 ரூபாய் இட்லியையெல்லாம்//

  Oh 2 ரூபாய்க்கெல்லாம் இட்டிலி கிடைக்குதா இந்தியாவுல … இட்டிலி அவ்வளவு விலை குறைஞ்சு போச்சா ? பரவாயில்லியே

 10. Jeeves Says:

  //2 ரூபாய் இட்லியையெல்லாம்//Oh 2 ரூபாய்க்கெல்லாம் இட்டிலி கிடைக்குதா இந்தியாவுல … இட்டிலி அவ்வளவு விலை குறைஞ்சு போச்சா ? பரவாயில்லியே

 11. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ////முரளிகண்ணன் said…
  \\ஆனால் பிரதமர் என்றழைக்கப்படும் மன்மோகன்சிங்கும்\\
  சீரியஸா எழுதும்போதும் சிரிக்க வைக்கிறீங்களே.. எப்படி?///

  இதிலென்ன சிரிப்பு முரளி.. அதுதான் தினமும் நடக்கிறதே..

 12. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ////முரளிகண்ணன் said… \\ஆனால் பிரதமர் என்றழைக்கப்படும் மன்மோகன்சிங்கும்\\சீரியஸா எழுதும்போதும் சிரிக்க வைக்கிறீங்களே.. எப்படி?///இதிலென்ன சிரிப்பு முரளி.. அதுதான் தினமும் நடக்கிறதே..

 13. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //Anonymous said…
  {{பெருவாரியான ஒக்கலிகர் சமுதாய மக்களின் வாக்குகளால்தான் அக்கட்சிக்கு இப்போது மூச்சு கொஞ்சமாச்சும் இருக்கிறது.}}
  நீயும் ஒக்கலிகா தானேடா செவுட்டு கம்முனாட்டி.//

  ஸாருக்கு ரொம்ப கோபமோ?

 14. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //Anonymous said… {{பெருவாரியான ஒக்கலிகர் சமுதாய மக்களின் வாக்குகளால்தான் அக்கட்சிக்கு இப்போது மூச்சு கொஞ்சமாச்சும் இருக்கிறது.}}நீயும் ஒக்கலிகா தானேடா செவுட்டு கம்முனாட்டி.//ஸாருக்கு ரொம்ப கோபமோ?

 15. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///அதிஷா said…
  //ஆனால் பிரதமர் என்றழைக்கப்படும் மன்மோகன்சிங்கும், சிதம்பரமும் 2 ரூபாய் இட்லியையெல்லாம் சாப்பிடும் பழக்கமில்லாததால் நீங்களும் நானும் அடுத்தத் தேர்தல் வரை காத்திருந்து நமது கோபத்தைக் காட்ட வேண்டியதுதான்.. வேறென்ன செய்வது..?.//
  வேற இன்னா செய்றது நாம ரெண்டு இட்லிய துன்னுட்டு பதிவு எழுத வேண்டியதுதான்.///

  எவ்ளோ நாளைக்கு..? ஒரு இட்லி 5 ரூபான்னு வரும்போது எத்தனை பேர் இட்லி சாப்பிடுவதைக் கைவிட்டுவிட்டு, பிஸ்கட்டுக்கு வருகிறார்கள் என்று பாருங்கள்..

  நன்றி அதிஷா..

 16. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///அதிஷா said… //ஆனால் பிரதமர் என்றழைக்கப்படும் மன்மோகன்சிங்கும், சிதம்பரமும் 2 ரூபாய் இட்லியையெல்லாம் சாப்பிடும் பழக்கமில்லாததால் நீங்களும் நானும் அடுத்தத் தேர்தல் வரை காத்திருந்து நமது கோபத்தைக் காட்ட வேண்டியதுதான்.. வேறென்ன செய்வது..?.//வேற இன்னா செய்றது நாம ரெண்டு இட்லிய துன்னுட்டு பதிவு எழுத வேண்டியதுதான்.///எவ்ளோ நாளைக்கு..? ஒரு இட்லி 5 ரூபான்னு வரும்போது எத்தனை பேர் இட்லி சாப்பிடுவதைக் கைவிட்டுவிட்டு, பிஸ்கட்டுக்கு வருகிறார்கள் என்று பாருங்கள்..நன்றி அதிஷா..

 17. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //ARUVAI BASKAR said…
  சார், மிகவும் நடுநிலையோடு அலசி உள்ளீர்கள்! வாழ்த்துக்கள்.
  அன்புடன்
  பாஸ்கர்//

  வாங்க பாஸ்கர்.. அதென்ன அருப்புக்கோட்டையை அறுவைன்னு மாத்திட்டீங்க.. ஊர்க்காரங்க எல்லாரும் கோவிச்சுக்கப் போறாங்க..

  சரி.. உங்க தளத்திற்குள் வந்து மேய்ந்தேன்.. முன்பு நான் செய்த வேலையை இப்போது நீங்கள் செய்து கொண்டிருப்பது போல் தெரிகிறது..

  அதாங்க துக்ளக் கார்ட்டூனை ஸ்கேன் செய்து போடுவது.. எனக்கு இப்போது ஸ்கேனர் கிடைக்கவில்லை. ஆகவே போடவில்லை. நீங்கள் போடுகிறீர்கள்.. ஓகே..

  ஏதாவது ஆபாச பின்னூட்டங்கள் வருகின்றனவா..?

 18. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //ARUVAI BASKAR said… சார், மிகவும் நடுநிலையோடு அலசி உள்ளீர்கள்! வாழ்த்துக்கள். அன்புடன் பாஸ்கர்//வாங்க பாஸ்கர்.. அதென்ன அருப்புக்கோட்டையை அறுவைன்னு மாத்திட்டீங்க.. ஊர்க்காரங்க எல்லாரும் கோவிச்சுக்கப் போறாங்க..சரி.. உங்க தளத்திற்குள் வந்து மேய்ந்தேன்.. முன்பு நான் செய்த வேலையை இப்போது நீங்கள் செய்து கொண்டிருப்பது போல் தெரிகிறது..அதாங்க துக்ளக் கார்ட்டூனை ஸ்கேன் செய்து போடுவது.. எனக்கு இப்போது ஸ்கேனர் கிடைக்கவில்லை. ஆகவே போடவில்லை. நீங்கள் போடுகிறீர்கள்.. ஓகே..ஏதாவது ஆபாச பின்னூட்டங்கள் வருகின்றனவா..?

 19. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///Jeeves said…
  //2 ரூபாய் இட்லியையெல்லாம்//
  Oh 2 ரூபாய்க்கெல்லாம் இட்டிலி கிடைக்குதா இந்தியாவுல … இட்டிலி அவ்வளவு விலை குறைஞ்சு போச்சா ? பரவாயில்லியே?///

  இது ஆற்றாமையா.. அல்லது பொறாமையா..? அல்லது கேள்வியா..?

  10 காசுக்கு ஒரு இட்லின்னு வாங்கிச் சாப்பிட்டது அவ்வப்போது நினைவுக்கு வந்து இட்லி மீதான பாசத்தைக் கூட்டுகிறது..

  நன்றி ஜீவ்ஸ்..

 20. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///Jeeves said… //2 ரூபாய் இட்லியையெல்லாம்//Oh 2 ரூபாய்க்கெல்லாம் இட்டிலி கிடைக்குதா இந்தியாவுல … இட்டிலி அவ்வளவு விலை குறைஞ்சு போச்சா ? பரவாயில்லியே?///இது ஆற்றாமையா.. அல்லது பொறாமையா..? அல்லது கேள்வியா..? 10 காசுக்கு ஒரு இட்லின்னு வாங்கிச் சாப்பிட்டது அவ்வப்போது நினைவுக்கு வந்து இட்லி மீதான பாசத்தைக் கூட்டுகிறது..நன்றி ஜீவ்ஸ்..

 21. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  அன்பு வாத்தியாரே..

  தங்களது அறிவுரைக்கு எனது நன்றி..

  அதனை தற்போதைய நிலையில் நீக்க இயலாது என்பதனை மிக்க வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்..

  நான் அந்த கமெண்ட்டை இன்னமும் விட்டு வைத்திருப்பதற்கு காரணம், இன்னும் 2 வாரங்களில் உங்களுக்கே தெரியும்.. காத்திருக்கவும்..

 22. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  அன்பு வாத்தியாரே..தங்களது அறிவுரைக்கு எனது நன்றி..அதனை தற்போதைய நிலையில் நீக்க இயலாது என்பதனை மிக்க வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்..நான் அந்த கமெண்ட்டை இன்னமும் விட்டு வைத்திருப்பதற்கு காரணம், இன்னும் 2 வாரங்களில் உங்களுக்கே தெரியும்.. காத்திருக்கவும்..

 23. அறிவன்#11802717200764379909 Says:

  பிரதமர் என்றழைக்கப்படும் மன்மோகன்’ பிரயோகம் புன்னகைக்க வைக்கிறது.

  கர்நாடக,ஆந்திர அரசியல் சூழலை மட்டும் எடுத்துக் கொண்டு அலசி இருக்கிறீர்கள்.
  தமிழகத்துக்கு என்ன impact பற்றியும் சேர்த்திருக்கலாம்…

  பார்க்க என்னுடைய பதிவு சில செய்திகள்;பல கவலைகள்

 24. அறிவன்#11802717200764379909 Says:

  பிரதமர் என்றழைக்கப்படும் மன்மோகன்’ பிரயோகம் புன்னகைக்க வைக்கிறது.கர்நாடக,ஆந்திர அரசியல் சூழலை மட்டும் எடுத்துக் கொண்டு அலசி இருக்கிறீர்கள்.தமிழகத்துக்கு என்ன impact பற்றியும் சேர்த்திருக்கலாம்…பார்க்க என்னுடைய பதிவு சில செய்திகள்;பல கவலைகள்

 25. அதிஷா Says:

  //
  10 காசுக்கு ஒரு இட்லின்னு வாங்கிச் சாப்பிட்டது அவ்வப்போது நினைவுக்கு வந்து இட்லி மீதான பாசத்தைக் கூட்டுகிறது..
  //

  எப்போ சமீபத்துல 1980 லயாங்கணா

 26. அதிஷா Says:

  //10 காசுக்கு ஒரு இட்லின்னு வாங்கிச் சாப்பிட்டது அவ்வப்போது நினைவுக்கு வந்து இட்லி மீதான பாசத்தைக் கூட்டுகிறது..//எப்போ சமீபத்துல 1980 லயாங்கணா

 27. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //அறிவன்#11802717200764379909 said…
  பிரதமர் என்றழைக்கப்படும் மன்மோகன்’ பிரயோகம் புன்னகைக்க வைக்கிறது. கர்நாடக,ஆந்திர அரசியல் சூழலை மட்டும் எடுத்துக் கொண்டு அலசி இருக்கிறீர்கள். தமிழகத்துக்கு என்ன impact பற்றியும் சேர்த்திருக்கலாம்… பார்க்க என்னுடைய பதிவு சில செய்திகள்;பல கவலைகள்.//

  அறிவன் ஸார்.. வருகைக்கு நன்றிகள்..

  தங்களுடைய பதிவையும் படித்தேன்..

  தமிழக அரசியல் களம் பற்றி எழுத இன்னும் கொஞ்சம் நேரம் வேண்டும்.. இப்போது தெரிவது எல்லாமே மேம்போக்காகத்தான்.. தேர்தல் நெருங்கிய பின்புதான் இவர்களது சேட்டைகள் தெரிய வரும். அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்றுதான் விட்டு வைத்துள்ளேன்..

 28. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //அறிவன்#11802717200764379909 said… பிரதமர் என்றழைக்கப்படும் மன்மோகன்’ பிரயோகம் புன்னகைக்க வைக்கிறது. கர்நாடக,ஆந்திர அரசியல் சூழலை மட்டும் எடுத்துக் கொண்டு அலசி இருக்கிறீர்கள். தமிழகத்துக்கு என்ன impact பற்றியும் சேர்த்திருக்கலாம்… பார்க்க என்னுடைய பதிவு சில செய்திகள்;பல கவலைகள்.//அறிவன் ஸார்.. வருகைக்கு நன்றிகள்..தங்களுடைய பதிவையும் படித்தேன்.. தமிழக அரசியல் களம் பற்றி எழுத இன்னும் கொஞ்சம் நேரம் வேண்டும்.. இப்போது தெரிவது எல்லாமே மேம்போக்காகத்தான்.. தேர்தல் நெருங்கிய பின்புதான் இவர்களது சேட்டைகள் தெரிய வரும். அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்றுதான் விட்டு வைத்துள்ளேன்..

 29. Anonymous Says:

  இன்னா நைனா.. சுடச்சுட பாலிடிக்ஸ் நியூஸெல்லாம் கொடுப்பியே.. இப்ப என்னாச்சு..?

  ஆப்படிச்சு உக்கார வைச்சுட்டானுகளா..

  வாயையே தொறக்க மாட்டேங்குற..?

  ஆந்திரா, கர்நாடகாவை விடுப்பா.. தமிழ்நாடு என்னாச்சு?

 30. Anonymous Says:

  இன்னா நைனா.. சுடச்சுட பாலிடிக்ஸ் நியூஸெல்லாம் கொடுப்பியே.. இப்ப என்னாச்சு..? ஆப்படிச்சு உக்கார வைச்சுட்டானுகளா.. வாயையே தொறக்க மாட்டேங்குற..?ஆந்திரா, கர்நாடகாவை விடுப்பா.. தமிழ்நாடு என்னாச்சு?

 31. ARUVAI BASKAR Says:

  //ஏதாவது ஆபாச பின்னூட்டங்கள் வருகின்றனவா..?//

  முதலில் வந்தது ! டோண்டு அவர்களுககு கமெண்ட் போட்டவுடன் வந்தது !
  கமெண்ட் மோடேரட் பண்ணியதர்கபுரம் ஏதும் வரவில்லை !
  லக்கி லுக் ப்லாக் இல் உங்கள் பின்னூட்டங்களை படித்தேன் .நன்று .
  திரு சோ அவர்களின் துக்ளக் பத்திரிக்கை படிப்பவர்கள் அனைவரும் அவர்களை போல் கண்மூடித்தனமாக ஆதரிப்பவர்கள் என்று நினைக்கிறார்கள் போலும் . உண்மை அதுவல்ல என்று திரு சோ அவர்களே பலமுறை எழுதியுள்ளார் .
  நான் அருவை என்று ஆங்கிலத்தில் எழுதியுள்ளேன் !!!!!!!!!

 32. ARUVAI BASKAR Says:

  //ஏதாவது ஆபாச பின்னூட்டங்கள் வருகின்றனவா..?//முதலில் வந்தது ! டோண்டு அவர்களுககு கமெண்ட் போட்டவுடன் வந்தது !கமெண்ட் மோடேரட் பண்ணியதர்கபுரம் ஏதும் வரவில்லை !லக்கி லுக் ப்லாக் இல் உங்கள் பின்னூட்டங்களை படித்தேன் .நன்று .திரு சோ அவர்களின் துக்ளக் பத்திரிக்கை படிப்பவர்கள் அனைவரும் அவர்களை போல் கண்மூடித்தனமாக ஆதரிப்பவர்கள் என்று நினைக்கிறார்கள் போலும் . உண்மை அதுவல்ல என்று திரு சோ அவர்களே பலமுறை எழுதியுள்ளார் .நான் அருவை என்று ஆங்கிலத்தில் எழுதியுள்ளேன் !!!!!!!!!

 33. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///அதிஷா said…
  //10 காசுக்கு ஒரு இட்லின்னு வாங்கிச் சாப்பிட்டது அவ்வப்போது நினைவுக்கு வந்து இட்லி மீதான பாசத்தைக் கூட்டுகிறது..//
  எப்போ சமீபத்துல 1980 லயாங்கணா..?///

  ஆமாங்கண்ணா.. நீங்க சாப்பிட்டதில்லையாண்ணா..?

 34. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///அதிஷா said… //10 காசுக்கு ஒரு இட்லின்னு வாங்கிச் சாப்பிட்டது அவ்வப்போது நினைவுக்கு வந்து இட்லி மீதான பாசத்தைக் கூட்டுகிறது..//எப்போ சமீபத்துல 1980 லயாங்கணா..?///ஆமாங்கண்ணா.. நீங்க சாப்பிட்டதில்லையாண்ணா..?

 35. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //Anonymous said…
  இன்னா நைனா.. சுடச்சுட பாலிடிக்ஸ் நியூஸெல்லாம் கொடுப்பியே.. இப்ப என்னாச்சு..?
  ஆப்படிச்சு உக்கார வைச்சுட்டானுகளா.. வாயையே தொறக்க மாட்டேங்குற..?
  ஆந்திரா, கர்நாடகாவை விடுப்பா.. தமிழ்நாடு என்னாச்சு?//

  அவுகளே நிமிஷத்துக்கு நிமிஷம் மாத்தி, மாத்தி பேசிக்கிட்டிருந்தா நான் எதை வெச்சு, எப்படி யோசிச்சு எழுதறது.. அதான் எலெக்ஷன்வரைக்கும் பொறுத்திருக்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன்..

 36. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //Anonymous said… இன்னா நைனா.. சுடச்சுட பாலிடிக்ஸ் நியூஸெல்லாம் கொடுப்பியே.. இப்ப என்னாச்சு..? ஆப்படிச்சு உக்கார வைச்சுட்டானுகளா.. வாயையே தொறக்க மாட்டேங்குற..?ஆந்திரா, கர்நாடகாவை விடுப்பா.. தமிழ்நாடு என்னாச்சு?//அவுகளே நிமிஷத்துக்கு நிமிஷம் மாத்தி, மாத்தி பேசிக்கிட்டிருந்தா நான் எதை வெச்சு, எப்படி யோசிச்சு எழுதறது.. அதான் எலெக்ஷன்வரைக்கும் பொறுத்திருக்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன்..

 37. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///ARUVAI BASKAR said…
  //ஏதாவது ஆபாச பின்னூட்டங்கள் வருகின்றனவா..?//
  முதலில் வந்தது ! டோண்டு அவர்களுககு கமெண்ட் போட்டவுடன் வந்தது! கமெண்ட் மோடேரட் பண்ணியதர்கபுரம் ஏதும் வரவில்லை!//

  அப்ப நீங்க முதல்கட்ட வலைப்பதிவர் தேர்வில் வெற்றி பெற்று விட்டீர்கள் என்று அர்த்தம்..

  //திரு சோ அவர்களின் துக்ளக் பத்திரிக்கை படிப்பவர்கள் அனைவரும் அவர்களை போல் கண்மூடித்தனமாக ஆதரிப்பவர்கள் என்று நினைக்கிறார்கள் போலும் . உண்மை அதுவல்ல என்று திரு சோ அவர்களே பலமுறை எழுதியுள்ளார்.//

  நானும் அப்படித்தான்.. எழுதுகின்ற எல்லாவற்றையும் கண்மூடித்தனமாக ஒத்துக் கொள்பவர்கள் எந்தப் பத்திரிகைகளுக்கும் யாருமே கிடைக்கமாட்டார்கள்..

  நன்றி பாஸ்கர் ஸார்..

 38. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///ARUVAI BASKAR said… //ஏதாவது ஆபாச பின்னூட்டங்கள் வருகின்றனவா..?//முதலில் வந்தது ! டோண்டு அவர்களுககு கமெண்ட் போட்டவுடன் வந்தது! கமெண்ட் மோடேரட் பண்ணியதர்கபுரம் ஏதும் வரவில்லை!//அப்ப நீங்க முதல்கட்ட வலைப்பதிவர் தேர்வில் வெற்றி பெற்று விட்டீர்கள் என்று அர்த்தம்..//திரு சோ அவர்களின் துக்ளக் பத்திரிக்கை படிப்பவர்கள் அனைவரும் அவர்களை போல் கண்மூடித்தனமாக ஆதரிப்பவர்கள் என்று நினைக்கிறார்கள் போலும் . உண்மை அதுவல்ல என்று திரு சோ அவர்களே பலமுறை எழுதியுள்ளார்.//நானும் அப்படித்தான்.. எழுதுகின்ற எல்லாவற்றையும் கண்மூடித்தனமாக ஒத்துக் கொள்பவர்கள் எந்தப் பத்திரிகைகளுக்கும் யாருமே கிடைக்கமாட்டார்கள்.. நன்றி பாஸ்கர் ஸார்..

 39. ARUVAI BASKAR Says:

  நக்கீரன் , குமுதம் ரிபோர்டர் , தமிழன் எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிக்கைகளை படிப்பவர்கள் அதனை முழுமையாக நம்பி விடுகின்றார்கள் !
  அது தான் அது மாதிரி பத்திரிக்கை நடத்துபவர்களின் பலமா அல்லது அந்த மாதிரி மஞ்சள் பத்திரிக்கையை வாசிபவர்களின் பலவீனமா எனக்கு தெரியவில்லை !
  துக்ளக் இவைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்பது எனது தாழ்மையான கருத்து !
  அன்புடன்
  அருவை பாஸ்கர்

 40. ARUVAI BASKAR Says:

  நக்கீரன் , குமுதம் ரிபோர்டர் , தமிழன் எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிக்கைகளை படிப்பவர்கள் அதனை முழுமையாக நம்பி விடுகின்றார்கள் !அது தான் அது மாதிரி பத்திரிக்கை நடத்துபவர்களின் பலமா அல்லது அந்த மாதிரி மஞ்சள் பத்திரிக்கையை வாசிபவர்களின் பலவீனமா எனக்கு தெரியவில்லை !துக்ளக் இவைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்பது எனது தாழ்மையான கருத்து !அன்புடன் அருவை பாஸ்கர்

 41. Anonymous Says:

  //முதலில் வந்தது ! டோண்டு அவர்களுககு கமெண்ட் போட்டவுடன் வந்தது !
  கமெண்ட் மோடேரட் பண்ணியதர்கபுரம் ஏதும் வரவில்லை !

  இருந்தாலும் தமிழன் சார் பின்ணுட்டம் போடுவதில் உங்களை மிஞ்ச ஆளில்லை.அத்துடன் வாத்யாயா சுப்பையையா வின் வகுப்பில் சட்டம்பிள்ளை அல்லவா/.

  எதாவது மென்பொருள் துணை உண்டோ!கல்க்கிறிங்கண்ணா!

  உங்கள் படைப்புகளின் பாசம் உங்களை அடையாளம்( சார்பு நிலை) காட்டுவதாக வரும் செய்திகள் உண்மையா?விளக்கவும்

 42. Anonymous Says:

  //முதலில் வந்தது ! டோண்டு அவர்களுககு கமெண்ட் போட்டவுடன் வந்தது !கமெண்ட் மோடேரட் பண்ணியதர்கபுரம் ஏதும் வரவில்லை !இருந்தாலும் தமிழன் சார் பின்ணுட்டம் போடுவதில் உங்களை மிஞ்ச ஆளில்லை.அத்துடன் வாத்யாயா சுப்பையையா வின் வகுப்பில் சட்டம்பிள்ளை அல்லவா/.எதாவது மென்பொருள் துணை உண்டோ!கல்க்கிறிங்கண்ணா!உங்கள் படைப்புகளின் பாசம் உங்களை அடையாளம்( சார்பு நிலை) காட்டுவதாக வரும் செய்திகள் உண்மையா?விளக்கவும்

 43. கிரி Says:

  //அந்த வகையில் தேவேகெளடா தான் சாகின்றவரையிலும் தன் பெயரில் இருக்கும் ‘கெளடா’ என்கிற பெயரை நீக்க மாட்டார் என்கின்றபோது //

  வார்த்தைக்கு வார்த்தை தேவே கௌடா னு சொல்றாரே, தேவே என்பது அவர் பெயர், கௌடா என்பது அவர் படித்து வாங்கிய பட்டமா? :-)))

  உண்மை தமிழன் எல்லாவற்றையும் சொன்னீங்க சரி, தர்ம அடி வாங்கி டெபாசிட் கூட வாங்காத வாட்டாள் நாகராஜ் பற்றி ஒன்றும் சொல்லவே இல்லையே :-))

  எங்களுக்கெல்லாம் இது தான் முக்கிய காட்சியே 🙂

 44. கிரி Says:

  //அந்த வகையில் தேவேகெளடா தான் சாகின்றவரையிலும் தன் பெயரில் இருக்கும் ‘கெளடா’ என்கிற பெயரை நீக்க மாட்டார் என்கின்றபோது //வார்த்தைக்கு வார்த்தை தேவே கௌடா னு சொல்றாரே, தேவே என்பது அவர் பெயர், கௌடா என்பது அவர் படித்து வாங்கிய பட்டமா? :-)))உண்மை தமிழன் எல்லாவற்றையும் சொன்னீங்க சரி, தர்ம அடி வாங்கி டெபாசிட் கூட வாங்காத வாட்டாள் நாகராஜ் பற்றி ஒன்றும் சொல்லவே இல்லையே :-))எங்களுக்கெல்லாம் இது தான் முக்கிய காட்சியே 🙂

 45. பரிசல்காரன் Says:

  அய்யா.. நான் வந்துட்டேன்.. நீங்க எப்ப வரிங்க?

 46. பரிசல்காரன் Says:

  அய்யா.. நான் வந்துட்டேன்.. நீங்க எப்ப வரிங்க?

 47. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //ARUVAI BASKAR said…
  நக்கீரன் , குமுதம் ரிபோர்டர் , தமிழன் எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிக்கைகளை படிப்பவர்கள் அதனை முழுமையாக நம்பி விடுகின்றார்கள்!
  அதுதான் அது மாதிரி பத்திரிக்கை நடத்துபவர்களின் பலமா அல்லது அந்த மாதிரி மஞ்சள் பத்திரிக்கையை வாசிப்பவர்களின் பலவீனமா எனக்கு தெரியவில்லை !
  துக்ளக் இவைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்பது எனது தாழ்மையான கருத்து !
  அன்புடன்
  அருவை பாஸ்கர்//

  நீங்கள் குறிப்பிட்ட மூன்று பத்திரிகைகளும் தற்போது ஒரு சார்பான நிலையை எடுத்திருக்கின்றன. தொடர்ந்து கூர்ந்து படித்து வரும் வாசகர்களுக்கு அது தெரியும்.

  நக்கீரனுக்கு ஆளும்கட்சிக்கு சங்கடம் கொடுக்காத அளவுக்கான செய்திகளை வெளியிட வேண்டிய மனச்சூழல் ஏற்படுத்தப்பட்டது ஜெயலலிதாவினால்.. ஸோ.. இதற்காக கோபால் ஸாரை நாம் கோபித்துக் கொள்ளக்கூடாது. கோபால் ஸாருக்கு நேர்ந்த கொடுமை எனக்கும் நேர்ந்திருந்தால் நானும் இதைத்தான் செய்வேன்.

  குமுதம் – தொடர்ந்து பல ஆண்டுகளாக தி.மு.க. எதிர்ப்பு நிலையைத்தான் கொண்டுள்ளது. இப்போது விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக் என்று மூவரையும் வளர்த்துவிடும் பொறுப்பு இப்பத்திரிகையிடம் உள்ளது. அதை செவ்வனே செய்து கொண்டும் வருகிறது.. ரிப்போர்ட்டரை படித்துப் பாருங்க.. தொடர்ந்து விஜயகாந்த், சரத்குமார் மேட்டர் இல்லாமல் இருக்கவே இருக்காது..

  தமிழன் எக்ஸ்பிரஸ்-இதனைப் பொறுத்தவரை முதலாளிகளின் எண்ணத்தை வெளிப்படுத்துவதுதான் அதன் நிலை. அப்படி பார்க்கும்பட்சத்தில் அதுவும் தி.மு.க. எதிர்ப்பு நிலைதான்.. ஸோ.. அப்படித்தான் எழுதுவார்கள்..

  துக்ளக்கை பொறுத்தமட்டில் அது பிறந்ததிலிருந்த் என்ன கொள்கையுடன் இருக்கிறதோ அதே கொள்கையுடன்தான் இப்போதும் இருந்து வருகிறது.. இப்போதைய இளைஞர்கள் துக்ளக்கிற்கு பிறகு பிறந்தவர்கள் என்பதனால் அதன் தோற்றத்தின் அர்த்தமும், காரணமும் புரியாததால் சோ ஏதோ இன்றைக்குத்தான் தி.மு.க.வை எதிர்த்து வருகிறார் என்று நினைத்து எழுதுகிறார்கள். பேசுகிறார்கள்.. இதுதான் குழப்பத்துக்குக் காரணம்..

  துக்ளக்கின் மாறுதலுக்கு முக்கியக் காரணம் மற்ற பத்திரிகைகளின் ” இப்படி இருக்கலாமோ..” என்கிற மாதிரியான கருத்துக்களை அதிகம் பிரசுரிப்பதில்லை. அதுதான்..

 48. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //ARUVAI BASKAR said… நக்கீரன் , குமுதம் ரிபோர்டர் , தமிழன் எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிக்கைகளை படிப்பவர்கள் அதனை முழுமையாக நம்பி விடுகின்றார்கள்!அதுதான் அது மாதிரி பத்திரிக்கை நடத்துபவர்களின் பலமா அல்லது அந்த மாதிரி மஞ்சள் பத்திரிக்கையை வாசிப்பவர்களின் பலவீனமா எனக்கு தெரியவில்லை !துக்ளக் இவைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்பது எனது தாழ்மையான கருத்து !அன்புடன் அருவை பாஸ்கர்//நீங்கள் குறிப்பிட்ட மூன்று பத்திரிகைகளும் தற்போது ஒரு சார்பான நிலையை எடுத்திருக்கின்றன. தொடர்ந்து கூர்ந்து படித்து வரும் வாசகர்களுக்கு அது தெரியும்.நக்கீரனுக்கு ஆளும்கட்சிக்கு சங்கடம் கொடுக்காத அளவுக்கான செய்திகளை வெளியிட வேண்டிய மனச்சூழல் ஏற்படுத்தப்பட்டது ஜெயலலிதாவினால்.. ஸோ.. இதற்காக கோபால் ஸாரை நாம் கோபித்துக் கொள்ளக்கூடாது. கோபால் ஸாருக்கு நேர்ந்த கொடுமை எனக்கும் நேர்ந்திருந்தால் நானும் இதைத்தான் செய்வேன்.குமுதம் – தொடர்ந்து பல ஆண்டுகளாக தி.மு.க. எதிர்ப்பு நிலையைத்தான் கொண்டுள்ளது. இப்போது விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக் என்று மூவரையும் வளர்த்துவிடும் பொறுப்பு இப்பத்திரிகையிடம் உள்ளது. அதை செவ்வனே செய்து கொண்டும் வருகிறது.. ரிப்போர்ட்டரை படித்துப் பாருங்க.. தொடர்ந்து விஜயகாந்த், சரத்குமார் மேட்டர் இல்லாமல் இருக்கவே இருக்காது..தமிழன் எக்ஸ்பிரஸ்-இதனைப் பொறுத்தவரை முதலாளிகளின் எண்ணத்தை வெளிப்படுத்துவதுதான் அதன் நிலை. அப்படி பார்க்கும்பட்சத்தில் அதுவும் தி.மு.க. எதிர்ப்பு நிலைதான்.. ஸோ.. அப்படித்தான் எழுதுவார்கள்..துக்ளக்கை பொறுத்தமட்டில் அது பிறந்ததிலிருந்த் என்ன கொள்கையுடன் இருக்கிறதோ அதே கொள்கையுடன்தான் இப்போதும் இருந்து வருகிறது.. இப்போதைய இளைஞர்கள் துக்ளக்கிற்கு பிறகு பிறந்தவர்கள் என்பதனால் அதன் தோற்றத்தின் அர்த்தமும், காரணமும் புரியாததால் சோ ஏதோ இன்றைக்குத்தான் தி.மு.க.வை எதிர்த்து வருகிறார் என்று நினைத்து எழுதுகிறார்கள். பேசுகிறார்கள்.. இதுதான் குழப்பத்துக்குக் காரணம்..துக்ளக்கின் மாறுதலுக்கு முக்கியக் காரணம் மற்ற பத்திரிகைகளின் ” இப்படி இருக்கலாமோ..” என்கிற மாதிரியான கருத்துக்களை அதிகம் பிரசுரிப்பதில்லை. அதுதான்..

 49. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///Anonymous said…
  உங்கள் படைப்புகளின் பாசம் உங்களை அடையாளம்( சார்பு நிலை) காட்டுவதாக வரும் செய்திகள் உண்மையா? விளக்கவும்.//

  அப்படி நினைத்துக் கொண்டால் நான் என்ன செய்ய முடியும்..?

 50. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///Anonymous said… உங்கள் படைப்புகளின் பாசம் உங்களை அடையாளம்( சார்பு நிலை) காட்டுவதாக வரும் செய்திகள் உண்மையா? விளக்கவும்.//அப்படி நினைத்துக் கொண்டால் நான் என்ன செய்ய முடியும்..?

 51. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///கிரி said…
  //அந்த வகையில் தேவேகெளடா தான் சாகின்றவரையிலும் தன் பெயரில் இருக்கும் ‘கெளடா’ என்கிற பெயரை நீக்க மாட்டார் என்கின்றபோது //
  வார்த்தைக்கு வார்த்தை தேவே கௌடானு சொல்றாரே, தேவே என்பது அவர் பெயர், கௌடா என்பது அவர் படித்து வாங்கிய பட்டமா?:-)))///

  ஜாதிப் பெயர்.. பின்னாலேயே வரும்.. நம்மூர் தேவர் மாதிரி..

  //உண்மை தமிழன் எல்லாவற்றையும் சொன்னீங்க சரி, தர்ம அடி வாங்கி டெபாசிட் கூட வாங்காத வாட்டாள் நாகராஜ் பற்றி ஒன்றும் சொல்லவே இல்லையே :-)) எங்களுக்கெல்லாம் இதுதான் முக்கிய காட்சியே:-)//

  இந்தத் தேர்தலில் மக்கள் சக்தியின் வலிமையை மத, இன, மொழி வெறியர்களுக்கு உணர்த்தியுள்ளது வாட்டாளின் தோல்விதான்..

  விடுங்கள்.. இவரை மாதிரியான ஆட்களையெல்லாம் நாம் விளம்பரப்படுத்துவதினால்தான் பெரிய ஆளாகிறார்கள். அதுதான் உண்மை.. கண்டு கொள்ளாமல் போனால் வீதியோர குப்பைத்தொட்டியில் ஒன்றாக இருக்கும்..

 52. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///கிரி said… //அந்த வகையில் தேவேகெளடா தான் சாகின்றவரையிலும் தன் பெயரில் இருக்கும் ‘கெளடா’ என்கிற பெயரை நீக்க மாட்டார் என்கின்றபோது //வார்த்தைக்கு வார்த்தை தேவே கௌடானு சொல்றாரே, தேவே என்பது அவர் பெயர், கௌடா என்பது அவர் படித்து வாங்கிய பட்டமா?:-)))///ஜாதிப் பெயர்.. பின்னாலேயே வரும்.. நம்மூர் தேவர் மாதிரி..//உண்மை தமிழன் எல்லாவற்றையும் சொன்னீங்க சரி, தர்ம அடி வாங்கி டெபாசிட் கூட வாங்காத வாட்டாள் நாகராஜ் பற்றி ஒன்றும் சொல்லவே இல்லையே :-)) எங்களுக்கெல்லாம் இதுதான் முக்கிய காட்சியே:-)//இந்தத் தேர்தலில் மக்கள் சக்தியின் வலிமையை மத, இன, மொழி வெறியர்களுக்கு உணர்த்தியுள்ளது வாட்டாளின் தோல்விதான்.. விடுங்கள்.. இவரை மாதிரியான ஆட்களையெல்லாம் நாம் விளம்பரப்படுத்துவதினால்தான் பெரிய ஆளாகிறார்கள். அதுதான் உண்மை.. கண்டு கொள்ளாமல் போனால் வீதியோர குப்பைத்தொட்டியில் ஒன்றாக இருக்கும்..

 53. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //பரிசல்காரன் said… அய்யா.. நான் வந்துட்டேன்.. நீங்க எப்ப வரிங்க?//சீக்கிரம் வர்றேன்.. ஆமா.. எதுக்கு? எங்க..?

 54. ARUVAI BASKAR Says:

  //துக்ளக்கின் மாறுதலுக்கு முக்கியக் காரணம் மற்ற பத்திரிகைகளின் ” இப்படி இருக்கலாமோ..” என்கிற மாதிரியான கருத்துக்களை அதிகம் பிரசுரிப்பதில்லை. அதுதான்..//
  இந்த கருத்தில் நானும் ஒத்து போகிறேன் .
  லிஸ்ட் இல் நெற்றிக்கண் விட்டு போய் விட்டது .
  ஆனால் இவர்கள் அனைவரும் துக்ளக் நன்றாக வியாபாரம் ஆவதை பார்த்து அது போல் வியாபாரம் செய்ய வந்தவர்கள் என்பது எனது கருத்து .
  பின் நேரத்திற்கு தகுந்தாற்போல் ஆளும்கட்சிக்கு ஜால்ரா அடித்தார்கள் .
  துக்ளக் ஐ நான் எனது பதின்மூன்றாம் வயதிலிரிந்து படித்து வருகிறேன் .
  துக்ளக் வாசகர்கள் விசாலமான அரசியல் பார்வை கொண்டவர்கள் என்பது எனது அசைக்க முடியாத கருத்து .
  நான் தமிழன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையை அவ்வளவாக படித்ததில்லை . நெற்றிக்கண் இற்கு பதிலாக அதனை எழுதி விட்டேன் .
  சுஜாதாவை பற்றி நீங்கள் எழுதயுள்ளதில் நீங்கள் தமிழன் எக்ஸ்பிரஸ் இல் வேலை செய்துள்ளதாக அறிந்தேன் . மிகவும் சங்கடமாக போய் விட்டது .நீங்கள் பதில் எழுதியதை பார்த்ததும் தான் சற்று நிம்மதி !
  அன்புடன்
  அருப்புக்கோட்டை பாஸ்கர்

 55. ARUVAI BASKAR Says:

  //துக்ளக்கின் மாறுதலுக்கு முக்கியக் காரணம் மற்ற பத்திரிகைகளின் ” இப்படி இருக்கலாமோ..” என்கிற மாதிரியான கருத்துக்களை அதிகம் பிரசுரிப்பதில்லை. அதுதான்..//இந்த கருத்தில் நானும் ஒத்து போகிறேன் .லிஸ்ட் இல் நெற்றிக்கண் விட்டு போய் விட்டது .ஆனால் இவர்கள் அனைவரும் துக்ளக் நன்றாக வியாபாரம் ஆவதை பார்த்து அது போல் வியாபாரம் செய்ய வந்தவர்கள் என்பது எனது கருத்து .பின் நேரத்திற்கு தகுந்தாற்போல் ஆளும்கட்சிக்கு ஜால்ரா அடித்தார்கள் .துக்ளக் ஐ நான் எனது பதின்மூன்றாம் வயதிலிரிந்து படித்து வருகிறேன் .துக்ளக் வாசகர்கள் விசாலமான அரசியல் பார்வை கொண்டவர்கள் என்பது எனது அசைக்க முடியாத கருத்து .நான் தமிழன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையை அவ்வளவாக படித்ததில்லை . நெற்றிக்கண் இற்கு பதிலாக அதனை எழுதி விட்டேன் .சுஜாதாவை பற்றி நீங்கள் எழுதயுள்ளதில் நீங்கள் தமிழன் எக்ஸ்பிரஸ் இல் வேலை செய்துள்ளதாக அறிந்தேன் . மிகவும் சங்கடமாக போய் விட்டது .நீங்கள் பதில் எழுதியதை பார்த்ததும் தான் சற்று நிம்மதி !அன்புடன் அருப்புக்கோட்டை பாஸ்கர்

 56. VIKNESHWARAN Says:

  🙂

 57. VIKNESHWARAN Says:

  🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: