‘வாத்தியார் சுஜாதா’ பற்றி ‘நிஜ சுஜாதா’வின் உருக்கமான பேட்டி

10-03-08

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

நம் வாத்தியார் சுஜாதா அவர்களைப் பற்றி ‘நிஜ சுஜாதா’ம்மா ‘ஆனந்தவிகடன்’ பத்திரிகையில் பேட்டியாகச் சொல்லியிருப்பது இது.

‘சுஜாதா’ என்ற தனது பெயரை இத்தனை நாட்கள் சுமந்து கொண்டிருந்த தனது கணவருக்கு அவர் செலுத்தியிருக்கும் அஞ்சலி இது. படித்துப் பாருங்கள்.

“சாயங்காலம் ஏழு மணியில இருந்து காலைல ஏழு மணி வரை ஒரு லிட்டர் தண்ணி குடிச்சிருப்பார். ஆனா, 200 மில்லிதான் வெளியேறித்து.. 800 மில்லி உடம்புலேயே தங்கிடுத்து. ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ்ல கூட்டிப் போனோம். இதுக்கு முன்னாடிலாம் சந்தோஷமா ஆஸ்பத்திரிக்கு வர்றவர், இந்தத் தடவை ஏனோ, வர மாட்டேன்னு அடம் பண்ணார். அட்மிட் பண்ணினதும் தூங்கிண்டே இருந்தார். என்ன கேட்டாலும், “ஊம்.. ஊம்’னு மட்டும் சொன்னார். ‘திடீர்னு நீ யாரு’ன்னு கேட்டார். ஏன் இப்படிப் பேசறீங்க? என்ன பண்றது சொல்லுங்கோ”ன்னு நான் பதறி, டாக்டர்களை அழைச்சுண்டு வந்தேன்.

வாய் கோணித்து.. ‘ஸ்ட்ரோக்’குன்னாங்க.. கை வரலைன்னதுமே, “ஐ ஆம் ட்ராப்டு.. எனக்கு இதெல்லாம் புடிக்கலை. வீட்டுக்குக் கொண்டு போ. இனி என்ன இருக்கு சொல்லு!’னு புலம்ப ஆரம்பிச்சிட்டார். “அப்டிலாம் சொல்லாதேள்.. நான் இருக்கேன்ல.. நீங்க சொல்லச் சொல்ல.. நான் எழுதித் தர்றேன்னேன்.. அவருக்குக் கேட்கலியா.. கேட்க விரும்பலையான்னு தெரியலை!

ஒரு நிமிஷம்கூட அவரை விட்டுட்டு இருந்ததில்லை. நன்னாத்தான் பாத்துண்டேன்.. அவருக்கே, அவருக்குன்னு பார்த்துப் பார்த்துச் சமைப்பேன். ஆனாலும் தப்பிச்சு ஓடிப் போய் எங்காவது போண்டா தின்னுட்டு வந்துருவார். கேட்டா, “எத்தனை நாள்தான் உப்புச்சப்பில்லாம சாப்புடுறது? இந்த 75 கலோரி என்னை ஒண்ணும் பஸ்மாக்கிடாது!”னு சிரிப்பார்.

நல்ல மனுஷன். என்னை நல்லாப் பாத்துக்கிட்டார்.

சின்ன வயசுல அவ்வளவா காசு, பணம் வரலை. ஆனா ரிட்டயர் ஆனப்புறம் ரொம்ப ஷேமமா பாத்துக்கிட்டார்.

என்னை ஜப்பானீஸ் கிளாஸ்லாம் சேர்த்துவிட்டார். அங்க சின்னச் சின்ன பொண்ணுங்கள்லாம் நிறைய மார்க் வாங்குவா.. இதைச் சொன்னா, “அவாகூட நீ எப்படிப் போட்டி போடலாம்? அவாளுக்கெல்லாம் யங் பிரைன்.. உனக்குக் கொஞ்சமே கொஞ்சம் வயசாயிடுத்து. இல்லியா”ன்னுவார்.

அவர் அளவுக்கு எனக்கு பிராட் மைண்ட் கிடையாது. ஒருவேளை அவர் அளவுக்கு இன்டெலிஜென்ட்டா இருந்தா, எனக்கும் பிராட் மைண்ட் இருந்திருக்கும்.

அவருக்கு உடம்பு படுத்த ஆரம்பிக்கவும் நான் கிளாஸ¤க்குப் போறதில்ல. அப்படியும் நடுவில் ரெண்டு நாள் அனுப்பினார்.

இனி எனக்கு என்ன இருக்கு? ஆனாலும் போகணும்.. அவர் இருந்தா அப்படித்தான் சொல்வார். ஆனா, இப்போ அவர் இல்லையே!

எந்த நேரமும் ஏதாவது படிச்சுண்டு, பார்த்துண்டே இருப்பார். படுக்கை முழுக்க புஸ்தகங்களா இருக்கும். அதுக்கு இடையில இடம் பண்ணிண்டு படுத்துக்குவார். நடுராத்திரியில நாலு புஸ்தகங்களை மாத்தி மாத்திப் படிச்சுண்டு இருப்பார்.

“உடம்பை பார்த்துக்குமா இந்த அப்பா ஏன் இப்படிப் பண்றார்?”னு பசங்க கோச்சுக்குவாங்க.. “இப்படில்லாம் இல்லைன்னாத்தான் அவருக்கு உடம்பு படுத்தும்”னு சொல்வேன்.

