மக்கள் தொலைக்காட்சியில் எனது குறும்படம்!

23-05-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
எழுதியே தீர வேண்டுமென முனைந்தால் சுமாராக 40 பக்கங்களுக்கு குறையாமல் எழுதக்கூடிய அளவுக்கு, பல பாடங்களை எனக்குக் கற்றுக் கொடுத்த நிகழ்வு ஒன்று கடந்த ஓராண்டுக்கு முன்பாக நிகழ்ந்தது.

பல வருடங்களாக என் மனதில் இருந்த ஒரு கருவை எழுத்தாக்கி, அதனை விரிவுபடுத்தி, செம்மையாக்கி ஒரு குறும்படமாக என் மனதிலேயே தேக்கி வைத்திருந்தேன்.

மனதில் நிறுத்தி வைத்திருந்த அக்குறும்படத்தைத்தான் 1 வருட காலத்திற்கு முன்பு, மிகுந்த போராட்டத்திற்குப் பின்னால் படச்சுருளில் படம் பிடித்தேன்.

வழி தெரியாதவன் விசாரிக்க பல வழிகள் இருக்கும் என்பதைப் போல, குறும்பட போட்டிகளுக்கு மட்டும் எனது படத்தினை அனுப்பிவிட்டு அமைதியாகி விட்டேன்.

என்ன காரணமோ தெரியவில்லை… அதனை எனது வலைப்பதிவில் போடுவதற்கு எண்ணமே வரவில்லை.

வலைப்பதிவர்களில் சிலருக்கு மட்டுமே நான் எடுத்திருந்த இந்த குறும்படம் பற்றித் தெரிந்திருந்தாலும், இதுவரையிலும் அந்தச் சிலரில் 4 பேருக்கு மட்டுமே இதனைப் பார்க்கும் கொடுமையை நான் கொடுத்திருந்தேன்.
வலையுலக வசிஷ்ட மாமுனி திரு.மா.சிவக்குமார், ‘தடாலடி புண்ணியவான்’ திரு.ஜி.கெளதம், ‘இனமானப் பேராசிரியர்’ திரு.தருமி, திருமிகு.ஓசை செல்லா ஆகிய நான்கு பேர் மட்டுமே இதுவரையில் கஷ்டப்பட்டு இக்குறும்படத்தைப் பார்த்த புண்ணியவான்கள்.. வாழ்க வளமுடன்..

இதனை வலைப்பதிவில் ஏற்றுவதற்குத் தேவையானதைப் போல மாற்றம் செய்து கொடுக்கும்படி திருமிகு.ஓசை செல்லாவிடம் 6 மாதங்களுக்கு முன்பே சொல்லியிருந்தேன். பின்பு நானே அதனை மறந்துவிட்ட காரணத்தால், திருமிகு.ஓசை செல்லாவிடம் இப்போது நான் இதுபற்றி கேள்வி ஏதும் கேட்க முடியாது..

வலைப்பதிவர்கள் மன்னிக்க வேண்டுகிறேன்..
இந்த மன்னிப்புக்கு காரணம் வேறு விஷயம்..

இதுவரையிலும் தப்பித்துக் கொண்ட வலைப்பதிவர்கள் தற்போது எனது குறும்படத்தை பார்க்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார்கள் என்பதால் அவர்களிடம் எனது மன்னிப்பை முன்பே கேட்டு விடுகிறேன்.

வருகின்ற 25-05-08, ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 8.30 மணியளவில் மக்கள் தொலைக்காட்சியில் நான் எழுதி, இயக்கிய ‘புனிதப்போர்’ என்னும் குறும்படம் ஒளிபரப்பாக உள்ளது என்பதனை மிக்க வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

வருகின்ற ஞாயிற்றுக்கிழமையன்று எனது குறும்படத்தை நீங்கள் பார்க்க முடியாமல் போனாலும் எனது கிரகமோ, அல்லது எனக்கு நடந்து கொண்டிருக்கும் காலத் திசையோ உங்களை விடப் போவதில்லை..

அடுத்த வெள்ளிக்கிழமை அதாவது வருகின்ற 30-05-2008 அன்று பகல் 12.30 மணியளவில் மீண்டும் ‘அந்தக் கொடுமை’ மக்கள் தொலைக்காட்சியில் அரங்கேற உள்ளதால்..
வருகின்ற ஞாயிற்றுக்கிழமை பார்க்க முடியாதவர்கள் அதற்கடுத்த வெள்ளிக்கிழமையன்றாவது பார்த்துத் தொலைக்குமாறு அன்போடும், பண்போடும், பணிவன்போடும் கேட்டுக் கொள்கிறேன்..

பார்க்க விரும்பும் அன்பு வலையுலக உள்ளங்கள் முடிந்தால் பாருங்கள்..

பார்த்துவிட்டு உங்களது கருத்துக்களை நேரமிருந்தால், தங்களுக்கு ஓய்வு கிடைத்தால், தங்கள் மனதுக்கு ஏதாவது தோன்றினால் உள்ளதை உள்ளபடியே எனக்கு எழுதியனுப்புங்கள்..
அல்லது வலைப்பதிவு செய்யுங்கள்.. அல்லது இனிமேல் டிவி நிகழ்ச்சியையே பார்க்க மாட்டேன் என்றோ, அல்லது இனிமேல் என் வாழ்க்கையில் குறும்படம் பக்கமே போக மாட்டேன் என்றோ சபதமெடுத்துக் கொள்ளுங்கள்.

எப்படியிருப்பினும் என் அப்பன் முருகப்பெருமான் உங்களுக்கும், உங்களது குடும்பத்தினருக்கும் நீண்ட ஆயுளை வழங்கி இன்னும் இது போன்ற நிறைய குறும்படங்களை பார்க்கும் வாய்ப்பையும் வழங்குவான் என்பதனை அவன் சார்பாகச் சொல்லி விடைபெறுகிறேன்.
டிஸ்கி : இந்த நிகழ்ச்சி நிரல் கடைசி நேர மாறுதலுக்குட்பட்டது என்பதனையும் மக்கள் தொலைக்காட்சி நிறுவனத்தார் குறிப்பிடுகின்றனர்.
எனவே, ஒருவேளை அந்த மாறுதலினால் எனது குறும்படம் அந்த நேரத்தில் திரையிடப்படவில்லையெனில், பதிவர்கள் என் மேல் கோபப்பட வேண்டாம்.. தப்பித்ததாக நினைத்துச் சந்தோஷப்பட்டுக் கொள்ளுங்கள்..
Advertisements

64 பதில்கள் to “மக்கள் தொலைக்காட்சியில் எனது குறும்படம்!”

 1. கிரி Says:

  வாழ்த்துக்கள் உண்மை தமிழன்

 2. லக்கிலுக் Says:

  வாழ்த்துக்கள் அண்ணே!

  நீங்க இயக்கிய குறும்படம் என்கிறீங்க? எப்படியும் ஒரு நாலு, ஐந்து மணி நேரத்துக்குள்ளே முடிஞ்சிடுமில்லே… ரொம்ப நேரத்துக்கு என்னாலே நைட்டுலே முழிச்சிக்கிட்டிருக்க முடியாது. அதுதான்…

 3. Great Says:

  //
  நீங்க இயக்கிய குறும்படம் என்கிறீங்க? எப்படியும் ஒரு நாலு, ஐந்து மணி நேரத்துக்குள்ளே முடிஞ்சிடுமில்லே… ரொம்ப நேரத்துக்கு என்னாலே நைட்டுலே முழிச்சிக்கிட்டிருக்க முடியாது. அதுதான்…//

  நானும் தலைப்ப பாத்துட்டு இத சொல்லலாம்னுதான் இங்கே வந்தேன்..

 4. ஜ்யோவ்ராம் சுந்தர் Says:

  மனமார்ந்த வாழ்த்துகள் உண்மைத் தமிழன். குறித்து வைத்துக் கொண்டு நிச்சயம் பார்த்து விடுகிறேன்.

 5. Great Says:

  வாழ்த்துகள். மற்றவை குறும்படம் பார்த்த பின்பு. தகவலுக்கு நன்றி.

 6. இறக்குவானை நிர்ஷன் Says:

  வாழ்த்துக்கள் உண்மைத்தமிழன். பார்த்திட்டா போச்சு!

  பணி தொடரட்டும் !

 7. கதிர் சயந்தன் Says:

  நீங்க இயக்கிய குறும்படம் என்கிறீங்க? எப்படியும் ஒரு நாலு, ஐந்து மணி நேரத்துக்குள்ளே முடிஞ்சிடுமில்லே… //

  இதை சொல்லத்தான் நானும் பின்னூட்ட பொட்டிக்கு ஓடியாந்தேன்.
  ஐரோப்பாவிற்கும் மக்கள் தொலைக்காட்சி வருகிறது. ஆனால் நீங்க சொன்ன நேரத்தில வராதென்று நினைக்கிறேன். முன்ன பின்ன திகதிகள் மாறி வரும்.

 8. வடுவூர் குமார் Says:

  வாழ்த்துக்கள்.
  யூ டூபில் கிடைக்குமா?

 9. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //கிரி said…
  வாழ்த்துக்கள் உண்மை தமிழன்.//

  நன்றி கிரி..

  அடையாள புகைப்படம் தூக்கலாக இருக்கிறது..

 10. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //லக்கிலுக் said…
  வாழ்த்துக்கள் அண்ணே! நீங்க இயக்கிய குறும்படம் என்கிறீங்க? எப்படியும் ஒரு நாலு, ஐந்து மணி நேரத்துக்குள்ளே முடிஞ்சிடுமில்லே… ரொம்ப நேரத்துக்கு என்னாலே நைட்டுலே முழிச்சிக்கிட்டிருக்க முடியாது. அதுதான்…//

  நினைச்சேன்.

  காலை வர்றதுக்குன்னே அவதாரம் ஒண்ணு இருக்கே.. வந்து என்ன கமெண்டு போடப் போகுதோன்னு நினைச்சேன்.. போட்டுட்ட..

  தேங்க்ஸ் தம்பி..

  பயப்படாதப்பூ.. படம் மொத்தமே 12 நிமிஷம்தான்.. சந்தோஷமா..?

 11. வளர்மதி Says:

  வாழ்த்துக்கள் உண்மைத் தமிழன் 🙂

 12. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///Great said…
  //நீங்க இயக்கிய குறும்படம் என்கிறீங்க? எப்படியும் ஒரு நாலு, ஐந்து மணி நேரத்துக்குள்ளே முடிஞ்சிடுமில்லே… ரொம்ப நேரத்துக்கு என்னாலே நைட்டுலே முழிச்சிக்கிட்டிருக்க முடியாது. அதுதான்…//
  நானும் தலைப்ப பாத்துட்டு இத சொல்லலாம்னுதான் இங்கே வந்தேன்..///

  இப்படி எத்தனை பேருய்யா கிளம்பிருக்கீங்க..?

 13. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //ஜ்யோவ்ராம் சுந்தர் said…
  மனமார்ந்த வாழ்த்துகள் உண்மைத் தமிழன். குறித்து வைத்துக் கொண்டு நிச்சயம் பார்த்து விடுகிறேன்.//

  நன்றி சுந்தர் ஸார்.. கண்டனங்களையும், விமர்சனங்களையும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்..

 14. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //Great said…
  வாழ்த்துகள். மற்றவை குறும்படம் பார்த்த பின்பு. தகவலுக்கு நன்றி.//

  வந்ததுக்கு இப்பைக்கு நன்றி.. மற்றதுக்கு அப்ப வந்து நன்றி சொல்றேன்..

 15. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //இறக்குவானை நிர்ஷன் said…
  வாழ்த்துக்கள் உண்மைத்தமிழன். பார்த்திட்டா போச்சு! பணி தொடரட்டும்!//

  நன்றி நிர்ஷன்..

 16. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///கதிர் சயந்தன் said…
  நீங்க இயக்கிய குறும்படம் என்கிறீங்க? எப்படியும் ஒரு நாலு, ஐந்து மணி நேரத்துக்குள்ளே முடிஞ்சிடுமில்லே… //
  இதை சொல்லத்தான் நானும் பின்னூட்ட பொட்டிக்கு ஓடியாந்தேன். ஐரோப்பாவிற்கும் மக்கள் தொலைக்காட்சி வருகிறது. ஆனால் நீங்க சொன்ன நேரத்தில வராதென்று நினைக்கிறேன். முன்ன பின்ன திகதிகள் மாறி வரும்.///

  அல்லாரும் நம்மளை பத்தி ஒரு நினைப்பாத்தான் திரியறீக போலிருக்கு.. நல்லாயிரு சாமி..

 17. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //வடுவூர் குமார் said…
  வாழ்த்துக்கள். யூ டூபில் கிடைக்குமா?//

  நன்றி குமார்..

  யூ டியூப்புக்கு கொஞ்சம் லேட்டாகும்போலத் தெரியுது.. யாராவது உதவி செய்தால் நிச்சயம் இடுகிறேன்..

 18. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //வளர்மதி said…
  வாழ்த்துக்கள் உண்மைத் தமிழன்.//

  நன்றி வளரு.. ஆளையே காணோமே..?

  அலைபேசியிலாவது தொடர்பு கொள்ளலாமே..?

 19. வளர்மதி Says:

  உண்மைத் தமிழன்:15270788164745573644.

  இந்த எண்ணில் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். ”அட மக்கு, எண்ணை சரி பாரு” என்று பதில் வந்தது 😉

 20. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //வளர்மதி said…
  உண்மைத் தமிழன்:15270788164745573644.
  இந்த எண்ணில் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். ”அட மக்கு, எண்ணை சரி பாரு” என்று பதில் வந்தது;)//

  நக்கலு.. ம்.. என்ன செய்றது.. நேரம், காலம் சரியில்லைன்னா இப்படித்தான் நடக்கும்..

  98409-98725 – இந்த நம்பருக்கு டயல் பண்ணு சாமி..

  நிறைய கொஞ்சலாம்.. நிறைய பேசலாம்..

 21. இம்சை Says:

  வாழ்த்துக்கள்… வாழ்க அண்ணன் டாக்டர் புரட்சி இயக்குனர் உண்மை தமிழன் அய்யா.

  உங்க அடுத்த படத்துல ஒரு சான்ஸ் குடுப்பிங்களா…

 22. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //இம்சை said…
  வாழ்த்துக்கள்… வாழ்க அண்ணன் டாக்டர் புரட்சி இயக்குனர் உண்மை தமிழன் அய்யா.//

  வாழ்த்துறதுன்னு முடிவு பண்ணிட்டு, அப்புறம் கடைசியா குப்புறப் போட்டு மிதிக்கிறது.. ஓவரா இல்லையா இம்சை கண்ணு..

  //உங்க அடுத்த படத்துல ஒரு சான்ஸ் குடுப்பிங்களா…//

  இம்சை தயாரிக்கிற படம்னா நிச்சயம் சான்ஸ் உண்டு..

 23. DJ Says:

  வாழ்த்துக்க‌ள்.

 24. Vicky Says:

  வாழ்த்துக்கள் 🙂

 25. ஜோ / Joe Says:

  வாழ்த்துகள்!

 26. முரளிகண்ணன் Says:

  அண்ணே ரொம்ப சந்தோஷம்.படம் பார்த்துட்டு வர்றேன். கும்மீருவோம்

 27. கப்பி பய Says:

  வாழ்த்துக்கள்!! 🙂

 28. வினையூக்கி Says:

  வாழ்த்துகள் சார்

 29. சிறில் அலெக்ஸ் Says:

  வாழ்த்துகள் சார். விரைவில் இணையத்திலும் ஏற்றி எங்களையும் இன்புறுத்துவீர்கள் என நம்புகிறோம்.

  குறும்படம் குறும்பு படமா? 🙂

 30. சென்ஷி Says:

  வாழ்த்துக்கள் அண்ணா… 🙂

  எனது அறையில் தமிழன் டிவி தெரியாததால் நானே நேரில் வந்து உங்களுடன் அமர்ந்து டீ, தம்மு அடித்து அந்த கொடுமைய கண்டு ரசிப்பேன்(!?) என்று உறுதி கூறுகிறேன்.

  தாமத பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்
  😦

 31. சென்ஷி Says:

  //லக்கிலுக் said…
  வாழ்த்துக்கள் அண்ணே!

  நீங்க இயக்கிய குறும்படம் என்கிறீங்க? எப்படியும் ஒரு நாலு, ஐந்து மணி நேரத்துக்குள்ளே முடிஞ்சிடுமில்லே… ரொம்ப நேரத்துக்கு என்னாலே நைட்டுலே முழிச்சிக்கிட்டிருக்க முடியாது. அதுதான்…//

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்….

  எங்கள் சிங்கத்தமிழன் உண்மைத்தமிழனை பார்த்து இப்படிப்பட்ட பின்னூட்டமிட்ட லக்கியே உணர்ந்து கொள்.

  அண்ணன் இயக்கி ஐந்து அல்லது ஆறு மணிநேரத்தில் முடியுமென்றால் அது வெறும் விளம்பரம் மட்டுமே.. குறைச்சலா ஒரு வாரத்துக்கு ஓடும்ன்னு நெனைக்கறேன்…. :))

  //வருகின்ற ஞாயிற்றுக்கிழமை பார்க்க முடியாதவர்கள் அதற்கடுத்த வெள்ளிக்கிழமையன்றாவது பார்த்துத் தொலைக்குமாறு //

  பார்த்தீங்களா… அவரே சொல்லியிருக்காரு.. 6 நாள் ஓடும் போல….. 🙂

 32. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //Vicky said…
  வாழ்த்துக்கள்:)//

  விக்கி நன்றி.. நன்றி.. நன்றி..

 33. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //ஜோ / Joe said…
  வாழ்த்துகள்!//

  நன்றி ஜோ.. வந்து ரொம்ப நாளாச்சுல்லே..!

 34. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //முரளிகண்ணன் said…
  அண்ணே ரொம்ப சந்தோஷம்.படம் பார்த்துட்டு வர்றேன். கும்மீருவோம்.//

  ஆரம்பமே பயமா இருக்கு சாமி..

  நீங்க கும்முறதுக்கு ஏத்த மாதிரிதான் கதையும் இருக்கு.. அதுனால எம்புட்டு கும்மணும்னு நினைக்குறீகளோ, அம்புட்டுக்குத் தயக்கமில்லாம கும்மித் தீர்த்திருங்க..

 35. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //கப்பி பய said…
  வாழ்த்துக்கள்!! :)//

  கப்பி தம்பீ.. வ.வா.சங்க வேலையெல்லாம் எவ்ளோ தூரம் இருக்கு.. வந்த புதுசுல கலக்கு கலக்குன்னு கலக்கிட்டிருந்தீங்க.. இப்ப கொஞ்ச நாளா அமைதியா இருக்கீங்களே.. என்ன விஷயம்..?

 36. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //வினையூக்கி said…
  வாழ்த்துகள் சார்.//

  தம்பி ஏதோ ரெஸ்ட் எடுக்கிறதா கேள்விப்பட்டேன்.. எல்லாருக்கும் ஏதோ ஒரு நேரம் இப்படி ஒரு ஓய்வு தேவைப்படும். எடுத்துக்குங்க.. மறக்காம திரும்பி வந்திருங்க..

 37. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //சிறில் அலெக்ஸ் said…
  வாழ்த்துகள் சார். விரைவில் இணையத்திலும் ஏற்றி எங்களையும் இன்புறுத்துவீர்கள் என நம்புகிறோம்.//

  நீங்க இவ்ளோ தூரம் வலிந்து வந்து சொன்ன பின்பும் உங்களை இன்புற்றுத்தாமல் இருந்தால் அது எனக்கு துன்புறுத்தலாகிவிடும் என்பதால் நிச்சயம் இணையத்தில் ஏற்றி விடுகிறேன்.

  //குறும்படம் குறும்பு படமா?:)//

  இல்லீங்க ஸார்.. ஆனா ஒரு வாரத்துக்கு தமிழ்மணத்துல பொழுது போகக்கூடிய அளவுக்கு அலசி, காயப் போட வேண்டிய மேட்டர்..

 38. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //சென்ஷி said…
  வாழ்த்துக்கள் அண்ணா…:)//

  நன்றி தம்பீ..

  //எனது அறையில் தமிழன் டிவி தெரியாததால் நானே நேரில் வந்து உங்களுடன் அமர்ந்து டீ, தம்மு அடித்து அந்த கொடுமைய கண்டு ரசிப்பேன்(!?) என்று உறுதி கூறுகிறேன்.//

  அது மக்கள் டிவி தம்பீ.. தெரியலைன்னாலும் பரவாயில்ல.. ஊருக்கு வரும்போது சொல்லு உனக்கு மட்டும் தனியா படம் போட்டு காட்டுறேன்..

  //தாமத பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்:(//

  வந்ததே பெரிய விஷயம்டா ராசா.. நல்லாயிரு..

 39. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///சென்ஷி said…
  //லக்கிலுக் said…
  வாழ்த்துக்கள் அண்ணே! நீங்க இயக்கிய குறும்படம் என்கிறீங்க? எப்படியும் ஒரு நாலு, ஐந்து மணி நேரத்துக்குள்ளே முடிஞ்சிடுமில்லே… ரொம்ப நேரத்துக்கு என்னாலே நைட்டுலே முழிச்சிக்கிட்டிருக்க முடியாது. அதுதான்…//
  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்…. எங்கள் சிங்கத்தமிழன் உண்மைத்தமிழனை பார்த்து இப்படிப்பட்ட பின்னூட்டமிட்ட லக்கியே உணர்ந்துகொள். அண்ணன் இயக்கி ஐந்து அல்லது ஆறு மணி நேரத்தில் முடியுமென்றால் அது வெறும் விளம்பரம் மட்டுமே.. குறைச்சலா ஒரு வாரத்துக்கு ஓடும்ன்னு நெனைக்கறேன்….:))///

  சென்ஷி தம்பீ.. உனக்கு லக்கியே பரவாயில்லடா..

  //வருகின்ற ஞாயிற்றுக்கிழமை பார்க்க முடியாதவர்கள் அதற்கடுத்த வெள்ளிக்கிழமையன்றாவது பார்த்துத் தொலைக்குமாறு //
  பார்த்தீங்களா… அவரே சொல்லியிருக்காரு.. 6 நாள் ஓடும் போல…..:)///

  உங்ககிட்ட தப்பிக்க முடியுமா?

 40. அதிஷா Says:

  அண்ணா வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்………

 41. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //அதிஷா said…
  அண்ணா வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்………//

  போச்சுடா.. நீங்க வாழ்த்துற அளவுக்கெல்லாம் எனக்கு வயசாகலை அதிஷா..
  ஜஸ்ட் 38தான்..
  தம்பீன்னே கூப்பிடலாம்..

 42. அதிஷா Says:

  குறும்படம் தந்த குட்டித்தமிழா
  சின்னத்திரை கண்ட சின்னத்தமிழா
  உலகம் போற்றும் உண்மைத்தமிழா

  இப்படிலாம் போஸ்டர் அடிக்கலாம்னு இருக்கோம் அதுக்கு உங்க அனுமதி வேணும்………

  😉

 43. அதிஷா Says:

  // ஜஸ்ட் 38தான்.. //

  அவ்வளோதானா ஹிஹி

  நான் கூட 18 தானோனு நெனச்சிட்டேன்

 44. Anonymous Says:

  அய்யா உண்மை தமிழா, “குறும்” என்கிற வார்த்தையே உமக்கு பிடிக்காதே! பதிவு போட்டாலே நெடும் தொலைவு இருக்குமே!

  ஓக்கே ஓக்கே வாழ்த்துக்கள்! கண்டிப்பா மாலை 7.00க்கு (துபாய் டைம்)பார்த்து விட்டு “போன்”றேன்! வாழ்த்துக்கள்!

 45. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //அதிஷா said…
  குறும்படம் தந்த குட்டித்தமிழா, சின்னத்திரை கண்ட சின்னத ்தமிழா, உலகம் போற்றும் உண்மைத் தமிழா இப்படிலாம் போஸ்டர் அடிக்கலாம்னு இருக்கோம்.. அதுக்கு உங்க அனுமதி வேணும்………;-)//

  அது சரி.. அடி குடுக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டீங்க.. எப்படி அடிச்சா என்ன..? இதுக்கெல்லாம் பெர்மிஷன் கேக்குற மொத ஆளு நீங்கதான் அதிஷா..

 46. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///அதிஷா said…
  //ஜஸ்ட் 38தான்..//
  அவ்வளோதானா ஹிஹி.. நான் கூட 18 தானோனு நெனச்சிட்டேன்..//

  அப்டீல்லாம் ரொம்பச் சின்னப் பையன்னு நினைச்சிராதீங்கண்ணேன்..

  நினைப்புதான் பல சமயத்துல பொழப்பைக் கெடுக்குமாம்..

 47. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //Anonymous said…
  அய்யா உண்மை தமிழா, “குறும்” என்கிற வார்த்தையே உமக்கு பிடிக்காதே! பதிவு போட்டாலே நெடும் தொலைவு இருக்குமே! ஓக்கே ஓக்கே வாழ்த்துக்கள்! கண்டிப்பா மாலை 7.00க்கு (துபாய் டைம்)பார்த்து விட்டு “போன்”றேன்! வாழ்த்துக்கள்!//

  துபாய் தமிழா.. வாழ்த்துக்களோடு சேர்த்துக் குத்தியிருக்கும் உள்குத்துக்களுக்கு எனது நன்றிகள்..

 48. SP.VR. SUBBIAH Says:

  /////எனவே, ஒருவேளை அந்த மாறுதலினால் எனது குறும்படம் அந்த நேரத்தில் திரையிடப்படவில்லையெனில், பதிவர்கள் என் மேல் கோபப்பட வேண்டாம்.. தப்பித்ததாக நினைத்துச் சந்தோஷப்பட்டுக் கொள்ளுங்கள்..////

  இல்லை, அப்போது மக்கள் தொலைக் காட்சியினரைப் பிடித்துத் தொங்க ஆரம்பித்து விடுவோம்!

 49. வல்லிசிம்ஹன் Says:

  வாழ்த்துகள் உண்மைத்தமிழன்.
  யூ ட்யூபில் வரும்போதுதான் என்ன்னால் பார்க்க முடியும்.
  நன்றகத்தான் எடுத்து இருப்பீர்கள்.

 50. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///SP.VR. SUBBIAH said…
  //எனவே, ஒருவேளை அந்த மாறுதலினால் எனது குறும்படம் அந்த நேரத்தில் திரையிடப்படவில்லையெனில், பதிவர்கள் என் மேல் கோபப்பட வேண்டாம்.. தப்பித்ததாக நினைத்துச் சந்தோஷப்பட்டுக் கொள்ளுங்கள்..//
  இல்லை, அப்போது மக்கள் தொலைக் காட்சியினரைப் பிடித்துத் தொங்க ஆரம்பித்து விடுவோம்!///

  வாத்தியாரே.. உங்களது ‘வெறி’யை கொஞ்சம் தணித்துக் கொள்ளுங்கள்..

  படம் எங்கேயும் ஓடிவிடாது..

  அவர்கள் போடாவிட்டால் என்ன..? முகவரியைக் கொடுங்கள்.. நான் அனுப்பி வைக்கிறேன்..

 51. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //வல்லிசிம்ஹன் said…
  வாழ்த்துகள் உண்மைத்தமிழன். யூ ட்யூபில் வரும்போதுதான் என்ன்னால் பார்க்க முடியும். நன்றகத்தான் எடுத்து இருப்பீர்கள்.//

  தங்களது நம்பிக்கைக்கும், வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றிகள் அம்மா..

  நிச்சயம் யூ டியூபில் விரைவில் போட்டு விடுகிறேன்..

 52. K.R.அதியமான் Says:

  வாழ்த்துக்கள் நண்பா. கட்டாயம் பார்க்கிறேன்.

 53. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //K.R.அதியமான் said…
  வாழ்த்துக்கள் நண்பா. கட்டாயம் பார்க்கிறேன்.//

  நன்றி அதியமான் ஸார்..

  பார்த்துவிட்டு மறக்காமல் விமர்சனத்தையும் எழுதுங்கள்.. விமர்சிக்கக்கூடிய அளவுக்கான கதைக்கருதான் அது.. காத்திருக்கிறேன்..

 54. குசும்பன் Says:

  வாழ்த்துக்கள் அண்ணே!

  இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக என்று எல்லாம் கிளிப்பிங் போட்டு விளம்பரம் எல்லாம் செய்ய மாட்டாங்களா?

 55. குசும்பன் Says:

  //லக்கிலுக் said…
  வாழ்த்துக்கள் அண்ணே!

  நீங்க இயக்கிய குறும்படம் என்கிறீங்க? எப்படியும் ஒரு நாலு, ஐந்து மணி நேரத்துக்குள்ளே முடிஞ்சிடுமில்லே… ///

  சேம் டவுட் எனக்கும் சொல்லிடுங்க.

 56. கோவிந்தா புரொடக்சன் Says:

  பால பாரதியை ஹீரோவா போட்டு ஒரு பெரும் படம் எடுத்து தரமுடியுமா???

 57. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //குசும்பன் said…
  வாழ்த்துக்கள் அண்ணே!//

  இந்தக் குசும்புதானே வேணாங்கறது.. நான் இன்னும் கல்யாணமாகாத சின்னப் பையன்தான் சாமி..

  //இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக என்று எல்லாம் கிளிப்பிங் போட்டு விளம்பரம் எல்லாம் செய்ய மாட்டாங்களா?//

  மாட்டாங்களாம்ல.. எனக்கு வருத்தமா இருக்கு.. இது மாதிரி ஒரு பிட்டை ஓட்டினாத்தான மெயின் பிக்சருக்கு கொஞ்சம் மவுசு இருக்கும்..

 58. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  ///குசும்பன் said…
  //லக்கிலுக் said…
  வாழ்த்துக்கள் அண்ணே! நீங்க இயக்கிய குறும்படம் என்கிறீங்க? எப்படியும் ஒரு நாலு, ஐந்து மணி நேரத்துக்குள்ளே முடிஞ்சிடுமில்லே…//
  சேம் டவுட் எனக்கும் சொல்லிடுங்க.///

  இப்படி டவுட்டே வரக்கூடாதுங்கண்ணா.. படம் மொத்தமே 12 நிமிஷம்தாண்ணேன்..

  கொஞ்சம் தயவு பண்ணி, நேரத்தை அட்ஜஸ்ட் பண்ணி பாத்துப்புட்டு, எதையும் மனசுல வைச்சுக்காம, மறக்காம, மறைக்காம வந்து என்னைத் திட்டிருங்கண்ணேன்..

 59. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //கோவிந்தா புரொடக்சன் said…
  பாலபாரதியை ஹீரோவா போட்டு ஒரு பெரும் படம் எடுத்து தர முடியுமா???//

  பாலபாரதி மேல குசும்பனுக்கு அப்படியென்ன கோபமோ? வரவேற்பெல்லாம் நல்லாத்தான பண்ணிருந்தாரு.. அப்புறமென்ன?

 60. வெங்கடேஷ் Says:

  வாழ்த்துக்கள் தோழரே. கட்டாயம் பார்க்கிறேன். எனக்கும் ஒரு குறும்படம் செய்ய ஆசை உங்களை தொடர்புகொள்ளலாமா?

  வெங்கடேஷ்
  திரட்டி.காம்

 61. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  கண்டிப்பாகத் தொடர்பு கொள்ளுங்கள் வெங்கடேஷ்.

  எனது தொலைபேசி எண் 98409-98725.

  உங்களது கவனத்திற்கு எனது நன்றிகள்..

 62. VSK Says:

  என் வீட்டில் மக்கள் டிவி வரவில்லை. ஒளிபரப்பு ஆண்தும் தயவு செய்து யூட்யூபில் இடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

  வாழ்த்துகள்!

 63. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //VSK said…
  என் வீட்டில் மக்கள் டிவி வரவில்லை. ஒளிபரப்பு ஆண்தும் தயவு செய்து யூட்யூபில் இடுமாறு கேட்டுக் கொள்கிறேன். வாழ்த்துகள்!//

  நன்றிகள் ஸார்.. நிச்சயம் யூ டியூபில் போடுகிறேன்.. ஒரு வாரமாகும் என்று நினைக்கிறேன்..

 64. லக்கிலுக் Says:

  //நன்றிகள் ஸார்.. நிச்சயம் யூ டியூபில் போடுகிறேன்.. ஒரு வாரமாகும் என்று நினைக்கிறேன்..//

  நேற்று பார்க்க முடியவில்லை. முக்கியமான ஒரு இடத்தில் மாட்டிக் கொண்டேன்.

  யூட்யூபில் உங்கள் படத்தை பார்க்கவே ஒரு வாரமாகும் என்றால்… அவ்ளோ பெரிய குறும்படமா என்று மீண்டும் தெளிவாக விளக்கவும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: