Archive for ஜூலை, 2007

தீயோர்கள் விலகி நிற்க – பகை தீர!

ஜூலை 6, 2007

நம்மைச் சுற்றி நண்பர்களாக இருந்தவர்கள், நமக்கு விரோதமாக மாறி நமக்குத் தொல்லை தரும் போதும், நம்மை அறியாமல் தீயோரிடம் பழகி அந்த நட்பு விலக முடியாமல் தவிக்கும் போதும், வலிய வந்த விரோதங்கள் தீரவும், கீழ்க்கண்ட பதிகத்தை தினமும் சொல்லி வர அன்னை அருளால் தீயோர் விலகி பகை தீரும். நிம்மதி உண்டாகும்.

வஞ்சகக் கொடியோர்கள் நட்பு வேண்டாமலும்
மருந்தினுக் காவேண் டினும்
மறந்துமோர் பொய்ம்மொழி சொலாமலுந் தீமையாம்
வழியினிற் செல்லாமலும்
விஞ்சுநெஞ் சதனிற் பொறாமைதரி யாமலும்
வீண்வம்பு புரியாமலும் மிக்கபெரி யோர்கள்சொலும் வார்த்தை தள்ளாமலும்
வெகுளியவை கொள்ளா மலும்
தஞ்சமென நின(து) உபய கஞ்சந் துதித்ததிடத்
தமியனுக் கருள் புரிந்து
ஸர்வகா லமுமெனைக் காத்தருள வேண்டினேன்
ஜலக்கயல்கள் விழியை அனைய
வஞ்சியர் செ(வ்) வாய் நிகரும் வாவியாம் பன்மலரும்
வளர்திருக் கடவூரில் வாழ்
வாமி! சுப நேமி! புகழ் நாமி! சிவ சாமிமகிழ்
வாமி! அபிராமி! உமையே!

டிஸ்கி : இது எனது ‘மதிப்பிற்குரிய’ நண்பர் ஒருவரின் பதிவில் இருந்து ‘சுட்டது’.. இனி நிறைய அவரிடமிருந்து ‘சுட’ வேண்டியுள்ளது. அவ்வளவு கடவுள் பக்தியும், விஷய ஞானமும் உள்ளவர் அவர். நண்பர் இதற்கெல்லாம் கோபித்துக் கொள்ள மாட்டார் என்றே நம்புகிறேன்..

Advertisements