இதுக்கு முன்ன ஹாஸ்பிடலுக்குப் போனப்பல்லாம் கொஞ்ச நேரம் இருப்பார். அப்புறம் அதைப் பத்தியே ஒரு கதை எழுதிடுவார். இப்ப அவர் இறந்த கதையை யார் எழுதறது..?

ஒரு தடவை அவருக்கு மாத்திரை கொடுக்க லேட் ஆயிடுத்து. பதறி ஓடி வந்து கொடுத்தா, “ஒரு வாய் மாத்திரை சாப்பிடலேன்னா நான் செத்துட மாட்டேன்.. நீ ஏன் வொர்ரி பண்ணிக்கிற?”ன்னாரு.

தண்ணி, பேப்பர், ரிமோட், சாப்பாடுன்னு எது கொடுத்தாலும் சின்னதா “தேங்க்ஸ்..” சொல்வார். “எதுக்கு என்கிட்டயும் தேங்க்ஸ்..?”னு கேட்டா, “உன்கிட்டயும் தேங்க்ஸ¤க்கு ஒரே அர்த்தம்தானே!”னு சிரிப்பார்.

ஐயோ! ஐ பீல் கில்ட்டி..! நான் அவரை இன்னமும் நல்லபடியா கவனிச்சுண்டு இருந்திருக்கணும்!

என்னை எப்படில்லாம் பார்த்துண்டார்? என் பேர்ல எழுதறதுக்கு அவருக்கு எவ்வளவு பெரிய மனசு இருந்திருக்கணும்.

நான் பதிலுக்கு அவருக்கு என்ன செஞ்சிருக்கணும்? நான் இருக்குறவரை.. அவரை போஷிச்சிருக்க வேண்டாமா.. !

“பாடி எப்ப வீட்டுக்கு எடுத்துட்டு வருவேள்?”னு ஒருத்தர் கேட்டா.

“ஆமா. அவர் இப்ப ‘பாடி’ ஆயிட்டாருல்ல.. இனி அவர் வெறுமனே ‘பாடி’ மட்டும்தானா..? அவர் என் சுஜாதா இல்லையா..!”

‘நிஜ சுஜாதா’வின் இந்தக் கேள்விக்கு, ‘வாத்தியார் சுஜாதா’தான் பதில் சொல்ல வேண்டும்.

நன்றி : ஆனந்தவிகடன்
படம் உதவி : திரு.அண்ணாகண்ணன்

6 பதில்கள் to “‘வாத்தியார் சுஜாதா’ பற்றி ‘நிஜ சுஜாதா’வின் உருக்கமான பேட்டி”

 1. நித்யகுமாரன் Says:

  உண்மைத்தமிழன் சார்…

  விகடனிலேயே பார்த்தேன். மனது மிகவும் கஷ்டமாகிவிட்டது. அதிகம் புலம்பாமல் வெகு இயல்பாக சொல்லப்பட்ட வார்த்தைகள் மனதை இன்னும் என்னவோ செய்கின்றன.

  வருத்தத்துடன்
  நித்யகுமாரன்

 2. இரண்டாம் சொக்கன்...! Says:

  இது பழைய மேட்டரே!….நான் புதுசா ஏதோ பேட்டீன்னு நினைச்சேன்.

  கணவரை இழந்து தனிமையின் கோரப்பிடியில் சிக்கியிருக்கும் திருமதி.சுஜாதாவிற்கு எனது அன்பும்,பிரார்த்தனைகளும் உரித்தாகட்டும்.

 3. ஜ்யோவ்ராம் சுந்தர் Says:

  இது ஆனந்த விகடனில் வந்து ஒரு வலைப் பதிவிலும் ஏற்கனவே வந்து விட்டது.

 4. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //நித்யகுமாரன் said…
  உண்மைத்தமிழன் சார்…
  விகடனிலேயே பார்த்தேன். மனது மிகவும் கஷ்டமாகிவிட்டது. அதிகம் புலம்பாமல் வெகு இயல்பாக சொல்லப்பட்ட வார்த்தைகள் மனதை இன்னும் என்னவோ செய்கின்றன.
  வருத்தத்துடன் நித்யகுமாரன்//

  நன்றிகள் நித்யகுமாரன்..

 5. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //இரண்டாம் சொக்கன்…! said…
  இது பழைய மேட்டரே!….நான் புதுசா ஏதோ பேட்டீன்னு நினைச்சேன்.
  கணவரை இழந்து தனிமையின் கோரப்பிடியில் சிக்கியிருக்கும் திருமதி.சுஜாதாவிற்கு எனது அன்பும், பிரார்த்தனைகளும் உரித்தாகட்டும்.//

  பழைய மேட்டர்தான் சொக்கன்ஜி..

  ஆனாலும் வெளிநாடுவாழ் வாத்தியாரின் மாணாக்கர்களுக்காக போடலாம் என்ற எண்ணம் திடீரென்று உதித்தது. செயல்படுத்திவிட்டேன்..

 6. உண்மைத் தமிழன்(15270788164745573644) Says:

  //ஜ்யோவ்ராம் சுந்தர் said…
  இது ஆனந்த விகடனில் வந்து ஒரு வலைப் பதிவிலும் ஏற்கனவே வந்து விட்டது.//

  வலைப்பதிவுகளில் நான் இதனை பார்க்கவில்லை சுந்தர்.. இருந்தாலும் எனக்கென்று ஒரு கடமை இருக்கிறதே.. அதனால்தான் வெளியிட்டேன்..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: